diff --git "a/train/AA_wiki_03.txt" "b/train/AA_wiki_03.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_03.txt" @@ -0,0 +1,2540 @@ + +மின்னணுவியல் + +மின்னணுவியல் (Electronics) மின்னணுக்கள் அல்லது மின்னன்கள் வழி மின் ஆற்றலைக் கட்டுபடுத்தும் அறிவியல் புலமாகும். இலத்திரனியல் அல்லது மின்னணுவியல் மின்குமிழ், கடிகாரம், தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, கணினி போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல கருவிகளின் இயக்கத்துக்குப் பயன்படும் அடிப்படைத் தொழில்நுட்பம் ஆகும். மின்னணுவியல் தகவல்களைத் தேக்கவும் கையாளவும் பயன்படுகிறது. அதாவது, மின்ஆற்றலைக் கொண்டு மின்குறிகைகளை உருவாக்கலாம். மின்குறிகைகளால் தகவல்களை பதிலீடு செய்யலாம். இந்த மின்குறிகைகளை அல்லது தகவல்களை மின்னணுவியல் கருவிகளால் தேக்கலாம் அல்லது கணிக்கலாம். + +இந்தப் புலத்தில் வெற்றிடக் குழல்கள், திரிதடையங்கள், இருமுனையங்கள், நுண் தொகுப்புச்சுற்றுக்களும் ஒளிமின்னன் கருவிகளும் உணரிகளும் போன்ற செயல்படு மின்கூறுகளும் மின்தடையம், மின்தேக்கி, மின்தூண்டிகள் போன்ற செயலறு மின்கூறுகளால் ஆகிய மின்சுற்றுகளும் பெரும் பங்காற்றுகின்றன. எனவே பொதுவாக மின்னனியல் கருவிகளில் செயல்முனைவான அரைக்கடத்திகளும் செயலறு மின்சுற்று உறுப்புகளும் அமையும். இந்தச் சுற்றே மின்னணுவியல் சுற்று எனப்படுகிறது. மின்னணுவியல் இயற்பியலின் பிரிவாகவும் மின்பொறியியலின் பிரிவாகவும் கருதப்படுகிறது. + +செயல்படு மின்கூறுகளின் நேர்பாங்கற்ற நடத்தையும் அவற்றின் மின்னன்களின் பாய்வைக் கட்டுப்படுத்தும் பண்பும் மிக நலிவுற்ற குறிகை அலைகளைக் கூட வலுப்படுத்த உதவுகின்றன; இப்பயன்பாடு தகவல் பதப்படுத்தல், தொலைத்தொடர்பு, குறிகைச் செயலாக்கம் அல்லது பதப்படுத்தல் ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றுகிறது. மேலும் இக் கருவிகளை நிலைமாற்றிகளாகவும் பயன்படுத்தலாம்; இப்பயன்பாடு எண்ணிமத் தகவல் பதப்படுத்தலில் பயனாகிறது. ஒருங்கிணைப்புச் சுற்றுத் தொழில்நுட்பங்கள், பொதியல்சுற்றுத் தொழில்நுட்பங்கள், பல்வேறு இணைப்புத் தொழில்நுட்பங்கள் ஆகியவை, மின்சுற்றுப் பலகை]]களின் மின்சுற்றுச் செயல்பாட்டை முழுமையாக்கிக் கலவையான மின்கூறுகள் வழியாக ஓர் ஒருங்கியமாக அல்லது ஓர் அமைப்பாகச் (System) செயல்படச் செய்கின்றன. + +மின்னணுவியல் என்பது மின்னியல், மின்பொறியியல் ஆகியவற்றிலிருந்து வேற���பட்ட து; மின்பொறியியல் பொதுவாக மின்னாக்கம், மின்செலுத்தம், மின்பகிர்மானம் ஆகியவற்றையும் மின்னழுத்தம் அல்லது மின்னோட்டம்ஆகியவற்றின் நிலைமாற்றல், தேக்கிவைத்தல் பற்றியும் மின் ஆற்றலை பிற ஆற்றல் வடிவங்களுக்கும் மற்ற ஆற்றல் வடிவங்களிலிருந்து மின் ஆற்றலுக்கும் மாற்றுவதைப் பற்றியும் கருப்பொருளாக்க் கொண்டுள்ளது. இவற்றின் கூறுகளாக மின்கம்பிகள், மின் இயக்கிகள், மின்னியற்றிகள், மின்கலங்கள், நிலைமாற்றிகள், உணர்த்திகள், மின்மாற்றிகள், மின்தடையங்கள் அமைகின்றன. மின்னியலில் இருந்தான மின்னணுவியலின் பிரிவினை மின்னணுவியல் மிகைப்பிகள் நலிவுற்ற குறிகைகளின் வீச்சையும் திறனையும் மிகுக்கப் பயன்படுத்தத் தொடங்கிய 1906 இல் இருந்து தொடங்கியது எனலாம். 1950 வரை இதன் முதன்மைப் பயன்பாடு வானொலி சார்ந்த அலைபரப்பிகள், அலைவாங்கிகள் ஆகியவற்றிலும் அதற்குப் பயன்பட்ட வெற்றிடக் குழல்களிலும் மட்டுமே இருந்தமையால் இத்துறை தொடக்கத்தில் "வானொலி தொழில்நுட்பம்" என்றே அழைக்கப்பட்டு வந்தது. + +இன்று, பெரும்பாலான மின்னணுவியல் கருவிகள் குறைக்கடத்திகளைப் பயன்படுத்தி மின்னன்களைக் கட்டுப்படுத்துகின்றன. குறைகடத்திக் கருவிகளின் அறிவியலும் தொழில்நுட்பமும் திண்மப்பொருள் இயற்பியலின் பிரிவாகக் கருதப்படுகிறது; நடைமுறை இடர்களுக்குத் தீர்வாக மின்னனியல் மின்சுற்றுக்களின் வடிவாக்கமும் உருவாக்கமும் மின்னணுவியல் பொறியியல் துறையாக உருமாறியது. + +மின்னணுவியல் கீழுள்ள கிளைப்பிரிவுகளாக அமைகிறது: + + +தொடக்கநிலை மின்னனியல்உறுப்புகளாக வெற்றிடக் குழல்கள் (வெம்மின்னணுக் கவாடங்கள்) அமைந்தன. இருபதாம் நூற்றாண்டின் முதல் அரைப்பகுதியில் இவைதாம் மின்னனியல் புரட்சிக்கு வழிவகுத்தன. இவை வானொலி, தொலைக்காட்சி, இசைத்தட்டுகள், இராடார் (வீவாணி-வீச்சும் வாக்கும் காணி), நெடுந்தொலைவுத் தொலைபேசி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் மேலும் பல நுட்பங்களுக்கும் வழிவகுத்தன. இவை 1980 கள் வரை நுண்ணலை உயர்திறன் செலுத்த்த்துக்கும் தொலைக்கட்சி அலைவாங்கிகளுக்கும் அடிப்படை உறுப்புகளாக அமைந்தன. 1980 களில் இவற்றின் இடத்தைத் திண்மநிலைக்கருவிகள் கைப்பற்றின. சிறப்புப் பயன்பாடுகளான உயர்திறன் வானொலி அலைவெண் மிகைப்பிகளிலும் எதிர்முனைக் கதிர்க்���ுழல்களிலும் சிறப்பு ஒலியியல் கருவியாகிய கிதார் மிகைப்பிகளிலும் குழிக்காந்த மிகைப்பி போன்ற நுண்ணலைக் கருவிகளிலும் வெற்றிடக் குழல்கள் தாம் இன்றும் பயன்பாட்டில் உள்ளன. + +1955 ஏப்பிரலில் IBM 608 எனும் கணக்கீட்டுக் கருவியில் IBM நிறுவனம் முதலில் திரிதடையங்களைப் பயன்படுத்தியது. வணிகச் சந்தையில் புழங்கிய முதல் அனைத்துத் திரிதடையக் கணக்கீட்டுக் கருவி இதுவேயாகும். IBM 608 கணக்கீட்டுக் கருவியில் 3000 க்கும் மேற்பட்ட ஜெர்மேனியத் திரிதடையங்கள் பயன்பட்டன. தாமசு ஜே. வாட்சன் இளவல் IBM பொருள்களில் திரிதடையங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற ஆணையை வழங்கினார். அப்போதிலிருந்தே கணினி தருக்கத்திலும் பிற இணைகருவிகளிலும் திரிதடையங்கள் மட்டுமே பயன்படலாயின. + +மின்னணுவியல் தொழில்நுட்பத்தின் அடிப்படைக் கருவியான திரிதடையம். கண்டுபிடித்த பின்னரே இத்துறை மாபெரும் வளர்ச்சி பெற்றது.கீழே சில மின்னனியல் வரலாற்று நிகழ்வுகள் தரப்படுகின்றன. + + +மின்னணுக் கூறு என்பது ஒரு இலத்திரனியல் அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற வகையில் அவ்வமைப்பு செயல்பட ஏதுவாக இலத்திரன்களையோ அதன் தொடர்புடைய புலங்களையோ பாதிக்கின்ற உளதாம் பொருளாகும். இக்கூறுகள் பொதுவாக மற்றக்கூறுகளுடன் +குறிப்பிட்ட செயற்பாட்டை (காட்டாக பெருக்கி, வானொலி பெறும் கருவி, அல்லது அலையியற்றி) நிகழ்த்துமாறு இணைக்கப்பட்டிருக்கும். (பொதுவாக மின்சுற்றுப் பலகையில் பற்றவைக்கப்பட்டிருக்கும்.) மின்னணுக்கூறுகள் தனியாகவோ அல்லது சற்றே சிக்கலான ஒருங்கிணைந்த சில்லு போன்ற தொகுதிகளாகவோ பொதியப்படலாம். சில பரவலான மின்னணுக்கூறுகள்: மின்தேக்கிகள், மின்தூண்டிகள், மின்தடையங்கள், இருமுனையங்கள், திரிதடையங்கள் ஆகியனவாகும். மின்னணுக்கூறுகளை செயல்படு கூறுகள் என்றும் ( திரிதடையங்கள்,இருமுனையங்கள்) செயலறு கூறுகள் (மின்தடையங்கள்,மின்தேக்கிகள்) வகைப்படுத்தப்படுகின்றன. + +வெற்றிடக் குழல்கள் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இலத்திரனிய கூறுகளில் ஒன்றாகும். இவை நடு1980கள் வரை முதன்மை செயல்படு கூறுகளாக இருந்தன. 1980களிலிருந்து திண்மநிலைக் கருவிகள் இவற்றிற்கு மாற்றாக அமைந்துள்ளன. இன்றும் வெற்றிடக் குழல்கள் உயராற்றல் பெருக்கிகள், எதிர்முனைக் கதிர்க்குழாய்கள், வல்லுநர் ஒலிக��கருவிகள், நுண்ணலைக் கருவிகள் போன்ற சில சிறப்புப் பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. + +மின்சுற்றுக்களும் இலத்தினியக் கூறுகளும் இருவகையாகப் பிரிக்கப்படலாம்: அலைமருவி மற்றும் எண்மருவி. ஒரு குறிப்பிட்ட கருவியில் இவற்றில் ஏதேனும் ஒருவகையிலோ அல்லது இரண்டும் கலந்துமோ பயன்படுத்தப்படலாம். + +வானொலிப் பெட்டிகள் போன்ற பெரும்பாலான அலைமருவி இலத்தினிய சாதனங்கள் சில அடிப்படையான மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன. இவற்றில் மின் அழுத்தத்தின் வீச்சு எவ்வித இடைவெளியும் இன்றி தொடர்ந்திருக்கும். எண்ணிம முறை (எண்மருவி)யில் மின் அழுத்தம் படிப்படியாக இடைவெளியுடன் இருக்கும். ஒரேஒரு இலத்தினியக் கூறு கொண்ட அலைமருவிச் சுற்றிலிருந்து பல கூறுகளை அடக்கிய சிக்கலான சுற்றுக்கள் வரை பல்லாயிரக்கணக்கான அலைமருவிச் சுற்றுக்கள் உள்ளன. + +இவை சில நேரங்களில் நேரியல் சுற்றுக்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும் மின்னதிர்வு கலக்கிகள், அலைமாற்றிகள் போன்றவற்றில் இவை நேரியல் அல்லாத தன்மையைக் கொண்டுள்ளன. + +அண்மைக்கால சுற்றுக்களில் முழுமையும் அலைமருவி சுற்றுக்கள் காணப்படுவதில்லை. பெரும்பாலும் எண்மச் சுற்றுக்களே காணப்படுகின்றன.சில குறிப்பிட்ட பகுதிகள் மட்டுமே அலைமருவி முறையில் அமைக்கப்படுகின்றன; இவை "கலப்பு மின்சுற்றுக்கள்" எனப்படுகின்றன. + +எண்மருவி சுற்றுக்களில் மின்னழுத்தம் பலதனித்தனி மதிப்புகளில் இருக்கும். காட்டாக, 1 வோல்ட், 1.5 வோல்ட், 2 வோல்ட் என்று பயன்படுத்தப்படும். இவற்றிற்கு இடையேயான 1.25 வோல்ட் போன்றவை இருக்காது. பூலியன் ஏரணம் என்ற கணிதவகையின் நிகழ் சார்பாள அமைப்பாக இவை விளங்குகின்றன. அனைத்து எண்ணிம கணினிகளும் இந்த ஏரணத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. + +பல எண்ணிம மின்சுற்றுக்கள் ஈரியல் எண்முறையில் இரண்டு மின்னழுத்த நிலைகளுடன், "0" மற்றும் "1" இயங்குகின்றன. பெரும்பாலும் ஏரணம் "0" கீழ்நிலை மின்னழுத்தமாகவும் ( "தாழ்" எனப்படும்) ஏரணம் "1" உயர்நிலை மின்னழுத்தமாகவும் ( "உயர்" எனப்படும்) உள்ளது. கணினிகள், இலத்திரனிய கைக்கடியாரங்கள், நிரலேற்பு தருக்கக் கட்டுப்படுத்திகள் எண்ணிம முறை மின்சுற்றுக்களைக் கொண்டு உருவாக்கப்படுவன ஆகும். + +எண்ணிமச் சுற்றதரின் கட்டமைப்புக் கூறுகள்: + +எண்ணிம உயர்நிலை ஒருங்கிணைப்புக் கருவிகள்: + + + + + +மலேசியா + +மலேசியா ("Malaysia"), தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு கூட்டாட்சி அரசியல்சட்ட முடியாட்சியுள்ள ஒரு நாடாகும். 