diff --git "a/train/AA_wiki_05.txt" "b/train/AA_wiki_05.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_05.txt" @@ -0,0 +1,3238 @@ + +திருக்குறள் + +திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றைய ஆய்வாளர்களால் கருதப்படும் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார். திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இஃது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும், நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. எதுவிதத்திலும், திருக்குறளை இயற்றியவர் பற்றியும், அது என்ன நூல் என்பது பற்றியும், ஔவையாரால் இயற்றப்பட்டதாகக் கூறப்படும் நல்வழி என்பதன் இறுதிப்பாட்டுப் பின்வருமாறு கூறுகிறது: + +தேவர் குறளும் திரு நான்மறை முடிவும் +மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை +திருவாசகமும் திருமூலர் சொல்லும் +ஒருவாசகம் என்றுணர் + +திருக்குறள் நூலானது திருவள்ளுவனின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ் மொழியில் இயற்றப்பட்டது . மேலும், திருக்குறளில் கூறப்பட்டிருப்பவை உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது. + +திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டும் பயன்படுத்தப் படுகின்றது. இதன் அடிப்படையில், "திருவள்ளுவர் ஆண்டு" என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும். + +இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. அக்காலத்தில் இவ்வகை வெண்பாக்களால் ஆகிய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான். குறள் வெண்பாக்களால் ஆனமையால் "குறள்' என்றும் அதன் உயர்வு கருதி "திரு" என்ற அடைமொழியு���ன் "திருக்குறள்" என்றும் பெயர் பெறுகிறது. + +இது உலக மக்கள் அனைவருக்கும், எந்த காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமையால், இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. + +எதுவித்திலும், ”குறள்” என்ற தமிழ்ச் சொல்லின் பொருள்கள் எவை என்பதை இன்றுவரை தமிழ் வித்தகர்கள் அறியவில்லை. இதற்குக் காரணம், முன்னைய, இன்றைய தமிழ் வித்தகர்கள் தொல்காப்பியன் உரியிலில் குறிப்பிட்ட ”மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா” எனக் கூறிய சூத்திரத்தையும், அதற்கு நச்சினார்க்கினியர், சேனாவரையர் எழுதியிருந்த உரைகளையும் சரியாக விளங்கி, ஒரு தமிழ்ச் சொல் எப்படிப் பொருள் உணர்த்துகிறது என்பதைச் சரியாக விளங்கிக்கொள்ளவில்லை. + +குறளானது ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால், இது ‘ஈரடி நூல்’ என்றும், அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால், ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படுகிறது. + + +தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது இந்நூலின் மொத்தமான நோக்கு. + +இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும், அழகுடன் இணைத்தும், கோர்த்தும் விளக்குகிறது. + +திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் "இயல்" என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை. + +திருக்குறளின் அறத்துப்பாலில் "பாயிரவியல்" 4 அதிகாரங்களும் பாயிரவியலைத��� தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 13 அதிகாரங்கள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் "ஊழியல்" மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள். + +அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன. + +கடைசிப்பாலாகிய "இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலில்" களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 14000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார். + +திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறம் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது. + +திருக்குறளின் மூன்று பால்களும், ஒவ்வொன்றிலும் 34 (பாயிரவியல் நீக்கி) , 70, 25 என்ற எண்ணிக்கையான அதிகாரங்கள் உள்ளதாக அமைக்கப்பட்டு, அந்த எண்களின் இலக்கங்களைக் கூட்டினால் 7 என்ற கூட்டெண் வரும் விதத்திலும் நூல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டு மொத்த அதிகாரங்களான 133 இன் எண்களைக் கூட்டினாலும், கூட்டெண் 7ஆக வரும் விதத்திலேயே நூல் அமைக்கப்பட்டு்ள்ளது. ஒட்டு மொத்தத்தில், திருக்குறளின் நூலமைப்பானது 7 என்ற எண்ணுக்கு அதிமுக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், திருக்குறளின் நூலமைப்பானது 3, 4, 9, 10 என்ற எண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தே அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்செயலாக நடைபெற்றதா? இல்லையா? என்பது பற்றியும், இவ்வெண்கள் எங்கேனும் தமிழரின் வாழ்வியலில் நெறிமுறைகளில் முக்கியத்துவம் பெற்றுள்ளனவா? இல்லையா? என்பது பற்றியும், இந்த எண்கள் ஒரு குறிப்பிட்ட போதனை��ில் முக்கியத்துவம் பெறுவதாக இருந்தால், அது எது என்பதையும் இன்றுவரை ஆய்வாளர்கள் ஆராய்ந்து, எதனையும் கூறவில்லை. + +மற்றைய புறத்தில், திருக்குறளின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களும் என்ன அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளன, அவைகள் ஏதாவது போதனை அடிப்படையில்தான் வைக்கப்பட்டுள்ளனவா, இல்லையா என்பது பற்றியும் ஆய்வாளர்களால் ஆராயப்பட்டு, சரியான முடிவுக்கு வரப்படவில்லை. + +திருக்குறள் நூற் பிரிவுகள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன. +வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் அழைக்கப்படுகிறது. + +எடுத்துக்காட்டுக் குறள்கள். + +பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் பரிமேலழகர் உரைதான். + +தருமர் மணக்கும் தாமத்தார் நச்சர் + +பரிதி பரிமே லழகர்-மல்லர் + +பரிப்பெருமாள் காலிங்கர், வள்ளுவர்நூற்கு + +எல்லையுரை செய்தா ரிவர். + +என்கிறது பழைய  வெண்பா . + +தற்காலத்திலும் திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணாநிதி, சாலமன் பாப்பையா உட்பட பலர் விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும். திருக்குறள் பாடல்களுக்கு அதிகாரம் ஒன்றுக்கு இரண்டு பாடல்கள் அல்லது கலிப்பா ஒன்று என்ற முறையில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் பாவுரை என்னும் நூலும் உள்ளது + +ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 1730 இல் திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். +திருக்குறள் கருத்துக்களை (Extracts from “Ocean of Wisdom”) 1794ஆம் ஆண்டு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே + +உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது . இதுவரை 107 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. + +குஜராத்தி, இந்தி, வங்காள மொழி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, மணிப்புரியம், ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது + +அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + +இந்த அதிகாரத்தில் போற்றப்பட்டிருப்பவன் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமையிலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான், இறைவன் என்பவைகளால் விபரிக்கப்பட்டுள்ளான். + +வெவ்வேறு சாரார் இந்த விபரிப்புக்களுள் ஒருசிலவற்றை மாத்திரம் எடுத்து, அவை இன்ன இன்ன கடவுள்களுடன், அல்லது போதனையாளனுடன் ஒன்றுவதால், திருக்குறள் இன்ன சமயம் சார்ந்தது என்ற கருத்தினை முன்வைத்து, திருக்குறளானது ஜைனம், சைவம், வைணவம், வைதீகம் எனச் சகல சமயங்களுடனும் இணைக்கப்பட்டு வருகிறது. + +மேலும், ஆதிபகவன், வாலறிவன்,இறைவன் என்பவைகளின் பொருள்களைச் சரியாக அறிய, தமிழ் எழுத்து மொழியின் தொல்காப்பியன் குறிப்பிட்ட‘மொழிப் பொருட் காரணம்‘ அறிந்திருக்கப்படவேண்டும் என்ற வாதமும் அச்சாராரரால் முன்வைக்கப்பட்டுள்ளது. + +இச்சாரார் தமிழ் எழுத்து மொழியில், மூலத்தனியொலிகள் ஒவ்வொன்றும் 'தன்மை' (nature) அடிப்படையில் குறிப்பிட்ட ஒரு விபரிப்பினைச் செய்கிறது எனவும்; குறிப்பிட்டவொரு ஒழுங்கில் அமைக்கப்பட்ட பல்வேறு மூலத்தனியொலிகளின் இணைவால் உண்டாகும் பூரண விபரிப்பினைச் செய்யும் இணையொலியே ‘சொல்‘ எனவும்; குறிப்பிட்டவொரு பூரண விபரிப்பானது நாம் வாழும் சுற்றத்திலும், பிரபஞ்சத்திலும் என்னனென்ன பொருட்களில் அடையாளங்காணப்படுகிறதோ, அவைகள் எல்லாம் அச்சொல்லின் ‘பொருள்கள்‘ ஆகமுடியும் எனவும்; இவற்றுள் எவையெவைகளைப் பொருள்களாகக் கொள்ளும் ‘மரபு‘ இருந்து வந்துள்ளதோ, அதற்கேற்ப அவைகள் பொருள்களாகக் கொள்ளப்படும் என்ற முடிவையும் கொண்டுள்ளனர். + +திருக்குறள் என்ன நூல் என்பதை இதுவரை காலமும் ஆராய்ந்தறியாத நிலையில், அதனை வெளியிட்டவர்கள் அதன் ஆரம்பத்தில் வைக்கப்பட்டுள்ள அதிகாரங்களின் ஒழுங்கினைக் கடவுள் வாழ்தது, வான் சிறப்பு, நீத்தார் பெருமை,அறன் வலியுறுத்தல் என்ற ஒழுங்கில் அமைத்து வந்தமை பிழையானது எனவும், இந்த அதிகாரங்களினது ஒழுங்கானது கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை, வான் சிறப்பு என எதிர்கால வெளியீடுகளில் திருத்தி அமைக்கப்படவேண்டும் என்பதும் இச்சாராரின் முடிவாகும். + + + + + + + +இளையராஜா + +இளையராஜா ("Ilaiyaraaja", பிறப்பு: சூன் 2, 1943), இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1000 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசின் படைத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூசண் விருது 2010-ஆம் ஆண்டு அளிக்கப்பட்டது. + +இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது, 25 சனவரி 2018 அன்று இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. + +தமிழக நாட்டுப்புற இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமையும் முறையான பயிற்சியும் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். திரைப்படங்களுக்கான சிறந்த பின்னணி இசையமைப்புக்கும் பெயர் பெற்றவர். + +இளையராஜாவின் இயற்பெயர் "ராசய்யா". தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ராமசாமி, தாயார் சின்னத்தாயம்மாள். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய தமையர்களாவர். இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி. + +இவருடைய தமையனார்கள் பாவலர் வரதராஜன், பாஸ்கரன் மற்றும் அமர் சிங் எனப்படும் கங்கை அமரன், இவருடைய பிள்ளைகள் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜா) , யுவன் ஷங்கர் (யுவன் சங்கர் ராஜா), பவதாரிணி ஆகியோரும் இசையமைப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. + +சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். 1961 இல் இருந்து 1968 வரை அ���ருடைய சகோதரர்கள் மூவருடனும் இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார். + +1969 ஆம் ஆண்டு தன் 26ஆம் வயதில் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஆர்வத்தில் சென்னைக்கு வந்தார். சென்னையில் தன்ராஜ் என்பவரிடம் மேற்கத்திய பாணியில் பியானோ கருவியையும், கிதார் கருவியினையும் வாசிக்கக் கற்றுக்கொண்டார். பின்னர் லண்டனில் உள்ள டிரினிடி இசைக்கல்லூரியில் Classical guitar (Higher Local) தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். + +1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். அன்னக்கிளி திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்து எஸ். ஜானகி பாடிய "மச்சானைப் பாத்தீங்களா.." என்ற பாடல் மிகப் பிரபலமானது. அதைத் தொடர்ந்து பதினாறு வயதினிலே, பொண்ணு ஊருக்கு புதுசு போன்ற படங்களில் நாட்டுப்புற மணம் கமழ இவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றன. + +நாட்டுப்புற இசை மட்டுமல்லாமல், கருநாடக செவ்விசை மெட்டுக்களில் இவர் அமைத்த பாடல்களாகிய, மோகன ராகத்தில் கண்ணன் ஒரு கைக்குழந்தை, ரீதி கௌளை ராகத்தில் சின்னக் கண்ணன் அழைக்கிறான் போன்றன இவருக்கு மேலும் புகழினைத் தேடித்தந்தன. முதன் முறையாகத் தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” எனும் திரைப்படத்திற்கு இசையமைத்தார். + +ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்கள் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றனர். ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிரா, இளையராஜா இசையமைத்த சிம்பொனியினை இன்னும் வெளியிடவில்லை என்றாலும், இளையராஜா தமிழ் திரைப்படக் கலைஞர்களால் "மேஸ்ட்ரோ" என்று அழைக்கப்படுகின்றார். + +இந்திய திரைப்படங்களில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. + + + + +இளையராஜா இயேசுவின் உயிர்த்தெழுதல் இடம்பெறவில்லை என்றும் உயிர்த்ததெழுந்த ஒரே ஒரு நபர் ரமண மகரிஷி ஒருவரே எனவும் தன் கருத்தினை வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் பேசு பொருளாக இருந்நதுடன் கிறிஸ்தவ குழு ஒன்றினால் தங்களின் அடிப்படை விசுவாசத்திற்கு எதிரான பேச்சு என்பதால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்��து. + +இளையராஜா புகைப்படக்கலையிலும், இலக்கியத்திலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிய புத்தகங்கள் : + + + + + + + +சதுரம் + +சதுரம், கேத்திரகணித அடிப்படை வடிவங்களில் ஒன்று. இது, நான்கு உச்சிகளையும், சம அளவிலான நான்கு கோட்டுத்துண்டுகளை பக்கங்களாகவும் கொண்ட, ஒரு இரு பரிமாண உருவமாகும். சதுரம் ஓர் ஒழுங்கு நாற்கரம் ஆகும். + + + + + + + +விளக்கம்: + +சதுரத்தின் ஒவ்வொரு கோணமும் செங்கோணம் என்பதால் இரு அடுத்துள்ள பக்கங்களும் ஒரு மூலைவிட்டமும் ஒரு செங்கோண முக்கோணத்தை அமைக்கின்றன. சதுரத்தின் பக்க அளவு "a", மூலைவிட்டத்தின் நீளம் "d" எனில், பித்தகோரசு தேற்றத்தின்படி: + +ஒரு சதுரத்தின் பரப்பளவு அதன் ஒரு பக்க அளவின் வர்க்கத் தொகையால் தரப்படுகிறது. உதாரணத்திற்கு, ஒரு சதுரத்தின் பக்க அளவு 5 மீட்டர் என்றால், அதன் பரப்பளவு 5 x 5 = 25 சதுர மீட்டர் ஆகும். 5 மீட்டர் பக்க நீளமுள்ள சதுரத்தை 1 மீட்டர் பக்க நீளமுள்ள சிறுசிறு சதுரங்களாகப் பிரித்தால் மொத்தம் 25 சிறு சதுரங்கள் கிடைக்கின்றன. + +பொதுவாகச் சதுரத்தின் பரப்பு "a" எனில்: + +மூலைவிட்டத்தின் மூலமாகவும் சதுரத்தின் பரப்பளவைக் காணலாம். சதுரத்தின் மூலைவிட்டத்தின் நீளம் "d" எனில் அச்சதுரத்தின் பரப்பளவு: + +சதுரத்தின் சுற்றுவட்ட ஆரம் "R" எனில், + +எனவே சதுரத்தின் பரப்பளவு: + +சதுரத்தின் உள்வட்ட ஆரம் "r" எனில், + +எனவே சதுரத்தின் பரப்பளவு: + +அடுக்கு இரண்டு என்பது சதுரத்தின் பரப்பளவாக எடுத்துக் கொள்ளப்பட்டதால்தான் அடுக்கு இரண்டானது ஆங்கிலத்தில் "ஸ்கொயர்" என அழைக்கப்பட்டது. + +கார்ட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் ஆதிப்புள்ளியை மையமாகவும் 2 அலகுகள் பக்கநீளமும் கொண்ட சதுரத்தின் உச்சிகளின் ஆயதொலைவுகள்: (±1, ±1). சதுரத்தின் உட்புறம் அமையுமொரு புள்ளிகளின் ஆயதொலைவுகள் ("x", "y") , , ஆகும். இச் சதுரத்தின் சமன்பாடு: + +இச்சதுரத்தின் சுற்றுவட்டத்தின் ஆரம் மூலைவிட்டத்தின் நீளத்தில் பாதியாக இருக்கும். அதாவது + +சுற்றுவட்டத்தின் ஆரம்: + +சுற்றுவட்டத்தின் சமன்பாடு: + +சதுரத்தின் மற்றொரு சமன்பாடு: + +சதுரத்தின் மையம்: ("a", "b") மற்றும் கிடைமட்ட அல்லது குத்து ஆரம் "r" எனில் அச்சதுரத்தின் சமன்பாடு: + +சதுரம் என்பது சாய்சதுரம், பட்டம், இணைகரம், நாற்கரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சிறப்பு வகையாகும். எனவே இவ்வடிவவியல் வடிவங்களின் பண்புகள் சதுரத்திற்கும் உண்டு: + + +கவராயமும் நேர்விளிம்பும் மட்டும் கொண்டு சதுரம் வரையும் விதம் இங்குள்ள அசைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. + + + + + + +அம்பை + +அம்பை (Ambai) என்கிற சி. எஸ். லக்சுமி (C. S. Lakshmi, பிறப்பு:1944) தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவர். 1960களின் பிற்பகுதியில் எழுதத் ​தொடங்கியவர். ​பெண் நிலை நோக்கினை வெளிப்படுத்தும் வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. பல பெண் படைப்பாளிகள் தொடச் சிரமப்படும் விடயங்களை சர்வ சாதாரணமாக தொட்டுச் சென்றவர். உறவு, காதல், திருமணம், அரசியல், இசை என்று பல்வேறு பரிமாணங்களைத் தொட்டவர். பெண்களின் வாழ்க்கையை அதுவும் சுயசிந்தனை கொண்ட படித்த பெண்களை மிக இயல்பாக படைத்தவர். தமிழகத்தின் எல்லை கடந்த நிலப்பகுதிகளையும் களனாகக் கொண்ட இவரது கதைகளில் ​பெண்களின் உறவுச் சிக்கல்கள், பிரச்சனைகள், குழப்பங்கள், கோபதாபங்கள், சமரசங்கள் யாவும் கிண்டலான தொனியில் கலாபூர்வமாக வெளிப்படுகின்றன. + +இவர் ”SPARROW” (Sound and Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராக செயல்பட்டு வருகிறார். டாக்டர் சி. எஸ். லட்சுமி ((Dr. C. S. Lakshmi) என்ற தன்னுடைய இயற்பெயரில் தி இந்து, தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு அவ்வப்போது எழுதி வருகிறார். + +1976இல் விஷ்ணுவைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் கணவருடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என முடிவு செய்தார். பொருளாதாரக் காரணங்கள் மட்டுமின்றி படைப்பு, மற்றும் தான் தேர்ந்தெடுத்த சமூகப் பணிகளுக்குக் குழந்தைகளை உள்ளடக்கிய குடும்ப அமைப்பு தடையாக இருக்கும் என்பது அவரது கருத்தாக இருந்தது. வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடிஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் கன்னடத்தில் புலமை பெற்றவர். ‘தங்கராஜ் எங்கே‘ சிறுவர் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். ‘முதல் அத்தியாயம்’ என்ற சிறுகதையைத் திரைப்படமாகத் தயாரித்துள்ளார். + + +ஆங்கில மொழிபெயர்ப்பில் + +
+ + +
+ +அசோகமித்திரன் + +அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மா���்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார் . எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள். அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர். + +1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார். + + + +அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2 + +அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2 + +இவருக்குப் பல தகைமைகளும் விருதுகளும் கிடைத்துள்ளன. அவற்றில் சில:- + + + + + + + +இட்லி + +இட்லி (இட்டளி) () என்பது அரிசியினால் செய்யப்படும் ஒரு உணவு பதார்த்தம். +இது ஆவியில் வேகவைத்து செய்யப்படுகிறது. தென் இந்தியாவின் பல பகுதிகளில் மிகவும் பிரபலமான உணவு. இது தட்டையான உருண்டை வடிவம் கொண்டது. வெண்மையான நிறத்தில் இருக்கும். அரிசி, உளுத்தம் பருப்பு போன்ற செய்பொருள் கொண்டு செய்யப்படுவது இந்த இட்லி. இது இட்டவி(இட்டு அவி) என்னும் தமிழ்ச்சொல்லிருந்து மருவி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. + +இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் ஆகும். இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக என்பதாகும். பண்டைய இந்திய இலக்கியங்களில், இட்லி பற்றிய முதல் குறிப்பு, கன்னட மொழியில், சிவகோட்டி ஆச்சாரியர் 'வடராதனே' என்னும் காவியத்தில் குறிப்பிட்டுள்ளார். + +பண்டைய நூல்களில் குறிப்பிட்டுள்ள இட்லியின் செய்முறை வேறு, இப்போது தயாரிக்கும் இட்லியின் செய்முறை வேறு. நவீன முறை இட்லி, 1250ம் ஆண்டு பின் எழுதப்பட்ட நூல்களில் தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தோனேஸியாவை ஆண்ட இந்து சம்ய அரசர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள செய்முறை தான் இப்போது பின்பற்றுவதாக, உணவு நிபுனர் அட்சயா தனது பதிப்பில் குறிப்பிட்டுள்ளார். + +பொதுவாக இட்லியை தனியாக உண்ணமாட்டார்கள், ஏனெனில் சற்றே வெற்று சுவை கொண்டது. ஆதலால், உணவில் சுவையினைக் கூட்டுவதற்காக சில துணை உணவுகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. தென் இந்தியாவில் இட்லியுடன் சேர்க்கப்படும் பெறும்பாலான உணவுகள் சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப் பொடி / இட்லிப் பொடி. சில நேரங்களில் குழம்பு வகைகளும் சேர்த்துக் கொள்ளப்படும். + +"இதனையும் பார்க்க : விக்கிநூல்களில் " +தேவையான பொருட்கள் : + + +இட்லியில் பலவிதமான வகைகள் உண்டு. அவற்றில் சில: + +இட்லி செய்ய அதற்கென வடிவமைக்கப்பட்ட சட்டி தேவை ஆகும். வட்ட வடிவத்தில் குழிகள் கொண்ட தட்டுக்களை கொண்ட, நீர் ஆவி மூலம் வேக வைக்க என தயாரிக்கப்பட்ட சட்டி, அதற்கான மூடி ஆகியவைகளைக் கொண்டது இட்லி சட்டி. + + + + + + +நீர்ப்பாசனம் + +நீர்ப்பாசனம் "(Irrigation)" என்பது வேளாண்மையில், ஒழுங்கான இடைவெளிகளில் பயிர் களுக்குக் கட்டுபடுத்திய அளவு நீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் வேளாண்பயிர் வளர்க்கவும் நிலக்கட்டமைப்பைப் பேணவும் மழை பொய்த்த காலத்தில் உலர்பகுதிகளின் மண்வளம் பேணவும், மீள்பசுமையூட்டவும் பயன்படுகிறது. மேலும் பயிரிடும்போது பயிர்களைப் பனிப்படர்வில் இருந்து காக்கவும் இது பயனாகிறது. மேலும் களைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்தவும், மண் கடினமாதலைத் தடுத்தல் போன்ற செயல்களுக்கும் உதவுகிறது. நீர்ப்பாசன அமைப்புகள் தூசை அடக்கவும், கழிவு வெளியேற்றவும், சுரங்கத்தில் [[கனிமம்|கனிமக் கரைந்தூற வைக்கவும் பயன்படுகின்றன. + +மாறாக, நேரடி மழையை நம்பி விளையும் பயிர் மானாவாரிப் பயிரிடல் அல்லது மானாவாரி வேளாண்மை அல்லது கொல்லை வேளாண்மை எனப்படுகிறது. நீர்ப்பாசனம் வடிகாலுடன் இணைந்தே [[ஆய்வு]] செய்யப்படுகிறது. இந்த வட��கால் குறிப்பிட்ட பரப்பில் [[இயற்கை]]யானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ, அதேவேளை மேற்பரப்புநீரை வடிப்பதாகவோ அல்லது கீழ்நீரை வடிப்பதாகவோ அமையலாம். + +நீர்ப்பாசனம் 5000 ஆண்டுகளாக வேளாண்மையில் அடிப்படை ஏந்தாக நிலவி வருகிறது. இது பல பண்டைய [[பண்பாடு]]களின் விளைவாகும். [[வரலாறு|வரலாற்றியலாக, நம் [[புவி]]யின் [[பொருளியல்|பொருளியலுக்கும்]], [[சமூகம்|சமூகங்களுக்கும்]] ஆசியா முதல் வட [[அமெரிக்கா]]வின் தென்மேற்குப் பகுதி வரை வாழ்க்கை வளமாகியது. + +[[File:David Roberts ancient fountain.jpg|thumb|upright|விலங்கு பூட்டிய நீர்ப்பாசனம், எகிப்து, கி.பி. 1846]] +[[File:Turpan-karez-museo-d02.jpg|thumb|சிங்கியாங்கின் தர்ப்பானில் அமைந்த கரேழ் எனும் சுருங்கை நீர்ப்பாசனம்]] +[[File:Peanuts irrigation.jpg|thumb|இந்தியாவில் தமிழ்நாட்டின் நீர்ப்பாசனம்]] +[[File:Crop sprinklers Rio Vista California 15 Jul 2004-002.jpg|thumb|கலிபோர்னியாவின் இரியோ விசுட்டா அருகே உள்ள பயிர்த்தெளிப்பான்]] +[[File:Residential flood irrigation in Phoenix, Arizona, in the United States of America.jpg|thumb|அமெரிக்க ஒன்றிய நாட்டின் அரிசோனாவில் உள்ள போனிக்சு பகுதி வீட்டு வெள்ள நீர்ப்பாசனம்.]] + +மழை சார்ந்த வேளாண்மையில் போதுமான நீர் கிடைக்காதபோது நீர்ப்பாசனப் பயன்பாடு நிலவியமை [[தொல்லியல்]] [[அகழாய்வு]]களில் இருந்து தெரிய வந்துள்ளது. + +"தொடர் நீர்ப்பாசனம்" [[மெசபடோமியா|மெசபடோமியச்]] சமவெளியில் பயிர்களின் வளர்பருவத்தில் ஒழுங்காக வயல்களில் கட்டப்பட்ட பாத்திகளூடாக நடைமுறையில் இருந்துள்ளது. பண்டைய [[எகிப்தியர்|எகிப்திய]] மக்கள் [[நைல்]] ஆற்றின் வெள்ளநீரைப் பயன்படுத்தி வடிநில நீர்ப்பாசன முறையால் வயல்களுக்கு நீரைப் பாய்ச்சியுள்ளனர். இந்த வயல்களைச் சுற்றிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டிருந்தன. வெள்ளநீர் வயல்களில் செழிப்பான வண்டல் படியும் வரை நிறுத்திப், பின்னர் ஆற்றுக்கு வடிய விடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்திய பன்னிரண்டாம் பேரரசின் பரோவா ஆகிய மூன்றாம் அமனமெது (கி.மு 1800 ) பையூம் [[பாலைவனச்சோலை]]யில் இருந்த இயற்கை [[ஏரி]]யைப் பயன்படுத்தி மிகநீர்வரத்தைத் தேக்கி வறண்ட காலங்களில் வேளாண்மைக்குப் பயன்படுத்தியுள்ளமைக்கன சான்றுகள் உள்ளன. வெள்ளக் காலங்களில் இந்தத் தேக்கம் நைல்நதியின் நீர்ப்பெருக்கால் கரைபுரண்டுள்ளது. +பண்டைய நியோபியர்கள் "சாகியா" நீராழியைப் பயன்படுத்தி கி.மு மூன்றாம், இரண்டாம் ஆயிரங்களில் நீர்ப்பாசனத்தை மேற்கொண்டுள்ளனர்.இப்போது [[சூடான்|சூடானில்]] உள்ள [[ஆறு]]களோடு நைல்நதியின் வெள்ளப் பெருக்கைப் பெரும்பாலும் இந்தவகை நீர்ப்பாசனம் பயன்கொண்டுள்ளது. + +[[ஆப்பிரிக்கா]]வில் உள்ள [[சகாரா]] உட்பகுதியில் [[நைகர்]] ஆற்றங்கரைப் பண்பாடுகளில் கி.மு இரண்டாம், முதலாம் ஆயிரங்களில் பருவமுறை வெள்ளத்தைப் பயன்படுத்தி நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. + +"மேட்டு அடுக்குநிலைப் பாசனம்" முன்பு [[கொலம்பியா]], [[அமெரிக்கா]]விலும், [[இந்தியா]]விலும் [[சீனா]]விலும் நடப்பில் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. [[பெரு]]வில் அமைந்த [[ஆந்தெசு]] [[மலைத் தொடர்]]களில் உள்ள சானா [[பள்ளத்தாக்கு|பள்ளத்தாக்கில்]], தொல்லியலாளர்கள் மூன்று நீர்ப்பாசனக் கால்வாய்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை கதிரியக்கக் கரிமக் காலக்கணிப்பின்படி, கி.மு நான்காம், கி.மு மூன்றாம், கி.பி ஒன்பதாம் நூற்றாண்டகளைச் சார்ந்தவையாகும். புத்துலகப் பகுதியில் கிடைத்த மிகப்பழைய பாசனக் கால்வாய்களாகும். மேலும் கி.மு நான்காம் நூற்றாண்டுக் கால்வாய்க்கடியில் கி.மு ஐந்தாம் நூற்றாண்டுக் கால்வாய்க்கான சுவடுகளும் கிடைத்துள்ளன.இப்போதைய பாக்கித்தானிலும் வட இந்தியாவிலும் அமைந்திருந்த சிந்துவெளி நாகரிகம் நுட்பம் வாய்ந்த நீர்த்தேக்க அமைப்புகளையும் பாசன முறைகளையும் வளர்த்தெடுத்துள்ளது. இதில் கி.மு 3000 அளவில் கிர்னாரில் அமைதிருந்த அணைகளும், கி.மு 2600 இல் உருவாக்கபட்ட பாசனக் கால்வாய் அமைப்புகளும் உள்ளடங்கும். இங்கு பேரளவு வேளான்மைக்கான பாசனக் கால்வாய் வலையமைப்புகள் வழியாக நீர்ப்பாசனம் நடைபெற்றுள்ளது. + +பண்டைய பாரசீகத்தில் (இன்றைய [[ஈரான்|ஈரானில்]]) கி.மு 6000 ஆண்டுகளிலேயே பார்லி அரிசி இயற்கையான மழையளவு குறைவாக இருந்தபோதும் பயிரிடப்பட்டுள்ளது. பண்டைய பாரசீகத்தில் கி.மு 800 இல் உருவாக்கப்பட்ட குவானாத் பாசனமுறைகள் மிகப்பழைய பாசனமுறைகளாக அமைதலோடு இன்றளவும் அவை நடைமுறையில் நிலவி வருகின்றன. இம்முறைகள் இன்றும் ஆசியாவிலும் நடுவண் கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் பயன்பாட்டில் உள்ளன. இந்த அமைப்பில் செங்குத்தான மலைகளில் செங்குத்தான சுவர்களும் அவற்றில் இருந்து மலைச் சாரலின் முகப்புவரை சாய்வாக இறங்கும் கால்வாய்கள் அமைந்த சுருங்கைகளும் நிலத்தடி நீரை மடுத்து பயன்படுத்திப் பாசனத்தை மேற்கொண்டன.இதே கால அளவில் வட ஆப்பிரிக்காவில் குடியேறிய [[உரோமானியர்]]களால் உருவாக்கப்பட்ட விளிம்பில் களிமட்பானைகள் பூட்டப்பட்ட நோரியா எனும் நீராழி ஆற்று நீரில் நீரோட்டத் திறனாலும் தேங்கிய நீரில் விலங்குகளின் ஆற்றலாலும் இயங்கியுள்ளது. கி.மு 150 அளவில், இந்தப் பானைகள், நீரில் வேகமாக இறங்கும்போது, நீரை மெதுவாக முகக்க, அவற்றில் கவாடங்கள் பூட்டப்பட்டுள்ளன. + +பண்டைய சிறிலங்காவில் கி.மு 300 அலவில் பாண்டுகப்பாயா ஆட்சியிலும் பிரகான ஆயிரம் ஆண்டுகளிலும் வளர்த்தெடுக்கப்பட்ட பாசனப் பணிகள் அமைவு, பண்டைய உலகின் மிகச்சிக்கலான பாசனமுறைகளில் ஒன்றாக விளங்குகின்றது. இவர்கள் நிலத்தடிக் கால்வாய்களை உருவாக்கிக் கட்டியமைத்த்தோடு பெறளவு நீரைத் தேக்கிடவல்ல அணைகளையும் கட்டியெழுப்பினர். இந்த அவர்களது திறமைக்காக அவர்கள் பாசன வ்ல்லுனர்கள் எனவும் போற்ரப்பட்டனர். பெரும்பாலான இந்தப் பாசன அமைப்புகள் அனுராதபுரத்திலும் பொலனருவையிலும் அவற்றின் முன்னேறிய பொறியியல் வல்லமையாலும் துல்லியமான நடைமுறையாலும் இன்றும் அழிவின்றி நிலவுகின்றன. இந்தப் பாசன அமைப்புபராக்கிரம பாகு எனும் அரசர் காலத்தில் (கி,பி 1153–1186 ) மீட்டு மேலும் விரிவாக்கப்பட்டன. + +[[File:Irrigation ditch in Montour County, Pennsylvania.JPG|thumb|left|சுட்டிராபெரி முகட்டுச் சாலைக்குச் சற்றே தொலைவில் அமைந்தபென்னிசில்வேனியாவின் மாண்டவர் கவுண்ட்யில் இருந்த பாசனக் கால்வாய்]] + +இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் பெருகிய டீசல்-எக்கி அணிகளும் மின்னோடி-எக்கி அணிகளும் நிலத்தடி நீரை வேகமாகப் பாசனத்துக்காக இறைப்பதால், மிகப்பெரிய நீரகங்களும் அவை மழைவடிகால்களால் நிறையும் வேகத்தை விட வேகமாக வற்றிவருகின்றன. இதனால் நீரகத் தேக்களவு நிலையாக குறைக்கவும் நீரின் தரத்தைக் குறைக்கவும் நிலப்பரப்பு குலையவும் வேறுபிறச் சிக்கல்கள் உருவாகவும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிகழ்வால் வடசீனச் சமவெளி, பஞ்சாப் சமவெளி, அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பெருஞ்சமவெளிகளின் உணவு விளைச்சல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. + +2000 ஆம் ஆண்டளவில், புவிக்கோள முழுவதிலும், 2,788,000 km² (689 மில்லியன் ஏக்கர்கள்) அளவுக்குச் செழிப்பான நிலப் பரப்பு பாசன அமைப்புகளைப் பெற்றுள்ளன. இதில் 68% பரப்பு ஆசியாவிலும், 17% பரப்பு அமெரிக்காவிலும் 9% பரப்பு ஐரோப்பாவிலும் 5% பரப்பு ஆப்பிரிக்காவிலும் 1% பரப்பு ஓசியானாவிலும் அமைந்துள்லது. உலகின் உயர்பாசனச் செறிவுள்ல பகுதிகள் கீழ்வருமாறு: + + +சிறுசிறு பாசனப் பகுதிகள் மக்கள் வாழும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவியுள்ளன. +எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். + +எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு. 2008 இல் பாசன நிலப் பரப்பளவு 3,245,566 km² அளவுக்கு உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (802 million acres)இது இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமாகும். + +[[File:LevelBasinFloodIrrigation.JPG|thumb|கோதுமைக்கான வடிநில வெள்ள நீர்ப்பாசனம்]] + +[[File:Plain of punjab.jpg|thumb|பாக்கித்தானப் பஞ்சாபில் உள்ள நீர்ப்பாசனம்]] + +நீர் உரிய வாயில்களில் இருந்து வயலுக்கு எவ்வாறு பரவச்செய்யப்படுகிறது என்பதைப் பொறுத்து பல்வேறு நீர்ப்பாசனம் நுட்பங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக, பாசனத்தின் இலக்கு வயலுக்கு சீராக நீரைப் பாய்ச்சுவதாகும். நீரளவு போதுமானதாக கூடவோ குறையவோ அமையாமல் இருத்தல் வேண்டும். + + + +[[பகுப்பு:வேளாண்மை]] +[[பகுப்பு:நீர் மேலாண்மை]] +[[பகுப்பு:நில மேலாண்மை]] +[[பகுப்பு:குளங்கள்]] + + + +தேன் + +தேன் ஓர் இனிய உணவுப்பொருள் ஆகும். மருத்துவ குணமும் கொண்டது. பூக்களில் காணப்படும் இனிப்பான வழுவழுப்பான நீர்மத்தில் (திரவத்தில்) இருந்து தேனீக்கள் தேனை பெறுகின்றன. தூய தேனில் தண்ணீரோ வேறு சுவையூட்டும் பொருட்களோ கொஞ்சமும் கலந்திருக்காது. நீர்ம (திரவ) நிலையில் உள்ள தேன் கெட்டுப் போவது இல்லை. தேனில் உள்ள மிதமிஞ்சிய இனிப்புச் சத்து, நுண்ணுயிர்களை (கிருமிகளை) வளர விடுவது இல்லை. பதப்பபடுத்தப் படாத தேனில் 14% - 18% ஈரத்தன்மை உள்ளது. 18%க்கு கீழே ஈரத்தன்மை உள்ள வரை தேனில் நுண்ணுயிர்கள் (கிருமிகள்) வளர இயலாது. + +தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். + +தேன், கலோரி ஆற்றல் மிகுந்த ஒர் உணவாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய சர்க்கரை நீரின் எடையைவிட இருமடங்கு அதிக எடையாகும். + +உலகில் தேன் வழி நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது.(1985 ஆம் ஆண்டுக் கணக்கு) , கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்யப்படுகிறது. + +சமையல், ரொட்டி தயாரிப்பு மற்றும் ரொட்டியின் மீது தடவப்படும் பரவல்,தேநீர் போன்ற பல்வேறு வகையான பானங்களுடன் கலக்கப்படும் கூடுதல் பானம், வணிக பானங்களில் சேர்க்கப்படும் ஒரு இனிப்பு என பல்வகைகளில் தேன் உபயோகமாகிறது. தேசிய தேன் வாரியத்தின் வரையறையின்படி ” தேன் என்பது ஒரு தூய்மையான பொருள். தூய தேனில் தண்ணீரோ வேறு இனிப்பூட்டும் திரவங்களோ கலக்கக் கூடாது.பொதுவாக தேன் விருந்து,தேன் கடுகு போன்ற துணை இனிப்புச் சாறுகள் வணிக உலகில் பிரபலமாக உள்ளன. +தேன்மது அல்லது தேன் பீர் போன்ற தேன் – நீர் கலவையான மதுவகையின் முக்கிய உட்பொருளாக தேன் உள்ளது. இயற்கையாகத் தேனிலிருந்து கிடைக்கும் புளிப்பூட்டும் நொதிதான் வரலாற்று ரீதியாகத் தேன்மதுவை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது என்பர். இம்மது வகைகளை தயாரிக்க தேனும் நீரும் சேர்ந்த கலவையுடன் சிறிதளவு புளிப்பு நொதி ஈச்டு சேர்த்து ஊறவைக்கவேண்டும். நாற்பது நாட்களில் முதலாவது நொதித்தல் நிகழ்ந்த பிறகு ஊறலை இரண்டாவது நொதித்தல் கலத்திற்கு மாற்றி மீண்டும் 35 முதல் 40 நாட்களுக்கு நொதிக்க விடவேண்டும். இவை சரியாக நிகழும் நேர்வுகளில் நொதித்தல் முழுமையடைகிறது. தேவைப்படின் சர்க்கரை சேர்த்தி மீண்டும் சில நாட்களுக்கு நொதித்தலுக்கு விடப்படுகிறது + +சக்கரை மற்றும் இதர சில கூட்டுப்பொருள்களின் கலவையாக தேன் உள்ளது. மாவுச்சத்துகள் என்ற அடிப்படையில் தேனை பகுக்கும்போது தேனில் பிரதானமாக பிரக்டோச் 38.5 சதவீதமும் குளுக்கோச் 31.0 சதவீதமும் கலந்துள்ளதாக அறியப்படுகிறது. செயற்கையான ஒரு சர்க்கரை திரவமாக தயாரிக்கும்போது அதில் தோராயமாக 48% பிரக்டோச், 47% குளுக்கோச் மற்றும் 5% சுக்ரோச் கலக்கப்படுகிறது. எஞ்சியுள்ள தேனில் மாவுச்சத்துகளான மால்டோச், சுக்ரோச் மற்றும் இதர சிக்கலான மாவுச்சத்துகள் அடங்கியுள்ளன. பிற சத்துள்ள இனிப்புச் சாறுகளைப் போலவே தேனும் அதிக அளவிளான சர்க்கரையும் சிறிய அளவில் உயிர்சத்துக்கள் அல்லது கனிமங்களைக் கொண்டுள்ளது.மேலும் தேனில் சிறிதளவு கலந்துள்ள பல்வேறு கூட்டுப்பொருள்கள் ஆக்சிச்னேற்ற எதிர்ப்பிகளாக செயலாற்றுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனின் கூட்டுப்பொருள்கள் தேனீக்களுக்கு கிடைக்கும் பூக்களின் தன்மையை பொறுத்தே அமைகிறது. + +தேன் - ஆய்வும் பகுதிப்பொருட்களும் :- + + +ஆப்பிரிக்கா நாட்டில், அறுவை சிகிச்சை முடித்து தையல்கள் போட்டபின் காயம் ஆறுவதற்காக சுத்தமான தேனைத் தடவுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. காயங்களின் மீது தேனைத் தடவுவதால் காயம் விரைவில் குணமடையும் என அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். + +தேனின் தனிப்பட்ட அமைப்பு மற்றும் அதன் இரசாயன பண்புகள், தேனை நீண்ட காலம் சேமிப்பதற்கு ஏற்ற வகையில் உள்ளது. மேலும் நீண்ட கால சேமிப்பிற்குப் பிறகும் தேன் எளிதில் உட்கிரகிக்கப்பட்டு செரிக்கச் செய்கிறது. தேன், மற்றும் தேனின் உள்ளடக்கப் பொருட்கள், பத்தாண்டுகள் ஏன் நூற்றாண்டுகளாகக் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. வரம்பிற்குட்பட்ட ஈரப்பதமே தேனைப் பாதுகாப்பதிலுள்ள முக்கிய நுணுக்கமாகும். தூயநிலையில் தேன் போதிய உயர் சர்க்கரை உள்ளடக்கம் கொண்டு நொதித்தலை தடுக்கும் தன்மையை கொண்டுள்ளது. ஈரமான காற்று தேனின் மீது படும்பொழுது , அதன் நீர்கவர் பண்புகள் ஈரப்பதத்தை இழுத்து தேனை நீர்த்துப் போகச் செய்து இறுதியில் நொதித்தல் தொடங்கி விடக்கூடும். தேனைப் படிகமாக்கி காலப்போக்கில் அதனை சூடாக்கி கரைத்தும் பயன்படுத்தலாம். + +அமெரிக்க விவசாயத் துறை நிர்ணயித்துள்ள தரஅளவுகோலின் அடிப்படையில் தேன் தரப்படுத்துதல் அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது. ( யுஎஸ்டிஏ " இணையதள வழியாகவோ அல்லது நிறைய ஆய்வு மேற்கொண்டோ ஒரு கட்டணச் சேவை அடிப்படையில் தரம் பிரிக்கிறது.). நீர் உள்ளடக்கம், சுவை மற்றும் மணம், குறைபாடுகள் இல்லாமை மற்றும் தெளிவாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு தேன் தரப்படுத்தப்படுகிறது. தர அள்வுகோலில் நிறம் ஒரு காரணியாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றாலும் நிறத்தின் அடிப்படையிலும் தேன் வகைபடுத்தப்படுவது உண்டு. + +மற்ற நாடுகளில் தேன் தரம் பிரித்தலுக்கு வெவ்வேறு வகையான அளவீடுகளை கடைபிடிக்கின்றன. உதாரணாமாக இந்தியா போன்ற நாடுகளில் இதர அனுபவ அளவீடுகள் மற்றும் சில சோதனை முடிவுகளின் அடிப்படையில் தேன் தரம் பிரிக்கப்படுகிறது. + +தேனில் இயற்கையாகவே உள்ள சிறிதளவு காரச்சுவை ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளைப் பாதிக்கும். அதனால் அக்குழந்தைகளுக்கு தேன் உணவைக் கொடுப்பதில்லை. வளர்ச்சியடைந்த குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் முதிர்ந்த செரிமான அமைப்பு பொதுவாக நுண்ணுயிரிகளின் ஸ்போர்களை அழிக்கும் வல்லமை பெற்றிருக்கும். கைகுழந்தைகளுக்கு தேனில் உள்ள இந்த ஸ்போர்கள் பாதிப்பை உண்டாக்குகின்றன. காமா கதிர் வீச்சுக்குட்படுத்தப்பட்ட மருத்துவ தரமுள்ள தேனில் கிளாஸ்டிரிய நச்சேற்றத்திற்கான ஸ்போர்கள் மிகக் குறைந்த அளவே காணப்படுவதால் பாதிப்பு குறைவாகவே இருக்கும். காமா கதிவீச்சு தேனின் பாக்டிரியா எதிர்ப்பு தன்மையை சிறிதும் பாதிக்காது. + +குழந்தை கிளாஸ்டிரீயம் நச்சேற்றம் புவியின் நிலப்பரப்பில் பல்வேறு மாறுபாடுக்ளைக் காட்டுகிறது. பிரிட்டனில், 1976 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறே ஆறு குழந்தை கிளாஸ்டிரீய நச்சேற்றப் பாதிப்புகள் இருந்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது, அமெரிக்காவில் இப்பாதிப்பு ஒரு இலட்சம் குழந்தைகளுக்கு 1.9 என்ற அளவில் உள்ளது. இந்த அளவிலும் 47.2% கலிபோர்னியா குழந்தைகளிடம் காணப்படுகிறது. தேனின் இந்த ஆபத்து விகிதம் சிறியதாக உள்ளது என்றாலும் கைக்குழந்தைகளுக்கு . சுகாதார நோக்கில் தேன் பரிந்துரைக்கப்படுவதில்லை. + +அரளிப்பூ, பசுமைமாறச் செடிவகையைச் சேர்ந்த பெரிடிய மலர்கள், புன்னை மலர்கள், புதராக வளரும் சில செடி இனப்பூக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் தேன் நச்சு ஏற்படுகிறது. தலை சுற்றல், பலவீனம், அதிக வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இத்தேனை உண்பதால் ஏற்படலாம். அரிதான நிகழ்வுகளில் குறைந்த இரத்த அழுத்தம், நிலைகுலைவு, இதய துடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் படை நோய் மற்றும் வலிப்பு நோய் முதலியவற்றால் இறப்பும் ஏற்படலாம். பாரம்பரிய முறைகளில் உற்பத்தி செய்யப்படும் தேன் மற்றும் விவசாயிகளால் குறைவான தேன் கூட்டுப்பெட்டிகளை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் தேன் முதலியன பதப்படுத்தப்படாத நிலையில் நச்சு தேன் உண்டாகிறது. + +2012 ஆம் ஆண்டில், சீனா, துருக்கி, மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் தேன் உற்பத்தியில் முதல் மூன்று இடங்களில் இருந்தன. + +பிராந்திய அளவிளான தேன் உற்பத்தியில் அமெரிக்கா (உலகளவில் நான்காவது இடம் ) மற்றும் உருசியா (உலகளவில் ஐந்தாவது இடம் ) வகிக்கின்றன. + +மெக்சிகோ உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தேனில் 4 சதவீதம் அளவிற்கு அளிக்கும் மற்றொரு முக்கியமான நாடாகும். மெக்சிகோவின் தேன் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு யுகாட்டின் தீபகற்பம் ல் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரும்பாலும் மெக்சிகோவினரின் தேன் உற்பத்தி பாரம்பரிய முறைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. + + + + +உரம் + +உரம் () ("fertiliser") என்பது விளை நிலத்தில் உள்ள ஊட்டச்சத்துகளைப் பெருக்கும் பொருட்டு இடப்படுவதாகும். மண்ணில் குறைந்து வரும் இயற்கையான சத்துப் பொருட்களை ஈடு செய்யும் பொருட்டு செயற்கையான சத்துப் பொருளை மண்ணுக்கு ஊட்டுவது 'உரம் இடுதல்' ஆகும். சாதாரணமாக மண்ணில் நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், மக்னீசியம், கந்தகம், இரும்பு முதலிய வேதியல் பொருட்கள் கலந்துள்ளன. இவையே தாவரங்களுக்குத் தேவையான வேதியியல் சத்துப் பொருட்கள் ஆகும். காற்றிலிருந்தும் கூட சத்துப் பொருட்களைத் தாவரங்கள் சேமித்து வளர்கின்றன. + +மண்ணில் உள்ள இவ்வியற்கைச�� சத்துப் பொருட்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நிலையிலும் உறுதுணை புரிகின்றன. தாவரத்தின் தண்டும் இலைகளும் நன்கு வளர்ச்சி பெற நைட்ரஜன் பொருட்கள் பெருந்துணை புரிகிறது. தாவரங்களுக்கு நோய் ஏதும் வராமல் காக்கும் கேடயமும் இதுவேயாகும். பூக்கள் பூத்துக் குலுங்கவும் காய்கள் நன்கு திரட்சியடையவும் விதைகள் முதிர்ச்சி பெறவும் பாஸ்பேட்டுகள் அவசியம். அதே போன்று வேரும் பழமும் வித்தும் திரட்சி பெற பொட்டாஸ் என்னும் சாம்பல் சத்து இன்றியமையாத தேவையாகும். + +மண்ணிற்கு மேலும் வளமூட்ட பொதுவாக மாட்டுச் சாணம், இலை, தழை, எரு, ஆட்டுப் புழுக்கை போன்று இயற்கைக் கழிவுப் பொருட்கள் நிலத்திற்கு உரமாக இடப்படுகின்றன. இவையும் இயற்கை உரங்களே ஆகும். அன்றாடம் கூட்டிப் பெருக்கும் குப்பைக் கூளங்களை குழியிட்டு கழிவு நீரைப் பாய்ச்சி உரமாக்குவதும் உண்டு. இது கலப்பு உரம் அல்லது தொழு உரம் (கம்போஸ்ட்) என அழைக்கப்படுகிறது. + +சத்திழக்கும் மண்ணுக்கு மேலும் வளமூட்ட இயற்கை உரங்களின் தன்மைகளைக் கொண்ட செயற்கை உரங்களை வேதியியல் அடிப்படையில் தொழிற்சாலைகளில் தயாரிக்கிறார்கள். இவற்றை செயற்கை உரங்கள் என்கிறோம். இவ்வகை உரங்கள் நைட்ரசன் (தொழிற்சாலையிலும்), பாஸ்பரஸ், பொட்டாசியம் (சுரங்கத்திலுருந்து வெட்டியெடுக்கப்பட்டவைகளிருந்து) போன்ற வேதியியல் பொருளினின்றும் தயாரிக்கப்படுகிறது. இயற்கை உரம், கலப்பு உரம் இவற்றோடு வேதியியல் உரங்களும் மண்ணிற்குச் சத்தூட்டி தாவரப் பயிர்கள் செழித்து வளர வழி கோலுகின்றன. அறிவியலின் வளர்ச்சி காரணமாக உற்பத்தியைப் பெருக்க, நல்ல தரமான விளைபொருட்கள் கிடைக்க, செயற்கை உரங்கள் பெருமளவில் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. + +உரம் தழை (நைட்ரசன்) மணி (பாஸ்பரஸ்), சாம்பல் (பொட்டாசியம்), ஆகிய முக்கிய முதல் நிலை பேரூட்ட கனிம சத்துகளையும் கால்சியம், மக்னீசியம், கந்தகம் ஆகிய இரண்டாம் நிலை ஊட்டச் சத்துக்களையும் இரும்பு, மயில் துத்தம், போரான், மாலிப்டினம், தாமிரம், மாங்கனீசு போன்ற தாதுப்பொருட்களையும் நிலத்திற்கு தருகிறது. நிலத்தின் தன்மை விளைவிக்கப்படும் பயிரின் இயல்பு, தட்பவெப்ப சூழ்நிலை ஆகியவற்றைப் பொறுத்து தேவைப்படும் சத்தை எவ்வகை உரத்தின் மூலம் பெறுவது என்பதைத் தீர்மானித்து அவ்வகை உ��த்தை நிலத்திற்கு இடவேண்டும். அப்போதுதான் விரும்பிய பலன் கிட்டும். உரமிடுவதற்கென தனி எந்திரங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. + +அளவுக்கு மீறிய உரமிடுவதால், நிலம், பயிர் மற்றும் உணவு ஆகியவை நச்சுத் தன்மையடைவதுடன் அதிகப்படியான உரங்கள் அல்லது உரங்களிலுள்ள தேவையற்ற பொருட்கள் பாசன நீரால் கழுவிச்செல்லப்பட்டு ஆறுகளிலும் நீர் நிலைகளிலும் தேங்குகிறது. அவற்றிலுள்ள வேதியியற் கனிமங்களினால் நீர் நிலைகளும் நச்சுத் தன்மை அடைகின்றன. மேலும், கழிவிலுள்ள நைட்ரேட் நைதரசன் மற்றும் அதிகப்படியான ஊட்டச் சத்துக்கள் நீர் நிலைகளில் பாசிப் பெருக்கதிற்கும் ("algal bloom") அதனால் ஏற்படும் ஆக்சிஜன் குறைவிற்கும் ("eutrophication") காரணமாகின்றது. உரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களை நீர்நிலைகளில் சேர்ப்பதற்கு முன், உயிரியல் முறையில் நைட்ரேட்டுகளாக மாற்றியோ அல்லது நைதரசனை அகற்றியோ சூழல் மாசடையாது ஓரளவு காக்கமுடியும். + + + + + + +சிதம்பரம் (நகரம்) + +சிதம்பரம் ("Chidambaram") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 28,445 ஆண்கள், 29,288 பெண்கள் ஆவார்கள். சிதம்பரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.58% ஆகும். சிதம்பரம் மக்கள் தொகையில் 11.97% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் ஒன்று ஆகும். சிதம்பரம், ஆலயநகர் என்றும் நாட்டிய நகர் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகர், சிதம்பரம். + +சிதம்பரத்துக்குப் பெரும்பற்றப்புலியூர் என்று பெயர். புலிக்கால் முனிவராகிய வியாக்கிரபாதர் பூசை பண்ணியதால் அதற்குப் புலியூர் என்று பெயர். அந்தக் கோயிலுக்குச் சிதம்பரம் என்று பெயர். “சித் - ஞானம்”, “அம்பரம் - ஆகாசம்”. சித் + அம்பரம் - சிதம்பரம். காலப்போக்கில் அந்த ஊர் பேர் மறைந்து கோயில் பெயரே ஊரின் பெயராக மாறிவிட்டது. + +திருசிற்றம்பலம் என்ற பெயர், சிற்றம்பலமாக மருவி சிதம்பரம் என வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் உள்ள ஆலயம் உலகப்புகழ் பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக ���ுற்காலத்தில் இருந்ததால், தில்லை என்றும் தில்லையம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. + +சிதம்பரத்தில் உள்ள ஆலயம் மிகவும் பழைமையானது, பெருமை வாய்ந்தது. சைவர்களின் முக்கியக் கடவுளான சிவபெருமானின் நடராசர் ஆலயமும், வைணவர்களின் முக்கியக் கடவுளான திருமால், கோவிந்தராசப் பெருமாள், புண்டரீகவல்லித் தாயாருடன் வீற்றிருக்கும் சிதம்பரம் திருச்சித்ரகூடம் கோவிந்தராஜன் ஆலயமும் இந்த நகருக்கு பெருமை சேர்க்கிறது. மேலும் இங்கு தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இருப்பதால் இந்நகரம் ஆலய நகரம் என்று அழைக்கப்படுகின்றது. + + + + + +கடலூர் மாவட்டம் + +கடலூர் மாவட்டம் தமிழ் நாட்டிலுள்ள 33 மாவட்டங்களில் ஒன்றாகும். கடலூர் நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரமாகும். சோழர் கால வரலாற்று புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் "கடம்பூர்" என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர். + +தெற்கே அரியலூர் மாவட்டமும்,பெரம்பலூர் மாவட்டமும், தென்கிழக்கே தஞ்சாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடாவும், மேற்கே விழுப்புரம் மாவட்டமும், சேலம் மாவட்டமும்,வடக்கே புதுச்சேரி மாநிலமும், இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. + +முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு மாவட்டங்களே இருந்த காலத்தில் கடலூர் மாவட்டத்தின் பெயர் தென்னாற்காடு மாவட்டம் என இருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டமும் இம்மாவட்டத்திலேயே அடங்கி இருந்தது. இந்நிலையில் 1993 செப்டம்பர் 30 அன்று தென் ஆற்காடு மாவட்டமானது, "தென் ஆற்காடு வள்ளளார்" மற்றும் "விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம்" என இரு மாவட்டங்களா உருவாக்கப்பட்டன. மற்ற மாவட்டங்கள் அப்போது பெரும்பாலும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு மாவட்டங்களுக்குப் பெரியோரின் பெயர்களைச்சூட்டி அழைக்கும் முறையால், சில சிக்கல்கள் ஏற்பட்டதால் மீண்டும் மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே அழைக்கப்படும் மாற்றம் வந்ததையடுத்துத் தற்போது கடலூர் மாவட்டம் என அழைக்கப்படுகிறது. + +3,703 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 2,605,914 ஆகும். அதில் ஆண்கள் 1,311,697 ஆகவும்; பெண்கள் 1,294,217 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 14.02% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 704 நபர்கள் வீதம் உள்ளனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 86.16% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 279,950 ஆகவுள்ளனர். +இம்மாவட்ட மக்கள்தொகையில் இந்துக்கள் 91.78% ஆகவும், கிறித்தவர்கள் 3.20 % ஆகவும், இசுலாமியர்கள் 4.75% ஆகவும், மற்றவர்கள் .029% ஆகவும் உள்ளனர். + +கெடிலம் ஆறு, பெண்ணையாறு, பரவனாறு, கொள்ளிடம் மற்றும் மணிமுத்தாறு,வெள்ளாறு (வடக்கு) ஆகிய ஆறுகள் பாய்கின்றன. + +திருவதிகை அணை, வானமாதேவி அணை மற்றும் திருவஹீந்திரபுரம் அணை சேத்தியாதோப்பு அணை பெலாந்துறை ஆகிய அணை கள் அமைந்துள்ளன. + +பிச்சாவரம், கெடிலம் ஆகிய கடலோரப்பகுதிகளில் அலையாத்திக் காடுகள் ("Mangrove") உள்ளன. + +கடலூர் மாவட்ட 3 வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], பத்து வருவாய் வட்டங்களையும், 955 வருவாய் கிராமங்களையும் கொண்டது. + +கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களும், 683 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. + +கடலூர் மாவட்டம் 13 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. + + +மேலும் நெய்வேலி நகரியமும் இம்மாவட்டத்தில் உள்ளது. என். எல். சி. இந்தியா லிமிடெட் என்றழைக்கப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் இந்தியாவிற்கான மின்சாரத்தேவையை நிறைவேற்றுவதில் முதன்மையானது. மாவட்டத்திற்க்கு தேவையான உணவு பொருட்கள் பெரும்பாலும் விவசாயத்தின் மூலம் இங்கேயே, உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கரும்பு இங்கு முக்கிய பயிராக நடவு செய்யப்படுகிறது. அதன் காரணமாக இங்கு நெல்லிக்குப்பம், விருத்தாசலம் ஆகிய நகரங்களில் இரண்டு சர்க்கரை ஆலைகள் உள்ளன. + +மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் (கி.பி.1110ல் முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது), +பிச்சாவரம், கெடிலம் ஆற்றின் கழிமுகம், கடலூர் தீவு, வெள்ளி கடற்கரை, புனித டேவிட் கோட்டை, கடலூர் துறைமுகம், சிதம்பரம் நடராசர் கோயில், வடலூரில் வள்ளலார் அமைத்த சத்ய ஞான சபை, விருத்தாசலம் விருத்தகிரிஸ்வரர் கோயில், திருமுட்டம் ஆதிவராக சுவாமி கோயில், +மேல்பட்டாம்பாக்கம் 400 வருட சிவன் கோவில் சரபேசுவரர், திருக்கண்டேஸ்வரம் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் நடனபாதேஸ்வரர் மற்றும் தமிழ்நாட்டில் ஆறு கரம் கொண்ட பைரவர் தி௫க்கோயில், பள்ளிவாசல் மசூதி போன்றவை கடலூர் மாவட்ட சுற்றுலாத் தலங்கள் ஆகும். மேலும் காட்டுமன்னார்கோயில் அருகில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயில் மிக பிரசித்தி பெற்ற தலம், கரக்கோயில் எனப்படும் தேர் வடிவ கோயில் இங்கு மட்டுமே உள்ளது. மா.ஆதணூர் கிராமத்தில் திருநாளை பாேவார் திருத்தலம் உள்ளது, +திருநாளைப் போவார் நாயனார் அல்லது நந்தனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். + +கடலூரில், 1865 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட மத்திய சிறைச்சாலை உள்ளது. செப்டம்பர் 1918 முதல் திசம்பர் 14, 1918 வரை விடுதலைப் போராட்டத்தின் போது கவிஞரான சுப்பிரமணிய பாரதி இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். +இம்மாவட்டம் 9 சட்டமன்றத் தொகுதிகளையும், இரண்டு மக்களவைத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. + + + + + + +நா. பார்த்தசாரதி + +நா.பார்த்தசாரதி (டிசம்பர் 18, 1932 - டிசம்பர் 13, 1987) புகழ் பெற்ற தமிழ் நெடுங்கதை எழுத்தாளர் ஆவார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் ஆகிய புனைப்பெயர்களிலும் அறியப்படும் இவர் தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்றும் அழைக்கப்படுகிறார். பெரும்பாலும் இவருடைய கதைகள் சமகால சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடும் கொள்கைப் பிடிப்புள்ள கதைமாந்தர்களைப் பற்றியதாய் அமைந்துள்ளது. இவருடைய புகழ் பெற்ற நெடுங்கதைகளான குறிஞ்சி மலர் மற்றும் "பொன் விலங்கு" தொலைக்காட்சித் தொடர்களாகவும் வந்துள்ளன. சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ளார்.இவர் எழுதிய ""சாயங்கால மேகங்கள்"" எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1983 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் நாவல் வகைப்பாட்டில் முதல் பரிசு பெற்றிருக்கிறது. இவர் 93 நூல்களை எழுதியிருக்கிறார். + +த���ிழ்நாடு, விருதுநகர் மாவட்டம் , சிவகாசி வட்டத்தில் உள்ள நரிக்குடி என்னும் சிற்றூரில் 1932 திசம்பர் 18 ஆம் நாள் பிறந்தார். முறையாகத் தமிழ் கற்றவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் சேர்ந்து படித்து பண்டிதர் பட்டம் பெற்றார். 1977 - 1979 ஆம் ஆண்டுகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் முனைவர் தி. முத்துகண்ணப்பரை வழிகாட்டியாகக்கொண்டு "பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்" என்னும் தலைப்பில் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்தார். 1987ஆம் ஆண்டில் ஆய்வேட்டை சமர்பித்தார். ஆனால் அப்பட்டத்தை வாங்காமலேயே மறைந்துவிட்டார். + +பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். . + +1965 இல் கல்கி இதழில் இருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார். + +1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிர்வாகத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினமணிக் கதிர் வார இதழுக்கும் கலைக்கதிர் இதழுக்கும் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினார். + +நா.பா. ரஷ்யா, இங்கிலாந்து, போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, எகிப்து, குவைத் போன்ற பல நாடுகளுக்குச் சென்று வந்தார். + + +இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக இருந்த காமராஜருக்கும் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது இதனால் காங்கிரசு இரண்டாக உடைந்தது. பழம் தலைவர்கள் காமராஜர் தலைமையில் சிண்டிகேட் என்னும் ஸ்பாதன காங்கிரஸ் கட்சியில் இயங்கினர். நா. பார்த்தசாரதி அக்கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சியை ஆதரித்து பொதுக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார். அப்பொழுது, தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம் என்னும் சிற்றூரில் காவல்துறை சார்பு ஆய்வாளரால் தாக்கப்பட்டார். அந்நிகழ்வு அக்கால சட்டமன்றத்தில் விவாதப் பொருளாக மாறியது. + +இதய நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நா.பா. 1987 திசம்பர் 13ஆம் நாள் மரணமடைந்தார். + + + + + + + + + + + + + +எட்டயபுரம் + +எட்டயபுரம் (ஆங்கிலம்:Ettayapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மகாகவி சுப்பிரமணிய பாரதி பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். உமறுப் புலவரும் இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார். + +தூத்துக்குடிக்கும் - கோவில்பட்டிக்கும் இடையே அமைந்த எட்டயபுரம், தூத்துக்குடியிலிருந்து 43 தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,646 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 12,772 ஆகும் + +17.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி விளாத்திகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +எட்டயபுரத்தின் இயற்பெயர் "இளச நாடு" என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று. தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். + +இங்குள்ள மக்கள் பெரும்பாலும் நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் வேளாண்மையும் செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் சென்னை போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர். + +இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி நிறுவனத்தார் இவர்களுக்கு ஜக்கார்டு தறிகளைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் துளையிடப்பட்ட அட்டைகளின் (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர். + +நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். தானியங்கி தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. + +தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பருத்தி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் விளையும் கருப்பு மண் வகை நிலம் இங்கு அதிகம். + +மகாகவி பாரதியார் என்றழைக்கப்படும் சுப்பிரமணிய பாரதி இங்கு 1882-ம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 11-ம் நாள் பிறந்தார். சிறந்த எழுத்தாளராகவும் தத்துவவாதியாகவும் இருந்த அவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டார். அவர், இங்குள்ள "இராசா மேல்நிலைப் பள்ளி"யில் பயின்று வந்த பொழுது தன்னுடைய 11-ம் வயதிலேயே கவி புனையும் ஆற்றலைக் கொண்டிருந்தார். அதன் பின்னர், அவர் தனது வாழ்வின் பல கட்டங்களில் எட்டயபுரத்து பாளையக்காரரால் ஆதரிக்கப்பட்டார். + +எட்டப்பனைப் பற்றி முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றன. வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் பலரும் எட்டப்பனை இழித்துரைப்பர். பிற்பாடு காட்டிக் கொடுக்கும் எவரையும் "எட்டப்பன்" என்றுரைக்கும் வழக்கம் உருவாயிற்று. எனினும், இவ்வூர் மக்களுக்கு அவர் வழிவந்தவர்கள் செய்த நற்பணிகளுக்காகவும், முத்துசாமி தீட்சிதர், பாரதி போன்றோரை ஆதரித்தமையாலும் இவருக்கு நற்பெயரும் உண்டு. + +வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். மதுரை (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் திருநெல்வேலி (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது. + + + + + + + + + + +- இன்னும் இளசை சுந்தரம், இளசை ஜமால், இளசை கணேஷ், மரிய செல்வம், புலவர் பார்வதி மாரியப்பன், ஜீவா திலகம், சோலைச் சாமி. ஆகிய எழுத்தாளர��கள் இந்த மண்ணுக்குச் சொந்தம். எட்டயபுரம் என்ற நூலைக் கவிஞர் கலாப்பிரியா எழுதியுள்ளார். எழுத்தாளர்கள் மட்டுமல்ல,பொறியாளர் மு.மலர்மன்னன், மா.முத்து, சங்கர வாத்தியார், எஸ். ராமசுப்பு, மாறன், கண்ணன் ஆகிய ஓவியர்களும் இந்தக் கரிசல் மண்ணுக்குச் சொந்தமானவர்கள். அந்தக் காலத்தில் வானொலியில் நிறையப் பாடிய எட்டயபுரம் நரசிம்மன் இந்த ஊர்க்காரர்தான் + + + + + +சுப்பிரமணிய பாரதி + +சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீனத் தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, "கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி" என்ற பட்டம் வழங்கினார். பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949 ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். + +பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் மாணவியான சகோதரி நிவேதிதையை தமது குருவாகக் கருதினார். + +சின்னசாமி ஐயர் இலக்குமி அம்மாள் தம்பதியினருக்கு திசம்பர் 11, 1882இல் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்றாலும், சுப்பையா என்று அழைக்கப்பட்டார் . 1887ஆம் ஆண்டு இலக்குமி அம்மாள் மறைந்தார். அதனால், பாரதியார் அவரது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். + +தனது பதினொன்றாம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவி புனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார். 1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார். 1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. சில காலத்திலேயே, அப்பணியை விடுத்து காசிக்குச் சென்றார். 1898 முதல் 1902 வரை அங்கு தங்கி இருந்தார். பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றில் பாரதி வாழ்ந்தார். ஏழு ஆண்டுகள் பாட்டெழுதாமல் இருந்தபின்னர், 1904 ஆம் ஆண்டு மதுரையில் பாரதி எழுதிய பாடல் 'விவேகபானு' இதழில் வெளியானது. வாழ்நாள் முழுதும் பல்வேறு காலகட்டங்களில் இதழாசிரியராகவும் மதுரையில் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றினார். + +பாரதி, தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்தார். + +"கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி"      - பாரதி. + +"நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், +"இமைப்பொழுதும் சோராதிருத்தல்"      - பாரதி. + +தம் தாய்மொழி தமிழின்மீது அளவுகடந்த அன்புகொண்டவர். பன்மொழிப் புலமைபெற்ற பாவலரான இவர் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம்" எனக் கவிபுனைந்தார். சமற்கிருதம், வங்காளம், இந்தி, பிரான்சியம், ஆங்கிலத்தில் தனிப்புலமை பெற்றவர். அம்மொழிகளின் தனிச்சிறப்புமிக்க படைப்புகளைத் தமிழ் மொழியாக்கம் செய்தவர். பழந்தமிழ்க் காவியங்களின் மீது தனி ஈடுபாடு கொண்டவர். அழகியல் உணர்வும் தத்துவ சிந்தனைகளும் ஒருங்கே கொண்டவர் என்று அறியப்படுகின்றார். தேசியக் கவி என்ற முறையிலும் உலகு தழுவிய சிந்தனைகளை அழகியலுடனும் உண்மையுடனும் கவின்றதினாலும், இவர் உலகின் சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிடப்படும் சிறப்பு பெற்றவர் என்றும், அண்மைக்காலத் தமிழின் தன்னிகரற்ற கவியேறு என்றும் பலர் கருதுகின்றனர். + +இந்திய விடுதலைப் போராட்டத்தையே பாரதப் போராகவும், பாஞ்சாலியை பாரத தேவியாகவும் உருவகப்படுத்தி மகாகவி படைத்த படைப்புதான் பாஞ்சாலி சபதம். அழகிய இலக்கிய நயத்தையும் மிக அழகான கவிநயத்தையும் கொண்ட தமிழின் அழியாக் காவியமாகப் பாரதியின் பாஞ்சாலி சபதம் விளங்குகிறது. +பாஞ்சாலி சபதம் வியாசரின் பாரதத்தை தழுவி எழுதப் பெற்றது. +பாஞ்சாலி சபதம் இரு பாகங்கள் உடையது. +இது சூழ்ச்சிச்சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதல் சருக்கம், சபதச் சருக்கம் என ஐந்து சருக்கங்களையும், 412 பாடல்களையும் கொண்டது. + + +பாரதியார், முதலில் நவம்பர் 1904 முதல் ஆகத்து 1906 வரை சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியதோடு தம் வாழ்நாளின் இறுதியிலும் ஆகத்து 1920 முதல் செப்டம்பர் 1920 வரை அவ்விதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழிலும் (ஆக. 1905 - ஆக. 1906), இந்தியா என்ற வார இதழில் (மே 1905 - மார்.1906 / செப். 1906, புதுச்சேரி: 10.19.1908 – 17. மே 1910), சூரியோதயம் (1910), கர்மயோகி (திசம்பர் 1909–1910), தர்மம் (பிப்.1910) என்ற இதழ்களிலும் பாலபாரத யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். ஆங்கில அரசால் தடை செய்யப்பட்ட பாரதியின் "இந்தியா" பத்திரிகை புதுவையில் வெளியானது. + +பாரதியாரின் பாடல்களை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்டு இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பர்மா மாகாண அரசு தடைசெய்தது. இதனைப் பின்பற்றி சென்னை மாகாணத்தின் காவல் துறை உத்தரவுமூலம் பாரதியார் பாடல்கள் தடைசெய்யப்பட்டு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாகாணச் சட்ட அவையில் விரிவான விவாதம் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் 8, 9 தேதிகளில் நடந்தது . தீரர் சத்திய மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் இலக்கியம் சார்ந்த பல கருத்துகள் பதிவாகின. + +விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால் பாரதி தேசியக் கவியாகப் போற்றப்படுகிறார். "மண்ணும் இமயமலை எங்கள் மலையே... மாநிலமீதிதுபோல் பிறிதிலையே... இன்னறு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே... இங்கிதன் மாண்பிற்கெதிர் எது வேறே" என்று எழுதியவர். + +தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டதோடு மட்டுமன்றி அதன் எதிர்காலம் எவ்வாறிருக்க வேண்டும் என்ற பார்வையும் பெற்றவர். "வந்தேமாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்" என்றவர், "பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம்" என்றார். "வங்கத்த��ல் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்செய்யும்" நதிநீர் இணைப்புத் திட்டத்தை விடுதலைக்கு முன்பே கனவுகண்டவர். + +பாட்டுக்கொரு புலவன் பாரதி பாடல்களின் இலக்கணக் கட்டுக்களைத் தகர்த்தெறிந்தவன். இவருக்கு முன்பாகக் கவிபுனைந்த கவிஞர்கள் தொல்காப்பிய இலக்கணம் சிறிதும் வழுவாமல், பொருள்கொள், யாப்பு, அணி என இலக்கணத்தில் கட்டுண்டு கற்றோர் மட்டும் கற்றறியும் கவிதைகளையே புனைந்தனர். இலக்கணச் சட்டங்களைத் தகர்த்தெறிந்த பாரதி, புதுக் கவிதை எனப் புகழப்படும், பாமரரும் கேட்டுணரும் வசனக் கவிதையைத் தமிழுக்குத் தந்தவர். சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் உதவும் ஒரு அறிவு சார்ந்த புதுக்கவிதை இவர் தொகுப்பில் இருக்கும். அதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் தான் பாப்ா பாட்டு என்ற தலைப்பில் இவர் எழுதிய கவிதை. + +"பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே" எனப் பெண்ணுரிமையை ஏத்தினார். +"போற்றி போற்றியோராயிரம் போற்றி நின் பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றிகான்" +என்ற பாரதி "பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா" என்றார். பெண்களின் கல்வியறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று கண்டார். + +தமிழ்நாடு அரசு மகாகவி பாரதியார் நினைவினைப் போற்றும் வகையில் பாரதியார் நினைவுச் சின்னங்களாக எட்டயபுரத்தில் அவர் வாழ்ந்த இல்லம், சென்னை திருவல்லிக்கேணியில் அவர் வாழ்ந்த இல்லம், புதுச்சேரியில் அவர் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை நினைவு இல்லங்களாகப் போற்றி வருகிறது. இவர் பிறந்த எட்டயபுரத்தில் மகளிர்க்கான பல்தொழில்நுட்பக் கல்லூரியும், பாரதி மணிமண்டபமும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மைய மண்டபத்தில் பாரதியின் ஏழு அடி உயரச் சிலை அமைக்கப்பட்டு 13-02-2000 அன்று பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும் வைக்கப்பட்டுள்ளது. + +1921 ஆம் ஆண்டு சூலை மாதம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். கோவில் யானையால் தாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, கடும் வயிற்றுக்கடுப்பு நோயால் பாதிக்கப்பட்டார். பிறகு 1921இல் செப்டம்பர் 12 அதிகாலை 01:30 மணிக்கு காலமானார். அவர் கடைசி நாட்களைக் கழித்த இல்லம் திருவல்லிகேணியில் உள்ளது. + + + + + + +மெரீனா கடற்கரை + +மரீனா கடற்கரை [மெரீனா அல்லது மெரினா கடற்கரை] ("Marina beach") உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். மும்பை நகரின் பாறைகள் நிறைந்த ஜுகு கடற்கரையைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. +சென்னைத் துறைமுகம் கட்டப்படும் முன்பு, மெரினா கடற்கரை வெறும் களிமண் தொகுப்பை உடையதாக இருந்தது. + +சுவாமி விவேகானந்தரின் சென்னை இல்லறச் சீடர்களில் ஒருவர் கிருஷ்ண சுவாமி அய்யர். இவர் 1890 களில் தென்னக ரயில்வே, மயிலாப்பூரையும், கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் செல்ல தீர்மானம் நிறைவேற்றி 1903 இல் வேலை தொடங்கும் சமயம் அதனை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். 'இந்தக் கடற்கரைதான் சென்னை நகரத்தின் நுரையீரல். இதை அழித்தோமானால் நம்மை வருங்கால சந்தியினர் மன்னிக்கமாட்டார்கள் என்று கூறினார்'. மெரீனாவை காப்பாற்றுவதற்காகக் கூடிய மக்கள் கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசும் அஞ்சியது. இதனை அடுத்து அரசாங்கமும் அத்திட்டத்தினை கைவிட்டது. + +சென்னையின் முக்கிய பகுதியான இக்கடற்கரையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஆண்டு முழுவதும் நடைபெறுகின்றன. இந்தியாவின் பெரிய ஓட்டமாகிய சென்னை மாரத்தானும் இங்கு நடைபெறும். ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்பர். பொங்கல் திருநாளில் மக்கள் தங்கள் உறவினர்களுடன் கூடி மகிழும் இடமும் இதுவே. சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாட்களில் அர��ுத் துறைகளின் அணிவரிசை நடைபெறும். + +மெரினா கடற்கரையை ஒட்டிய காமராசர் சாலை ஆறுவழிப் பாதையாகும். கடற்கரையின் எதிர்புறம் கலங்கரை விளக்கம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் ஆகிய தொடர்வண்டி நிலையங்களும், விவேகானந்தர் இல்லம், சாந்தோம் ஆகிய பேருந்து நிறுத்தங்களும் உள்ளன. அண்ணா சதுக்கத்தில் இருந்து சென்னையின் பல பகுதிகளுக்கு பேருந்து வசதிகளும் உள்ளன. சுற்றுலா பேருந்துகள் இங்கு நின்றே செல்லும். + +ஈழத்திலிருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு கல்வி கற்க வந்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன் மெரீனா கடற்கரையிலுள்ள திருவள்ளுவர் ஆடவர் விடுதியில் வசித்துள்ளார். + + + + +தமிழ் இலக்கணம் + +தமிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. +முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். +பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை, + +அறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர். + +'அ' முதல் 'ஔ' வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்' முதல் 'ன்' வரையுள்ள 18 மெய்யெழுத்துகளும் ஆகிய முப்பதும் முதலெழுத்துகள் எனப்படும் +உயிரெழுத்துகள் குறில், நெடில் என இரண்டு வகைப்படும். மெய்யெழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று வகைப்படும். + + +எனச் சார்பெழுத்து பத்து வகைப்படும். முதலெழுத்துகளைச் சார்ந்து வருவதாலும், முதலெழுத்து திரிபு, விகாரத்தால் பிறந்ததாலும் இவை சார்பெழுத்துகள் என அழைக்கப்படுகின்றன. + +இவ்வாறு, உயிர் எழுத்துகள் 12 , மெய் எழுத்துகள் 18 , உயிர்மெய் எழுத்துகள் (இவைகள் உயிர் மெய் இரண்டும் சார்ந்து வரல் ஆதலின் சார்பெழுத்து எனப்படும் 216), ஆய்தம் ஆகிய 247 எழுத்துகளே, தமிழ் எழுத்துகள் எனப்படும். +
+ + +எழுத்தெண்ணிச் சீரும் அடியும் வரையறுக்கும் நிலையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. + +வஞ்சியுரிச்சீர், குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழி நெடிலடி போன்றவை எழுத்தடிப்படையில் எழுத்தெண்ணி சீர்களும் அடிகளுமாகும். + +வஞ்சியுரிச்சீர் + + + + + + + + + + +மெய்யெழுத்து உயிரில் எழுத்து என்று குறிக்கப் பெறுகிறது. + +ஓரடிக்கு 4 முதல் 20 எழுத்து வரை ஆசிரியப்பா வருமென்றும், 7 முதல் 16 எழுத்து வரை வெண்பா வருமென்றும், 13 முதல் 20 எழுத்து வரை கலிப்பா வருமென்றும் தொல்காப்பியர் குறிக்கிறார். + +ஓர் எழுத்து தனித்து நின்றோ பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் எனப்படும்.