13 மாநிலங்களையும் மூன்று நடுவண் மண்டலங்களையும் கொண்டுள்ள மலேசியா, தென்சீனக் கடலினால் மலேசியத் தீபகற்பம், கிழக்கு மலேசியா (மலேசிய போர்னியோ) என இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தீபகற்பம் வடக்கே தாய்லாந்துடன் நில, மற்றும் கடல் எல்லையையும், தெற்கே சிங்கப்பூர், வடகிழக்கே வியட்நாம், மேற்கே இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் கடல் எல்லைகளையும் கொண்டுள்ளது. கிழக்கு மலேசியா புரூணையுடனும், இந்தோனேசியாவுடனும் நில, மற்றும் கடல் எல்லைகளையும், பிலிப்பீன்சு, வியட்நாம் ஆகியவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. மலேசியாவின் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் கோலாலம்பூர் ஆகும். புத்ராஜாயா நடுவண் அரசின் நிருவாகத் தலைநகராகும். 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டுள்ள மலேசியா உலகின் 44-வது மக்களடர்த்தி கூடிய நாடாகும். ஐரோவாசியாக் கண்டத்தின் தென்முனையான தாஞ்சுங் பியாய் மலேசியாவில் அமைந்துள்ளது. வெப்ப வலயத்தில் அமைந்துள்ள மலேசியா 17 பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான மலேசியாவில் இனப்பெருக்க உயிரினங்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. மலேசியாவின் மொத்த பரப்பளவு 329,847 சதுர கிலோமீட்டர்கள் (127,350 சதுர மைல்கள்). தீபகற்ப மலேசியாவின் மக்கள் தொகை மட்டும் 20 மில்லியன். தற்போது மலேசியாவின் மக்கள் தொகை 2.5 கோடி. இவர்களில் பெரும்பான்மையினர் மலாய் மக்கள். இவர்களுக்கு அடுத்து சீனர்களும் இந்தியர்களும் கூடுதலாக வாழ்கின்றனர். பெரும்பான்மையான மலேசிய மக்கள் இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள். இஸ்லாமே மலேசியாவின் தேசிய சமயமும் ஆகும். மலாய் மொழி தேசிய மொழியாகும். + +1957ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திடமிருந்து விடுதலை பெற்றது. இப்போது மலேசியாவின் மன்னராக ஐந்தாம் முகம்மது ஆட்சியில் உள்ளார். இருபதாம் நூற்றாண்டில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்ற நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தது. + +2018 மே 9 இல்நடைபெற்ற 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின் மகாதீர் பின் முகம்மது மலேசியாவின் 7வது பிரதமராக 10ஆம் திகதி மே மதம் 2018 பத��ியேற்றார். + +வரலாற்றுக்கு முந்தைய காலச் சான்றுகள் மலேசியாவில் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன. 2 லட்சம் வருடங்களுக்கு முந்தைய கல்லாயுதங்கள் புகித் ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மலேசியாவின் சரவாக்கில் அமைந்துள்ள நியா குகைகளில் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எச்சங்கள் காணப்படுகின்றன. பூர்வகுடி செமாங் இனத்தவர்களின் மூதாதையர்கள் சுமார் 40000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆப்பிரிக்கர்களாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மலேசியத் தீபகற்பத்தின் மிக முந்தைய எலும்புக்கூடான பேராக் மனிதன் 11000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இது லெங்கோங் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. + +கி.மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வந்த வணிகர்களும் குடியேற்றக்காரர்களும் வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் உருவாக்கினர். பிற்பகுதியில் மலேசியா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் கடாரம் எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் காணப்படுகின்றன. அடுத்த 20 வருடங்களில் சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது. + +பதினைந்தாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்திலிருந்து பல்வேறு சுல்தான்கள் ஆட்சி புரிந்தார்கள். ஸ்ரீ விஜயப் பேரரசின் இளவரசனான பரமேஸ்வரன் மலாயத் தீபகற்பத்தின் முதல் சுதந்திர இராச்சியமாகக் கருதப்படும் மலாக்கா சுல்தானியத்தை நிறுவினான். பரமேஸ்வரன் முஸ்லிமாக மதம் மாறினான். இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமயம் தீவிரமாகப் பரவியது. மேலும் இக்காலப் பகுதியில் மலாக்கா முக்கிய வாணிப மையமாகவும் விளங்கியது. + +1511ல் மலாக்கா போர்த்துக்கீசர் வசமானது. பின் 1641ல் ஒல்லாந்தர்களால் (இடச்சுக்காரரால்) கைப்பற்றப்பட்டது. 1786ல் கெடாவின் சுல்தான் பினாங்கைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிக்கு குத்தகைக்குக் கொடுத்தார். இதனால் பிரித்தானியப் பேரரசு மலாயாவில் காலூன்றியது. பிரித்தானியர் 1819ல் சிங்கப்பூரைக் கைப்பற்றினர். மேலும் 1824ல் ஆங்கில-டச்சு ஒப்பந்தப்படி மலாக்காவையும் தமத�� கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 1826 -இல் பிரித்தானியர் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர், லபுவன் தீவுகள் ஆகியவற்றை நேரடியாகத் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததன் மூலம் அவற்றைத் தமது முடிக்குரிய குடியேற்ற நாடாக்கினர். + +இரண்டாம் உலகப்போரின் போது 1943–1945 வரை சப்பான் ஆட்சி செலுத்தியது. இக்காலப்பகுதியில் இனப்பிரச்சினைகள் உருவாகியதோடு தேசியவாதமும் மேலோங்கியது. போருக்குப்பின் மீண்டும் பிரித்தானியா அதிகாரத்திற்கு வந்தது. மேலும் பிரித்தானியா மலாயாவின் நிருவாகத்தை ஒருங்கிணைத்து அதனை மலாயக் கூட்டமைப்பு என்ற ஒரே முடிக்குரிய குடியேற்ற நாடாக்கியது. எனினும் மலாயர் இதனை எதிர்த்தனர். மேலும் மலாயப் பொதுவுடைமைக் (கம்யூனிஸ்ட்டுக்) கட்சியின் தலைமையில் ஒன்றிணைந்த போராளிகள் பிரித்தானியப் படைகளுக்கெதிராகக் கொரில்லாப் போர் தொடுத்தனர். + +1957 ஆகஸ்ட் 31 அன்று விடுதலை அடைந்த மலேசியா 1963 ஆம் ஆண்டு மலேசிய கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது. 1965ஆம் ஆண்டு சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்து தனிநாடாகியது. 1969ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு பூமிபுத்திரா எனப்படும் பூர்வகுடிமக்களுக்கு பொருளாதார வளர்ச்சியில் சம பங்கு வழங்கும் நோக்கோடு சர்ச்சைக்குட்பட்ட புதிய பொருளாதார கொள்கை கொண்டுவரப்பட்டது. + +சமீப காலங்களில் சிறுபான்மை இந்தியர்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 2007இலும் பெப்ரவரி 2008 இலும் பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடிப் போராட முயன்றபோது காவற்துறையினரால் கண்ணீர் புகை குண்டு வீசிக் கலைக்கப்பட்டனர். + +மலேசியா 13 மாநிலங்கள் மற்றும் மூன்று கூட்டாட்சிப் பகுதிகளின் கூட்டமைப்பாகும். இவை இரண்டு பிராந்தியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தீபகற்ப மலேசியாவில் 11 மாநிலங்களும் இரண்டு கூட்டாட்சிப்பகுதிகளும் கிழக்கு மலேசியாவில் இரண்டு மாநிலங்களும் ஒரு கூட்டாட்சிப் பகுதியும் உள்ளன. மாநிலங்களின் ஆளுகை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதோடு கூட்டாட்சிப் பகுதிகளின் நிர்வாகத்தை மத்திய அரசாங்கம் மேற்கொள்கிறது. + +13 மாநிலங்களும் வரலாற்று முறையான மலாய் இராச்சியங்களை மையமாகக் கொண்டவை. தீபகற்ப மலேசியாவிலுள்ள 11 மாநிலங்களில் 9 அவற்றின் பரம்பரை ஆட்சியாளர்களால் ஆளப்படுவதோடு, அவை மலாய் மாநிலங்கள் எனவும் அறியப்படுகின்றன. இவற்றின் மன்னர் ஒன்பது ஆட்சியாளர்களின் சபையொன்றிலிருந்து அவர்கள் மூலமாகவே ஐந்தாண்டுப் பதவிக்காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஒவ்வொரு மாநிலமும் மாநிலச் சட்டவாக்கச் சபை எனப்படும் ஒற்றைச் சபையைக் கொண்டுள்ளன. கிழக்கு மலேசியாவிலுள்ள மாநிலங்கள்(சபா மற்றும் சரவாக்) தமக்கெனத் தனியான குடிவரவுக் கொள்கைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளன. இதன்படி மலேசியாவின் ஏனைய பகுதிகள்(தீபகற்ப மலேசியா) குடிவரவுச் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளாகக் கருதப்படுகின்றன. ஒவ்வொரு மாநிலமும் மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் மேலும் முகிம்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. சபாவிலும் சரவாக்கிலும் மாவட்டங்கள், பிரிவுகளாகக் கூட்டமாக்கப்பட்டுள்ளன. + +எல்லா மாநிலங்களுக்கும் சீரான நீதியை வழங்குவதற்காக மலேசியப் பாராளுமன்றம் நிலம், இஸ்லாமிய சமயம், உள்ளூராட்சி போன்ற பிரிவுகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. மேலும் மாநிலமொன்றின் வேண்டுகோளின் பேரில் அம்மாநில நிர்வாகத்தில் தலையீடு செய்யவும் அதிகாரம் உண்டு. சில நிலம் தொடர்பான சட்டங்களைத் தவிர, மாநிலங்களுக்குள் நிகழும் பிரச்சினைகளை அம்மாநிலங்களே கவனிக்கின்றன. நாட்டின் சட்டத்துக்கு அமைவாக, இஸ்லாமிய மதம் தொடர்பற்ற பிரச்சினைகள் மலேசிய ஒப்பந்தத்தைப் பேணும் வகையில் தேசிய மட்டத்திலேயே நிர்வகிக்கப்படுகின்றன. + +மலேசியா 3,29,847 சதுர கிலோமீட்டர்கள் மொத்த நிலப்பரப்பைக் கொண்டு 67வது பெரிய நாடாக விளங்குகிறது. இதனுடன் நில எல்லைகளை மேற்கு மலேசியாவில் தாய்லாந்தும் கிழக்கு மலேசியாவில் இந்தோனேசியாவும் புருணையும் பகிர்கின்றன.சிங்கப்பூருடன் ஓர் குறுகிய தரைப்பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளது. கடல்சார் எல்லையை வியட்நாமுடனும் பிலிப்பைன்சுடனும் பகிர்கிறது. நில எல்லைகள் பெரும்பாலும் பெரிலிசு ஆறு, கோலோக் ஆறு மற்றும் பகலயன் கால்வாய் போன்ற புவியிடக் கூறுக்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் கடல்சார் எல்லைகள் இன்றும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. சரவாக் மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கும் புருணை மலேசியாவின��ல் முழுதும் சூழப்பட்டுள்ளது. ஆசிய நிலப்பகுதியிலும் மலாய் தீவுக்கூட்டங்களிலும் ஆட்சிப்பகுதி கொண்ட ஒரே நாடாக மலேசியா இலங்குகிறது. ஜொகூர் மாநிலத்தின் தெற்குக் கடைசியில் உள்ள "டான்ஜுங் பியாய்", ஆசியாக் கண்டத்தின் தெற்கு முனையாக உள்ளது. சுமாத்திராவிற்கும் மலேசியத் தீபகற்பத்திற்கும் இடையில் உள்ள உலகின் 40 சதவீத சரக்குகள் செல்லும் மலாக்கா நீரிணை உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. +மலேசியா பொதுவாகத் திறநிலை மற்றும் அரசுசார் பொருளாதார நாடாகவும் புதியதாகத் தொழில்மயமான சந்தைப் பொருளாதார நாடாகவும் விளங்குகிறது. பொருளியல் செயல்பாடுகளில் பேரளவு பொருளாதாரத் திட்டங்கள்மூலம் முக்கிய பங்காற்றும் அரசு தனது பங்காற்றலை படிப்படியாகக் குறைத்து வருகிறது. ஆசிய நாடுகளில் சிறந்த பொருளியல் தரவுக்கூற்றுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ள மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1957 முதல் 2005 வரை ஆண்டுக்கு ஏறத்தாழ 6.5 % உயர்ந்து வந்துள்ளது. 2010இல் மொத்த உள்நாட்டு உற்பத்தி அமெரிக்க டாலரில் $414,400 பில்லியனாக இருந்தது; இது ஆசியான் நாடுகளில் 3வது மிகப்பெரிய மதிப்பாகும். உலகளவில் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 29வதாக உள்ளது. + +2010 கணக்கெடுப்பின்படி மலேசிய மக்கள் தொகை 28,334,135 ஆகும். இது உலகளவில் 43வது மக்கள் தொகை அதிகமுள்ள நாடாக அறியப்பட்டுள்ளது. இந்நாட்டில் பல இனக் குழுக்கள் வாழ்கின்றன. மலாய் இனக் குழுவினர் 50.4 %ம், மலாய் இனமல்லாத மற்ற பூமிபுத்திராக்கள் 11 விழுக்காடும் உள்ளனர் . மலேசிய சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர். அவர்கள் மலாய் இன பண்பாட்டைப் பின்பற்றுபவர்கள். மலாய் இன மக்களே மலேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்துபவர்கள். பூமிபுத்திரா என்ற தகுதி மலாய் இனம் அல்லாத தாய், கெமர், சாம் மக்களுக்கும் சபா, சரவாக் மாநில பழங்குடி மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சரவாக் மாநில மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். சபா மாநிலத்தில் மூன்றுக்கு இரண்டு பேர் மலாய் இனமல்லாத பூமிபுத்திராக்கள் ஆவர். மலேசிய தீபகற்பத்தில் தொல்குடி மக்கள் சிறிய அளவில் வாழ்கிறார்கள். யார் பூமிபுத்திரா என்பதை வரையறுக்கும் சட்டம் மாநிலத்துக் மாநிலம் வேறுபடும். + +மலேசியா மக்கள் தொகையில் சீன வம்சாவளியினர் 23.7 விழுக்காடும் இந்திய வம்சாவளியினர் 7.1 விழுக்காடும் உள்ளனர் . இவர்களுக்குப் பூமிபுத்திரர்கள் என்ற தகுதி கிடையாது. சீனர்கள் மலேசிய வணிகத்தில் செல்வாக்கு செலுத்துகின்றனர். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெருவாரியான இந்தியர்கள் மலேசியாவுக்கு பிரித்தானியர்களால் தோட்ட வேலை செய்ய அழைத்து வரப்பட்டனர் . இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் ஆவர் + +மலேசியாவில் பிறந்தால் மட்டும் ஒருவர் மலேசியக் குடியுரிமை பெறமுடியாது. வெளிநாட்டில் இருந்தாலும் இரண்டு மலேசியர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்படும். மலேசியா இரட்டை குடியுரிமை வழங்குவதில்லை . கிழக்கு மலேசியா மற்றும் மேற்கு மலேசியாவில் இருப்பவர்களுக்குக் குடியுரிமையில் சிறிய வேறுபாடு உண்டு. இது குடி நுழைவு வசதிக்காக ஏற்படுத்தப்பட்டது. + +மலேசிய நாட்டின் அதிகாரபூர்வமான சமயமாக இசுலாம் இருந்தபோதிலும் மற்ற சமயங்களை சுதந்திரமாகப் பின்பற்றச் சட்டம் அனுமதிக்கிறது. தோராயமாக 61.3% பேர் இசுலாம் சமயத்தையும் 19.8% பேர் புத்த சமயத்தையும் 9.2% பேர் கிறித்தவ சமயத்தையும் 6.3% பேர் இந்து சமயத்தையும் 1.3 பேர் தாவோ சமயம், கன்பூசிய சமயம் மற்ற சீன சமயங்களையும் 0.7% பேர் எச் சமயத்தையும் சாராதவர்களாகவும் 1.4% பேர் மற்ற சமயங்களைப் பின்பற்றுவர்களாகவும் உள்ளனர் . + +சட்டப்படி மலாய் இனத்தவர்கள் அனைவரும் முசுலிம்கள் ஆவர் . 2010 மக்கள் தொகை கணக்கின் படி சீன வம்சத்தவர்களில் 83.6% பேர் பௌத்த சமயத்தையும் 3.4 % பேர் தாவோ சமயத்தையும் 11.1% பேர் கிறுத்துவ சமயத்தையும் சிறிய அளவில் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். இந்திய வம்சத்தவர்களில் 86.2% பேர் இந்து சமயத்தையும் 6.0% பேர் கிறுத்துவ சமயத்தையும் 4.1% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள். மலாய் இனம் அல்லாத பூமிபுத்திரர்களில் 46.5% பேர் கிறுத்துவ சமயத்தையும் 40.4% பேர் இசுலாம் சமயத்தையும் பின்பற்றுகிறார்கள் . + +முசுலிம்களின் சமயம் தொடர்பான சிக்கல்களைச் சரியா நீதிமன்றங்கள் தீர்மானிக்கின்றன. குறிப்பாக மணமுறிவு, திருமணம், வாரிசு உரிமை, மத மாற்றம், மதத்திலிருந்து விலகல் போன்றவற்றை அது விசாரிக்கும். குற்ற வழக்குகளும் உரிமையியல் குடிசார் வழக்குகளும் இதன் வரம்புக்குள் வராது. முசுலிம் அல்லாதவர்களின் சிக்கல்கள் சரியா நீதிமன்ற வரம்புக்குள் வராது. உரிமையியல் நீதிமன்றங்கள் இசுலாம் தொடர்பான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் அவற்றைச் சரியா நீதிமன்றங்களிடம் அனுப்பிவிடும் . + +மலேசியாவின் அதிகாரபூர்வ மொழி மலேசிய மொழி ஆகும். இது மலாய் மொழியின் தரப்படுத்தப்பட்ட வடிவமாகும். ஆங்கிலம் நிர்வாக மொழியாகப் பயன்படுத்தப்பட்டது. 1969இல் நடந்த கலவரத்துக்குப் பின் மலேசிய மொழி முதன்மைப்படுத்தப்பட்டது . ஆங்கிலம் இரண்டாவது மொழியாகத் தொடர்ந்து உள்ளது. பொதுப் பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் போன்றவற்றைப் பயிற்றுவிக்கும் மொழியாகவும் ஆங்கிலம் உள்ளது . பிரித்தானிய ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட மலேசிய ஆங்கிலம் வணிகத்தில் பெரும்பாலும் பயன்படுத்தபடுகிறது. மேங்கிலிசும் வணிகத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுகிறது. மேங்கிலிசு என்பது மலாய், சீனம், தமிழ் கலந்த கொச்சைபடுத்தப்பட்ட ஆங்கிலம் ஆகும் . + +மலேசியாவில் 137 மொழிகள் பேசப்படுகின்றன இவற்றில் தீபகற்ப மலேசியாவில் 41 மொழிகள் பேசப்படுகின்றன. கிழக்கு மலேசியாவில் உள்ள பழங்குடியின மக்கள் மலாய் மொழி அல்லாத தங்களின் மொழியைப் பேசுகின்றனர். இதை எளிதில் மலாய் அல்ல என்பதை உணரமுடியும். சரவாக் மாநில மக்கள் இபான் மொழியையும் சபா மக்கள் டுசுனிக் மொழியையும் பேசுகின்றனர் . மலேசியாவிலுள்ள சீனர்கள் தென் சீனத்தின் பல வட்டார மொழிகளைப் பேசுகின்றனர். கண்டோனீசு, மாண்டரின், ஓக்கியன், கேசிய மொழி போன்றவை அவற்றுள் சில. தமிழர்கள் தமிழ் பேசுகின்றனர். தமிழர்களே இங்குள்ள இந்தியர்களில் பெரும்பான்மையினர் ஆவர். இவர்கள் மலேசியத் தமிழர் என்று அறியப்படுகின்றனர். + +மலேசியாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் கொண்ட மற்றும் பல்வேறு மொழிபேசும் மக்கள் உள்ளனர். இப்பகுதியின் துவக்கநிலை பண்பாடு இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள், இங்கு இடம் பெயர்ந்த மலாய் இனத்தவரால் உருவானது. வெளிநாட்டு வணிகம் துவங்கிய வரலாற்றுக்காலத்திலேயே சீனர் மற்றும் தமிழர் பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. பாரசீகர், அராபியர் மற்றும் பிரித்தானியர் பண்பாட்டுத் தாக்கங்களைப் பின்னதாக உள்வாங்கியது. அரசமைப்பு, சமூக உடன்பாடு போன்றவை காரணமாக ���னச் சிறுபான்மையினரின் பண்பாடு தன்வயமாகவில்லை. + +1971இல் மலேசிய அரசு "தேசிய பண்பாட்டுக் கொள்கை"யை அறிவித்தது; இதன்படி மலேசியப் பண்பாடு பழங்குடியினரின் பண்பாட்டின்படி அமையும் என்றும் பிற பண்பாடுகளிலிருந்து பொருத்தமானக் கூறுகளை உள்வாங்கும் என்றும் இசுலாம் பெரும் பங்கு வகிக்கும் என்றும் வரையறுத்தது. மேலும் மலாய் மொழியே மற்ற மொழிகளை விடப் பரப்பப்படும் எனக் கூறியது. இவ்வாறான அரசின் தலையீட்டை மலாய் அல்லாத சிறுபான்மையினர் தங்கள் பண்பாட்டுச் சுதந்தரத்தைக் குறைப்பதாக எதிர்த்தனர். சீனர்களின் சங்கங்களும் இந்தியச் சங்கங்களும் தங்கள் எதிர்ப்பை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் மனு ஒன்றை அளித்தனர். + +மலேசியாவிற்கும் அண்டை நாடுகளுக்கும் இடையே (குறிப்பாக