+எ.கா: வீடு, கண், போ, + +சொல்லின் வகைகள் + +பொருள் இரண்டு வகைப்படும். அவை, + +தமிழ் இலக்கியங்களுக்குப் பாடுபொருள்களாக அமைவன அகப்பொருள்களும் புறப்பொருள்களும். ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் ஒருவரையொருவர் காதலித்து நடத்தும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விளக்கிக் கூறுவது அகப்பொருள். அறம், பொருள், வீடு ஆகிய (இன்பம் ஒழிந்த) மூன்று பேறுகளை பற்றியும், கல்வி, வீரம், கொடை, புகழ் முதலியன பற்றியும் கூறுவது புறப்பொருள். + +யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும். யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும். + +யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு +யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை + +உயிர் எழுத்துக்களும், உயிர்மெய்யெழுத்துகளும் தத்தம் ஒலி அளவுகளைப் பொருத்து "குறில்" அல்லது "நெடில்" என வழங்கப்படுகின்றன. குற்றெழுத்து, நெட்டெழுத்துகளின் அடுக்குகளை அசைகளாக வகுத்துள்ளனர். "நேரசை", "நிரையசை" ஈரசைகளாவன. குறிலோ நெடிலோ தனித்தோ ஒற்றடுத்தோ வருதல் நேரசையாகும். இருகுறிலிணைந்து வருதலும், குறில் நெடிலிணைந்து வருதலும், இவை இரண்டும் ஒற்றடுத்து வருதலும் நிரையசையாகும். ஒலிப்பியல் அடிப்படையில் அசைகளே கவிதைகளின் அடிப்படைக் கூறுகளாவன. அசைகளின் கூட்டு "சீர்" எனப்படும். சீர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருதலால் "தளைகள்" உண்டாகும். தளை என்னும் சொல்லுக்குக் கட்டுவது, பொருந்துவது என்பது பொருளாகும். நின்ற சீரின் ஈற்றசையும் வரும் சீரின் முதல் அசையும் ஒன்றியும், ஒன்றாமலும் வருவது தளையாகும். இவ்வாறாக சீர்கள் இணைந்த தளைகள் பொருந்தி நின்று அடுத்து நடப்பது அடி எனப்படும். அடிகளும் அவ்வடிகளில் உள்ள சீர்களும் பொருத்தமுற தொடுக்கப்படுவது தொடையாகும். தொடை என்பது காரணப்பெயராகும். + + +அணி என்பதற்கு அழகு என்பது பொருள். செய்யுளில் அமைந்து கிடக்கும் சொல்லழகு, பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறுவது அணி இலக்கணமாகும். அணி பலவகைப்படும். அவற்றுள் சில, + + + + + + + +உருசியா + +உருசியா ("Russia") அல்லது இரசியா என்பது வடக்கு யூரேசியாவில் அமைந்துள்ள உலகிலேயே நிலப்பரப்பில் யாவற்றினும் மிகப்பெரிய நாடாகும். இந்நாட்டின் முறைப்படியான பெயர் உருசியக் கூட்டமைப்பு என்பதாகும். தமிழில் இரசியா, இரச்சியா என்றும், ருஷ்யா என்னும் பெயர்களாலும் குறிக்கப்படுவது உண்டு. +உருசிய மொழியில் இது Росси́йская Федера́ция ("Rossiyskaya Federatsiya" அல்லது "ரசீஸ்க்கய ஃபெதராத்சியா") அல்லது சுருக்கமாக உருசியா (உருசிய மொழியில்: Росси́я, ஆங்கில ஒலிபெயர்ப்பு: "Rossiya" அல்லது "Rossija") என அழைக்கப்படுகிறது. ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களின் பெரு நிலப்பரப்பில் மிகவிரியும் ஒரு பெரும் நாடாக விளங்கும் இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 17,075,200 சதுரக் கிலோமீட்டர். பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியலைப் பார்த்தால், உருசியாவின் பரப்பளவு அடுத்த பெரிய நாடான கனடாவின் நிலப்பரப்பைக் காட்டிலும் இது இரு மடங்கு அதிகமாகும். உருசியா, மக்கள்தொகை அடிப்படையில் உலகில் எட்டாவது இடம் வகிக்கிறது. ஏறத்தாழ 143-145 மில்லியன் மக்கள் (2002ன் கணக்கெடுப்பின் படி மக்கள்தொகை 145,513,037) இந்நாட்டில் வாழ்கிறார்கள். ஏறக்குறைய வட ஆசியா முழுவதையும் மற்றும் 40% ஐரோப்பா பகுதிகளையும் உள்ளடக்கியது. 11 விதமான கால வேறுபாடுகளை (Time zone) யும், பரந்த வேறுபட்ட நிலப்பரப்பையும் கொண்டது. உருசியா உலகிலேயே அதிகமான அளவு காட்டு ஒதுக்கங்களைக் (8,087,900 ச.கிமீ) கொண்டுள்ளதுடன், இங்குள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகமாகவும் உள்ளன. உலகின் மிகக் கூடிய கனிம வளங்களும் ஆற்றல் வளங்களும் உருசியாவிலேயே உள்ளதுடன் உலகின் மிகப் பெரிய எண்ணெய், இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் விளங்குகிறது. உருசியா, பின்வரும் நாடுகளுடன் தன் நில எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது (வடமேற்கிலிருந���து தென்கிழக்கு முகமாக): நார்வே, பின்லாந்து, எஸ்டோனியா, லத்வியா, லித்துவானியா, போலந்து, பெலாரஸ், உக்ரைன், ஜார்ஜியா, அசர்பைஜான், கசகஸ்தான், சீனா, மங்கோலியா மற்றும் வட கொரியா. + +உருசியாவின் வரலாறு, கி.பி 3ம் முதல் 8ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க ஒரு குழுவினராக உருவாகிய கிழக்கு சிலேவ் என்னும் பூர்வகுடிமக்களுடன் தொடங்குகிறது. அதன் பிறகு இப் பகுதியில், வைக்கிங் என்னும் மறக் குடியினர் 9வது நூற்றாண்டில் "ருஸ்" என்னும் நடுக் கால நாட்டை உருவாக்கி ஆண்டு வந்தனர். 988 ஆம் ஆண்டில், இந்த அரசு பைசன்டியப் பேரரசிடம் இருந்து பெற்ற பழமைக் கோட்பாட்டுக் கிறித்தவத்தைத் தழுவிக்கொண்டது. இது, பைசன்டியப் பண்பாடும், சிலாவியப் பண்பாடும் இணைந்து, அடுத்த ஆயிரவாண்டு காலத்தில் இடம்பெற்ற உருசியப் பண்பாட்டு வளர்ச்சியின் தொடக்கமாக அமைந்தது. சில காலங்களின் பின் "ருஸ்" நாடு பல சிறிய நாடுகளாகச் சிதைவுற்றது. இவற்றுட் பலவற்றைக் கைப்பற்றிக்கொண்ட மங்கோலியர் அவற்றைத் தமது சிற்றரசுகளாக ஆக்கிக்கொண்டனர். பின்னர், மாசுக்கோ பெரும் டச்சி (Grand Duchy of Moscow) படிப்படியாக அருகில் இருந்த "ருஸ்" சிற்றரசுகளையும் ஒன்றிணைத்து விடுதலை பெற்றுக்கொண்டு "கீவிய ருஸ்" பகுதியின் பண்பாட்டு, அரசியல் மரபுகளின் முன்னணிச் சக்தியாக உருவானது. பிற நாடுகளைக் கைப்பற்றுவது மூலமும், பிற நிலப் பகுதிகளை இணைத்துக் கொள்வதன் மூலமும் பெருமளவு விரிவடைந்த இது 18 ஆம் நூற்றாண்டில் உருசியப் பேரரசாக உருவானது. வரலாற்றில் மூன்றாவது பெரிய பேரரசான இது, ஐரோப்பாவின் போலந்து முதல் வட அமெரிக்காவில் உள்ள அலாசுக்கா வரை பரந்து இருந்தது. + +உருசியா கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உருசியப் பேரரசாகவும், சோவியத் ஒன்றியம் மூலமாகவும் உலகின் வல்லரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. 1917ல் உருசியப் புரட்சியைத் தொடர்ந்து உலகின் முதல் அரசியல் சட்ட சோசலிச நாடாக உருவான 15 குடியரசுகளை உள்ளடக்கிய சோவியத் யூனியனில் பெரிய பகுதியாகவும் முன்னணி உறுப்பாகவும் உருசியா இருந்தது. சோவியத் ஒன்றியம் உலகின் முதல் மற்றும் பெரிய ஜனநாயக சோசலிச நாடாகும். அப்போதைய இரண்டு வல்லரசுகளில் ஒன்றாகவும் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் கூட்டுப் படைகளின் வெற்றியில் சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. சோவியத் ஒன்றியக் காலத்தில் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டன. உலகின் முதலாவது மனித விண்வெளிப் பறப்பும் இவற்றுள் அடங்கும். 1991ல் சோவியத் யூனியன் கலைக்கப்படடதால் பிறகு மீண்டு உருசியா குடியரசாக உருவானது. எனினும், உருசியாவே கலைக்கப்பட்ட சோவியத் ஒன்றியத்தின் சட்டத் தொடர்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. + +உருசியப் பொருளாதாரம் பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் ஒன்பதாவது பெரியதாகவும், வாங்கும் திறன் சமநிலையின் அடிப்படையில் ஆறாவது பெரியதாகவும் உள்ளது. இதன் படைத்துறைக்கான பெயரளவு வரவு செலவு உலகின் மூன்றாவது பெரிதாகும். இது உலகில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார சக்திகளுள் ஒன்று. உலகின் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணுவாயுத நாடுகளில் ஒன்றான உருசியா உலகின் மிகப் பெரிய பேரழிவு ஆயுதச் சேமிப்பையும் கொண்டுள்ளது. உருசியா ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுள் ஒன்றாக உள்ளதுடன், ஜி8, ஜி20, ஐரோப்பிய அவை, ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, யூரேசிய பொருளாதாரச் சமூகம், ஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு, உலக வணிக அமைப்பு ஆகியவற்றிலும் உறுப்பு நாடாக இருந்து வருகிறது. + +உருசியாவின் மக்கள் தொகை 143 மில்லியன் ஆகும். பாரிய பரப்பளவு கொண்ட நாடு என்பதால் மக்கள் அடர்த்தி 8.3/கிமீ ஆகும். பொதுவாக 78% மக்கள் ஆங்காங்கே இருக்கும் பெரிய நகரங்களிலேயே செறிவாக வாழ்கின்றார்கள். உருசியாவின் 80% மக்கள் உருசிய இன மக்கள் ஆவார்கள். இவர்களை தவிர பல சிறுபான்மை இன மக்கள் அவர்களுக்குரிய பாரம்பரிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றார்கள். + +35000 வருடங்கள் பழமையான நவீன மனிதனின் எலும்புகள் ரசியாவின் கொஸ்டெங்கி பகுதியிலுள்ள டொன் நதிக்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 41000 வருடங்களுக்குமுன் வாழ்ந்த டெனிசோவா ஹோமினின் என்ற மனித இனத்தின் எச்சங்கள் தென் சைபீரியாவின் டெனிசோவா குகைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. + +வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் தென் ரசியாவின் ஸ்டெப்பீஸ் புல்வெளிகள் நாடோடி இடையர்களின் தாயகமாக இருந்தது. ஸ்டெப்பீஸ் நாகரிகத்தின் எச்சங்கள் இபடோவோ, சின்தாஸ்டா, ஆ���்கெய்ம், மற்றும் பசிரிக், ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை நாடோடி வாழ்க்கையின் முக்கிய அம்சமான குதிரைப் படையை வைத்திருந்தமைக்கான சான்றுகளைத் தருகின்றன. + +கிரேக்க, ரோமக் குறிப்புகளில் பொன்டிக் ஸ்டெப்பீ புல்வெளி சின்தியா எனக் குறிப்பிடப்படுகிறது. கிமு 8ம் நூற்றாண்டிலிருந்து, பண்டைய கிரேக்க வணிகர்கள் தமது நாகரிகத்தை டனைஸ் மற்றும் பனகோரியா ஆகிய இடங்களிலுள்ள தமது வணிக நிலையங்களுக்கு கொண்டுவந்தனர். கிபி 3ம்-4ம் நூற்றாண்டுகளில் ஒய்யமின் கோதிக் பேரரசு தென் ரசியாவில் காணப்பட்டது. ஹூணர்களால் அழிக்கப்படும் வரை இது நிலைத்திருந்தது. கிபி 3ம் நூற்றாண்டுக்கும், 6ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கிரேக்க அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்து பொஸ்போரன் பேரரசு ஆட்சிக்கு வந்தது. இதுவும் பின்னர் ஹூணர்கள் மற்றும் யுரேசிய அவார்கள் போன்ற போர் நாட்டமுள்ள நாடோடிகளின் ஆக்கிரமிப்பினால் வெற்றிகொள்ளப்பட்டது. 10ம் நூற்றாண்டு வரை, கசார்கள் எனப்பட்ட துருக்கிய மக்கள் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட கீழ் வொல்கா புல்வெளியில் ஆட்சி செலுத்தினர். + +நவீன ரசியர்களின் மூதாதையர்கள், மரங்கள் அடர்ந்த பின்ஸ்க் சதுப்பு நிலத்தைத் தாயகமாகக் கொண்ட ஸ்லாவியக் குழுக்கள் என சில அறிவியலாளர்கள் கருதுகின்றனர். கிழக்கு ஸ்லாவியர்கள் மேற்கு ரசியாவில் இரண்டு தடவைகளிலாகக் குடியேறியுள்ளனர்: அவை, கீவிலிருந்து இன்றைய சுஸ்டால் மற்றும் முரோம் நோக்கிய ஒரு நகர்வும், பொலோட்ஸ்க்கிலிருந்து, நோவோகொரட் மற்றும் ரொஸ்டோவ் நோக்கிய இன்னொரு நகர்வுமாகும். 7ம் நூற்றாண்டிலிருந்து கிழக்கு ஸ்லாவியர்களின் சனத்தொகை மேற்கு ரசியாவில் அதிகரித்ததோடு, அங்கு வாழ்ந்த மெர்யா, முரோமியன் மற்றும் மெச்செரா போன்ற ஃபின்னோ-உக்ரிக் மக்களைத் தம்முள் மெதுவாக உள்வாங்கிக் கொண்டனர். + +9ம் நூற்றாண்டில் முதலாவது கிழக்கு ஸ்லாவிய நாடுகளின் நிறுவுகை, பால்டிக் கடல் பகுதியினரான போர்வீரர்களும், வர்த்தகர்களும், குடியேறிகளுமான வராங்கியர்களின் வருகையுடன் மேற்பொருந்துகிறது. ஆரம்பத்தில் இவர்கள் ஸ்கண்டிநேவியாவிலிருந்த வைக்கிங்குகளுடன் தொடர்புற்றிருந்தனர். இவர்கள் கிழக்கு பால்டிக் கடலிலிருந்து கருங்கடல் மற்றும் கஸ்பியன் கடல் வரை பயணம் மேற்கொண்டனர். ஆரம்ப வரலாற்றுக் குறிப்புகளின் படி ரூரிக் எனப்பட்ட வராங்கியன் இனத்தவன் 862ல் நோவோகொரட்டின் ஆட்சியாளனாகத் தெரிவு செய்யப் பட்டான். இவனுக்குப் பின் வந்த ஒலெக் என்பவன் தென் பகுதிக்குப் படையெடுத்து கசார்களின் தலைமையிடமான கீவைக் கைப்பற்றி கீவிய ரசியாவைத் தோற்றுவித்தான். ஒலெக், ரூரிக்கின் மகனான இகோர் மற்றும் இகோரின் மகனான ஸ்வியாடொஸ்லாவ் ஆகியோர் தொடர்ச்சியாக கீவின் ஆட்சியாளர்களானதோடு, கிழக்கு ஸ்லாவிய மக்களையும் கீழடக்கினர். மேலும் இவர்கள் கசார்களின் அரசை அழித்ததுடன் பைசாந்தியம், பாரசீகம் போன்ற இடங்களுக்கும் படையெடுப்புகளை மேற்கொண்டனர். + +10ம் நூற்றாண்டு முதல் 11ம் நூற்றாண்டு வரை, கீவிய ரசியா ஐரோப்பாவின் பாரிய, வளமிக்க பேரரசாக உருவாகியது. மகா விளாடிமிர் (980–1015) மற்றும் அவனது மகனான புத்தியுள்ள யரோஸ்லாவ் (1019–1054) ஆகியோரின் ஆட்சிக் காலங்கள் கீவின் பொற்காலமாகக் காணப்பட்டது. இக்காலப்பகுதியில் பைசாந்தியத்தில் நிலைபெற்றிருந்த பழமைவாதக் கிறிஸ்தவத்தை இவர்கள் தழுவிக்கொண்டதுடன், முதலாவது எழுதப்பட்ட ஸ்லாவிய சட்டக் கோவையான "ரஸ்கயா ப்ராவ்டா"வையும் உருவாக்கினர். + +11ம் மற்றும் 12ம் நூற்றாண்டுகளில், கிப்சக்க்குகள் மற்றும் பெச்செனெக்குகள் போன்ற துருக்கிய குழுக்களின் தொடர் தாக்குதல்களால் ஸ்லாவிய மக்கள் பாதுகாப்பான, காடுகளால் சூழப்பட்ட சலெஸ்யே போன்ற வடக்குப் பகுதிகளுக்குப் பாரியளவில் குடிபெயர்ந்தனர். + +கீவிய ரசியாவை ஆண்ட ரூரிக் வம்சத்தினரிடையேயான தொடர்ச்சியான உட்போர்கள் காரணமாக மானியமுறைமையும் அதிகாரப் பரவலாக்கமும் ஏற்பட்டது. கீவின் அதிகாரம் நலிவடைந்ததால் வடகிழக்கில் விளாடிமிர்-சுஸ்டால், வடமேற்கில் நோவோகொரட் குடியரசு, தென்மேற்கில் கலிசியா-வொல்கினியா போன்ற சுயாதீன அரசுகள் உருவாகின. + +இறுதியாக 1237-40ல் மொங்கோலியரின் படையெடுப்பினால் கீவிய ரசியா பிளவடைந்தது. இது கீவின் அழிவுக்கும், ரசியாவின் அரைவாசி மக்களின் அழிவுக்கும் காரணமானது. தாத்தார்கள் எனப்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் கோல்டன் ஹோர்ட் எனப்பட்ட நாட்டை உருவாக்கினர். இவர்கள் ரசியச் சிற்றரசுகளைக் கொள்ளையடித்ததோடு, ரசியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்டனர். + +கலிசியா-வொல்கினியா போலிய-லிதுவேனிய பொதுநலவாயத்தினுள் உள்வாங்கிக்கொள்ளப்பட்டதோடு, கீவின் எல்லைப்புறத்தில் அமைந்திருந்த விளாடிமிர்-சுஸ்டால் மற்றும் நோவோகொரட் குடியரசு ஆகிய பகுதிகளில் மொங்கோலியர் ஆதிக்கம் செலுத்தினர். இவ்விரு பகுதிகளுமே நவீன ரசிய நாட்டுக்கான அடிப்படையாகும். மொங்கோலியப் படையெடுப்பின்போது நோவோகொரட் மற்றும் ஸ்கோவ் ஆகியன சிறிதளவு சுயாட்சி அதிகாரம் உடையனவாக இருந்தன. மேலும் இவை நாட்டின் ஏனைய பகுதிகளில் நடைபெற்ற அட்டூழியங்களிலிருந்தும் தப்பிக்கொண்டன. அலெக்சாண்டர் நெவ்ஸ்கி என்ற இளவரசனால் வழிநடத்தப்பட்ட நோவோகொராடியர்கள் 1240ல் நடைபெற்ற நேவா போரின் மூலம் சுவீடிய ஆக்கிரமிப்பையும், 1242ல் நடைபெற்ற ஐஸ் போரின் மூலம் ஜெர்மானிய சிலுவைப் போராளிகளின் ஆக்கிரமிப்பையும் தடுத்து, வடக்கு ரசியாவை ஆக்கிரமிக்கும் அவர்களது முயற்சியையும் முறியடித்தனர். + +கீவிய ரசியாவின் வழிவந்த, மிகவும் பலம்வாய்ந்த அரசு மொஸ்கோவின் பெரும் டச்சி ஆகும் (மேலைத்தேய குறிப்புகளில் "மொஸ்கோவி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆரம்பத்தில் இது விளாடிமிர்-சுஸ்டாலின் ஒரு பகுதியாக இருந்தது. மொங்கோலிய-தாத்தார்களின் ஆதிக்கத்தின் கீழ் காணப்பட்டாலும், அவர்களின் உதவியுடன் 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மத்திய ரசியாவில் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ஆரம்பித்தது. மேலும், படிப்படியாக, ரசியாவின் ஒன்றிணைவு மற்றும் விஸ்தரிப்புக்கான பிரதான சக்தியாகவும் இது உருவெடுத்தது. + +மொங்கோலிய-தாத்தார்களின் தொடர் தாக்குதல்களாலும், பனிக்காலத் தொடக்கத்தினால், விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்புக்களாலும் துன்பப்பட்டது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளைப் போலவே, பிளேக் நோய் ரசியாவையும் பாதித்தது. 1350இலிருந்து 1490 வரை ஒவ்வொரு ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசியாவின் பகுதிகள் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டன. எவ்வாறாயினும், குறைந்த சனத்தொகை அடர்த்தி, சிறந்த சுகாதார நடைமுறைகள் (பரவலான, ஈர ஆவிக் குளியல் நடைமுறை) காரணமாக, பிளேக் நோயினால் ஏற்பட்ட இழப்புகள், மேற்கு ஐரோப்பாவில் காணப்பட்டது போன்று பெரியளவில் ஏற்படவில்லை. 1500 ஆகும்போது ரசியாவின் சனத்தொகை பிளேக் நோய்க்கு முன்னரான அளவுக்கு உயர்ந்தது. + +மொஸ்கோவின் டிமித்ரி டொன்ஸ்கோயினால் வழிநட��்தப்பட்டதும், ரசிய பழமைவாத திருச்சபையினால் உதவி வழங்கப்பட்டதுமான ரசியப் பகுதிகளின் ஐக்கிய இராணுவம், 1380இல் நடைபெற்ற குலிகோவோ போரில் மொங்கோலிய-தாத்தார்களைத் தோற்கடித்து சாதனை படைத்தது. சிறிது சிறிதாக அருகிலிருந்த பகுதிகளும் மொஸ்கோவுடன் இணைத்துக்கொள்ளப்பட்டன. இவற்றுள் மொஸ்கோவின் முன்னைய எதிரிகளான ட்வெர் மற்றும் நோவ்கோகொரட் போன்றனவும் அடங்கும். + +மூன்றாம் இவான் ("தி கிரேட்") இறுதியாக கோல்டன் ஹோர்டை தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து, முழு மத்திய மற்றும் வட ரசியாவையும் மொஸ்கோவின் ஆளுகையின் கீழ் கொண்டுவந்தான். இவனே முதலாவது "முழு ரசியாவினதும் பெரும் டியூக்" பட்டத்தைப் பெற்றவனாவான். 1453ல் கொன்ஸ்தாந்திநோபிளின் வீழ்ச்சிக்குப் பின், மொஸ்கோ கிழக்கு ரோமப் பேரரசின் ஆட்சியுரிமையை எதிர்த்தது. மூன்றாம் இவான், இறுதிப் பைசாந்தியப் பேரரசரான 11ம் கொன்ஸ்தாந்தைனின் மைத்துனியான சோபியா பலையோலொகினாவைத் திருமணம் செய்துகொண்டான். மேலும் பைசாந்தியத்தின் குறியீடான இரட்டைத் தலைக் கழுகை தனதும் ரசியாவினதும் சின்னமாக்கிக் கொண்டான். + +மூன்றாம் ரோமச் சிந்தனைகளில் ஏற்பட்ட வளர்ச்சியால், பெரும் டியூக்கான 4ம் இவான், ("மிகச்சிறந்த") 1547ல், ரசியாவின் முதல் சார் ("சீசர்") ஆக உத்தியோகபூர்வமாக முடிசூட்டப்பட்டான். சார் மன்னன் ஒரு புதிய சட்டத் தொகுப்பை (1550ன் சுடெப்னிக்) வெளியிட்டான். இதன் மூலம் முதலாவது ரசிய மானியமுறை அமைப்பு (செம்ஸ்கி சொபோர்) உருவாக்கப்பட்டதோடு கிராமியப் பகுதிகளுக்கு உள்ளூர் சுயாட்சி அமைப்பொன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. + +இவனது நீண்ட ஆட்சிக்காலத்தின்போது, மூன்று தாத்தார் கானேட்டுகளான (கோல்டன் ஹோர்டின் சிதறிய பகுதிகள்), வொல்கா நதிக்கருகில் இருந்த கசான் மற்றும் அஸ்ட்ராகான் என்பவற்றையும், தென்மேற்கு சைபீரியாவிலிருந்த சைபீரியன் கானேட்டையும் இணைத்த பயங்கர இவான், ஏற்கனவே பெரிதாக இருந்த ரசியப் பகுதியை கிட்டத்தட்ட இருமடங்காக்கினான். இதனால், 16ம் நூற்றாண்டின் முடிவில் ரசியாவை பல்லின, பல்சமய மற்றும் கண்டம் கடந்த ஒரு நாடாக்கினான். + +எவ்வாறாயினும், பால்டிக் கரையைக் கைப்பற்றுவதற்கும், கடல் வணிகம் மேற்கொள்வதற்கும், போலந்து, லிதுவானியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் கூட்டுப் படைகளுக்கெதிர���க மேற்கொள்ளப்பட்ட நீண்ட, தோல்விகரமான லிவோனியப் போரின் காரணமாக சார் ஆட்சி வலுவிழந்தது. இதேவேளை, கோல்டன் ஹோர்டின் எச்சமான கிரிமியன் கானேட்டின் தாத்தார்கள், தென்ரசியாவில் தொடர்ச்சியான கொள்ளையடிப்புக்களை மேற்கொண்டனர். 1571ல், வொல்கா கானேட்டை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், கிரிமியர்களும் அவர்களது ஒட்டோமான் கூட்டணியினரும் மத்திய ரசியாவை ஆக்கிரமித்து மொஸ்கோவின் பகுதிகளை எரியூட்டினர். ஆனாலும்,அடுத்த ஆண்டே மொலோடி போரில், இப்பாரிய ராணுவம் ரசியர்களால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் ரசியாவில் ஒட்டோமன்-கிரிமியன் பரவலை தடுத்துக்கொண்டனர். கிரேட் அபாடிஸ் லைன் போன்ற பாரிய கோட்டைகள் கட்டியெழுப்பப்பட்டு எதிரிப் படையெடுப்புக்கான பகுதிகள் குறுக்கப்பட்டன. ஆயினும், 17ம் நூற்றாண்டு வரையில் கிரிமியர்களின் கொள்ளையடிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை. + +இவானின் மகன்களின் மரணம் காரணமாக 1598ல் பண்டைய ரூரிக் வம்சம் முடிவு பெற்றது. மேலும் 1601-03 பஞ்சம் உள்நாட்டுக் கலகத்துக்கு வழிகோலியது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், குழப்ப காலத்தின் போது, ஆட்சி உரிமையாளர்களினதும், வெளிநாட்டினரினதும் குறுக்கீடுகள் ஏற்பட்டன. போலிய-லிதுவேனிய பொதுநலவாயம் மொஸ்கோ உள்ளிட்ட ரசியாவின் பகுதிகளை ஆக்கிரமித்தது. 1612ல் இரண்டு தேசிய வீரர்களான குஸ்மா மினின் என்ற வணிகனாலும், திமித்ரி பொசார்கி என்ற இளவரசனாலும் வழிநடத்தப்பட்ட ரசியத் தொண்டர் படையினால் போலியர்கள் பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். செம்ஸ்கி சொபோரின் தீர்மானம் காரணமாக 1613ல் ரோமனோவ் வம்சம் அதிகாரத்துக்கு வந்தது. இதனால் நாடு நெருக்கடியிலிருந்து சிறிதுசிறிதாக மீண்டது. + +17ம் நூற்றாண்டில் கொசக்குகளின் காலத்தில் ரசியா தனது நிலப்பரப்பை தொடர்ந்தும் விஸ்தரிக்கத் தொடங்கியது. கொசக்குகள் என்போர், கொள்ளையர் மற்றும் புதுநில ஏகுனர்கள் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ சமூகங்கள் ஆவர். 1648ல், கெமெல்நைட்ஸ்கி கிளர்ச்சியின்போது போலந்து-லிதுவானியாவுக்கு எதிராக, உக்ரேனின் விவசாயிகள் சபோரோசியன் கொசக்குகளில் இணைந்து கொண்டனர். இதற்குக் காரணம், போலிய ஆட்சியின்கீழ் சமூக, மத அடக்குமுறைகளுக்கு உள்ளானமையேயகும்.1654ல் உக்ரேனிய தலைவரான போடான் கெமெல்நைட்ஸ்கி, உக்ரேன் ரசிய சார் மன்னரான முதலாம் அலெக்சியின் பாதுகாப்பில் இருப்பதற்கு சம்மதித்தார். அலெக்சி இதற்கு சம்மதித்ததால், இன்னொரு ரசிய-போலிய யுத்தம் (1654–1667) ஏற்பட்டது. இறுதியில், நீப்பர் நதியை எல்லையாகக் கொண்டு உக்ரேன் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மேற்குப்பகுதி (அல்லது வலது கரை) போலிய கட்டுப்பாட்டிலும், கிழக்குப்பகுதி (அல்லது இடதுகரை மற்றும் கீவ்) ரசிய கட்டுப்பாட்டிலும் இருந்தன. பின்பு, 1670–71ல் ஸ்டென்கா ரசினால் வழிநடத்தப்பட்ட டொன் கொசக்குகள் வொல்கா பகுதியில் பாரிய கிளர்ச்சியொன்றை ஆரம்பித்தனர். ஆயினும் சாரின் படைகள் கலகத்தை வெற்றிகரமாக அடக்கின. + +கிழக்குப் பகுதியில், பெரும்பாலும் கொசக்குகளால், சைபீரியாவின் பல பகுதிகளில் விரைவான ரசிய கண்டுபிடிப்புகளும் குடியேற்றங்களும் ஏற்படுத்தப்பட்டன. இவை பெரும்பாலும், பெறுமதிமிக்க, விலங்குகளின் தோல் மற்றும் தந்தத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே நடத்தப்பட்டன. ரசிய கண்டுபிடிப்பாளர்கள் சைபீரிய நதித் தடங்கள் வழியே மேலும் கிழக்கு நோக்கி பயணித்தனர். 17ம் நூற்றாண்டளவில் கிழக்கு சைபீரியாவின், சூச்சி தீபகற்பம், அமுர் நதிக்கரை, மற்றும் பசுபிக் கரையோரங்களில் ரசியக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1648ல், ஆசியாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடையிலான பெரிங் நீரிணை, ஃபெடோட் போபோவ் மற்றும் செம்யோன் டெஸ்ன்யோவ் ஆகியோரால் முதன்முதலில் கடக்கப்பட்டது. + +1721ல், மகா பீட்டரின் கீழ், ரசியா ஒரு பேரரசானதுடன், அறியப்பட்ட உலக வல்லரசானது. 1682இலிருந்து 1725 வரை அரசாண்ட பீட்டர், பெரும் வடக்குப் போரில் சுவீடனைத் தோற்கடித்தான். மேலும், மேற்கு கரேலியா, இங்கிரியா (குழப்பகாலத்தின் போது ரசியாவால் இழக்கப்பட்ட இரு பிரதேசங்கள்), எஸ்ட்லாந்து மற்றும் லிவ்லாந்து ஆகியவற்றை பெற்றுக்கொண்டான். இதன்மூலம் ரசியாவுக்கு கடல் வழிப் போக்குவரத்தும், கடல் வணிகமும் மேற்கொள்ள முடியுமாயிருந்தது. பால்டிக் கடற்கரையில் பீட்டர் புதிய தலைநகரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கை நிறுவினான். இது பிற்காலத்தில் ரசியாவின் "ஐரோப்பாவுக்கான நுழைவாயில்" என அழைக்கப்பட்டது. பீட்டரின் பாரிய மறுசீரமைப்புக்கள் ரசியாவில் குறிப்பிடத்தக்க மேற்கு ஐரோப்பிய கலாசாரத் தாக்கங்களை ஏற்படுத்தின. + +1741–62 வரை, முதலாம் பீட்டரின் மகளான எலிசபெத்தின் ஆட்சிக��காலத்தில் ரசியா ஏழாண்டுப் போரில் பங்கேற்றது (1756–63). இந்த போராட்டத்தின்போது, ரசியா கிழக்குப் பிரசியாவையும், மேலும் பெர்லினையும் சிறிதுகாலம் இணைத்திருந்தது. எவ்வாறாயினும், எலிசபெத்தின் மரணத்தின் பின், கைப்பற்றப்பட்ட அனைத்துப் பிரதேசங்களும், ரசியாவின் மூன்றாம் பீட்டரினால் பிரசியப் பேரரசுக்கு திருப்பி வழங்கப்பட்டது. + +1762–96 வரை ஆண்ட இரண்டாம் கத்தரீன் ரசிய அறிவொளிக் காலத்துக்கு தலைமை தாங்கினார். இவர் போலிய-லிதுவானிய பொதுநலவாயத்தின் மீது ரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டியதோடு, போலந்து பிரிவினையின் போது, இதன் பெரும்பாலான பகுதிகளை ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். இதன்மூலம் ரசியாவின் மேற்கெல்லை மத்திய ஐரோப்பா வரை பரந்தது. ஒட்டோமன் பேரரசுக்கெதிரான ரசிய-துருக்கியப் போர்களின் வெற்றியின் பின் கிரிமியன் கானேட்டைத் தோற்கடித்ததன் மூலம் அவர் ரசியாவின் தென் எல்லையை கருங்கடல் வரை விரிவு படுத்தினார். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஒட்டோமன்களுக்கெதிரான வெற்றிகளைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்காக்கேசியாவின் சில பகுதிகளையும் பெற்றுக்கொண்டது. முதலாம் அலெக்சாண்டரின்(1801-25), 1809ல், பலவீனமான சுவீடனிடமிருந்தான பின்லாந்தின் பறித்தெடுப்பு, 1812ல், ஒட்டோமன்களிடமிருந்தான பெஸ்ஸராபியாவின் பறித்தெடுப்பு என, இவ் விரிவுபடுத்தல் தொடர்ந்தது. இதேவேளை ரசியர்கள் அலாஸ்காவில் தமது குடியேற்றங்களை ஏற்படுத்தியதோடு, கலிபோர்னியாவிலும் கூட (ஃபோர்ட் ரொஸ்) தமது குடியேற்றங்களை ஏற்படுத்திக் கொண்டனர். + +1803–06 வரை முதலாவது ரசிய உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. பிற்காலத்திலும் குறிப்பிடத்தக்க கடற்பயணங்கள் சிலவும் மேற்கொள்ளப்பட்டன. 1820ல் ஒரு ரசிய நாடுகாண் பயணத்தின் மூலம் அண்டார்டிக்கா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. + +பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் துணையுடன் ரசியா, நெப்போலியனின் பிரான்சுக்கெதிராகப் போராடியது. 1812ல் உச்ச நிலையிலிருந்த நெப்போலியனின் ஐரோப்பிய சேனை, ரசியர்களின் கடுமையான எதிர்ப்பு மற்றும் ரசியாவின் கொடூரமான குளிர்காலம் என்பன காரணமாக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது. இப் போரில் நெப்போலியனின் 95%மான படை அழிந்தது. மிகெய்ல் குட்டுசோவ் மற்றும் பார்கிளே டி டொலி ஆகியோரால் வழிநடத்தப்பட்ட ரசியப்படை, ஆறாம் கூட்டணியின் போரின் மூலம், நெப்போலியனின் படையை ரசியாவிலிருந்து வெளியேற்றியதோடு, ஐரோப்பா வழியாக இறுதியில் பாரிஸ் நகர் வரை துரத்தியடித்து நகருக்குள் நுழைந்தன. ரசியாவின் சார்பில் முதலாம் அலெக்சாண்டர் வியன்னா மாநாட்டில் கலந்துகொண்டார். இம்மாநாடு நெப்போலியனுக்குப் பின்னான ஐரோப்பாவின் எல்லைகளை வரையறுத்தது. + +நெப்போலியப் போர்களில் கலந்துகொண்ட அதிகாரிகள் தாராளவாதம் பற்றிய சிந்தனையை ரசியாவுக்கு எடுத்து வந்தனர். 1825ல் நடத்தப்பட்ட, வெற்றிபெறாத, டிசம்பர் புரட்சியின் மூலம் சார் மன்னரின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் இவர்கள் முயற்சித்தனர். முதலாம் நிக்கலசின் (1825–55) பழமைவாத ஆட்சியின் முடிவில், கிரிமியன் போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக ரசியாவின் ஐரோப்பா மீதான அதிகாரமும், செல்வாக்கும் தகர்ந்தது. 1847க்கும், 1851க்குமிடையில் ரசியா முழுவதும் பரவிய ஆசியக் கொலரா ஒரு மில்லியன் உயிர்களைக் காவு கொண்டது. + +நிக்கலசின் பின் ஆட்சிக்கு வந்த இரண்டாம் அலெக்சாண்டர் (1855–81) நாட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தினார். இவற்றுள் 1861ன் அடிமைத்தன விடுதலை மறுசீரமைப்பு குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பாரிய மாற்றங்கள் கைத்தொழில்மயமாக்கத்தை ஊக்குவித்ததுடன், ரசிய ராணுவத்தையும் நவீனமயப் படுத்தியது. இதன் மூலம் ரசிய ராணுவம் 1877–78 ரசிய-துருக்கிய யுத்தத்தின் போது, பல்கேரியாவை ஒட்டோமன் ஆதிக்கத்திலிருந்து வெற்றிகரமாக விடுவித்தது. + +19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்வேறு சோசலிச இயக்கங்கள் ரசியாவில் தோற்றம் பெற்றன. 1881ல் இரண்டாம் அலெக்சாண்டர் புரட்சியாளர்களால் கொல்லப்பட்டார். அவரது மகனான மூன்றாம் அலெக்சாண்டர் (1894–94) ஆட்சிக்காலம் மிகவும் சமாதானமானதும், தாராளமயம் குறைந்ததுமாக இருந்தது. கடைசி ரசியப் பேரரசரான இரண்டாம் நிக்கலஸ் (1894-1917) 1905ன் ரசியப் புரட்சியைத் தடுக்க முடியாதவராக இருந்தார். இப்புரட்சிக்குத் தூண்டுகோலாக இருந்தது ரசிய-சப்பானியப் போரில் ரசியாவின் தோல்வியாகும். இப்புரட்சி நிகழ்வுகள் இரத்த ஞாயிறு என அழைக்கப்படுகிறது. கிளர்ச்சி கைவிடப்பட்டது. ஆனால், அரசாங்கம் பேச்சுச் சுதந்திரம், ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம், அரசியல் கட்சிகளை சட்டபூர்வமாக்கல் மற்றும் சட்டவாக்கக் கழகமொன்றை உருவாக்குதல் (ரசியப் பேரரசின் டூமா) போன்ற பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஸ்டொலிபின் விவசாயச் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து, சைபீரியாவுக்கான குடிபெயர்வு வேகமாக அதிகரித்தது. 1906க்கும் 1914க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான குடியேற்றக்காரர்கள் இந்தப்பகுதிக்கு வந்தனர். + +1914ல் ரசியாவின் கூட்டாளியான செர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போர்ப் பிரகடனம் செய்ததையடுத்து, ரசியா முதலாம் உலக யுத்தத்தினுள் பிரவேசித்தது. இதன் முக்கூட்டு நட்பு அணிகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில், பல்வேறு போர்முனைகளில் போராடவேண்டியிருந்தது. 1916ல் ரசிய ராணுவத்தின் பிரசிலோவ் தடுப்பு நடவடிக்கை மூலமாக ஆஸ்திரியா-ஹங்கேரியின் ராணுவம் கிட்டத்தட்ட முற்றாகவே அழிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், போர்ச் செலவுகள், உயர் இழப்புகள், ஊழல் பற்றிய வதந்தி மற்றும் தேசத்துரோகம் என்பன காரணமாக ஆட்சியாளருக்கெதிரான மக்களின் அவநம்பிக்கை அதிகரித்தது. இத்தகைய நடவடிக்கைகள் 1917ல் இரு தடவைகளில் நடந்த ரசியப் புரட்சிக்கான சூழலை உருவாக்கியது. + +பெப்ரவரி புரட்சி காரணமாக இரண்டாம் நிக்கலஸ் பதவி துறந்தான். ரசிய சிவில் போரின்போது, இவனும் இவனது குடும்பமும் சிறைப்பிடிக்கப்பட்டு, பின்னர் கொலைசெய்யப்பட்டனர். முடியாட்சி, பலவீனமான, அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினால் பிரகடனப்படுத்தப்பட்ட தற்காலிக அரசாங்கத்தால் பிரதியிடப்பட்டது. பெட்ரோகிராட் சோவியத்தில் மாற்று சோசலிச ஆட்சி இடம்பெற்றது. இதன் அதிகாரம் சனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிலாளர்களினதும் விவசாயிகளினதும் சபையிடம் இருந்தது. இச்சபை சோவியத் எனப்பட்டது. புதிய அதிகார சபைகளின் ஆட்சி நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்குப் பதிலாக மேலும் தீவிரப்படுத்தியது. தொடர்ந்து, போல்செவிக் தலைவர் விளாடிமிர் லெனினால் நடத்தப்பட்ட அக்டோபர் புரட்சியின் மூலம், இடைக்கால அரசாங்கம் தூக்கியெறியப்பட்டு, உலகின் முதல் சோசலிச நாடு உருவாகியது. + +அக்டோபர் புரட்சியை அடுத்து கொம்யூனிச எதிர்ப்பு வெள்ளை இயக்கத்துக்கும், செஞ்சேனையுடனான புதிய சோவியத் ஆட்சிக்குமிடையில் சிவில் போர் ஒன்று தொடங்கியது. பிரெஸ்ட்-லிடோவ்ஸ்���் ஒப்பந்தம் மூலம், ரசியா, முதலாம் உலகப்போரில் மைய சக்திகளை எதிர்த்த அதன் உக்ரேனிய, போலிய, பால்டிக் மற்றும் ஃபின்னியப் பகுதிகளை இழந்தது. கொம்யூனிச எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவாக, நேச நாடுகள் ஒரு ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டன. எனினும் அது வெற்றியளிக்கவில்லை. இதேவேளையில், போல்செவிக்குகளும், வெள்ளை இயக்கமும் மாறிமாறி நாடுகடத்தல்களையும் மரண தண்டனைகளையும் மேற்கொண்டன. இச் செயற்பாடுகள் முறையே செம் பயங்கரம் மற்றும் வெண் பயங்கரம் என அழைக்கப்பட்டன. சிவில் போரின் முடிவில், ரசியப் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் மிகவும் பாதிப்படைந்தன. மில்லியன்கணக்கான மக்கள் அகதிகளாயினர். மேலும், 1921ன் பொவொல்ஸ்யே பஞ்சத்தால் 5 மில்லியன் பேர் இறந்தனர். + +டிசம்பர் 30, 1922ல், ரசிய சோவியத் கூட்டாட்சிச் சோசலிசக் குடியரசு (அந்த நேரத்தில் "ரசிய சோசலிச கூட்டாட்சி சோவியத் குடியரசு" என அழைக்கப்பட்டது), உக்ரேனிய, பெலாரசிய மற்றும் ட்ரான்ஸ்காக்கேசிய சோவியத் சோசலிசக் குடியரசுகளுடன் இணைந்து சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் அல்லது சோவியத் ஒன்றியத்தை உருவாக்கிக் கொண்டன. சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கிய 15 குடியரசுகளில், ரசிய சோவியத் சோசலிசக் கூட்டுக் குடியரசே பரப்பளவில் மிகவும் பெரியதாகும். மேலும், இது சோவியத் ஒன்றியத்தின் மொத்த சனத்தொகையின் அரைவாசியிலும் மேலதிகமான சனத்தொகையையும் கொண்டிருந்தது. இதுவே 69-வருடகால ஒன்றிய வரலாற்றில் முக்கிய பங்களிப்புச் செய்துள்ளது. + +1924ல் லெனினின் இறப்பைத் தொடர்ந்து, ட்ரொய்க்கா எனப்பட்ட குழுவொன்று சோவியத் ஒன்றியத்தை ஆட்சி புரிய அமர்த்தப்பட்டது. எவ்வாறாயினும், கொமியூனிசக் கட்சியின் தெரிவுசெய்யப்பட்ட பொதுச்செயலாளரான ஜோசப் ஸ்டாலின், அனைத்து எதிர்ப்புக் குழுக்களையும் தனது கட்சிக்குள் இணைத்துக்கொண்டு, பெரும்பாலான அதிகாரங்களைத் தன்வசப்படுத்திக் கொண்டார். 1929ல், உலகப் புரட்சியின் முக்கிய ஆதரவாளரான, லியோன் ட்ரொட்ஸ்கி சோவியத் ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும் ஸ்டாலினின் ஒரு நாட்டில் சோசலிசம் எனும் கருத்து முன்வைக்கப்பட்டது. பெரும் துப்பரவாக்கத்தின்போது, போல்செவிக் கட்சிக்குள் காணப்பட்ட உட்பூசல் உச்சநிலையை அடைந்தது. 1937-38 வரையான இந்த அடக��குமுறை வாய்ந்த காலகட்டத்தில், கட்சி உறுப்பினர்கள் மற்றும் பலாத்கார ஆட்சி மாற்றத்துக்கு திட்டம் தீட்டிய இராணுவத் தலைவர்கள் உட்பட லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். + +ஸ்டாலினின் தலைமைத்துவத்தின் கீழ், அரசாங்கம் திட்டமிட்ட பொருளாதாரம், பெரும்பாலும் கிராமிய நாடாக இருந்த ரசியாவில் கைத்தொழில்மயமாக்கம் மற்றும் விவசாயக் கூட்டுப் பண்ணைகள் என்பவற்றைச் செயற்படுத்தியது. விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் நிறைந்த இக்காலப்பகுதியில், மில்லியன் கணக்கான மக்கள் தொழிலாளர் வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இவர்களுள் ஸ்டாலினின் ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளும் அடங்குவர். மேலும் மில்லியன் கணக்கானோர், சோவியத் ஒன்றியத்தின் ஒதுங்கிய பகுதிகளுக்கு நாடுகடத்தப்பட்டனர். கடுமையான சட்டங்கள் மற்றும் வரட்சி ஆகியவற்றுடன் நாட்டின் விவசாயத்தில் ஏற்பட்ட இடைக்காலச் சிதைவு காரணமாக 1932-33 காலப்பகுதியில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. எவ்வாறாயினும், பாரிய இழப்புக்களுடன், குறுகிய காலத்தில், சோவியத் ஒன்றியம் பாரிய விவசாயப் பொருளாதாரச் சமூகத்திலிருந்து, முக்கிய கைத்தொழிற் சக்தியாக மாறியது. + +அடோல்ப் ஹிட்லரின் ரூர், ஆஸ்திரியா, மற்றும் இறுதியாக செக்கோசிலோவாக்கியா ஆகியவற்றின் இணைப்பின் மீதான பெரிய பிரித்தானியாவினதும், பிரான்சினதும் அமைதிக் கொள்கை காரணமாக நாசி ஜெர்மனியின் பலம் அதிகரித்தது. இதனால், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் அச்சுறுத்தல் காணப்பட்டது. இதேவேளை ஜெர்மன் ரெய்க், சப்பானியப் பேரரசுடன் கூட்டுச் சேர்ந்தது. 1938–39 வரையான சோவியத்-சப்பானியப் போர்களின் மூலம் சப்பான் தூரக் கிழக்கில், சோவியத் ஒன்றியத்தின் முக்கிய எதிரியாக இருந்தது. + +ஆகத்து 1939ல், பிரித்தானியா மற்றும் பிரான்சுடன் நாசிச எதிர்ப்புக் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தோல்வியடைந்ததாலும், மேற்கத்திய சக்திகளின் நாசி ஜெர்மனியுடனான அமைதிக் கொள்கை காரணமாகவும், சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் அமைதியான தொடர்புகளைக் கட்டியெழுப்ப முடிவு செய்தது. இதன்படி, இரு நாடுகளுக்கிடையிலும் போர் ஏற்படாதிருத்தல் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் தமது செல்வாக்குக்குட்பட்ட பிரதேசங்களை பிரித்துக்கொள்ளல் ஆகியவற்றை உறுதிப்படு��்தும் விதமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில், ஹிட்லர் போலந்து, பிரான்ஸ் மற்றும் ஏனைய நாடுகளை கைப்பற்றிய வேளை, சோவியத் ஒன்றியம் தனது இராணுவத்தை கட்டியெழுப்புவதிலும், குளிர்காலப் போர் மற்றும் போலந்தின் சோவியத் படையெடுப்பு ஆகியவற்றின்போது இழந்த ரசியப் பேரரசின் முன்னைய பகுதிகளைப் பெற்றுக்கொள்வதிலும் வெற்றி கண்டது. + +சூன் 22, 1941ல், நாசி ஜெர்மனி ஆக்கிரமிக்கா ஒப்பந்தத்தை உடைத்து, மனித வரலாற்றிலேயே மிகப் பெரியதும், மிகவும் பலமிக்கதுமான படையுடன் சோவியத் ஒன்றியத்தை ஆக்கிரமித்தது. இது இரண்டாம் உலகப்போரின் முக்கிய களமாக மாறியது. ஜெர்மனிய ராணுவம் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், மொஸ்கோ போரின் போது அவர்களது தாக்குதல் தடைப்பட்டது. தொடர்ந்து, 1942-43 குளிர்காலத்தில் நடைபெற்ற ஸ்டாலின்கிராட் போரிலும், 1943 கோடைகாலத்தில் நடைபெற்ற குர்ஸ்க் போரிலும் பாரிய தோல்வியைச் சந்தித்தனர். லெனின்கிராட் முற்றுகையும் ஜெர்மனியரின் இன்னொரு தோல்வியாகும். இதன்போது, அந்நகரம் 1941-44வரை ஜெர்மனிய, ஃபின்னியப் படைகளால், முற்றுகையிடப்பட்டது. பட்டினியால் வாடியபோதும், ஒரு மில்லியன் பேர் இறந்தபோதும், இந்நகரம் சரணடையவில்லை. ஸ்டாலினின் நிர்வாகத்தின் கீழும், ஜோர்ஜி சுகோவ் மற்றும் கொன்ஸ்டான்டின் ரொகோஸ்சோவ்ஸ்கி போன்ற இராணுவத் தலைவர்களின் கீழும், சோவியத் படைகள், ஜெர்மனியரை 1944-45வரை கிழக்கைரோப்பா வழியாக விரட்டி, மே 1945ல் பெர்லினைக் கைப்பற்றின. ஆகஸ்ட் 1945ல் சோவியத் ராணுவம், சீனாவின் மன்சூக்குவோ மற்றும் வட கொரியாவிலிருந்து சப்பானியரை வெளியேற்றி, சப்பானுக்கெதிரான நேச நாடுகளின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தது. + +இரண்டாம் உலகப்போரின் 1941-45 காலப்பகுதி ரசியாவில் "பெரும் நாட்டுப்பற்றுப் போர்" எனக் குறிப்பிடப்படுகிறது. மனித வரலாற்றில் மிகவும் கொடூரமான இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்ற இப்போரில், 10.6 மில்லியன் ராணுவத்தினரும், 15.9 மில்லியன் மக்களும் கொல்லப்பட்டனர். இது இரண்டாம் உலகப்போரின் மொத்த இழப்பில் மூன்றில் ஒரு பகுதியாகும். சோவியத் மக்களின் மொத்த மக்கள் இழப்பு இதனிலும் அதிகமாகும். சோவியத் பொருளாதாரமும், உட்கட்டமைப்பும் பாரிய அழிவுக்குள்ளானது. ஆயினும் சோவியத் ஒன்றியம் மாபெரும் வல்லரசாக எழுச்சி பெற்றது. + +போருக்குப் பின், செஞ்சேனை, கிழக்கு ஜெர்மனி உட்பட கிழக்கு ஐரோப்பாவையே ஆக்கிரமித்துக் கொண்டது. தங்கியிருக்கும் சோசலிச அரசாங்கங்கள் கிழக்குப்பகுதிக் கண்காணிப்பு நாடுகளில் ஏற்படுத்தப்பட்டன. உலகின் இரண்டாவது அணுவாயுத நாடாக உருவான சோவியத் ஒன்றியம், வார்சோ உடன்படிக்கையை உருவாக்கிக் கொண்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆகியவற்றுடன் பனிப்போர் என அறியப்பட்ட, உலக ஆதிக்கத்துக்கான போட்டியுள் இறங்கியது. உலகெங்குமுள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு, சோவியத் ஒன்றியம் தனது ஆதரவை வழங்கியது. இவற்றுள் புதிதாக உருவான சீன மக்கள் குடியரசு, கொரிய சனநாயக மக்கள் குடியரசு மற்றும் கியூபக் குடியரசு போன்றனவும் அடங்கும். குறிப்பிடத்தக்களவு சோவியத் வளங்கள், ஏனைய சோசலிச நாடுகளுக்கு, உதவியாக ஒதுக்கப்பட்டது. + +ஸ்டாலினின் மரணத்துக்குப்பின், குறுகியகால கூட்டுத்தலைமையின் கீழ், புதிய தலைவரான நிக்கிட்டா குருசேவ், ஸ்டாலினின் கொள்கைகளை விமர்சித்ததோடு, ஸ்டாலின்மய ஒழிப்புக் கொள்கைகளைச் செயற்படுத்தினார். தொழிலாளர் வதை முகாம்கள் ஒழிக்கப்பட்டன. பல சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டனர் (இவர்களுல் பலர் இறந்திருந்தனர்). பொதுவான அடக்குமுறைக் கொள்கைகளின் தளர்வு, பின்பு குருசேவ் தளர்வு என அழைக்கப்பட்டது. இதேவேளை, துருக்கியில் ஐக்கிய அமெரிக்காவின் ஜூபிட்டர் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை மற்றும் கியூபாவில் சோவியத் ஏவுகணைகள் வைக்கப்பட்டமை காரணமாக ஐக்கிய அமெரிக்காவுடனான முறுகல்நிலை அதிகரித்தது. + +1957ல், சோவியத் ஒன்றியம் உலகின் முதல் செயற்கைக்கோளான ஸ்புட்னிக் 1ஐ ஏவியதன் மூலம் விண்வெளி யுகத்தை ஆரம்பித்தது. ரசிய விண்வெளி வீரரான யூரி ககாரின் ஏப்ரல் 12, 1961 அன்று, வாஸ்ட்டாக் 1 விண்கலத்தில் புவியை வலம்வந்து, விண்வெளியை வலம்வந்த முதல் மனிதரானார். + +1964ல் குருசேவின் ஓய்வைத் தொடர்ந்து, மீண்டும் கூட்டுத் தலைமை ஆட்சி நடைபெற்றது. இறுதியில் லியோனிட் பிரெஷ்னெவ் தலைவராக ஆனார். 1970கள் மற்றும் முன் 1980கள், தடங்கல் யுகம் என அழைக்கப்படுகிறது. இக்காலப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்ததோடு, சமூகக் கொள்கைகள் தடங்கலுற்றன. சோவியத் பொருளாதாரத்தைப் பகுதியளவில் பன்முகப்படுத்தல் மற்றும் பெருங் கைத்தொழில் மற்றும் ஆயுத உற்பத்தியை, சிறுகைத்தொழில் மற்றும் நுகர்வோர் பண்டங்களாக மாற்றுதல் என்பவற்றை நோக்காகக் கொண்ட, 1965ன் கோசிஜின் சீர்திருத்தம் பழைமைவாத கொம்யூனிசத் தலைமையால் தடுக்கப்பட்டது. + +1979ல், ஆப்கானிஸ்தானில் கொம்யூனிஸ்டுகள் தலைமையிலான புரட்சியின் பின், புதிய தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானினுள் நுழைந்தன. இதனால் ஆப்கானிஸ்தானின் வளங்கள் சுரண்டப்பட்டதோடு, எந்தவிதமான கருதத்தக்க அரசியல் திருத்தங்களும் ஏற்படவில்லை. இறுதியாக, சர்வதேச எதிர்ப்பு, (அமெரிக்க ஆதரவுடனான) கொம்யூனிச எதிர்ப்பு கெரில்லாப் போர் மற்றும் சோவியத் மக்களின் ஆதரவின்மை என்பன காரணமாக 1989ல் சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து பின்வாங்கியது. + +1985இலிருந்து, சோவியத் முறைமையில் தாராளவாத சீர்திருத்தங்களை ஏற்படுத்த விரும்பிய , இறுதி சோவியத் தலைவரான மிக்கைல் கோர்பச்சோவ், "கிளாஸ்னொஸ்ட்" (திறந்தநிலை) மற்றும் "பெரஸ்ட்ரோயிகா" (மீள்கட்டமைப்பு) ஆகிய கொள்கைகளை அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத் தடங்கல் நிலையை முடிவுக்குக் கொண்டுவரவும், அரசாங்கத்தை சனநாயக மயப்படுத்தவும் அவர் முயற்சித்தார். எவ்வாறாயினும், இக்கொள்கைகள் காரணமாக வலுவான தேசியவாத மற்றும் பிரிவினைவாத இயக்கங்கள் தோன்றின. 1991க்கு முன், சோவியத் பொருளாதாரம் உலகளவில் இரண்டாவது நிலையில் காணப்பட்டது. எனினும், அதன் இறுதிக் காலத்தில், பலசரக்குக் கடைகளில் பொருள் பற்றாக்குறையாலும், பாரிய பாதீட்டுப் பற்றாக்குறையாலும், பாரிய பணச்சுற்றோட்டம் காரணமாக பணவீக்கத்தாலும் அல்லலுற்றது. + +1991ன் போது, பொருளாதார மற்றும் அரசியல் கொந்தளிப்புகள் ஏற்படத் தொடங்கின. இதனால் பால்டிக் குடியரசு நாடுகள் ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லத் தீர்மானித்தன. மார்ச் 17ல், பொது வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. இதில் பங்குபற்றிய பெரும்பாலான மக்கள் சோவியத் ஒன்றியத்தை புதிய கூட்டரசாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆகஸ்ட் 1991ல், கோர்பச்சேவுக்கு எதிராக, சோவியத் ஒன்றியத்தின் கொம்யூனிசக் கட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதற்குப் பதிலாக, சோவியத் ஒன்றியத்தைப் பாதுகாக்க, கோர்��ச்சேவின் அரசாங்க உறுப்பினர்கள் புரட்சியொன்றை நடத்தினர். மக்களின் விருப்பத்துக்கு மாறாக டிசம்பர் 25, 1991ல் சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாகச் சிதறியது. + +ரசிய வரலாற்றிலேயே முதலாவதாக, சூன் 1991ல் நடைபெற்ற சனாதிபதித் தேர்தலில், போரிஸ் யெல்ட்சின் சனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோவியத் ஒன்றியத்தின் சிதறலின் போதும், அதன் பின்னரும் தனியார்மயமாக்கல் மற்றும் சந்தை மற்றும் வர்த்தகத் தாராளமயமாக்கல் ஆகியவை உட்பட பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவற்றுள் ஐக்கிய அமெரிக்காவாலும், சர்வதேச நாணய நிதியத்தினாலும் பரிந்துரைக்கப்பட்ட, அதிர்ச்சி வைத்தியம் எனப்பட்ட விரைவான பொருளாதார மாற்றமும் அடங்கும். இம் மாற்றங்கள் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், 1990-95 காலப்பகுதியில், மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும், கைத்தொழில் விளைபொருட்களிலும் 50% வீழ்ச்சி ஏற்பட்டது. + +தனியார்மயமாக்கலால், வணிக நிறுவனங்களின் கட்டுப்பாடு, அரசாங்க முகவர்களிடமிருந்து, அரச முறைமையில் தொடர்புகளைப் பேணிய தனியாரிடம் சென்றடைந்தது. பல புதிய செல்வந்த வணிகர்கள் பில்லியன் கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் நாட்டுக்கு வெளியில் எடுத்துச் சென்றமையால் பாரிய மூலதன வெளியேற்றம் ஏற்பட்டது. நாட்டினதும் பொருளாதாரத்தினதும் வீழ்ச்சியால், சமூக சேவைகள் சீர்குலைந்தன. பிறப்பு வீதம் குறைவடைந்து, இறப்பு வீதம் அதிகரித்தது. பிந்திய சோவியத் யுகத்தில் 1.5%மாக இருந்த வறுமை மட்டம், 1993ன் நடுப்பகுதியில் 39-49%மாக ஆகியது. இதனால் மில்லியன் கணக்கானோர் வறுமையில் மூழ்கினர். 1990களில் கடுமையான ஊழல் மற்றும் ஒழுங்கீனம், குற்றவியல் குழுக்களின் எழுச்சி மற்றும் வன்முறைகள் என்பன காணப்பட்டன. + +1990களில், வட காக்கசசில் உள்நாட்டு இனக்கலவரங்கள் மற்றும் இசுலாமியக் கிளர்ச்சி ஆகியவற்றால் ஆயுதப் போராட்டங்கள் ஏற்பட்டன. 1990களின் ஆரம்பத்தில் செச்சென் பிரிவினைவாதிகள் சுதந்திரப் பிரகடனம் செய்ததையடுத்து, போராளிகளுக்கும், ரசிய ராணுவத்துக்குமிடையில் கெரில்லாப் போர் நடைபெற்றது. பிரிவினைவாதிகளால், மக்களுக்குக்கெதிராக பயங்கரவாதத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. மொஸ்கோ திரையரங்குப் பணயக் கைதிகள் பிரச்சினை மற்றும் பெஸ்லான் பாடசாலை முற்றுகை என்ப�� குறிப்பிடத்தக்கன. இதனால் நூற்றுக்கணக்கானோர் இறந்ததோடு உலகத்தின் கவனமும் ரசியா நோக்கித் திரும்பியது. + +சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின்போது, ரசியாவின் மக்கள்தொகை சோவியத் ஒன்றிய மக்கள்தொகையின் அரைப்பங்காக இருந்த போதிலும், ரசியா சோவியத் ஒன்றியத்தின் வெளிக்கடன்களைத் திருப்பிச் செலுத்தும் முழுப் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டது. உயர் பாதீட்டுப் பற்றாக்குறை காரணமாக 1998ல் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் வீழ்ச்சியடைந்தது. + +டிசம்பர் 31, 1999ல் யெல்ட்சின் சனாதிபதிப் பதவியிலிருந்து விலகி ஆட்சிப்பொறுப்பை அண்மையில் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த விளாடிமிர் புட்டினிடம் ஒப்படைத்தார். 2000ம் ஆண்டு சனாதிபதித் தேர்தலிலும் விளாடிமிர் புட்டின் வெற்றி பெற்றார். வட காக்கசஸ் பகுதிகள் சிலவற்றில் வன்முறைகள் இடம்பெற்றாலும், செச்சென் கிளர்ச்சியை புட்டினால் அடக்கக் கூடியதாயிருந்தது. உள்நாட்டுத் தேவை, நுகர்வு மற்றும் முதலீடு ஆகியவற்றிலான உயர்வு, உயர் எண்ணெய் விலை மற்றும் நாணயப் பெறுமதி வீழ்ச்சி ஆகியன காரணமாக அடுத்த ஒன்பது வருடங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. இதன் மூலம் ரசியாவின் வாழ்க்கைத்தரமும், அதன் உலகளவிலான ஆதிக்கமும் அதிகரித்தது. புட்டினின் பதவிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட பல சீர்திருத்தங்கள் மேற்கத்தேய நாடுகளால் சனநாயக முறையற்றது என விமர்சிக்கப்பட்டாலும், புட்டினின் தலைமைத்துவத்தின் கீழான நாட்டின் உறுதிநிலை மற்றும் வளர்ச்சி காரணமாக ரசியா முழுவதும் புடினின் செல்வாக்கு அதிகரித்தது. + +மார்ச் 2, 2008 அன்று, திமித்ரி மெட்வெடெவ் ரசிய சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதோடு, புட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார். 2012 சனாதிபதித் தேர்தலையடுத்து, புடின் சனாதிபதியானதுடன், மெட்வடேவ் பிரதமராக நியமிக்கப்பட்டார். + +உருசிய அரசியலமைப்பின் படி அந் நாடு சனாதிபதியை நாட்டுத் தலைவராகவும், பிரதம அமைச்சரை அரசுத் தலைவராகவும் கொண்ட ஒரு கூட்டாட்சி, அரை-சனாதிபதி முறைக் குடியரசு ஆகும். உருசியக் கூட்டமைப்பு அடிப்படையில் பல கட்சி, பிரதிநிதித்துவ மக்களாட்சி ஆகும். இதில் கூட்டாட்சி அரசு மூன்று பிரிவுகளைக் கொண்டது: + + +ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்ட சனாதிபதியை மக்கள் வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்கின்றனர். ஒருவர் இரண்டாவது முறையும் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்படலாம் எனினும், தொடர்ச்சியாக மூன்று முறை சனாதிபதியாக இருக்க முடியாது. அரசின் அமைச்சுக்களில் பிரதமர், அவரது துணை அமைச்சர்கள், அமைச்சர்கள், தெரிவு செய்யப்பட்ட பிறர் என்போர் அடங்குவர். பிரதமரின் ஆலோசனைக்கு இணங்க சனாதிபதி அமைச்சர்களுக்குப் பதவி வழங்குகிறார். பிரதமர் பதவிக்கு "டூமா"வின் சம்மதம் தேவை. உருசியாவில் உள்ள கட்சிகளுள், ஐக்கிய உருசியக் கட்சி, பொதுவுடைமைக் கட்சி, உருசியத் தாராண்மைவாத மக்களாட்சிக் கட்சி, நீதிமுறை உருசியா ஆகியன அடங்கும். + +உலகின் அதிக பரப்பளவு கொண்ட உருசிய நாடு 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. அவை + + + + + +கட்டிடக்கலைப் பாணி + +கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும் அமைப்பு அடிப்படையில், வடிவம், தொழில்நுட்பம், கட்டிடப் பொருட்கள் போன்றவற்றின் அடிப்படையில், கட்டிடக்கலையை வகைப்படுத்தும் முறையைக் குறிக்கின்றது. எனினும் இது கட்டிடக்கலையை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு ஏற்ற ஒரு வழியல்ல. பொதுவாகப் பாணி பற்றிய எண்ணக்கரு கட்டிடக்கலையின் படிமுறை வளர்ச்சி, அதன் வரலாறு என்பனபற்றிய ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதென்பதுடன், சில அம்சங்களில் பாணியென்பது வரலாற்றுடன் ஒத்த இயல்புடையதாகவும் அமைகின்றது. எனினும் அவை கட்டிடக்கலை தொடர்பான சிறிது வேறுபட்ட அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதிக் கட்டிடக்கலையை (Gothic Architecture) வரலாற்று அடிப்படையில் நோக்கும்போது, அது அந்தக் கட்டிடக்கலையின் உருவாக்கத்துக்கு காரணமான எல்லாப் பண்பாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்கிறது. அதே சமயம் "கோதிக்" கட்டிடக்கலைப் பாணியெனும்போது அது அக்கட்டிடக்கலையின் சில சிறப்பியல்புகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. + +கட்டிடக்கலைப் பாணிகள் சிலவற்றின் பட்டியலைக் கீழே காணலாம். + + + + + +ஆலிசின் அற்புத உலகம் + +ஆலிஸ் இன் வொண்டர்லாண்ட் ("Alice in Wonderland", அற்புத உலகில் ஆலிஸ்) 1865 இல் லூயிஸ் கரோலினால் எழுதப்பட்ட ஒரு புதினம். முயல் குழிக்குள் விழுந்து அங்கொரு அற்புத உலகத்���ைக் காணும் ஆல்ஸ் என்ற சிறுமியின் கதையை இப்பதினம் சொல்கிறது. ”அற்புத உலகில் ஆலிசின் சாகசங்கள்” ("Alice's Adventures in Wonderland") என்ற முழுப்பெயர் கொண்ட இது, வெளியாகி சுமார் 150 ஆண்டுகள் ஆன பின்னரும் பெரியவர்கள் குழந்தைகள் என அனைத்து அகவையினரின் குறையா வரவேற்பைப் பெற்றுள்ளது. இலக்கியப் பிதற்றல் பாணியின் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. விந்தையான மாந்தவுருவக விலங்குகள் நிறைந்த ஆலிசின் அற்புத உலகம், புதினத்தின் கதை வடிவம், கதை கூறும் தன்மை ஆகியவை கனவுருப்புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. தான் பணிபுரிந்த கல்லூரி முதல்வரின் இளைய மகளுக்கு 1862 சூலை 4-இல் இவர் சொல்லத்துவங்கிய கதையே ஆலிசின் விந்தை உலகமாக விரிவு கொண்டது. இதில் ஊடும் மெல்லிய நகைச்சுவையும், வாழ்க்கையின் அடிப்படைக் கோட்பாட்டை அறியத்துடிக்கும் கேள்விகளை பூடகமாக வெளிப்படுத்துவதாலும், இது ஒரு செவ்விலக்கியமாகக் கருதப்பட்டு, அனைத்து வயதினராலும் விரும்பிப் படிக்கப்படுகிறது. + + + + + +லூயிஸ் கரோல் + +லூயிஸ் கரோல் ("Lewis Carroll", ஜனவரி 27, 1832 - ஜனவரி 14, 1898) என்ற புனைப்பெயர் கொண்டவர் சார்ல்ஸ் லுட்விக் டாக்ஸ்டன் ("Charles Ludwidge Dogston"). இவர் பிரித்தனில் வசித்த ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர், கிறித்துவப் பாதிரியார் மற்றும் புகைப்படக் கலைஞர். + +இவர் எழுதிய சிறுவர்களுக்கான இலக்கிய நூல்கள், தீவிர இலக்கியவாதிகளான ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ஜார்ஜ் லூயி போர்ஹே போன்றவர்களிடத்தும் மிகப் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. + + + + + +சார்லி சாப்ளின் + +சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் ("Sir Charles Spencer Chaplin", ஏப்ரல் 16, 1889 - டிசம்பர் 25, 1977) என்ற இயற்பெயர் கொண்ட சார்லி சாப்ளின், ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. + +சாப்ளின், இலண்டனில் உள்ள வால்வோர்த்தில் சார்லசுக்கும் ஹன்னா ஹாரியட் ஹில்லுக்கும் மகனாகப் பிறந்தார். இவர் பெற்றோர் இருவரும் மியூசிக் ஹால் கலைஞர்கள். சாப்ளின் பிறந்த சில நாட்கள் கழித்து இவர்களது திருமண வாழ்க்கை முறிந்தது. சாப��ளின் தனது அன்னையின் கண்காணிப்பில் வளர்ந்தார். 1896ஆம் ஆண்டில் ஹாரியட்டிற்கு வேலை ஏதும் கிடைக்காத நிலையில், சார்லியும் அவரது சகோதரர் சிட்னியும் லாம்பெத் வொர்க்கவுசில் இருக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர் இருவரும் Hanwell School for Orphans and Destitute Children என்னும் ஆதரவற்றோருக்கான பள்ளி ஒன்றில் வளர்ந்தனர். இதற்கிடையில், சாப்ளினின் தந்தை குடிப் பழக்கத்தால் உடல் நலம் குன்றி சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர் தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி கிராய்டனில் இருந்த கேன் ஹில் அசைலம் (Cane Hill Asylum) என்ற மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார். + +சாப்ளின் ஐந்து வயதிலேயே நடிக்கத் தொடங்கி விட்டார். முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். சிறுவனாக பல நாட்கள் உடல் நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்தபொழுது, இரவுகளில் அவரது தாய் சன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் நடக்கும் நிகழ்வுகளை நடித்துக் காட்டுவார். சாப்ளினுக்கு பத்து வயதாக இருந்த பொழுது சிட்னி இலண்டன் ஹிப்போட்ரோமில் சின்ட்ரெல்லா பாண்டோமைமில் ஒரு பூனையாக, நகைச்சுவையான பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை வாங்கித் தந்தார். 1903ஆம் ஆண்டில் "ஜிம், எ ரொமான்ஸ் ஆஃப் காக்கைய்ன்" (Jim, A Romance of Cockayne) நாடகத்தில் நடித்தார். இதற்குப் பிறகு அவரது முதல் நிரந்தர வேலை கிடைத்தது - செர்லாக் ஹோம்ஸ் நாடகத்தில் செய்தித்தாள் விற்கும் சிறுவன் பில்லி வேடம். இதனைத் தொடர்ந்து கேசீஸ் கோர்ட் சர்க்கஸ் (Casey's Court Circus) நடத்திய பல்சுவை நிகழ்ச்சியிலும், Fred Karno's Fun Factory slapstick நகைச்சுவை நிறுவனத்தில் கோமாளி வேடத்திலும் நடித்தார். அமெரிக்காவின் குடிபெயர்வுப் பதிவுகளின்படி கார்னோ குழுவுடன் அக்டோபர் 2, 1912 - அன்று அமெரிக்கா வந்தடைந்தார். கார்னோ குழுவிலே ஆர்த்தர் ஸ்டான்லே ஜெப்பர்சனும் இருந்தார் - இவரே பின்னர் ஸ்டான் லாரலாக பிரபலமானார். இருவரும் சிறிது காலம் ஒரே அறையில் தங்கினர். + +தயாரிப்பாளர் மாக் செனட் சாப்ளினின் திறமையைக் கவனித்து அவரது நிறுவனமான கீஸ்டோன் திரைப்பட நிறுவனத்தில் (Keystone Film Company) சேர்த்துக் கொண்டார். முதலில் சாப்ளினுக்கு கீஸ்டோன் நடிப்பு முறைக்கு தன்னை மாற்றிக் கொள்வது சற்று க��ினமாக இருந்தது. ஆனால் மிக விரைவில் தன்னைப் பழக்கிக் கொண்டு கீஸ்டோனின் சிறந்த கலைஞராக வளர்ந்தார். இவரது கிடுகிடு வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தது அவர் தனக்கென்று உருவாக்கிக் கொண்ட நாடோடி வேடமும், நிறுவனத்தில் இவருக்கு இயக்கவும் புது படைப்புகள் படைக்கவும் கொடுக்கப்பட்ட உரிமையுமாகும். இவரது வளர்ச்சியையும், இவரது நிருவாகியாக பணிபுரிந்த சிட்னியின் ஆற்றலையும் சாப்லினின் சம்பளப் பட்டியல் எடுத்துக்காட்டியது. +இவர் 1919ஆம் ஆண்டில் மேரி பிக்போர்ட், டக்லஸ் ஃபேர்பேங்க்ஸ், கிரிபித்துடன் இணைந்து யுனைட்டடு ஆர்டிஸ்ட்ஸ் ஸ்டுடியோவைத் துவங்கினார். + +1927ஆம் ஆண்டில் ஓசையுடன் கூடிய திரைப்படங்கள் வெளிவரத் துவங்கி மிகவும் பரவலானாலும் 1930ஆம் ஆண்டு வரை சாப்ளின் பேசும் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார். சாப்ளின் சினிமாவின் பல துறைகளில் கை தேர்ந்தவராகத் திகழ்ந்தார். 1952ஆம் ஆண்டில் வெளிவந்த லைம்லைட் திரைப்படத்தில் நடன அமைப்பையும் 1928ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி சர்க்கஸ்" படத்தின் தலைப்பு இசை அமைப்பையும் இவரே செய்தார். இவர் இசையமைத்த பாடல்களில் பெரும் புகழ் பெற்றது "ஸ்மைல்". + +இவரது முதல் டாக்கீஸ் 1940 ஆம் ஆண்டில் வெளியான "தி கிரேட் டிக்டேடர்" (The Great Dictator). இது அடால்ஃப் ஹிட்லரையும் அவரது பாசிச கொள்கையையும் எதிர்த்து குரல் கொடுத்த படம். இப்படம் அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் புகுவதற்கு ஒரு வருடம் முன்பு அங்கு வெளியிடப்பட்டது. இதில் சாப்ளின் இரு வேடங்கள் பூண்டிருந்தார் - ஹிட்லர் மற்றும் நாசியர்களால் கொடுமையாக கொல்லப்படும் யூத இனத்தைச் சேர்ந்த ஒரு நாவிதன். சினிமா மீது மோகம் கொண்ட ஹிட்லர் இப்படத்தை இரு முறைப் பார்த்தார். போர் முடிந்த பிறகு, ஹோலோகாஸ்ட்டின் கொடுமை உலகிற்கு தெரியவந்த பிறகு சாப்ளின் இக்கொடுமைகள் எல்லாம் தெரிந்திருந்தால் ஹிட்லரையும், நாசியர்களையும் கிண்டல் செய்திருக்க முடியாது என்றார் + +இவரது கடைசி திரைப்படங்கள் "தி கிங் இன் நியூ யார்க்" (1957), "தி சாப்லின் ரெவ்யூ" (1959) மற்றும் சோஃபியா லாரென், மார்லன் ப்ராண்டோ நடித்த "அ கௌண்டஸ் ·ஃப்ரம் ஹாங்காங்". + +சாப்ளினின் அரசியல் சிந்தனைகள் இடது சார்புடையதாகக் கருதப்படுகிறது. இதனையே இவரது திரைப்படங்களில், முக்கியமாக "மாடர்ன் டைம்ஸ்" (Modern Times) பிரதிபலித்தன. இப்படம் பாட்டாளிகள் மற்றும் ஏழைகளின் கவலைக்கிடமான நிலைமையை சித்தரித்தது. "மெக்கார்த்திச காலங்களில்" இவர் அமெரிக்க கொள்கைகளுக்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கம்யூனிஸ்ட்-எனவும் சந்தேகிக்கப்பட்டார்; ஜே.எட்கார் ஹூவர் எஃப்.பி.ஐ-யிடம் இவரை கண்காணிக்குமாறு உத்தரவிட்டு, அமெரிக்காவில் சாப்ளின் வாழும் உரிமையை நீக்க முயற்சித்தார். சாப்ளினின் வெற்றிகள் அனைத்துமே அமெரிக்காவில் அமைந்தாலும், அவர் பிரிட்டிஷ் குடியுரிமையினையே நீட்டித்தார். +1952 ஆம் ஆண்டில் சாப்ளின் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதனை தெரிந்துகொண்ட ஹூவர் ஐ.என்.எஸ் (Immigration and Naturalization Service)-உடன் பேச்சுவார்த்தை நடத்தி, சாப்ளின் அமெரிக்கா திரும்பும் அனுமதிச் சீட்டை ரத்து செய்தார். ஆதலால் அவர் ஐரோப்பாவிலேயே தங்கும்படி நேர்ந்தது - பெரும்பாலும் வெவே, சுவிஸர்லாந்தில் வாழ்ந்தார். இவர் 1972 ஆம் ஆண்டில் சிறிது காலம், தனக்கு அளிக்கப்பட்ட கௌரவ ஆஸ்கார் விருதைப் பெறுவதற்காக அமெரிக்கா திரும்பினார். + +இவரது திரையுலக வெற்றிகள் மூலமாக இவருக்கு கிடைத்த புகழ், பலமுறை தன் தனிப்பட்ட வாழ்வினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அக்டோபர் 23 1918-இல் இருபத்தியெட்டு வயது சாப்ளின் பதினாறு வயது மில்ட்ரெட் ஹாரிசை மணந்தார். இவர்களுக்கு பிறந்த குழந்தை சிறு வயதிலேயே இறந்தது. இவர்களது திருமண வாழ்க்கை 1920 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. முப்பத்தி ஐந்து வயதில் "தி கோல்ட் ரஷ்" திரைப்படத்திற்கு தயார் செய்து கொண்டிருந்த பொழுது, பதினாறு வயது லீடா க்ரே மீது காதல் கொண்டார். நவம்பர் 26 1924-இல் க்ரே கர்ப்பமான நிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் பிறந்தனர். இவர்களது மண வாழ்க்கையும் $825,000 ஒப்பந்ததுடன் விவாகரத்தில் முடிந்ததது. இந்த கசப்பான விவாகரத்தினாலும் வருமான வரி சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகி இவரது தலைமுடி நரைக்கத் துவங்கியது. + +மேலும் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில் சாப்ளினைப் பற்றிய பல அந்தரங்க செய்திகள் இடம்பெற்றது. இதனால் இவரை எதிர்த்து பிரச்சாரங்கள் நடைபெற்றன. சாப்ளினின் நாற்பத்தி ஏழாவது வயதில் பாலட் கொடார்டை ஜூன் 1936-இல் ரகசியமாக மணமுடித்தார். சில வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தபின் இத்திருமணமும் விவாகர��்தில் முறிந்தது. இக்காலகட்டத்தில் நடிகை ஜோன் பேரியுடன் இவருக்கு உறவு ஏற்பட்டது; ஆனால், பேரி சாப்ளினை துன்புறுத்தியதால் மெதுவாக அவ்வுறவினை முடித்துக் கொண்டார். ஆனால் மே 1943-ஆம் ஆண்டு தனது குழந்தைக்கு சாப்ளினே தந்தை என்று வழக்கு தொடர்ந்தார். இரத்த பரிசோதனைகள் சாப்ளினை குற்றமற்றவர் என்று காட்டினாலும், அக்காலத்தில் இரத்த பரிசோதனைகள் நீதி மன்றங்களில் சாட்சிகளாக எடுத்துக்கொள்ளப்படவில்லை; குழந்தை 21 வயது வரும் வரை வாரம் $75 வழங்குமாறு உத்தரவிடப்பட்டார். சில நாட்கள் கழித்து, ஐகன் ஓ'நீலின் மகள், ஓனா ஓ'நீலை சந்தித்தார். இவரை ஜூன் 16, 1943 அன்று மணந்தார். சாப்ளினின் வயது அப்பொழுது 54, ஓ'நீலின் வயது 17. இத்திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடன் பல வருடங்கள் நீடித்தது. இவர்களுக்கு எட்டு குழ்ந்தைகள் பிறந்தனர். + +சாப்ளின், 1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது எண்பத்தி எட்டாவது வயதில் வேவேவில் இறந்தார். இவரது உடலை வாட்(Vaud) நகரில் உள்ள கார்சியர்-சுர்-வெவே கல்லறையில் அடக்கம் செய்தார்கள். மார்ச்சு 1, 1978 ஆம் ஆண்டு இவரது உறவினர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக இவரது உடல் கல்லறையிலிருந்து திருடப்பட்டது. ஆனால் இத்திட்டம் தோல்வியுற்று, திருடர்கள் பிடிபட்டனர். பதினொரு வாரங்களுக்குப் பின் ஜெனீவா ஆற்றின் அருகில் சாப்ளினின் உடலைக் கைப்பற்றினார்கள். சாப்ளினின் நினைவாக வேவேவில் அவரது சிலை ஒன்றை அமைத்துள்ளனர். + +சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார் விருதினைப் பெற்றார். மே 16, 1922-இல் ஆஸ்கார் விருதுகள் வழங்கியபொழுது, இப்பொழுதுள்ள வாக்களிப்பு முறை இல்லை. சாப்ளின் "தி சர்க்கஸ்" திரைப்படத்துக்காக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த இயக்குனர் விருதுகளுக்குத் தேர்வானார். இவருக்கு விருது கிடைக்காதென்று இருந்த நிலையில், இத்திரைப்படத்தை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்த அவருடைய பன்முகத்தன்மையையும் மேதைமையையும் பாராட்டிச் சிறப்பு விருது அளித்தார்கள். அதே ஆண்டு, "தி ஜாஸ் சிங்கர்" படத்துக்காக இன்னொரு சிறப்பு விருதை வழங்கினார்கள். திரைப்படத்தை இந்நூற்றாண்டின் கலை வடிவமாக்குவதில் அளவிடமுடியாத பங்காற்றியதற்காக 44 ஆண்டுகளுக்குப் பிறகு 1972ஆம் ஆண்டில் இரண்டாவது ஆஸ்கர் விருதைப் பெற்றார். + +சாப்ளின் "Monsieur Verdoux" திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதைக���கான விருதுக்காகவும், "தி கிரேட் டிக்டேடர்" திரைப்படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டாலும், விருதுகள் பெறவில்லை. 1972 ஆம் ஆண்டில் சிறந்த இசையமைப்புக்கான விருதை கிளயர் புளூம் நடித்திருந்த லைம்லைட் (1952) திரைப்படத்திற்காக பெற்றார். 1952 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டாலும் மெக்கார்த்திசத்தினால் சாப்ளினுக்கேற்பட்ட பிரச்சனைகளால் லாஸ் ஏஞல்சில் வெளிவரவில்லை. 1972 ஆம் ஆண்டிலேதான் விருதுக்குத் தேர்வாவதற்கான கட்டுப்பாடுகளை நிறைவு செய்தது. "லைம்லைட்" திரைப்படத்தில் பஸ்டர் கீட்டனும் நடித்திருந்தனர். இதுவே இவ்விரு நகைச்சுவை மேதைகளும் முதலும் கடைசியுமாக சேர்ந்து தோன்றிய திரைப்படம். + +மார்ச் 4, 1975 அன்று பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபத் அரசி சாப்ளினுக்கு "சர்" பட்டம் அளித்தார். இவருக்கு இந்தப் பெருமையை வழங்கக் கோரி 1956ஆம் ஆண்டே பரிந்துரைத்திருந்தாலும், இதனை பிரித்தானிய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக எதிர்த்தது. சாப்ளின் ஒரு பொதுவுடைமையாளர் என்றும், அவரைச் சிறப்பிப்பதன் மூலம் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே ஏற்கனவே விரிசல் விட்டிருந்த உறவு பாதிக்கப்படும் என்றும் கருதினார்கள். அக்காலத்தில் தான் பனிப் போர் அதன் உச்சக்கட்டத்தில் இருந்தது; மேலும் சூயஸ் கால்வாயினை கைப்பற்றும் முயற்சியும் இரகசியமாக திட்டமிடப்பட்டு வந்தது. + +சாப்ளின் "ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேமில்" இடம் பெற்றார். 1985 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு, இவரது உருவத்தை அஞ்சல் தலை ஒன்றில் வெளியிட்டு பெருமை சேர்த்தது. 1994 ஆம் ஆண்டு அல் ஹிர்ஸ்ஃபெல்ட் வடிவமைத்த அமெரிக்க அஞ்சல் தலை ஒன்றிலும் இடம் பெற்றார். 1992 ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை "சாப்ளின்" என்ற பெயரில் திரைப்படமாக்கப்பட்டது. இதனை இயக்கியவர் ஆஸ்கார் விருது பெற்ற சர். ரிச்சர்ட் அட்டன்பரோ. இதில் நடித்தவர்கள் ராபர்ட் டௌனி ஜூனியர், டான் ஐக்ராய்ட், ஜெரால்டின் சாப்ளின் (சாப்ளினின் மகள் சாப்ளினின் தாயாக நடித்திருந்தார்), சர் அந்தோனி ஹாப்கின்ஸ், மில்லா ஜோவோவிச், மொய்ரா கெல்லி, கெவின் கிலைன், டயானா லேன், பெனிலோப் ஆன் மில்லர், பால் ரைஸ், மரீசா டோமை, நான்சி டிராவிஸ் மற்றும் ஜேம்ஸ் வுட்ஸ். + +2005 ஆம் ஆண்டு நடைபெற்ற "நகைச்சுவைய���ளர்களின் நகைச்சுவையாளர்"கருத்துக் கணிப்பில் உலகத்தின் தலை சிறந்த இருபது நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக சாப்ளினைத் தேர்ந்தெடுத்தார்கள். + + + + + + + + +வேடுவர் (இலங்கை) + +வேடுவர் ("Veddas", "Veddahs", , வெத்தா), எனப்படுவோர் இலங்கை காடுகளில் வேட்டையாடி வாழும் வாழ்க்கையை பழக்கமாகக் கொண்டு வாழும் மனிதர்களாவர். இவர்கள் இலங்கைக்கு வேறு எந்த நாட்டில் இருந்தும் வந்து குடியேறாதவர்கள் என்பதால் இவர்கள் இலங்கையின் பழங்குடி மக்களும் ஆவர். + +இவர்கள் இலங்கைக்கு ஆரியரின் வருகைக்கு முன்னரே, இலங்கையின் வரலாற்றுக் காலம் முதல் வசிப்பவர்கள் என்றும், இவர்கள் தென்னிந்திய பழங்குடி மரபினருடன் ஒத்த தன்மைக்கொண்டவர்கள் என்றும் வில்ஹெய்ம் கெய்கர் தெரிவித்துள்ளார். + +இலங்கை காடுகளில் வசிக்கும் இவர்கள் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு பண்படாதவர்களாக, காடுகளில் வேட்டையாடி வாழப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் வேடுவர் என அழைக்கப்பட்டாலும், அன்மையக் காலங்களாக சாதாரண மனித வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றிக்கொண்டு இலங்கையில் வாழும் ஏனைய சமுதாயத்தினரைப் போன்று வாழும் நிலைக்கு மாறி வருகின்றனர். இருப்பினும் தற்போதும் காட்டு வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்களாக வேடுவராக வாழ்வோரும் உள்ளனர் எனும் செய்திகளும் உள்ளன. + +தற்போது இலங்கையில் வாழும் இனங்களுள் ஆதிக் குடிகளாகக் கருதப்படுபவர்கள் இவர்களாகும். சிங்களவர்கள் இவர்களை வேடுவர் என்னும் பொருள்பட "வெத்தா" எனப் பெயரிட்டு அழைத்தாலும், இவர்கள் தங்களை "வன்னியலா எத்தோ" ("Wanniyala-Aetto") என்றே குறிப்பிட்டுகொள்கின்றனர். இதன் பொருள் "காட்டைச் சேர்ந்தவர்கள்" அல்லது "காட்டில் வாழ்பவர்கள்" அல்லது "காட்டிலுள்ள மக்கள்" என்பதாகும். நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளிலுள்ள காடுகளில் இவர்கள் காணப்படுகின்றார்கள். இவர்கள் இன்றைய இலங்கையின் பெரும்பான்மை இனங்களான சிங்களவர், தமிழர் ஆகிய இன மக்களிடம் இருந்து வேறுபட்டவர்கள். வன்னியலா எத்தோ மக்களின் வாழ்வியல் தனித்துவமானது, எனினும் இலங்கையின் பிற இன மக்களுடன் பின்னிபிணைந்தது. குறிப்பாக இலங்கை கிழக்கு கரையோர பகுதியில் வசிக்கும் இவ்வின மக்களின் சில குழுக்கள் தமிழ் போன்ற ஒரு மொழி பேசுகின்றார்கள். இவர்கள் பேசும் மொழி ஆரிய மொழிகள் அல்ல என்று கருத்து தெரிவிக்கும் வில்ஹெய்ம் கெய்கர், அதேவேளை ஆரிய மொழிகளின் சாயல் இவர்களது பேச்சில் இருக்கின்றன எனவும், அவை அன்மைக்காலங்களில் இவர்களது பேச்சில் கலந்தவைகள் என்றும் தெரிவித்துள்ளார். + +இவர்கள் தங்களை, இலங்கையில் வாழ்ந்த புதிய கற்காலச் சமுதாயத்தின் நேரடி வாரிசுகளாகக் கருதுகிறார்கள். நாட்டின் பழங்கால வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படும் இயக்கர், நாகர் என்னும் இரு இனங்களில் இவர்கள் இயக்கர் பழங்குடியினரின் மரபினர் என சில ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். + +இலங்கையின் பழம்பெரும் தொகுப்பு நூலான மகாவம்சத்தை மேற்கோள் காட்டி பௌத்தப் பிக்குகளும், இலங்கையின் பௌத்த மகாவம்சக் கொள்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்பவர்களும், இலங்கையின் முதல் மன்னனாக மகாவம்சம் கூறும் விஜயன் இலங்கை வந்தடைந்தப் போது அவனை வரவேற்று பின்னர் விஜயனுடன் இணைந்து வாழ்ந்த குவேனி எனும் இயக்கர் குலப்பெண்ணுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்தது பற்றியும் சொல்லப்படுகிறது. விஜயன் அரசமைத்து தனது பட்டத்து இளவரசியாக தென்னிந்தியாவில் பாண்டிய குலத்து பெண்ணை திருமணம் முடித்து பட்டத்து அரசியாக்கினான் என்றும், அதன் பின்னர் குவேனி இயக்கர் இனத்தவர்களாலேயே கொல்லப்பட்டாள் என்றும், விஜயனுக்கும் குவேனிக்கும் பிறந்த ஒரு ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் தப்பியோடி காடுகளில் வாழத்தலைப்பட்டனர் என்றும், அவர்களின் வாரிசுகளே இன்றைய இலங்கை காடுகளில் வசிக்கும் வேடர்கள் என்றும் கூறிவருகின்றனர். + +இலங்கையில், சிறப்பாகத் தென்னிலங்கையில் பெருமளவில் வசித்துவந்த இவர்களுடைய வாழ்க்கை முறை, கி.மு. 5 ஆம் நூற்றாண்டளவில் தொடங்கி நடைபெற்ற ஆரியர் குடியேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதனால் இவர்கள், ஒன்று இந்தியாவிலிருந்து வந்த குடியேற்ற வாசிகளுடன் இரண்டறக் கலந்துவிட்டனர் அல்லது காடுகளின் உட்பகுதிகளுக்குள் சென்று தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இலங்கையின் வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவர்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தவருடனும், கிழக்கு மாகாணத்தில் தமிழருடனும் கலந்துவிட்டனர். + +ஆரம்ப காலங்களில் மட்டுமன்றி பின்னரும் தொடர்ந்து இன்றுவரை தங்��ள் வாழ்க்கை முறையையும், அடையாளத்தையும் பேணிக்கொள்வதற்குப் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகிறார்கள். முக்கியமாக நாடு விடுதலை பெற்றபின்னர், அரசாங்கம் முன்னெடுத்த நீர்ப்பாசன மற்றும் குடியேற்றத் திட்டங்கள் இவர்களுடைய வாழ்நிலங்களில் பெரும்பகுதியை விழுங்கிவிட்டன. 20 ஆம் நூற்றாண்டின் நாற்பதுகளின் இறுதியில் நிறைவேற்றப்பட்ட கல்லோயா அபிவிருத்தித் திட்டம் இவர்களுடைய வேட்டைக்கும் உணவு சேகரிப்புக்கும் உரிய பெருமளவு காட்டுப்பகுதிகளை இல்லாதாக்கியது. அண்மையில், 1978க்குப் பின்னர் நிறைவேற்றப்பட்ட மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் எஞ்சியிருந்த பகுதிகளும் பறிபோயின. இத் திட்டத்தின்கீழ் இவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவந்த பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகளில் பெரும்பகுதி நீர்தாங்கு பகுதிக்குள் வந்துவிட்டன அல்லது புதிய குடியேற்றத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுவிட்டன. இதில் எஞ்சிய பகுதியான சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவுள்ள, வன்னியலா எத்தோக்களின் பாரம்பரியக் காட்டுப்பகுதி மாதுறு ஓயா தேசியப் பூங்கா என்ற பெயரில் தேசியப் பூங்காவாகப் பிரகடனம் செய்யப்பட்டு அங்கு வாழ்ந்த வன்னியலா எத்தோக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களுடைய வாழ்க்கை நிலையை மேம்படுத்துவது என்ற போர்வையில், அவர்களுடைய எதிப்புகளுக்கும் மத்தியில் அவர்களுக்கு விவசாய நிலங்கள் ஒதுக்கப்பட்டுக் குடியேற்றத்திட்டங்களில் இடங்கள் வழங்கப்பட்டன. இதைக் குறித்து ஒரு வன்னியலா எத்தோ முதியவர் பேசியபோது, "எங்களுடைய வேட்டைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு எங்களுக்கு மண்வெட்டிகளைத் தந்திருக்கிறார்கள், எங்கள் புதை குழிகளை நாங்களே வெட்டிக்கொள்ள" என்று குறிப்பிட்டாராம். + +இலங்கையின் முன்னாள் சனாதிபதிகளில் ஒருவரான ரணசிங்க பிரேமதாசாவின் ஆட்சியின் போது பெருமளவான வேடுவர்களைச் சாதாரண குடிமக்களாக மாற்றி அவர்களுக்கு குடியுரிமை தகுதிகளையும் வழங்கினார். + +மற்ற இனத்தவர்களால் இவர்கள் பிற்பட்டவர்களாகவும், முன்னேற்றமடையாத காட்டு வாசிகளாகவும் கருதப்பட்டாலும், இவர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறைகளைக் கொண்டவர்களாகவும், நல்ல மனிதப் பண்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள் என ��வர்களுடைய பண்பாட்டை ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றார்கள். இவர்கள் எந்த பொருட்களையும் எண்ணுவதற்க்கு விரல்களுக்குப்பதில் காடுகளில் கிடைக்கும் சிறிய குச்சுகளைச் சேகரித்து அதன் மூலம் கணக்கிடுகிறார்கள். + + +A great deal of information on them can be found at Vedda.org + + + + +ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள் + +பண்டைய மற்றும் தற்கால ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களை மூலங்களாகக் கொண்ட சொற்கள் பல காணப்படுகின்றன. மேற்படி மொழிகளுக்கான அகராதிகள் அவ்வாறான சில சொற்களுக்கான மூலங்களாகத் தமிழ் மொழியைக் குறிப்பிடுகின்றன. அவ்வாறான மேலும் பல சொற்கள் காணப்படுவதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள். + +இவ்வாறு ஐரோப்பிய மொழிகளில் தமிழ்ச் சொற்களின் கலப்பு பல்வேறு காலகட்டங்களிலும், பல காரணங்களால் நிகழ்ந்துள்ளன. கிறிஸ்து சகாப்தத்துக்கு முன்னரே தமிழகத்துக்கும், ஐரோப்பிய நாகரீகங்களுக்கும் இடையேயான வணிகத் தொடர்புகள் காரணமாக சில வணிகப் பொருட்களின் பெயர்கள் தமிழிலிருந்து ஐரோப்பிய மொழிகளுள் புகுந்துள்ளன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் இவ்வாறான தமிழ்ச் சொற்கள் சில எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆங்கில மொழியிலும் அதனையொத்த ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் உள்ள "ரைஸ்" (Rice) என்னும் சொல் "அரிசி" என்னும் தமிழ்ச் சொல்லை மூலமாகக் கொண்டதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது லத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளின் வழியாக நவீன மொழிகளுக்கு வந்து சேர்ந்தது என்பது அவர்கள் கருத்து. + +அண்மைக் காலங்களிலும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் ஐரோப்பியர் ஆட்சி நடைபெற்ற போது சில தமிழ்ச் சொற்கள் ஐரோப்பிய மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஆங்கில மொழி அகராதிகளில் காணப்படும், "mammoty" (மமொட்டி - தமிழ் "மண்வெட்டி" இலிருந்து), "cooly" (கூலி - தமிழ் "கூலி" இலிருந்து) போன்ற சொற்கள் இத்தகையவை. தமிழ்ச் சொல்லான "கட்டுமரம்" ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழிகளில் "கடமரன்" (Katamaran) என வழங்கப்படுவதும் இன்னொரு எடுத்துக்காட்டு. + +!தமிழ்ச் சொல்!!பிறமொழிச் சொல்!!மொழி!!வழி + + + + +இயக்கர் + +இயக்கர்கள் (Yaksha), ( உருவமற்ற, மனிதரல்லாதவர்கள் என்று கருதப்பட்டனர். இயற்கை வணக்கத்தைக் கொண்டவர்கள் இயக்கர்���ள். பண்டைய சமஸ்கிருத நூல்கள், இவர்களை ஆரியரின் எதிரிகளாகக் குறிப்பிடுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்னர் இயக்கர்கள் இந்தியாவில் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கை வரலாற்று நூல்களும் இவர்களை அத்தீவின் பழங்குடிகளுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. + +இலங்கையின் முதல் வரலாற்று நூலான மகாவம்சம், இயக்கர்கள் இலங்கையின் பல இடங்களில் நகரங்கள் அமைத்து அரசாண்டு வந்ததாக குறிப்பிடுகின்றது. இந்த நூலின்படி சிங்கள இனத்தின் ஆரம்ப கர்த்தாக்கள் எனப்படும் கலிங்க இளவரசன் இலங்கையில் இறங்கி இயக்க இளவரசியான குவேனியை மணம் செய்து கொண்டான். அவனுடன் வந்த 700 நண்பர்களும் இயக்கப் பெண்களையே மணந்து கொண்டனர். + +முற்காலத்தில் இலங்கைக்கு வந்த நாடு காண் பயணிகள் பலரும் இயக்கர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது இலங்கையில் சிறு தொகையினராகக் காணப்படும் வேடுவர் (வேடர்) இவர்களின் வழித்தோன்றல்களாகக் கருதப்படுகின்றார்கள். + + + + + +ஜெயகாந்தன் + +ஜெயகாந்தன் (ஏப்ரல் 24, 1934 - ஏப்ரல் 8, 2015) தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது. + +ஜெயகாந்தன் 1934-ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை,மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார் . பள்ளிப்படிப்பில் நாட்டம் இல்லாமையால், ஐந்தாம் வகுப்பிலேயே பள்ளி வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். உலகியல் அனுபவம் பெறவேண்டி, வீட்டை விட்டு வெளியேறி விழுப்புரம் சென்றார். அங்கு, அவர் மாமாவின் மேற்பார்வையில் வளர்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும் பாரதியின் எழுத்துக்களுக்கும் அறிமுகப்படுத்தினார். + +ஜெயகாந்தன் சில ஆண்டுகள் விழுப்புரத்தில் வாழ்ந்த பின் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு பெரும்பாலான நேரத்தை சி.பி.ஐ-யின் ஜனசக்தி அலுவலக அச்சகத்தில் பணிபுரிந்தும், ஜனசக்தி இதழ்கள் விற்றும் கழித்தார். 1949-ஆம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும��� தடை போடப் பட்டது. ஆதலால் சில திங்கள்கள், தஞ்சையில் காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார். இந்த எதிர்பாராத இடைவேளை அவர் வாழ்க்கையில் முதன்மையான காலகட்டமாக அமைந்தது. அவர் சிந்திக்கவும் எழுதவும் அப்பொழுது நேரம் கிடைத்தது. இக்கால கட்டத்தில், தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் மாற்றங்களும் நேர்ந்தன. தி.மு.க மற்றும் தி.க -வின் வளர்ச்சியால், சி.பி.ஐ மெதுவாக மறையத் துவங்கியது. உட்கட்சிப் பூசல்களினாலும், கட்சியுடன ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளினாலும், ஜெயகாந்தன் சி.பி.ஐ-யிலிருந்து விலகினார். பின்னர் காமராசருடைய தீவிரத் தொண்டனாக மாறி, தமிழகக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். + +அவரது இலக்கிய வாழ்க்கை 1950களில் தொடங்கியது - சரஸ்வதி, தாமரை, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற ஏடுகளில் இவரது படைப்புகள் வெளியாயின. படைப்புகளுக்குப் புகழும் அங்கீகாரமும் கிடைத்தன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப் பெற்றார். ஜெயகாந்தன் சில ஆண்டுகள், தமிழ்த் திரையுலகிலும் வலம் வந்தார். இவரது நாவல்களான "உன்னைப் போல் ஒருவன்" மற்றும் "சில நேரங்களில் சில மனிதர்கள்" ஆகியவை படமாக்கப்பட்டன. இதில் "உன்னைப் போல் ஒருவன்" சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான குடியரசுத் தலைவர் விருதில் மூன்றாம் விருதைப் பெற்றது. மேலும், அவருக்கும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட உறவே "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" என்ற புதினமாக உருப் பெற்றது. + +ரயிலில் டிக்கெட்இல்லாத பயணியாகப் புறப்பட்டு வந்த ஜெயகாந்தன் பார்த்த உத்தியோகங்கள்... மளிகைக் கடைப் பையன், டாக்டரிடம் பை தூக்கும் வேலை, மாவு மெஷின் கூலி, தியேட்டரில் பாட்டுப் புத்தகம் விற்றது, டிரெடில் மேன், அச்சுக் கோப்பாளர், பவுண்டரியில் இன்ஜின் கரி அள்ளிப்போட்டது, இங்க் ஃபேக்டரியில் கை வண்டி இழுத்தது, ஜட்கா வண்டிக்காரரிடம் உதவியாளர், பத்திரிகை புரூஃப் ரீடர்,உதவி ஆசிரியர். பின் முழு நேர எழுத்தாளர்! + + + + + +ஜெயகாந்தன் பேட்டிகள் (கபிலன் பதிப்பகம்) + + + + + + +எழுத்தாளர் ஜெயமோகன் தனது முன்னோடிகள் விமர்சன வரிசையில், "மண்ணும் மரபும்" எனும் நூலில் ஜெயகாந்தனின் படைப்புலகை குறித்து விவாதித்துள்ளார். மேலும் சில கட்டுரைகளை அவரது தளத்தில் எழுதியுள்ளார். விமர்சகர் எம். வேதசகாயகுமார் தனது முனைவர் பட்ட ஆய்வை "புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு" எனும் நூலாக்கியுள்ளார். 2009ல் முனைவர்.ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ஜெயகாந்தனின் குறுநாவல்களில் ஆய்வு செய்துள்ளார். "ஜெயகாந்தன் இலக்கியத்தடம்", "ஜெயகாந்தன் ஒரு பார்வை" ஆகிய நூல்களை முறையே ப.கிருஷ்ணசாமி, கே.எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் எழுதியுள்ளனர். + +ரவிசுப்பிரமணியன் "எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்" என்ற பேரில் ஒரு ஆவணப்படம் எடுத்துள்ளார். ஜெயகாந்தனின் மறைவிற்கு பிறகு அவர் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரைகளும் தொகுக்கப்பட்ட நூல்களும் முக்கியமானவை. + +ஜெயகாந்தன் 08.04.2015 அன்று இரவு 9.00 மணிக்கு உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். + + + + + +புதுமைப்பித்தன் + +புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 - ஜூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். நவீன தமிழ் இலக்கியத்தின் ஒரு முன்னோடியாக இவர் கருதப்படுகிறார். கூரிய சமூக விமர்சனமும் நையாண்டியும், முற்போக்குச் சிந்தனையும், இலக்கியச் சுவையும் கொண்ட இவருடைய படைப்புகள், இவரின் தனித்தன்மையினை நிறுவுகின்றன. இவரது படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்பட்டுள்ளன. 2002ல் தமிழக அரசு இவரது படைப்புகளை நாட்டுடமை ஆக்கியது. + +புதுமைப்பித்தன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பிறந்தார். தொடக்கக் கல்வியைச் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் பயின்றார். தாசில்தாராகப் பணி புரிந்த அவர் தந்தை ஓய்வு பெற்றமையால், 1918-இல் அவரது சொந்த ஊரான திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்குள்ள ஆர்ச் யோவான் ஸ்தாபனப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்பு நெல்லை இந்துக் கல்லூரியில் இளங்கலைப் (பி. ஏ) பட்டம்பெற்றார். 1932 ஜூலையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கமலாவை மணந்தார். + +இவரது முதல் படைப்பான "குலோப்ஜான் காதல்" காந்தி இதழில் 1933-இல் வெளிவந்தது. 1934-இலிருந்து மணிக்கொடியில் இவரது படைப்புகள் பிரசுரமாகத் துவங்கின. மணிக்கொடியில் வெளிவந்த இவரின் முதல் சிறுகதை "ஆத்தங்கரைப் பிள்ளையார்". இந்தக் காலகட்டத்தில் அவர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார். இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலிய��யும் சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன. இவரது சிறுகதைகள் கலைமகள், ஜோதி, சுதந்திரச் சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளிலும் பிரசுரமாயின. 1940ல் "புதுமைப்பித்தனின் கதைகள்" என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு வெளியானது. சென்னையிலிருந்த காலத்தில் இவர் ஊழியன், தினமணி, மற்றும் தினசரியிலும் பணிபுரிந்தார். + +இவர் திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். ஜெமினி நிறுவனத்தின் "அவ்வை" மற்றும் "காமவல்லி" படங்களில் பணிபுரிந்தார். பின்பு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான "பர்வதகுமாரி புரொடக்ஷன்ஸ்" -ஐத் துவங்கி "வசந்தவல்லி" என்ற படத்தைத் தயாரிக்க முயன்று தோல்வியுற்றார். எம். கே. தியாகராஜ பாகவதரின் "ராஜமுக்தி" திரைப்படத்திற்கு வசனம் எழுதுவதற்காகப் புனேவில் சில மாதங்கள் வாழ்ந்தார். அங்கு அவர் கடுமையான காச நோய்க்கு ஆளாகி மே 5, 1948-இல் காலமானார். + +திருநெல்வேலியில் இவர் வாழ்ந்த்த வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவுக்கு திருநெல்வேலி மாநகராட்சி புதுமைப்பித்தன் வீதி என்ற பெயரை 2016 செப்டம்பர் 15 அன்று சூட்டியது. + +புதுமைப்பித்தன் எழுத்துப்பணியில் முழுவீச்சில் ஈடுபட்டது 15 ஆண்டுகளுக்கும் குறைவான காலம் தான். அக்குறுகிய கால அளவிலேயே அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையுள்ள கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், புத்தக விமரிசனங்கள் என எழுதிக் குவித்தார். அவரது எழுத்துக்கள் அவரைப் புரட்சி எழுத்தாளராக அடையாளம் காட்டின. அவர் கையாண்ட விஷயங்களும் கதாபாத்திரங்களும் தமிழ்ப் புனைவு உலகுக்குப் புதியதாய் அமைந்தன. தமிழ் இலக்கிய உலகம் சில எழுதப்படாத விதிகளால் முடக்கப்பட்டிருப்பதாக அவர் கருதினார். தன் கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்: + +தனது சமகால எழுத்தாளர்களின் எதிர்விமர்சனங்களைப் புறந்தள்ளி பின்வருமாறு கூறுகிறார்: + +புதுமைப்பித்தனின் சிறுகதைகள் தான் அவருக்கு எழுத்துலகில் தனி இடத்தை அளித்தன. அவர் எழுதியதாகக் கணிக்கப்படும் 108 சிறுகதைகளில் 48 மட்டுமே அவர் காலத்திலேயே வெளியாகின. அவரது சிறுகதைகள் மணிக்கொடி, கலைமகள், ஜோதி, சுதந்திர சங்கு, ஊழியன், தமிழ்மணி, தினமணியின் ஆண்டு மலர், நந்தன் ஆகிய பத்திரிக்கைகளில் பிரசுரமாயின. மற்றவை ���வர் மறைவுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் பிரசுரமாயின. கடைசித் தொகுப்பு 2000ல் வெளியானது. புதுமைப்பித்தன் 1930களில் உருவாகிய மணிக்கொடி இயக்கத்தின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கினார். கு. ப. ராஜகோபாலன், பி. எஸ்.ராமையா, வ. ராமசாமி ஆகியோர் மணிக்கொடி இயக்கத்தின் மற்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களாவர். + +புதுமைப்பித்தன் 50க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பிற மொழிகளிலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவர் மொழிபெயர்த்த எழுத்தாளர்களில் சிலர்: மொலியர், கே பாயில், மேக்சிம் கார்க்கி, சின்கிளெயயர் லூயிஸ், எர்னஸ்ட் டோலர், வில்லியம் ஷேக்ஸ்பியர், இ. எம். டேலாஃப்ல்டு, வில்லியம் சரோயன், இ. வி. லூகாஸ், மோஷே ஸ்மிலான்ஸ்கி, ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்ஸன், பிரட் கார்ட், ஜான் கால்ஸ்வொர்த்தி, அலெக்ஸாண்டர் குப்ரின், ஆன்டன் செக்கோவ், பிராண்ஸ் காஃப்கா, இல்யா எக்ரன்பர்க், கை டி மாப்பாசான், வலெரி பிர்யுசொவ், அனாடோல் பிரான்ஸ், லியோனிட் ஆண்டிரியேவ், ஹென்ரிக் இப்சன், நாத்தேனியல் ஹாத்தோர்ன், எட்கர் ஆலன் போ, ராபர்ட் முரே கில்கிரிஸ்ட், பிரான்ஸிஸ் பெல்லர்பி, லியோனார்ட் ஸ்ட்ராங், ஜேக் லண்டன், பீட்டர் எக்கி, மிக்கெயில் அலெக்ஸாண்ட்ரோவிச் ஷோலோகோவ், தாமஸ் வுல்ஃப் மற்றும் ஜேம்ஸ் ஹேன்லி ஆவர். அவருக்கு மொழிபெயர்ப்புகள், தழுவல்கள் குறித்து தெளிவான கருத்து இருந்தது. தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்றும் பிறமொழி படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவர மொழிபெயர்ப்பே சிறந்த வழியெனவும் கருதினார். 1937ல் மொழிபெயர்ப்பா, தழுவலா என்ற பிரச்சனையில் அவருக்கும் கல்கி கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே காட்டமான இலக்கியச் சண்டையொன்று நிகழ்ந்தது. + +புதுமைப்பித்தன் 15 கவிதைகள் எழுதியுள்ளார். அவரது முதல் கவிதையான "திரு ஆங்கில அரசாங்க தொண்டரடிப்பொடியாழ்வார் வைபவம்", 1934ல் வெளிவந்தது. அவரது கவிதைகள் பெரும்பாலும் அவரது நண்பர் தொ. மு. சிதம்பர ரகுநாதனுக்கு வெண்பா வடிவில் எழுதப்பட்ட கடிதங்களாக அமைந்திருந்தன. அவரது 15 கவிதைகளும் அவர் இறந்த பின்பு தான் பிரசுரமாயின. அவரது சிறுகதைகளைப்போலவே அவரது கவிதைகளும் நையாண்டியும், நக்கலுமாக இருந்ததன. "மூனாவருணாசலமே மூடா", அவரது கவிதைகளுள் புகழ் பெற்றது. அது மணிக்கொடி இயக்கத்தைப் பற்றிக் குறிப்பிடாமல் விட்டுவிட்ட ���ரு தமிழ் புத்தகத்தினைச் (மு. அருணாசலத்தின் "இன்றைய தமிழ் வசன நடை") சாடும் விமரிசனமாக எழுதப்பட்டிருந்தது. + +புதுமைப்பித்தன் அடிப்படையில் சோஷியலிச கருத்துகளைக் கொண்டவர். அவரது அரசியல் கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை நான்கு. அவை "ஃபாசிஸ்ட் ஜடாமுனி", (முசோலினியின் வாழ்க்கை வரலாறு) "கப்சிப் தர்பார்", (ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு) "ஸ்டாலினுக்குத் தெரியும்" மற்றும் "அதிகாரம் யாருக்கு" (இரண்டும் கம்னியூசத்தையும் ஸ்டாலினின் கொள்கைகளையும் விவரிப்பவை). நான்கு புத்தகங்களுமே ஃபாசிசத்தை எதிர்த்தும் ஸ்டாலினிய கொள்கைகளுக்கு ஆதரவாகவும் எழுதப்பட்டன. + +சென்னை, தஞ்சாவூர்த் தமிழ் அல்லாது பிற வட்டார வழக்குத் தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் புதுமைப்பித்தன். பெரும்பாலும் இவரது கதாபாத்திரங்கள் நெல்லைத் தமிழில் பேசினர். அவரது கதைகள் அவர் வாழ்ந்த இடங்களான சென்னை மற்றும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டிருந்தன. அவரது நடையில் பேச்சுத்தமிழ் மற்றும் செந்தமிழ் இரண்டும் கலந்திருந்தன. சிக்கலான விஷயங்களைக் கையாளும்போது கூட அவரது எழுத்துக்களில் நையாண்டி இழைந்தோடுவது அவரது சிறப்பு. கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்ற இலக்கிய எதிராளிகளுடன் விவாதம் செய்தபோது கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நூல் விமரிசனங்களில் வசைபாடல்களையும் எழுதியுள்ளார். + +புதுமைப்பித்தனின் தனித்துவ நடைக்கு அவரது கதைலிருந்து சில எடுத்துக்காட்டுகள்: + +புதுமைப்பித்தனின் பிற புனைப்பெயர்கள்: சொ.வி, ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், ஊழியன், கபாலி, சுக்ராச்சாரி மற்றும் இரவல் விசிறிமடிப்பு. புதுமைப்பித்தன் என்ற பெயரே அவருக்குப் பிடித்தமானதாக இருந்தது. அவரது கதைகளின் கவர்ச்சிக்கு அப்பெயர் தான் ஓரளவு காரணம் என்று அவர் கருதினார். தனது கவிதைகளை வேலூர் வே. கந்தசாமிப் பிள்ளை என்ற புனைப்பெயரில் எழுதினார். அவரது படைப்புகளில் தழுவல்கள் உள்ளன என எழுந்த குற்றச்சாட்டால் அவரது புனைப்பெயர்கள் ஆழமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. தொ. மு. சிதம்பர ரகுநாதன் எழுதிய புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறான "புதுமைப்பித்தன் கதைகள்: சில விமரிசனங்களும் சில விஷமங்களும்" என்ற புத்தகத்தில் "நந்தன்" என்ற புனைப்பெயரில் எழுதப்பட்டவை யாவும் தழுவல் படைப்ப���கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. + +மாப்பாசான் என்ற பிரெஞ்சு கதாசிரியரின் படைப்புகளின் தழுவல்களாகப் புதுமைப்பித்தனின் சில கதைகள் அமைந்துள்ளன என்று அவரது சம காலத்து எழுத்தாளர்களான பெ. கோ. சுந்தரராஜன் (சிட்டி) மற்றும் சோ. சிவபாதசுந்தரம் குற்றம் சாட்டியுள்ளனர். இலக்கிய ஆய்வாளர் காரை கிருஷ்ணமூர்த்தியும் பின்னர் இதே கருத்தினைக் கூறினார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தொ. மு. சிதம்பர ரகுநாதன் "சமாதி", "நொண்டி", "பயம்", "கொலைகாரன் கதை", "நல்ல வேலைக்காரன்", "அந்த முட்டாள் வேணு" ஆகிய கதைகள் மாப்பாசான் கதைகளின் தழுவல்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். "பித்துக்குள்ளி" என்ற கதை ராபர்ட் பிரௌனிங் கவிதையொன்றின் தழுவல் எனவும் கூறியுள்ளார். "டாக்டர் சம்பத்", "நானே கொன்றேன்", "யார் குற்றவாளி", "தேக்கங்கன்றுகள்" போன்ற கதைகளும் தழுவல்களாக இருக்கலாம் எனக் கருத்துகள் உள்ளன. "தமிழ் படித்த பொண்டாட்டி" என்ற கதையைப் புதுமைப்பித்தன் தானே வெளியிட்டுள்ளார். அதன் முன்னுரையில் அது மாப்பாசான் கதையின் தழுவல் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். தழுவல்கள் எனக் குற்றச்சாட்டிற்கு உள்ளான பிற கதைகள் அவர் இறந்தபின் பிறரால் வெளியிடப்பட்டுள்ளன. அவரது ஆதரவாளர்கள், அவர் வெளியிட்டிருந்தால் கண்டிப்பாகத் தழுவல் என்பதைக் குறிப்பிட்டிருப்பார் எனக் கூறுகின்றனர். மேலும் அவர் உயிரோடு இருந்த காலகட்டத்தில் மாப்பாசானின் கதைகள் பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அவருக்கோ பிரெஞ்சு மொழி தெரியாது. எனவே அக்கதைகள் எவ்வாறு தழுவல்களாக இருக்க முடியும் எனக் கேள்வி எழுப்புகின்றனர். அவரது தழுவல் கதைகள் அனைத்தும் 1937க்கு முன்னதாக எழுதப்பட்டவை. அவ்வாண்டுதான் அவர் கல்கி கிருஷ்ணமூர்த்தியுடன் பிறமொழி படைப்புகளிலிருந்து தழுவி எழுதுவது குறித்து கடுமையான இலக்கியச் சண்டை நடத்தினார். தழுவல்கள் இலக்கியத் திருட்டுக்குச் சமம் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். + +புதுமைப்பித்தன் சிந்தனை செய்ய வேண்டிய விஷயங்களைப் பற்றி எழுதியுள்ளார், ஆனால் அவற்றுக்கான தீர்வைப் பற்றிக் கூற முயற்சிக்கவே இல்லை என விமர்சிக்கப் படுகிறார். அவரது படைப்புகளில் பிரச்சனைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன; தீர்வுகளை வாசகர்களின் வசம் விட்டுவிடுகிறார். சில சமயங்களில் அவர் கதை நடைபெறும் களத்தையும் கதாபாத்திரங்களின் தன்மையையும் விவரிக்கும் அளவு மையக்கருத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை எனக் குற்றஞ்சாட்டப்படுகிறார். சமீபத்தில் தமிழ் விமர்சகர் அ. மார்க்ஸ் தலித்துகள், மறவர்கள், கிருத்துவர்கள் மற்றும் புலால் உண்பவர்களை புதுமைப்பித்தன் இழிவு படுத்தியுள்ளார் என விமரிசனம் செய்துள்ளார். 2014ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் "துன்பக்கேணி", "பொன்னகரம்" ஆகிய இரு சிறுகதைகளை தனது பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது. பல்கலைக்கழக ஆட்சிக்குழு இக்கதைகள் தலித்துகளை இழிவுபடுத்துகின்றன என்று கருதியதால் அவற்றை நீக்கியது. + + + + + + + + + +விட்டம் + +ஒரு வட்டத்தின் விட்டம் (diameter) என்பது வட்டத்தின் மேல், எதிரெதிரே உள்ள எந்த இரு புள்ளிகளையும் வட்டத்தின் மையப் புள்ளி வழியாக இணைக்கும் கோட்டுத்துண்டு ஆகும். விட்டம் என்பதை வட்டத்தின் மிக நீளமான நாண் எனவும் வரைவிலக்கணம் கூறலாம். ஒரு கோளத்தின் விட்டத்துக்கும் இதே வரைவிலக்கணம் பொருந்தும். விட்டம் என்ற சொல் மேலே வரையறுக்கப்பட்ட நேர்கோட்டின் நீளத்தையும் குறிக்கும். ஒரு வட்டத்தின் அனைத்து விட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்கும். விட்டத்தின் அளவு வட்டத்தின் ஆரத்தின் இரு மடங்கு அளவாக இருக்கும். + +மேற்காட்டிய சமன்பாடுகளில் "d" விட்டத்தையும், "r" ஆரத்தையும் குறிக்கும். + +குவி வடிவங்களின் விட்டமானது அவ்வடிவங்களின் எல்லைக் கோட்டில் எதிரெதிராக அமைந்த இரு புள்ளிகளுக்குத் தொடலியாக உள்ள இணைகோடுகளிடையே அமையக்கூடிய அதிகூடிய தூரம் ஆகும். இவ்வாறு அமையக்கூடிய மிகக் குறைந்த தூரம் அவ்வடிவத்தின் அகலம் ஆகும். இவ்விரண்டையும் ’சுழல் காலிப்பர்ஸ்’ கொண்டு அளக்க முடியும் மாறா அகலங்கொண்ட வளைவரைகளின் அகலமும் விட்டமும் சமமாக இருக்கும். + +மேலே தரப்பட்ட விட்டத்தின் வரையறைகள் வட்டம், கோளம் மற்றும் குவி வடிவங்களுக்கு மட்டுமே பொருந்தும். எனினும் அதிகனசதுரம் அல்லது பரவலாக அமைந்த புள்ளிகளின் கணம் போன்ற "n"-பரிமாண குவி மற்றும் குவிவற்ற வடிவங்களுக்கான விட்டத்தின் வரையறையின் சிறப்பு வகையாக அவ்வரையறைகளைக் கருதலாம். + +ஒரு மெட்ரிக் வெளியின் (metric space) உட்கணத்தின் விட்டம் எ��்பது அந்த உட்கணத்திலுள்ள எந்த இரு புள்ளிகளுக்கும் இடையேயுள்ள தூரங்களின் மேன்மம் (supremum) ஆகும். + +உட்கணம் "A" இன் விட்டம்: + +தொலைவுச் சார்பு d இன் இணையாட்களம் R (அனைத்து மெய்யெண்களின் கணம்) எனக் கொண்டால் வெற்றுக் கணத்தின் () விட்டம் −∞ ஆகும். சில நூலாசிரியர்கள் வெற்றுக் கணத்தினை சிறப்பு வகையாக எடுத்துக்கொண்டு அதன் விட்டத்தைப் பூச்சியம் எனக் கொள்கின்றனர், இதில் தொலைவுச் சார்பின் இணையாட்களம் எதிரிலா மெய்யெண் கணமாக அமையும். + +"n"-பரிமாண யூக்ளிடிய தளத்தில் எந்தவொரு திடப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் விட்டமானது அப்பொருள் அல்லது புள்ளிகளின் கணத்தின் குவி மேற்தளத்தின் (convex hull) விட்டமாகும். + +தள வடிவவியலில் ஒரு கூம்பு வெட்டின் விட்டமானது அக் கூம்பு வெட்டின் மையத்தின் வழிச் செல்லும் நாணாக வரையறுக்கப்படுகிறது. வட்ட விலகல் e = 0 கொண்ட வட்டத்தின் விட்டங்கள் சம நீளமுடையவை; ஏனைய கூம்பு வெட்டுகளின் விட்டங்கள் வெவ்வேறு நீளங்களுடையவையாக அமைகின்றன. + + + + +ஆரம், வடிவியல் + +வடிவவியலில், ஆரம் () அல்லது ஆரை ("radius") என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அளவுடையதாக இருக்கும். + +மாட்டு வண்டியில் இருக்கும் மரத்தால் செய்யப்பட்ட சக்கரத்தில் அதன் மையப்பகுதியாகிய குடத்திலிருந்து சக்கர விளிம்பிலுள்ள வட்டையை தாங்கி நிற்கும்படி நிறுத்தப்பட்டுள்ள கால்-மரத்தை ஆரை என்பர். + +ஆரை பொதுவாக r என்ற எழுத்தால் குறிக்கப்படும். இது விட்டத்தின் (d) அளவில் பாதியாக இருக்கும்.: + +வட்டம் ஒன்றின் சுற்றளவு "C" எனின், அதன் ஆரை பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: + +வட்டம் ஒன்றின் பரப்பளவு "A" எனின், அதன் ஆரை: + +"P", "P", "P" எனும் மூன்று புள்ளிகளூடாகச் செல்லும் வட்டம் ஒன்றின் ஆரை பின்வருமாறு தரப்படும்: + +இங்கு "θ" என்பது கோணம் formula_5 ஆகும். + +இச்சமன்பாடு சைன் விதியைப் பயன்படுத்துகிறது. மூன்று புள்ளிகளும் formula_6, +formula_7, formula_8 ஆகிய ஆள்கூறுகளால் தரப்படின், பின்வரும் சமன்பாட்டைப் பயன்படுத்தலாம்: + +பின்வரும் சமன்பாடுகள் "n" பக்கங்களைக் கொண்ட சீரான பல்��ோணங்களுக்கானது. + +"s" பக்கத்தைக் கொண்ட பல்கோணம் ஒன்றின் ஆரை: + + + + +மீட்டர் + +மீட்டர் ("metre" அல்லது "meter", மீற்றர்) என்பது அனைத்துலக முறை அலகுகளில் நீள அளவின் அடிப்படை அலகு ஆகும். மீட்டரின் ஆங்கிலக் குறியீடு "m" ஆகும். தமிழ்க் குறியீடு மீ என்பதாகும். +இப்படி வரையறுக்கப்படும் ஒரு மீட்டரானது 10000/254 அங்குலங்களுக்குச் சமமாகும் (தோராயமாக 39.37 அங்குலங்கள்) + +துவக்கத்தில் புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து வட துருவம் (கடல் மட்டத்தில்) வரையிலான தொலைவில் ஒன்றில் ஒரு கோடி பங்காக வரையறுக்கப்பட்டது. அளவியல் குறித்த அறிவு மேம்பட்டதை அடுத்து இது படிப்படியாக மாற்றப்பட்டுக் கொண்டு வந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் மீட்டர் என்னும் நீளத்தைத் கீழ்க்காணுமாறு துல்லியமாக வரையறுக்கிறார்கள்: வெற்றிடத்தில் ஒளியானது நொடியில் "கடக்கும் தொலைவு" ஒரு மீட்டர். + +நீளத்தை அளக்க பத்தின் அடிப்படையிலான பதின்ம முறை (decimal system) ஒன்று உலகம் தழுவிய முறையாக இருக்கவேண்டும் என்று முதல் முதல் 1668 ஆம் ஆண்டு சான் வில்க்கின்சு (John Wilkins) என்னும் ஆங்கிலேய மெய்யியலாளர் தன் முன்மொழிவைப் பதிவு செய்தார். 1675 ஆம் ஆண்டு டிட்டோ லிவியோ புராட்டினி (Tito Livio Burattini) என்னும் இத்தாலிய அறிவியலாளர், தன்னுடைய மிசுரா யுனிவெர்சாலே ("Misura Universale" "பொது அளவீடு") என்னும் உரையில் மீட்ரோ கட்டோலிக்கோ ("metro cattolico") என்னும் சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார்; இச்சொல் கிரேக்க மொழிச்சொல்லாகிய மெட்ரோன் கத்தோலிக்கோன் (καθολικόν}} ("métron katholikón") என்னும் சொல்லில் இருந்து பெற்றது. இதனைப் பிரான்சிய மொழியில் மெட்ரே ("mètre") என்று அழைக்கின்றார்கள். பிரான்சிய மொழியில் இருந்து 1797 ஆண்டு முதல் ஆங்கிலத்திலும் இது எடுத்தாளப்பட்டு வருகின்றது. பிரித்தானிய ஆங்கிலேயர்கள் metre என்றும், அமெரிக்கர்கள் meter என்றும் எழுத்துக்கூட்டல்கள் கொண்டு பயன்படுத்துகின்றனர். இலங்கையில் "மீற்றர்" என்று பயன்படுத்துகின்றனர். +பிரெஞ்சுப் புரட்சியின்போது பிரெஞ்சு அறிவியல் அகாதமியால் அனைத்து அலகுகளுக்கும் ஒரே ஒப்பளவை தீர்மானிக்க ஒருங்கிணைக்கப்பட்ட குழு, பதின்ம அமைப்பில் அமைய வேண்டும் என்ற பரந்துரையை அக்டோபர் 27, 1790இலும் நீளத்திற்கான அடிப்படை அலகாக வட துருவத்திற்கும் நிலநடுக் கோட்டிற்கும் இடையேயான தொலைவில் கோ���ியில் ஒரு பங்காகவும் அது 'அலகு' (பிரெஞ்சு மொழியில் "mètre")என் பெயரிட்டு மார்ச் 19, 1791இலும் பரிந்துரைத்தது. இதனை 1793இல் கூடிய தேசிய மாநாடு ஏற்றுக் கொண்டது. + +1870களில் ஏற்பட்ட துல்லிய தொழில்நுட்பங்களின் பின்னணியில் புதிய மீட்டர் சீர்தரத்தை நிலைநிறுத்த பல பன்னாட்டு மாநாடுகள் நடத்தப்பட்டன. 1875இல் நடந்த மீட்டர் மாநாட்டில் ("Convention du Mètre") பாரிசின் தென்மேற்குப் புறநகர்ப் பகுதியான செவ்ரெயில் நிரந்தரமாக பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையம் (BIPM: "Bureau International des Poids et Mesures") அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீட்டர் மற்றும் கிலோகிராமிற்கான சீர்தரங்களின் முன்மாதிரிகள் கட்டமைக்கப்படும்போது அவற்றை பாதுகாப்பதுடன் தேசிய அளவிலான சீர்தர முன்மாதிரிகளை வழங்கவும் அவற்றிற்கும் மெட்ரிக் அல்லாத அளவை சீர்தரங்களுக்கிடையான ஒப்பளவுகளை பராமரிக்கவும் இந்த புதிய அமைப்பு நிறுவப்பட்டது. இதன்படி 1889இல் எடைகள் மற்றும் அளவைகளுக்கான முதல் பொது மாநாட்டில் இந்த அமைப்பு புதிய முன்மாதிரி மீட்டர் துண்டை வெளிப்படுத்தியது. தொன்னூறு விழுக்காடு பிளாட்டினமும் பத்து விழுக்காடு இரிடியமும் கொண்ட கலப்புலோக சீர்தர துண்டின் இரு கோடுகளுக்கு இடையே பனிக்கட்டியின் உருகுநிலையில் அளக்கப்பட்ட தொலைவு "பன்னாட்டு முன்மாதிரி மீட்டர்" எனப்பட்டது. + +1889ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையிலேயே இன்றும் பன்னாட்டு எடைகள் மற்றும் அளவைகள் ஆணையத்தில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட முன்மாதிரித் துண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. சீர்தர மீட்டர் துண்டு அளவைகள் குறித்தும் இதனைக் கொண்டு அளப்பதால் ஏற்படும் பிழைகள் குறித்தும் தேசிய சீர்தரங்கள் மற்றும் தொழில்நுட்ப கழகத்தின் (NIST) ஆவணங்களில் காணலாம். + +1893இல், முதன்முதலாக ஓர் சீர்தர மீட்டர் அளவை ஆல்பர்ட் ஏ. மைக்கல்சன் ஓர் குறுக்கீட்டுமானி மூலம் அளந்தார். இந்தக் கருவியை உருவாக்கிய மைக்கல்சன் ஒளியின் ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தை நீளத்தின் சீர்தரமாகக் கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்தவராவார். 1925 வாக்கில் பிஐபிஎம்மில் குறுக்கீட்டுமானம் மூலம் அளப்பது வழமையாயிற்று. இருப்பினும் பன்னாட்டு முன்மாதிரி மீட்டர் 1960 வரை சீர்தரமாக இருந்தது. அந்த ஆண்டு நடைபெற்ற பதினோராவது மாநாடு புதிய அனைத்துலக முறை அலகுகள் (SI) முறையில் வெற்றிடத்தில் கிருப்டான்-86 அணுவின் மின்காந்த நிழற்பட்டையில் ஆரஞ்சு-சிவப்பு உமிழ்கோட்டின் 1,650,763.73 அலைநீளங்களை ஒரு மீட்டராக வரையறுத்தது. + +உறுதியின்மையை குறைக்கும் நோக்குடன் 1983இல் கூடிய அளவைகள் மாநாடு மீட்டரின் வரையறையை மாற்றி ஒளியின் வேகத்தையும் நொடியையும் கொண்டு தற்போதுள்ள வரையறை அறிமுகப்படுத்தியது : + +இந்த வரையறை வெற்றிடத்தில் ஒளியின் வேகத்தை சரியாக நொடிக்கு 299,792,458 மீட்டர்களாக நிலைநிறுத்தி உள்ளது. இந்த வரையறுப்பின் மற்றொரு துணைப்பகுதியாக அறிவியல் அறிஞர்கள் தங்கள் சீரொளிகளை துல்லியமாக அலையதிர்வுகள் மூலம், அலைநீளங்களின் நேரடி ஒப்பிடுதல்களை விட ஐந்தில் ஒருபங்கு குறைவான உறுதியின்மையுடன், ஒப்பிட முடிகிறது. ஆய்வகங்களிடையே ஒரே முடிவுகளைப் பெறுவதை உறுதி செய்யும் வண்ணம் இந்த மாநாட்டில் ஐயோடினால்-நிலைநிறுத்தப்பட்ட ஈலியம்–நியான் சீரோளி மீட்டரை உருவாக்க "பரிந்துரைக்கப்பட்ட கதிர்வீச்சாக" அறிவிக்கப்பட்டது. மீட்டரை வரையறுக்க பிஐபிஎம் தற்போது ஈலிநியான் சீரொளி அலைநீளத்தை பின்வருமாறு கணக்கிடுகிறது: மதிப்பிடப்பட்ட சார்பு சீர்தர உறுதியின்மை ("U") of உடன் . இந்த உறுதியின்மை ஆய்வகங்களில் மீட்டரை நிலைநிறுத்துவதில் ஓர் தடையாக உள்ளது. அணுக் கடிகாரத்திலிருந்து பெறப்படும் நொடி அளவில் இருக்கும் உறுதியின்மையை விட பலமடங்கு கூடுதலான உறுதியின்மையுடன் உள்ளது. இதனால், ஆய்வகங்களில் மீட்டர் ஈலிநியான் சீரொளியின் அலைநீளங்களாக ஏற்றுக் கொள்ளபடுகிறது (வரையறுக்கப்படுவதில்லை). இதில் அலை அதிர்வைக் கண்டறிவதில் உள்ள பிழையே உள்ளது. + +மீட்டரின் ஒன்றுக்கும் கீழான பதின்ம முறை அளவுகளும் (பதின்ம கீழ்வாய் அலகுகள்), ஒன்றைவிட மேலான பதின்ம முறை அலகுகளும் (பதின்ம மேல்வாய் அலகுகள்) சீரான SI முன்னொட்டுச் சொற்கள் கொண்டு குறிக்கப்பெறுகின்றன. அவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் காணலாம். + +இந்த அட்டவணையில் , "அங்" மற்றும் "யார்" முறையே "பன்னாட்டு அங்குலத்தையும்" "பன்னாட்டு யாரையும்" குறிக்கின்றன + +ஒரு மீட்டர் மிகச்சரியாக அங்குலத்திற்கும் யார்டுகளுக்கும் சமன். +ஒன்றிலிருந்து மற்றது பெற மூன்று "3" கொண்டு எளிய நினைவி ஒன்றுள்ளது. + + + + + +கோணம் + +ஒரே புள்ளியில் இருந்து கிளம்பும் இரண்டு கதிர்கள் உருவாக்கும் வடிவம் கோணம் ("Angle") எனப்படுகிறது. வெட்டிக்கொள்ளும் இரண்டு கோடுகளின் சாய்வுகளின் வித்தியாசம் காண கோணம் உதவுகிறது. கோணங்களை அளக்கும் அலகுகளுள் பாகை ஒரு வகையாகும். இதன் குறியீடு °. + +ஒரு தளத்திலமைந்த இரு கதிர்களால் கோணம் உருவாகிறது. இத்தளம் யூக்ளிடிய தளமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. யூக்ளிடிய வெளியிலும், பிற வெளிகளிலும் இரு தளங்கள் வெட்டிக் கொள்வதால் கோணங்கள் உருவாகின்றன. இக்கோணங்கள் இருமுகக் கோணங்கள் (dihedral angles) எனப்படுகின்றன. தளத்திலமைந்த இரு வளைகோடுகளுக்கு இடையே உருவாகும் கோணம், அவை வெட்டிக்கொள்ளும் புள்ளிகளில் அவ்வளைகோடுகளுக்கு வரையப்படும் தொடுகோடுகளுக்கு இடைப்பட்ட கோணமாகும். இதேபோல, ஒரு கோளத்தின் இரு பெரு வட்டங்களுக்கு இடையே உருவாகும் கோளக் கோணமானது அவ்விரு பெருவட்டங்களால் தீர்மானமாகும் தளங்களுக்கு இடைப்பட்ட இருமுகக் கோணம் ஆகும். + +பொதுவாக கோணங்களின் அளவைக் குறிக்கும் மாறிகளைக் குறிப்பதற்கு கிரேக்க எழுத்துக்கள் +(α, β, γ, θ, φ, ...) பயன்படுத்தப்படுகின்றன. ஆங்கில எழுத்துக்களாலும் கோணங்கள் குறிக்கப்படுகின்றன. + +வடிவவியல் வடிவங்களில் கோணங்களை வரையறுக்கும் மூன்று புள்ளிகளோடு இணைக்கப்படும் குறியீடுகளாலும் அறியப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, AB , AC கதிர்களால் உருவாகும் கோணத்தின் குறியீடு: ∠BAC அல்லது formula_1 சில சமயங்களில், கோணத்தின் முனையை மட்டும் குறிப்பிடும் ஒற்றை எழுத்தால் மட்டும் (∠A) குறிக்கப்படுகிறது. + +செங்கோணம், குறுங்கோணம், விரிகோணம், நேர்கோணம், சாய்வுக் கோணம், பின்வளைகோணம் ஆகியன சில கோணவகைகளாகும். +ஒரே புள்ளியில் ஆரம்பிக்கும் இரு கதிர்களுக்கு இடைப்பட்ட தூரம் 0 பாகை எனில் அக்கோணம் பூஜ்ஜிய கோணம் எனப்படும். + +90 பாகை அளவுள்ள கோணம், செங்கோணம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது அவற்றுக்கு இடைப்பட்ட கோணம் சரியாக 90 பாகையாக இருந்தால் அது "செங்கோணம்" எனப்படும். + +இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது "குறுங்கோணம்" ஆகும். + +எடுத்துக்காட்டு : 15°, 30°,60°,75° கோணங்கள் + +இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது 90 பாகைக்கு அதிகமாகவும் 180 பாகைக்கும் குறைவாக இருந்தால் அது "விரிகோணம்" ஆகும். + +x° = விரிகோணம் எனில்: + +இரு நேர்கோடுகள் ஒன்றோடு ஒன்று முட்டும்போது சரியாக 180 பாகையாக இருந்தால் அது "நேர் கோணம்". ஒரு கோணத்தின் கதிர்கள் , எதிர்க்கதிர்களாக உருவாகும்போது நேர்கோடு உருவாகிறது . + +180° க்கும் 360° க்கும் இடைப்பட்ட அளவுகளைக் கொண்ட கோணம் "பின்வளை கோணம்" ("reflex angles") அல்லது "மடக்கு கோணம்" ஆகும். + +360° அல்லது 2"π" ரேடியன் அளவுள்ள கோணம் "முழுக் கோணம். + +90° ஆகவும் 90° இன் மடங்காகவும் இல்லாத கோணங்கள் "சாய்வுக் கோணங்கள்". + +இரண்டுகோணங்களின் கூடுதல் 90 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்கள் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் நிரப்பு கோணம் ஆகும் . + +30° இன் நிரப்புக்கோணம் 60° ஆகும் . மற்றும் 60° இன் நிரப்புக்கோணம் 30° + +இரண்டுகோணங்களின் கூடுதல் 180 என்றால் அந்த இரண்டு கோணங்களும் நிரப்புக்கோணங்களும் மிகை நிரப்புக்கோணம் ஆகும் . ஒவ்வொரு கோணமும் மற்றோரு கோணத்தின் மிகை நிரப்பு கோணம் ஆகும் . + +120° இன் மிகை நிரப்பு கோணம் 60°, 60° இன் மிகை நிரப்பு கோணம் 120 + +கோணங்களின் பெயர்கள், இடைவெளிகள், அலகுகள் கீழே அட்டவணப்படுத்தப் பட்டுள்ளன: + + +இரு கோடுகள் ஒரு புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது நான்கு கோணங்கள் உருவாகின்றன. இவை ஒன்றுக்கொன்று அமைந்திருக்கும் விதத்தைக் கொண்டு எதிர் கோணங்கள், அடுத்துள்ள கோணங்கள் எனச் சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன. + +ஒன்றுக்கொன்று எதிராக அமையும் ("X"-வடிவிலமையும்) கோணச் சோடிகள், குத்துநிலை கோணங்கள், எதிர் கோணங்கள், குத்தெதிர் கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. + +ஒரு வரலாற்றுக் குறிப்பின்படி, தேலேசு எகிப்திற்குச் சென்றபோது, இரு வெட்டிக்கொள்ளும் கோடுகளை வரைந்தபோதெல்லாம் அவற்றின் எதிர் கோணங்களை அளந்து அவை சமமாய் இருப்பதை எகிப்தியர்கள் உறுதி செய்துகொண்டதைக் கண்டார். அதனால், நேர்க்கோணங்கள் எல்லாம் சமமானவை என்பதாலும், சமமானவற்றோடு சமமானவற்றைக் கூட்டுவதலோ கழிப்பதலோ கிடைக்கக்கூடியவையும் சமமானவையாகவே இருக்கும் என்ற பொதுக் கருத்தின்படியும், அனைத்து எதிர் கோணங்களும் சமம் எனத் தேலேசு நிறுவினார் என அறியப்படுகிறது. + +மேலுள்ள படத்தில் கோணம் "A" = "x" எனக் கொள்ளலாம். +இரு அடுத்துள்ள கோணங்கள் ஒரு நேர்கோட்டை அமைப்பதால் அவை மிகைநிரப்பு கோணங்கள். +கோணங்கள் "A" , "C" இரண்டும் அடுத்துள்ள கோணங்களாக இருப்பதால், +இதேபோல "A" , "D" இர��்டும் அடுத்துள்ள கோணங்கள் என்பதால். +இதேமுறையில் எதிர் கோணங்கள் "A" , "B" இரண்டும் சர்வசமம் என நிறுவலாம் + + +ஒரே உச்சியையும் ஒரு பொதுப் பக்கத்தையும் கொண்ட கோணங்கள் அடுத்துள்ள கோணங்கள் ஆகும். அடுத்துள்ள கோணங்களுக்கு வேறு உட்புள்ளிகள் எதுவும் பொதுவாக இருக்காது. அதாவது அடுத்துள்ள கோணங்கள் அடுத்தடுத்து ஒரு பொதுக்கரத்துடன் இருக்கும். + +இரு கோடுகளை (பொதுவாக இணை கோடுகள் ஒரு குறுக்கு வெட்டி வெட்டும்போது, உருவாகும் கோணங்கள் "உட்கோணங்கள்", "வெளிக்கோணங்கள்", "ஒத்த கோணங்கள்", "ஒன்றுவிட்ட உட்கோணங்கள்" என வகைப்படுத்தப்படுகின்றன. + +பொதுவாக ஒரு கோணத்தின் அளவு, அக்கோணத்தின் ஒரு கரத்தை மற்றொன்றுடன் பொருந்தச் செய்யத் தேவையான சுழற்சியின் அளவாகக் கொள்ளப்படுகிறது. சமவளவு கொண்ட கோணங்கள் சமகோணங்கள், சர்வசம கோணங்கள் அல்லது சமவளவுள்ள கோணங்கள் என அழைக்கப்படுகின்றன. கோணங்களின் முக்கிய அலகுகள் பாகைகள், ரேடியன்கள், சுற்று இன்னும் சில ஆகும். + +1. பாகை +பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும். +பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல. + +2.