இந்தோனேசியா) பண்பாட்டுச் சண்டைகள் ஏற்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் ஒன்றையொத்த பாரம்பரியமும் வழைமையான பழக்கங்களும் உள்ளன. இருப்பினும் உணவுப் பொருள்களிலிருந்து மலேசியாவின் நாட்டுப்பண் வரை பல பிணக்குகள் எழுந்துள்ளன. இந்தப் பிணக்குகளைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் பலமுறை முயன்றுள்ளன. + +மலேசியப் புலி மலேசியாவின் தேசிய விலங்காகும். + +மலேசியாவில் பரவலாக விளையாடப்படுபவையாகக் காற்பந்தாட்டம், இறகுப்பந்தாட்டம், வளைதடிப் பந்தாட்டம், பௌல்ஸ், டென்னிசு, ஸ்குவாஷ், தற்காப்புக் கலைகள், குதிரையேற்றம், பாய்மரப் படகோட்டம், மற்றும் ஸ்கேட் பலகையோட்டம் ஆகியன . இறகுப்பந்தாட்ட போட்டிகள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கின்றன; 1948ஆம் ஆண்டு முதல் தாமசு கோப்பையைத் தக்க வைத்துள்ள மூன்று நாடுகளில் ஒன்றாக மலேசியா விளங்குகிறது. மலேசிய புல்தரை பௌல்ஸ் கூட்டமைப்பு 1997இல் பதிவு செய்யப்பட்டது. பிரித்தானிய படைத்துறை அதிகாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்குவாஷ் விளையாட்டில் முதல் போட்டி 1939இல் நடத்தப்பட்டது. ஸ்குவாஷ் பந்தடி மட்டைச் சங்கம் சூன் 25, 1972இல் உருவானது. மலேசியா தென்கிழக்கு ஆசியாவிற்கான ஓர் கால்பந்துக் கூட்டிணைவைப் பரிந்துரைத்துள்ளது. ஆகத்து 2010இல் மலேசியாவின் ஆடவர் வளைதடிப் பந்தாட்ட அணி உலகத் தரவரிசையில் 15வதாக இருந்தது. கோலாலம்பூரில் உள்ள மெர்டெக்கா விளையாட்டரங்கில் வளைதடிப் பந்தாட்ட உலகக் கிண்ணத்தின் மூன்றாவது மற்றும் பத்தாவது போட்டிகள் நடத்தப்பட்டன. மலேசியாவில் பார்முலா 1 தடம்– செபாங் பன்னாட்டு சுற்றுகை உள்ளது. தொலைவுள்ள இச்சுற்றுகையில் முதல் கிராண்ட் ப்ரீ போட்டி 1999இல் நடந்தது. +1953இல் உருவான மலேயா ஒலிம்பிக் குழுவிற்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழுவின் அங்கீகாரம் 1954இல் கிடைத்தது. மலேசியா 1956 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பங்கேற்றது. 1964இல் இக்குழுவிற்கு மலேசியா ஒலிம்பிக் குழு என மறுபெயரிடப்பட்டது. துவங்கிய காலத்திலிருந்து ஒன்றைத் தவிர அனைத்து ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது. 1972ஆம் ஆண்டில் மியூனிக்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு மிக உயர்ந்தளவில் பங்கேற்பாளர்களை(57) அனுப்பி உள்ளது. மலேசிய போட்டியாளர்கள் ஒலிம்பிக்கில் இதுவரை நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்; இவை அனைத்துமே இறகுப்பந்தாட்டத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய விளையாட்டுக்களில் 1950 முதல் மலாயா என்றும் 1966 முதல் மலேசியா என்றும் பங்கெடுத்து வந்துள்ளது. 1998இல் இந்த விளையாட்டுக்கள் கோலாலம்பூரில் நடத்தப்பட்டன. தற்காப்புக் கலைகளில் மலேசியாவில் சிலாட் மற்றும் டோமோய் என்னும் இரு வகைகள் பயிலப்படுகின்றன. + +மலேசியாவின் முதன்மை செய்தித்தாள்கள் அரசுடமை அல்லது ஆளும் கூட்டணியிலுள்ள கட்சிகளின் உடமையாக உள்ளன. இருப்பினும் சில பெரிய எதிர்க்கட்சிகளும் நாளிதழ்களின் உரிமையாளர்களாக உள்ளனர். நாட்டின் இரு பகுதிகளிலிருந்து வெளியாகும் ஊடகங்களிடையே பிளவு உள்ளது. தீபகற்ப ஊடகங்கள் கிழக்குப் பகுதி செய்திகளுக்குக் குறைந்த முன்னுரிமை வழங்குகின்றனர்; அப்பகுதியை தீபகற்ப மலேசியாவின் குடியேற்றப் பகுதியாகக் காண்கின்றனர். மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே வளரும் சிக்கல்களுக்கு ஊடகங்கள் குறை சொல்லப்படுகின்றன. இந்தோனேசியர்களைக் குறித்து தாழ்வான கருத்து நிலவவும் அவர்களே காரணமாக்கப் படுகின்றனர். மலேசியாவில் மலாய், சீனம் மற்றும் தமிழ் நாளிதழ்கள் வெளியாகின்றன. + +ஊடகச் சுதந்திரம் மிகக் குறைவாக உள்ள காரணத்தால் அரசிற்கு பொறுப்புடைமை குறைவாக உள்ளது. அரசு தேர்தல்களுக்கு முன்னர் எதிர்கட்சி நாளிதழ்களை அடக்க முயன்றுள்ளது. 2007இல் எதிர்க்கட்சித் தலைவர்களின் பேச்சுக்களை ஒளிபரப்ப வேண்டாமென்று அனைத்து தனியார் தொலைக்காட்சி மற்றும�� வானொலி நிலையங்களுக்கு ஆணையிடப்பட்டன; இதனை எதிர்க்கட்சியான சனநாயக செயல் கட்சி கண்டித்துள்ளது. சபாவில் ஒன்றைத் தவிர அனைத்து நாளிதழ்களும் தனியார் வசமுள்ளன. இப்பகுதியே மலேசியாவில் மிகவும் சுதந்திரமான ஊடகங்கள் இருக்குமிடமாகும். "அச்சகங்கள் மற்றும் வெளியீடுகள் சட்டம்" போன்றவை கருத்துச் சுதந்திரத்திற்கு தடங்கலாக இருப்பதாகச் சுட்டப்படுகிறது. + +மலேசியாவின் உள்கட்டமைப்பு ஆசிய நாடுகளிலேயே மிகவும் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக விளங்குகிறது. 4.7 மில்லியன் நிலைத்த இடத் தொலைபேசி இணைப்புகளையும் 30 மில்லியன் நகர்பேசி இணைப்புக்களையும் கொண்டுள்ள இதன் தொலைத்தொடர்பு பிணையம் தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூருக்கு அடுத்த நிலையில் உள்ளது. மலேசிய நாட்டில் ஏழு பன்னாட்டு வணிகம் புரியும் துறைமுகங்கள் உள்ளன; முக்கியமான துறைமுகமாகக் கிளாங் துறைமுகம் உள்ளது. 200 தொழிற் பேட்டைகளும் "டெக்னாலஜி பார்க், மலேசியா" மற்றும் "குலிம் ஹ-டெக் பார்க்" போன்ற சிறப்பு கட்டமைப்புக்களும் தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கின்றன. +95% மக்களுக்குத் தூய குடிநீர் வழங்கப்படுகிறது.குடிமைவாத காலங்களில் பொருளியல் தாக்கமுள்ள நகரங்களிலும் பாதுகாப்பிற்கு வழிகோலும் இடங்களிலுமே மேம்பாட்டு கட்டமைப்புக்கள் உருவாகியிருந்தன. விடுதலைக்குப் பின்னதாக ஊரகப் பகுதிகளின் வளர்ச்சியைக் குவியப்படுத்தி வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்பட்டபோதும் அவை இன்னமும் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை விடப் பின்தங்கி உள்ளன. தொலைத்தொடர்பு சேவைகளும் நகரப்பகுதிகளில் சிறப்பாக இருந்தபோதும் உள்நாட்டுப் பகுதிகளில் அணுக்கம் குறைவாகவே உள்ளது. + +மலேசியாவில் தொலைவிற்கு சாலைகள் இடப்பட்டுள்ளன; இவற்றில் தொலைவு விரைவுச்சாலைகளாகும். நாட்டின் மிக நீண்ட நெடுஞ்சாலையாக விளங்கும் வடக்கு-தெற்கு விரைவுச்சாலை,தாய்லாந்தின் எல்லை முதல் சிங்கப்பூர் வரை தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மலேசியாவில் சாலைகள் நன்கு அமைக்கப்படாததுடன் தீபகற்ப மலேசியச் சாலைகளைப் போல் இல்லாது அவற்றின் தரமும் குறைந்த நிலையில் உள்ளன. மலேசியாவில் 38 நன்கு பாவப்பட்ட நிலையங்கள் உட்பட 118 வானூர்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் அரசுசார் மலேசியா ஏயர்லைன்சுடன் மேலும் இரு வான்��யண சேவை நிறுவனங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு வான்பயணச் சேவைகளை நல்குகின்றன. தொடர்வண்டிச் சேவைகள் அரசுமயமாக்கப்பட்டுள்ளது; தொலைவிற்கு சேவை அளிக்கின்றன. கோலாலம்பூர் போன்ற சில நகரங்களில் ஒப்புநோக்கில் குறைந்த செலவான உயரத்தில் செல்லும் இலகு தொடருந்து போக்குவரத்து அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. ஆசியான் விரைவுத் தொடருந்து (Asean Rail Express) கோலாலம்பூரை பாங்காக்குடன் இணைக்கும் தொடர்வண்டிச் சேவையாகும். இச்சேவை மூலம் எதிர்காலத்தில் சிங்கப்பூரையும் சீனாவையும் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. + +வழமையாக, மலேசியாவின் ஆற்றல் உற்பத்தி பாறைஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பியே உள்ளது. நாட்டின் மின் உற்பத்தித் திறன் 13 GW ஆக உள்ளது. இன்னமும் 33 ஆண்டுகளுக்கான இயற்கை எரிவாயு இருப்பும் 19 ஆண்டுகளுக்கான எண்ணெய் இருப்புமே உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களைப் பயன்படுத்த அரசு முயன்று வருகிறது. 16 சதவீதம் நீர்மின்நிலையங்கள் மூலமும் மற்ற 84 சதவீதம் அனல்மின் நிலையங்கள் மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அரசுடமை நிறுவனமான பெட்ரோனாசு பெரும்பங்கு வகிக்கிறது. மின்சார ஆணையம் சட்டம், 2001இன்படி "மலேசிய ஆற்றல் ஆணையம்" (Energy Commission of Malaysia) தீபகற்ப மற்றும் சாபாவில் ஆற்றல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி வருகிறது. + + + + + +தொழிற்றுறை + +தொழிற்றுறை (industry) என்பது கிடைக்கும் வள ஆதாரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கைகளைப் பற்றிய துறை ஆகும். புவியில் மனிதர்களின் தொழிலைப் பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே தீர்மானிக்கின்றன. அவற்றுள் உணவு சேகரித்தல், வேட்டையாடுதல், மீன்பிடித்தல், சுரங்கத்தொழில், உதிரிப் பாகங்களை ஒன்றிணைத்தல், வணிகம் போன்ற பல தொழில்கள் அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் பொருளாதார நடவடிக்கைகள் என அழைக்கப்படுகின்றன. பொருளாதார உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழிற்றுறைகளில் இலாபம் ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண முதலீடு தேவைப்படுகின்றது. மென்பொருள், ஆய்வு போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன. + +தொழில்களை அவற்றின்ன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில் +என வகைப்படுத்தலாம். + +முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம்.இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம். + +மனிதகள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர் இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர். + +இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும் தொழில் ந்ட்பத்தில் சிறப்பு மிக்க தொழில் நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர்.இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர். + +தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள். +ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர். +வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர். + +தொழில்துறை, தொழிற்புரட்சியின் போது, ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய வணிக, நிலப்பிரபுத்துவப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. நீராவி இயந்திரங்கள், மின்தறிகள், உருக்கு நிலக்கரி பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். இரயில் பாத���களும், நீராவிக் கப்பல்களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், தனியார் நிறுவனங்கள் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது விவசாயத்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது சேவைத் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும். + +ஒரு தொழில்துறை சமூகத்தைப் பல வழிகளில் வரையறுக்க முடியும். இன்று, தொழிற்துறை பெரும்பாலான சமூகங்கள் மற்றும் நாடுகளின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. ஒரு அரசாங்கமானது தொழில்துறை வேலை வாய்ப்பு, தொழில்துறை மாசடைதல், நிதி மற்றும் தொழில்துறைத் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தும், தொழில்துறைக் கொள்கைகள் சிலவற்றைக் கொண்டிருக்க வேண்டும். + +ஒரு தொழில்துறை சமுதாயத்தில், தொழிற்துறைத் தொழிலாளர்கள் முழு அங்கத்தவர்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளனர். இது உற்பத்தி துறையிலும் பொதுவாகக் காணப்படுகின்றது. தொழிலாளர் சங்கம் என்பது சம்பளம், வேலைசெய்யும் மணிநேரம், மற்றும் வேலை நிலைமைகள் போன்ற முக்கிய பகுதிகளில் பொதுவான இலக்குகளைக் கொண்டுள்ள தொழிலாளர்களின் அமைப்பாகும். +ஊதிய உழைப்பு (அமெரிக்க ஆங்கிலத்தில் wage labor) ஒரு தொழிலாளி மற்றும் ஒரு முதலாளிக்கு இடையேயான சமூக பொருளாதார உறவு ஆகும், அங்கு தொழிலாளி தனது உழைப்பு சக்தியை முறையான அல்லது முறைசாரா வேலை ஒப்பந்தத்தில் விற்கிறார். இந்த பரிவர்த்தனைகள் பொதுவாக தொழிலாளர் சந்தையில் நிகழும் ஊதியங்கள் சந்தை தீர்மானிக்கப்படுகின்றன. செலுத்தப்பட்ட ஊதியங்களுக்கு ஈடாக, வேலை தயாரிப்பு பொதுவாக அமெரிக்காவில் உள்ள அறிவுசார் சொத்துரிமை காப்புரிமைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளைத் தவிர்த்து, கண்டுபிடிப்பிற்காக தனிப்பட்ட முறையில் பொறுப்பாளியாக பொறுப்பேற்கப்பட்ட காப்புரிமை உரிமைகள் வழக்கமாக வழங்கப்படும். ஒரு கூலித் தொழிலாளி என்பது ஒரு நபர், இதன் மூலம் அவரது உழைப்பு சக்தியை விற்பதன் மூலம் வருமானம் முதன்மையானதாக இருக்கிறது. + +சம்பள உழைப்பின் மிகவும் பொதுவான வடிவம் தற்பொழுது நேரடி அல்லது முழுநேரமாக வேலை (உழைப்பு) உள்ளது.இது ஒரு வேலையாள் தனது வேலைக்கு ஒரு காலவரையற்ற காலம் (ஒரு சில ஆண்டுகளில் இருந்து தொழிலாளி முழு வாழ்க்கை வரை),பணம் சம்பளம் அல்லது சம்பளத்திற்காகவும், பொதுவாக ஒப்பந்த தொழில்லாளர்கள் அல்லது பிற ஒழுங்கற்ற பணியாளர்களிடமிருந்தும் பணியமர்த்தியுடனான தொடர்ச்சியான உறவுக்கு பதிலாக விற்கும் வேலை அல்லது உழைப்பு.இருப்பினும், ஊதிய உழைப்பு பல வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கிறது, மற்றும் வெளிப்படையான (அதாவது உள்ளூர் தொழிலாளர் மற்றும் வரிச் சட்டத்தால் நிர்வகிக்கப்படும்) போன்ற வெளிப்படையான ஒப்பந்தங்கள் அசாதாரணமானது அல்ல. பொருளாதார வரலாறு பல்வேறு வகையான வழிகளைக் காட்டுகிறது, இதில் தொழிலாளர் வர்த்தகம் மற்றும் பரிமாற்றம் செய்யப்படுகிறது வேறுபாடுகள் பின்வரும் வடிவத்தில் காண்பிக்கப்படுகின்றன: + + +பல பொதுவுடைமைக்கார்கள் பார்வையில் கூலி தொழிலாளி வர்க்கத்தின் ஒரு அம்சமாக வரையறுக்கப்படவில்லை என்றால், நிறுவனத்தின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தொழிலாளி சுய நிர்வகிப்பு மற்றும் பொருளாதார ஜனநாயகம் இருவரும் ஊதிய உழைப்புக்கும் முதலாளித்துவத்திற்கும் மாற்றுகளாக ஆதரிக்கின்றனர்.ஊதிய உழைப்பின் பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் உற்பத்தியின் முதலாளித்துவ உரிமையாளர்களை அதன் இருப்புக்காக குற்றம்சாட்டியுள்ள நிலையில், பெரும்பாலான அராஜகவாதிகள் மற்றும் பிற சுதந்திரவாத பொதுவுடைமைக்கார்கள் மாநிலத்திற்கு ஒரே ஒரு கருவியாக இருப்பதுடன், முதலாளித்துவவாதிகள் தங்களை மானியப்படுத்தி, உற்பத்தி முறையின் தனியார்மயமாக்கலின் தனியார் உடைமை நிறுவனத்தை பாதுகாக்கின்றன.இது ஒரு செல்வந்த உயரடுக்கின் மூலதனத்தை செறிவூட்ட அனுமதிக்காது. கூலி தொழிலாளர்கள் சில எதிர்ப்பாளர்கள் மார்க்சிச முன்மொழிவுகளிலிருந்து செல்வாக்கு செலுத்துகையில், பலர் தனியார் சொத்து எதிர்க்கிறார்கள், ஆனால் [[தனிப்பட்ட சொத்துக்களுக்கு] மரியாதை காட்ட வேண்டியுள்ளது. +அதேபோல், [[வேதியியல் பொருளாதாரம்]] இல் உள்ள பல அறிஞர்கள், [[ஊதிய உழைப்பு]] மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றனர், பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு பணம் செலுத்துகின்றனர், பெரும்பாலான பெண்களுக்கு வேலை கிடைக்காத நிலையில், விரிவ��ன ஆய்வுகள் காட்டியுள்ளன. இந்தத் துறையில் உள்ள அறிஞர்கள், செலுத்தப்படாத பெண்களின் வேலைகள் பொருளாதார மதிப்பின் உற்பத்தியையும், சமூக இருப்புக்கான இனப்பெருக்கம் மற்றும் உற்பத்திக்கு ஆதரவளிப்பதையும் வாதிடுகின்றன. + +வரலாற்றில், வெவ்வேறு பொருளியல் காரணிகளினால், உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் குறைந்தோ அல்லது அழிவடைந்தோ போய்விடுகின்றன. ஈடுசெய்யும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படுவதனாலோ, அல்லது மேம்பாட்டில் ஏற்படும் போட்டியில் தோற்றுப் போவதனாலோ இது நிகழக்கூடும். eடுத்துக் காட்டாக [[தானுந்து]]kஅள் அதிகளவில் உற்பத்தியாகத் தொடங்கியது, குதிரை வண்டிகளின் உற்பத்தி குறைந்து போனது. + +[[பகுப்பு:தொழிற்துறை]] + + + +உயிரியல் + +உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன.. இப்புலம் உயிரினங்களுடைய இயல்புகளையும் நடத்தைகளையும், எப்படி தனிப்பட்ட உயிரினங்களும், உயிரின இனங்களும், தோற்றம் பெற்றன என்பதையும் அவை தங்களுக்குள்ளும், ஒன்று மற்றொன்றுடனும், சூழலுடனும் கொண்டுள்ள தொடர்புகளையும் பற்றிக் கருத்தில் கொள்கிறது. + +நவீன உயிரியல் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சி அடைந்து இருப்பினும், உயிரியலை உள்ளடக்கியதும் அதனுடன் தொடர்பானதுமான அறிவியல் தொல்பழங்காலத்தில் இருந்தே கற்கப்பட்டது. இயற்கை தத்துவம் மொசப்பத்தேமிய, எகிப்திய, சிந்துவெளி, சீன நாகரிகங்களில் இருந்தே கற்கப்பட்டது. இருப்பினும், நவீன உயிரியலும் இயற்கை ஆய்வும் அதன் அணுகுமுறை தோற்றம் என்பன பெரும்பாலும் பண்டைய கிரேக்க இயற்கை மெய்யியலோடு பெரிதும் தொடர்பு கொண்டுள்ளமை தெளிவாகிறது. அதேவேளை மருத்துவ முறையான கல்வி இப்பொகிரேட்டசு (Hippocrates) காலம் (கி.மு.460-கி.மு.370) வரை பின்னோக்கி செல்கிறது. அரிஸ்டாடில் உயிரியல் வளர்ச்சிக்கு மிகவும் பங்களித்துள்ளார். + +இடைக்கால இசுலாமிய உலக அறிஞர்களான அல்-சாகிசுவும் (al-Jahiz) (781–869), அல்-தினவாரும் (Al-Dinawari) (828–896) தாவரவியல் பற்றியும் , இராசெசு (Rhazes) (865–925) உடற்கூறியல் பற்றியும் உடலியங்கியல் பற்ற��யும் நூல்களை எழுதினர். குறிப்பாக கிரேக்க மெய்யியல் அறிவு மரபுகளை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களால் மருத்துவம் சிறப்பாக கற்கப்பட்டது. அந்தோனி வான் இலியூவன்கோக் (Antony van Leeuwenhoek) நுண்ணோக்கியை மேம்படுத்திய பின் உயிரியல் விரைவில் விரிவாக வளரத் தொடங்கியது. இதன் பின்னரே விந்தணுக்களும் பாக்டீரியா எனும் குச்சுயிரியும் நுண்ணோக்கி அங்கிகளின் பாகுபாடும் கண்டுபிடிக்கப்பட்டன. நுண் நோக்கியியல் முன்னேற்றங்கள் உயிரியல் சிந்தனையில் மேலும் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. +19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உயிரியலாளர்கள் பலர் உயிர்க்கலத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர். 