ரேடியன் +ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூறுவர். ஒரு வட்டத்தின் வளைவு வெட்டின் (வில்லின்) நீளம் அவ் வட்டத்தின் ஆரத்திற்கு (ஆரைக்கு) சமம் என்றால் அவ் வளைவு வெட்டானது (வில்லானது) வட்டத்தின் நடுவே வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் ஆகும். +வட்டத்தின் ஒரு சுற்றின் மொத்தக் கோணத்தின் அளவு இந்த 2π ஆரையம் (ரேடியன்) (கிட்டத்தட்ட 6.28318531 ஆரையம்). ஆரையத்தின் ஆங்கிலச் சொல்லாகிய ரேடியன் என்னும் அலகை rad எனக் குறிப்பர். தமிழில் ஆரையம் அல்லது ரேடி எனக் குறிக்கப்படும். பாகைக் கணக்கில் ஓர் ஆரையம் என்பது அல்லது 57.2958 பாகை ஆகும + +1.கோணமானி (Angle Dekker) + +'கோணமானியானது தானிணை ஒளிமானியின் அடிப்படையில் செய்யப்பட்டது ஆகும். இதில், இணை ஆடியின் குவிமையத்தில், ஒர��� குறுக்குக் கம்பிக்கு பதிலாக, ஒரு அளவுகோல் பதியப்பட்டிருக்கும். இது ஒளிக் கதிரோடு சென்று எதிரொளிக்கும் பரப்பின் மேல் பட்டு, விழியாடியின் பார்வை தளத்தில் வைக்கப்பட்டுள்ள இன்னொரு அளவு கோலின் மேல் செங்குத்தாக விழும். இந்த இரண்டு அளவு கோல்களும் எவ்வாறு இணைகின்றன என்பதைப் பொறுத்து, கோணத்தை அளக்கபயன்படுகிறது'. + +2. சரிவு கோண அளவிகள் (Bevel Protractors) + +கோணத்தை வரைவதற்கும், அளப்பதற்கும் அரைவட்ட அல்லது முழுவட்ட கோண அளவிகளைப் பயன்படுத்துவோம் . ஒரு முழு வட்ட கோண அளவியின் மையத்தில் சுற்றும் வகையில் ஒரு வட்டத் தட்டைப் பொருத்தி, அதில் ஒரு வெர்னியர் அளவுகோலை அமைத்துவிட்டால், இந்த வட்டத்தட்டு, எவ்வளவு கோணத்துக்கு சுற்றுகிறது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடலாம்.சரிவு கோணஅளவியின் அடிப்பாகத்தில் ஒரு சட்டத்தை நிலையாகப் பொருத்திவிட்டு, சுற்றும் வட்டத் தட்டில் ஒரு நீண்ட சட்டத்தை பொருத்திவிட்டால், இச்சட்டம் சுற்றும் போது அதற்கும் அடிச்சட்டத்துக்கும் இடையில் உள்ள கோணத்தை எளிதாக அளந்து விடலாம். இதன் அடிப்படையில் அமைக்கப்பட்டதே சரிவு கோண அளவிகள் ஆகும். + +3. சாய்வுமானி (Clino meter) + +சாய்வாக இருக்கும் கோணத்தை துல்லியமாக அளக்க கோணஅளவியோ, சாராய மட்டமோ பயன்படாது. ஏனென்றால் கோணஅளவிக்கு கோணத்தை அளக்கும் இரண்டு பரப்புகள் தேவை. சாராய மட்டமோ குறைவான கோணத்தையே அளக்கவல்லது. இக்குறையை போக்க கோணமானியையும், சாராய மட்டத்தையும் இணைத்து ஒரு புதிய கருவி உருவாக்கப்பட்டது. இதற்கு பெயர் தான் சாய்வுமானி ஆகும். + +4. கோண கடிகைகள் (Angle gauges) + +கோண அளவுக்கு ஏற்ப நிலையாக இருப்பது தான் கோண கடிகைகள் ஆகும்.இவை செவ்வக வடிவத்தில், பல கோண அளவுகளில் செய்யப்பட்ட கலப்பு எஃகினால் ஆனது ஆகும். இதன் அளக்கும் பரப்பு வழவழப்பாக, ஒன்றன் மேல் ஒன்றை வைத்து நகர்த்தினால், பற்றிக் கொள்ளும் வகையில் இருக்கும். + +கோணத்தின் வரையறையில் எதிர்கோணக் கருத்துரு இல்லையென்றாலும், திசைப்போக்கு, எதிர் திசை சுழற்சியைக் குறிப்பதற்கு நேர், எதிர் கோண கருத்துரு உதவியாய் அமையும். + +இருபரிமாண கார்ட்டீசிய ஆள்கூற்று முறைமையில், ஆதிப்புள்ளியை உச்சியாகவும், நேர் x-அச்சைத் தொடக்கப் பக்கமாவும் கொண்டு கோணம் வரையறுக்கப்படுகிறது. தொடக்கப் பக்கத்திலிருந்து பாகை, ரேடியன் அல்லது ��ுற்றில் அளக்கப்படும் கோண அளவைக் கொண்டு முடிவுப்பக்கம் அமைகிறது. நேர் x-அச்சிலிருந்து நேர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி நேர் கோணங்கள்; நேர் x-அச்சிலிருந்து எதிர் y-அச்சை நோக்கி நிகழும் சுழற்சி எதிர் கோணங்கள்; கார்டிசியன் ஆள்கூறுகளின் திட்ட வடிவில் (x-அச்சு வலப்புறமும் y-அச்சு மேற்புறமாகவும் அமைதல்) நேர் சுழற்சியானது எதிர்க் கடிகாரத்திசையாகவும், எதிர் சுழற்சியானது கடிகாரத்திசையாகவும் இருக்கும். + +பல இடங்களில் −"θ" கோணம் என்பது, ஒரு முழுச் சுற்றுக் கோணத்திலிருந்து "θ" கோணவளவைக் கழித்தபின் கிடைக்கும் கோணத்திற்குச் சமானமானது. எடுத்துக்காட்டாக,  −45° என்பது or 315° க்குச் (360° − 45°) சமானம். எனினும்  −45° சுழற்சியும் 315° சுழற்சியும் ஒன்றாகாது. + +முப்பரிமாணத்தில் கடிகாரத் திசை, எதிர் கடிகாரத் திசை என்பதற்குப் பொருளில்லை. எனவே நேர் கோணம், எதிர் கோணங்களின் திசையை வரையறுப்பதற்கு, கோணத்தின் உச்சிவழியாக, கோணத்தின் பக்கங்கள் அமையும் தளத்திற்குச் செங்குத்தான திசையன் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. + + + + + +புள்ளி + +புள்ளி (Point) என்பது கனஅளவு, பரப்பளவு மற்றும் நீளமற்று, இருப்பிடம் (Location) மட்டுமே கொண்டு ஒரு வெளியில் வரையறுக்கப்பட்ட வடிவவியல் கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு இயற்பியல், திசையன் வரைகலை (Vector graphics) ஆகியவற்றில் பயன்படுகிறது. கணிதத்தில் எந்த ஒரு வடிவமோ, வெளியோ புள்ளிகளால் ஆனதாகக் கருதப்படுகிறது. நவீன கணிதத்தில் வெளி என்ற கணத்தின் ஒரு உறுப்பாகப் புள்ளி கருதப்படுகிறது. குறிப்பாக யூக்ளிடிய வடிவவியலில் புள்ளியை அடிப்படைக் கருத்துருவாகக் கொண்டு பிற வடிவவியல் கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. அடிப்படைக் கருத்துருவானதால் புள்ளியை ஏற்கனவே வரையறுக்கப்பட்டவற்றைக் கொண்டு வரையறுக்க முடியாது. எனவே, அதன் பண்புகளை அடிக்கோள்களாக வரையறுப்பதன் மூலம் புள்ளியானது வரையறுக்கப்படுகிறது. + +யூக்ளிடிய வடிவவியலில் மிக முக்கியமான அடிப்படை வடிவவியல் பொருட்களில் ஒன்றாக புள்ளி கருதப்படுகிறது. யூக்ளிடின் புள்ளிக்கான வரையறையானது அதனை "எதுவும் இல்லாத ஒன்று" ("that which has no part") என்கிறது. இருபரிமாண யூக்ளிடிய வெளியில் ஒரு புள்ளி, இரு எண்களைக் கொண்ட வரிசைச் சோடியால் ("x", "y") குறிக்கப்படுகிறது. முதல் எண் "x" கிடைமட்டத்தையும், இரண்டாவது எண் "y" செங்குத்துமட்டத்தையும் குறிக்கின்றன. + +முப்பரிமாண யூக்ளிடிய வெளியில் இதே கருத்து பொதுமைப்படுத்தப்படுகிறது. முப்பரிமாண வெளியிலமைந்த புள்ளி, மூன்று எண்களைக் கொண்ட வரிசைப்படுத்தப்பட்ட மும்மையால் ("x", "y", "z") குறிக்கப்படுகிறது. "n" பரிமாண வெளியில் அமையும் புள்ளி, "n" வரிசைப்படுத்தப்பட்ட உறுப்புகளைக் கொண்ட ("a", "a", … , "a") எனக் குறிக்கப்படுகிறது. + + + + + + +பரப்பளவு + +கணிதத்தில் பரப்பளவு அல்லது "பரப்பு" ("Area") என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு தளத்தில் எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஒரு அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியைக் குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின் பரப்பைக் கருதலாம். ஒரு-பரிமாணத்தில் ஒரு வளைகோட்டின் நீளம் மற்றும் முப்பரிமாணத்தில் ஒரு திண்மப்பொருளின் கனஅளவு ஆகிய கருத்துருக்களுக்கு ஒத்த கருத்துருவாக இருபரிமாணத்தில் பரப்பளவைக் கொள்ளலாம். + +ஒரு வடிவத்தின் பரப்பளவை நிலைத்த பரப்பளவு கொண்ட சதுரங்களின் பரப்பளவுகளுடன் ஒப்பிடுவதன் மூலம் காணலாம். அனைத்துலக முறை அலகுகளில் பரப்பளவின் "திட்ட அலகு" (SI) சதுர மீட்டர் (மீ) ஆகும். ஒரு சதுர மீட்டர் என்பது ஒரு மீட்டர் பக்க அளவுள்ள ஒரு சதுரத்தின் பரப்பினைக் குறிக்கிறது. மூன்று சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதொரு வடிவத்தின் பரப்பளவு, ஒரு மீட்டர் பக்க நீளம் கொண்ட மூன்று சதுரங்களின் பரப்பளவுகளுக்குச் சமம். கணிதத்தில் ஓரலகு சதுரம் என்பது ஓரலகு பரப்பளவு கொண்ட சதுரமாக வரையறுக்கப்படுகிறது. எந்தவொரு வடிவத்தின் பரப்பளவும் ஒரு மெய்யெண்ணாகும். + +முக்கோணங்கள், செவ்வகங்கள் மற்றும் வட்டங்கள் போன்ற எளிய வடிவங்களின் பரப்பளவு காணும் வாய்ப்பாடுகள் பல உள்ளன. பலகோணத்தை முக்கோணங்களாகப் பிரித்து, முக்கோணத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாட்டினைப் பயன்படுத்தி பலகோணத்தின் பரப்பினைக் காண முடியும். நுண்கணிதம் மூலம், வளைந்த வரம்பு கொண்ட வடிவங்களின் பரப்பு காணலாம். தள வடிவங்களின் பரப்பு காணும் நோக்கம் நுண்கணிதம் வளர வழிவகுத்துள்ளது. + +கோளம், கூம்பு, அல்லது உருளை போன்ற திண்மப் பொருள்களின் வரம்பாக அமையும் மேற்தளங்களின் பரப்பளவு அவற்ற��ன் மேற்பரப்பளவென அழைக்கப்படும். பண்டைய கிரேக்க கணிதவியலாளர்கள் எளிய வடிவங்களின் மேற்பரப்பு காணும் வாய்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். எனினும் சிக்கலான வடிவங்களின் மேற்பரப்பு காண பலமாறி நுண்கணிதம் தேவைப்படுகிறது. + +தற்கால கணிதத்தில் பரப்பளவு முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவவியல் மற்றும் நுண்கணிதம் இரண்டிலும் பரப்பளவின் முக்கியத்துவமுடையதாய் உள்ளது. நேரியல் இயற்கணிதத்தில் அணிக்கோவையின் வரையறை பரப்பளவுவின் தொடர்புடையதாய் அமைகிறது. வகையீட்டு வடிவவியலில் பரப்பளவு ஒரு அடிப்படைப் பண்பாக உள்ளது. பொதுவாக உயர்கணிதத்தில், இருபரிமாணப்பகுதிகளின் கனஅளவின் சிறப்புவகையாகப் பரப்பளவு எடுத்துக்கொள்ளப்படுகிறது. + +நீளத்தின் ஒவ்வொரு அலகிற்கும் ஒரு பரப்பளவு அலகு உள்ளது. எடுத்துக்கொள்ளப்பட்ட நீளத்தைப் பக்க அளவாகக் கொண்ட சதுரத்தின் பரப்பாக அந்தப் பரப்பளவு அலகு அமையும். எனவே பரப்பளவின் அலகுகள் சதுர மீட்டர் (மீ), சதுர செண்டிமீட்டர் (செமீ), சதுர மில்லிமீட்டர் (மிமீ), சதுர கிலோமீட்டர் (கிமீ), சதுர அடி (அடி), சதுர கெஜம் (கெஜம்), சதுர மைல் (மைல்), என்றவாறு அமைகின்றன. நீள அலகுகளின் வர்க்கங்களாகப் பரப்பளவின் அலகுகள் உள்ளன. + +பரப்பளவின் திட்ட அலகு (SI unit) சதுர மீட்டராகும். + +பரப்பளவின் இரு அலகுகளுக்கிடையேயான மாற்றம் அவற்றின் ஒத்த நீள அலகுகளின் மாற்றத்தின் வர்க்கமாகும். + +எடுத்துக்காட்டுகள்: + + +மேலும் + + +மெட்ரிக் முறையில் பரப்பளவின் மூல அலகு ஏர் (are) ஆகும். + + +தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. + +நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும். + + +பரப்பளவு வாய்ப்பாடுகளிலேயே அடிப்படையானது ஒரு செவ்வகத்தின் பரப்பளவு காணும் வாய்ப்பாடாகும். ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் , எனில் அச்செவ்வகத்தின் பரப்பளவு வாய்ப்பாடு: + +இதன் சிறப்பு வகையாகச் சதுரத்தின் பரப்பளவு வாய்ப்பாட்டைக் கொள்ளலாம். செவ்வகம் போல அல்லாது சதுரத்தில் நீளம் மற்றும் அகலம் இரண்டுமே சமமாக அமைவதால் ஒரு சதுரத்தின் பக்க நீளம் எனில் அதன் பரப்பளவு காணும் வாய்ப்பாடு: + +பெரும்பாலான பிற பரப்பு வாய்ப்பாடுகள் வெட்டு முறையில் காணப்படுகிறது. இம்முற���யில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடிவம் சிறு சிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகிறது. இச்சிறுதுண்டுகளின் பரப்புகளின் கூடுதல் மூல வடிவின் பரப்பளவிற்குக் கூடுதலாக இருக்க வேண்டும். + +எடுத்துக்காட்டு: + + +இதே இணைகரத்தை மூலைவிட்டத்தின் வழியாக இரு சர்வசம முக்கோணங்களாகப் பிரிக்கலாம். இவை ஒவ்வொன்றின் பரப்பளவும் இணைகரத்தின் பரப்பளவில் சரி பாதியாக இருக்கும். எனவே முக்கோணத்தின் பரப்பு: + +இந்த வெட்டு முறையில் சரிவகம், சாய்சதுரம் மற்றும் பல பலகோணங்களின் பரப்பளவைக் காண முடியும். + +படத்தில் உள்ளதுபோல எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வட்டத்தைச் சிறிய வட்டக்கோணத்துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வட்டக்கோணத்துண்டும் தோராயமாக ஒரு முக்கோணம்போல அமையும். இத்துண்டுகளை வரிசையாக அடுத்தடுத்து ஒட்டினாற்போலக் கிடைமட்டமாக அடுக்கினால் தோராயமாக ஒரு இணைகரம் உருவாகிறது. இந்த இணைகரத்தின் உயரம் வட்டத்தின் ஆரமாகவும் () மற்றும் இணைகரத்தின் அகலம் வட்டத்தின் சுற்றளவில் பாதியாகவும் () இருக்கும். + +எனவே இணைகரத்தின் பரப்பளவு: + +இங்கு இணைகரம் மற்றும் வட்டம் இரண்டின் பரப்பளவும் சமம் என்பதால் வட்டத்தின் பரப்பளவு: + +இம்முறையில் வெட்டப்படும் வட்டக்கோணப்பகுதிகளின் எண்ணிக்கையை மேலும் மேலும் அதிகரித்து வட்டத்தின் பரப்பளவில் ஏற்படக்கூடிய தோராயப்பிழையைக் குறைத்து விடலாம். + +வட்டத்தின் பரப்பை வரையறுத்தத் தொகையீடாகவும் காணலாம்: + +ஒரு வடிவத்தின் மேற்பரப்பினை வெட்டி அதனைத் தட்டையாக்குவதன் மூலம் அவ்வடிவத்தின் மேற்பரப்பளவைக் கணக்கிடலாம். + +எடுத்துக்காட்டு: + + +வட்டக்கோணப்பகுதியின் பரப்பளவுக்குச் சமமாக அமையும் கூம்பின் மேற்பரப்பளவு: + +ஆனால் ஒரு கோளத்தைத் தட்டையாக்குவது எளிதில் முடியாதது. ஒரு கோளத்தின் மேற்பரப்பளவின் வாய்ப்பாடு முதல்முறையாக ஆர்க்கிமிடீசால் கண்டுபிடிக்கப்பட்டது. "கோளம் மற்றும் உருளைபற்றி" (On the Sphere and Cylinder) என்ற அவரது படைப்பில் கோளத்தின் மேற்பரப்பளவிற்கான வாய்ப்பாடு காணப்படுகிறது. + +வாய்ப்பாடு: + +இங்கு , கோளத்தின் ஆரம். + +ஒழுங்கற்ற பலகோணங்களின் பரப்பளவை "நில ஆய்வாளரின் வாய்ப்பாட்டின்" மூலம் காணலாம். + + + + + + + +2003 + +2003 ஆம் ஆண்டு (MMIII) கிரிகோரியன் நாட்காட்டியின் படி புதன் கிழமையி��் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இது கிபி 2003ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்பட்டது. இது மூன்றாம் ஆயிரவாண்டின் 3ஆம் ஆண்டும், 21ஆம் நூற்றாண்டின் 3ஆம் ஆண்டும், 2000களின் 4ம் ஆண்டும் ஆகும். + +இவ்வாண்டு அனைத்துலக நன்னீர் ஆண்டாக அறிவிக்கப்பட்டது. + + + + + + + + +பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் + +பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. + +தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் என்கிற சகோதரரும் வேதாம்பாள் என்கிற சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் திராவிட இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவாம்பாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார். + +பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார். + +இளம் பிராயத்திலேயே விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சி(கம்யூனிஸ்ட் கட்சி)யிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். தான் பின்பற்றி வந்த கட்சியின் இலட்சியத்தை உயரத்தில் பறக்கும் வகையில் கலை வளர்ப்பதில் சலிய��து ஈடுபட்டார்.நாடகக் கலையில் ஆர்வமும், விவசாய இயக்கத்தின் பால் அசைக்கமுடியாத பற்றும் கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்க்க தீவிரமாகப் பங்கெடுத்தார். + +தமது 29 ஆண்டு வாழ்வில் விவசாயி, மாடு மேய்ப்பவர், உப்பளத் தொழிலாளர், நாடக நடிகர், என 17 வகைத் தொழில்களில் ஈடுபட்டவர். இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த் திரைப்படமாகியும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமோ நடிப்பை விட்டுவிட்டுப் பாடல் எழுதும் கலையைக் கற்றுக்கொள்ள புதுச்சேரி சென்று ‘புரட்சிக்கவி’ பாரதிதாசனிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டு இறுதியில் கவிஞராக உருவானார். + + +பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடித்து ஐந்து மாதங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாதத்தில் குழந்தை இருந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி தனது அஞ்சலியில் "கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது" எனத் தெரிவித்தார். + +தமிழ்நாடு அரசு பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவைப் போற்றும் வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. + + +சித்தர்களும் யோகிகளும் +சிந்தனையில் ஞானிகளும் +புத்தரோடு ஏசுவும் +உத்தமர் காந்தியும் + +எத்தனையோ உண்மைகளை +எழுதிஎழுதி வச்சாங்க +எல்லாந்தான் படிச்சீங்க +என்னபண்ணிக் கிழிச்சீங்க? + + +பாடல் - படம் - வெளிவந்த ஆண்டு + + + + + + + + + + + + + + + + + + +வைரமுத்து + +வைரமுத்து (Vairamuthu, சூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் மற்றும் கவிஞர் ஆவார். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் சனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன. + +தமிழ்நாடு மாநிலம் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டியில் ராமசாமித்தேவர் - அங்கம்மாள் ஆகியோருக்கு மகனாக விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். 1980இல் ""நிழல்கள்"" திரைப்படத்தில் ""இது ஒரு பொன்மாலைப் பொழுது".." எனத் தொடங்கும் பாடலை முதன் முதலில் இயற்றினார். இவருடைய மனைவியின் பெயர் பொன்மணி. இவருக்கு மதன் கார்க்கி, கபிலன் என இரு மகன்கள் உள்ளனர். + +கொடி மரத்தின் வேர்கள் + + + + + + +விருது பெற்ற பாடல்கள் + + + + + + + +கண்ணதாசன் + +கண்ணதாசன் (() (ஜூன் 24 1927 – அக்டோபர் 17 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், நவீனங்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். சாகித்ய அகாதமி விருது பெற்றவர். + +கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. தமிழ்நாடு, சிறுகூடல்பட்டியில் தன வணிகர் மரபில் பிறந்தார். தாய் விசாலாட்சி ஆச்சி, தந்தை சாத்தப்ப செட்டியார் (மறைவு 4-2-1955 ). இவருடன் உடன்பிறந்தோர் 8 பேர். சிறு வயதில் இவரை சிகப்பு ஆச்சி (மறைவு 25-12-1958) என்பவர் 7000 ரூபாய்க்கு தத்து எடுத்துக்கொண்டார். அவர் வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்தார். ஆரம்பக் கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். 1943 ஆம் ஆண்டில் திருவொற்றியூர் ஏஜாக்ஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். ஒரு பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன் + +கண்ணதாசனுக்கு முதல் திருமணம் பொன்னழகி என்னும் பொன்னம்மாள் (இறப்பு:மே 31, 2012) என்பவரோடு 1950 பிப்ரவரி 9ஆம் நாள் காரைக்குடியில் நடைபெற்றது. இவர்களுக்கு கண்மணிசுப்பு, கலைவாணன், ராமசாமி, வெங்கடாசலம் ஆகிய 4 மகன்களும், அலமேலு சொக்கலிங்கம், தேனம்மை, விசாலாட்சி ஆகிய 3 மகள்களும் உள்ளனர். கண்ணதாசன், பார்வதி என்பவரை 1951 நவம்பர் 11ஆம் நாள் இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு காந்தி, கமல், அண்ணாதுரை, கோபால கிருஷ்ணன், சீனிவாசன் ஆகிய 5 மகன்களும், ரேவதி, கலைச்செல்வி ஆகிய 2 மகள்களுமாக ஏழு குழந்தைகள் உள்ளனர். ஐம்பதாவது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார். + +கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். + +அண்ணாவின் திராவிட கழகத்தில் இருந்த கண்ணதாசன் 1961 ஏப்ரல் 9 இல் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து வெளியேறினார். + +உடல்நிலை காரணமாக 1981, ஜூலை 24 இல் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்டோபர் 17 சனிக்கிழமை இந்தியநேரம் 10.45 மணிக்கு இறந்தார். அக்டோபர் 20இல் அமெரிக்காவிலிருந்து அவரது சடலம் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு அரசு மரியாதையுடன் அக்டோபர் 22இல் எரியூட்டப்பட்டது. + +தமிழ்நாடு அரசு கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் கவியரசு கண்ணதாசன் மணிமண்டபம் அமைத்துள்ளது. 84 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இம்மணிமண்டபம் 1981ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, 1990ல் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992ல் முதல்வர் செல்வி. ஜெயலலிதா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு தளங்களைக் கொண்ட இம்மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசன் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2400 நூல்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சி��ாக வைக்கப்பட்டுள்ளது. + +கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள் ஐந்துதொகுதிகள் + + + + + + + + + + + + + +கண்ணதாசன் பின்வரும் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்: + + + + + + + + +ஆய்தக்குறுக்கம் + +ஆய்தக்குறுக்கம் என்பது ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதாகும். +ஆய்தம் + குறுக்கம் = ஆய்தக் குறுக்கம். + +எ.கா.: முள் + தீது = முஃடீது + +மேற்கண்ட எடுத்துக்காட்டில், நிலைமொழியில் தனிக்குறிலின் கீழ் வரும் ளகரம் தகர முதன் மொழியோடு புணரும் பொழுது ஆய்தமாக மாறியுள்ளது. அவ்வாறு மாறிய ஆய்தம் தனக்குரிய அரை மாத்திரையில் இருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பதை காணலாம். இதுவே ஆய்தக் குறுக்கமாகும். + + + + +பாலா (இயக்குனர்) + +பாலா (ஜூலை 11, 1966.), ஒரு குறிப்பிடத்தகுந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர். இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார். + +'இருட்டிண்ட ஆத்மா’னு ஒரு மலையாளச் சிறுகதை தந்த பாதிப்புதான் 'சேது’. ராமநாதபுரம் பகுதியில் பார்த்த அகதிகள் முகாம்தான் 'நந்தா’. ஜெயகாந்தனோட  'நந்தவனத்தில் ஒரு ஆண்டி’தான் 'பிதா மகன்’. கமல்ஹாசனின் 'அன்பே சிவம்’, ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்’, காசியில் பார்த்த அகோரிகளின் அமானுஷ்யம் எல்லாம் சேர்ந்து 'நான் கடவுள்’, ரெட் டீ’ நாவலைத்தான் 'பரதேசி' என்று ஒரு படத்துக்கான கதையை முடிவு செய்ததாக பாலா கூறுகிறார். + + + + + + +சேரன் (திரைப்பட இயக்குநர்) + +சேரன் (பிறப்பு: திசம்பர் 12, 1965) ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவரது மூன்று திரைப்படங்கள் தேசிய விருதைப் பெற்றுள்ளன. 2000 ஆம் ஆண்டில் 'வெற்றிக் கொடி கட்டு' திரைப்படத்துக்கும், 2004 ஆம் ஆண்டில் 'ஆட்டோகிராப்' திரைப்படத்துக்கும், 2005 ஆம் ஆண்டில் 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்துக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. + +சேரன் மதுரை மாவட்டம், மேலூர், கொழிஞ்சிப்பட்டி என்னும் கிராமத்தில் திசம்பர் 12, +1970 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை பாண்டியன் வெள்ளலூர் உள்ள திரையரங்கத்தில் படம் ஓட்டுநராக பணி புரிந்தார். தாயார் கமலா தன் கிராமத்திலே தொடக்க பள்ளி ஆசிரியை ஆக வேலை பார்த்தார். இவருடன் பிறந்தவர்கள் இரண்டு தங்கைகள். சிறிய வயதில் நாடகங்களில் நடித்தும் இருக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில், சூன் 19, 2011 அன்று நடந்த தேர்தலில், போட்டியின்றித் தேர்வுச் செய்யப்பட்ட இரு துணைத்தலைவர்களில் சேரனும் ஒருவர் ஆவார். + +திரைப்படங்களில் தனது வாழ்க்கையைத் தொடர சென்னை வந்தார். ஆரம்பத்தில் அவர் சில திரைப்படங்களில் தயாரிப்பு மேலாளராக பணி புரிந்தார். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் புரியாத புதிர் திரைப்படத்தில் முதன் முதலாய் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன் முதல் நாட்டாமை வரை அவருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் கமல்ஹாசனுடன் இணைந்து மகாநதி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். + +உதவி இயக்குனராக இருந்த அவர் பார்த்திபன்-மீனா நடித்த பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை இயக்கினார். இது மிகப்பெரிய சர்ச்சையை +உருவாக்கினாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து பொற்காலம், பாண்டவர் பூமி, வெற்றிக் கொடி கட்டு போன்ற +சமூக அவலங்களை சித்தரித்தே எடுத்தார். இவருடைய படங்கள் யாவும் சமூக மாற்றத்தையும், சாதாரண தமிழ் நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவர் முரண் எனும் திரைப்படத்தினை தயாரித்தார். + +சேரன், தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதையில் கதாநாயகனாக நடித்து பாராட்டு பெற்றார். பின்னர் பொக்கிஷம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. நடிகர் விக்ரம் நடிக்க ஆட்டோகிராப் படம் தயாரானது. அழைப்புக் கடிதம் பிரச்சனையால் அதுவும் கைவிடப்பட்டு, பின்னர் +அதில் இவரே கதாநாயகனாக நடித்து மற்றும் இயக்கவும் செய்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 2004இல் ஆரம்பித்த பொக்கிஷம் படம் 2009இல் வெளிவந்தது. + +ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ��ேசிய சேரன் "இலங்கைத் தமிழர்களுக்காக இங்கே, நாங்கள் எல்லாம், திரையுலகமே குரல் கொடுத்துள்ளோம். .. எங்களுடைய எல்லாவற்றையும் இழந்துவிட்டுப் போராடியுள்ளோம்... ஏன் இதையெல்லாம் பண்ணினோம் என்று அருவருப்பாகவுள்ளது..." என்று முறையற்ற டிவிடி மற்றும் இணையப் பதிவேற்றம் செய்பவர்களாக இலங்கைத் தமிழர்களைக் குறிப்பிட்டது சர்ச்சையை உருவாக்கியது. பின்னர், தான் குறிப்பிட்டது குறிப்பிட்ட சிலரைத்தான் ஒட்டுமொத்த இலங்கைத்தமிழர்களையும் அல்ல என சேரனால் மறுப்பு வெளியிடப்பட்டது. ஆயினும், இலங்கைத் தமிழர்கள் சார்பில் சேரன் போராட்டத்தையும் முறையற்ற டிவிடி விடயத்தையும் தொடர்புபடுத்தியிருக்கக் கூடாது என்றும், வியாபாரத்தையும் போராட்டத்தையும் சேர்க்க வேண்டாம் என்றும், அல்லது "இலங்கைத் தமிழர்களுக்காக" என்பதில் "சில அல்லது குறிப்பிட்ட இலங்கைத் தமிழர்களுக்காக" என தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் பதிலளிக்கப்பட்டது. + + + + + +பாக்யராஜ் + +கே.பாக்யராஜ் (Bhagyaraj, பிறப்பு: சனவரி 7, 1953) ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர், திரைக்கதை அமைப்பாளர், இயக்குனர், சிறப்பு வேடமேற்கும் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட ஒரு கலைஞர். இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் ஆகிய படங்களில் திரைப்படக்கலை பயின்றவர். + +1977 (திருத்தம்_மித்திரன்) -ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜா முதல் படம் இயக்கும்போது, பாக்யராஜ் அதில் உதவியாளராக, தமது திரை வாழ்க்கையை துவங்கினார். பின் பாரதிராஜாவின் இரண்டாவது படமான "கிழக்கே போகும் ரயில்" திரைப்படத்தில் உதவி இயக்குனர் மற்றும் கவுண்டமணியுடன் ஒரே ஒரு காட்சியில் தோன்றி நடித்திருந்தார். பாரதிராஜாவின் மூன்றாவது படமான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டு காட்சிகளில் நினைவில் நிற்கும்படியான, உணவு விடுதிப் பணியாளர் வேடம் ஏற்று நடித்தார். இப்படத்திற்கு வசனமும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. +தனது அடுத்த படமான புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா, பாக்யராஜை வசனகர்த்தாவாக மட்டு��ன்றி, கதாநாயகனாகவே அறிமுகம் செய்தார். +ஒரு இயக்குனராக தமது முதல் படமாக பாக்யராஜ் உருவாக்கியது சுவர் இல்லாத சித்திரங்கள். (இடைக்காலத்தில் அவர் ராஜேஷ் கதாநாயகனாக அறிமுகமான கன்னிப்பருவத்திலே படத்தில் வில்லன் வேடம் ஏற்று தனது இருப்பைப் பதிவு செய்திருந்தார்). முதல் படத்தில் சுதாகர் கதாநாயகனாகவும் சுமதி நாயகியாகவும் நடிக்க, ஒரு குணச்சித்திரப் பாத்திரத்தை பாக்யராஜ் ஏற்றிருந்தார். நகைச்சுவையும், சோகமும் சரிபாதியாக அதில் அமைந்திருந்தது. + +அடுத்து, சொந்த தயாரிப்பான ஒரு கை ஓசை திரைப்படம் துவங்கி தனது முத்திரையை பதிக்கத் தொடங்கினார். + +அடுத்து வெளியான மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா ஆகியவை பாக்யராஜின் முத்திரையை முழுமையாகக் கொண்டு, மாபெரும் வெற்றிப் படங்களாயின. + +தனது முதல் இரண்டொரு படங்களுக்குப் பிறகு, பாக்யராஜ் அப்போது துணைக்கதாபாத்திரங்களில் நடித்து வந்த "பிரவீணா" என்னும் நடிகையை மணந்தார். இவர் பாக்யராஜின் "இன்று போய் நாளை வா", "மௌன கீதங்கள்", "பாமா ருக்மிணி" ஆகிய சில படங்களிலும் நடித்தவர். சில வருட மண வாழ்க்கைக்குப் பிறகு, நோய்வாய்ப்பட்டு பிரவீணா இறந்தார். சில காலத்திற்குப் பின்னர், பாக்யராஜ் அப்போது முன்னணி நாயகியரில் ஒருவராக இருந்த பூர்ணிமா ஜெயராமை மணந்தார். இவர்களுக்கு, சரண்யா என்ற மகளும் சாந்தனு என்ற மகனும் உண்டு. இவர்கள் இருவரையுமே பாக்யராஜ் திரையுலகில் அறிமுகம் செய்திருந்தார். சரண்யா முதல் படத்திற்குப் பிறகு நடிக்கவில்லை. சாந்தனு தன் முதல் படமான "சக்கரக்கட்டி" என்னும் படத்தில் நாயகனாக அறிமுகமாகி தற்போது வரை நடித்து வருகிறார். + +துவக்கம் முதலே தன்னை எம். ஜி. ஆரின் ரசிகராக வெளிப்படுத்தியிருந்த பாக்யராஜ், ருத்ரா திரைப்படம் வெளியான காலகட்டத்தில் அ.தி.மு.க. கட்சியில் இணைந்திருந்தார். இப்படத்தில், ஒரு பாடல் காட்சியில், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவப் படங்கள் திரையில் தோன்றுமாறு அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிறகு, அக்கட்சியிலிருந்து வெளியேறி சொந்தக் கட்சி ஒன்றைத் துவக்கினார். பின்னர், நாளடைவில் அது கலையவே, தற்போது, தி.மு.க. கட்சியில் உள்ளார். + +இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர் பாக்யராஜ். முற்றிலும் நகைச்சுவைப் படமான 'இன்று போய் நாளை வா' என்னும் திரைப்படத்தில் கூட ஜெயகாந்தன் எழுதிய 'சமூகம் என்பது நாலு பேர்' என்னும் சிறு கதையைப் பற்றிய ஒரு குறிப்பு வருமாறு அமைத்திருந்தார்.இவர் 1988 ஆம் ஆண்டு முதல் பாக்யா எனும் வார இதழ் ஒன்றினையும் நடத்தி வருகிறார். + +தமது குருவான பாரதிராஜாவைப் போலவே, பாக்யராஜும், பல திறமையான இயக்குனர்களை உருவாக்கினார். இவர்களில், பாண்டியராஜன் , பார்த்திபன் மற்றும் வி.சேகர், லிவிங்ஸ்டன், ஜி.எம்.குமார் ஆகியோர் வெற்றிகரமான இயக்குனர்களாகத் திகழ்ந்தனர். + +. "அவசர போலிஸ் 100" + + +சிறப்புக் கூறுகள்: + +நடிகராக + +திரைக்கதை அமைப்பாளராக + +இயக்குனராக + +பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான ஒரு இயக்குனர். தமது படங்களின் வழியாகத் தம்மை ஒரு அறிவுஜீவி என நிலை நிறுத்திக் கொள்ள அவர் முயன்றதில்லை. பெரிய தொழில் நுட்பங்களையும் அவர் சார்ந்திருக்கவில்லை. அநேகமாக அவர் படங்களில் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளோ, வெளி நாட்டுப் படப்பிடிப்புகளோ இருந்ததில்லை. அவர் முழுக்க முழுக்க, தாம் தமக்கென அமைத்துக் கொண்ட பாணி, தமது திறமைகள், திரைக்கதை அமைப்பு ஆகியவற்றை மட்டுமே நம்பித் திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். + +இசையமைப்பாளராக + +விமர்சனங்கள் +இந்தியில் பாக்யராஜின் திரைப்படங்கள் + +பாக்யராஜின் திரைப்படங்கள் அனைத்தும் அவரது பாத்திரத்தை முன்னிறுத்தியவையாகவே அமைந்தமையால், நாயகியருக்குப் பொதுவாக, பெருமளவில், அவற்றில் பணி இருந்ததில்லை. இருப்பினும், அந்த ஏழு நாட்கள் படத்தில் அம்பிகா மற்றும் மௌன கீதங்கள் திரைப்படத்தில் சரிதா ஆகியோர் தமது பாத்திரங்களில் திறம்பட நடித்து நற்பெயர் பெற்றனர். + +பிரவீணா, பூர்ணிமா ஜெயராம் (இவர்கள் இருவரும் பாக்யராஜுடன் வாழ்விலும் இணைந்தவர்கள்), ரதி அக்னி ஹோத்ரி (பாக்யராஜின் முதல் நாயகி), ராதிகா, ஊர்வசி (பாக்யராஜின் அறிமுகமான இவரும் நகைச்சுவை மிளிரும் நடிப்பிற்குப் பெயர் பெற்றார்), பானுப்ரியா,குஷ்பூ,மீனாஷி சேஷாத்திரி ஆகியோர் பாக்யராஜின் திரை நாயகியரில் குறிப்பிடத் தகுந்தவர்கள். + +இந்தியில் பாக்யராஜ் இயக்கிய திரைப்படம் "ஆக்ரி ராஸ்தா". ஆயினும், அவரது பல படங்கள் தமிழில் வெற்றிக் கொடி நாட்டியமையால் இந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டன. இவற்றில் பலவற்றில் இந்தி நடிகர் அனில் கபூர் நடித்திருந்தார். சிலவற்றில் கோவிந்தாவும், முந்தான��� முடிச்சின் மறுவாக்கத்தில் ராஜேஷ் கன்னாவும் நடித்திருந்தனர். இவற்றில் இந்தியில் "ஓ சாத் தின்" என்ற பெயரில் வெளியான அந்த ஏழு நாட்கள் மற்றும் "பேட்டா" என்ற பெயரில் வெளியான 'எங்க சின்ன' ராசா ஆகிய திரைப்படங்கள் பெரும் வெற்றி அடைந்தன. + +பாக்கியராஜின் அரசியல் பற்றிய ஒரு வலைத்தளப் பதிவு + + + + + +மகரக்குறுக்கம் + +"ம்" என்னும் எழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து கால் மாத்திரையாகக் குறைந்து ஒலிப்பது மகரக் குறுக்கம் எனப்படும். +"மகரம் + குறுக்கம் = மகரக்குறுக்கம்" +மெய்யெழுத்துக்களில் ன், ண் ஆகிய 2 இரண்டு மெய்யெழுத்துக்களையும் அடுத்துவரும் மகர ஒற்றும் (ம்), மகர மெய்யை அடுத்துவரும் வகர ஒற்றும் (வ்) வரும் இடங்களிலும், மகர ஒற்று தன் மாத்திரையிலிருந்து குறைந்து ஒலிக்கும். இதுவே மகரக் குறுக்கம் எனப்படுகிறது. இதற்கான பண்டைய உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு + +மகரக் குறுக்க ஒலிக்குரிய மாத்திரை அளவு கால். + +ண ன முன் உம் வஃகான் மிசை உம் ம குறுகும் என்னும் நன்னூல் நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் +என்னும் எடுத்துக்காட்டுகின்றர். மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நிலைமொழியீற்றில் மகரமும் வருமொழி முதலில் வகரமும் உள்ளன. இது போல நிலைமொழியீற்றில் மகரம் இருந்து வகர முதல் மொழியோடு புணரும் போது நிலைமொழியீற்றிலுள்ள மகரம் கால் மாத்திரையளவே ஒலிக்கும். இது ஒரு வகை மகரக்குறுக்கம். + +செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் +னகார மகாரம் ஈர் ஒற்றாகும் என்பது தொல்காப்பியம். இதன்படி பாடல்களின் முடிவில் "போலும்" என்று வரும் சொல்லில் னகரமும் மகரமும் ஒன்றாகி "போன்ம்" என்று ஈரொற்றாக நிற்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையிலும் மகரம் தன் ஒலிப்பளவிலிருந்து குறைந்து ஒலிக்கும். இது மற்றொரு வகை மகரக்குறுக்கம் ஆகும். + +எடுத்துக்காட்டு + + + + +ஔகாரக் குறுக்கம் + +ஔகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்போது மட்டுமே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதலில் வரும்போது ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே ஔகாரக் குறுக்கம் ஆகும். + + தன் சுட்டு அளபு ஒழி ஐ மூ வழி உம் + +மேற்கண்ட எடுத்துக்காட்டில் மொழிக்கு முதலில் வந்துள்ள 'ஔ' தனக்குரிய இரண்டு மாத்திரையிலிரு���்து ஒரு மாத்திரையளவே ஒலிப்பதைக் காணலாம். + +ஔகாரம் மொழிக்கு முதலில் மட்டுமே வரும். இடையிலும் கடையிலும் வராது. + + + + + +பாப்லோ நெருடா + +பாப்லோ நெருடா, ("Pablo Neruda", ஜூலை 12, 1904 – செப்டம்பர் 23, 1973) என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( "Ricardo Eliecer Neftalí Reyes Basualto"), சிலி நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூக உணர்வு கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர். + +1920 ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, செக்கோஸ்லாவாகியா எழுத்தாளரான ஜோன் நெருடாவின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது ஸ்பானிஷ் மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும். + +1904 ஆண்டு, ஜூலை 12 தேதி சிலி நாட்டில் உள்ள பாரல் என்ற ஊரில் பாப்லோ நெருடா பிறந்தார். இவர் பிறந்த சில நாட்களிலேயே இவரை ஈன்ற தாய் மறைந்தார். இவர் தந்தை, டோனா ட்ரினிடாட் கார்டியா மார்வாடி என்பவரை, மறுமணம்‌ செய்து கொண்டார். சிற்றன்னையென்றாலும் நெருடாவின் மேல் அளவற்ற பாசம் கொண்டு வளர்த்தார். நெருடா, கார்டியா மார்வாடி பற்றி கூறும் போதெல்லாம் இவரைப் பெருந்தாய் என்று பெருமிதம் கொள்வார். முதல் முயற்சியாக இவர் தனது எட்டாம் அகவையில் எழுதிய கவிதை, இவருடைய பெருந்தாயைப் பற்றிய‌தே. + +பாப்லோ நெருடா என்ற புனைப்பெயருடன் எழுதிய முதல் கவிதைத் தொகுப்பு, இவருடைய 19ஆம் வயதில் " வைகறைக் கதிர்கள் (Books of Twilights) " என்ற பெயரில் 1923 ஆம் ஆண்டு வெளிவந்தது. ஸ்பானிய மொழியில் பெரும் கிளர்ச்சியும், பரபரப்பும் ஊட்டியது நெருடாவின் "இருபது காதல் கவிதைகளும் ஒரு விரக்தி பாடலும்" என்ற கவிதை தொகுப்பு. இத்தொகுப்பு வெளியிடும் போது நெருடாவின் வயது இருபது. காதல் கவிதைகளில் அதிர்ச்சியும் நேரடித்தன்மையும் கொண்ட அத்தொகுப்பு ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் நெருடாவினை பிரபலமாக்கியது. + +1927ஆம் ஆண்டு சிலியின் தூதராக அவர் ரங்கூன் (பர்மா) சென்றார். ஆறு ஆண்டுகள் இலங்கையிலும், சிங்கப்பூரிலும், ரங்கூனிலும் அவர் தூதராகப் பணியாற்றினார். இந்த ஆண்டுகளில் மாபெரும் இலக்கியவாதிகளான, ப்ராஸ்ட், ஜேம்ஸ் ஜாய்ஸ், வால்ட் விட்மன் போன்றவர்களுடைய எழு���்தின் அறிமுகம் இவருக்கு கிடைத்தது. + +தமிழில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான் ("The skin of the earth is same everywhere") " என்று பாடியுள்ளார். + +1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான ழான் பால் சார்த்தர் நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. 1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது. + +"இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், நெருடாவினைப் புகழ்கின்றார். + + + + + +அகத்தியன் (திரைப்பட இயக்குநர்) + +அகத்தியன் ("Agathiyan") () என்பவர் இந்தியத் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். இவர் இந்தி மொழித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் அறியப்படுகிறார். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் கோட்டை என்ற தமிழ்த் திரைப்படத்திற்காக சிறந்த திரைக்கதை, இயக்கத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றார். + +இவரது இயற்பெயர் கருணாநிதி ஆகும். இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி ஆகும். இவர் இராதா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு விஜயலட்சுமி, நிரஞ்சனா, கார்த்திகா என மூன்று மகள்கள் உள்ளனர். இதில் விஜயலட்சுமி 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். + + + + + + +ஷங்கர் (திரைப்பட இயக்குநர்) + +ஷங்கர் (ஆங்கிலம்: "Shankar") (பிறப்பு: ஆகத்து 17, 1963) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவருடைய படங்கள் அவற்றின் தொழில்நுட்ப அருமை, பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் பேசப்படுகின்றன. திரைப்பட இயக்குநர் ஆவதற்கு முன், எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். + + + + + +பி. லெனின் + +பி.லெனின் திரைப்பட இயக்குனராகவும் தொகுப்பாளராகவும் அறியப்படுகின்றார். இவர் இயக்கிய ஊருக்கு நூறு பேர், சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்றது. + + + + +லெனின் + +லெனின் ("Lenin") என்ற பெயர் கீழ்காணுபவர்களில் எவரையேனும் குறிக்கலாம் + + + + +மகேந்திரன் + +மகேந்திரன் (பிறப்பு: சூலை 25, 1939) புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் "ஜெ. அலெக்சாண்டர்". மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை. + +மகேந்திரன், புதுமைப்பித்தனின் "சிற்றன்னை" என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, "உதிரிப்பூக்கள்" என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. + +எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது. + + + + +இவர் சமீபத்தில் தெறி படத்தில் வில்லனாக நடித்துள்ளார் + + + + +துரைசாமி நெப்போலியன் + +நெப்போலியன் என அழைக்கப்படும் குமரேசன் துரைசாமி +("Kumaresan Duraisamy" or "Napoleon"), (பிறப்பு: டிசம்பர் 2, 1963) தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். + + + + + +கல்கி (எழுத்தாளர்) + +கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்���ும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. + +கல்கி அவர்கள் 1899-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புத்தமங்கலம் என்னும் ஊரில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பப்பள்ளிப் படிப்பைத் தனது கிராமத்தில் முடித்த பிறகு அவர் திருச்சியில் உள்ள தேசிய உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 1921-ல் மகாத்மா காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவங்கிய போது, அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கல்கி தனது பள்ளிப்படிப்பைப் பாதியில் துறந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 1922-ல் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்றதற்காக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்தார். 1923-ல் அவர் நவசக்தி என்னும் பத்திரிக்கையின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவருடைய முதல் புத்தகம் "ஏட்டிக்குப் போட்டி" 1927-ல் வெளியானது. + +‘கல்கி’யின் படைப்புகள் நாட்டுடைமை ஆகிவிட்டமையால், அவருடைய பல படைப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன. + +சமஸ்கிருதமும் தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் பிரபலமாக இருந்து வந்த அக்காலக்கட்டத்தில் தமிழிசைக்காக கல்கி சதாசிவம் மற்றும் எம். எஸ். சுப்புலட்சுமியுடன் இணைந்து பாடுபட்டார் கல்கி. தமிழ் இசை குறித்த கல்கியின் சிந்தனைகளை "தரம் குறையுமா" எனும் புத்தக வடிவில் வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. + + + + + + + + +வெங்கட் சாமிநாதன் + +வெங்கட் சாமிநாதன் ("Venkat Swaminathan", 1933 - 21 அக்டோபர் 2015) என்ற பெயரில் எழுதிய சாமிநாதன், ஒரு கலை விமர்சகர். இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை போன்ற பல்வேறு துறைகளிலும் ஆழ்ந்த ரசனையும், விமர்சிக்கும் திறனும் கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர். + +இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இய��்கத்தில் வெளிவந்த அக்ரஹாரத்தில் கழுதை என்ற திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றின் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.. கனடாவில் உள்ள டொரண்டோ தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2003ஆம் ஆண்டுக்கான இயல் விருது சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது + + + + + + + + + + + + + + + +பொன்னியின் செல்வன் + + + +பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது. + +இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது. + + +பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. + +விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது. + +முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்ற���களையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராய்ப்பள்ளி அளவிலேயே நின்றது. + +இந்தக் காலக்கட்டத்துற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்தப் பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. +ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில் + +திருவாலங்காட்டுச் செப்பேடுகள், + +"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான்(காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன. + +இந்தக் காலக்கட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார். + +ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாங்களை உள்ளடக்கியது.முதல் பகுதியான புதுவெள்ளம் சரித்திர புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது . வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தமக்கைக்கும் , தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார் . வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் பொது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை ரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி , பிறகு செல்லும் வழியில் கடம்பூரில் தாங்கும் பொது சோழ சாம்ராசியத்தின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான் . பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த காரிகளரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியை காண பழையாறை செல்கிறான் . அங்கேயே இளைய பிராட்டியை சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருள்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது . + +அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழ��்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதகாக கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள். + +அத்தியாயம் கெடிலக் கரையில் ஆரமித்து படகு நகர்ந்தது! வரை 46அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். +வந்தியதேவன் ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்க பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருகோவளூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருதர் வைத்தியர் மகன் பினன்காபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினங்கபானியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவதியை பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார். + +அத்தியாயம் மூன்று குரல்களில் ஆரமித்து மலர் உதிர்ந்தது வரை 91அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். +ராஜராஜா சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு இருந்தும் சிம்மாதானத்தை தன் சிற்றப்பனுக்கு வழங்கினான். அருள்மொழிவர்மனின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த பாகத்தை எழுதியதால் இதற்க்கு தியாக சிகரம் என பெயர் வைத்ததாய் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். +பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்கரவத்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றபடுகின்றனர். சக்கரவத்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியதேவன் மேல் விழுகிறது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. வந்தியதேவன் எப்படி காப்பாற்றபடுகிரான். அருள்மொழிதேவர் அரியணை எறுகிறாரா? இவ்வாறு ஐந்தாம் பாகம் செல்கிறது. + + + + + + + + + + +இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது. + +"உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற ம��றையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து" என்று வைகோ பொன்னியின் செல்வன் திறனாய்வில் குறிப்பிடுகிறார். + +‘பொன்னியின் செல்வன்’ கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். எனினும் முயற்சி கைகூடவில்லை என்று விகடன் இதழ் எம்.ஜி.ஆர் 25 ல் குறிப்பிட்டுள்ளது. + +பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர்கள்: இந்திரா நீலமேகம் சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன்.) + + + + + +ஐகாரக் குறுக்கம் + +ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது. + +ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம். + +ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை, கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக் குறுக்கமாகும் + +எ.கா: +
+மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஐகாரம் குறைந்து ஒலிப்பதைக் காண்க. + + + +
+ +சேரன் + +சேரன் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. + + + + + +கி. ராஜநாராயணன் + +கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (பிறப்பு:16 செப்டம்பர் 1922), கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. +கி.ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். + +கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே. சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற, தொண்ணூறு வயதான கி.ரா. தற்போது புதுச்சேரியில் வாழ்ந்து வருகிறார்.2016-17 ஆம் ஆண்டுக்கான மனோன்மணியம் சுந்தரனார் விருது கி.ராவிற்கு வழங்கப்பட்டது. + + + + + + + + + + + + +வாலி (கவிஞர்) + +கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், 29 அக்டோபர், 1931 - 18 சூலை 2013) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை. ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது. வாலி திரைப்படங்களுக்கு 15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. + +"ரங்கராஜன்" என்ற இயற்பெயர் கொண்ட வாலி திருச்சி மாவட்டம் திருப்பராய்துறையில் பிறந்து, திருவரங்கத்தில் வளர்ந்தார். ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான். தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகளும் நாடகங்களும் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது. + +திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா + +மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக, ஜூன் 7-ஆம் தேதி 2013 அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி அவர் 18 ஜூலை 2013 மாலை 5 மணியளவில் காலமானார். + +தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தவரிடம் அவருடைய பள்ளித் தோழன் பாபு, ‘மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்றுகூறி 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார். + +சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார் .அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது. அவ்விழாவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், சூர்யா, பத்திரிகையாளர் சோ உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். + +1967ல் தி.மு.க.வின் தேர்தல் வெற்றிக்கு எத்தனையோ காரணங்கள் உண்டு. அவற்றில், 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தில் இடம் பெற்ற வாலி இயற்றிய "நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்" என்ற பாடலும் ஒரு காரணம் என்பதை அறுபதுகளின் மத்தியில் இருந்தவர்கள் அறிவார்கள். + +சென்னை தி.நகர் சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே இருந்த கிளப் ஹவுசில் கவிஞர் வாலி நான்கு ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்குதான் நகைச்சுவை நடிகர் நாகேஷை கவிஞர் வாலி சந்தித்தார். பக்கத்து, பக்கத்து அறையில் இருந்ததால், மிக நெருங்கிய நண்பர்களானார்கள். + +தளபதி என்ற பெயருக்கும் வாலிக்கும் ரொம்ப ராசி. மணிரத்னம் இயக்கி ரஜினிகாந்த் நடித்த தளபதியில் அவரது பாடல்வரிகள் ஹிட் என்பது எல்லாரும் அறிந்தது. வாலி அவர்களின் முதல் நாடகத்தின் பெயர் என்ன தெரியுமா? தளபதி!. + + +வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர். + +கீழே காண்பது வாலி எழுதிய பாடல்களின் தொகுப்பு ஆகும். இது முழுமையான பட்டியல் அல்ல. + + + + + +க. கைலாசபதி + +க.கைலாசபதி (ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார். + +கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர். தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார். + +பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார். அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது. + +பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப் பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது. + +பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித்துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார். + +ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். + +இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில. + +மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார். + + + + + + +கார்த்திகேசு சிவத்தம்பி + +கார்த்திகேசு சிவத்தம்பி (மே 10, 1932 - சூலை 6, 2011) ஒரு முக்கிய தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர் மற்றும் சமூக சிந்தனையாளர் ஆவார். + +யாழ்ப்பாணம் கரவெட்டி மேற்கில் பிறந்த சிவத்தம்பி ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் கற்றார். பின்னர் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு சாகிரா கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் 1956 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராகவும், 1961 முதல் 1965 வரை இலங்கை நாடாளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்தார். + +இலங்கையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் பயின்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் (Ph.D) பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். + +1965 முதல் 1970 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகவும், 1970 முதல் 1975 வரை விரிவுரையாளராகவும், 1976 முத��் இணைப் பேராசிரியராகவும் பணியாற்றினார். + +1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார். + +பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய "விதானையார் வீட்டில்" தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார். + +ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கியவர். இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில் இவர் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். + +பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது வயதில் 2011, சூலை 6 புதன்கிழமை இரவு 8 .15 மணிக்கு கொழும்பு, தெகிவளையில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் காலமானார். + +தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்ட ஈழத்தமிழ் அறிஞர் பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை விகசிப்பின் சில ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 'கரவையூற்று' நூலின் தொகுப்பு ஆசிரியர் வீ.ஏ.திருஞானசுந்தரம். + + + + + + + +தொ. மு. சி. ரகுநாதன் + +தொ. மு. சிதம்பர ரகுநாதன், (அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது. + +ரகுநாதன் திருநெல்வேலியில் அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார். + +தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன் இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன் போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். + +சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . +“பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர். + + + + + + + + + + + + + +பவுலோ கோய்லோ + +பவுலோ கோய்லோ ("Paulo coelho") (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1947) உலகப் புகழ்பெற்ற சமகால பிரேசில் நாட்டு எழுத்தாளர் ஆவார். இவரது படைப்புகளிலேயே "தி ஆல்கெமிஸ்ட்" புதினம் மிகச்சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் 50க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் தங்கள் கனவுகளை நினைவாக்கப் பாடுபட வேண்டும் என்பது இவரது புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகளில் காணப்படும் அடிப்படை கருத்தாகும். ஆனாலும் இலெவின் மினிட்ஸ் ("Eleven Minutes") என்ற அவரது புதினத்தில், யதார்த்த நிலைமைக்கு நேருக்கு நேர் முகம் கொடுப்பதுபற்றி சொல்லியிருப்பதாகக் குறிப்பிடுகின்றார். + + + + +சுனாமிப் புகைப்படத்துக்கு உலக விருது + +டிசம்பர் 26, 2004 இல், தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாக்கிப் பேரழிவை விளைவித்த ஆழிப்பேரலை சோகத்தைச் சித்தரிக்கும் நோக்கில் தமிழகத்தின் கடலூர் கடற்கரையில் எடுக்கப்பட்ட புகைப்படத்துக்கு உலகச் செய்திப் புகைப்பட விருது கிட்டியிருக்கிறது. + +இது ராய்ட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்தைச் சார்ந்த ஆர்கோ தத்தா என்ற புகைப்பட நிபுணர் 2004 டிசம்பர் 28-ஆம் தேதி எடுத்த படம் ஆகும். + +சுமார் 70,000 புகைப்படங்கள் இந்தப்போட்டியில் பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது. + +சுனாமியின் போது தப்பிபிழைத்த பெண்மணி ஒருவர், கடற்கரையில், தம் உறவினர் ஒருவரின் உடல் அருகே கதறுவதைக் காட்டும் இந்தப் புகைப்படம், சுனாமி அழிவின் கோரத்தையும், சோகத்தையும் துல்லியமாகச் சித்தரிப்பதாக ஆம்ஸ்டர்டாம் நகரில் இப்போட்டியை நடத்தியவர்கள் கூறுகிறார்கள். + + + + + +மனுஷ்ய புத்திரன் + +மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார். + + + + + + + + +வண்ணதாசன் + +வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், சி.கல்யாணசுந்தரம் (S. Kalayanasundaram). இவர் தமிழ்நாடு, திருநெல்வேலியில் பிறந்தவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார்.இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், "தீபம்" இதழில் எழுதத் துவங்கியவர். 1962 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது 'ஒரு சிறு இசை' என்ற சிறுகதை நூலுக்காக இந்திய அரசின் 2016 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது கிடை��்தது. + +இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன். 2016 விஷ்ணுபுரம் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..சூன் 10, 2018 இல் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் எனும் அமைப்பு தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை இவருக்கு வழங்கியது. + + + + + + + + + + + +பூமணி + +பூமணி (பிறப்பு - 1947, இயற்பெயர் - பூ. மாணிக்கவாசகம்.) சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார்.இவர் எழுதிய 'அஞ்ஞாடி' என்ற நாவலுக்கு 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது + +இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தார். இவரின் தந்தை பூலித்துரை, தாய் தேனம்மை. பூமணி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர், தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளாராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். + +கரிசல் வட்டாரத்து வாழ்க்கையின் நுட்பங்களைத் தனது எழுத்தில் வெளிப்படுத்திய எழுத்தாளர். இவருடைய கல்லூரிக் காலத்தில் இவருக்கு விமர்சகர் சி. கனகசபாபதி ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் கி.ராஜநாராயணன் பூமணியை சிறுகதைகள் எழுத ஊக்குவித்தார். 1971இல் பூமணியின் முதல் சிறுகதை ‘அறுப்பு’ தாமரை இதழில் வெளிவந்தது. அதன் பிறகு தாமரை ஆசிரியராக இருந்த தி. க. சிவசங்கரன் பூமணியை ஊக்குவித்தார். + + + + + + + + + + +ந. முத்துசாமி + +ந.முத்துசாமி (மே 25, 1936 - அக்டோபர் 24, 2018) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள புஞ்சை என்ற கிராமத்தில் பிறந்த இவர் 2000 ஆண்டின் சங்கீத நாடக அகாதமியின் விருது பெற்றிருக்கிறார். தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களுள் இவரும் ஒருவர். இவரது "கூத்துப்பட்டறை" என்ற நாடக அமைப்பு தமிழில் பரிசோதனை நாடகங்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. "கசடதபற", "நடை" போன்ற இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். நீர்மை உட்பட 5 நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய "ந. முத்துசாமி கட்டுரைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் ந���ண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. 2012 ஆம் ஆண்டில் இவரது கலைச்சேவையை பாராட்டும் வண்ணம் இந்திய அரசு பத்மஸ்ரீ விருதை வழங்கி பெருமைப்படுத்தியது. + + + + + + + + +கோபிகிருஷ்ணன் + +கோபிகிருஷ்ணன் (Gopikrishnan) மதுரையில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுபவர் கோபிகிருஷ்ணன். நடுத்தர வர்க்கத்தின் போலியான மதிப்பீடுகளையும் அவலங்களையும் தனது கதைகளில் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டு வந்தவர். + +உளவியல் துறையிலும் மற்றும் சமூக சேவை துறையிலும் முதுகலைப்பட்டம் பெற்றவர். "ஆத்மன் ஆலோசனை மையம்" என்ற அமைப்பை உருவாக்கி, மனநல ஆலோசகராக சில காலம் பணியாற்றியுள்ளார். பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் சமூக சேவகராகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. மனநிலை பிறழ்வு மையங்களில் ஆலோசகராக இருந்த நாட்களில் தான் சந்தித்த மனிதர்கள் பற்றி ‘உள்ளிருந்து சில குரல்கள்’ என்ற நாவலை எழுதியிருக்கிறார். + +வறுமையான குடும்பச் சூழல் காரணமாகவும், தனது சுய அடையாளத்தை இழந்துவிடக் கூடாது என்ற விடாப்பிடியான முயற்சியாலும் ஆழ்ந்த மனச்சோர்வுக்கு உட்பட்டவராக இருந்தார் கோபி கிருஷ்ணன். இதற்காக உள நல மருந்துகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்ததால் உருவான பலவீனம் காரணமாக, அதிக நோய்மையுற்று அதிலிருந்து மீள முடியாமலே 2003ஆம் ஆண்டு காலமானார். + + +கோபிகிருஷ்ணன் அவர்களின் சில படைப்புகள் "அழியாச்சுடர்" தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. அவைகளுக்கான சுட்டி: http://azhiyasudargal.blogspot.com/search/label/கோபிகிருஷ்ணன் + + + + +சச்சின் டெண்டுல்கர் + +சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar , பிறப்பு ஏப்ரல் 24, 1973) ஓர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த  மற்றும் மிகவும் மதிக்கப்படும்  வீரராக பரவலாக அனைவராலும் கருதப்படுகிறார். இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முற��யாக விளையாடினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு (துடுப்பாட்டம்) ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். சர்வதேசப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே மேலும் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார். + +இது வரை துடுப்பாட்டம் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் தேர்வுப் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது. இவர் ஆறு முறை துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். அதில் 2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பிடித்திருந்தார். தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் தொடர் நாயகன் விருது வென்றார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு தனது 150 ஆண்டு விழாவின் போது அனைத்து காலத்திற்குமான சிறந்த பதினொரு நபர்கள் கொண்ட தேர்வுத் துடுப்பாட்ட அணியை அறிவித்தது. அதில் இடம் பெற்ற ஒரே இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் சச்சின் மட்டுமே. + +விளையாட்டுத் துறையில் இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக 1994 ஆம் ஆண்டில் அருச்சுனா விருதும், 1997 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். மேலும் 1999 இல் இந்தியாவின் குடிமை விருதுகளில் நான்காவதாக கருதப்படும் பத்மசிறீ விருதையும், 2008 இல் இரண்டாவதாக கருதப்படும் பத்ம விபூசண் விருதினைப் பெற்றார். மேலும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் நவம்பர் 16, 2013 இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற சில மணித்தியாலத்தில் இந்தியப் பிரதமரின் அலுவலகத்திலிருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதில் இந்தியாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் பாரத ரத்னா விருது சச்சினுக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் இருந்தது. மிக இள வயதில் இந்த விருதைப் பெற்றவர் ��ன்ற சாதனையையும், விளையாட்டு வீரர்களில் இந்த விருதினைப்பெறும் முதல் வீரர் எனும் சாதனைகளைப் படைத்தார். 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு அந்த ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான சர் கர்ஃபீல்டு சோபர்ஸ் கோப்பை விருது வழங்கியது. + +சச்சின் டெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் சேர்ந்தார். மும்பையின் பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில், இப்பள்ளியின் சார்பாக விளையாடிய இவரும் வினோத் காம்ப்ளியும் இணைந்து 664 ஓட்டங்கள் குவித்துச் சாதனை புரிந்தனர். பின்னர் 1988/89இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ஓட்டங்களைக் குவித்தார். இது இவர் ஆடிய முதல் மாநிலங்களுக்கிடையிலான போட்டி என்பதும் அப்போது அவர் வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது. + +சச்சின் 1989ஆம் ஆண்டு தம் 16ஆவது வயதில் முதன்முறையாக இந்தியாவின் சார்பாகத் தேர்வுப் போட்டிகளில் விளையாடினார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இந்தத் தேர்வுத் தொடரில் அவரால் ஓர் அரைச்சதம் மட்டுமே அடிக்க முடிந்தது. 1990இல் இங்கிலாந்து அணிக்கு எதிராகத் தனது முதல் சதத்தை அடித்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாகத் தொடர்ந்து ஆடி வந்த இவர், தேர்வுப் போட்டிகளில் 15,000 ஓட்டங்களுக்கு மேலும் ஒரு நாள் போட்டிகளில் 18,000 ஓட்டங்களுக்கு மேலும் குவித்த வீரராவார். + +சச்சினுக்கு அஞ்சலி என்ற மனைவியும் அர்ஜுன் என்ற மகனும் சாரா என்ற மகளும் உள்ளனர். + + +சோதனை காலம் + + +இதுவரை சச்சின் எடுத்துள்ள 51 தேர்வுச் சதங்களில் 11 முறை மட்டுமே இந்தியா தோல்வியடைந்துள்ளது. 20 முறை சமநிலையும் 19 முறை வெற்றியும் அடைந்துள்ளது. + +1990 + +"1". இங்கிலாத்திற்கு எதிராக ஓல்ட் டிரஃபோர்டில், ஆகஸ்ட் 14, 1990, 119* ஓட்டங்கள்(சமநிலை) + +1992 + +"2". முதல் சதமெடுத்து ஏறக்குறைய இரு வருடங்கள் பின்னரே ஜனவரி 6, 1992 சிட்னி, ஆஸ்திரேலியாவில் இரண்டாவது சதத்தை (148* ஓட்டங்கள்)நிறைவு செய்தார்.(சமநிலை) + +"3". பிப்ரவரி 3, 1992, அதே ஆஸ்திரேலிய தொடரின் ஐந்தாவது ஆட்டத்தில் 114 ஓட்டங்கள் எடுத்தார்.(தோல்வி) + +"4". நவம்பர் 28, 1992-தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஜோகனஸ்பெர்க்கின், வாண்டரர்ஸ் மைதானத்தில் 111 ஓட்டங்கள்(சமநிலை) + +இதுவரை எடுத்த நான்கு சதங்களுமே இந்தியாவிற்கு வெளியே ஆடுகையில் எடுத்தவை தான். + +1993 + +"5". பிப்ரவரி12, 1993-சென்னை, எம்.ஏ.சி மைதானம், இங்கிலாந்திற்கு எதிராக 165 ஓட்டங்கள்(வெற்றி) + +"6". ஜூலை 31,1993-எஸ்.எஸ்.சி மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 104* ஓட்டங்கள்.(வெற்றி) + +1994 + +"7". ஜனவரி 19, 1994, லக்னோ, இலங்கைக்கு எதிராக, 142 ஓட்டங்கள்(வெற்றி) + +"8". டிசம்பர் 2, 1994-நாக்பூர், மே.இ தீவின் அதிவேக பந்துவீச்சிற்கு எதிராக 179 ஓட்டங்கள்(சமநிலை) + +1996 + +"9". ஜூன் 8,1996-(swing)வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான எட்ஜ்பாஸ்டான் மைதானம்,பிர்மிங்காமில், இங்கிலாந்திற்கு எதிராக 122 ஓட்டங்கள்(தோல்வி) + +"10". ஜூலை 5, 1996-ட்ரெண்ட்பிரிட்ஜ் மைதானம், நாட்டிங்காம், இங்கிலாந்திற்கு எதிராக 177 ஓட்டங்கள்.(சமநிலை) + +1997 + +"11". ஜனவரி 4, 1997, நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானம், கேப்டவுன், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 169 ஓட்டங்கள்(தோல்வி) + +"12". ஆகஸ்ட் 3, 1997, பிரேமதாசா மைதானம், கொழும்பு,இலங்கைக்கு எதிராக 143 ஓட்டங்கள்(சமநிலை) + +"13". ஆகஸ்ட் 11, 1997, 12 ஆவது சதம் எடுத்த ஒரு வாரத்திற்குள் SSC மைதானம், கொழும்பில் இலங்கைக்கு எதிராக 13 ஆவது சதமெடுத்தார் (139 ஓட்டங்கள்). முதன் முறையாக இரு ஆட்டங்களில் தொடர்ச்சியாக சச்சின் எடுத்த சதங்கள் இந்த இரண்டும்.(சமநிலை) + +"14". டிசம்பர் 4, 1997, வான்கடே மைதானம், மும்பை, இலங்கைக்கு எதிராக 148 ஓட்டங்கள்(சமநிலை) + +1998 + +15. மார்ச் 9, 1998, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 155* ஓட்டங்கள்(வெற்றி) + +"16". மார்ச் 26, 1998, எம்.சின்னசாமி மைதானம், பெங்களூர், ஆஸிக்கு எதிராக 177 ஓட்டங்கள்(தோல்வி) + +"17". டிசம்பர் 29, 1998, வெலிங்டன், நியூசிலாந்திற்கு எதிராக 113 ஓட்டங்கள்(தோல்வி) + +1999 + +"18". ஜனவரி 31, 1999, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, பாகிஸ்தானிற்கு எதிரான முதல் சதம்,136 ஓட்டங்கள் (தோல்வி) + +முதுகுவலியுடன் சக்லைன் முஷ்டாக்கின் கடுமையான பந்துவீச்சினை சமாளித்து சச்சின் எடுத்த இந்த சதம் பலருக்கு மறக்கவியலாதது. சென்னை ரசிகர்கள் இந்தியாவின் தோல்விக்குப் பின்னரும் பாகிஸ்தான் அணிக்கு எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். + +"19". பிப்ரவரி 28, 1999, SSC மைதானம், கொழும்பு, இலங்கைக்கு எதிராக 124* ஓட்டங்கள். (சமநிலை) + +"20". அக்டோபர் 30, 1999, PCA மைதானம், மொகாலி, நியூசிலாந்திற்கு எதிராக 126* ஓட்டங்கள்(சமநிலை) + +"21". அக்டோபர் 30, 1999, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், நியூசிலாந்திற்கு எதிராக 217 ஓட்ட���்கள்(முதல் இரட்டை சதம், சமநிலை) + +"22". டிசம்பர் 28, 1999. MCG, மெல்போர்ன், ஆஸிக்கு எதிராக 116 ஓட்டங்கள்(தோல்வி) + +2000 + +"23". நவம்பர் 21, 2000, ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானம், டில்லி, சிம்பாப்வேக்கு எதிராக 122 ஓட்டங்கள் (வெற்றி) + +"24". நவம்பர் 26, 2000VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 201* ஓட்டங்கள்(சமநிலை) + +2001 + +"25". மார்ச் 20, 2001, எம்.ஏ.சிதம்பரம் மைதானம், சென்னை, ஆஸிக்கு எதிராக 126 ஓட்டங்கள்(வெற்றி) + +"26". நவம்பர் 3, 2001, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 155 ஓட்டங்கள்(தோல்வி) + +"27". டிசம்பர் 13, 2001, சர்தார் பட்டேல் மைதானம், அஹ்மதாபாத், இங்கிலாந்திற்கு எதிராக 103 ஓட்டங்கள்(சமநிலை) + +2002 + +"28". பிப்ரவரி 24, 2002, VCA மைதானம், நாக்பூர், சிம்பாப்வேக்கு எதிராக 176 ஓட்டங்கள்(வெற்றி) + +"29". ஏப்ரல் 20, 2002, குயின்ஸ் பார்க் ஓவல் மைதானம், போர்ட் ஆஃப் ஸ்பெயின், மே.இ தீவிற்கு எதிராக 117 ஓட்டங்கள் . (வெற்றி) டான் பிராட்மேனின் 29 சதங்களை சமன் செய்த சதம் இது. + +"30". ஆகஸ்ட் 23, 2002 லீட்ஸ், இங்கிலாந்திற்கு எதிராக 193 ஓட்டங்கள்(வெற்றி) + +"31". நவம்பர் 3, 2002, ஈடன் கார்டன் மைதானம், கொல்கத்தா, மே.இ.தீவிற்கு எதிராக 176 ஓட்டங்கள். (சமநிலை) + +2003 ல் காயம் காரணமாக அதிக ஆட்டங்கள் ஆடவில்லை + +2004 + +"32". ஜனவரி 4, 2004, SCG மைதானம், சிட்னி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241* (சமநிலை) + +"33". மார்ச் 29, 2004, முல்தான், பாகிஸ்தானிற்கு எதிராக 194* ஓட்டங்கள் அப்போதைய அணித்தலைவர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு சச்சினை இரட்டை சதம் எடுக்காமல் செய்தது. (வெற்றி) + +"34". டிசம்பர் 12, 2004, டாக்கா, பங்களாதேஷிற்கு எதிராக 248* ஓட்டங்கள். இதோடு சுனில் கவாஸ்கரின் உலக சாதனையான 34 சதங்களை சமன் செய்தார். (வெற்றி) + +2005 + +"35". டிசம்பர் 22, 2005, டெல்லி, இலங்கைக்கு எதிராக 109 ஓட்டங்கள்(வெற்றி) 34 ஆவது சதத்திற்கு பிறகு அடுத்த சதத்தை எடுத்து கவாஸ்கரின் சாதனையை முறியடிப்பதற்கு ஒரு வருடம் ஆகியது சச்சினுக்கு. + +இடையில் பலமுறை தொண்ணூறுகளில் ஆட்டமிழந்தார் + +2006 + +2006 ல் ஆடிய ஐந்து டெஸ்ட் ஆட்டத்திலும் சதமேதும் எடுக்கவில்லை. சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்ற சலசலப்பு ஏற்பட்டது இந்த வருடத்தில் தான். + +2007 + +"36". மே 19, 2007, சிட்டகாங்கில் பங்களாதேஷிற்கு எதிராக 101 ஓட்டங்கள். (சமநிலை) + +"37". மே 26, 2007, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 122* (வெற்றி) + +2008 + +"38". ஜனவரி 4, 2008, SCG மைதானம் சிட்னியில் 154* ஓட்டங்கள்(தோல்வி) நடுவர்களின் பல தீர்ப்புகள் சர்ச்சைக்கு உள்ளான ஆட்டம் + +"39". ஜனவரி 25, 2008, அடிலைடு ஓவலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 153 ஓட்டங்கள். சர்வதேச அளவில் இது அவருக்கு 80 ஆவது சதம்(ஒருநாள் ஆட்டங்களின் சதங்களும் சேர்த்து) (சமநிலை) + +"40". நவம்பர் 6, 2008, நாக்பூரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 109 ஓட்டங்கள். லாராவின் உலக சாதனையான 11,000 ஓட்டங்களை சச்சின் கடந்த ஆட்டம் இது(வெற்றி) + +"41". டிசம்பர் 15, 2008, சென்னையில் இங்கிலாந்திற்கு எதிராக 103* ஓட்டங்கள்(வெற்றி). மும்பை தாக்குதலுக்கு பின்னர் இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் நாடு திரும்பவா வேண்டாமா என்ற குழப்பத்திற்கு பின்னர் ஆடிய ஆட்டம் இது. + +இந்தியர்கள் அனைவருக்கும் இந்த சதத்தை சமர்ப்பிப்பதாக சச்சின் தெரிவித்தார் + +2009 + +"42". மார்ச் 20, 2009, ஹாமில்டனில் நியூசிலாந்திற்கு எதிரான சச்சினின் 160 ஓட்டங்கள்(வெற்றி) 33 வருடங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் இந்தியா வெற்றி பெற வழி வகுத்தது + +"43". 20 நவம்பர் 2009, அஹ்மதாபாத், இலங்கைக்கு எதிராக 100* ஓட்டங்கள் (சமநிலை) + +2010 + +"44". ஜனவரி 18, 2010, சிட்டங்காங்கில், பங்களாதேஷிற்கு எதிராக 105* ஓட்டங்கள்(வெற்றி) + +"45". ஜனவரி 25, 2010, டாக்காவில், பங்களாதேஷிற்கு எதிராக 143 ஓட்டங்கள்(வெற்றி) + +"46". பிப்ரவரி 9, 2010, நாக்பூரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 100 ஓட்டங்கள் (தோல்வி) + +"47". பிப்ரவரி 15, 2010 ஈடன் காடர்ன் மைதானம்,கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 106 ஓட்டங்கள். இந்த வருடத்தில் ஆடிய நான்கு டெஸ்ட் ஆட்டங்களிலும் சதமடித்திருக்கிறார் சச்சின். (வெற்றி) + +"48". சூலை 28, 2010 - எசு.எசு.சி., கொழும்பு - இலங்கைக்கு எதிராக இரண்டாவது தேர்வுப் போட்டியில் 203 ஓட்டங்கள். (சமநிலை) + +"49". அக்டோபர் 12, 2010 - சின்னசாமி அரங்கம், பெங்களூரு - ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது தேர்வுப் போட்டியில் 214 ஓட்டங்கள். (வெற்றி) + +"50". டிசம்பர் 19, 2010, செஞ்சூரியனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியில் 111* ஓட்டங்கள் (தோல்வி) + +2011 + +"51". ஜனவரி 2, 2011, கேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது போட்டியில் 146 ஓட்டங்கள் + + +முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, ஹாக்கியின் மறைந்த வீரர் தியான் சந்த்திற்கு வழங்க வேண்டியிருந்த விருதை மாற்றி சச்சின் தெண்டுல்கருக்கு வழங்கியதாக இவ்விருதின் தேர்வு முறை குறித்த சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. + + +2010 பிப்ரவரி 24, குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் பன்ன��ட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்கள் குவித்து உலக கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இந்த மகத்தான சாதனை படைக்க சச்சின் டெண்டுல்கர் எடுத்துக்கொண்ட பந்துகள் வெறும் 147 மட்டுமே! + +" இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் இப்படியொரு சாதனையைச் செய்ய வேண்டும் என்ற இலக்கு வைத்து நான் ஆடவில்லை. அணிக்காக ஆடியபோது இந்த சாதனை படைக்க முடிந்தது. 20 ஆண்டுகளாக எனது ஆட்டத்தை ரசித்து உற்சாகப்படுத்தும் என் நாட்டு மக்களுக்கு இந்த சாதனையை அர்ப்பணிப்பதை சிலிர்ப்பாக உணர்கிறேன்!" என்கிறார் கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். +40 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை தெண்டுல்கர் சாத்தியப்படுத்தியுள்ளார். +மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நவம்பர் 14 முதல் 18 வரை நடைபெறற உள்ள 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். + +2013 நவம்பர், 15 அன்று மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தனது இறுதி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் இன்னிங்சில் 74 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 16,000 ஓட்டங்களை எட்ட 79 ஓட்டங்கள் குறைவில் ஆட்டமிழந்தார். + +இவரது ஓய்வின்போது இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க முடிவு செய்து பின்னர் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்டது.. இப்பரிசு பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் ஆவார். +மேலும், மிக இளவயதில் பாரத ரத்னா விருதைப்பெற்ற முதல் இந்தியர் என்கிற சிறப்புக்கும் உரியவர் ஆவார். + +சச்சின் டெண்டுல்கர் , ஏப்ரல் 27 , 2012 அன்று மாநிலங்களவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார் . மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து , ஆகத்து 2014 வரை , 3 முறை மட்டுமே அவைக்கு வந்திருந்தார் . + +2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி மும்பையில் "என் வழியில் விளையாடுகிறேன்" (Playing It My Way) என்ற தலைப்பிலான தனது சுயசரிதையை வெளியிட்டார். + + + + + +சுஜாதா + +சுஜாதா என்ற தலைப்பில் அமைந்த கட்டுரைகள் பின்வருமாறு: + + + + + +வாலி + +வாலி என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன. + + + + + +குற்றியலிகரம் + +நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். + +எடுத்துக்காட்டு +மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரம். வருமொழியின் முதலெழுத்து யகரம். இவையிரண்டும் புணரும்போது குற்றியலுகரம் இகரமாகத் திரிந்து, அரை மாத்திரையளவாக ஒலிப்பதை காணலாம் + + + + +சுந்தர ராமசாமி + +சுந்தர ராமசாமி, (மே 30, 1931 - அக்டோபர் 14, 2005) நவீனத் தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் ஒரு நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர் எனப் பல இலக்கியவினங்களில் ஆளுமை பெற்றிருந்தார். பசுவய்யா என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியவர். நவீனத் தமிழ் இலக்கியத்தில், தமிழ் மொழியினை பல்வேறு தளங்களுக்குக் கொண்டு சென்றார். மார்க்சியக் கண்ணோட்டத்தில் தொடங்கிய இவர் எழுத்துக்கள் (தண்ணீர், பொறுக்கி வர்க்கம்) இறுதியாக பட்டறிவுத் திறனாய்வு சார்ந்த உய்யநிலை நடப்பியல் (Empiricist Critical Realism) நோக்கில் (ஜகதி) கால்கொண்டன எனலாம். இடைபட்ட காலத்தில் புத்தியலின் (Modernism) பலவெளிகளை படைத்தாலும் அவ்வப்போது வியன்புனைவிலும் (இருக்கைகள் போன்றன) திளைத்துள்ளார். + +இவர், நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார். தன் இளைய பருவத்தில்,தொ.மு.சி.ரகுநாதனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தொ.மு.சி-யினால் மார்க்ஸிய தத்துவங்களிலும் ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். பிறகு தொ.மு.சி ஆசிரியராக இருந்த "சாந்தி" என்ற இதழில் எழுதத் தொடங்கினார்.1953 ஆம் ஆண்டு ’சாந்தி’ பத்திரிக்கையில் இவர் எழுதிய ’தண்ணீர்’ கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. + +இவர் சமூக சீர்திருத்தவாதிகளான காந்தி, பெரியார் ஈவெரா, அரவிந்தர், இராமகிருஷ்ண பரம அம்சர், இராம் மனோகர் லோகியா, ஜேசி குமரப்பா, ஜே கிருஷ்ணமூர்த்தி, தமிழ் இலக்கியத்தில் புத்துணர்திறனைப் புகுத்திய புதுமைப்பித்தன் எனப் பலரது நூல்களின் ���ாக்கத்துக்கு ஆட்பட்டுள்ளார். மேலும் மலையாள இலக்கியச் சுடரான எம். கோவிந்தனை 1957இல் தொடர்பு கொண்டு தொடர்ந்து அவரது நண்பராக கடைசிவரை விளங்கியுள்ளார்.. 1950களில் பொதுவுடைமைத் தோழரான ப. ஜீவானந்தம் அவர்களைச் சந்தித்துள்ளார். அதனால் இவருக்கு மார்க்சியத் தத்துவத் தாக்கம் ஏற்பட்டது. தொ.மு.சி. ரகுநாதன் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட "சாந்தி" இதழில் அவரது இலக்கியத் தொடர்பு உருவானது. மேலும் அவர் "சரஸ்வதி" இதழில் ஆசிரியக் குழு உறுப்பினராகியதும் எழுத்தாளராக வளர உதவியது. + + + + + + + +இவர் கீழ்வரும் விருதுகளைப் பெற்றார். + + +தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது காலச்சுவடு அறக்கட்டளையின் பணவுதவியுடன் வழங்கப்படுகிறது. இலக்கியத் தோட்டம் நடத்தும் வருடாந்திர இயல் விருது வழங்கும் விழாவில் இவ்விருதைப் பெறுபவருக்கு ஆயிரம் கனேடிய டாலர்களும் விருதுப் பட்டயமும் வழங்கப்படும். இவ்விருதைப் பெறுபவர் சுயேச்சையான பன்னாட்டு நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்படுகிறார். + +சுந்தர ராமசாமி நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் இலக்கிய அமைப்பு சுந்தர ராமசாமி விருது அளித்து வருகிறது. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்து வரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்படுவார்கள். படைப்புத் துறையில் தொடர்ந்து தீவிரமாக இயங்கிவருபவர்களாக அவர்கள் இருப்பது அவசியம். விருதில் பாராட்டுப் பத்திரமும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கும். + + +புதிய தலைமுறை - புத்தகங்களின் காதலர் - கமலா ராமசாமி : 29 மே 2014 (நன்றி : நெஞ்சில் ஒளிரும் சுடர்/ காலச்சுவடு பதிப்பகம்) + + + + +பல்சாக் + +ஹோனர் தெ பல்சாக் ("Honoré de Balzac") (மே 20, 1799 - ஆகஸ்ட் 18, 1850) ஒரு பிரெஞ்சு எழுத்தாளர். தொண்ணூற்றிரண்டு நாவல்கள், அவற்றுள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்களென பிரெஞ்சு இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளி, ப��்சாக். மனிதத்தையும் அதை சார்ந்த உலகினையும் மிக நுணுக்கமாக அவதானித்த படைப்பாளி இவர். மேற்கத்திய உலகில், 'பல்சாசியன் நடை' என்பது விமர்சகர்களால் பெரிதும் போற்றப்படும் தகுதியாக இன்றைக்கு இலக்கியங்களில் முன்வைக்கப்படுகிறது. 'எழுத்தென்பது தவம்' எனப்புரிந்து செயல்பட்டவர். நல்ல படைப்புக்களுக்காக கடுந்தவம் புரிந்திருக்கிறார். ஆவி மணக்கும் காப்பியைச் சுவைத்தபடி இரவு முழுக்க எழுதுவதென்பது அவரது அன்றாடப்பணி. நாளொன்றுக்கு சராசரியாக பதினெட்டுமணிநேரங்கள் எழுத்துக்குச் செலவிட்டிருக்கிறார் பல்ஸாக். + +பாரிஸ் மாநகர வீதிகளாகட்டும் அல்லது ஒதுங்கிய நாட்டுப்புற நிலங்களாகட்டும், ஆடைகளாகட்டும் அல்லது வீட்டுத் தளவாடங்களாகட்டும், அனைத்துமே, அவரெழுத்தால் துல்லியமாக அறிமுகம் பெறமுடியும். + +"ஏதோவொருவகையில் நான் வகித்தப் பல்வேறுபணிகள் இப்படியானதொரு அவதானிப்புக் குணத்தினை எனக்குக் கொடுத்தன" என்பது, நாம் வியக்கும் அவதானிப்பு குணம்பற்றிய அவரது சொந்த வாக்குமூலம். + +பதிப்பகத் தொழிலில் இவருக்கேற்பட்டத் தோல்விகளும் நிதி நெருக்கடிகளும், அவருக்கான படைப்புக் களங்களை அடையாளம் காணவும், படைப்பு மாந்தர்களை இயற்கை தன்மைகளுக்கு சற்று மேலான தளத்தில் உலவச் செய்யவும் உதவின. சில நேரங்களில் கதைமாந்தர்களுக்கும் அவர்தம் வாழ்வியல் உடமைகளுக்கும் இவர்செய்யும் நகாசு வேலைகள், படைப்புக்களை பெருமைபடுத்துகின்றன. உலகின் பெரும்பாலான தேர்ந்த இலக்கியவாதிகளைப்போலவே, அனுபவங்களென்கிற ரசவாதக் குப்பியில், மேலான சிந்தனைமுலாம் என்கின்ற குழம்பில் தனது படைப்புமாந்தர்களை முங்கியெடுக்கிறார். + +இவரது பெற்றோர்கள் முதலாம் நெப்போலியன் காலத்தில் உயர்பதவியிலிருந்த பிரபுக்கள் வம்சத்தவர். தந்தை, 'பெர்னார் பிரான்சுவா' (Bernard Francois), தாய் 'ஆன்ன் சலாம்பியெ' (Anne Sallambier). பல்சாக் பெற்றோர்களுக்கு இரண்டாவது குழந்தை. பிறந்தவுடனேயே காப்பகத்தில் இடப்பட்டதால், பெற்றோர்களிடம் ஏற்பட்ட வெறுப்பு இறுதிவரைத் தொடர்கிறது. காப்பகத்தில் இவருடனேயே வளர்ந்த சகோதரி 'லோர்'(Laure) ரிடம் ஏற்பட்ட பாசப்பிணைப்பு பலவருடங்கள் நீடிக்கிறது. 1815 ஆம் ஆண்டு Ganser பள்ளியில் நடைபெற்ற மேடைப்பேச்சுகள் மூலமாக தனது தாய்மொழியான பிரெஞ்சு மொழியின் மீது பற்றுக்கொள்ள ஆரம்பித்த���ு. 1816ல், அக்காலத்தில் வாழ்ந்த மேல்தட்டுவர்க்க வழக்கப்படி சட்டம் பயின்றபோதும், இவரது கவனமனைத்தும் மொழியிலும் எழுத்திலுமிருந்தது. + +1819 - 1820 ஆண்டுகளை பல்ஸாக்கின் இலக்கியப்பிரவேச காலங்களெனலாம். ரெனே தெகார்த்தெ , மால்ப்ரான்ச் (Nicholas Malebranche) ஆகியோரது தத்துவார்த்த எழுத்துக்களை விரும்பி வாசித்தார். மற்றமொழி படைப்புக்களையும் விட்டுவைக்கவில்லை. மொழிபெயர்ப்புகளிலும் அதிக நாட்டம். பைரன்(Byron) கவிதைகள், க்ராம்வெல் ( Oliver Cromwell) அவற்றுள் முக்கியமானவை. புகழ்பெற்ற பிரெஞ்சு மொழியின் நாடகவியலாளர்களான ராசின் (Jean Racine), கொர்னெய் (Pierre Corneille) ஆகியோர் அடியொற்றிப் படைப்புக்களை அளித்தார். ழான்-ழாக் ரூஸ்ஸோவினைப்போன்று (Jean-Jacques Rousseau) உருக்கமான புதினமும் எழுதப்பட்டது. இலக்கியங்களின் அனைத்துக்கூறுகளையும் அவர் நாடிபிடித்துப் பார்த்தக் காலமது. + +இக்காலங்களில்தான் தன்னைச் சூழ்ந்துள்ள சமூகத்தையும் அதன் கட்டமைப்பையும் அறிவதற்காக வெகுசனப் புலங்களில் தன்னை ஒளித்துக்கொண்டார். பேட்டைவாசியாகவும், தொழிலாளியாகவும் அவரெடுத்த அவதாரங்களுள், "மனித புத்திகளின் யோக்கியதைகளை அறிவதற்கான தேடல்போதை இருந்திருக்கின்றது" ("Prenant Plaisir A L'identifier. Dans Une Sorte D' Ivresse Des Facultes Morales), என்பது ஒரு விமர்சகரின் கருத்து. + +ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருந்தபோது Buffonனுடைய Histoire Naturelle வாசித்துவிட்டு, "ப்யுஃபோனால், விலங்கியலை அடிப்படையாகக்கொண்டு சிறப்பானதொரு நூலை எழுதமுடியுமென்றால், அவ்வாறான நூலொன்றினை ஏன் நமது சமூகத்திற்காகவும் படைக்கக்கூடாது? என்ற எண்ணம் 1842ல் எழுதபபட்ட 'La Comedie Humaine' க்குக் காரணமாகிறது. மூத்த சகோதரி 'Laure' ன் திருமணம் முடிந்த சிலநாட்களில் எழுதப்பட்டது 'Falthurne' என்ற சரித்திர நாவல். + +1822 ல் மதாம் தெ பெர்னி (Madame de Berny)யிடம் இவருக்கு காதல் ஏற்பட்டது. இளைஞன் பல்சாக்கிற்கு வயது இருபத்துமூன்று, சீமாட்டிக்கு வயது நாற்பத்தைந்து. திருமணமானவள், உபரியாக ஒன்பது பிள்ளைகள், இருந்தும் மோகித்தார். அவளுக்கும் இவரது எழுத்திலும், திறனிலும் நம்பிக்கை இருந்தது. 'Clotilde de Lusignan அல்லது le Beau Juif' என்கின்ற நாவல் இச்சீமாட்டியின் நினைவாகவே எழுதப்பட்டது. + +அடுத்து வெளிவந்தது 'சதசஞ்சீவி' (Centenaire). தனக்குப் பலியானவர்களால் உயிர்வாழ்ந்து யுகங்களிற் பயணிக்கும் கிழட்டு வேதாளத்தைப் பற்றியது. பிறகு 'அர்தென்ன் ராஜகுரு'( Vicaire des Ardennes ). உடன்பிறந்தவளை காதலிக்கும் பாவத்திலிருந்து தப்ப நினைக்கும் இளைஞன், அடுத்து (உண்மை அறியாமல்) மையல்கொள்கின்றபெண் அவனதுச் சொந்தத்தாய். இப்படைப்பு அக்காலத்திய சமூக அமைப்பையும் மத நம்பிக்கையும் கேலி செய்ததற்காகத் தடைசெய்யப்பட்டது. + +சூதாட்டக் கணவனால் துன்புற்று வாழ்ந்த தன் இளைய சகோதரியின் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட 'குடிகேடன்'(Chouhan) படைப்பிற்கு 600 பிரெஞ்சு பிராங்கினை ஒரு பதிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, "எழுதும் தொழில் செய்து அவமானப்படுவதைக் காட்டிலும், விரல்களால் நிலத்தைக் கிண்டி பிழைப்பேன்" என்று சத்தமிட்டுவிட்டு, படைப்பைப் பிரசுரிக்க விரும்பாமல் மேசையில் வைத்துப் பூட்டிக்கொண்டார். + +"எஞ்சிய தேவதை (La Derniere Fee, ou La Nouvelle Lampe) அல்லது புதிய விளக்கு" மற்றொரு வித்தியாசமான புதினம். இந்தமுறை அவரது 'ராஜகுரு - கட்டுபாடற்ற காதலின் மன்னிப்புக் கோரல் என்கிற தலைப்பில் பழைய மொந்தையில் புதியகள்ளாக வெளிவருகிறது. உலக ஒழுக்கிலிருந்து விலக்கியச் சூழலில் வளர்க்கப்பட்ட இளைஞனுக்கு, உலகின் பிரதான இயக்கக்காரணிகளான சமூகம், அரசியல், பந்தம்..போன்றவற்றைத் தெரியப்படுத்த, ஒரு சீமாட்டி முன்வருகிறாள். + +பின்னர் 'அர்தென்ன் ராஜகுரு' வின் தொடர்ச்சியாக 'அன்னெத்தும் கயவனும் - Annette et le criminel)' எழுதப்படுகிறது. . 1824ம் ஆண்டுவாக்கில் பல்சாக்கிற்குக் கிடத்த 'ஹொராஸ் ரேஸ்ஸொன் (Horace Raisson) நட்பு, 'இலக்கியத் தொடர்' -(Feuilleton littéraire) இதழியலைத் தொடங்க உதவுகிறது. இவ்விதழ் ஆரம்ப காலத்தில் எல்லாவற்றையும் எழுத ஆரம்பித்து, நாளடைவில் இலக்கியம், அரசியம், விஞ்ஞானமென தனது எல்லைகளை சுருக்கித் தகுதியை வளர்த்துக்கொண்டது. + +உடன்பிறந்த சகோதரியின் கணவனால் ஏற்பட்ட கடன் தொல்லைகளிலிருந்து மீள்வதற்காக 1828ம் ஆண்டு நண்பர்களின் உதவியுடன் அச்சகம் மற்றும் பதிப்பகத் தொழிலை மேற்கொள்கிறார். Molierன் அனைத்து படைப்புகளும் முறையாக இவரால் பதிப்பிக்கபடுகின்றன. இவரது எண்னத்திற்கு மாறாக இத்தொழில் மேலும் கடனாளியாக மாற்றியது. மீண்டும் எழுத்துலகிற்குத் திரும்புகிறார். + +1829க்குப் பிறகு அவரால் எழுதபட்ட படைப்புகள் அனைத்துமே மகோன்னதனமானவை. முதன்முதலாக அவரது சொந்தப் பெயரில் (HONORE DE BALZAC) படைப்புகள் அச்சுக்கு வந்தன என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும். + + + + +எதுவுமற்ற வாழ்���்கை என்கின்றபோது 'முடிவைத்' தேடி 'அவன்' சென்றான். எல்லாவற்றயும் தனதாக்கிக்கொள்ள முனைந்தபோது, 'முடிவு' அவனைத் தேடிவந்தது நெருங்கினாலும், விலகினாலும் 'இறப்பினை' கடந்தேசெல்லவேண்டும். என்கின்ற விதியினை மனதிற் பதியவைக்கும் அற்புதப் படைப்பு. + + + + + + + +மஞ்சள் (மூலிகை) + +மஞ்சள், அரிணம் அல்லது பீதம் ("Curcuma longa") உணவுப் பொருட்களில் நிறம், சுவை கூட்டியாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படும் பயிராகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலிருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு. நன்கு உலர்த்தப்பட்ட மஞ்சள் கிழங்கின் விரலை ஒடித்தால் உலோக நாதம் உண்டாகும். இது இந்தியாவின் மிகப் பழமையான நறுமணப் பொருள். இதனை இந்துக்கள் மதச் சடங்குகளின் புனிதப் பொருளாக உபயோகிக்கிறார்கள். மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) எனும் வேதிப்பொருள் உண்டு, இது மஞ்சளுக்கு நிறத்தைத் தருவதுடன் மஞ்சளால் அடையக்கூடியப் பல்வேறுபட்ட பயன்களைத் தரும் பொருளாக உள்ளது. + +மஞ்சளுக்கு 20 °C and 30 °C (68 °F and 86 °F) இடைப்பட்ட வெப்பநிலை தேவைப்படுகிறது. மேலும் கணிசமான அளவு நீர்ப்பாசணமும் தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஈரோடு மாவட்டமானது மஞ்சள் வேளாண்மைக்கும்,சந்தைக்கும் பெயர்பெற்றுள்ளது. + +மஞ்சள் தமிழ் நாட்டிலே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சித்த மருத்துவத்தின் பிரதான பகுதியாக பயன்படுத்தப்பட்டது. இது முதலில் நிறமூட்டவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில் இது மருத்துவத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது. + +மஞ்சளில் பல வகைகள் உள்ளன. அவைகளில் ‘ஆலப்புழை மஞ்சள்’ உலகிலேயே மிகச் சிறந்த மஞ்சளாகக் கருதப்படுகிறது. + + +முட்டா மஞ்சள் +இது சற்று உருண்டையாக இருக்கும். இதை அரைத்தோ, கல்லில் உரைத்தோ முகத்திற்குப் பூசுவார்கள். + +கஸ்தூரி மஞ்சள் +இது வில்லை வில்லையாக, தட்டையாக இருக்கும். வாசனை நிறைந்தது. + +விரலி மஞ்சள் +இது நீள வடிவில் இருக்கும். இதுதான் கறி மஞ்சள். + + + +இந்து சமயத்தவர் மஞ்சளைப் புனிதப் பொருளாகக் கருதுகின்றனர். + + + + + + +செல்லிடத் தொலைபேசி + +நகர்ந்து கொண்டே பேசக் கூடிய வசதி அளிக்கும் தொலைபேசிகள் நகர்பேசி என்று அழைக்கப்படுகின்றன. இவை கம்பியில்லா தொலைதொடர்புக்கு உதவுபவை. வழக்கம் தொட்டே சாதாரண தொலைபேசிகள் இயங்க அவற்றிற்கு அருகிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தின் முனையத்துடன் கம்பித் தொடர்பு தேவை. நகர்பேசிகளுக்கு இத்தகைய இணைப்புகள் வானலைகள் மூலம் ஏற்படுத்தப்படுவதால் அவற்றுக்குக் கம்பித் தொடர்பு தேவையில்லை. நகர்பேசியின் இன்னொரு பெயர் செல்பேசி (செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பேச). + +வானொலியை சுருதிகூட்டும் போது சில சமயம் ஒரே அலையெண்ணில் இரண்டு நிலையங்களின் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்க முடியும். இதற்கு காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் குறிகைகள் ஒரே அலையெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகின்றன. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இந்த குறுக்கிடுதல் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகிறது. குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு ஒரு பரவல் குறியீடு மூலம் அலையெண் கற்றையகலம் முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் (அல்லது இரு நகர்பேசிகளுக்கிடையான தொடர்புக்கும்) ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலையெண்ணில் பல அழைப்புகளை ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். குறியீடு பிரிப்பு பன்னணுகல் வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகளில் மட்டும்தான் ஒரே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதேனும் வேறு வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. எந்த ஒரு தொடர்பையும் அலையெண் கற்றையகலத்தைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற தொடர்புகள் தடங்கல் செய்யாது. இதனால் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இது பரவல் நிறமாலை தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது. + +உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறையில், காலப்பிரிப்பு பன்னணுகல் முறையில் அழைப்புகள் (அல்லது தொடர்புகள்) வலையத்தை பகிர்கின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு மூலம் குரல் தரவுகள் குறுக்கப்பட்டு அதிக அழைப்புகளை வலையத்த��ல் ஏற்க இயல்பாகிறது. + +கம்பியில்லா தொலைதொடர்பு அமைப்பு முறையில் பல அங்கங்கள் உள்ளன. அவற்றை கீழே காண்போம். + +முதலில் இருப்பது நகர் நிலையம். இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி. இது வானலைச் செலுத்துப்பெறுவி, காட்சித் திரை, இலக்கக்குறிகைச் செயலிகள், சூட்டிகையட்டை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டை, சந்தாதாரர் அடையாளக்கூறு எனவும் அழைக்கப்படுகிறது. + +ஒரு நகர்பேசி சாதனத்தின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்சாதன அடையாளம் எனப் பெயர். சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - பதிந்துள்ளது. பன்னாட்டு நகர்சாதன அடையாளம் மற்றும் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் ஒன்றுக்கொன்று தினியானவை, அவைகளில் சேர்மானமும் தினித்தன்மையானது. + +கம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தள நிலையம். ஒரு தள நிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் மற்றும் தள நிலைய இயக்ககம் என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தள செலுத்துப்பெறு நிலையத் துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகரும் நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வகிக்கிறது. மாநகரப் பகுதிகளில் தள செலுத்துப்பெறு நிலையங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். + +ஒரு தள நிலைய இயக்ககம் பல தள செலுத்துப்பெறு நிலையங்களை நிர்வகிக்கும். ஒரு தள நிலைய இயக்ககம் வானலைவரிவை துவக்கம், அலைவெண் துள்ளல், கைமாற்றங்கள் ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. தள நிலைய இயக்ககம் எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது. + +பிணையத் துணையமைப்பின் மையத்தில் நகர் நிலைமாற்றகம் சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு ஒரு சாதாரண கணுவாக விளங்குகிறது. இது தவிர, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்துதல், இருப்பிடம் புதுப்பித்தல், கைமாற்றம், அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு ஆகிய பொறுப்புக்களை தாங்கும். நகர் நிலைமாற்றகம் துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை மூலம் ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு அல்லது ஒருங்கிணைந்த இலக்கச் சேவைப் பிணையத்திற்கு இணைகின்றது. + +இல் இருப்பிடம் பதிவகம் மற்றும் விஜய இருப்பிடம் பதிவகம் இரண்டு���் நகர் நிலைமாற்றகத்துடன் ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு முறை அழைப்பின் திசைவு மற்றும் அலையல் திறமைகளை பூர்த்திசெய்கின்றன. + +ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் இல் இருப்பிடம் பதிவகம் மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த நகர்நிலைய அலையல் எண் மூலம்தான் ஒரு அழைப்பு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையத்தில் தருக்கம்படி ஒரு இல் இருப்பிடம் பதிவகம் இருக்கும், ஆனால் அதை ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட செயல்படுத்தப்படலாம். + +விஜய இருப்பிடம் பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் இல் இருப்பிடம் பதிவகத்திலிருந்து எடுத்து சேகரிக்கும். + +நகர் நிலைமாற்றகத்திலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. நகர் நிலைமாற்றகமும் விஜய இருப்பிடம் பதிவகமும் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. + +நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஒரு உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் பன்னாட்டு நகர்சாதன அடையாள எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் சந்தாதர்களின் சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறுதிபடுத்தும். + +கைமாற்றம் என்பது ஒரு நிகழும் அழைப்பை ஒரு கலத்திலிருந்து இன்னொன்றுக்கு நிலைமாற்றுவது. ஒரு கம்பியில்லா பிணையத்தில் நான்கு விதமான கைமாற்றங்கள் உண்டு. + + +முதல் இரு கைமாற்றங்கள் அக கைமாற்றம் எனறழைக்கப்படுகின்றன. இறுதி இரண்டும் புற கைமாற்றம் என்றழைக்கப்படுகின்றன. + +கைமாற்றங்கள் நகர்கருவி மூலம் துவக்கப்படுகின்றன அல்லது பிணையத்தின் உபயோகச் சுமையை சீர்ப்படுத்த நகர் நிலைமாற்றகம் மூலமும் துவக்கப்படுகின்றன. உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பின் பயனில்லா காலகட்டங்கள், மற்றும் குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறையில் குறிப்பிட்ட அலைவெண்களில் நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடத்தை வருடி அருகாமையிலுள்ள கலங்களில் 6 உன்னத கலங்களை அவைகளிருந்து பெறும் வானலை திறத்தின்படி சேகரிக்கும். இத் தகவலை தள நிலைய இயக்ககத்திற்கும் நகர் நிலை மாற்றகத்திற்கும் தெரிவிக்கும். + +கைமாற்றத்தின் செயல்படுத்தம் கம்பியில்லா பிணையத்தை பொறுத்தவரை உள்ளது. குறைவான ஏற்பு படிமுறைப்படி (Minimum Acceptance Algorithm) ஒரு நகர்கருவியின் பெறும் குறிகைத்திறன் (Received Signal Power) ஒரு அளவிற்க்கு மீது குறைந்தால் அதன் இயங்கும் திறன் (Operating Power) அதிகரிக்கப்படுகிறது. அது மீறி பெறும் குறிகைத்திறன் முன்னேற்றம் இல்லையினில் நகர்கருவி வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கும். திறன் சேமிப்பு படிமுறைப்படி (Power Budget Algorithm) இயங்கும் கலத்திலிருந்து குறிகைத்திறன் குறைந்தால் வேறு கலத்திற்கு கைமாற்றம் துவக்கப்படும். + +கம்பியில்லாவில் ஒரு நகர்கருவியின் இருப்பிடம் HLR மற்றும் VLR பதிவகங்கள் மூலம் புதுப்பிக்கப்படுகிறது. ஒரு நகர்கருவி ஒரு பிணையத்திலிருந்து மற்றொன்றிற்கு பயணம் செய்யும்போது அதற்கு பெறும் ஒளிபரப்பில் மாற்றம் தெரியும். அப்பொழுது நகர்கருவி தன் IMSI மற்றும் பழைய தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் எண்களை புது பிணையத்தின் VLR பதிவகத்திற்கு ஒரு புதுப்பிப்புக் கட்டளையாக (Update Request) அனுப்புகிறது. நகர்கருவிக்கு ஒரு புது MSRN எண் ஒதுக்கப்பட்டு புது பிணையத்தின் VLR மூலம் புது HLR பதிவகத்திற்கு அனுப்பபடுகிறது. புது HLR பழைய பிணையத்தின் VLRக்கு முந்திய MSRN எண்ணை ரத்து செய்யுமாறு தெரிவிக்கிறது; அந்த எண்ணை மறு உபயோகம் செய்ய இயல்கிறது. புது TMSI எண் ஒதுக்கப்படுகிறது. MSC அமைப்பு பொதுத் தொலைபேசி பிணையத்திற்கும் கம்பியில்லாப் பிணையத்திற்கும் இடைமுகமாகும். ஒரு PSTN பிணையத்திலிருந்து தோன்றும் அழைப்பு ஒரு நுழைவாயில் நகர்பேசி சந்தாதாரர் எண் (Mobile Station ISDN-MSISDN) மூலம் MSC நுழைவாயிலுக்கு திசைவு செய்யப்படுகிறது. இந்த நுழைவாயில் நகர்பேசி MSISDN எண்ணுடன் HSRஐ வினாவித்து MSRN எண்ணை பெறுகிறது. இந்த MSRN எண்ணுடன் அழைப்பு MSCக்கு திசைவு செய்யப்படுகிறது. MSCயின் VLR பதிவகம் MSRNஐ எடுத்து மாற்றி நகர்கருவிக்கு TMSI எண் ஒன்றை அளிக்கிறது. ஒரு அழைப்பு BSCயின் கட்டுப்பாடு மூலம் நகர்கருவிக்கு திசைவு செய்யப்படுகிறது. + +கம்பியில்லா தொலைதொரபில் ஒரு முக்கியமான இடம் வைத்திருப்பது கம்பியில்லா அணுகு நெறிமுறை. கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையத்திற்கும் ஒரு நகர்கருவிக்கும் இடையே தொடர்பு இயல்பாகிறது. கம்பியில்லா அணுகு நெறிமுறை என்பது ஒரு தூது நெறிமுறை (Messaging Protocol). கம்பியில்லா அணுகு நெறிமுறை மூலம் இணையம் மூலம் நகர்கருவிகளுக்கு மின்னஞ்சல், குரல்தகவல், நாட்குறிப்பு ஆகிய சேவைகளை நிறைவேற்ற இயல்கிறது. ஒரு கம்பியில்லா அணுகு நெறிமுறை அமைப்பில் 3 பாகங்கள் உண்டு: அவை: + + +கம்பியில்லா அணுகு நெறிமுறை நுழைவாயில் (Access Point) WML தகவல்களை கம்பியில்லா அணுகு நெறிமுறையை ஏற்கும் நகர்கருவியுடன் பரிமாற்றுகிறது மற்றும் HTML தகவல்களை இணைய வழங்கன் மூலம் பரிமாற்றுகிறது. இணைய வழங்கன் தரவுத்தளங்களுடன் ASP, ColdFusion, CGI அல்லது PHP ஆகிய மென்பொருள் கருவிகள் மூலம் தொடர்புகொண்டு HTML பக்கங்களை வழங்குகிறது. + +இந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகள் நகர்புறங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளன. நகர்பேசிகளின் பயன்பாட்டுத் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதிலும் இன்று அது நாடெங்கும் இயல்பாக அனைவரும் உபயோகிக்கும் ஒரு பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவனங்கள்... + + + + +இலங்கையில் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் CDMA தொழில் நுட்பம் சண்டெல் மற்றும் லங்காபெல் நிறுவனங்களினால் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொலைத்தொடர்பிற்கு மாத்திரமன்றி இணைய இணைப்பிலும் சண்டெல் மற்றும் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம் விநாடிக்கு 115.2 கிலொபிட்ஸ் இணைப்பிலும் மற்றும் லங்காபெல் விநாடிக்கு 153கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் சண்டெல் விநாடிக்கு 230.4/115.2 கிலோபிட்ஸ் இணைப்பிலும், டயலொக் விநாடிக்கு 460.8/230.4. கிலோபிட்ஸ் இணைப்பிற்கும் உதவுகின்றது. போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களில் கிளிநொச்சி முல்லைத்தீவு தவிர இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இச்சேவை அறிமுகபப்டுத்தப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைத் தொடர்புநிலையத்தின் இச்சேவையை 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இப்போதுள்ள நிலையில் இல��்கைத் தொலைத்தொடர்பு நிலையமும் டயலொக் மற்றும் அதைத் தொடர்ந்து சண்டெல் மற்றும் லங்காபெல் வலையமைப்புக்களும் விளங்குகின்றன. + +இலங்கையில் CDMA சேவையை வழங்கும் நிறுவனஙகள் + +இலங்கையில் GSM (TDMA) சேவையை வழங்கும் நிறுவனங்கள் + + +இந்த இலக்கத்தைக் குறித்து வைத்துக்கொள்ளவும் இது நகர்பேசியானது தொலைந்தால் நகர்பேசியை செயலிழக்கச் செய்ய உதவுவதோடு களவெடுத்தவரைக் கையும் மெய்யுமாகக் கண்டுபிடிக்கவும் உதவும். + + + + + + + +சில நேரங்களில் சில மனிதர்கள் + +சில நேரங்களில் சில மனிதர்கள் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். ஜெயகாந்தனின், "அக்னி பிரவேசம்" என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். லக்ஷ்மி, ஸ்ரீகாந்த், சுந்தராபாய் மற்றும் பலர் நடித்த இப்படத்தினை ஏ. பீம்சிங் இயக்கினார். + +இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் "கொன்னி சமயலுலோ கொம்தரு மனுஷுலு" என்ற பெயரில் வெளிவந்தது. + + + + + +பாரதி + +பாரதி அல்லது பாரதியார் என்ற தலைப்புகளில் உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: + + + + + + + +குடுமியான்மலை + +குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது. + +தற்பொழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால நகர அமைப்புகளில், குடுமியான்மலையும் ஒன்று. முற்காலக் குறிப்புகளில் திருநாலக்குன்றம் என்றும், பின்னர் சிகாநல்லூர் என்றும் குடுமியான்மலை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் முழுதும் ஒரு மலைக்குன்றைச் சுற்றி அமைந்துள்ளது. அந்தக் குன்றின் அடிவாரத்தின் கிழக்குப் பகுதியில்தான் புகழ் பெற்ற குடுமியான்மலை கோயில்வளாகம் அமைந்துள்ளது. + + +குன்றின் மேலும், அதன் அருகிலுமாகச் சேர்த்து நான்கு கோயில்கள் உள்ளன. அவற்ற���ள் ஒரு குடைவரைக் கோயிலும், கலை நயம் மிக்க சிலைகளை உடைய சிகாநாதசுவாமி கோயில் என்ற பெரிய சிவன்கோயிலும் அடங்கும். குடைவரைக் கோயிலில் காணப்படும் இசைக் கல்வெட்டுகள், இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். குடுமியான்மலையில் ஏறக்குறைய 120 கல்வெட்டுகள் உள்ளன. + +இந்தக் கல்வெட்டுகள், குடுமியான்மலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் வரலாற்றை உறுதிசெய்ய உதவுகின்றன. இசைக் கல்வெட்டுகளும், பிற பாண்டியக் கல்வெட்டுகளும் (ஏழு-எட்டாம் நூற்றாண்டு), குடுமியான்மலைக் கோயில் மற்றும் நகரமைப்பின் தொடக்கத்தை ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்கு இட்டுச்செல்கின்றன. மேலக்கோயிலில் உள்ள, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்தச் சிவாலயம் சைவ சமய மீட்சிக்குப் பிறகு கட்டப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. + +இங்குள்ள சிற்பங்கள் ஒன்றில், சிவன் வீணை வாசிப்பது போல் காட்சியளிக்கிறார் (வீணா-தாரா).(சிவன், வீணை வாசிப்பதில் விருப்பமுடைய கடவுள் என்று நம்பப்படுகிறது). இத்தகைய தனித்தன்மை வாய்ந்த இசைக்குறிப்புகள் குடுமியான்மலையில் பொறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, பழங்காலத்தில் இவ்விடம் இசை அறிஞர்களும் மாணவர்களும் அடிக்கடி வருகை தந்திருக்கக் கூடிய பண்பாட்டு மையமாகத் திகழ்ந்திருக்க வாய்ப்புண்டு எனக் கருதப்படுகிறது. + +சோழப் பேரரசின் தொடக்க காலம் முதல்தான், இக்கோயிலின் வளர்ச்சி மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் குறித்த தொடர்ச்சியான கல்வெட்டு ஆதாரங்கள் காணக் கிடைக்கின்றன. தொடக்க காலச் சோழர் கல்வெட்டுகள் (கி.