1838 மற்றும் 1839 இல், செல்டியனும் சுவானும் பின்வரும் கருத்துக்களை ஊக்குவிக்கத் தொடங்கினர். +1) உயிரினங்களின் அடிப்படை அலகு உயிர்க்கலம் ஆகும் +2) தனிப்பட்ட உயிர்க்கலங்களில் வாழ்வின் அனைத்து பண்புகளும் உண்டு +3) அனைத்து உயிர்க்கலங்கள் மற்ற உயிர்க்கலங்களின் பகுப்பில் இருந்தே உருவாகின்றன. +இவை பின்னர் உயிர்க்கலக் கோட்பாடாக ஏற்றுக்கொள்ளப்பட்டன . + +உயிரியல் ஒரு பரந்த அளவிலான, தனித்தனித் துறைகளாகக் கருதப்படுகின்ற, பல்வேறு கல்வித் துறைகளை உள்ளடக்கிய ஒன்றாகும். அவையனைத்தும் ஒட்டுமொத்தமாகப் பல படிநிலை மட்டங்களில் உயிரினங்கள் பற்றியும், அவை வாழும் சூழல் பற்றியும் ஆய்வு செய்வதோடு, உயிரின வகைகளும் அவற்றை ஆயும் சிறப்பு முறைகள் பற்றியும் கூட ஆய்வு செகின்றன. +இழையம் அல்லது திசுக்களின் இயற்பியல், வேதியியல் செயல்பாடுகளைப் பற்றிய அறிவியல் உடலியங்கியல் ஆகும். +இவ்வாறே, மேலும் பல கற்கைத்துறைகளின் ஊடாக, உயிரியல் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருகின்றது. + +உயிரியலில் பல கோட்பாடுகள் இருந்தாலும், நவீன உயிரியலுக்கு அடிப்படையாக முதன்மை வாய்ந்த ஐந்து கோட்பாடுகள் கீழே கருதப்படுகின்றன: + + +உயிரியல் அமைப்பானது, பல்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்தப்படுகின்றது. வாழ்வின் மிக அடிப்படையான கூறிலிருந்து, சிக்கலான அமைப்புக்கள்வரை இந்தப் படிநிலைகள் விரிந்து செல்கின்றன. இந்தப் படிநிலைகளில் மிகவும் அடிப்படையான படிநிலையாக அணுவும், மிக உயர்ந்த படியாக சூழலியல் அமைப்பும் இருக்கின்றன. + + +பின்வருவன உயிரியலின் கிளைப்பிரிவுகள் ஆகும்: + + + + + +கட்டிடம் + +கட்டிடம் (Building) என்பது பல கூறுகளை இணைத்து உருவாக்கப்படும் ஒன்றாகும். மனிதனால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் நிலத்துடன் நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டிருக்கும். + +கட்டிடம் ஒரு தனிக் குடியிருப்பாளரை மழையிலிருந்து காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு கூரை மட்டும் கொண்ட ஒரு குடிசையாகவோ அல்லது வெப்பநிலை, காற்றோட்டம், வெளிச்சம், வாயுக் கொள்ளளவு, பக்டீரியா நடமாட்டம், அமுக்கம், மக்கள் நடமாட்டம் மற்றும் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வசதிகளைக் கொண்ட, சிக்கலான, மருத்துவ மனைகள் போன்ற கட்டிடங்களாகவோ இருக்கக்கூடும். சிக்கலான அமைப்புகளும், வசதிகளும் தேவைப்படும் கட்டிடங்கள், கட்டிடக்கலைஞர்கள், அமைப்புப் பொறியாளர்கள், கட்டிடச் சேவைகள் பொறியாளர்கள் உட்படப் பல்வேறு தொழில் வல்லுநர்களின் உதவியுடன் கட்டப்படுகின்றன. எனினும் வீடுகள் போன்ற சிறிய, எளிமையான கட்டிடங்களில் நிபுணர்களின் பங்களிப்புகள் குறைவாகவேயிருக்கும். வளர்ந்துவரும் நாடுகளில் மிகக் குறைந்த வீதமான மக்களே கட்டிடம் கட்டுவதற்குத் தொழில் நிபுணர்களின் பங்களிப்பை நாடுகின்றார்கள். + +பொதுவாக எல்லா நாடுகளிலும் பெரு நகரப்பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களில் உரிய நிபுணர்களின் பங்களிப்பு இன்றிக் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை அதற்குரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களிலிருந்து பெறமுடியாது. + +கட்டிடம் கட்டப்படுகின்ற சூழல், உரிமையாளர்களின் நிதி நிலை, நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகள் என்பவற்றைப் பொறுத்துக் கட்டிடங்களில் கட்டிடப் பொருட்களின் பயன்பாடு அமைகின்றது. + +கட்டிடங்கள் அவற்றின் அமைவிடம் ,பயன்பாடு ,அமைப்பு , பயன்படுத்தும் கட்டுமான பொருள் , ஆகியவற்றை பொருத்து பல + +வகைகளில் பிரிக்கப்பட்டுகிறது . + +ஒரு கட்டிடம் பல வகையான கட்டிடக் கூறுகள் சேர்ந்து அமைந்த ஒன்று. இத்தகைய கூறுகள் சிலவற்றைக் கீழேயுள்ள பட்டியல் காட்டுகின்றது. + + +ஒரு கட்டிடமானது பலவகை சுமைகளுக்கு உட்படுகிறது . + + + + + +கட்டிடப் பொருள் + +கட்டிடங்கள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்கள் பொதுவாகக் கட்டிடப் பொருள்கள் என வழங்கப்படுகின்றன. பல்வேறு வகையான கட்டிடப் பொருட்கள் இன்று உலகம் முழு��தும் பயன்பாட்டிலுள்ளன. மிகப்பழைய காலத்தில் கட்டிடம் கட்டப்படும் இடங்களுக்கு அண்மையில் கிடைக்கக் கூடிய பொருட்களையே கட்டிடங்கள் கட்டப் பயன்படுத்தினார்கள். போக்குவரத்து வசதிகள் குறைந்த அக் காலத்தில், அரசர்களும், பெருந் தனவந்தர்களும் மட்டுமே தூர இடங்களிலிருந்து பொருட்களை எடுத்துவந்து கட்டிடங்களைக் கட்ட இயலும். பெரும்பான்மையான சாதாரண பொது மக்கள், தமது வாழிடங்களையும், பிற கட்டிடங்களையும் சூழலில் கிடைக்கக் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியே கட்டிக் கொண்டார்கள். காட்டுமரக் கிளைகள், இலைகுழைகள், புற்கள், கற்கள், மண், விலங்குகளின் தோல், ஏன் பனிக் கட்டிகள் கூடக் கட்டிடப் பொருட்களாகப் பயன்படுகின்றன. மேலே குறிப்பிட்ட பொருட்கள் மனிதர்கள் கட்டிடங்களைக் கட்டத் தொடங்கிய ஆரம்ப காலங்களிலேயே உபயோகத்திலிருந்தும், இன்றுவரை உலகின் பல பகுதிகளிலும் இவை உபயோகத்திலிருந்து வருகின்றன. + +சிறிய குடிசைகளை மட்டுமன்றிப் பெரும் நகரங்களையே கூட உருவாக்கிய பெருமை மண்ணுக்கு உண்டு. மண்ணால் கட்டப்படும் கட்டிடங்கள் நிரந்தரமானவையல்ல என்ற கருத்தே பொதுவாக நிலவினாலும், மண்ணால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல ஆயிரக்கணக்கான வருடங்கள்கூட நிலைத்திருந்ததற்குச் சான்றுகள் உண்டு. பல நவீன கட்டிடப் பொருட்கள் போலன்றி, மண், புதுப்பிக்கப்படக்கூடியது. கட்டிடங்கள் அழிந்து போகும்போது மீண்டும் மண்ணுடனேயே கலந்துவிடக்கூடியது. + +இயற்கையில் கிடைக்கும் பல்வேறு வகையான கற்கள் மிகப் பழங் காலத்திலிருந்தே கட்டடப் பொருளாகப் பயன்பட்டு வருகின்றது. சுண்ணாம்புக் கற்கள், மாபிள் கல், கருங்கல், மணற்கல் என்பவை இவற்றுள் முக்கியமானவை. நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டுமென விரும்பிய கட்டிடங்கள் இவ்வாறான ஏதாவதொரு கல்லைப் பயன்படுத்தியே கட்டப்பட்டன. + +தூண்கள், உத்தரங்கள், கூரைக்கான சட்டகங்கள், கதவுகள், யன்னல்கள், தளம், அலங்காரத்துக்குரிய கட்டிடக் கூறுகள் எனப் பலவாறாகக் கட்டிடங்களில் மரம் பயன்படுகின்றது.உலகின் பல பாகங்களில் மரம் இலகுவாகக் கிடைக்கக் கூடிய பொருளாக இருந்து வந்தது. இது ஒரு புதுப்பிக்கப்படக்கூடிய கட்டடப்பொருளுமாகும். எனினும், கட்டிடம் கட்டுதல், தளபாட உற்பத்தி, விறகு போன்ற பல்வேறு தேவைகளுக்காகவும், விவசாய விரிவாக்கம், ந���ராக்கம் என்பவற்றாலும் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டமையால் மரம், பல நாடுகளில் ஒரு விலைகூடிய பொருளாக இருந்துவருகிறது. சுற்றுச் சூழல் காரணங்களுக்காகக் காடுகள் அழிவதைத் தடுக்கும் நோக்கிலும், பலத் தேவைகளுக்காகவும் மரத்துக்குப் பதிலாக வேறு கட்டிடப் பொருட்கள் உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டிலுள்ளன. ஆனாலும் மரம் இன்றும் ஒரு முக்கியமான கட்டிடப் பொருளே. + +சீமைக்காரை அல்லது சீமெந்து என்பது மிக முக்கியமான கட்டுமான பொருளாகும் .இந்த சீமைக்காரையே கட்டுமானத்தின் அனைத்து வேலைப்பாடுகளிலும் முக்கியமானதாகும் + +பசுமைக் கட்டிடப் பொருள் + + + + +கண்ணாடி + +கண்ணாடி என்று பொதுவாகக் குறிப்பிடும்போது இது, சாளரங்கள், போத்தல்கள், மூக்குக் கண்ணாடிகள் போன்றவற்றின் உற்பத்தியில் பயன்படுவதும்; கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது. தொழில்நுட்ப அடிப்படையில், கண்ணாடி என்பது குளிர்ந்து பளிங்காகாமல் திண்மமாகிய கனிமப் பொருட் கலவை ஆகும். பெரும்பாலான கண்ணாடிகள் சிலிக்காவை முக்கிய கூறாகவும், கண்ணாடி உருவாக்கியாகவும் கொண்டுள்ளன. அறிவியல் அடிப்படையில் கண்ணாடி என்பது நெகிழிகள், ரெசின்கள், பிற சிலிக்காவைக் கொண்டிராத பளிங்குருவற்ற திண்மங்கள் போன்ற எல்லாப் பளிங்குருவற்ற திண்மங்களையும் குறிக்கப் பயன்படுவதுண்டு. இது தவிர மரபு வழியான உருக்கும் நுட்பங்கள் தவிர்ந்த வேறு முறைகளையும் கவனத்துக்கு எடுத்துக் கொள்வது உண்டு. எனினும், கண்ணாடி அறிவியல் கனிம பளிங்குருவற்ற திண்மங்களை மட்டுமே உள்ளடக்குகின்றது. கரிம பளிங்குருவற்ற திண்மங்கள் பல்பகுதிய அறிவியல் துறையுள் அடங்கும். + +கண்ணாடி இன்று பல்வேறு அறிவியல் துறைகளிலும், தொழில் துறைகளிலும் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் ஒளியியல் இயல்புகளும், பிற இயற்பியல் இயல்புகளும் இதனைத் தட்டைக் கண்ணாடி, கொள்கலக் கண்ணாடி, ஒளியியல் மற்றும் ஒளிமின்னணுவியல் சார்ந்த பொருட்கள், சோதனைச்சாலைக் கருவிகள், வெப்பக்காவலிகள், வலிதாக்கல் கண்ணாடி இழைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றுக்கு உகந்த பொருளாக ஆக்குகின்றது. + +இது இன்று ஒரு முக்கியமான கட்டிடப் பொருளாக விளங்குகிறது. கண்ணாடி கிறீஸ்துவுக்கு முன் 4000 ஆண்டுகளிலேயே அறியப்பட்டிருந்ததாகக் கருதப்படினும், கட்டிடப் பொருள் என்ற அளவில் இதன் பயன்பாடு 18 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது. கடந்த நூற்றாண்டிலேயே இது பெருமளவு வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்ததெனலாம். கண்ணாடி, இன்றைய கட்டிடங்களில், நவீனத்துவத்தின் பிரதிபலிப்பாக விளங்குகிறது. + +பண்டைக்கால எகிப்தின் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் செய்யப் பயன்பட்ட கண்ணாடி மணிகள் கிமு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையெனக் கருதப்படுகின்றது. சிலிக்காக் கலவையினால் செய்யப்பட்ட சிறு அச்சுகளை உருகிய கண்ணாடிக்குள் தோய்த்து சிறு கண்ணாடிக் குவளைகள் செய்யும் முறை கிமு 1500ஐ அண்மித்த ஆண்டுகளில் உபயோகத்திலிருந்ததும் அறியப்பட்டுள்ளது. நீண்ட குழாய்களை உருகிய கண்ணாடிக் குழம்பினுள் தோய்த்து ஊதுவதன் மூலம் பல்வேறு பொருட்களைச் செய்யும் முறை கிமு 3ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பபிலோனியாவில் கண்டுபிடிக்கப்பட்டதன் பின் கண்ணாடியில் பாத்திரங்கள் செய்வது இலகுவானது. +ரோமன் காலத்தைச் சேர்ந்த அரை அங்குலம் தடிப்புள்ள பெரிய கண்ணாடிப் பலகையொன்று அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. எனினும் மேற்பரப்பைத் தேய்த்து அவற்றை ஒளிபுகவிடும் கண்ணாடியாக மாற்றும் முறையை அவர்கள் அறிந்திராததால் இவ்வாறான கண்ணாடித் தகடுகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. 