பி ஒன்பதாம்-பத்தாம் நூற்றாண்டு) மேலக்கோயிலிலோ, இரண்டாம் பிரகாரத்தின் சுவர்களிலோ காணப்படுகின்றனவே தவிர முதன்மைக் கோயிலில் (Main shrine) காண இயலவில்லை. இதனால், இக்கோயில் மாற்றி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் (remodelled) என்று அறியப்படுகிறது. கட்டடக்கலை பாணியை கருத்தில் கொண்டு பார்க்கையில், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில்தான் இந்த மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. + +கி.பி 1215 முதல் 1265 வரை, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம், மறு சீரமைப்புப் பணிகள் நடை பெற்றன. பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதுடன் புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்றன. இந்தப்பணியில் கோனாட்டைச் சேர்ந்த நாடுகளும் (வட்டார ஊர்கள் ஒன்றிணைந்த அமைப்பு) நகரங்களும் (வணிகர்களின் அமைப்பு) ஊர்களும், படைப்பற்றுகளும் (Cantonments) பங்கு கொண்டன. ஈகை உள்ளம் கொண்ட தனி நபர்களும் உதவினர். 24 adam-s (one league) கொண்ட ஒவ்வொருவருக்கும் வரிப்பணம் விதிக்கப்பட்டுக் கோயில் பணிக்காகத் திரட்டித் தரப்பட்டது. பணம் தவிர்த்த இன்ன பிற பங்களிப்புகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. + +'உமையாள்வி நாச்சி' என்றபெயருடைய தாசிப் பெண்ணும், இந்த மறு சீரமைப்புப் பணிகளுக்குக் கணிசமாக உதவினார். 73,300 தங்க நாணயங்கள் விலை கொடுத்துக் கோயிலின் சில நிலப்பகுதிகளை வாங்கிய துர்கை ஆண்டாரின் மகள்தான் உமையாள்வி நாச்சி. உமையாள்வி நாச்சி, குகைக்கோயிலை அடுத்துள்ள அம்மன் சந்நிதியைக் கட்டி, அதில் மலையமங்கை (அல்லது சௌந்தர நாயகி) சிலையைப் பிரதிஷ்டை செய்தாள். மேலும் விசலூர், பின்னங்குடி, மருங்கூர் (மருங்குபட்டி), காரையூர் மற்றும் மேலமநல்லூர் ஆகிய ஊர்களில் இருந்து நிலங்கள், தோட்டங்கள், கிணறுகள் வாங்கப்பட்டுக் கோயில் கணக்கில் சேர்க்கப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில், குடுமியான்மலைப் பகுதி ஊர்கள் காங்கேயராயர்களாலும் வானதரையர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வந்தன. + +புதுக்கோட்டை – கொடும்பாளூர் – மணப்பாறை சாலையில், புதுக்கோட்டையில் இருந்து ஏறக்குறைய 20 கி.மீ தொலைவில் குடுமியான்மலை அமைந்துள்ளது. முக்கிய சாலையில் இருந்து விலகி மலை அடிவாரம் நோக்கிச் சென்றால் கோயில் வளாகத்தை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து நகரப்பேருந்து வசதி உண்டு. பேருந்து எண் : எண் 5 , 28 . என்ற எண் கொண்ட பேருந்துகள் சுமார் 45 முதல் ஒரு மணிநேரம் வரை ஆகும், வழியாக கடந்துசெல்லும் ஊர்கள், +திருவப்பூர் , பெருமாநாடு , குமரமலை விளக்கு, புல்வயல் , அன்னாப்பண்ணை, வயலோகம், விசலூர் , குடுமியான்மலை. + + + + +பி. ஆர். ராஜமய்யர் + +பி. ஆர். ராஜமய்யர் அல்லது பி. ஆர். ராஜம் ஐயர் (ஜனவரி 25, 1872 - மே 13, 1898) ஓர் எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாசிரியர், பத்திரிகையாசிரியர், ஆன்மிகம் மற்றும் தத்துவ வேட்கை கொண்ட சிந்தனையாளர். இவர் தமிழில் வெளியாகிய முதல் சில நாவல்களில் ஒன்றாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை மிக இளவயதிலேயே (21ஆம் வயதில்) எழுதியவர். + +ராஜமய்யர், 1872ஆம் ஆண்டு மது��ை மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு என்ற கிராமத்தில் பிறந்தவர். அவர் ஒரு சாதாரண நடுத்தர விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இளமைக் கல்வியை மதுரை பாண்டித்தியப் பாடசாலையில் பயின்றார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் 1889 இல் கலைமாணி (B.A.) பட்டம் பெற்று சென்னை சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். இறுதித் தேர்வில் வெற்றி பெறவில்லை. அதனால் விரக்தியில் ஆழ்ந்திருந்த சமயத்தில், தனது மனத்தை ஞான மார்க்கத்தில் செலுத்தினார். + +"பிரம்மவாதின்" என்ற ஆங்கிலத் திங்களிதழில் Man his littleness and greatness என்ற தனது முதல் கட்டுரையை எழுதினார். இவருடைய எழுத்துக்கள், இவர் வாழ்க்கையின் ஆன்மிகத் தேடலின் பிரதிபலிப்பாக அமைந்தன. சுவாமி விவேகானந்தரால் பணிக்கப்பட்டு பிரபுத்த பாரதா என்ற ஆங்கில பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் எழுதிய தத்துவ விசாரணை கட்டுரைகள், பின்னாளில் "வேதாந்த சஞ்சாரம்" (ஆங்கிலத்தில் Rambles in Vedanta) என்று 900 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளிவந்தது. + +மே 13 ஆம் நாள் 1898 ஆம் ஆண்டு ,தன்னுடைய 26ஆம் வயதில் குடற்சிக்கல் நோய் காரணமாக இயற்கை எய்தினார். "பிரபுத்த பாரதா"வின் 1898 ஜூன் மாத இதழில் இராஜமையரின் மறைவினால் இந்த இதழ் நிறுத்தப்படுகிறது என்ற செய்தி வெளியிடப்பட்டது. [ஆனால், சுவாமி விவேகானந்தரின் பெருமுயற்சியால், பி. ஆர். ராஜமய்யரின் மறைவை அடுத்து 1898 ஆகஸ்டு இதழில் இருந்து சென்னைக்கு பதிலாக அல்மோராவில் உள்ள அத்வைத ஆசிரமத்தில் இருந்து வெளிவர ஆரம்பித்தது.] + +தமிழில் முதல் நாவல் என சொல்லப்படும், மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் 1870ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ராஜமய்யர், தமிழின் இரண்டாம் நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் என்ற நாவலை 1893 ஆம் ஆண்டு விவேக சிந்தாமணி என்ற மாத பத்திரிக்கையில் தொடராக எழுத ஆரம்பித்தார். அவருக்கு அப்போது வயது 21. + +ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலாசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் "கமலாம்பாள் சரித்திரம்", எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். +ஷெல்லி,வேர்ட்ஸ்வொர்த் போன்ற சிறந்த கவிஞர்களின் கவிதைகளை ஊன்றிப் படித்தார். +உலகக் கவிஞர்களில் தலைசிறந்தவர் கம்பர் என்பது அவருடைய கருத்து. + + + + + + + + + + + +திலீப்குமார் (எழுத்தாளர்) + +திலீப்குமார் (Dilip Kumar) ஒரு தமிழ் எழுத்தாளர், இலக்கிய திறனாய்வாளர், சிறுகதையாசிரியர். குஜராத்தி மொழியினை தாய் மொழியாகக் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் பற்று கொண்டவர். சிறுகதை, இலக்கிய திறனாய்வு என இரு துறைகளிலும் எழுதிவருபவர். இவருடைய கதைகள் யதார்த்தின் கனத்தினை வெளிப்படுத்துபவை. தெளிந்த பாத்திரப்படைப்பு, மெல்லிய நகைச்சுவை, அனுபவப்பூர்வமான வாழ்க்கையின் தேடல்கள் கொண்டவை இவருடைய கதைகள். + +2002இல் இந்திய அரசாங்கம் வழங்கும் "பாஷா பாரதி" என்ற மதிப்புமிக்க விருதினைப் பெற்றவர். பல இந்திய இலக்கியத் திட்டங்களுக்கு ஆலோசகராகவும், சிறந்த மொழி பெயர்ப்புக்காக வழங்கப்பெறும் தேசிய விருதுக்கான தேர்வுக் குழுவில் உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். + + + + + + +ராபர்ட் ஹூக் + +ராபர்ட் ஹூக் (Robert Hooke) (1635 - 1703), இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். + +அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹூக் பல வானியல் கருவிகள், கைக்கடிகாரங்கள், சுவர்க்கடிகாரங்கள் ஆகியவற்றை மேம்படுத்தினார். முதன் முதலாக, கோள்களின் இயக்கங்கள் குறித்த கோட்பாடுகளை எந்திரவியல் அடிப்படையில் அணுகி அண்ட ஈர்ப்பு விசையின் இருப்பைக் கணித்தவரும் இவரே. 1684ல், நடைமுறைப்படுத்த வல்ல தந்தி முறை ஒன்றை உருவாக்கினார். முதல் கணிதக் கருவியையும் கிரிகோரிய தொலைநோக்கியையும் ராபர்ட் ஹூக் தான் வடிவமைத்தார். ஹூக் விதியை வரையறுத்தார். + +1665ல் எழுதிய மைக்ரோகிராஃபியாவில் (Micrographia), தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு பற்றி விவரித்துள்ளார். செல் (Cell) என்ற சொல்லை முதலில் உருவாக்கியவரும் இவரே. + + + + + +ஆன்டன் வான் லீவன்ஹூக் + +ஆன்டன் வான் லீவன்ஹூக் ( Anton van Leeuwenhoek, 1632-1723), நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் என்று அழைக்கப்படும் ஒருகல விலங்குகளை முதன் முதலில் அவதானித்தவரும் இவரே. அவர், 247க்கும் மேற்பட்ட நுண் நோக்கும் கருவிகளை உருவாக்கினார்; அவற்றுள் சில, 270 மடங்குக்கும் அதிகமாக உருப்பெருக்கம் செய்யும் திறன் பெற்று இருந்தன. பாக்டீரியாக்கள், புரோட்டோசோவாக்கள், ஸ்பெர்மடோசோவாக்கள், தசைநார்கள், குருதிச் சுற்றோட்டத்தொகுதியில், மயிர்த்துளைக்குழாய்களூடாக, குருதியின் அசைவு என்பவற்றை நுண்ணோக்கியில் அவதானித்து அறிவித்தவரும் இவரே. இரத்த நாள ஓட்டம் பற்றிய விவரிப்பில், இரத்தச் சிவப்பு அணுக்களைப் பற்றியும் பதிவு செய்துள்ளார். + + + + + +கிரிகோர் மெண்டல் + +கிரிகோர் யோவான் மெண்டல் ("Gregor Johann Mendel", சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை "மரபியலின் தந்தை" என்று அழைக்கிறார்கள். + +மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன. + +ஆத்திரியப் பேரரசில் உள்ள ஐன்செண்டோர்ஃபு (மொராவியா) (Heinzendorf (Moravia)) (தற்பொழுதைய இன்றிசெட்டு, நவீ இல்றீன் (Hynčice, Nový Jičín) மாவட்டம், செக் குடியரசு) என்ற இடத்தில�� பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார். + +தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றியவர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. + +1865ஆம் ஆண்டு, பொகீமியாவில் (Bohemia) உள்ள புருன் (Brunn) இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் "தாவரக் கலப்பினமாக்கல் ஆய்வுகள்" என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக் காலக்கட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை. அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்கள் அவருடைய ஆய்வை மேற்கோள் காட்டினர். + +பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்' எனக் க��றிப்பிடப்படுகின்றது. + +1868 -இல், அரசாங்கம் சமய நிறுவனங்களின் மீது சிறப்பு வரிகளை விதிக்க முயன்ற போது, அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையில் இருந்தார். எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார். + +சனவரி 6, 1884ஆம் ஆண்டு ஆத்திரியா-அங்கேரி (தற்பொழுதைய செக் குடியரசு)ல் உள்ள பெறனோ என்ற இடத்தில் நீடித்தக் கல்லீரல் அழற்சி (chronic nephritis) நோயால் உயிரிழந்தார். + +இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் இயூகோ டி விரீசு (Hugo de Vries), காருல் கோரென்சு (Carl Correns) மற்றும் எரிக்கு வான் இட்செர்மர்க்கு (Erich von Tschermak) ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி வில்லியம் பேட்சனுக்கும் கார்ல் பியர்சனுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், ரொனால்டு பிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார். 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகளை மீட்டெடுத்து, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து, தற்கால நவீன கொள்கைகளை உருவாக்கினார்கள். + +மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற புள்ளியியலாளரான ரொனால்டு பிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனித்திருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புகளின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்குப் புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது. + +இங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் (1809 — 1882) மெண்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”உயிரினங்களின் தோற்றம்” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன. + + + + + +அலெக்சாண்டர் பிளெமிங் + +சர் அலெக்ஸாண்டர் ஃபிளெமிங் (Sir Alexander Fleming) (ஆகஸ்ட் 6, 1881 – மார்ச் 11, 1955) நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை "பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum)" என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார். + +உலகம் அறிந்துள்ள மருத்துவ முன்னேற்றங்களுள் பெனிசிலின் கண்டுபிடிப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது. பெனிசிலின் காலத்திற்கு முன் பிரசவத்தில் பெண்கள் இறப்பதும், பிறந்தபின் குழந்தைகள் இறப்பதும் சர்வ சாதாரணம். லேசான சிராய்ப்புகளும் கீறல்களும் கூட மரணத்திற்கு இட்டுச் சென்றன. ஒரு நுண்ணுயிரை வைத்து இன்னொன்றைக் கொல்லமுடிகிற பெனிஸிலின் போன்ற நச்சுமுறி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் பல நோய்களிலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முடிந்தது. பெனிசிலினைக் கண்டு பிடித்து நவீன நச்சுமுறி மருந்துகள் யுகத்தைத் தொடங்கிவைத்த பெருமைக்குரிய விஞ்ஞானிதான் அலெக் ஸாண்டர் ஃப்பௌமிங். பெனிசிலின் உலகெங்கிலும் உள்ள 20 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது என்கிறது ஒரு மதிப்பீடு. + +ஃப்ளெமிங் 1881 ஆகஸ்ட் 6 அன்று ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தவர். அவரது இளமைக்கல்வி இயற்கையெழில் சூழ்ந்த மலைப்பகுதியில் அமைந்தது. அங்குதான் இயற்கையை ரசிக்கவும், எதையும் கூர்ந்து நோக்கி அறிய���ும் அவர் பயிற்சி பெற்றார். பின்னாளில் அவர் பெனிஸிலின் என்ற அற்புத மருந்தைக் கண்டுபிடிக்க இப்பயிற்சியே உதவி செய்தது. + +தொழில் நுட்ப கல்லுாரி படிப்பை முடித்தபிறகு 16 வயதிலேயே கப்பல் நிறுவனம் ஒன்றில் அவர் அலுவலராகச் சேர்ந்தார். எழுத்தர் பணி அவருக்கு மனநிறைவை அளிக்கவில்லை. தூரத்து உறவினர் ஒருவரிடமிருந்து கிடைத்த சொத்து, அவர் மிகத் தாமதமாக தனது 20 வயதில் மருத்துவக் கல்லூரியில் சேர வழி செய்தது. + +படிப்பை முடித்த பிறகு, நோய்க்கிருமிகளுக்கெதிரான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆல்ம்நாத் ரைட் என்பவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார் ஃப்ளெமிங். ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார். ரத்தத்தைப் பரிசோதித்து அந்த நோயை எளிதில் கண்டறியும் ஒரு மேம்பட்ட முறையை ஃப்ளெமிங் அறிமுகப்படுத்தினார். + +நான்கு ஆண்டுகள் நடந்த முதல் உலகப்போரில் ரைட் குழுவினரின் தடுப்பூசி மட்டும் பயன்படுத்தப்பட்டிரா விட்டால், ஆயிரக்கணக்கானோர் டைஃபாய்டு காய்ச்சலுக்கு பலியாகியிருப்பார்கள். போரில் காயமடைந்த வீரர்களுக்கு கார்பாலிக் அமிலம், போரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்ஸைட் போன்ற நச்சுமுறி மருந்துகளையே அக்காலத்தில் பயன்படுத்தி வந்தனர். இந்த மருந்துகள் சிகிச்சைக்கு உதவாததோடு, இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அழித்து மேலும் பலர் இறப்பதற்கே வழிவகுத்தன என்று ஃப்ளெமிங்க் நிரூபித்தார். குறைபாடற்ற நச்சுமுறி மருந்தைக் கண்டுபிடிப்பதில் அவர் கவனம் திரும்பியது. + +பல்வேறு வகை நுண்ணுயிர்களை தட்டுகளில் வளர்த்து அவற்றின் இயக்கங்களை அவர் ஆராயத் தொடங்கினார். தனது மூக்கிலிருந்து ஒழுகிய நீரிலிருந்தே ஓரிரு சொட்டுகள் எடுத்து பாக்டீரியாக்கள் அடங்கிய தட்டில் வைத்து வளர்த்தபோது, சளித்திரவத்தைச் சுற்றியிருந்த பாக்டீரியாக்கள் மட்டும் அழிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தார். இதேபோல் கண்ணீர், உமிழ் நீர், சீழ் போன்ற உடலில் சுரக்கும் பல திரவங்களை எடுத்து ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். இந்த திரவங்கள் அனைத்திற்கும் நோய்க்கிருமிகளை வளராது தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டார். இயற்கையிலேயே அமைந்த இந்த நச்சு முறிபொருளுக்கு ‘லைசோசைம்’ எனப் பெ���ரிட்டார். + +1928ஆம் ஆண்டில் நுண்ணுயிர்கள் வளர்க்கப்பட்ட ஒரு தட்டை நோக்கிய போது, லைசோசைம் அதுவரை செய்திராத ஒரு செயலை காளான் செய்திருந்ததைத் தற்செயலாகக் கண்டார். கொப்புளங்கள், கட்டிகள், மூக்கு, தொண்டை, தோல் இவற்றில் ஏற்படும் தொற்றுநோய்களை வரவழைக்கும் ஸ்டாபைலொகாக்கி எனப்படும் கிருமிகளை காளான் அழித்திருந்தது. அது மட்டுமல்ல, அந்தக் காளானின் சாரம் வெள்ளை அணுக்களை அழிக்கவில்லை என்றும், வேறு திசுக்களைப் பாதிக்கவில்லை என்றும் சோதித்துத் தெரிந்து கொண்டார். காளானில் பரவிய அப்பொருளுக்கு ‘பெனிசிலின்’ எனப் பெயரிட்டார் ஃப்ளெமிங். ஆனால் பெனிசிலினைப் பெரிய அளவில் அப்போது உற்பத்தி செய்ய இயலவில்லை. ஹோவர்டு ஃப்ளோரே, எர்னஸ்ட் செயின் ஆகியோர் அடங்கிய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவினர் 14 ஆண்டுகள் கழித்து அதைச் சாதித்தனர். பெனிசிலின் ஒவ்வாமை உடையவர்களுக்கு வேறு பாதுகாப்பான நச்சுக்கொல்லி மருந்துகளைக் கண்டுபிடிப்பதிலும் அக்குழுவினர் வெற்றியடைந்தனர். + + + + + + + + + + + +ஜேம்ஸ் டூயி வாட்சன் + +ஜேம்ஸ் டூயி வாட்சன் (James Dewey Watson) (பிறப்பு - 1928), அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து (1951) டி.என்.ஏயின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். (எம். ஹெச். எஃப் வில்கின்ஸின் ஊடு-கதிர் விளிம்பு விளைவு ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு செய்யபட்ட) இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் 1953ல் ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசை க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார்.1989 முதல் 19992 வரை (அமெரிக்க) தேசிய மனித மரபணு ரேகை ஆராய்ச்சி மையத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார். மரபியல், பாக்டீரியா திண்ணி மற்றும் புற்று நோய் தொடர்பான ஆராய்ச்சித் துறைகளில் வாட்சன் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார். + + + + + + + +பிரான்சிஸ் கிரிக் + +பிரான்சிஸ் கிரிக் (Francis Crick, சூன் 8, 1916-சூலை 28, 2004), இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் ���ருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக்காவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (1959), ராச்செஸ்டர் பல்கலைக்கழகம் (1959), ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக் கல்லூரி (1960) மற்றும் ப்ரூக்ளின் பல்தொழில் பயிலகம்(Polytechnic)(1953-1954) ஆகியவற்றில் வருகை தரும் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். + + + + + +சீர்காழி + +சீர்காழி (Sirkazhi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் ஆறும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 32,228 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 16,196 ஆண்கள், 16,032 பெண்கள் ஆவார்கள். சீர்காழி மக்களின் சராசரி கல்வியறிவு 84.98% ஆகும். சீர்காழி மக்கள் தொகையில் 13.39% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +பல தலைமுறைகளாக இங்கு கிறித்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்குப் பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர். + +இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி, செங்கமேடு, திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் ,வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு, திருமணஞ்சேரி மற்றும் திருவாழி – திருநகரி விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன. + +ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர். + +இந்தச் சீக���ழியில், ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபாத இருதயர்-பகவதி அம்மையாரின் தெய்வக் குழந்தையாகத் தோன்றியவர் திருஞானசம்பந்தர் ஆவார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்த சமயம், தன் தந்தையுடன் சிர்காழி சட்டை நாத சுவாமி ஆலய குளத்தில் நீராடச் சென்றார். சம்பந்தர் சிறு குழந்தையாதலால் அவரைக் கரையில் அமர்த்திவிட்டு சிவபாத இருதயர், +குளத்தில் ஆழ மூழ்கி நீராடிக் கொண்டிருந்தார். அப்போது சம்பந்தர், தந்தையைக் காணாமல் திகைத்தார். முற்பிறவி நல்வினைகளால் பார்வதியையும் பரமேசுவரனையும் அம்மையப்பராக உணர்ந்து, "அம்மே அப்பா' என்று அழுதார். + +இதைக் கண்ட இறைவன், "கிண்ணத்தில் திருமுலைப்பால் கொடுத்தருள்க" என்று தேவிக்குக் கட்டளையிட்டார். அதன்படியே அன்னை உமாதேவி, ஞானப் பாலை அழுத குழந்தைக்கு ஊட்ட, அந்தக் குழந்தையும் சிவ ஞானம் பெற்று திருஞானசம்பந்தரானது. + +வாயில் பால் வழிந்த நிலையில் நின்ற சம்பந்தரைக் கண்ட அவரது தந்தையார், "பால் கொடுத்தது யார்?" என்று கோபத்துடன் கேட்டு, கோலெடுத்து அதட்டினார். அப்போது சம்பந்தர் "தோடுடைய செவியன்' என்னும் திருப்பதிகம் பாடியருளி, சிவ-பார்வதியே இந்த அருளைச் செய்தனர் என்று தனது தந்தைக்கு உணர்த்தினார். + +அதன்பின் திருஞான சம்பந்தர் சைவ சமயம் தழைக்க, பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று திருப்பதிகங்கள் பாடினார். தனது பதினாறாவது வயதில், நல்லூர்ப்பெருமணம் எனும் ஆச்சாள்புரத்தில், தன்னுடைய திருமணத்தை முடித்து அன்பர்கள் கூட்டத்துடன் தானும் சிவ ஜோதியில் கலந்தார். + +இப்படிச் சைவம் தழைக்கத் தோன்றி, அயராது பாடுபட்டு வெற்றி பெற்ற ஞானசம்பந்தரின் பிறந்த தலமென்ற பெருமையே சீகாழிக்குப் போதுமானது. + +ஏழு தீவுகள் அடங்கிய இந்தப் பேரண்டத்தை, ஒரு சந்தர்ப்பத்தில் கடல் பொங்கி அழித்தது. அப்போது சீகாழி திருத்தலம், பிரளய வெள்ளத்திலும் தோணியாக மிதந்து அழியாதிருந்தது. இதனால் இவ்வூர் "தோணிபுரம்' என்றும் போற்றப்படுகிறது. + +மகாவிஷ்ணு மாவலி மன்னனின் வேண்டுகோளின்படி தனது மூன்றாவது அடியை அவன் தலை மேல் வைத்து பாதாள உலகில் செலுத்தினார். பின்னர், அகங்காரம் ஏற்பட்டு பூமியை நடுங்கச் செய்தார். இதையறிந்த சிவாம்சமான வடுக பைரவர், தமது திருக்கரத்தால் விஷ்ணுவை மார்பில் அடித்து பூமியில் வீழ்த்தினார். இதையறிந்��� மகாலட்சுமி மாங்கல்ய பிச்சை கேட்க, மகாவிஷ்ணுவை மீண்டும் உயிர் பெற்று எழச்செய்தார் பரமேசுவரன். பின்னர் திருமாலின் வேண்டுகோளுக்கிணங்க, இறைவன் அவரது எலும்பைக் கதையாகக் கொண்டும், தோலைச் சட்டையாகப் போர்த்தியும் காட்சி தந்தார். இதனால் சீகாழி பைரவருக்கு "சட்டை நாதர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது. + +காவிரியின் வடகரைத் தலங்களுள் சீகாழியும் ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் "கழுமல வள நகர்' என்றும் குறிப்பிடுவர். பிரமன் தன் தொழில் தடையின்றி நடைபெற வழிபட்டதால் "பிரம்ம புரம்' என்றும், மூங்கில் வடிவமாக இறைவன் தோன்றி இந்திரனுக்கு அருள் செய்ததால் "வேணுபுரம்' என்றும், சூரனுக்கு பயந்த தேவர்கள் புகலிடமாகப் பூசித்ததால், "புகலி' என்றும், வியாழன் பூசித்ததால் "வெங்குரு' என்றும், பிரளய காலத்தில் தோணியாய் மிதந்ததால் "தோணிபுரம்' என்றும், ராகு பூசித்ததால் "சிரபுரம்' என்றும், வராக மூர்த்தி பூசித்ததால் "பூந்தராய்' என்றும், சிபிச் சக்கரவர்த்தி பேறு பெற்றதால் "புறவம்' என்றும், கண்ணன் பூஜித்ததால் "சண்பை' என்றும், பத்திரகாளி, காளிங்கன், பாம்பு பூஜித்ததால் "ஸ்ரீகாளிபுரம்' என்றும் அழைக்கப்படுகிறது. + +இவ்வாலயத்தில் 47 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், மூன்றாம் குலோத்துங்கன், வீர ராஜேந்திரன், ராஜாதிராஜ தேவர், கோப்பெருஞ் சிங்கன், பரகேசரி வர்மன், கிருஷ்ண தேவராயர் எனப் பல்வேறு மன்னர்களின் கல்வெட்டுகள் இங்குள்ளன. + +சீகாழி நகரின் மையப் பகுதியில், நான்கு புறமும் கோபுரங்களுடன், உயர்ந்த திருச்சுற்று மதில்களுடனும் இவ்வாலயம் விளங்குகிறது. இறைவன் பிரம்மபுரீசுவரருக்கும், இறைவி திருநிலை நாயகிக்கும், திருஞானசம்பந்தருக்கும் தனித்தனி ஆலயங்கள் அமைந்துள்ளன. வடக்கு உட்பிரகாரத்தில் முத்துச் சட்டை நாதர் அருள் பாலிக்கின்றார். தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூவர் காட்சியைக் காணலாம். இங்கு சட்டை நாதர் பலிபீடமும் அமைந்துள்ளது. + +மேல் பிரகாரத்தில், கருவறை விமானமேறிச் சென்று தரிசிக்கப் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. +விமானத்தில் பெரிய உருவத்தில் உமா மகேசுவரர், தோணியப்பராகக் காட்சி தருகின்றார். இவரையடுத்து மேல்புறத்தில் சட்டை நாதர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் திருப்பெயராலேயே இத்திருத்தலம் அழைக்கப்படுகின்றது. ஆலய வெளிப் பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் திருஞானசம்பந்தர் திருக்கோயிலும், அதனருகே திருநிலைநாயகி திருக்கோயிலும் அமைந்துள்ளன. அதன் அருகே பெரிய அளவில் பிரம்ம தீர்த்தம், நாற்புறமும் கருங்கல் படிக்கட்டுகளுடன் அமைந்துள்ளது. + +இவ்வாலயத்தில் குரு மூர்த்தம், லிங்க மூர்த்தம், சங்கம மூர்த்தம் என மூன்று வகையான மூர்த்தங்களும் ஒருங்கே அமைந்துள்ளது தனிச் சிறப்பாகும். மலைமீது பெரிய நாயகி சமேத பெரிய நாயகராகக் காட்சி தரும் தோணியப்பரே குரு மூர்த்தமாவார். இவரே திருஞானசம்பந்தருக்கு ஞானோபதேசம் செய்த குரு ஆவார். + +இத்தலத்தின் மூலவராக விளங்கும் பிரம்மபுரீஸ்வரரே லிங்க மூர்த்தமாகும். இவர் பிரம்மனால் பூஜிக்கப்பட்டவர். + +விமானத்தின் உச்சியில் ஆணவ மாயையால் உலகைக் கலக்கிய திருமாலின் உடலைப் பிளந்து, அவருடைய எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் கொண்டு, "சட்டை நாதர்' என்ற திருநாமத்தோடு தனிச் சிறப்புடன் பைரவர் விளங்குகிறார். + +இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், காளி தீர்த்தம், கழுமல தீர்த்தம், விநாயக நதி என இருபத்திரண்டு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இவற்றில் ஞானசம்பந்தருக்கு அன்னை ஞானப்பால் ஊட்டிய இடமான பிரம்ம தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். + +இவ்வாலயத்தில் நாள்தோறும் ஆறு காலப் பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. இதில் இரண்டாம் திருவிழா, திருமுலைப்பால் உற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. திருநிலை நாயகிக்கு ஆடிப்பூர உற்சவமும், நவராத்திரி உற்சவமும் நடைபெறுகின்றன. சட்டை நாதருக்கு வெள்ளிக் கிழமைதோறும் நள்ளிரவில் நடைபெறும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவருக்கு புனுகுச் சட்டம் சார்த்தி வடை, பாயசம் படைக்கப்படுகிறது. + +இவ்வாலயம் திருக்கயிலாயப் பரம்பரை தருமை ஆதீனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.சீகாழி சட்டைநாத சுவாமி ஆலயம் வருவோர்க்கு மிகப் பெரிய வாய்ப்பு ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருஞான சம்பந்தர் அவதரித்த இல்லத்தைத் தரிசிப்பது (இது காஞ்சி சங்கர மடத்தின் பராமரிப்பில் உள்ளது). ஞானசம்பந்தருக்குப் பொன்தாளம் வழங்கிய "திருக்கோலக்கா' என்னும் தலமும் அருகில் இருக்கின்றது. + + + + + + +உயிரித் தொழில்நுட்பத்தின் வரலாறு + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +முதன்முதலில், இரண்டு வெவ்வேறு வைரஸ்களின் DNA துண்டுகளை இணைத்து recombinant molecule செயற்கை முறையில் உருவாக்கப்படுகிறது. + + + + + + + + +Kary Mullis,சிறிய DNA துண்டுகளை விரைவில் பெருக்கம் செய்ய உதவும் 'பாலிமரேஸ் சங்கிலித்தொடர் வினையை' ( polymerase chain reaction (PCR)) கண்டுபிடிக்கின்றனர். + + + +மனித மரபு ரேகை மற்றும் மனித உரிமைகள் மீதான அனைத்துலக தீர்மானத்தை UNESCO அறிவிக்கிறது. + + + +DNAவின் double helix வடிவத்தை வாட்சனும் க்ரிக்கும் கண்டுபிடித்து 50 ஆண்டுகள் நிறைவு. + + + + +உயிரித் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் + +தாவரங்களில் மரபணு மாற்றம் செய்வதின் மூலம், பின்வரும் விரும்பத்தகுந்த குணங்களைப் பெறலாம். + + + +உயிர் நுட்பவியல் சுற்றுப்புறச்சூழலில் முக்கியப்பங்கினை வகிக்கிறது.இதன் மூலம் இயற்கை சுற்றுப்புறச்சூழல் மற்றும் அதன் முக்கிய கூறுகள் ஆகியனவற்றை பாதுகாத்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்துதல் உள்ளிற்றவற்றைஉள்ளடக்கியது.சுற்றுப்புறசூழலை மாசுபடுத்தும் காரணிகளை உயிர்காரணிகள் கொண்டு ஒடுக்கவும், அதனை மறுசுழற்சி முறைகள் மூலம் பொருளாதார பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. + +உயிர்காரணிகள் பயன்படுத்தும் முறை மற்றும் அதன் தோற்றம், அதனை பயன்படுத்தும் தர்மம் ஆகியவற்றை உள்ளடக்கியது உயிர்சட்ட வகைமை. +இதன் மூலம் உயிர் கூறுகள் பற்றிய ஆராய்ச்சிகள் முறைமை படுத்த படுகின்றன. + +பென்சால்டிஹைட் (benzaldihyde) போன்ற பாதுகாப்பான்கள் (preservatives) உணவு பொருட்களுடன் சேர்த்து பல நாட்கள் கெடாமல் பாதுகாக்கலாம். + + + + +திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் + +திருத்தந்தை புனித இரண்டாம் அருள் சின்னப்பர் (Pope St. John Paul II), ( - யோவான்னெஸ் பாவுலுஸ் II), கத்தோலிக்க திருச்சபையின் 264வது திருத்தந்தை ஆவார். இவர் 26 ஆண்டுகள், 168 நாட்கள் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பணியாற்றினார். இதுவரை பணியாற்றிய திருத்தந்தையர்களில் போலந்து நாட்டைச் சேர்ந்த முதலாவது திருத்தந்தை இவராவர். மேலும் 1520க்கு பின்னர் இத்தாலியர் அல்லாத ஒருவர் திருத்தந்தையானதும் இதுவே முதற்தடவையாகும். இவர் 1978ஆம் ஆண்டு அக்டோபர் 16ம் நாள் பதவியேற்றார். வரலாற்றில் நீண்ட காலம் இப்பதவி இருந்தவர்களில் இரண்டாம் இடம் பிடித்தவர். + +இவர் 1340 பேருக்கு அருளாளர் பட்டமும், 483 பேருக்கு புனிதர் பட்டமும் அளித்துள்ளார். இது, இவருக்கு முன், ஐந்து நாற்றாண்டுகளாக இருந்த எல்லா திருத்தந்தையர்களின் கூட்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். இவர் 20-ஆம் நூற்றாண்டின் மிக முக்கிய தலைவர்களுல் ஒருவராக போற்றப்படுகின்றார். தம் 26 ஆண்டு ஆட்சிகாலத்தில் இவர் 129 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். தம் தாய்மொழியான போலியம் மட்டுமல்லாமல் இத்தாலியம், பிரெஞ்சு, ஜேர்மன், ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கீசம், உக்குரேனிய மொழி, ரஷ்யன், குரோவாசிய மொழி, எஸ்பெராண்டோ, பண்டைய கிரேக்கம் (Ancient Greek) மற்றும் இலத்தீன் மொழிகள் இவருக்குத் தெரிந்திருந்தன. + +1920ம் ஆண்டு மே 18ம் தேதி போலந்தின் வாதோவிச்சில் பிறந்த கரோல் யோசேப் வொய்த்திவா என்ற பெயர் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் (யோவான் பவுல்), 1929இல் எமிலியா என்ற தமது தாயை இழந்தார். தமது ஒரே சகோதரரான மருத்துவர் எட்மண்டை 1932இல் இழந்தார். இராணுவ அதிகாரியான தனது தந்தையை 1941இல் இழந்தார். செருமனிய நாத்சிகளின் ஆக்கிரமிப்பால் போலந்தில் பல்கலைக்கழகம் 1939இல் மூடப்பட்டது. எனவே செருமனிக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கத்திலும் தனது பிழைப்புக்காகவும் முதலில் சுண்ணாம்புக்கல் அகழ்விடத்திலும் பின்னர் சொல்வாய் நகரில் வேதித் தொழிற்சாலையிலும் வேலை செய்தார். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கல்விப்படிப்பை மீண்டும் தொடர்ந்து 1946இல் குருவானார். 1964இல் கிராக்கோவ் பேராயராகவும் 1967இல் கர்தினாலாகவும் உயர்த்தப்பட்டார். + +1978ஆம் ஆண்டு அக்டோபர் 16இல் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால் கரோல் யோசேப் வொய்த்திவா, அச்சமயம் இரண்டாம் ஜான் பால் என்ற பெயரைத் தெரிவு செய்தார். 2005 ஏப்ரல் 2ஆம் நாள் காலமானார். + +திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்த சிறிது காலத்திற்குள்ளேயே அவருக்குப் புனிதர் பட்டம் அளிப்பதற்கான விசாரணை தொடங்கியது. வழக்கமாக இவ்வகையான விசாரணை தொடங்குவது ஒருவரது இறப்புக்குப் பின் ஐந்து ஆண்டுகள் கழித்தே ஆகும். ஆனால், இரண்டாம் யோவான் பவுலை விரைவில் புனிதராகக் காண பொதுமக்கள் விரும்பியதைத் தொடர்��்து திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அந்த விசாரணை உடனடியாகத் தொடங்க ஆணையிட்டு, ஐந்து ஆண்டு தாமதக் காலம் வேண்டாமென்று விதிவிலக்கு அளித்தார். + +திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2009, திசம்பர் 19ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலை வணக்கத்திற்குரியவர் என்று அறிவித்தார். பிரான்சு நாட்டைச் சார்ந்த ஒரு கன்னியர் இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதைத் தொடர்ந்து பார்க்கின்சன் நோயிலிருந்து திடீரென குணம் பெற்றதை ஆராய்ந்த வத்திக்கான் பேராயம், அந்நிகழ்ச்சி இறையருளால் நிகழ்ந்ததே என்று அறிக்கையிட்டதைத் தொடர்ந்து, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 2011, மே மாதம் முதல் நாளன்று திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலைஅருளாளர் நிலைக்கு உயர்த்தினார்.. + +திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு அருளாளர் பட்டம் அளிக்கப்பட்ட சில மணி நேரம் சென்ற உடனேயே, அவருடைய பரிந்துரையின் பயனாக ஒரு புதுமை நிகழ்ந்ததாக செய்தி வந்தது. கோஸ்தா ரிக்கா நாட்டு புளோரிபெத் மோரா என்ற பெண்மணிக்கு ஏற்பட்ட மூளை இரத்த அழற்சி, திருத்தந்தை இரண்டாம் யோவானை நோக்கி மன்றாடியதன் விளைவாக, அற்புதமான விதத்தில் மறைந்ததாகவும், அதற்கு மருத்துவர்களால் விளக்கம் தர இயலவில்லை என்றும் செய்தி வெளியானது.இந்த நிகழ்வை ஆய்ந்த வத்திக்கான் பேராயம் அதை ஒரு புதுமை என்று அறிக்கையிட்டது. + +2013, சூலை மாதம் 4ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு ஆணைப்படி, திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு விரைவில் புனிதர் பட்டம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே தருணத்தில் திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் புனிதராக அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் தரப்பட்டது. + +இரு திருத்தந்தையர்களுக்கும் புனிதர் பட்டம் 2014, ஏப்பிரல் 27ஆம் நாள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சி பல சிறப்பு அம்சங்களைக் கொண்டது. + +இரண்டாம் யோவான் பவுல், இருபத்திமூன்றாம் யோவான் ஆகிய இரு திருத்தந்தையருக்கும் ஒரே நாளில், ஒரே நிகழ்ச்சியின்போது புனிதர் பட்டம் வழங்கப்பட்டது ஒரு சிறப்பு நிகழ்வாயிற்று. அதுபோலவே திருத்தந்தை பிரான்சிசு தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றி அப்பதவியிலிருந்து விலகிய முன்னாள் திருத்தந்தையான பதினாறாம் பெனடிக்டோடு இணைந்து பொதுமக்களுக்குமுன் திருப்பலி நிறைவேற்றி அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதும் வரலாற்றுச் சிறப்பானதாகும். +புனிதர் பட்டம் வழங்குவதற்காகத் தேர்ந்துகொள்ளப்பட்ட நாள், 2014, ஏப்பிரல் 14, ஞாயிற்றுக் கிழமை கத்தோலிக்கருக்குச் சிறப்பான நாள். இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் வருகின்ற அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு முந்திய மாலையில்தான் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் இறந்தார். மேலும் பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான அந்த நாள் "இறை இரக்க ஞாயிறு" என்ற பெயரால் கொண்டாடப்பட வழிவகுத்தவர் இரண்டாம் யோவான் பவுல். + +புனிதர் பட்டமளிப்பு நிகழ்ச்சியின்போது மறையுரை ஆற்றிய திருத்தந்தை பிரான்சிசு, தமக்கு முன் திருத்தந்தைப் பணியை ஆற்றிய இரு புதிய புனிதர்களான திருத்தந்தையரின் சிறப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்கள் இருவரும் கடவுளின் இரக்கத்தை வலியுறுத்தினார்கள் என்று அவர் கூறினார். திருத்தந்தை இருபத்திரண்டாம் யோவான் வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தைக் கூட்டி (1962-1965), இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தார். திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் "குடும்பங்களை ஆதரித்து வளர்த்தார்." + +திருத்தந்தை பிரான்சிசு நிகழ்த்திய புனிதர் பட்டமளிப்பு விழாவில் அவரோடு முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கூட்டுப் பலி நிறைவேற்றினார். மேலும் உலகத்தின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 150 கர்தினால்மார், 700 ஆயர்கள் மற்றும் 1000 குருக்களும் கலந்துகொண்டனர். புனிதர்களாக அறிவிக்கப்பட்ட இரு திருத்தந்தையர்களின் மீபொருள்கள் வெள்ளிப் பேழைகளில் கொண்டுவரப்பட்டு, மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டன. திருத்தந்தை யோவானின் உடல் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்க்கோவிலிலிருந்து மேற்கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டபோது அவருடைய உடலிலிருந்து எடுக்கப்பட்ட தோல் பகுதி அவருடைய மீபொருள் ஆனது. + +திருத்தந்தை இரண்டாம் யோவானின் மீபொருளைக் கொண்டுவந்தவர் அவருடைய பரிந்துரையால் குணம் பெற்ற பிளோரிபெத் மோரா டியாஸ் என்னும் கோஸ்தா ரிக்கா நாட்டுப் பெண்மணி. அவர், திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலின் உடலிலிருந்து, அவர் 2005இல் இறப்பதற்குமுன் மருத்துவப் பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட அவரது இரத்தம் அடங்கிய பேழை. + +புதிய புனிதர்களின் உருவங்��ள் சித்தரிக்கப்பட்ட பிரமாண்டமான தொங்குதிரைகள் புனித பேதுரு பெருங்கோவிலின் முகப்பிலிருந்து தொங்கவிடப்பட்டிருந்தன. பீடத்தைச் சுற்றிலும் 30 ஆயிரம் மலர்கள் அணிசெய்தன. அம்மலர்களை எக்குவடோர் நாடு நன்கொடையாக அளித்திருந்தது. + +சுமார் 500 ஆயிரம் திருப்பயணிகள் கோவில் வளாகத்திலும் அதன் முன் டைபர் நைதி நோக்கிச் செல்லும் பெருஞ்சாலையிலும் கூடி நின்று பங்கேற்றனர். போலந்து நாட்டவரான திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்த ஆயிரக்கணக்கான போலந்து திருப்பயணிகள் தம் நாட்டுக் கொடியை அசைத்தவண்ணம் நின்றனர். + +93 உலக நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்த புனிதர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள பிரதிநிதிகளை அனுப்பியிருந்தன. அவற்றுள் 19 தூதுக்குழுக்கள் நாட்டு அதிபர்கள் தலைமையின்கீழும் 24 குழுக்கள் நாட்டுப் பிரதமர்களின் தலைமையின்கீழும் வந்தன. எசுப்பானியாவின் அரசரும் அரசியும், பெல்ஜியத்தின் முன்னாள் அரசியும் பங்கேற்றனர். + +போலந்தில் இவருடைய மிக உயரமான சிலை ஏப்ரல் 2013ல் திறந்து வைக்கப்பட்டது. 45 அடி உயரமும் 5,000 கிலோகிராம் எடையும் கொண்ட திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் இந்த சிலைதான் உலகிலேயே இவரின் மிக உயரமான சிலை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு சிலியில் 40 அடி உயரமுடைய இவரின் சிலையே உலகில் மிகப்பெரியதாக இருந்தது. இந்த சிலை அமைக்க தொழிலதிபர் லெஸ்ஜெக் லைசன் என்பவர் முழு நிதியுதவியும் அளித்துள்ளார். + +2010ஆம் ஆண்டில் குரோஷியா நாட்டுக்குத் தம் குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். அப்போது நீரில் மூழ்கி இவருடைய மகன் இறக்கும் நிலை ஏற்பட்டது. அந்த விபத்தில் இருந்து இவருடைய மகன் உயிர் பிழைத்தார். அதற்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் பரிந்துரையே காரணம் என்று நம்பிய லைசன் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயரமான ஜான் பாலின் சிலையை அமைக்க நிதியுதவி அளித்தார். அதன்படி போலந்தின் செஸ்டோகோவா என்ற இடத்தில் இந்த சிலையை செஸ்டோகோவா நகரின் பேராயர் வாட்சுவா தேபோ திறந்து வைத்தார். + +உலகிலேயே இயேசு கிறித்துவின் மிக உயரமான சிலையும் போலந்து நாட்டில்தான் உள்ளது. 118 அடி உயரம் கொண்ட இச்சிலை 2011இல் ஸ்வீபோட்சின் நகரில் எழுப்பப்பட்டது. + + + + +ஆழிப்பேரலை + +சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை ("Tsunami", யப்பானிய மொழி: 津 波 ட்சு னமி "துறைமுக அலை") என்பது கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். + +சுனாமி என்பது யப்பானிய சொல். சு என்றால் துறைமுகம். நாமி என்றால் அலை, எனவே சுனாமி என்றால் "துறைமுக அலை" என்று பொருள். சுனாமி சில நேரங்களில் பேரலைகள் எனக் குறிப்பிடப்படுகிறது. சுனாமி அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை, கடல் அல்லது பெரிய ஏரி போன்ற பெரிய நீர்ப்பரப்புகளில் சடுதியாகப் பெருமளவு நீர் இடம்பெயர்க்கப்படும் போது ஏற்படும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அலைத் தொடர்களைக் குறிக்கும். நிலநடுக்கம் (பூமி அதிர்ச்சி), மண்சரிவுகள், எரிமலை வெடிப்பு, விண்பொருட்களின் மோதுகை போன்றவை சுனாமி அலைகளை ஏற்படுத்தக் கூடிய மூலக் காரணிகளாகும். சுனாமி உண்மையில் அலைகள் இல்லை, ஏனெனில் சமீபத்திய ஆண்டுகளில், இத்தொடர் அறிவியல் சமூகத்தில் பயனிழந்து உள்ளது. ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த இந்த வார்த்தை அதன் பொதுவான தோற்றத்திலிருந்து பெறப்பட்டது. இங்கு "பேரலை" என்பது ஒரு நம்ப முடியாத உயர்அலை போன்ற தோற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பெயராகும். சுனாமி, கடலலை இரண்டும் கடலில் அலையை உருவாக்கி நிலத்தை நோக்கிச் செலுத்துகிறது. இதில் சுனாமியால் ஏற்படும் கடல் நீர் ஏற்றம் பெரிய அளவினதாகவும், அதிக நேரம் நீடிக்கக் கூடியதாகவும், அதனால் உண்டாகும் இயக்கம் மிகவும் அதிகமாகவும் இருக்கும். + +‘அலை' என்ற வார்த்தைக்கு “போல" அல்லது “அதே தன்மை கொண்ட என்ற பொருளும் உண்டு. சுனாமி என்பது துறைமுகங்களில் ஏற்படும் அலை அல்ல என்று புவியியலாளர்கள் மற்றும் கடலியலாளர்களும் கருதுகின்றனர். சுனாமிக்கு வேறு சில மொழிகளில் வேறு வார்த்தைகள் உண்டு. தமிழில் “ஆழிப்பேரலை என்று உள்ளது. ஆக்கினஸ் மொழியில் சுனாமியை “பியுனா" அல்லது “அலோன்" புலூக் என்பர். “அலோன்" என்ற வார்த்தைக்குப் பிலிப்பைன்ஸ் மக்களின் மொழியில் “அலை" என்று பெய���். இந்தோனேசியாவின் மேற்கு சுமித்ரா கடற்கரையில் உள்ள சிமிலி தீவில் உள்ள மொழியில் “சுமாங்" என்றும் சிகுலி மொழியில் “எமாங்" என்றும் அழைப்பர். + +கி.மு. 426 கிரேக்க வரலாற்றாசிரியர் தியுசிடைட்ஸ், சுனாமி ஏற்படுவதற்கான காரணங்களை “பிலோப்போனேசியப் போர் வரலாறு” என்ற புத்தகத்தில் கூறியுள்ளார். அவர் தான் முதன்முதலில் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும், எந்த இடத்தில் நிலநடுக்கம் கடலில் உண்டானதோ அங்கு கடல் உள்வாங்கும். பின்பு திடீர் பின்வாங்குதலும், மறு இரட்டை சக்தியும் கொண்ட வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. நிலநடுக்கம் ஏற்படாமல் இப்படி ஒரு விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என குறிப்பிட்டுள்ளார். கி.பி. 365 இல் அலெக்சாந்திரியாவில் மிகப் பெரிய அழிவுக்குப்பின் ரோமன் வரலாற்றாசிரியர் அம்மியனஸ் மாசில்லினுஸ் சுனாமி என்பது, நிலநடுக்கத்தில் தொடங்கி கடல் நீர் பின்னடைவு, அதைத் தொடர்ந்து ராட்சத அலை என்ற தொடர்ச்சியான நிகழ்வாக அமைகிறது என்றார். அதாவது, நிலநடுக்கம் என்பது நிலப்பகுதியில், கடல் பகுதியில், மலைப்பகுதியில் ஏற்படும். நிலப்பகுதியில் வந்தால் நிலத்தில் உள்ளவை அதிர்ந்து சேதமாகிறது. கடலில் வந்தால் கடலின் ஆழமான பகுதியிலுள்ள நிலத்தட்டுக்களின் அசைவு பெரிய அலைகளை உருவாக்குகின்றது. மலையில் எரிமலையாக உருவெடுகிறது.பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நிலத்தட்டுத்தான் இருந்தது. அதன் மீது தான் பூமி இருந்தது. ஆனால் கண்டங்களாகப் பிரிய, பிரிய, அதன் தட்பவெப்ப, இயற்கை சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு நிலத்தட்டுக்கள் உருவாகின. இந்தத் தட்டுக்களின்மீதுதான் ஒவ்வொரு கண்டமும் இருக்கின்றன. நிலம், கடல் எல்லாவற்றையும் தாங்கி நிற்பது இந்த நிலத்தட்டுக்கள் தான். இதைத் தான் ‘டெக்டானிக் பிளேட்கள்’ என்று புவியியல் நிபுணர்கள் கூறுகின்றனர். + +ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, கி.மு. 365 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி கிழக்கு மத்திய தரைக்கடலில் தோன்றி, எகிப்தில் அலெக்சாண்டிரியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. + + +சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது ஜப்பான் நாடு தான். 2004ல் இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் மிக மோசமான ஆழிப்பேரலை காரணமாக 2,30,000 மக்கள் உயிரிழந்தனர். சுமித்ரா பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற��படுவதால் அங்கு சுனாமிக்கான வாய்ப்புகள் அதிகம்.2004 ஆம் ஆண்டில், டிசம்பர் 26 ஆம் நாளன்று, யுரேஷியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகக் கருதப்படும் பர்மா நிலத்தட்டும், இந்தோ-ஆஸ்திரேலியன் நிலத்தட்டின் ஒரு பகுதியாகிய இந்திய நிலத்தட்டும், இந்தோனேசியாவின் வடக்கே சுமாத்திரா தீவில், கடலுக்கடியில் மோதியது. அதனால் ஏற்பட்ட பூகம்பத்தால் தோன்றிய அலைகள் தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமியை ஏற்படுத்தியது. இதுவே 2004 ஆம் ஆண்டின் மிகப்பெரிய இயற்கை அழிவாகக் கருதப்பட்டது. இது 2004 ஆம் ஆண்டு - இந்தியப் +பெருங்கடலின் பூகம்பமும், ஆழிப்பேரலையும் எனப்படுகின்றது. + +சுனாமி உண்டாவதற்கு முக்கிய காரணம், கடலில் ஒரு கணிசமான அளவு நீர் இடப்பெயர்ச்சி ஆவதே ஆகும். நீர் இடப்பெயர்ச்சி ஆவதற்கு நிலநடுக்கங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் காரணம். மிக அரிதாகச் சில நேரங்களில் விண்கல் விண்கற்கள் மற்றும் அணு சோதனைகள் மூலமும் சுனாமி உருவாகும். இவற்றால் உண்டாகும் அலைகள் பின்பு ஈர்ப்பு சக்தியால் நீடிக்கிறது. அலைகள் சுனாமி உருவாவதில் எந்தப் பங்கும் வகுப்பதில்லை. + + +கடல் படுகையில் திடீரென ஏற்படும் மாற்றதால் மேலிருக்கும் தண்ணீர் செங்குத்தாக இடமாற்றம் அடைவதால் சுனாமி உருவாகும். +டெக்டானிக் நிலநடுக்கங்கள், பூமியின் புவி ஓடு உருக்குலைவதால் உண்டாகும், இது கடலுக்கு அடியில் ஏற்படும் போது சிதைக்கப்பட்ட பகுதியிலுள்ள தண்ணீர், சமநிலையில் இருந்து இடம் பெயர்கிறது. டெக்டானிக் தட்டுகளின் தவறான சுழற்சி காரணமாக, செங்குத்தாக நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது. இயக்கத்தில் ஏற்படும் சாதாரண தவறுகளாலும் கடல் படுகையில் இடப்பெயர்ச்சி ஏற்படும். ஆனாலும் இவை பெரிய சுனாமியை உண்டாக்குவது இல்லை. சுனாமிகள் ஒரு சிறிய அலை வீச்சும், மிக நீண்ட அலை நீளமும் உடையவை சாதாரண கடல் அலை 30 அல்லது 40 மீட்டர் அலைநீளம் உள்ளவை. ஆனால் சுனாமி அலைகள் சில நூறு கிலோ மீட்டர் நீளம் உடையவை. இவை கடல் பரப்பைவிட 300 மில்லி மீட்டர் மேலே சிறிய வீக்கம் போன்று உருவாகும். அவை தாழ்வான நீலை அடையும் போது மிக அதிக உயரமாக மேலெழுகிறது. சுனாமியின் சிறிய அலைகூட கடலோரப்பகுதியை மூழ்கடித்து விட முடியும். ஏப்ரல் 1946, அலாஸ்காவில் அலேடன் தீவுகளுக்கு அருகில் 7.8 ரிக்டர் அளவுகள் பூகம்பம் ஏற்பட்டது. இதனால் 14 மீட்டர் உயரத்திற்கு அலை மேலே எழுந்து ஹவாய் தீவில் உள்ள ஹிலோ என்ற இடத்தையே அழித்து விட்டது. பசிபிக் பெருங்கடல் தரையில் அலாஸ்கா கீழ்நோக்கித் தள்ளப்பட்டதால், உண்டான பூகம்பமே இதற்குக் காரணம். குறுகும் எல்லைகளில் இருந்தும் ஸ்டாரிக்கா என்ற இடத்தில் 8,000 வருடங்களுக்கு முன் சுனாமி தோன்றியது. கிராண்ட் பேங்க் 1929, பப்புவா நியு கினியா 1998 (டப்பின் 2001) சுனாமிகள் ஏற்படக் காரணம் பூகம்பத்தின் மூலம் உண்டான வண்டல் கடலில் சென்று கலந்ததால் உண்டானது. ஸ்டாரிக்கா வண்டல் தோல்விக்குச் சரியான காரணம் தெரியவில்லை. அதிகப்படியான வண்டல்கள், ஒரு நிலநடுக்கம் அல்லது எரிவாயு ஹைட்ரேட் வெளியானது(மீத்தேன் போன்ற வாயுக்கள்) காரணமாகவும் ஏற்பட்டிருக்கலாம். 1960 வால்டிவியா பூகம்பம் +(9.5 ஆறு), 1964 அலாஸ்கா பூகம்பம் (9.2 ஆறு), 2004ல் இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் 2011ல் தோஹூ பூகம்பம் (9.0 ஆறு) போன்றவை சமீபத்தில் நிகழ்ந்த சக்தி வாய்ந்த நீள் ஊடுருவு பூகம்பங்கள். ஜப்பானில் சிறிய (4.2 ஆறு) பூகம்பம் ஏற்பட்டு அருகிலுள்ள கரையோரப் பகுதிகளை ஒரு சில நிமிடங்களில் பாழ்படுத்தியது. + +1950களில் பெரும் நிலச்சரிவுகள் மூலம் தான் பெரிய சுனாமிகள் உண்டானது என்று நம்பப்பட்டது. நீருக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகளால் ஏற்படும் சுனாமியை “சியோருக்கஸ்" என்று அழைத்தனர். இதனால் அதிக அளவு நீர் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது ஏனெனில் நிலச்சரிவினால் உண்டாகும் கழிவுகள் அல்லது விரிவாக்கத்தால் உண்டாகும் சக்தி திரும்பவும் நீருக்குள்ளேயே செலுத்தப்டுகிறது. 1958ல் மிகப்பெரிய நிலச்சரிவு, அலாஸ்காவின் லிடுயா விரிகுடா பகுதியில் ஏற்பட்டபோது 524 மீட்டர் உயரத்திற்கு (1700 அடிக்குமேல்) அலை ஏற்பட்டது. இந்த அலை உடனடியாக நிலத்தை அடைந்து விட்டதால் நீண்ட தூரம் பயணிக்கவிலை. இதில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இருவர் கொல்லப்பட்டனர். ஆனால் மற்றொரு படகு அதிசயமாக அந்த அலையில் சவாரி செய்து கரையை அடைந்தது. விஞ்ஞானிகள் இந்த அலைகளை “மெகா சுனாமிகள்" என்று அழைத்தனர். அறிவியலாளர்கள் எரிமலை தீவின் இடிந்து விழும் மிகப் பெரிய நிலச்சரிவுகளால் மிகப்பெரிய, ஒரு பெருங்கடலையே கடக்கக் கூடிய மிகப் பெரிய “மெகா சுனாமியை” உருவாக்க முடியும் என்றனர். + +சுனாமிகள் இரு வழிகளில் சேதத்தை ஏற்படுத்துகிறது. பெருமளவு சக்தியுள்ள பெரிய அலை (நீரலை) அதிக வேகத்தில் செல்வதாலும், அலைகள் பெரிய அளவு இல்லாவிட்டாலும் நிலப்பகுதியை மொத்தமாக அழித்து, எல்லாப் பொருட்களையும் தன்னுடன் எடுத்துச் சென்று விடுவதாலும் பெரும் சேதம் ஏற்படுகிறது. சாதாரண காற்று அலைகள் 100 மீட்டர் அலை நீளமும், 2 மீட்டர் உயரமும் உடையவை. ஆழமான பெருங்கடலில் ஒரு சுனாமி 200 கிலோ மீட்டர் அலை நீளமும், மணிக்கு 800 கிலோ மீட்டர் பயணிக்கும் சக்தியும் உடையது. அதன் மகத்தான +அலைநீளம் ஒரு சுழற்சியை முடிக்க 20 அல்லது 30 நிமிடங்கள் எடுத்து 1 மீட்டர் அலை அலைவு கொண்டதாக உள்ளது. இதனால் ஆழ்கடல் பகுதியில் சுனாமியை அறிய முடிவதில்லை. அரிதாகக் கப்பல்கள் சுனாமி அலை கடப்பதை உணர்கின்றன. சுனாமி கரையை அணுகும் போதும், நீர் ஆழமற்ற இடத்திலிருக்கும் போதும் அதன் வேகம் ஒரு மணிக்கு 80 கிலோ மீட்டருக்குக் கீழ் குறைகிறது. அதன் அலைநீளமும் 20 கிலோ மீட்டராகக் குறைகிறது. ஆனால் அதன் வீச்சு மிகுந்த அளவில் வளரும். சில நிமிடங்களில் சுனாமி அதன் முழு உயரத்தை அடைந்து +விடும். மிகப்பெரிய சுனாமியைத் தவிர, நெருங்கிய அலைகளை உடைக்க முடியாது. மாறாக ஒரு வேகமாக நகரும் அலைகளின் துவாரம் போன்று தெரியும். விரிகுடாக்கள் மற்றும் மிகவும் ஆழமான நீர்அருகில் சுனாமிகள் உண்டானால் அவை சுனாமியை ஒரு படிக்கட்டு போன்றும், ஒரு செங்குத்தான அலையாகவும் மாற்றுகிறது. இதன் காரணமாகத் தான் ஜப்பானிய மொழியில் இதனை “துறைமுக அலை” என்று கூறுவர். சில நேரங்களில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், மீன்பிடிக்கும் போது எந்த அசாதாரண அலையையும் உணராமல், கரைக்குத் திரும்பி +வந்த பின் கிராமமே பெரிய கடலலையால் அழிவுற்றதைக் கண்டுள்ளனர். சுனாமியின் உச்ச அலை கரையை அடையும் போது, கடல் மட்டம் தற்காலிகாக உயரும். இதை “ரன்” என்று குறிப்பிடப்படுகிறது. இவை கடல் மட்டத்திற்கு மேலிருந்து அளக்கப்படுகிறது. அலை உச்சிகளுக்கு இடையில் பலமடங்கு அலைகள் பலமணி நேரங்கள் தொடர்ந்து வந்தால், அதைப் பெரிய சுனாமி என்கிறோம். கரையை அடைந்த முதல் அலை உயர்ந்த ரன் இல்லை, சுனாமிகள் சுமார் 80ரூ பசிபிக் பெருங்கடலில் ஏற்படுறது. ஏரிகள் உள்ளிட்ட பெரிய நீர்ப்பரப்பு பகுதிகளிலேயே சுனாமி ஏற்படுகிறது. அவை பூகம்பங்கள், நிலச்சரிவுகள், எரிமலை வெடிப்புகள், பனிப்பாறைகள் நகர்வு போன்றவைகளால் உருவாகிறது. +சுனாமியின் குறைபாடு என்னவென்றால் ஒரு அலை முகடு கரையை அடைவதைவிட தொட்டி போன்ற பகுதி முதலில் அடையும். இதனால் கடற்கரைளை ஒட்டிச் சாதாரணமாக மூழ்கி இருக்கும் இடங்கள் வெளிக்கொணரப்படுகிறது. அலை தொட்டி போன்ற பகுதிக்கு வெளிப்புறமாக நீரில் பரவுகிறது. அலை நேரத்தின் பாதி அளவு நேரத்திலேயே அலைகள் தோன்றுகின்றது. சில நேரங்களில் ஆர்வத்தின் காரணமாகவோ அல்லது +கடல்படுகையில் உள்ள மீனைப்பிடிக்கும் ஆர்வத்திலோ உள்ள மக்கள் இந்த ஆபத்துகளை உணர முடியாமல் போகிறது. + +பூகம்பங்களைப் போலச் சுனாமியின் செறிவு மற்றும் அளவு மாறுபாடுகளை ஒப்பீடு செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுனாமி அடர்த்தியை அளவிட சீபெர்க்-அம்பரசி என்னும் அளவுகோல் மத்திய தரைக் கடலிலும், இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் பசிபிக் பெருங்கடல் பகுதியிலும் பயன்படுத்தப்படுகிறது. பிற்காலத்தில் இம்மாமுரா-லிடா செறிவு அளவுகோல் சோலோவைவ் என்பவரால் சூத்திரத்தின்படி மாற்றி அமைக்கப்பட்டது. அங்கு ஹாவ் அருகிலுள்ள கடற்கரை சராசரி அலை உயரம் உடையது. இந்த அளவுகோல் சோலோவ்-இமாமுரா சுனாமி செறிவு அளவுகோல் எனப்படுகிறது. இந்த அளவு, சுனாமி அளவாக நோவோசிப்ரிஸ்க் சுனாமி ஆய்வகம் தொகுக்கப்பட்ட உலக சுனாமிப் பட்டியல்களில் பயன்படுத்தப்படுகிறது. + +உண்மையில் சுனாமி அளவைக் காட்டிலும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதை முர்த்தி மற்றும் லூமிஸ் இருவரும் எம் எல் என்ற அளவினில் சுனாமியின் இயக்க ஆற்றலைக் கணக்கிட்டனர். ஆபே என்பவர் சுனாமியின் அளவுகோளாக மவுண்ட் என்பதை அறிமுகப்படுத்தினார். h என்பது சுனாமியின் அதிக பட்ச அலை வீச்சு. + +அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவில்தான் முதன் முதலாகப் பசிபிக் பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை அமைப்பு நிறுவப்பட்டது. அதற்கு காரணம் கடந்த நூற்றாண்டில் சுனாமியால் தாக்கப்பட்ட முதல் இடம் ஹவாய். 1946 ஏப்ரல் 1 அன்று ஹவாய் தீவைத் தாக்கிய ராட்சத சுனாமி அலை 159 பேரின் உயிரை விழுங்கி விட்டது. கோடிக்கணக்கான சொத்துகளும் நாசமாயின. அமெரிக்கா 1949 ஆம் ஆண்டில் அங்கு பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பை நிறுவியது. அப்போது விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளில் 75 சத��ீதம் தவறாக அமைந்தது. இதனால் பொது மக்கள் மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கொண்டு இடம் பெயர்வதும் மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புவதும் சலிப்பை ஏற்படுத்தின. செலவும் ஆனது. அதனால் சுனாமி அலை உருவானால் மட்டும் கடலில் இருந்து தகவல் கொடுக்கக் கருவி வேண்டும் என்பதை உணர்ந்து கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘சுனாமி மிதவை கருவி’. 1960 ஆம் ஆண்டில் சிலியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ராட்சத அலைகள் ஹவாயை +தாக்கின. இதனால் 12 ஆண்டுக்குப்பின் அங்கு மீண்டும் சுனாமி ஏற்பட்டது. முன்னரே முன்னெச்சரிக்கை தகவல்கள் அனுப்பப்பட்டதால் அங்கு 61 பேர் மட்டுமே இறந்தனர். + +அப்போது ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பசிபிக் கடல் நாடுகளுக்கும் எச்சரிக்கை அமைப்பு வேண்டும் என்று உணரப்பட்டது. 1963 +ஆம் ஆண்டில் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையம் அமைக்கப்பட்டது. இதில் உறுப்பினராக 26 நாடுகள் உள்ளன. உறுப்பினராகச் சேர்ந்துள்ள நாடுகளுக்கு மட்டுமே எச்சரிக்கைத் தகவல்களை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா, சிலி, கொலம்பியா, குக் ஐலண்ட்ஸ், கோஸ்டரிகா, தென் கொரியா, வடகொரியா, ஈக்வேடார், எல்சல்வடார், பிஜி, பிரான்ஸ், குவாதமாலா, +இந்தோனேஷியா, ஜப்பான், மெக்சிகோ, நியூசிலாந்து, நிகரகுவா, பெரு, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சமோவா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சுனாமி பேரலைகள் பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருகிறது. + +2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலை தாக்குதலுக்கு பிறகு இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. + +கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டவுடன், சுனாமி அலைகள் கடலில் ஏற்படுகின்றனவா என்பதை அறிய சுனாமி எச்சரிக்கைக் கருவிகளால் மட்டுமே முடியும். அவற்றில் உள்ள பிரத்யேக கருவிகள், கடலில் நீர் இயக்கத்தில் ஏதாவது மாற்றம் இருக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். நிலநடுக்கம் ஏற்பட்ட உடன் கடல் அலைகள் தோன்றினால், அந்த அலைகள் உருவாக்கும் அழுத்த மாறுபாட்டை ஒலி அலைகளாக மாற்றி, அவற்றை சிக்னல்களாக வானில் உள்ள செயற்கைக் கோள்களுக்கு அனுப்பிவைக்கும். அங்கிருந்து தரையில் உள்ள மையங்கள் சிக்னலைப் பெற்றுக் கொள்ளும். அலையின் தன்மையை விஞ்ஞானிகள் அறிந்து அது பாதிப்பை ஏற்படுத்தும���னால் எச்சரிக்கைத் தகவல்களை அனுப்புவார்கள். இத்தகவலை சுனாமி உருவான 3 நிமிடத்தில் வெவ்வேறு நாடுகளில் உள்ள அலுவலகங்களுக்குச் சென்றுவிடும். ஆனால், சுனாமி அலைகள் உருவான இடத்துக்கும் கரைப் பகுதிக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்துத்தான் அலைகளின் தாக்குதல் வேகம் மற்றும் நேரம் அமையும். + + + + + +சார்லஸ் டார்வின் + +சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 - ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் "உயிரினங்களின் தோற்றம்" ("The Origin of Species") என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் ("HMS Beagle") என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை. + +இவரே மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, 'தக்கன பிழைக்கும்' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது "தகுதியானது உயிர் வாழும்" என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர். + +டார்வின் 1809 ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள சுரூஸ்பெரி (Shrewsbury) எனுமிடத்தில் பிறந்தார். அவரது தந்தையார் ராபர்ட் டார்வின் ஒரு மருத்துவர்; அவரது பாட்டனாரும் ஒரு மருத்துவரே. டார்வின் மிக இளம் வயதிலேயே தன் அன்னையை இழந்து விட்டார். சுரூஸ்பெரியில் தொடக்கக்கல்வியைக் கற்றார். சிறு வயது முதற் கொண்டே விலங்குகள், புழு பூச்சிகள் ஆகியன மீது அவர் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தார். + +தன்னைப் போன்று மகன் சார்லஸும் மருத்துவராக வரவேண்டும் என்று அவரது தந்தையார் விரும்பி எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மகன���ச் சேர்த்தார்; ஆனால் இயற்கையியல் துறையிலும், நிலவியல் துறையிலும் சிறந்த மாணவராக விளங்கிய டார்வினுக்கு மருத்துவத் துறையில் நாட்டம் செல்லவில்லை. சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடப்பதைப் பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார். அவர் தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை இறையியல் பயிலுமாறு ஆலோசனை கூறினார். அதனை ஏற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின். படிப்பில் சிறந்து விளங்கிய அவரது ஆர்வமெல்லாம் உயிரினங்களின் தோற்றம் பற்றிய ஆய்விலேயே மிகுந்திருந்தது. + +தமது 22ஆம் வயதில் இறையியலில் (Theology) பட்டம் பெற்ற டார்வின் கிறித்தவத் திருச்சபையில் உறுப்பினராகச் சேரவும் மறுத்துவிட்டார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் பேராசிரியராக இருந்த "ஜான் ஹென்ஸ்லோ" (John Stevens Henslow) என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். சனவரி 1831 சாதாரண பட்ட இறுதிப் பரீட்சையில் அவர் சிறப்பாகச் செய்து, 178 பரீட்சார்த்திகளில் பத்தாவதாக வந்தார். அவர் மூலமாக கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராய் (Robert FitzRoy) என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் ராபர்ட் பிட்ஸ்ராயின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். இரண்டாண்டுகளில் திரும்புவது என்ற முடிவோடு தங்கள் பயணத்தினைத் தொடங்கினர். ஆனால் ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் "பரிணாம வளர்ச்சிக் கொள்கை" உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22. +ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் உலகையே ஒரு வலம் வந்தது. இடரும், இன்னலும் மிகுந்த கடற்பயணத்தைச் சார்லஸ் டார்வின் மிகுந்த துணிச்சலுடன் மேற்கொண்டார். பயணத் துன்பத்தைப்பற்றிக் கவலைப்படாமல், தற்போது காணக்கிடைக்காத பல உயிரினங்களின் எலும்புகளை ஏராளமாகச் சேகரித்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன என்று எல்லா உயிரினங்களின் வாழ்க்கையும் இடத்துக்கிடம் ஒற்றுமையும், வேற்றுமையும் கொண்டிருப்பதைக் கண்டு டார்வின் வியப்படைந்தார். இத்தகைய ஒற்றுமை, வேற்றுமைகளைப் புரிந்துகொள்ள உயிரினங்கள் அனைத்தும் பொதுவான மூதாதையர்களின் வழித்தோன்றல்களா என்பதையும், மேலும் அவை தொடர்ச்சியான சிறு, சிறு மாற்றங்களோடு இன்றைய வளர்ச்சியைப் பெற்றுள்ளனவா என்பதையும் தெரிந்து கொள்வது இன்றியமையாதது என்று அவருக்குத் தோன்றியது. “உயிரினங்களில் ஏற்படும் மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்படுகின்றன?” என்ற வினாவிற்கு விடை காணும் ஆர்வம் டார்வினுக்கு ஏற்பட்டது. + +இந்நாளில் காணவியலாத, மறைந்துவிட்ட உயிரினங்களையும், மற்றும் இப்போது உயிரோடிருக்கிற உயிரினங்களையும் அவற்றின் எலும்புகளின் துணைகொண்டு ஆய்வு செய்யும் முயற்சியில் டார்வின் ஈடுபட்டார். தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இவ்வாய்வின் பயனாக “பரிணாம வளர்ச்சிக் கொள்கை” முடிவுக்கு அவர் வந்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, டார்வின் 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார். +அமெரிக்கக் கடலோரப் பகுதி மற்றும் ஐரோப்பியத் தீவுகளில் பயணத்தை முடித்துக் கொண்டு வந்த டார்வின் ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும்,தமது கண்டுபிடிப்புகளையும் ஆய்வுக்கட்டுரையாக எழுதி " The voyage of the Beagle" என்ற நூலை லண்டனில் வெளியிட்டார். + +தமது 30-ஆவது வயதில் எம்மா வெட்ஜ்வுட் (Emma Wedgwood) என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு +ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்குப் பின்னரும், தமக்கு விருப்பமான இயற்கையியல் ஆய்வில் டார்வின் மிகுதியாக ஈடுபட்டார். + +சார்லஸ் டார்வினுக்கும், ஆல்பிரெட் ரஸ்ஸல் வாலஸ் என்ற மற்றொரு இயற்கையியல் அறிஞருக்கும் நட்பு உண்டாயிற்று. டார்வின் தாம் ஏற்கனவே அமெரிக்கக் கடற்கரையோரம் திரட்டிய சான்றுகளிலிருந்து உருவாக்கிய கொள்கைகளுக்கு மேலும் ஆதாரங்களைச் சேகரிப்பதில் நண்பருடன் சேர்ந்து ஈடுபட்டார். புதிய உயிரினங்கள் உருவாவதற்கான ஒழுங்கு மற்றும் விதிமுறைகள், அவ்வாறு உருவாகும் உயிரினங்களுள் சில பிரிவுகள் முழுமையாக மூல நிலையிலிருந்து மாறிவிடுவதற்கான போக்குகள் ஆகியவை பற்றிய ஆய்வுகளின் அடிப்படையில் டார்வின் தனது கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். +1858ஆம் ஆண்டு ஜூலை முதல் நாள், மேற்கூறிய டார்வினின் கண்டுபிடிப்புகளும், அவரது நண்பர் வாலஸின் கட்டுரையும் லண்டன் லின்னன் கழகத்தில் (Linnean Society of London) வாசிக்கப்பட்டன. +மேற்கொண்டு ஆய்வு செய்ததன் பயனாக டார்வினுக்குத் தோன்றியதே ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ ஆகும். 1859 ஆம் ஆண்டு இக்கொள்கையை, டார்வின் உலகை வியப்பில் ஆழ்த்திய ஒரு புத்தகம் மூலம் வெளியிட்டார். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கைத் தேர்வு மூலமாக உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய கொள்கைதான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை. அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும்." இது புதிய இனங்களின் உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்று கூறினார் டார்வின். இக்கருத்துகளின் அடிப்படையிலேயே உயிரினங்களில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. + +டார்வினின் இக்கருத்துகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன; வியப்போடும், ஆர்வத்தோடும் அவரது ஆய்வுகளை மக்கள் படித்தனர். இந்நிலவுலகில் வாழும் உயிரினங்களின் குறிப்பாக விலங்கினங்களின் பரிணாம வளர்ச்சியில் இயற்கையோடு ஒன்றிப்போகின்றவை பாதுகாப்போடு வாழ்வதையும், மற்றவை மறைந்து போவதையும் அறிந்து மக்கள் பெரிதும் வியப்படைந்தனர். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்ப���டவில்லை. +பரிணாம வளர்ச்சிக் கொள்கை மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் கொளகை. அவர் வாழ்ந்த போதே அவரது நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்நூல் இன்றும் விவாதத்திற்குரிய, கருத்துமாறுபாடுகளுக்கு இடம்தரும் நூலாக இருக்கிறது. + +டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது. + + + + +இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் இயல்பினைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். உயிர் வாழ்தலுக்கான போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து, இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது இன்றைய நவீன டார்வினியமாகும். + +டார்வினின் கண்டுபிடிப்புகளைப் பற்றிய மற்ற நூல்கள் ‘மனிதனின் மரபுவழி’ மற்றும் ‘தாவரங்களின் இடம்பெயர்த் திறன்’ ஆகியனவாகும். மேலும் மண்ணின் வளத்திற்கும், பயிர் வளர்ப்புக்கும் முக்கிய காரணமாக விளங்குவது மண்ணில் வாழும் மண்புழுக்கள் என்பதையும் டார்வின் தெளிவுபடுத்தினார். அவருடைய நூலான “தாவர வளர்ச்சிக்குப் புழுக்களின் பங்கு” என்பது மண் ஆராய்ச்சியும், மண்புழுக்களின் ஆய்வும் ஒன்றோடொன்று எவ்வளவு தொடர்புடையன என்பதை விளக்குவதாகும். + +சார்லஸ் டார்வின் 1882ஆம் ஆண்டு ஏப்பிரல் 19ஆம் நாள் காலமானார். இங்கிலாந்தின் வெஸ்ட் மினிஸ்டர் அப்பேயில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. + + + + + +தற்குறிப்பேற்ற அணி + +தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும். + +எ.கா.1: + +விளக்கம்: + +கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற��குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார். +எ.கா.2: + +விளக்கம்: + +நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார். +எ.கா.3: + +விளக்கம்: + +நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார். + + + + + +திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் + +திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர் (போப் பெனடிக்ட் XVI), உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 265வது திருத்தந்தையாக இருந்தவர் ஆவார். இவர் 1927 ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, ஜெர்மனியில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக மூனிச் உயர்மறைமாவட்டத்தின் கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் . இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். + +இன்றைய உலகில் மக்களின் முழு வளர்ச்சிக்குக் கிறித்தவ சமயம் துணையாக உள்ளது என்னும் கருத்தைத் திருத்தந்தை பெனடிக்ட் வலியுறுத்துகிறார். உலகமயமாக்கும் போக்கு கடவுள் நம்பிக்கையிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடும் ஆபத்து ���ள்ளது என்றும், உண்மையான மதிப்பீடுகளை வாழ்வில் கடைப்பிடிக்கும்போதுதான் மனித வாழ்க்கை வளம்பெறும் என்றும் அவர் எடுத்துரைக்கிறார். + +கிறித்தவ சமயம் பகுத்தறிவுக்கு எதிராகப் போவதில்லை. மனிதர் பகுத்தறிவு கொண்டுள்ளார்கள் என்றால் அப்பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதல்ல, மாறாக, அது கடவுள் மனிதருக்கு வழங்குகின்ற கொடை. அக்கொடையை நன்றியோடு ஏற்பது மனிதரின் பொறுப்பு. + +கடவுளால் படைக்கப்பட்ட உலகத்தை மனிதர் தம் பகுத்தறிவின் துணைகொண்டு ஆய்ந்து அறிந்து சீரமைக்கும் பொறுப்பு கொண்டுள்ளார்கள். எனவே கடவுள் நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை அல்ல; மாறாக, மனித பகுத்தறிவுக்கு உகந்ததே கடவுள் நம்பிக்கை. ஆனால், பகுத்தறிவு தன்னால் எல்லாம் கூடும் என்று மமதை கொண்டு, கடவுளின் துணை வேண்டாம் என்னும் போக்கில் போவது தவறு. இப்போக்கினைத் திருத்தந்தை பெனடிக்ட் "பகுத்தறிவு மிகைவாதம்" (rationalism) என்று அடையாளம் காட்டிக் கண்டிக்கின்றார். மேலும், உண்மை என்று ஒன்று இல்லை எனவும், மனிதர் உண்மையான மதிப்பீடுகளை அடையாளம் கண்டு அவற்றைக் கடைப்பிடிக்க இயலாது என்றும் கூறுகின்ற "சூழ்நிலைவாத அடக்குமுறை" (dictatorship of relativism) என்னும் கொள்கையையும் அவர் தவறு எனக் காட்டுகின்றார். + +திருத்தந்தை பெனடிக்ட் பல போதனை ஏடுகளை வெளியிட்டுள்ளார். அவற்றுள் மூன்று "சுற்றுமடல்களும்" (encyclicals) அடங்கும். அவை கீழ்வருவன: + +1) கடவுள் அன்பாய் இருக்கிறார் ("God is Love" - இலத்தீனில் "Deus Caritas Est"): + +இது திருத்தந்தை பெனடிக்ட் வெளியிட்ட முதல் சுற்றுமடல். 2005, திசம்பர் 25ஆம் நாள், கிறித்து பிறப்புவிழாவன்று கையொப்பமாகி, 2006, சனவரி 25இல் வெளியிடப்பட்ட இம்மடலில் கடவுளுக்கும் அன்புக்கும் இடையே நிலவும் நெருங்கிய பிணைப்பு விளக்கப்படுகிறது. கடவுள் மனிதரைத் தம் சாயலாகப் படைத்துள்ளார். கடவுளின் உள்ளார்ந்த இயல்பு அன்பு ஆகும். அந்த அன்பு மனிதரின் இயல்பாகவும் உள்ளது. எனவே மனிதர் கடவுளையும் மனிதரையும் அன்புசெய்யும் திறன் கொண்டுள்ளார்கள். மனிதர் காட்டும் அன்புக்கு ஊற்றாகவும் அது நிகழ்வதற்கு வழியாகவும் அமைவது கடவுளின் அன்புதான். கடவுளையும் மனிதரையும் பிணைக்கின்ற இந்த அன்பு மனிதரின் தனி வாழ்விலும், குடும்ப வாழ்விலும், சமூக வாழ்விலும் துலங்க வேண்டும். + +இச்சுற்றுமடலின் முதல் சொற்கள் விவிலியத்திலிர��ந்து எடுக்கப்பட்டவை: "கடவுள் அன்பாய் இருக்கிறார்" (1 யோவான் 4:16). மேலும், "அன்பில் நிலைத்திருக்கிறவர் கடவுளோடு இணைந்திருக்கிறார். கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார்" (1 யோவான் 4:16). + +பிறரோடு பகிர்தலும் பிறரிடமிருந்து பெறுதலும் அன்பின் இரு அடிப்படைப் பண்புகள் ஆகும். இதுவே கடவுளின் இயல்பு கூட. அவர் தம்மையே மனிதருக்குக் கையளித்து, தம் உறவை மனிதரோடு பகிர்கின்றார். அதே வேளையில் கடவுள் மனிதரிடமிருந்து பெறுகின்ற அன்பில் கடவுள் மகிழ்கின்றார். இந்த இருவகை அன்பு கிரேக்க கலாச்சாரத்தில் eros, மற்றும் agape என்று அறியப்பட்டன. தன்னையே பலியாக்கி "அளிக்கும் அன்பு" (agape) பிறருக்கு வாழ்வளிக்கும். பிறரிடமிருந்து "பெறும் அன்பு" (eros) புலன்களுக்கு மகிழ்வூட்டித் திளைக்கச் செய்யும். இவை இரண்டிற்குமே ஊற்று கடவுள்தாம் என்பதால் இவற்றை மனிதர் பிரித்தலாகாது. + +2) எதிர்நோக்கால் மீட்படைகிறோம் ("Saved by Hope" - இலத்தீனில் "Spe Salvi"): + +இச்சுற்றுமடல் 2007, நவம்பர் 30ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு வெளியானது. உலகில் ஏற்படுகின்ற துன்பங்களின் நடுவே நம்பிக்கை இழக்காமல் வாழ்வது எப்படி, ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்நோக்கி வாழ்வது எப்படி என்று இம்மடல் விளக்குகிறது. மனிதர் பிற மனிதரை மதிக்காமல் அடிமைகள்போல நடத்துகின்ற வேளைகளில், காரணமின்றி இழிவுபடுத்துகின்ற வேளைகளில் "எதிர்நோக்கு" என்னும் நற்பண்பு நம்மிலிருந்து மறைந்துவிடலாகாது. துன்பமும் துயரமும் அநீதியும் அடிமைத்தனமும் ஒருநாள் மறைந்தொழியும் என்பது கிறித்தவம் தருகின்ற நம்பிக்கை, எதிர்நோக்கு. இதைத் திருத்தந்தை பெனடிக்ட் இம்மடலில் விளக்குகின்றார். + +இம்மடலின் கருத்து தூய பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது:"நமக்கு மீட்புக் கிடைத்துவிட்டது. எனினும் எதிர்நோக்கும் அளவில்தான் அது கிடைத்துள்ளது. கண்ணுக்குத் தெரிகிறதை நோக்குதல் எதிர்நோக்கு ஆகாது. ஏற்கனவே கண்ணால் காண்கிறதை எவராவது எதிர்நோக்குவாரா?" (உரோ 8:24). + +3) உண்மையில் தோய்ந்த அன்பு ("Love in Truth" - இலத்தீனில் "Caritas in Veritate"): + +இச்சுற்றுமடல் 2009, சூன் 29ஆம் நாள் கையொப்பமிடப்பட்டு, சூலை 7ஆம் நாள் வெளியிடப்பட்டது. இதில் திருத்தந்தை பெனடிக்ட் சமூக நீதி பற்றிப் பேசுகின்றார். இன்றைய உலகில் நிலவுகின்ற சமூக அநீதிகள் பல. ஏழை நாடுகளுக்கும் ���ெல்வம் படைத்த நாடுகளுக்கும் இடையே நிலவும் இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றி செல்வம் குவிக்கின்றன. இலாப நோக்கோடு மட்டுமே வியாபார உறவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசடைவது பற்றிப் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இத்தகு குறைபாடுகளைக் களைய வேண்டும் என்றால் மனிதரிடையே அன்பு வளர வேண்டும் என்று பெனடிக்ட் அறிவுறுத்துகிறார். அந்த அன்பு உண்மையின் அடிப்படையில் எழ வேண்டும். அப்போதுதான் மக்களிடையே நீதி நிலவும் சமுதாயம் உருவாகும். + +திருத்தந்தை பெனடிக்ட் நவீன சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றார். வத்திக்கான் நகரிலிருந்து திருத்தந்தையின் உரைகள் யூடியூபில் வெளியாகின்றன. முகநூல் வழியாகவும் வத்திக்கான் செய்தித் தொடர்பில் ஈடுபட்டுள்ளது. + +2012 திசம்பர் மாதத்திலிருந்து திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாகத் தொடர்பு கொள்கின்றார். 12/12/12 அன்று அவர் அனுப்பிய முதல் டிவிட்டர் செய்தி: +நண்பர்களே, டிவிட்டர் வழி உங்களோடு தொடர்பு கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தாராள ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்களுக்கு என் இதயப்பூர்வமான ஆசியை வழங்குகின்றேன். + +திருத்தந்தை உலகில் பரவலாகப் பேசப்படுகின்ற எட்டு மொழிகளில் டிவிட்டர் செய்திகளை அனுப்பினார். அம்மொழிகள்: எசுப்பானியம், போர்த்துகீசியம், ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்சு, போலிஷ், செருமன், அரபி ஆகியன. + +2013, சனவரி 20ஆம் நாள் திருத்தந்தை முதல் முறையாக இலத்தீன் மொழியில் டிவிட்டர் செய்தி அனுப்பினார். +"Unitati christifidelium integre studentes quid iubet Dominus? Orare semper, iustitiam factitare, amare probitatem, humiles Secum ambulare" +என்று இலத்தீனில் அனுப்பப்பட்ட அச்செய்தி தமிழில், +"கிறித்தவர் நடுவே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்று உளமார விரும்புவோர் என்ன செய்யவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்? இடைவிடாது இறைவேண்டல் செய்க, நீதி நெறியில் ஒழுகுக, நேர்மையான வாழ்வு நடத்துக, ஆண்டவரோடு பணிவுடன் வழிநடந்திடுக." + +இலத்தீன் மொழியைப் பேசுவோர் மிகச் சிலரே என்றாலும், எசுப்பானியம், போர்த்துகீசியம், பிரெஞ்சு, இத்தாலியம் உரோமேனியம் ஆகிய மொழிகளைப் பெற்றெடுத்த தாய்மொழி என்னும் பெருமை இலத்தீனுக்கு உண்டு என்பதாலும், பல அறிவியல் துறைகளில் வழக்கத்திலுள்ள கலைச் சொற்கள் இல��்தீனில் உள்ளன என்பதாலும் அம்மொழியைப் பலர் பயின்றுவருகின்றனர். + +திருத்தந்தை பெனடிக்ட் டிவிட்டர் வழியாக 2 மில்லியன் மக்களோடு தொடர்பு கொண்டுள்ளார். இலத்தீன் மொழித் தொடர்பாளர்கள்தான் மிகக் குறைந்த எண்ணிக்கையில், 5000 பேராக உள்ளனர். + +அவருடைய டிவிட்டர் கைப்பிடி "@Ponttifex" என்னும் இலத்தீன் சொல் ஆகும். அதற்கு "இணைப்பாளர்" (= பாலம் அமைப்பவர்) என்று பொருள். + +2013 பிப்ரவரி மாதம் 28ம் தேதியிலிருந்து திருத்தந்தை பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கான விருப்பத்தை வெளியிட்டு அறிக்கை ஒன்றை 11 பிப்ரவரி 2013 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் வெளியிட்டார். முதுமை காரணமாக திருத்தந்தைக்குரிய பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் இம்முடிவை எடுத்துள்ளதாகவும், 2005ம் ஆண்டு ஏப்ரல் 19ம் நாள் கர்தினால்கள் அவையால் தன் வசம் ஒப்படைக்கப்பட்ட இப்பொறுப்பிலிருந்து பிப்ரவரி 28ம் தேதி உரோம் நேரம் இரவு 8 மணியிலிருந்து பதவி விலகுவதாக அவ்வறிக்கையில் கூறியிருந்தார். இவர் நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் தனது பணிகளை சரியாக ஏற்று நடத்தமுடியா நிலையில் பணி துறப்பு முடிவை எடுத்திருக்கலாம் என்றொரு கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதினாறாம் பெனடிக்ட், தனக்கு பின் திருதந்தையாக தெரிவு செய்யப்படுபவருக்கு நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வாக்களித்தார். + +பணிதுறப்புக்குப்பின்பு வத்திக்கான் நகரின் தோட்டத்திலுள்ள "மாத்தர் எக்லேசியே" (திருச்சபையின் அன்னை) என்னும் துறவு இல்லத்தில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் தங்கி இறைவேண்டலில் ஈடுபட்டிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. + + + + +அலெக்சாண்டர் கிரகாம் பெல் + +அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரித்தானியக் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேச��� நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். + +அலெக்சாண்டர் பெல் ஸ்கொட்லாந்தில் எடின்பேர்க்கில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய குடும்ப நண்பரான அலெக்சாண்டர் கிரகாம் என்பவரின் மேல் மிகுந்த மதிப்பு கொண்டு அவருடைய பெயரையும் சேர்த்து அலெக்சாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது. அலெக்சாண்டருக்கு மெல்வில்லி ஜேம்ஸ் பெல் (1845–70) , எட்வர்டு ஜேம்ஸ் பெல்(1848–67) என்ற இரண்டு சகோதரர்கள். இவர்கள் இருவரும் காசநோயால் மரணமடைந்து விட்டனர். இவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஒரு பேராசிரியர். தாயார் எலிசா கிரேஸ் ஆவார். லண்டனில் வசித்த அவருடைய தாத்தா, டப்ளினில் உள்ள அவருடைய மாமா, எடின்பர்க்கில் உள்ள அவருடைய தந்தை அலெக்சாண்டர் மெல்வில்லி பெல் ஆகிய அனைவரும் பணி முறையாக நாவன்மை பயிற்றுவிப்பவர்களாகத் (Professed elocutions) திகழ்ந்து வந்தனர். கண்பார்வை அசைவுகளினால் பல்வேறு உணர்வுகளை எவ்வாறு காட்டுவது? உதடுகளின் அசைவைக் கொண்டு ஒருவர் பேசுவதைக் காது கேளாதோர் எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதைப் பற்றியெல்லாம் பெல்லின் தந்தை பல நூல்களை எழுதியுள்ளார். + +எட்டு வயதிலேயே கிரகாம் நன்றாகப் பியானோ வாசிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். பத்து வயதான போது அவருக்குப் பள்ளி செல்ல நாட்டமில்லாமல் போனது. இலத்தீன், கிரேக்க மொழிகளைப் படிப்பதைவிட பியானோ வாசிப்பதிலும், ஒலி அலைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்வதிலும் தனது நேரத்தைப் போக்கினார் . பேச்சை மின் ஒலியாக மாற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது வந்த காது கேளாத பெண்ணை விரும்பி அவளையே திருமணம் செய்துகொண்டார். + +கிரகாம் பெல்லின் குடும்பம் கனடாவிற்குக் குடி பெயர்ந்தது. போஸ்டன் நகரத்தில் வசித்த போது காது கேளாதோர் பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதற்காக பெல் ஒரு பள்ளிக் கூடத்தை ஏற்படுத்தினார். அதில் பேச்சுமுறை பற்றிய அடிப்படைகளைக் கற்பித்தார் .அவரது ஆய்வுமுறை, அறிவாற்றல் எங்கும் பரவியதால், பாஸ்டன் பலகலைக் கழகம் பேச்சு அங்கவியல் பேராசிரியராக இவரை பணியில் அமர்த்தியது. + +பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அணுப்பினார் பெல். தந்தி முறையில் வெறும் ஒலிகள் மட்டுமே அனுப்பப்பட்டன. பேச்சுகளையும் அந்த முறையில் அனுப��பலாமே என்று கிரகாமுக்கு 18 வயதிலேயே தோன்றியது. அதனால் அந்த முயற்சிகளில் ஈடுபடார் . அக்காலத்தில் மனிதனின் பேச்சொலிகளை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு தந்திகள் மூலம் அனுப்பப்பட்டு வந்தது. அந்த முறைகள் இவருடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாயிருந்தன. 1875 இல் இந்த முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றன. முதலில் தெளிவில்லாத பேச்சொலிகளை அனுப்ப முடிந்தது. + +1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் " வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்."(Watson, come here, I want to see you)என்பதுதான். இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார். அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார். + +1877 இல் தன் உதவியாளர் வாட்சனுடன் சேர்ந்து "பெல் தொலைபேசி கம்பனி" என்ற பெயரில் தொலைபேசி நிறுவனம் ஒன்றை நிறுவினார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக பிரெஞ்சு அரசு அவருக்கு வழங்கிய 50,000 பிராங்க் பரிசுத் தொகையைக் கொண்டு வோல்டா ஆய்வுச் சாலை (Volta Laboratory) என்ற பெயரில் ஓர் அமைப்பை நிறுவினார். + +பெல் தொலைபேசியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. அரசு நிறுவனத்தின் மூலம் பொட்டோ போன், ஆடியோ மீட்டர், மெட்டல் டிடக்டர், இன்டக்‌ஷன் பேலன்ஸ், வாக்ஸ் ரிகார்டிங் சிலிண்டர், கிராமபோன் போன்ற கருவிகளைக் கண்டு பிடித்தார். பெல் விமானம் கண்டு பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டார். ஆனால் அது அவருக்கு வெற்றி தரவில்லை. ஆனால் சில கண்டுபிடிப்புகளைச் செய்தார். +விமானத்தின் எய்லிரான் என்ற பகுதியைக் கண்டுபிடித்தவர் பெல் ஆவார். பிற்காலத்தில் கடல் விமானத்தைச் சீர்திருத்தி அமைப்பதில் வெற்றி கண்டார். ஆடுகள் வளர்க்கும் முயற்சியில் புதுமையைப் புகுத்தினார். ஒவ்வொரு முறையும் இரட்டைக் குட்டிகளை ஈடும் பெண் ஆடு��ளை உருவாக்கவும் திட்டமிட்டார். பாலைவனங்களில் நாடுகாண முற்படும் படைவீரர்களுகு, காற்றிலுள்ள மிகுந்த ஈரத்தை வடிகட்டி உதவக் கூடிய அரிய கருவியைக் கண்டுபிடித்தார். காது கேளாதோருக்குப் பேச்சுப் பயிற்சியை வளர்ப்பதற்கான சங்கம் ஒன்றை நிறுவினார். கண் தெரியாதவர்களுக்குப் பிரெய்ல் முறையைக் கண்டு பிடித்த ஹெலன் கெல்லருக்கு பெல் பல உதவிகளைச் செய்துள்ளார். ஒலியியல் அடிப்படையில் உலக ஆங்கிலம் என்பதை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டினார். தனிப்பட்ட முறையிலும், பிற அறிவியலறிஞர்களுடன் சேர்ந்தும் 59 கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை பெல் பெற்றுள்ளார் என்பது அவருடைய வரலாற்றில் மிக முக்கியமான அம்சமாகும். + +போன்ற பல்வேறு சிறப்புகளையும் விருதுகளையும் பெற்றார். + +அமெரிக்காவில் உள்ள பாடக் என்ற ஊரில் 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் காலமானார். அவர் மறைந்த தினத்தன்று அமெரிக்காவில் உள்ள தொலைபேசிகள் அனைத்தும் 5 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. + + + + + + + +அ. மாதவையா + +அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925) , தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். "பத்மாவதி சரித்திரம்" என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர். + +அ. மாதவையா, திருநெல்வேலி அருகே உள்ள "பெருங்குளம்" என்ற கிராமத்தில் பிறந்தவர். + +தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டத்தில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள கிறித்துவ கல்லூரியில் இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான வில்லியம் மில்லரின் கருத்துக்களினால் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பை (B.A) 1892 இல் முதல் மாணவராக முடித்தார். + +பட்டம் பெற்றதும் தான் பயின்ற சென்னை கிறித்துவக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், தனது குடும்பத்தை நடத்துவதற்காக, உப்பு சுங்க இலாகா ("Salt and Abkari department") நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspector ஆக ஆந்திராவில் உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் தெலுங்கு மொழியினையும் கற்றறிந்தார். + +மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான சி. வி .சுவாமிநாதையர் என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய விவேக சிந்தாமணி என்ற பத்திரிக்கையில் "சாவித்திரியின் கதை" என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு "முத்துமீனாக்ஷி" என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது. + +1898 ஆம் ஆண்டு பத்மாவதி சரித்திரம் என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925 ஆம் ஆண்டில் "பஞ்சாம்ருதம்" என்ற பத்திரிக்கை ஒன்றைத் தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924 ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார். + +அ. மாதவையா தமிழர் நேசன், பஞ்சாம்ருதம் ஆகிய இதழ்களை வெளியிட்டார். + +சென்னைப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழைக் கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். சொற்பொழிவின் பொழுதே கீழே விழுந்து மரணமடைந்தார். + +அ. மாதவையாவுக்கு அக்காலத்தில் இருந்த அவரது குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) திருமணம் செய்யப்பட்டது. அவருக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அவருடைய பிள்ளைகளான மீனாக்ஷி தியாகராஜன், கிருஷ்ணன், முக்தா வெங்கடேஷ் என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் பிரபலமானவர்கள். அறிவியல் எழுத்தாளர் பெ. நா. அப்புசாமி இவருக்கு அண்ணன் மகன். + + + + + + + +இதைத் தவிர தமிழில் சில கட்டுரைகள், கருத்துக்கள், போன்றவை "பஞ்சாமிர்தம்" என்ற இதழில் 1924 முதல் 1925 வரை வெளிவந்தன. அதைப் போலவே ஆங்கிலத்தில் 1892 முதல் 1910 வரை, மாதவையா எழுதிய பதினாறு கட்டுரைகளும் கவிதைகளும் சென்னை கிருத்துவக் கல்லூரியின் கல்லூரி இதழில் வெளிவந்தன. + + + + + + +சாகித்திய அகாதமி விருது + +சாகித்திய அகாதமி விருது ("Sahitya Akademi Award"), சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய ��ரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கங்களிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது. + +சாகித்ய அகாதமி இந்திய அரசினால், மார்ச் 12, 1954 இல் துவக்கப்பட்ட ஓர் அமைப்பு. இந்திய மொழிகளில் இலக்கியமும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் எண்ணத்தோடு துவக்கப்பட்ட அமைப்பு, சாகித்ய அகாதமி. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை நடத்தியுள்ளது சாகித்ய அகாதமி. + +இந்திய மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்வது சாகித்ய அகாதமி. + +சாகித்ய அகாதமி கழகத்தில் அனைத்து மொழிகளுக்கும் பிரதிநிதித்துவம் உண்டு. தமிழுக்கான இடத்தில் உறுப்பினராக இருந்தோர்: + +சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூலினை எழுதிய நூலாசிரியருக்கு முதன் முதலாக 1955 ஆம் ஆண்டில் ரூபாய் 5, 000 வழங்கப்பட்டது. பின்னர் 1983 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 10,000 வழங்கப்பட்டது. அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. அதன் பின்னர் 2001 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 40, 000 ஆக உயர்த்தப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டில் ரூபாய் 50, 000 ஆக அதிகரிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு முதல் ரூபாய் 1,00,000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. + +இது, நீண்ட, ஒராண்டு கால விவாதம் மற்றும் தேர்வுகளைக் கொண்டது. இந்த விருது இந்திய எழுத்தாளர்களை அங்கீகரிக்கவும், அவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் ஒர் ஊடகமாகத் திகழ்கிறது. அதுமட்டுமன்றி தற்கால மாறுதல்களையும், புதிய நிகழ்வுகளையும் ஏற்றுக்கொண்டு இந்திய இலக்கியங்களை விரிவுபடுத்துவது இதன் நோக்கமாகும். + +முதற்கட்டமாக தகுதியான புத்தகங்கள் அகாதமித் தலைவரால் நியமிக்கப்பட்ட ஒரிரண்டு வல்லுனர்களால் தேர்வு செய்யப்பட்டு, 10 மொழி வல்லுனர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஒவ்வொரு மொழி வல்லுனரும் இரண்டு புத்தகங்களை விருதுக்குப் பரிந்துரைப்பார��கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட பட்டியல் மூன்று நீதிபதிகளின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது. அதிக வாக்குகளை அல்லது அனைவராலும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு புத்தகமே விருதுக்கு தேர்வுக்கு செய்யப்படுகிறது. பின்னர் அகாதமியின் செயற்குழு அங்கீகாரம் மற்றும் அறிவித்தலுக்கு அனுப்பப்படுகிறது. +தமிழ் மொழியில் சாகித்ய அகாதமி விருது என்பது சர்ச்சைக்கு உரிய விருதாக ஜெயமோகன் கருதுகிறார் + + + + + + +ஞானபீட விருது + +ஞான பீட விருது ("Jnanpith Award" ) என்பது இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. + +ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட 15 மொழிகளுள் சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. 1954 -ல் இதைத் தோற்றுவித்தவர் சாந்திபிரசாத் ஜெயின் என்பவர். இந்தியாவின் முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான டாக்டர். இராஜேந்திரபிரசாத் இந்தியாவின் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருதுவழங்கி பெருமைப்படுத்த ஒரு அமைப்பு வேண்டும் என்று பல தொழில் முனைவோரிடம் கேட்டுக் கொண்டார். அதன் விளைவாக உருவானதே பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம். + +இந்த விருது, இந்திய ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலை, தங்கமும் செம்பும் கலந்த பட்டயமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பித்தளையால் ஆன சரசுவதி சிலையை உள்ளடக்கியது. 1961ல் இந்த விருது நிறுவப்பட்டது. 1965ல் முதன் முதலாக மலையாள எழுத்தாளர் ஜீ. சங்கர குருப்பிற்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இந்த விருதுக்கு தகுதியானவர் ஆவார். + +1982 வரை, ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட படைப்பைப் பாராட்டி, ஞான பீட விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓர் எழுத்தாளரின் வாழ்நாளில் அவர் இலக்கியத்திற்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, அதிகபட்சமாக, இந்தி மொழி எழுத்தாளர்கள் பதினொரு முறையு இந்த விருதைப் பெற்றுள்ளார்கள். + +2015 ஆம் ஆண்டில் பரிசுத் தொகையானது இந்திய மதிப்பில் 11 இலட்சமாக உயர்த்தப்பட்டது. மொத்தமுள்ள அங்கீகரிக்கப்பட்ட இருபத்தைந்து மொழிகளில் இதுவரை மொத்தம் பதினைந்து மொழிகளுக்கு விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிகளில் இதுவரை பதினொரு விருதுகளும், கன்னடம் மொழிகளில் எட்டு விருதுகளும், வங்காள மொழியில் இதுவரை 6 விருதுகளும், மலையாளத்தில் 6 விருதுகளும், குஜராத்தி , மராத்திய மொழி, ஒடியா மொழி, உருது போன்ற மொழிகளில் தலா நான்கு விருதுகளும், தெலுங்கு மூன்று விருதுகளும், அசாமிய மொழி, பஞ்சாபி மொழி, மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் இரண்டு விருதுகளும், காஷ்மீரி மொழிகளில், கொங்கணி மொழி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் ஒரு முறையும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரையில் ஐம்பத்தி ஏழு நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஏழு நபர்கள் பெண்கள் ஆவர். ஆஷா பூர்ணாதேவி இந்த விருதைப் பெற்ற முதல் பெண் எழுத்தாளர் ஆவார். 1965 ஆம் ஆண்டில் முதல்சத்தியம் எனும் வங்காள புதினத்திற்காக இவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.. + +பாரதிய ஞானபீட ஆய்வு மற்றும் வரலாற்று நிறுவனம் எனும் நிறுவனத்தை 1944 இல் சகு சாந்தி பிரசாத் ஜெயின் என்ற சகு சைனக் குடும்பத்தைச் சேர்ந்தவரால் தோற்றுவிக்கப்பட்டது. மே 1961 இல் இந்திய மொழிகளின் சிறந்த படைப்புகளைத் தேர்ந்தெடுத்து சிறந்த நூலிற்கான விருது வழங்க வேண்டும் என நினைத்தனர். பின் நவம்பர் மாத இறுதியில் ரமா ஜெயின் , (பாரதிய ஞானபீடத்தைத் தோற்றுவித்தவர் ) சில இலக்கிய வல்லுநர்களை அழைத்து இதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அவர்களில் சிலர் காகா காலேல்கர், ஹரிவன்சராய் பச்சன்,ராம்தாரி சிங் திங்கர் , ஜெய்னெந்திர குமார், ஜெகதீசு சந்திர மார்தூர், பிரபாகர் மாசே, அக்சய குமார் ஜெயின் மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின். மேலும் இது பற்றி 1962 இல் அனைத்திந்திய குஜராத்திம் சாகித்திய பரிசத் மற்றும் பாரதிய பாஷா பரிசத்தின் ஆண்டுக் அமர்வில் விவாதிக்கப்பட்டது. + +ஏப்ரல் 2, 1962 இல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300 எழுத்தளர்களை புதுதில்லிக்கு அழைத்து அவர்களை இரு அமர்வுகளாக தரம்வீர் பாரதி அவர்கள் பரிசோதித்து பின் அந்த முன்வரைவினை பிரசாத்திடம் வழங்கினார். முதல் தேர்வுக்குழுக் கூட்டமானது மார்ச் 16, 1963 இல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் பிரசாத் அவர்கள் பெப்ரவரி 28, 1963 இல் இறந்தார். எனவே காகா காலேல்கர் மற்றும் சம்பூர்ணநந்தர் ஆகியேரை தற்காலிக நிறுவனர்களாக குழு நிர்ணயம் செய்தது. + +முதல் தேர்வுக்குழு உறுப்பினர்களாக நிரஞ்சன் ராய், கரண் சிங், ஆர். ஆர். திவாகர், வி.ராகவன், பி. கோபால் ரெட்டி, ஹரேகிருஷ்ணா மஹாதப், ரமா ஜெயின், மற்றும் லட்சுமி சந்திரா ஜெயின் ஆகியோர் இருந்தனர். சம்பூர்ணாநந்தர் தலைவராக செயல்பட்டார். 1921 முதல் 1951 ஆம் ஆண்டுகள் வரையிலான காலங்களில் எழுதப்பட்ட நூல்களை முதல் விருதுக்கான பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டனர். + +விருதிற்காக பல இலக்கிய வல்லுநர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழகங்கள், பல மொழிகளைச் சேர்ந்த சங்கங்கள், விமர்சகர்கள். போன்றவர்களிடமிருந்து  பரிந்துரைகள் பெறப்படுகின்றன. தற்சமயம் விருது பெற்ற ஒருவரின் நூல்களை அடுத்த இரண்டு வருடத்திற்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. + +தேர்வுக்குழுவானது சமூகத்தில் நன்மதிப்பு பெற்ற மற்றும் நேர்மையான ஏழு முதல் பதினொரு உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு உறுப்பினர்களும் மூன்று ஆண்டுகள் தேர்வுக் குழு உறுப்பினர்களாக செயல்படுவர்.தேவையேற்படின் அந்தக் காலத்தை மேலும் இரு ஆண்டுகளுக்கு கால நீட்டிப்பு செய்யலாம். பரிந்துரைக்கு ஏற்கப்பட்ட நூல்கள் பகுதி அல்லது முழுவதுமாக இந்தி அல்லது ஆங்கிலம்மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பின்னரே அதனை ஆலோசனைக் குழுக்கள் மதிப்பீடு செய்வர். ஒரு குறிப்பிட்ட ஆண்டிக்கான தேர்வு பெற்றவர் பற்றிய அறிவிப்பை தேர்வுக் குழு வெளியிடும். இதற்கான முழு அதிகாரமும் தேர்வுக் குழுவிற்கே உள்ளது. + + + + + +குறள் வெண்பா + +குறள் வெண்பா என்பது வெண்பா வகையின் இரண்டு அடி உள்வகையாகும். புகழ் பெற்ற திருக்குறள் குறள் வெண்பா வகையையே சார்ந்தது. + +எடுத்துக் காட்டாக ஒரு திருக்குறள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது. + + + + + +ராதிகா சரத்குமார் + +இராதிகா, (பிறப்பு: ஆகத்து 21, 1963) தென்னிந்திய திரைப்பட நடிகை , தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் ஆவார். ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார், இதன் மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார். + +இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும், அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா, திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார். + +ராதிகா நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரை 2001 ஆம் ஆண்டில் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு இராகுல் என்ற மகன் 2004 ஆம் ஆண்டில் பிறந்தார். சரத்குமாரை திருமணம் புரிய முன்னர் ராதிகா இரு முறைகள் திருமணம் புரிந்து விவாகரத்துப் பெற்றவர். முதல் முறை மலையாள நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தனையும், பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சார்டு ஹார்டி என்பவரையும் திருமணம் புரிந்தார். ஹார்டியுடன் இவருக்கு ரயான் ஹார்டி என்ற பெண் குழந்தை உண்டு. + + + + + + + +ரேவதி (நடிகை) + +ரேவதி (Revathy, பிறப்பு: சூலை 8, 1966) தமிழ்த் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்களில் நடிகையாக அறியப்படுகிறார். மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, ஆங்கிலத்தில் திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். + +ரேவதி, 1966 ஜூலை 8-ல் கேரளத்தின் கொச்சியில் பிறந்தார். இவர் தந்தை கேளுண்ணி. ரேவதி, 1988 ல் சுரேஷ் மேனனைத் திருமணம் செய்தார். பின்னர், 2002 ல் இருவரும் மணமுறிவு பெற்று பிரிந்தனர். + + + + + + + + +ஜெர்மனி + +ஜெர்மனி ("Germany", ), அல்லது ஜெர்மன் கூட்டாட்சிக் குடியரசு (, ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இதன் வடக்கே வட கடல், டென்மார்க், பால்ட்டிக் கடல்; கிழக்கே போலந்து, செக் குடியரசு; தெற்கே ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து; மேற்கே பிரான்ஸ், லக்சம்பேர்க், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகியன எல்லைகளாக உள்ளன. ஜெர்மனியின் பரப்பளவு 357,021 கிமீ². + +82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகூடிய மக்கள்தொகை கொண்ட உறுப்பு நாடாகவும், மூன்றாவது அதிகம் புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டதாகவும் திகழ்கிறது. + +ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டு பகுதிகளாக 1949 ஆம் ஆண்டு முதல் 3.அக்டோபர்,1990 வரை இருந்தது. கிழக்கு-ஜெர்மனிக்கு கிழக்கு-பெர்லின் தலைநகரமாகவும் மேற்கு-ஜெர்மனிக்கு பான்("Bonn") தலைநகரமாகவும் இருந்தன. மேற்கு-பெர்லினை கிழக்கு-பெர்லின் மற்றும் கிழக்கு-ஜெர்மனியில் இருந்து பிரிக்க 1961 இல் பெர்லின் சுவர் கட்டப்பட்டது. 1989 இல் அச்சுவர் உடைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட ஜெர்மனிக்கு பெர்லின் தலைநகரம் ஆனது. + +ஜெர்மனி இப்போது 16 மாநிலங்களை ("Länder") கொண்ட ஒரு கூட்டாட்சி நாடாளுமன்றக் குடியரசாகும். இதன் தலைநகரம் பெர்லின். இதுவே இந்நாட்டின் பெரிய நகரமும் ஆகும். + +ஜெர்மானியா என அறியப்பட்ட பிரதேசத்தில் கி.பி. 100க்கு முன்னரே ஜெர்மானிக் மக்கள் குடியேறியமைக்கு ஆதாரங்கள் உள்ளன. குடிப்பெயர்வுக் காலப்பகுதியில், ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்பகுதிக்குப் பரவியதோடு ஐரோப்பாவெங்கும் வெற்றிகரமான ராச்சியங்களை ஏற்படுத்தினர். 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஜெர்மனியப் பகுதிகள் புனித உரோமப் பேரரசின் மையப்பகுதிகளாக இருந்தன. 16ம் நூற்றாண்டில் வடக்கு ஜெர்மன் பகுதிகள் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தின் மத்திய நிலையமாக விளங்கியது. எனினும், தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் ரோமன் கத்தோலிக்கப் பகுதிகளாகவே இருந்தன. இதன் காரணமாக முப்பதாண்டுப் போர் ஏற்பட்டதோடு, கத்தோலிக்க்- புரட்டஸ்தாந்து பிரிவினையின் ஆரம்பமாகவும் அமைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை, ஜெர்மானிய சமுதாயத்தின் பண்பைத் தீர்மானிப்பதாகவும் இது இருந்து வருகிறது. நெப்போலியப் போர்களின் போது, ஜெர்மானியப் பகுதிகளில் நாட்டுப் பற்று எழுச்சிபெற்றது. இதன் மூலம்,1871இல், புருசியாவைத் தலைமையாகக் கொண்டு, பெரும்பாலான ஜெர்மானியப் பகுதிகள் ஜெர்மன் பேரரசாக எழுச்சி பெற்றன. + +1918-1919 ஜெர்மானியப் புரட்சி மற்றும் முதல் உலகப் போரில் சரணடைவு என்பவற்றைத் தொடர்ந்து, 1918 இல், பாராளுமன்ற வைமார் குடியரசு ஏற்படுத்தப்பட்டது. மேலும் அதன் சில பகுதிகள் வெர்செயில்ஸ் உடன்படிக்கையின்படி பிரித்தெடுக்கப்பட்டன. இக்காலப்பகுதியில், விஞ்ஞான மற்றும் கலைத் துறைகளில், பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும், பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக 1933 இல் மூன்றாவது முடியாட்சி பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் பின்பு நாட்டில் நாசிசக் கொள்கைகள் பரவின. இதனால் இரண்டாம் உலகப்போரும் மூண்���து. 1945 இன் பின், ஜெர்மனி நேச நாடுகளால் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவை கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என அழைக்கப்பட்டன. 1990 இல் ஜெர்மனி மீண்டும் ஒன்றிணைந்தது. + +1957ல் ஐரோப்பிய சமூகத்தை உருவாக்குவதில் ஜெர்மனியும் பங்கு கொண்டது. இது 1993ல், ஐரோப்பிய ஒன்றியமாக மாறியது. இது சென்ஜென் பகுதியின் ஒரு பகுதியாகவும், 1999இலிருந்து, யூரோ பகுதியின் ஒரு உறுப்பினராகவும் ஆனது. ஜெர்மனி, ஐக்கிய நாடுகள், நேட்டோ, G8, G20, பொருளாதார ஒத்துழைப்புக்கும் அபிவிருத்திக்கான அமைப்பு மற்றும் ஐரோப்பியச் சம்மேளனம் ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான, 2011-2012 காலப்பகுதிக்கான தற்காலிக உறுப்பினராகவும் உள்ளது. + +ஜெர்மனி, உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியின்படி, உலகின் நான்காவது பாரிய பொருளாதார நாடாகவும், கொள்வனவுச் சக்தி அடிப்படையில், ஐந்தாம் இடத்திலும் உள்ளது. ஜெர்மனி உலகின் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராகவும், மூன்றாவது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இது ஒரு உயர் வாழ்க்கைத்தரம் கொண்ட நாடாகவும், சமூகப் பாதுகாப்புடைய நாடாகவும் காணப்படுகிறது. ஜெர்மனி உலகின் மிகப் பழைமை வாய்ந்த சுகாதாரப் பராமரிப்பு முறைமையையும் கொண்டுள்ளது. ஜெர்மனியில் பல சிறந்த தத்துவஞானிகள், இசையமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வாழ்ந்துள்ளனர். மேலும், இதன் கலாச்சார மற்றும் அரசியல் வரலாறும் சிறப்பானதாகும். + +"ஜெர்மனி" என்ற ஆங்கிலச் சொல் இலத்தீனிய ஜெர்மானியா என்பதிலிருந்து வந்துள்ளது; ரைன் ஆற்றுக்கு கிழக்கில் வசித்த மக்களைக் குறிப்பிட யூலியசு சீசர் இச்சொல்லைப் பயன்படுத்தினார். குறிப்பாக, கால் இனத்தவர்கள் , இவர்களை "ஜெர்மனி" என அழைத்து வந்தனர். இதிலிருந்தே உரோமானியர்கள் ரைன் ஆற்றுக்கு கிழக்கேயும் தானூப் ஆற்றுக்கு வடக்கேயும் வாழ்ந்த மக்களைக் குறிக்க ஜெர்மனி என்ற பெயரைப் பயன்படுத்த துவங்கினர். + +இடாய்ச்சு சொல்லான "இடாய்ச்சுலாந்து", "*தியொடொ" என்ற தொன்மைய செருமானிய வேரிலிருந்து வந்ததாகும்; இதன் பொருள் "மக்கள், இனம், நாடு" என்பதாக அமையும். இது ஜெர்மானிய மக்களின் "பொதுமொழி"யைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்ட பரந்த சொல்லாக இருந்தது. இது குறிப்பாக செருமனி மொழியையோ மக்களையோ குறிப்பிடவில்லை. முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டபோது (பிந்தைய 8-ஆம் நூற்றாண்டு) இது மெர்சியா இராச்சியத்தின் மொழியைக் குறிப்பதாயிருந்தது; உண்மையில் அந்த மொழி பண்டைய ஆங்கிலம் ஆகும். பிற்பாடு பல்வேறு இனங்களும் தங்களுக்கான தனி அடையாளத்தை நிலைநிறுத்த முற்பட்டனர்; பிரித்தானியத் தீவிலிருந்தவர்கள் ஆங்கிலோ-சாக்சன் மக்கள், ஆங்கில்கள் பின்னர் ஆங்கிலேயர் எனப்பட்டனர். இவர்கள் தொன்மைய செருமனியின் அறிஞர்களால் "பவேரியர்கள்", "சாக்சன்கள்" அல்லது "இசுவாபியர்கள் " எனப் பிரித்தறியப்பட்டனர். இச்சொற்கள் பெரும் நிலப்பகுதிகளை ஆண்ட உள்ளக ஆட்சியாளர்களைக் கொண்டு உருவாகின.புனித உரோமைப் பேரரசு உடைபட்டபோது, இத்தகைய தனி அடையாளங்கள் மறைந்து அவரவர் பேச்சுவழக்கில் "*தியுடொ" என்ற சொல் அடிப்படையில் இதுவரை பெயரிடப்படாத செருமானிய இனக்குழுக்கள் அழைக்கப்பட்டன. இவ்வாறு 13-ம் நூற்றாண்டில் "தியுடிக்சுலாந்து" (டாய்ச்சுலாந்து, செருமனி) புழக்கத்திற்கு வந்தது. + +1907இல் கண்டெடுக்கப்பட்ட "மாயுவர் 1" தாடையெலும்பு செருமனியில் 600,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொன்மையான மக்கள் வாழ்ந்துள்ளனர் எனக் காட்டுகிறது. உலகில் மிகவும் பழைமையான முழுமையான வேட்டைக்கருவிகள் செருமனியில் "இசோனின்கென்" என்னுமிடத்தில் 1995இல் கண்டுபிடிக்கப்பட்டன; 380,000 ஆண்டுகள் பழைமையான 6-7.5 அடி நீளமுள்ள மூன்று மர எறிவேல்கள் கிடைத்தன. செருமனியில் உள்ள நியாண்டர் பள்ளத்தாக்கில் (பள்ளத்தாக்கு செருமானிய மொழியில் "தால்" எனப்படும்) முதல்மனித தொல்லுயிர் எச்சம் கிடைக்கப்பெற்றது; 1856இல் இது புதிய மனித இனமாக நியண்டர்தால் மனிதன் என அங்கீகரிக்கப்பட்டது. இந்த நியாண்டர்தால் தொல்லுயிர் எச்சங்கள் 40,000 ஆண்டுகள் பழைமையானதாக மதிப்பிடப்படுகின்றது. இதேயளவு பழைமையான சான்றுகள் உல்ம் என்னும் ஊருக்கு அருகிலுள்ள சுவாபியன் யுரா குகைகளிலும் கிடைத்துள்ளன; 42,000 ஆண்டுகள் பழைமையான பறவையின் எலும்பு, பெரும் தந்தங்களிலான புல்லாங்குழல்கள் கண்டறியப்பட்டுள்ளன; இவையே உலகின் மிகவும் தொன்மையான இசைக்கருவிகளாகும். 40,000 ஆண்டுக்கு முந்தைய பனிக்கால சிற்பமான சிங்க மனிதன் உலகின் முதல் கலைவடிவமாக கருதப்படுகிறது. + +ஜெர்மானிக் குழுக்கள், நோர்டிக் வெண்கலக் காலம் அல்லது ரோமானியருக்கு முந்தி��� இரும்புக் காலத்திலிருந்தே காணப்பட்டமைக்குச் சான்றுகள் உண்டு. அவர்கள் தெற்கு ஸ்கண்டினேவியா மற்றும் வடக்கு ஜெர்மனியிலிருந்து கி.மு. 1ம் நூற்றாண்டிலிருந்து தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிப் பரவத் தொடங்கினர். இதன் மூலம் கவுலின் செல்டிக் குழுக்கள், ஈரானியர்கள் மற்றும் மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்பட்ட பால்டிக் மற்றும் ஸ்லாவிக் குழுக்களுடனும் தொடர்பு கொண்டனர். அகஸ்டசின் கீழ், ரோமானியத் தளபதியான பப்லியஸ் குயின்டிலியஸ் வரஸ் ஜெர்மானியாவைக் கைப்பற்றினான் (அண்ணளவாக ரைனிலிருந்து யூரல் மலைத்தொடர் வரையிலான பகுதி). கி.பி. 9ல், வரசினால் வழிநடத்தப்பட்ட மூன்று ரோமப் படைப்பிரிவுகள், செருஸ்கன் தலைவரான ஆர்மினியசினால் தோற்கடிக்கப்பட்டன. டாசியஸ் "ஜெர்மானியா" என்ற நூலை எழுதிய காலப்பகுதியான கி.பி.100ல், ஜெர்மானியக் குழுக்கள், தற்கால கெர்மனியின் பெரும்பாலான பகுதிகளான, ரைன் மற்றும் டன்யூப் நதிக்கரையோரமாகக் குடியேறினர் (லைம்ஸ் ஜெர்மானிகஸ்). எனினும், ஆஸ்திரியா, தெற்கு பவேரியா மற்றும் மேற்கு ரைன்லாந்து என்பன ரோமானிய மாகாணங்களாகவே இருந்தன. + +3ம் நூற்றாண்டில், அலெமனி, ஃபிராங்க்குகள், சட்டி, சாக்சன்கள், ஃபிரிசி, சிகம்ப்ரி மற்றும் துரிங்கி போன்ற பல மேற்கு ஜெர்மானிக் குழுக்கள் எழுச்சி பெற்றன. 260களில், ஜெர்மானிக் மக்களில் பலர் ரோமானியக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தனர். 375ல் ஹன்களின் படையெடுப்பு மற்றும் 395ல் ரோமப் பேரரசின் வீழ்ச்சி ஆகியன காரணமாக ஜெர்மானிக் குழுக்கள் மேலும் தென்மேற்காக நகர்ந்தன. இதேவேளை, சில பாரிய குழுக்கள் உருவாகி, சிறிய ஜெர்மானிக் குழுக்களைப் பிரதியீடு செய்தன. பாரிய பகுதிகள் (மெரோவின்கியன் காலப்பகுதியிலிருந்து இவை ஆஸ்திரேசியா என அறியப்பட்டன.) ஃபிராங்குகளால் கைப்பற்றப்பட்டன. மேலும் வடக்கு ஜெர்மனி சாக்சன்களாலும், ஸ்லாவுகளாலும் ஆளப்பட்டது. + +டிசெம்பர் 25, 800ல் ஃபிராங்கிய மன்னனான சார்லமக்னே பேரரசராக முடிசூட்டப் பட்டார். இவர் கரோலிங்கியப் பேரரசை உருவாக்கினார். 843ல் இது பிரிக்கப்பட்டது. இதன் கிழக்குப் பகுதியில் புனித உரோமப் பேரரசு உருவாக்கப்பட்டது. இது வடக்கே எய்டர் ஆற்றிலிருந்து, தெற்கே மத்தியதரைக் கடல் வரையும் பரந்திருந்தது. ஒட்டோனியப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(919–1024), பல பாரிய அரசுகள் ஒன்றிணைந்தன. 962ல் இப்பகுதிகளின் புனித உரோமப் பேரரசராக ஜெர்மானிய மன்னர் முடிசூட்டப்பட்டார். சாலியன் பேரரசர்களின் காலத்தில் (1024–1125), புனித உரோமப் பேரரசு வட இத்தாலியையும் பர்கண்டியையும் உள்வாங்கிக் கொண்டது. + +ஹொஹென்ஸ்டாஃபென் பேரரசர்களின் ஆட்சியின் கீழ்(1138–1254), ஜெர்மானிய இளவரசர்கள் தமது ஆதிக்கத்தை, ஸ்லாவுகள் வசித்த தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நிறுவிக் கொண்டனர். இதன்மூலம் இப்பகுதிகளிலும், மேலும் கிழக்குப் பகுதிகளிலும் ஜெர்மானியக் குடியேற்றங்களை ஏற்படுத்தினர் (ஓஸ்ட்சீட்லங்). வட ஜெர்மானிய நகரங்கள் வளமிக்க நகரங்களாக வளர்ச்சி பெற்றதோடு, ஹன்சியாட்டிக் லீக்கிலும் அங்கத்துவம் பெற்றன. 1315ல் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தினாலும், 1348-50ல் இடம்பெற்ற கறுப்பு இறப்பினாலும் ஜெர்மனியின் சனத்தொகை வீழ்ச்சியடைந்தது. 