1700கள் வரை கண்ணாடித் தகடுகளைச் செய்யும் முறை வளர்ச்சிபெறவில்லை. 17 ஆம் நூற்றாண்டில், கண்ணாடிக் குழம்பை ஊதும் முறையைப் பயன்படுத்திச் சிறிய தகடுகளைச் செய்யும் முறையொன்றைப் பிரான்ஸ் நாட்டில் உருவாக்கினார்கள். இதன்படி ஓரளவு பெரிதாக ஊதிய குமிழ்களை மீள இளகவைத்துச் சுழற்றுவதன் மூலம் வட்டமான கண்ணாடித் தகடுகள் உருவாகின. இவ்வாறு உருவாக்கப் பட்ட கண்ணாடித் தகடுகளே ஆரம்பகாலக் கண்ணாடி யன்னல்களில் பயன்படுத்தப்பட்டன. வட்டக் கண்ணாடிகளிலிருந்து சதுரமான அல்லது நீள்சதுரமான சிறிய தகடுகள் வெட்டப்பட்டன. கிடைக்கக் கூடிய கண்ணாடிகளின் அளவு சிறிதாக இருந்ததால் ஒரு யன்னலில் அல்லது கதவில் பல கண்ணாடித் தகடுகளைப் பொருத்தவேண்டியிருந்தது. இத்தகைய யன்னல்கள் இன்றும் "பிரெஞ்ச�� யன்னல்"கள் என்றே அறியப்படுகின்றன. + +மேற்படி முறையில் செய்யப்பட்ட கண்ணாடிகள் அளவிற் சிறியனவாக இருந்தது மட்டுமன்றி, பல குறைபாடுகளையும் கொண்டிருந்தன. குமிழை ஊதும்போது குழாய் பிணைக்கப்பட்டிருந்த இடமும், சுழற்றியபோது ஏற்பட்ட மையப்பகுதியைச் சுற்றி உருவாகிய வளையம் வளையமான அடையாளங்களும் கண்ணாடித் தகடுகளில் காணப்பட்டன. இத்தகைய கண்ணாடிகளைத் தேய்த்து மட்டமாக்கும் முறை பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மட்டமான ஓரளவு தெளிவான கண்ணாடிகளை உருவாக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும் இவற்றின் விலை சாதாரண மனிதருக்கு எட்டாத உயரத்திலேயே இருந்தது. + +19 ஆம் நூற்றாண்டின் முதற் காலாண்டில் முன்னரிலும் பெரிய கண்ணாடித் தகடுகளை உருவாக்கும், "உருளை முறை" என அறியப்பட்ட முறையொன்று பயன்பாட்டுக்கு வந்தது. +இதிலும் ஊதலே அடிப்படையாக இருந்தாலும், குமிழை உதியபின் ஊசல் ஆடுவதுபோல் ஆட்டி நீளமான உருளைவடிவமாக ஆக்கப்பட்டது. இதனை இளக்கி இரண்டு அந்தங்களையும் வெட்டி நீக்கியபின்னர், நீளவாக்கில் வெட்டி விரிப்பதன் மூலம் தகடுகள் ஆக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட கண்ணாடித் தகடுகள் "உருளைக் கண்ணாடி"கள் எனப்பட்டன. பிரான்சில் முதலில் புழக்கத்துக்கு வந்த இம்முறை பிரித்தானியாவில் மேலும் விருத்தி செய்யப்பட்டது. இந்த முறையில் பிரித்தானியாவில் உற்பத்திசெய்யப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தியே புகழ்பெற்ற பளிங்கு அரண்மனை எனப்படும் கண்காட்சிகளுக்கான கட்டிடம் 1851 இல் கட்டப்பட்டது. + +பின்னர் கண்ணாடி உற்பத்தி விரைவாக வளர்ச்சியடைந்தது. கண்ணாடியைச் சட்டகங்களில் உருக்கி வார்த்து உருளைகளால் உருட்டி மட்டமாக்கப்பட்டது. பின்னர் இரண்டு பக்கங்களையும் இயந்திரங்களிலிட்டுத் தேய்த்து மட்டமாக்கி, மினுக்கம் செய்யப்பட்டது. இது "பிளேட்" கண்ணாடி என வழங்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவு பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்யக்கூடியதாக இருந்ததுடன், தெளிவான, நல்ல ஒளியியற் தன்மைகளுடன்கூடிய கண்ணாடிகளையும் பெறக்கூடியதாக இருந்தது. + +உருக்கப்பட்ட கண்ணாடியைக் கொண்ட தொட்டியிலிருந்து, பல்வேறு மட்டங்களில் அமைக்கப்பட்ட உருளைகளினூடு இழுப்பதன் மூலம் தொடர்ச்சியாகக் கண்ணாடியை உருவாக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட ��ண்ணாடி "இழுக்கப்பட்ட" கண்ணாடி எனப்பட்டது. இதன் மூலம் மிகவும் பெரிய கண்ணாடித் தகடுகளைச் செய்வது சாத்தியமானதெனினும், இதையும் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை இருந்தது. + +1960களின் ஆரம்பத்தில் இவ்வாறு தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவையில்லாத கண்ணாடி உற்பத்திமுறையொன்று அறிமுகமானது. இது "மிதப்புக்" கண்ணாடி எனப்பட்டது. இதில் உருகிய கண்ணாடியை, உருகிய தகரத்தின் மீது மிதக்கவிடுவதன் மூலம் தொடர்ச்சியான மிகவும் நீளமான கண்ணாடித் தகடுகள் செய்யப்பட்டன. இந்த முறையில் கண்ணாடிகளின் இரண்டு பக்கங்களும் முதலிலேயே மட்டமாக இருப்பதனால் தேய்த்து மட்டமாக்கவேண்டிய தேவை கிடையாது. இது அறிமுகமானதிலிருந்து இன்றுவரை இதுவே கண்ணாடி உற்பத்தியின் நியமமாக இருந்துவருகின்றது. + +தூய சிலிக்கா (SiO), 10 பசுக்கால் செக்கன் பாகுநிலையில், 2300 °ச (4200 °ப) "கண்ணாடி உருகு நிலை"யைக் கொண்டது. தூய சிலிக்கா சில சிறப்புக் கண்ணாடித் தேவைகளுக்குப் பயன்படுகின்றது. ஆனால், சிலிக்காவுடன் பிற பொருட்களைச் சேர்ப்பதன் மூலம் உற்பத்தி முறைகளை எளிமையாக்கலாம். இவற்றுள் சோடியம் காபனேட்டும் (NaCO) ஒன்று. இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடியில் உருகு நிலையை 1500 °ச (2700 °ப) க்குக் குறைக்கின்றது. ஆனாலும், இது கண்ணாடியை நீரில் கரையக் கூடியது ஆக்குகிறது. இது விருப்பத்துக்கு உரியது அல்ல என்பதால், சுண்ணாம்புக்கல்லில் இருந்து பெறப்படும் கல்சியம் ஒட்சைட்டு (CaO), சிறிதளவு மக்னீசியம் ஒட்சைட்டு (MgO), அலுமீனியம் ஒட்சைட்டு போன்றவற்றைச் சேர்ப்பதன் மூலம் வேதியியல் உறுதிப்பாடு பெறப்படுகின்றது. இவ்வாறு பெறப்படும் கண்ணாடி, நிறை அடிப்படையில் சுமார் 70 தொடக்கம் 74% சிலிக்காவைக் கொண்டிருக்கும். இது சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி எனப்படும். உற்பத்தியாகும் கண்ணாடிகளில் 90% ஆனவை சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் ஆகும். + +சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடிகள் உட்படப் பொதுவாக உற்பத்தி செய்யப்படும் கண்ணாடிகளுக்கு அவற்றின் இயல்புகளை மாற்றுவதற்காக வேறும் பல பொருட்களைச் சேர்ப்பது உண்டு. ஈயப் பளிங்குக் கண்ணாடி அல்லது தீக்கண்ணாடி எனப்படும் ஈயக் கண்ணாடிகள் அவற்றின் கூடிய முறிவுக் குணகம் காரணமாகக் கூடுதலாக ஒளிர்கின்றன. போரான் (boron) சேர்ப்பதன் மூலம் கண்ணாடிகளின் வெப்ப இயல்புகள், மின்னியல்புகள் என���பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். பைரெக்ஸ் (Pyrex) எனப்படும் கண்ணாடி இத்தகையது. பேரியமும் கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டவல்லது. தோரியம் ஒட்சைட்டு கண்ணாடியின் முறிவுக் குணகத்தைக் கூட்டுவதுடன், ஒளிச் சிதறலையும் குறைப்பதால் முன்னர் தரமான கண்ணாடி வில்லைகளைச் செய்வதற்கு இதனைப் பயன்படுத்தினர். ஆனால் இச் சேர்வை கதிரியக்கம் கொண்டதால் தற்கால மூக்குக் கண்ணாடி வில்லைகளில் லந்தனம் ஒட்சைட்டு பயன்படுத்தப்படுகின்றது. அகச் சிவப்புக் கதிர்களை உறிஞ்சும் திறன் கொண்ட கண்ணாடிகளைச் செய்வதற்கு கண்ணாடிகளில் இரும்பு சேர்க்கப்படுகின்றது. செரியம்(IV) ஒட்சைட்டுச் சேர்ப்பதன் மூலம் புறஊதாக் கதிர்களை உறிஞ்சக்கூடிய கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. + +மேலே குறிப்பிடப்பட்ட வேதிப் பொருட்களைத் தவிர மீள்பயன்பாட்டுக் கண்ணாடிகளையும் மூலப் பொருட்களுடன் சேர்ப்பது உண்டு. இது மூலப் பொருட்களைச் சேமிக்க உதவுவது மட்டுமன்றி உலைகளில் ஆற்றலைச் சேமிப்பதற்கும் உதவியாக உள்ளது. ஆனால், இவற்றில் இருக்கக்கூடிய மாசுப் பொருட்கள் உற்பத்திப் பொருட்களின் தரத்தைக் குறைப்பதுடன், கருவிகள் பழுதுபடுவதற்கும் காரணமாக அமையக்கூடும். கண்ணாடியில் இருக்கக்கூடிய குமிழிகளின் அளவைக் குறைப்பதற்கு சோடியம் சல்பேட்டு, சோடியம் குளோரைடு, அந்திமனி ஒட்சைட்டு என்பவை பயன்படுகின்றன. + +சோடாச் சுண்ணாம்புக் கண்ணாடி உற்பத்தியில் "கலுமைட்டு" (calumite) என்னும் மூலப் பொருளும் பயன்படுத்தப்படுவது உண்டு. இது இரும்பு உற்பத்தித் தொழிற்சாலைகளில் துணை உற்பத்தியாகக் கிடைப்பது. கண்ணாடி போன்ற சிறு மணிகளாகக் காணப்படும் இப்பொருளில் சிலிக்கா, கல்சியம் ஒட்சைட்டு, அலுமினா, மக்னீசியம் ஒட்சைட்டு, சிறிய அளவில் இரும்பு என்பன உள்ளன. + +சிலிக்காவைத் தவிரப் பல வகையான கரிமச் சேர்வைகளில் இருந்தும், கனிமச் சேர்வைகளில் இருந்தும் கண்ணாடி செய்ய முடியும். இவற்றுள், நெகிழிகள், கரிமம், உலோகங்கள், காபனீரொட்சைட்டு, பொசுபேட்டுகள், போரேட்டுகள், சல்க்கோஜெனைட்டுகள், புளோரைட்டுகள், ஜேர்மனேட்டுகள், தெலுரைட்டுகள், அந்திமனேட்டுகள், ஆர்சனேட்டுகள், டைட்டனேட்டுகள், தந்தலேட்டுகள், நைத்திரேட்டுகள், காபனேட்டுகள் என்பன அடங்கும். + +கண்ணாடியின் வரைவிலக்கணப்படி, அது உருகிய நிலையில் இருந்து சடுதியான வெப்பத்தணிப்பு மூலம் திண்மநிலைக்குக் கொண்டுவரப்பட வேண்டும். இதனால் கண்ணாடி பளிங்காகாமல் திண்மமாவதற்குப் போதிய அளவு விரைவாக மிகக்குளிர்ந்த திரவநிலைக்குக் கொண்டுவரப்படும். பொதுவாகக் கண்ணாடியின் கட்டமைப்பு அதன் பளிங்கு நிலையுடன் ஒப்பிடும்போது சிற்றுறுதி நிலையிலேயே இருக்கும். + +கண்ணாடி ஒரு பளிங்குருவற்ற திண்மம் என்பதேயன்றி நீர்மமாகக் கொள்ளப்படுவது இல்லை. கண்ணாடி ஒரு திண்மத்துக்கு உரிய