1356ல் எழுதப்பட்ட கோல்டன் புல் எனும் அரசாணை பேரரசின் அடிப்படை யாப்பாகக் காணப்பட்டது. இதில் ஏழு சக்திமிக்க சிற்றரசுகள் மற்றும் ஆயர் ஆட்சிப் பகுதிகளை ஆண்டோர் மூலம் நடத்தப்படும் தேர்தல் மூலம் பேரரசரைத் தெரிவுசெய்யும் முறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. + +1517ல் மார்ட்டின் லூதர் தனது தொண்ணூற்றைந்து வாசகங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரையை விற்றன்பேர்க்கில் பிரசுரித்தார். இதன்மூலம், ரோமன் கத்தோலிக்க திருச்சபையை எதிர்த்த அவர் புரட்டஸ்தாந்து சீர்திருத்தத்தையும் ஆரம்பித்தார். 1530ன் பின் ஒரு தனியான லூதரன் திருச்சபை பல ஜெர்மானியப் பகுதிகளில் உத்தியோகபூர்வ சமயமாக உருவானது. சமய முரண்பாடு காரணமாக முப்பதாண்டுப் போர் (1618–1648) ஆரம்பமானது இது ஜெர்மானியப் பகுதிகளின் அழிவுக்கும் காரணமானது. ஜெர்மானியப் பகுதிகளின் சனத்தொகை 30%த்தால் குறைவடைந்தது. வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் (1648), ஜெர்மானியப் பகுதிகளில் இடம்பெற்ற சமயப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. எனினும் ஜெர்மானியப் பேரரசு பல்வேறு சுதந்திர சிற்றரசுகளாகப் பிரிந்தது. 18ம் நூற்றாண்டில், புனித உரோமப் பேரரசில் இவ்வாறான 1,800 பகுதிகள் காணப்பட்டன. 1740இலிருந்து, ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க் முடியரசினதும், பிரசிய ராச்சியத்தினதும் இரட்டை ஆட்சி ஜெர்மானிய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. 1806ல் நெப்போலியப் போர்கள் காரணமாக இவ்வாட்சி அகற்றப்பட��டது. + +முதலாம் நெப்போலியனின் வீழ்ச்சிக்குப் பிறகு 1814இல் கூடிய வியன்னா மாநாடு செருமானியக் கூட்டமைப்பை ("Deutscher Bund") நிறுவியது; இது இறையாண்மையுடைய 39 அரசுகளின் நெகிழ்வான கூட்டணியாகும். ஐரோப்பிய மீளமைப்பு அரசியலுக்கு உடன்படாததால் செருமனியில் முற்போக்குவாத இயக்கங்கள் வெளிவரத் தலைப்பட்டன. ஆஸ்திரிய அரசியல்வாதி மெட்டர்னிக்கின் அடக்குமுறைகள் இந்த எதிர்ப்புக்களை வலுவாக்கின. செருமானிய அரசுகள் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொண்ட "சோல்பெரைன்" என்ற சுங்க ஒன்றியம், அவற்றிடையே பொருளியல் ஒற்றுமைக்கு வழிகோலியது.பிரெஞ்சுப் புரட்சியின் தேசிய முற்போக்கு கருத்துருக்கள் பலரிடையே, குறிப்பாக இளம் செருமானியரிடையே, ஆதரவு பெறத் தொடங்கின. மே 1832இல் நடந்த ஆம்பாக் விழா செருமன் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் மக்களாட்சிக்கும் ஆதரவான முதன்மை நிகழ்வாகும். ஐரோப்பாவில் நிகழ்ந்த தொடர் புரட்சிகளின் விளைவாக, செருமனியிலும் பொதுமக்களும் அறிஞர்களும் 1848ஆம் ஆண்டுப் புரட்சிகளைத் தொடங்கினர். பிரசியாவின் நான்காம் பிரெடெரிக் வில்லியத்திற்கு, மிகுந்த குறைவான அதிகாரங்களுடன், பேரரசர் பதவி அளிக்க முன்வந்தனர்; இதனை ஏற்க மறுத்த பிரெடெரிக் வில்லியம் ஓர் அரசியலமைப்பை முன்மொழிந்தார். இது எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. + +பிரசிய மன்னர் முதலாம் வில்லியமிற்கும் முற்போக்கான நாடாளுமன்றத்திற்கும் இடையே 1862ஆம் ஆண்டு படைத்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்து வேறுபாடு எழுந்தது. மன்னர் பிஸ்மார்க்கை புதிய தலைமை அமைச்சராக நியமித்தார். 1864இல் பிஸ்மார்க் டென்மார்க் போரில் வெற்றி கண்டார். தொடர்ந்து 1866இல் ஆஸ்திரோ-பிரசியப் போரில் இவரடைந்த வெற்றி வட செருமன் கூட்டமைப்பை நிறுவத் துணை நின்றது. முன்பு செருமானிய விவகாரங்களில் முன்னிலை வகித்த ஆஸ்திரியா இக்கூட்டமைப்பில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. 1871இல் பிரான்சு தோல்வி கண்டபோது வெர்சாய் அரண்மனையில் 1871இல் செருமன் பேரரசு அறிவிக்கப்பட்டது; ஆஸ்திரியா தவிர்த்த அனைத்து பகுதிகளும் இதில் உள்ளடங்கின. +புதிய நாட்டின் மூன்றில் இருபங்கு நிலப்பகுதியும் மக்கள்தொகையும் கொண்ட பிரசியா ஆதிக்கமிகுந்த அங்கமாக விளங்கியது; ஓயென்சொலார்ன் பரம்பரையைச் சேர்ந்த பிரசிய அரசர் அதன் பேரரசராக ஆட���சி செய்தார், பெர்லின் அதன் தலைநகரமாக விளங்கியது. செருமானிய ஒருங்கிணைப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில் பிஸ்மார்க்கின் வெளியுறவுக் கொள்கைகள் செருமனியின் நிலையை, பெரும் வளரும் நாடாக, நிலைநிறுத்தியது. பிரான்சுடன் போர் தவிர்ப்பு உடன்பாடு கண்டார். 1884ஆம் ஆண்டு பெர்லின் மாநாட்டின்படி கமரூன் போன்ற செருமனியின் குடியேற்றப்பகுதிகளுக்கு புதிய பேரரசு உரிமை கொண்டாடியது. செருமனியின் இரண்டாம் வில்லியமின் கீழ், மற்ற ஐரோப்பிய நாடுகளைப் போலவே, ஆதிக்கவாதத்தை முன்னெடுத்ததால் அண்டைநாடுகளுடனான உறவில் விரிசல் கண்டது. பிஸ்மார்க் கண்ட பல உடன்பாடுகள் புதுப்பிக்கப்படவில்லை; புதிய கூட்டணிகளில் செருமனி இடம்பெறவில்லை. + +சூன் 28, 1914இல் ஆஸ்திரியாவின் இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட் கொலையுண்டதை அடுத்து முதல் உலகப் போர் துவங்கியது. மைய சக்திகளில் அங்கமாகவிருந்த செருமனி நேசநாடுகளிடம் தோற்றது. இந்தப் போரில், ஏறத்தாழ இரண்டு மில்லியன் செருமானிய படைவீரர்கள் மடிந்தனர். நவம்பர் 1918இல் செருமன் புரட்சி வெடித்தது; பேரரசர் இரண்டாம் வில்லியமும் அனைத்து செருமானிய அரசுகளும் பதவி துறந்தனர். நவம்பர் 11இல் ஏற்பட்ட சமரசம் போரை முடிவுக்குக் கொணர்ந்தது. சூன் 1919இல் செருமன் வெர்சாய் உடன்பாட்டில் ஒப்பிட்டது. செருமானியர்கள் இந்த உடன்படிக்கை தங்களுக்கு அவமானகரமாகவும் நீதிபிறழ்ந்ததாகவும் உணர்ந்தனர். இதுவே பின்னாளில் இட்லர் மேலோங்க அடிப்படையாக அமைந்ததாக சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர். + +செருமன் புரட்சியின் துவக்கத்தில் செருமனி தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டது. இருப்பினும், அதிகாரப் பகிர்விற்கான போராட்டம் தொடர்ந்தது; இடதுசாரி பொதுவுடைமை பவேரியாவில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆகத்து 11, 1919இல் புரட்சி முடிவுக்கு வந்தபோது செருமனியின் குடியரசுத் தலைவராக இருந்த பிரெடிரிக் எபெர்ட்டு மக்களாட்சிக்கான வைமார் அரசியலமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இதன் ஆட்சிக்காலத்தில் பெல்ஜிய, பிரான்சிய ஆக்கிரமிப்புகள், விலைவாசி ஏற்றத்தைத் தொடர்ந்து 1922-23இல் மீயுயர் ஏற்றம், கடன் சீரமைப்புத் திட்டம், 1924இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நாணயம், தேசிய தன்னம்பிக்கை வளர்ச்சி, கலை ஆக்கங்கள், முற்போக்கான பண்பாடு மற்றும் பொருளியல் வ���ர்ச்சியை செருமனி எதிர்கொண்டது. இருப்பினும் பொருளியல்நிலை நிலையில்லாமலும் அரசியல்நிலை கிளர்ச்சிகள் நிறைந்ததாகவும் இருந்தன. 1924 முதல் 1929 வரையிலான செருமனி "பகுதி நிலைபெற்ற" செருமனியாக வரலாற்றாளர் டேவிட் வில்லியம்சன் கூறுகிறார். இது 1929இல் ஏற்பட்ட பெரும் பொருளியல் வீழ்ச்சியால் சீரழிந்தது. + +கூட்டமைப்பிற்கு 1930இல் நடந்த தேர்தல்களில் நாட்சி கட்சி 18% வாக்குகளையே பெற்றது. எந்தக் கூட்டணியும் அரசமைக்க இயலாதநிலையில் அரசுத்தலைவர் எயின்ரிக் புருன்னிங் வீமர் அரசியலமைப்பின் 48ஆம் பிரிவின்படி தம்மை நெருக்கடிநிலை அதிகாரங்களுடன் நாடாளுமன்ற ஒப்புதலின்றி ஆள அனுமதிக்குமாறு நாட்டுத்தலைவர் பவுல் ஃபொன் இன்டென்பெர்கை வேண்டினார். இதனை ஏற்றுக்கொண்ட பிறகு ஆட்சி செய்த புருன்னிங் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கத்தை குறைக்க பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இறங்கினார். இது வேலையற்றோர் எண்ணிக்கையை கூட்டியதுடன் சமூக சேவை வசதிகளையும் குறைத்தது. + +1932இல் கிட்டத்தட்ட 30% செருமானிய தொழிலாளர்கள் வேலையின்றித் தவித்தனர். அந்தாண்டு நடந்த சிறப்புத் தேர்தலில் நாட்சி கட்சி 37% வாக்குகளைப் பெற்றது;இருந்தும் கூட்டணி சேர்த்து ஆட்சி அமைக்க இயலவில்லை. பல்வேறு மாற்று அமைச்சரவைகளை சோதித்து தோல்வியுற்ற பவுல் பொன் இன்டனெபெர்கு சனவரி 30, 1933இல் இட்லரை அரசுத்தலைவராக நியமித்தார். பெப்ரவரி 27, 1933இல் செருமானிய நாடாளுமன்றக் கட்டிடம் தீக்கிரையானது; இந்நிலையில் வழங்கப்பட்ட "இராய்க்சுடாக் தீ தீர்ப்பாணை"யின்படி அடிப்படை குடிம உரிமைகள் இடைநீக்கம் செய்யப்பட்டு இட்லருக்கு]] எல்லையற்ற சட்டமியற்றும் அதிகாரம் வழங்கப்பட்டது. இட்லர் முழுமையும் மையப்படுத்தப்பட்ட சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்தினார். செருமனியின் முதல் செறிவக முகாம்களை பெப்ரவரி 1933இல் நிறுவினார். செப்டம்பர் 1933இல் நடத்தப்பட்ட பொதுக் கருத்துக்கணிப்பில் உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலக செருமனி வாக்களித்தது. இட்லர் படைத்துறையை வலுப்படுத்தத் தொடங்கினார். பற்றாக்குறை நிதியைப் பயன்படுத்தி இட்லர் பல்லாயிரக் கணக்கான செருமானியர்களை பொதுத்துறை திட்டங்களில் வேலைக்கமர்த்தினார். + +ஆகத்து 1934இல் படைத்துறை வீரர்கள் நாட்டின் தளபதிக்கல்லாது இட்லருக்கு தனிப்பட்ட முறையில��� விசுவாச உறுதிமொழி எடுக்கும் சட்டத்தை அமைச்சரவை இயற்றியது. 1934இல் நடந்த பொது வாக்கெடுப்பில் 90% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் பதவியும் நாட்டுத்தலைவர் பதவியும் ஒன்றிணைக்கப்பட்டது 1935இல் படைத்துறையில் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டது; வெர்சாய் உடன்பாட்டிலிருந்து விலகிக் கொண்டது; யூதர்களையும் மற்றக் குழுக்களையும் இலக்கு வைத்து நுரெம்பர்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. + +1935இல் நேசப்படைகள் கையகப்படுத்தியிருந்த சார் பகுதியை செருமனி மீட்டது; 1936இல் வெர்சாய் உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்டிருந்த ரைன்லாந்திற்குள் துருப்புக்களை அனுப்பியது. 1938இல் ஆசுதிரியா கையகப்படுத்தப்பட்டது; செப்டம்பர் 1939இல் செக்கோசிலோவாக்கியாவைக் கைப்பற்றியது. பின்னர் போலந்து படையெடுப்பு நடத்துமுகமாக மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது. செப்டம்பர் 1, 1939இல் போலந்து படையெடுப்பு நடைபெற்றது; சோவியத் செஞ்சேனையுடன் போலந்தைக் கைப்பறியது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து ஐக்கிய இராச்சியமும் பிரான்சும் செருமனி மீது போர் தொடுத்து இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. சூலை 22, 1940இல் பிரான்சின் பெரும்பகுதியை செருமனி கைப்பற்றியபின்னர் பிரான்சு செருமனியுடன் சமரசம் செய்து கொண்டது. பிரித்தானியர்கள் 1940இல் பிரிட்டன் சண்டை என்றறியப்பட்ட செருமனியின் தாக்குதல்களை முறியடித்தனர். சூன் 22, 1941இல் செருமனி மோலடோவ்-ரிப்பன்டிராப் ஒப்பந்தத்தை மீறி சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தனர். அச்சமயத்தில் செருமனியும் மற்ற அச்சு நாடுகளும் ஐரோப்பாவின் பெரும்பகுதியையும் வடக்கு ஆப்பிரிக்காவையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1943 துவக்கத்தில் சுடாலின்கிராட் சண்டையை அடுத்து சோவியத் ஒன்றியத்திலிருந்து மீளத் துவங்கினர். + +செப்டம்பர் 1943இல் செருமனியின் கூட்டாளி இத்தாலி சரண்டைந்தது; இதனால் இத்தாலியிலிருந்த நேசப்படையினருடன் போரிட கூடுதல் துருப்புக்கள் வேண்டியிருந்தது. பிரான்சில் டி-டே படையிறக்கம் போரின் மேற்கு முனையை திறந்தது; செருமனியின் எதிர்த் தாக்குதல்களுக்கிடையே நேசப்படைகள் 1945இல் செருமனிக்குள் நுழைந்தன. பெர்லின் சண்டையையும் இட்லரின் மரணத்தையும் அடுத்து செருமானியப் படை மே 8, 1945இல் சரணடைந்தது. மனித வரலாற்றின் கு���ுதிமிக்க போராக விளங்கிய இந்த உலகப்போரில் ஐரோப்பாவில் மட்டும் 40 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்; செருமன் படையில் மட்டும் 3.25 மில்லியன் முதல் 5.3 மில்லியன் வீரர்கள் இறந்து பட்டனர். 1 முதல் 3 மில்லியன் செருமானிய குடிமக்கள் மடிந்தனர். + +சிறுபான்மையர், அரசியல், சமய எதிர்ப்பாளர்களை இலக்காக கொண்டு இயற்றப்பட்ட நாட்சி ஆட்சி கொள்கைகள் பின்னதாக பெரும் இன அழிப்பு என அறியப்பட்டன. இந்த இனவழிப்பில் 6 மில்லியன் யூதர்கள், 220,000இலிருந்து 1,500,000 வரையான ரோமானி மக்கள், 275,000 மனநலம்/உடல்நலம் இல்லாதவர்கள், ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள், ஆயிரக்கணக்கான தற்பால்சேர்க்கையினர், நூறாயிரக்கணக்கான அரசியல் அல்லது சமய மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள் உள்ளிட்ட 10 மில்லியன் குடிமக்கள் அழிக்கப்பட்டனர். தவிர ஆறு மில்லியன் உக்ரைனியர் மற்றும் போலந்துக்காரர்களும் 2.8 மில்லியனாக மதிப்பிடப்படும் சோவியத் போர்க்கைதிகளும் நாட்சி ஆட்சியில் உயிரிழந்தனர். +போரில் தோல்வியடைந்ததால் செருமனி நிலப்பகுதிகளை இழந்ததோடன்றி செருமனியின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளிலிருந்தும் பல மில்லியன் செருமானிய இனத்தினர் வெளியேற்றப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் சில நாட்சிகள் பெரும் இன அழிப்பு போன்ற குற்றங்களுக்காக நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் குற்ற விசாரணை செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டனர். + +செருமனி சரண்டைந்த பிறகு செருமனியின் மிஞ்சியிருந்த பகுதிகளையும் பெர்லினையும் இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள் நான்கு இராணுவ ஆக்கிரமிப்பு மண்டலங்களாகப் பிரித்துக் கொண்டன. இந்த மண்டலங்களில் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6.5 மில்லியனுக்கும் கூடுதலான செருமானிய இன மக்கள் குடியேற்றப்பட்டனர். பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை ஒன்றிணைத்து மே 23, 1949இல் "செருமானியக் கூட்டு மக்களாட்சியாக" ("Bundesrepublik Deutschland") நிறுவப்பட்டது; அக்டோபர் 7, 1949இல் சோவியத் பகுதி "ஜெர்மன் சனநாயகக் குடியரசாக"(GDR) ("Deutsche Demokratische Republik") அறிவிக்கப்பட்டது. இவை முறைசாராது "மேற்கு ஜெர்மனி" என்றும் "கிழக்கு ஜெர்மனி" என்றும் அழைக்கப்பட்டன. கிழக்கு ஜெர்மனிக்கு கிழக்கு பெர்லின் தலைநகராயிற்று; மேற்கு ஜெ���்மனிக்கு பான் தற்காலிகத் தலைநகராயிற்று. செருமானியக் கூட்டு மக்களாட்சிக்கு மார்ஷல் திட்டத்தின் கீழான மீள்கட்டமைப்பு உதவிகள் வழங்கப்பட்டன. +மேற்கு செருமனி, மக்களாட்சி குடியரசாக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து செயல்பட்டது. 1949இல் இதன் முதல் அரசுத்தலைவராக (சான்சுலர்) கொன்ராடு அடேனார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1963 வரை இப்பதவியில் நீடித்தார். மேற்கு செருமனி 1955இல் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்புடன் இணைந்தது. + +கிழக்கு செருமனி கிழக்கத்திய திரளணி நாடாக சோவியத் ஒன்றியத்தின் அரசியல் மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டது. கிழக்கு செருமனி மக்களாட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் பொதுவுடமையாளர்களின் செருமானிய சோசியலிச ஒற்றுமைக் கட்சியைச் சேர்ந்த பொலிட்பீரோ உறுப்பினர்களிடமே அரசியல் அதிகாரம் இருந்தது. சோவியத்-பாணி திட்டமிட்ட பொருளாதாரம் அமைக்கப்பட்டது; கிழக்கு செருமனி பின்னாளில் காம்கான் நாடாக இணைந்தது. + +1961இல் கிழக்கு செருமானியர்கள் மேற்கு செருமனிக்கு தப்பிச் செல்வதைத் தடுக்குமாறு பெர்லின் சுவர் கட்டப்பட்டது. இது பனிப்போரின் ஓர் அடையாளமாக விளங்கியது. எனவே போலந்திலும் அங்கேரியிலும் ஏற்பட்ட மக்களாட்சி மாற்றங்களை அடுத்து 1989இல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது பொதுவுடமையின் வீழ்ச்சி, செருமானிய மீளிணைவு மற்றும் "டை வென்டே" (திருப்பம்) அடையாளமாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 12, 1990இல் இரண்டு+நான்கு உடன்பாடு காணப்பட்டு நான்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளும் ஒன்றிணைக்கப்பட்டு செருமனிக்கு முழுமையான இறையாண்மை கிட்டியது. அக்டோபர் 3, 1990இல் செருமானிய மீளிணைவு ஏற்பட இது வழிவகுத்தது. + +மார்ச்சு 10, 1994இல் இயற்றப்பட்ட பெர்லின்/பான் சட்டப்படி பெர்லின் ஒன்றுபட்ட செருமனிக்கு மீண்டும் தலைநகராயிற்று; பான் நகருக்கு தனிப்பட்ட நிலையாக "Bundesstadt" (கூட்டு நகரம்) என்ற தகுதி வழங்கப்பட்டது. சில அமைச்சரகங்கள் இங்கு இயங்குகின்றன. அரசு இடமாற்றம் 1999இல் முழுமையடைந்தது. + +மீளிணைவிற்குப் பிறகு செருமனி ஐரோப்பிய ஒன்றியத்திலும் நாடோவிலும் முனைப்பான பங்காற்றி வருகின்றது. 1999இல் யூகோசுலோவியாவில் அரசியல் சிக்கல் ஏற்பட்டபோது அமைதிகாப்புப் படையை அனுப்பியது. தாலிபான்களுக்கு எதிராக ஆப்கானித்தானிற்கு பாதுகாப்பு வழங்க நாடோவின் முயற்சிகளில் இணைந்து தனது படைகளை அனுப்பியது. இவை பாதுகாப்புப் படைகளை நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற செருமானியச் சட்டங்களுக்கு புறம்பானதால் சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. 2005இல் அங்கெலா மேர்க்கெல் செருமனியின் முதல் பெண் அரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். + +செருமனி மேற்கு மற்றும் நடு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலான பகுதிகள் அகலக்கோடுகள் 47°, 55° வ ஆகியவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 5°, 16° கி ஆகியவற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. 357,021 ச.கிமீ (137,847 ச.மைல்) பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 349,223 ச.கிமீ (134,836 ச.மைல்) நிலப் பரப்பும், 7,798 ச.கிமீ (3,011 ச.மைல்) நீர்ப் பரப்பும் ஆகும். பரப்பளவின் அடிப்படையில் ஐரோப்பாவின் 7 ஆவது பெரிய நாடாகவும், உலகின் 62 ஆவது பெரிய நாடாகவும் செருமனி விளங்குகிறது. + +உயரம், அதி கூடிய அளவாகத் தெற்கில் ஆல்ப்சு மலைப்பகுதியில் தொடங்கி வடமேற்கில் வடகடல் கரையோரம் வரையும், வடகிழக்கில் பால்டிக் கடல் கரையோரம் வரையும் குறைகிறது. நடு செருமனியின் காடுகளைக் கொண்ட மேட்டு நிலங்களிலும், வட செருமனியின் தாழ் நிலப் பகுதியிலும் பெரிய ஆறுகளான ரைன், தன்யூப், எல்பே போன்றன ஓடுகின்றன. அல்பைன் பகுதியில் பனியாறுகள் காணப்படினும், தற்போது உருகி இல்லாது போகும் நிலை காணப்படுகிறது. இரும்புத் தாது, நிலக்கரி, பொட்டாசு, மரம், லிக்னைட்டு, யுரேனியம், செப்பு, இயற்கை வளிமம், உப்பு, நிக்கல், விளைநிலங்கள், நீர் என்பன செருமனியின் குறிப்பிடத்தக்க இயற்கை வளங்கள். + +செருமனியின் பெரும்பாலான பகுதிகளில், ஈரலிப்பான மேற்குக் காற்று முதன்மை பெறும் மிதவெப்பப் பருவகாலத் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. + +செருமனிக்கு உட்பட்ட பகுதிகளை இரண்டு சூழல்மண்டலங்களாகப் பிரிக்கலாம். இவை, ஐரோப்பிய-நடுநிலக்கடல் மலைசார் கலப்புக் காடுகளும், வடகிழக்கு-அத்திலாந்திய அடுக்கக் கடல்சார் பகுதிகளும் ஆகும். 2008 ஆம் ஆண்டு நிலவரப்படி, செருமனியின் நிலப்பகுதியின் 34% விளை நிலங்களாகவும், 30.1% காடுகளாகவும் உள்ளன. 13.4% மட்டுமே நிரந்தரமான புல்வெளிகள். 11.8% குடியிருப்புக்களும், சாலைகளுமாக உள்ளன. + +நடு ஐரோப்பாவுக்குப் ப��துவான தாவரங்களும் விலங்குகளுமே இங்கும் காணப்படுகின்றன. செருமனியின் காடுகளின் மூன்றில் ஒரு பகுதி "பீச்", "ஆக்" போன்ற இலையுதிர் மரங்களால் ஆனவை. மீள்காடாக்க முயற்சிகளினால் ஊசியிலை மரங்கள் அதிகமாகி வருகின்றன. உயர் மலைப் பகுதிகளில், "இசுப்புரூசு", "ஃபர்" மரங்கள் அதிக அளவில் உள்ளன. மணற் பகுதிகளில் "பைன்", "லார்ச்" போன்ற மர வகைகள் காணப்படுகின்றன. பல வகையான பெரணிச் செடிகள், பூஞ்செடிகள், பூசணங்கள், பாசிகள் என்பனவும் உள்ளன. இங்குள்ள காட்டு விலங்குகளுள், மான், காட்டுப்பன்றி, நரி, பாட்கர், முயல் போன்ற வகைகள் அடங்கும். குறைந்த அளவில் நீரெலிகளும் உள்ளன. + +நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் அதிக மக்கள்தொகை-அடர்த்தி கொண்டது. ஹெஸன் மாநிலத்தில் உள்ள ஃபிரான்க்ஃபர்ட் ஜெர்மனியின் வர்த்தக தலைநகரமாகும். தேசிய விமான சேவையான 'லுஃப்ரான்சாஸா'வின் தலைமைச்செயலகம் மற்றும் விமான கிடங்கும் இங்குதான் உள்ளன. இசையமைப்பாளர் பித்தோவன் பானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. + +ஜெர்மனியில் அதிகம் பேசப்படும் மொழி ஜெர்மன் ஆகும். இதுவே தேசிய மொழியும் ஆகும். இது ஆங்கிலம் போன்ற எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் மிகவும் வேறுபட்ட ஒலி உடையதாகும் . கூடுதலாக ä,ö,ü,ß போன்ற எழுத்துக்களும் உள்ளன. இவ்வெழுத்துகளுக்கு மேல் இருக்கும் புள்ளிக்கு 'உம்-லௌட்' (umlaut) என்று பெயர். பெயர்சொற்களுக்கு பால் (ஆண்பால், பெண்பால், ஒன்றன்பால் எனும்) அடிப்படையில் டெயர் ('der'- ஆண்பால்), டீ ('die' - பெண்பால்), டாஸ் ( 'das' - ஒன்றன்பால்) எனும் அடைமொழி சேர்க்கப்படுகின்றது. + +இந்தியாவில் ஜெர்மன் மொழி பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் புகழ்பெற்ற கோத்தே-இன்ஸ்டிட்யூட் (Goethe-Institute) இந்தியாவின் பத்து பெரிய நகரங்களில் ஜெர்மன் மொழி வகுப்புகள் நடத்தி வருகின்றது. + +ஜெர்மனியில் பல முக்கிய நதிகள் உள்ளன. இவற்றுள் மிக நீளமான ரைன் ஆறு 1232 கி.மீ. நீளம் கொண்டது. எல்பா மற்றும் தன்யூப் ஆகியன ரைனிற்க்கு அடுத்த பெரிய நதிகளாகும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீர்வழி போக்குவரத்திற்கு இவ்வாறுகள் உதவுகின்றன. + +செருமனியின் சமூகச் சந்தைப் பொருளாதாரம் மிகவுயர் திறனுடைய தொழிலாளர்களையும் பெரும் மூலதனப் பங்குகளையும், மிகக் குறைந்த நிலையில் ஊழலையும், மிக உயர்ந்த புத்தாக்கத் தூண்டலையும் கொண்டதாக விள���்குகிறது. ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய, செல்வாக்குள்ள தேசிய பொருளாதாரமான செருமனி உலகில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நான்காவதாகவும் மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் ஐந்தாவதாகவும் உள்ளது. 2011இல் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிநிலை அறிக்கையில் நிகர பங்களிப்பாளர்களில் பெரும் நாடாக செருமனி இருந்துள்ளது. மொத்த உற்பத்தியில் ஏறத்தாழ 71% சேவைத்துறையிலும் 28% தொழிலுற்பத்தியிலும் 1% வேளாண்மையிலும் கிடைக்கின்றது. தேசிய வேலையில்லாதோர் விழுக்காடு அலுவல்முறையாக ஏப்ரல் 2014இல் 6.8% ஆக இருந்தது. இதில் முழுநேர வேலைத் தேடும் பகுதிநேர ஊழியரும் அடங்கி உள்ளனர். + +ஐரோப்பிய நாடுகளிடையே நெருங்கிய பொருளாதார, அரசியல் ஒற்றுமைக்கு செருமனி முயன்று வருகின்றது. ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையேயான உடன்பாடுகள் மற்றும் ஐ.ஒ. சட்டங்களுக்கேற்ப இதன் வணிகக் கொள்கைகள் வரையறுக்கப்படுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பொது நாணயம், ஐரோ, செருமனியில் சனவரி 1, 2002இல் அறிமுகப்படுத்தப்பட்டது. செருமனியின் நாணயஞ்சார் கொள்கைகளை ஐரோப்பிய நடுவண் வங்கி தீர்மானிக்கின்றது. செருமானிய மீளிணைவின் இருபதாண்டுகளுக்குப் பிறகும் வாழ்க்கைத்தரமும் தனிநபர் வருமானமும் முந்தைய மேற்கு செருமனிப் பகுதிகளில் முந்தைய கிழக்கு செருமனிப் பகுதிகளை விடக் கூடுதலாக உள்ளது. கிழக்கு செருமனியின் நவீனமயமாக்கலும் ஒன்றிணைப்பும் நீண்டநாள் செயற்பாடாக உள்ளது; 2019 வரை நீடிக்கும் என மதிப்பிடப்படுகின்றது. மேற்கிலிருந்து கிழக்கிற்கு ஆண்டுக்கு ஏறத்தாழ $80 பில்லியன் பரிமாறப்படுகின்றது. சனவரி 2009 இல் செருமானிய அரசு பொருளியல் நிலையைத் தூண்டும் விதமாகவும் நலிந்த துறைகளைக் காப்பாற்றவும் €50 பில்லியன் திட்டம் அறிவித்துள்ளது. + +உலகில் நடக்கும் முன்னணி வணிக விழாக்களில் மூன்றில் இரண்டு செருமனியில் நடக்கின்றன. + +2010ஆம் ஆண்டில் வருமானத்தின் அடிப்படையில், பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட, உலகின் முதல் 500 பெரிய நிறுவனங்களில் (பார்ச்சூன் குளோபல் 500) 37 செருமனியைத் தலைமையிடமாகக் கொண்டவை. செருமனியின் மிகவும் அறியப்பட்ட வணிக நிறுவனங்கள்: மெர்சிடிஸ்-பென்ஸ், பி.எம்.டபிள்யூ, எஸ்ஏபி, சீமென்ஸ், போல்க்ஸ்வேகன், அடிடாசு, ஆடி, அலையன்ஸ், போர்ஷ், பேயர், போஸ்ச், மற்றும் நிவி��ா. செருமனியின் சிறு,குறு நிறுவனங்கள் அவற்றின் சிறப்புத்திறனுக்காக அறியப்பட்டவை. தங்கள் துறையில் தனிச்சிறப்பு பெற்றுள்ள இத்தகைய 1000 நிறுவனங்கள் மறைந்துள்ள வாகையாளர்களாக மதிப்பிடப்படுகின்றனர். + + +செருமானியர்களின் உணவுப்பழக்கம் பிராந்தியத்துக்குப் பிராந்தியம் வேறுபடுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திலும் ஒவ்வொரு விதமான உணவை தமது பிரத்தியேக உணவாக வைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லோருமே உணவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள். இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போதும், அதன் பின்னும் அவர்கள் அனுபவித்த வறுமையும், பட்டினியும் அதற்கான காரணமாகக் கருதப்படுகிறது. இறைச்சி, மீன், முட்டை, மரக்கறி என்று எல்லாவிதமான உணவுகளும் இவர்களது சமையலில் இடம்பெறும். சமைப்பதில் பலவிதமான முறைகளை வைத்திருக்கிறார்கள். உணவில் எல்லாச் சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டுமென்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பால், பாலாடைக் கட்டி, பழங்கள் போன்றவற்றையும் அதிகளவு கவனம் செலுத்தி உண்கிறார்கள். வடக்கு செருமானியர் உருளைக்கிழங்கைப் பிரதான உணவாகக் கொண்டுள்ளார்கள். உருளைக்கிழங்கை அவித்து, பொரித்து, வறுத்து, வெதுப்பி என்று பலவித முறைகளில் செய்து அதற்கு இறைச்சியோ, மீனோ சேர்த்து உண்கிறார்கள். தெற்கு செருமானியர் நூடில்ஸ், ஸ்பெற்சிலே(நூடில்ஸ்வகையில் பிரத்தியேகமான ஒன்று) க்னொய்டெல் போன்றவற்றைப் பிரதான உணவாகக் கொள்கிறார்கள். இவர்களிடம் ஏறத்தாழ 300 வகையான பாண் வகைகள் (Bread) உள்ளன. பாணை பெரும்பாலும் மாலை உணவாகவும், காலை உணவாகவும் பயன்படுத்துகிறார்கள். மாலையில் பாணுக்கு இடையில் மரக்கறிகள், இறைச்சித்துண்டங்கள், வூஸ்ற், சீஸ் போன்றவற்றை வைத்துச் சாப்பிடுகிறார்கள். இதை இரவுப்பாண் (Abendbrot) என்பார்கள். காலையில் பெரும்பாலும் பாணை வெண்ணெய், ஜாமுடன் சாப்பிடுவார்கள். கூடவே மரக்கறித் துண்டுகள், பாலாடைக் கட்டி போன்றவைகளையும் சேர்த்துக் கொள்வார்கள். காலை உணவில் கண்டிப்பாக ஒரு கிண்ணம் தோடம்பழச் சாறு சேர்த்துக் கொள்வார்கள். குழந்தைகளுக்குக் கண்டிப்பாக ஒரு கிண்ணம் பால் கொடுக்கப்படும். காலை உணவில் தானியவகைகள் கொண்ட Cereal என்னும் உணவும் பிரதான உணவாகக் கொள்ளப்படுகிறது. + +வூஸ்ட் எனப்படு��் உணவு வகை அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. துருக்கி நாட்டு உணவு வகையான கேபாப் ஜெர்மன் மக்களிடையே மிகுந்த வரவேற்பபைப் பெற்றுள்ளது. இத்தாலி உணவான பிற்ஸா, பாஸ்தா, லசாணியா போன்ற உணவு வகைகளும் இங்கு விரும்பப் படுகின்றன. இந்திய மற்றும் சீன உணவங்காடிகளும் இங்குள்ளன. + +ஜெர்மனியில் அதிகமானோர் கிறித்தவத்தைப் பின்பற்றினாலும் மற்ற மதங்களும் இங்கு ஆதரிக்கப்படுகின்றன. ஜெர்மனியின் நோட்றைன் - வெஸ்ட்ஃபாலன் மாநிலத்தில் உள்ள ஹம் என்னும் ஊரில் கோபுரத்தோடு கூடிய அம்மன் கோயில் உள்ளது . ஜெர்மனியின் பல ஊர்களில் கோயில்கள் இருந்தாலும்,கோபுர அமைப்போடு இருப்பதால் ஜெர்மனியின் மற்ற மாநிலங்களில் இருந்தும் மக்கள் அதிக அளவில் ஹம்மில் இருக்கும் கோயிலுக்கு வருகின்றனர். + +ஜெர்மனியின் பல நகரங்களில் பல்கலைக்கழங்கள் உள்ளன . அயல் நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்பும் மாணவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html எனும் இணையதளத்திலிருந்து விபரங்களை அறியலாம். + +செருமனி தேசிய காற்பந்து அணி +பிரான்சு ஜெர்மனி உறவு + + + + +மியூசிக் ஹால் + +மியூசிக் ஹால் (Music Hall) இங்கிலாந்து நாட்டின் ஒரு நாடகக் கலைவடிவமாகும். இக்கலை 1850 முதல் 1960 வரையிலான காலத்தில் மிகவும் பிரபலம் அடைந்தது. இச்சொல் கீழ் காணும் மூன்று பொருள்களிலும் உபயோககிக்கப் பெற்றது. + + + + +நியூட்டன் (அலகு) + +இயற்பியலில், நியூட்டன் ( ("newton", குறியீடு: N) என்பது விசையின் SI அலகாகும். சேர் ஐசக் நியூட்டன் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. நியூட்டன் அலகு முதன்முதலில் 1904 வாக்கில் பயன்படுத்தப்பட்டது. 1948ல் நடந்த நிறைகள் மற்றும் அளவைகள் மீதான பொது மகாநாடு ("General Conference on Weights and Measures - CGPM")-க்குப் பிறகு,விசையின் அலகாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +ஒரு கிலோகிராம் திணிவுள்ள பொருளொன்றில் ஒரு மீட்டர்/செக்கன் வேகவளர்ச்சியை ("acceleration") உருவாக்கத் தேவையான விசையே ஒரு நியூட்டன் என வரைவிலக்கணம் கூறுகின்றது.. + +நியூட்டன், SI அடிப்படை அலகுகளில், கிகி x மீ x செக் என்பவற்றை உள்ளடக்கிய ஒரு SI அலகு ஆகும். + +நிறை என்பதன் ஒரு வரைவிலக்கணம், புவியீர்ப்பு காரணமாக இரு பொருட்களிடையே உள்ள விசை என்பதனால், நியூட்டன் நிறையின் ஒரு அலகுமாகும். புவி மேற்பரப்பின் வெவ்வேறு இடங்களில் சில பத்திலொரு பங்கு வீதம் அளவுக்கு வேறுபட்டாலும், ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருள் புவியின் மேற்பரப்புக்கு அண்மையில் அண்ணளவாக 9.81 நியூட்டன்களாக இருக்கும். வேறுவகையில், 9.81 கிகி திணிவுள்ள ஒரு பொருள் (≈101.94 கிராம்கள்) அண்ணளவாக ஒரு நியூட்டன் நிறையுடையதாக இருக்கும். + + + + +பாசுக்கல் (அலகு) + +பாசுக்கல் அல்லது பாஸ்கல் (Pascal) (குறியீடு Pa) என்பது அழுத்தத்தின் SI அலகு ஆகும். பாசுக்கல் என்பது ஒரு சதுர மீட்டர் பரப்பில் ஒரு நியூட்டன் எடை செயல்படும்போதுள்ள அழுத்தம் ஆகும். அதாவது ஒரு பாசுக்கல் என்பது நியூட்டன்/மீட்டர் க்குச் சமமாகும். புகழ் பெற்ற பிரான்சியக் கணித அறிஞரும், இயற்பியலாளரும், மெய்யியல் அறிஞருமான பிளேய்சு பாசுக்கல் (Blaise Pascal) நினைவாக இந்த அலகு பெயரிடப்பட்டுள்ளது. + + +இதே அலகு தகைவு (stress (physics)|stress), யங் கெழு அல்லது யங் எண்(Young's modulus), [[இழுவலிமை] (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது. + +தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 [[டார்]] (ISO 2533) ஆகும். + +உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர். + + +முன்னாளைய [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] [[மீட்டர்]]-[[டன்]]-[[நொடி (கால அளவு)|நொடி]] அலகுமுறையில் (mts system) [[பீசே]] (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும். + +¹[[பூமி]]யின் நிலப்பரப்பில் + +[[பகுப்பு:SI சார் அலகுகள்]] +[[பகுப்பு:அழுத்த அலகுகள்]] + + + +மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் + +மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ( ம. தி. மு. க., Marumalarchi Dravida Munnetra Kazhagam ) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1993 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வை. கோபால்சாமி உட்பட சிலர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைகளைக் காப்பதற்காக, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினர். 1994 ஆம் ஆண்டு மே 6 ஆம் நாள், சென்னை, தியாகராய நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடிய பொதுக்குழு, புதிய அமைப்பின் கொடி, கொள்கை, குறிக்கோள்களைத் திட்டமிட்டு வகுத்தது. + +2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. + +சூலை 29, 2010 ஆணையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலக் கட்சிக்கான விதிகளை மதிமுக பெறாததால் மதிமுக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்தது. ஆனால் இக்கட்சி பம்பரம் சின்னத்தை இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியது. + + + + + + +பாட்டாளி மக்கள் கட்சி + +பாட்டாளி மக்கள் கட்சி (பா. ம. க.) தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். 1989களில், டாக்டர். ராமதாஸ் இக்கட்சியைத் தொடங்கினார். இதுவரை இக்கட்சி தமிழ்நாடு சட்டமன்றத்திலும், இந்திய நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. + +சனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்ச் 26, 2009 வரை இருந்தது. 14வது மக்களவையில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இரா. வேலு இரயில்வே இணை அமைச்சராக இருந்தார். இந்திய மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். + +சூலை 29, 2010 ஆணையில் இந்திய தேர்தல் ஆணையம் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை பறித்துள்ளது. ஆனால் இக்கட்சி சின்னத்தை(மாம்பழம்) இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. + +தமிழகத்தின் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 13வது சட்டமன்றத்தில் 18 உறுப்பினர்களை கொண்டு இருந்தது. 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து 30 தொகுதிகளில் போட்டியிட்டதில் 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது. + +15வது மக்களவைக்கான தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி வைத்த பாமக 7 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது. + +இக்கட்சி யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்தது. பகுசன் சமாச் கட்சிக்கு தேசிய அரசியல் கட்சி என்று 1997இல் தகுதி உயர்த்தப்பட்டதாலும் யானை சின்னத்தை அது நாடு முழுக்க பயன்படுத்தியதாலும் யானை சின்னம் அதற்கு ஒதுக்கப்பட்டது. பாமக தமிழ்நாடு மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை இழந்ததால் அதன் யானை சின்னம் பறிக்கப்பட்டது. ஆனால் புதுச்சேரியில் தகுதி இழக்காததால், அங்கு யானை சின்னத்தை பயன்படுத்திக்கொள்ள தேர்தல் ஆணையம் இசைந்தது. + +1998இல் இக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டது. அன்றிலிருந்து மாம்பழம் சின்னத்திலேயே போட்டியிட்டு வருகிறது. விதிகளின் படி மாநில அரசியல் கட்சி என்ற தகுதியை தேர்தல் ஆணையம் பறித்து விட்டாலும், 2016 சட்டமன்ற தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட இக்கட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. + + + + + + + +வைகோ + +வைகோ (இயற்பெயர்: வை. கோபால்சாமி, பிறப்பு: மே 22, 1944) தமிழக அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் ஆவார். + +வை கோபால்சாமி பிறந்த ஊர், திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டி ஆகும். வையாபுரி - மாரியம்மாள் தம்பதியினருக்கு 1944ஆம் ஆண்டு பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரிகள், ரவிச்சந்திரன் என்ற இளைய சகோதரரும் உள்ளனர். + +வை.கோ ரேணுகாதேவி என்ற பெண்ணை 14ஆம் தேதி சூன் மாதம் 1971ஆம் ஆண்டு மணந்தார், இவர்களுக்கு துரை வையாபுரி என்ற மகனும் ராஜலெட்சுமி மற்றும் கண்ணகி என்ற மகள்களும் உள்ளனர். + +திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1992 இல் திமுக தலைவர் கருணாநிதியைக் கொலை செய்ய முயற்சித்தார் என்று கொலைப் பழி சுமத்தித் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். + +மூன்று முறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் (03/04/1978-02/04/1996), இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தொடர்ச்சியாக ஆதரவளித்து வருபவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக 2001 இல் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையிலிருந்தார். + +1964 ஆம் ஆண்டு, பேரறிஞர் அண்ணா முன்னிலையில் சென்னை கோகலே மன்றத்தில் இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கத்தில் முதன் முதலில் பேசி தனது அரசியல் வாழ்வில் அடி எடுத்து வைத்தார் வைகோ. + +வை.கோ மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். இதில் 2016 சட்டமன்ற தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என ஆறு கட்சிகள் அங்கம் வகித்தன. அதன் பின்னர் ௭திர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தே. மு. தி. க மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் விலகியது. தற்பொழுது வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி மற்ற கட்சிகளோடு உடன்பாடில்லாமல் தனித்து போட்டியிடும் ௭ன்று வைகோ அறிவித்தார்.திசம்பர் மாதம் 27 ந்தேதி மதிமுகவின் உயர்நிலைக் குழு கூட்டத்திற்கு பிறகு மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகினார். + +2004-2009 யில் ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு இந்திய அரசு எப்படி எல்லாம் உதவியது என்பதனை விளக்கி "குற்றம் சாட்டுகிறேன்" எனும் புத்தகத்தினை வைகோ எழுதியுள்ளார். 2004-2009 ஆண்டுகளில் இந்தியப் பிரதமருக்கு தான் எழுதிய கடிதங்களையும், தனக்குப் பிரதமர் எழுதிய கடிதங்களையும் இந்தப் புத்தகத்தில் தொகுத்து உள்ளார் வைகோ. இதை ஆங்கிலத்தில் "I Accuse" என்ற தலைப்பில் வெளியிட்டும் உள்ளார். +வைகோ 2015 ஆம் ஆண்டு மறுமலர்ச்சி இரத்ததான முகாமை தொடங்கினார். கிராம மக்கள் பயன்பெறும் வகையில் முகாம்களை நடத்தினார். நதிநீர் இணைப்புக்காக ஒரு மாதகாலம் நடைபயணமும் மேற்கொண்டார். + +தமிழகத்தின் முக்கியமான பிரச்சினைகளான முல்லைப்பெரியாறு பிரச்சினை, ஈழத்தமிழர் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் என பல போராட்டங்களை நடத்தி வருபவர் வைகோ. + + + + + + + + + + +இசுலாம் + +இசுலாம் ("இஸ்லாம்" , அரபு: الإسلام; al-'islām, "Islam") என்பது ஒரிற���க் கொள்கையைக் கொண்ட ஒரு ஆபிரகாமிய மதமாகும். உலகம் முழுவதும் 1.57 பில்லியன் மக்கள் இம்மதத்தை பின்பற்றுகிறார்கள். இது உலகின் மொத்த மக்கள்தொகையில் 23 சதவீதமாகும். இசுலாம், கிறித்தவத்துக்கு அடுத்தபடியாக உலகில் இரண்டாவது பெரியதும் அதி வேகமாக வளர்ந்து வரும் மதங்களில் ஒன்றும் ஆகும். இது இறைவனால் முகம்மது நபிக்கு சொல்லப்பட்ட செய்திகளின் தொகுப்பான குர் ஆன் எனப்படும் வேதத்தின் அடிப்படையில் இயங்குகின்றது. இறப்பிற்கு பிறகான மறுமை வாழ்வை இது குறிக்கோளாக கொண்டது. இறைவனை நம்புவது, அவனது கட்டளைப்படி நடப்பது என்பதன் மூலம் முடிவற்ற மறுமை வாழ்வின் சுகங்களை பெற முடியும் என்பது இசுலாமின் நம்பிக்கை. இறை நம்பிக்கை, இறை வணக்கம், நோன்பு, கட்டாய பொருள்தானம், மெக்காவை நோக்கிய புனிதப்பயணம் ஆகிய ஐந்தும் இசுலாமின் கட்டாயக் கடமைகளாகும். + +இசுலாம் இரண்டு அடிப்படை மூலாதாரங்களை மட்டும் கொண்டு அமைந்தது. +1. அல்லாஹ்வின் வேதம். (குர் ஆன்) +2. அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மார்க்கம் என்ற ரீதியில் அமுல்படுத்தியவைகள். (ஹதீஸ்) + +ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை மெக்கா நகரில் பரப்பத் தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் ஆதாம் முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது. + +ஆதம் (அலை), நூஹ் (அலை) (நோவா), இப்ராகிம் (அலை) (ஆபிரகாம்), இஸ்மாயில் (அலை), தாவூத் (அலை), மூசா (அலை) (மோசே) மற்றும் ஈசா (அலை) போன்ற முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லப்பட்டிருக்கிறது. + +ஆனால் முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திற்க்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது. + +இஸ்லாம் என்ற சொல்லின் மூலம் சலாம் ஆகும். இது "ஸ்-ல்-ம்" என்ற மூன்று அரபி வேரெழுத்துகளிலிருந்து உருவான ஒரு வினைப்பெயர் சொல். ஏற்றுக்கொள்ளுதல், ஒப்படைத்தல் , கீழ்படிதல் ஆகிய பொருள்களில் இது ஒலிக்கும். இதன் அர்த்தம் கடவுளை ஏற்றுக் கொண்டு, தம்மை அவனிடம் ஒப்படைத்து, அவனை வழிபடுவது என்பதாகும். + +இசுலாம், தன்னை பின்பற்றுபவர்களை கீழ்கண���ட விடயங்களின் மீது நம்பிக்கை வைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இது "ஈமான்" என்ற அரபு சொல்லால் குறிக்கப்படுகின்றது. + +“"கடவுள் ஒருவனே. அவனே அல்லாஹ். அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை"” என்பது இசுலாமின் அடிப்படை நம்பிக்கை ஆகும். அல்லாஹ் என்பது கடவுள் என்ற பொருள் கொண்ட பால்வேறுபாடு காட்டாத ஒரு படர்க்கைச் சொல். இது அரேபிய நாடோடிக் குழுக்கள், தங்கள் தெய்வத்தை குறிக்க பயன்படுத்திய சொல் ஆகும். + +அல்லாஹ் ஒருவனே இருக்கிறான். படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் அவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் தான். அவனுக்குச் சொந்தமான திருநாமங்கள் பண்பாடுகள் உள்ளன (என்ற இறைநம்பிக்கை) எனும் பிரதான நுழைவாயில் ஊடாக இஸ்லாத்தின்பால் பிரவேசிக்க வேண்டும். அவனைப் பற்றி அல்குர்ஆன் பல இடங்களில் மிகச்சிறந்த அறிமுகம் தருகின்றது. +அவனுடைய ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ளும் அளவுக்கு அவனுடைய அடியார்களில் யாருக்கும் தகுதியில்லை. + +வானவர்கள் எனப்படுபவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட, இறைவனின் சேவகர்கள் என நம்பிக்கை வைத்தல் ஒரு இசுலாமிய கடமையாகும். இவர்களை இறைவன் ஒளியினால் படைத்ததாக நபிமொழி கூருகின்றது. இறைவனை தொழுதவண்ணம் இருப்பது, இறைத்தூதர்களுக்கு இறைவனின் செய்தியை கொண்டு செல்வது, ஒவ்வொரு மனிதனின் பாவ புண்ணிய கணக்கை குறித்துக்கொள்வது, அவர்களின் உயிரை எடுப்பது ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. "ஜிப்ராயீல்" வானவ கூட்டத்தின் தலைவராக குறிப்பிடப்படுகின்றார். + +அல்லாஹ்வின் படைப்பினமான இவர்களை நம்புவது ஈமானின் "இரண்டாவது" அம்சமாகும். கண்களுக்கு புலப்படாத இவர்களுக்கு அல்லாஹ்வின் இறைமையில் எத்தகைய பங்கும் கிடையாது. அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்புடைய இவர்களும் அவனது அடிமைகளேயாவர். இவர்களால் அல்லாஹ்வுக்கு எதிராகச் செயற்படவும் முடியாது. பாவ காரியங்களில் ஈடுபடவும் முடியாது. +இவர்களுள் பிரதானமானவரது பெயர் ஜிப்ரீல் (அலை) என்பதாகும். இவரது பொறுப்பு இறைச் செய்தியை இறைத்தூதர்களிடம் கொண்டுவந்து சேர்ப்பதாகும். இன்னும் பல முக்கியமான வானவர்கள் உள்ளனர். + +முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இசுலாமிய கடமையாகும். "தவ்ராத்", "சபூர்", "இஞ்சில்" ஆகியவை முறையே மூசா, தாவூத், ஈசா ஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும், அதனாலேயே இறுதியானதாகவும், திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. + +ஒரு முஸ்லிம் பெயரறிந்து மேற்கூறப்பட்ட வேதங்களையும், மற்றவைகளைப் பொதுவாகவும் அல்லாஹ் அருளியவை என நம்புவது இஸ்லாமிய நம்பிக்கை சார்ந்த மூன்றாவது அம்சமாகும். அல்லாஹ் அருளிய அனைத்து வேதங்களிலும் இறுதியானது அல்குர்ஆன் ஆகும். + +இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் (நபிமார்கள்) +எனப்படுபவர்கள், உலக மக்களை நேர்வழிப்படுத்த இறைவனால் தெரிவு செய்யப்பட்ட மனிதர்கள் என்பது இசுலாமிய நம்பிக்கையாகும். உலகின் முதல் மனிதன் ஆதம் முதல் அனேக தூதர்கள் பூமியின் பல்வேரு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதாக குர்ஆன் கூருகின்றது. + +உலக மக்கள் இறைவனை மறந்து, அநீதியின் பக்கம் செல்லும்போது அவர்களை தடுத்து நிறுத்துதல் மற்றும் இறைவனின் செய்தியை அவர்களுக்கு அறிவித்தல் ஆகியவை இவர்களின் கடமையாக சொல்லப்படுகின்றது. முகம்மது நபி இவர்களில் இறுதியானவராக குர்ஆனில் குறிப்பிடப்படுகின்றார். + +ஒருநாள் இந்த உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு, முதல் மனிதன் ஆதம் முதல் கடைசி மனிதன் வரை மீள்வுயிர்விக்கப்படுவர். அன்று அவர்கள் செய்த பாவ மற்றும் புண்ணியங்களின் அடிப்படையில் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நம்புவது ஒரு கடமையாகும். "கியாமத்" எனப்படும் இந்த நாளில் அவர் அவர்களின் செயல்களுக்கு ஏற்ப சொர்க்கமோ, நரகமோ தரப்படும் என குரான் குறிப்பிடுகின்றது. மறுமையை நம்ப வேண்டும் என்பது நம்பிக்கை சார்ந்த ஐந்தாவது அம்சமாகும். இது தொடர்பாக நம்பிக்கை கொள்ள வேண்டியவை. + +ஒரு நாள் அல்லாஹ் முழு உலகையும் படைப்பினங்களையும் அழித்து விடுவான். அந்நாளின் பெயர்: கியாமத் ஆகும். +பிறகு இறைவன் அனைவருக்கும் மறுவாழ்வு அளிப்பான். அனைவரும் அல்லாஹ்வுக்கு முன் ஆஜராவார்கள். அதற்கு மஹ்ஷர் என்று பெயர். + +எல்லா மனிதர்களும் தங்கள் உலக வாழ்வில் எதை எதை செய்தார்களோ அவை முழுவதும் கொண்ட செயல��� பட்டியல் இறைவனின் நீதி மன்றத்தில் சமர்ப்பணமாகும். + +விதி எனப்படுவது மனித அறிவுக்கு அப்பாற்பட்டது. அதன் புரிதல் இறைவனுக்கு மட்டுமே உண்டு என நம்புவது இசுலாமின் ஒரு கடமை. விதியை பற்றி சிந்திப்பதையோ அல்லது அதைப் பற்றி தர்க்கம் செய்வதையோ குரான் தடுக்கின்றது + +இந்தப் பிரபஞ்சமும் இதிலுள்ள படைப்புக்கள் அனைத்தும் அணுவும் பிசகாது அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படியே இயங்குகின்றன என்பது இஸ்லாத்தின் இறை நம்பிக்கை சார்ந்த ஆறாவது அம்சமாகும். + +மனிதனுடைய கற்பனைகள் கருத்துக்கள் கூட அல்லாஹ்வின் நிர்ணயத்துக்கு உட்பட்டவையே. அல்லாஹ்வின் ஞானத்துக்கு புறம்பாகவோ, அவன் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு மாறாகவோ எதுவும் இயங்க முடியாது. இதன் கருத்து மனிதன் சுதந்திரமாக இயங்குவதற்கான அறிவையும் ஆற்றலையும் அல்லாஹ் வழங்கியுள்ளான். அதேவேளை அவற்றில் தன் விதிமுறைகளையும் வைக்க அவன் தவறவில்லை. இது அவனது ஆற்றலில், அறிவில், திறமையில் உள்ளதாகும். + +இசுலாம் தன்னைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய கடமைகளாக ஐந்தை குறிப்பிடுகின்றது. இவை இசுலாத்தின் ஐந்து தூண்கள் என அழைக்கப்படுகின்றன. + +“"இறைவன் (அல்லாஹ்) ஒருவனே. அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது அவனது தூதர்".” என்பதில் முழுநம்பிக்கை கொண்டு, வாயால் உறுதிமொழி கொடுப்பது முதல் கட்டாய கடமை. இது "கலிமா சகாதா" என அழைக்கப் படுகின்றது. ஒரு மாற்று மதத்தவர், இசுலாமிற்கு மாற இதனை உச்சரித்தால் போதுமானதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. +கலிமா + +ஓர் ஆணோ, ஒரு பெண்ணோ சிலை வழிபாடு, கபுரு-சமாதி வழிபாடு, முக்கடவுள் வழிபாடு, மதகுருமார்கள் வழிபாடு போன்ற நரகத்திற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிபாடுகளிலிருந்து விடுபட்டு இறைவன் அளித்துள்ள (பார்க்க 6:153) ஒரே நேர்வழிக்கு வரும்போது மனதில் உறுதி கொண்டு வாயினால் மொழிய வேண்டிய உறுதி மொழியே அரபி மொழி வழக்கில் கலிமா என்பதாகும். “”அல்லாஹ்” என்று அரபி மொழியில் அழைக்கப்படும் இணை, துணை, தாய் தந்தை, மகன், தேவை, இடைத்தரகு எதுவுமே அற்ற ஏகனாகிய இறைவன் தன்னந்தனியனான ஒருவனோ, அதுபோல் அந்த ஓரிறைவனை ஏற்று உறுதி மொழி பகர்வதும் ஒன்றே ஒன்றுதான். அது வருமாறு: + +அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரசூலுஹூ. + +இந்த அரபி மொழி உறுதி மொழியின் தமிழ்ப் பொருள் வருமாறு: +“”அல்லாஹ் அல்லாத இறைவனே இல்லை என்று நான் உறுதியாகக் கூறுகிறேன், இன்னும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனது அடிமையாகவும், தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் நான் உறுதியாகக் கூறுகிறேன்” என்பதாகும். + +பருவவயதடைந்த, புத்திசுவாதீனமுள்ள ஒவ்வொரு இசுலாமியரும் தினமும் ஐந்து முறை இறை வணக்கம் செய்ய வேண்டியது இரண்டாவது கட்டாய கடமையாகும். பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு மட்டுமே இந்த ஐந்து வேளை வணக்கத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. மெக்காவில் உள்ள புனித காபாவை நோக்கி வணங்கப்படும் இந்த முறையில் அரபு மொழியில் உள்ள குரானின் வசனங்கள் ஓதப்படுகின்றன. + +ஒவ்வொரு வருடமும் இசுலாமிய நாட்காட்டியின் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது இசுலாமின் மூன்றாவது கட்டாய கடமையாகும். சூரிய உதயம் முதல் அந்தி சாயும் வரை உணவு மற்றும் நீர் ஆகிய எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இது நிறைவேட்றப்படுகிண்றது. நோயாளிகள் , பருவமடையாத குழந்தைகள், மாதவிலக்குநேர பெண்கள், குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் பிரயாணம் செய்பவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது. + +"ஸக்காத்" எனப்படும் கட்டாய பொருள் தானம் இசுலாமின் நான்காவது கட்டாய கடமையாகும். இதன்படி, ஒவ்வொரு இசுலாமியரும் ஆண்டுக்கு ஒருமுறை தனக்குச் சொந்தமான தங்க, வெள்ளி நகைகள் மற்றும் வியாபார பொருள்கள் ஆகிய செல்வத்தில் நாற்பதில் ஒரு பங்கை (100க்கு 2.5%) ஏழை எளியோருக்கு தானம் செய்ய வேண்டும். மொத்த சொத்து 87.5 கிராம் தங்கத்திற்கும் அல்லது 612.5 கிராம் வெள்ளிக்கும் குறைவாக இருக்கும் ஒருவனுக்கு இந்த கட்டாய தானம் கடமை ஆகாது. +வசதி வாய்ப்பு படைத்த ஒவ்வொரு இசுலாமியரும், தனது வாழ்நாளில் ஒருமுறை சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள காபாவை தரிசிப்பது இசுலாமின் ஐந்தாவது கடமையாகும். இந்த பயணம் இசுலாமிய நாட்காட்டியின் துல்கச் மாதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. மற்ற நான்கு கட்டாய கடமைகளில் இருந்து இதற்கு சற்று தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் மற்றும் நோய்வாயப்பட்ட மக்களுக்கு இந்த கடமையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. + +இசுலாமியர்கள் பொதுவாக சுன்னி மற்றும் சியா என்ற இரண்டு பெரும் பிரிவினராக உள்ளார்கள். இதை தவிர சூபிசம் போன்ற சில பிரிவுகளும் உள்ளன. + +சன்னி இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் மிகப்பெரியது ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 75 முதல் 90 சதவிகிதத்தை கொண்டுள்ளது. சன்னி என்ற சொல் "சுன்னத்" என்பதன் சுருக்கம் ஆகும். இதற்கு 'முகம்மதை பின்பற்றுதல்' என்பது பொருளாகும். இராக், ஈரான், மற்றும் ஓமன் ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற அனைத்து இசுலாமியர்கள் வாழ் நாடுகளிலும் சன்னி இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. இதன் சட்ட பிரிவுகள் மொத்தம் நான்கு உள்ளன. இவை "மத்கபு" என அழைக்கப்படுகின்றன. (ஹ)கனபி, சாபி, மாலிக்கி மற்றும் ஹன்பலி ஆகிய நான்கில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற சன்னி முசுலிம்களுக்கு உரிமை உண்டு. இவற்றோடு சேர்த்து சலபி மற்றும் வஃகாபிசம் ஆகியவையும் அதிக பரப்பில் பின்பற்றப் படுகின்றன. + +சியா இசுலாம், இசுலாமிய உட்பிரிவுகளில் இரண்டாவது மிகப்பெரிய பிரிவு ஆகும். இது மொத்த இசுலாமிய மக்கள் தொகையில் 10 முதல் 20 சதவிகிதத்தை கொண்டுள்ளது. இராக், ஈரான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாக இருக்கும் இந்த பிரிவு, மற்ற இசுலாமிய நாடுகளிலும் கணிசமான அளவில் உள்ளது. சியா இசுலாம் தன்னகத்தே அனேக உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இதில் 'பன்னிருவர் பிரிவு' முதன்மையாக உள்ளது. இதை தவிர இசுமாலி, செய்யதி போன்ற பிரிவுகளும் கணிசமான அளவில் உள்ளன. பன்னிருவர் பிரிவின் அனேக நடைமுறைகள் சுன்னி இசுலாம் முறையுடன் ஒத்துப்போகின்றன. + +சூபிசம் என்பது மத்திய காலத்தில் ஏற்பட்ட ஒரு பிரிவு ஆகும். அன்றைய இசுலாமிய ஆட்சியாளர்களின் பகட்டான ஆட்சி முறைக்கு எதிரான இயக்கமாக இது தொடங்கப்பட்டது. உலக வாழ்வை துறத்தல், தவம், இசை ஆகியவற்றின் மூலம் இறைவனை அடைய முடியும் என்பது இவர்களின் வாதம். இவ்வாறான முயற்சிகளால் இறைவனை அடைந்தவர்கள் சூபிகள் என அழைக்கப் பட்டனர். தனியே தங்களுக்கான சட்ட முறைகளை கொண்டிராத இவர்கள், சுன்னி மற்றும் சியா இசுலாமிய முறைகளையே பின்பற்றுகின்றனர். தர்கா வழிபாடு என்பது இவர்களின் பிரதான வழிபாட்டு முறையாகும். + + + + + + + +2010ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இசுலாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக���கள் தொகையில் 23% ஆகும். இதில் 75 முதல் 90 சதவீதம் வரை சுன்னி முசுலிம்களும், 10 முதல் 20 சதம் வரை சியா முசுலிம்களும் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை கூருகின்றது. ஏறக்குறைய 50 நாடுகளில் இசுலாம் பெரும்பான்மையாக உள்ளது. + +கண்டங்கள் விரிசையில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமான அளவில் இசுலாம் பரவி உள்ளது. மொத்த இசுலாமிய மக்கள்தொகையில் 68%தை ஆசிய கண்டம் கொண்டுள்ளது. 638 மில்லியனுக்கும் அதிகமான இசுலாமியர்கள் இந்தோனேசியா, பாகிசுத்தான், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கின்றனர். ஆப்பிரிக்காவை பொருத்த அளவில் எகிப்து மற்றும் நைசீரியா ஆகியவை அதிக இசுலாமிய மக்கள்தொகையை கொண்டுள்ளன. + +ஐரோப்பாவை பொருத்த அளவில் அநேக நாடுகளில், கிறித்தவத்துக்கு அடுத்த நிலையில் இசுலாம் உள்ளது. துருக்கி, அதிகக் கூடிய இசுலாமிய மக்கள் தொகையை கொண்ட ஐரோப்பிய நாடாகும். அமெரிக்காவில் இசுலாமியர்களின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும். + + + + + + +ஒற்றளபெடை + +ஒற்றளபெடை என்பது ஒற்றெழுத்து தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டொலிப்பதாகும். + +"ஒற்று + அளபெடை = ஒற்றளபெடை" + +செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுக்கும். இதுவே ஒற்றளபெடை ஆகும். + +எ.கா: +மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதை கானலாம். + +ஒற்றெழுத்து அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அதே எழுத்து எழுதப்படும். + + + + + +உயிரளபெடை + +உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல். உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர். +உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு அளபெடுக்கும். +மொழியின் முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.: +எடுத்துக்காட்டு:
+ +மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அ��பெடுத்துள்ளதைக் காணலாம். +ஓர் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதைக் காட்ட அவ்வெழுத்தினையடுத்து அவ்வெழுத்திற்கு இனமான குறில் எழுத்து எழுதப்படும். +இதில் +என மூன்று வகைகள் உள்ளன. + +இந்தச் சொற்களைத் தொல்காப்பியம் பால் உணரும்படி வந்த சொற்கள் எனக் குறிப்பிடுகிறது. + + + +