எல்லாப் பொறிமுறை இயல்புகளையும் கொண்டுள்ளது. நீண்ட காலப்பகுதியில், கண்ணாடி பார்க்கக்கூடிய அளவுக்கு வழிந்தோடக் கூடியது என்னும் கருத்து சோதனை முறையிலோ, கோட்பாட்டு அடிப்படையிலான பகுப்பாய்வுகள் மூலமோ நிரூபிக்கப்படவில்லை. அன்றாட அனுபவங்களுக்கு ஏற்பக் கண்ணாடி இறுக்கமாக இருபதனால் பொது அறிவு நோக்கில் இதனை ஒரு திண்மமாகவே கொள்ள வேண்டும். + +இதற்கு முதல்வரிசை நிலை மாற்றம் இல்லாதிருப்பதால் கண்ணாடியை ஒரு நீர்மம் எனச் சிலர் கருதுகின்றனர். இந் நிலை மாற்றத்தின்போது சில வெப்பஇயக்கவியல் மாறிகளான கனவளவு, இயல்பாற்றல் (entropy), வெப்ப அடக்கம் (enthalpy) என்பன தொடர்ச்சியாகவே இருக்கின்றன. ஆனால், வெப்ப இயக்கவியல் மாறிகளான வெப்பக் கொள்ளளவு போன்றவை தொடர்ச்சியற்றவை ஆகக் காணப்படுவதால் கண்ணாடியின் நிலைமாற்ற வெப்பநிலையை ஒரு இரண்டாம் வரிசை நிலை மாற்றமாகக் கொள்ளமுடியும். இருந்தாலும், வெப்ப இயக்கவியலின் நிலைமாற்றக் கோட்பாடு கண்ணாடியின் நிலை மாற்றத்துக்கு முழுமையாகப் பொருந்துவதில்லை. இதனால் கண்ணாடி நிலை மாற்றத்தை உண்மையான வெப்பஇயக்கவியல் நிலை மாற்றமாகக் கொள்ள முடியாது. + +பழங்காலத்து சாளரக் கண்ணாடிகள் அடிப்பகுதியில் தடிப்புக் கூடியனவாக இருப்பது, நீண்ட காலத்தில் கண்ணாடி வழிந்தோடக் கூடியது என்னும் கருத்துக்குச் சான்றாக முன்வைக்கப்படுவது உண்டு. தொடக்கத்தில் அக் கண்ணாடித் தகடுகள் சீரான தடிப்புடன் இருந்தன என்றும் காலப்போக்கில் நீர்மங்களைப் போல் வழிந்ததால் அடிப்பகுதி தடிப்புக் கூடியதாக உள்ளது என்பதும் இதற்கான வாதம் ஆகும். ஆனால் அக்காலத்துக் கண்ணாடி உற்பத்தி முறை மூலம் சீரான தடிப்புள்ள கண்ணாடித் தகடுகளை உற்பத்தி செய்ய முடிவதில்லை. அக் கண்ணாடிகளைச் சாளரங்களின் சட்டங்களில் பொருத்தும்ப��து தடிப்பான பக்கம் அடிப்பகுதியில் இருக்கும்படி பொருத்துவது வழக்கம். சில சமயங்களில் கவனக் குறைவினால் தடிப்பான பக்கம் மேற்பகுதியிலோ அல்லது பக்கங்களிலோ இருக்கப் பொருத்தப் பட்டிருப்பதும் காணப்பட்டுள்ளது. + +20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சாளரக் கண்ணாடிகள் பெரும்படியாக உற்பத்தி செய்யப்பட்ட போதும் இத்தகைய விளைவுகள் ஏற்பட்டன. உருகிய கண்ணாடி பெரிய குளிரூட்டும் மேசையில் ஊற்றப்பட்டுப் பரவ விடப்பட்டது இதனால் ஊற்றப்படும் இடத்தில் கண்ணாடி தடிப்புக் கூடியதாகக் காணப்பட்டது. பிற்காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மிதப்புக் கண்ணாடிகள் சீரான தடிப்புக் கொண்டவை. + + + + +பறவை + +'இறக்கைகள் கொண்ட இருகாலி'யைப் பறவை எனக் கூறுவர். பறவைகள் முதுகெலும்புடைய இளஞ்சூட்டுக் குருதியுடைய, இறகுகளுடைய, முட்டையிட்டு இனம்பெருகும் விலங்குகளை குறிக்கும். பறவைகள் இருகால்கள் உள்ள, தன் உடல்வெப்பம் காக்கும், முதுகெலும்புள்ள (முள்ளந்தண்டுள்ள) புள் என்றும் குரீஇ என்றும் சிறப்பித்துக் கூறும் வகையைச் சேர்ந்த, முட்டையிடும் விலங்குகள் ஆகும். முன்னங்கால்கள் அல்லது கைகள் போல் முன் உறுப்புகளாய் இறகுகளால் ஆன சிறகுகள் இருத்தலும், பறப்பதற்குத் துணையாக காற்றறைகள் கொண்ட இலேசான, பொள் எலும்புகள் கொண்டிருப்பதும் பறவைகளின் தனிச் சிறப்பியல்புகள் ஆகும். விலங்குகளிலேயே இறகுகள் உள்ள ஒரே வகுப்பு பறவைகள்தான். விலங்குகளில் பறவை என்னும் வகுப்பில் மொத்தம் 9672 பறவையினங்கள் உள்ளன என்று பறவையியல் அறிஞர்கள் கணித்து குறிப்புகள் எழுதியுள்ளார்கள். + +மனிதர்தம் விரல் நீளமும் (5 செ.மீ அல்லது இரண்டேகால் அங்குலம்) 1.8 கிராம் எடையுமே உள்ள மிகச் சிறிய பறவையான ஒரு வகை தாரிச்சிட்டு(ஓசனிச்சிட்டு) களிலிருந்து, 9 அடி உயரமும் 156 கிலோகிராம் எடையும் கொண்ட (பறக்காத) பெரிய தீக்கோழி மற்றும் ஈமியூ வரை, பறவைகள் பல பரும அளவுகளிலும் உள்ளன. அதிக எடையுள்ள 'பறக்கும்' பறவையான 'கானமயில்' (Great Indian Bustard) 18 கிலோ வரை பெருக்கும். பறவைகளில் மணிக்கு 160 கி.மீ விரைவில் பறக்கும் இனமும் உண்டு. நிலம், நீர் வானம் இவற்றில் விரைந்து நகரக்கூடிய விலங்கினங்கள் யாவற்றினும் மிக விரைந்து செல்லக்கூடியது பறவையினத்தைச் சேர்ந்த பொரி லகுடு (அ) அலையும் வல்லூறு("Falco peregrinus") என்னும் பறவையே. சில பறவைகள் நெடுந்தொலைவு ( 17,000 கி.மீ வரை) செல்லவல்லன. + +பல பறவைகள், பறப்பதையே முக்கியமான சிறப்பியல்பாகக் கொண்டிருப்பினும், சில பறவைகள் பறக்க முடியாதவையாகும். மற்றும் பல இனங்கள், குறிப்பாகத் தீவுகளில் வசிப்பவை பறக்குமியல்பை இழந்துவிட்டன. பறக்கமுடியாத பறவைகளுள், பென்குயின்கள், தீக்கோழிகள், நியூசிலாந்தின் கிவிகள், அழிந்துபோன டோடோக்கள் என்பன அடங்குகின்றன. பாலூட்டிகள் இன்மை அல்லது குறைவு என்ற சூழலில் (நியூசிலாந்து முன்பிருந்தது போன்ற சூழலில்) பறவைகள் பாலூட்டிகளின் சூழற்கூறை நிரப்பத்துவங்குகின்றன. இந்தப்படிமலர்ச்சியின்போது பறக்கும் தன்மையை அவை விடுக்கக்கூடும். மனிதர்கள் அல்லது மனிதர்களால் அறிமுகப்படுத்தப்படும் விலங்குகள் பறக்கமுடியாத பறவைகளின் வாழிடங்களுக்குள் வரும்போது, இப்பறவைகள் அழிந்து போவதற்கான வாய்ப்புகள் மிகுதி. பெரிய ஓக், பறக்கமுடியாத ரெய்ல் எனப்படும் ரால்லிடேக்கள் (Rallidae) கள், நியூசிலாந்தின் மோவாக்கள் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும். + +பறவைகளின் உள்ளமைப்பு மற்ற வகைகளின் கலவையாக உள்ளது. பறவைகள் முதுகெலும்புள்ளவை. பாலூட்டிகளைப் ("Mammals") போல நான்கு அறை இதயத்தையும் வெதுவெதுப்பான இரத்தத்தையும் கொண்டவை. இதன் காரணமாக சீரான தன் உடல் வெப்பத்தையும், வேறுபட்ட சூழ்நிலைகளில் வாழும் தன்மையும் பெறுகின்றன. ஆனால் ஊர்வன ("Reptiles") போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. + +பறவைகளின் சிறகுகளில் உள்ள முக்கிய பொருள் 'கெரோட்டின்'. நமது தலைமுடி, விரல் நகம் அகியவற்றில் உள்ள அதே கெரோட்டின், ஆனால் நமது தலைமுடி, நகங்களைப் போல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே போகாமல் ஓர் அளவுடன் நின்று விடும். இதனால் பெரும்பாலும் வளர்ந்த பறவைகள் வருடம் ஒரு முறையாவது சிறகுகளை உதிர்த்து புதுப்பித்துக் கொள்ளும். இந்த சிறகுகள் எடை குறைவான ஆனால் வலுவான பறப்பதற்கேற்ற 'ஏரோடைனமிக்' மேற்பரப்பை பறவைகளுக்கு அளிக்கிறது. பறக்கும் போது சிறகுகள் இடையே சிறு சிறு காற்று பொட்டலங்கள் ஏற்பட்டு மிக வெப்பம், குளிர் அகியவற்றிலிருந்து பறவைகளைக் காக்கிறது. + +பறவைகள் பெரும்பாலும் கூரிய பார்வை உடையன. ஒரு கண்ணுக்கு மூன்று இமைகள் இருக்கும். மேல் இமை மனிதர்களின் கண் இமையைப் போன்றது. கீழ் இமை தூங்கும் போது மட்டும் ம��டிக் கொள்ளும். இது தவிர பக்கவாட்டில் அலகின் அருகிலிருந்து துவங்கும் ஒரு மெலிதான தோல் உண்டு. இது ஒளி ஊடுருவக்கூடிய தோல், கண்களை ஈரப்படுத்தவும், காற்று, அதிக வெளிச்சத்திலிருந்து காக்கவும் உதவுகிறது. + +பறவைக்கு காது மிக முக்கியமானது. ஆனால் முழுவதும் உள்புறமாகவே அமைந்துள்ளது. கண்ணுக்குச் சற்று கீழே சிறிய துளை இருக்கும். பெரும்பாலும் சிறிய இறகுகளால் மூடப்பட்டிருக்கும். பறவைகளுக்கு காது ஒலியைக் கேட்பதற்காக மட்டுமல்லாமல் பறக்கும் போது ஈடான உடல் நிலைக்காகவும் தேவைப்படுகிறது. + +பறவைகளின் மூளை பலவிதங்களில் முழுமை பெற்றது. பறக்கும் போது விமானத்தைப் போல உடலில் அனைத்து இயக்கங்களின் ஒருங்கிணைப்பு, உள்ளுணர்வு, உடனடியாக உணர்ந்து கொண்டு திசை மாறுதல் போன்றவற்றை செயல்படுத்துகிறது. பறவைகளின் அறிவுத் திறனும் வியப்பூட்டுமாறு சிறப்பாக உள்ளது. மனித மூளையில் உள்ள சிந்திக்கும் பகுதியான பெருமூளைப் புறணி (Cereberal Cortex) பறவைகளில் மிகப் பின்னடைந்த நிலையிலேயே உள்ளது. ஆனால் மாந்தர்களுக்கும், பிற பாலூட்டிகளுக்கும் இல்லாத மீயடுக்கு மூளை (Hyperstriatum) என்னும் ஒரு பகுதி பறவைகளில் மூளையில் உள்ளது. பொதுவாக அறிவுத்திறனுக்கு உதவுவதாகக் கருதும் பெருமூளைப் புறணிக்கு மாறாக பறவைகளில் இந்த மீயடுக்கு மூளை இத்திறமைக்கு உறைவிடமாக இருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர், ஏனெனில் அறிவுத்திறம் கொண்டாதாகக் கருதப்படும் பறவைகளில் இப்பகுதி பெரிதாக இருக்கின்றது. இந்தப் பகுதியே பாடும் பறவைகள் பாட்டுக்களைக் கற்றுக் கொள்ள உதவுகிறது. பறவைகளின் அறிவுத்திறனுக்கும் இதுவே காரணமாக இருக்கலாமென்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். + +பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. வானம்பாடி போன்ற மலர்களில் தேன் குடிக்கும் பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற ஊன்தின்னிப் பறவைகளுக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கவல்ல இரையை பிடித்துக் கொள்ள வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கு உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு. + +பறவைகள் வாழ்நாளில் பெரும்பகுதியை இரை தேடவும், உண்ணவுமே செலவழிக்கின்றன. ��திக எடை பறப்பதற்கு இடைஞ்சல் என்பதால் பறவைகளால் உடலில் உணவைச் சேமித்து வைக்க இயலாது. சிறிய பறவைகள் அடிக்கடி உண்பது அவசியமாகிறது. + +பறவைகளில் சைவமும் அசைவமும் உண்டு. காக்கை போன்றன இரண்டையுமே உண்கின்றன. சில பறவைகள் சிறப்பாக குறிப்பிட்ட இரைகளை மட்டுமே உண்ணும். எடுத்துக்காட்டாக, எவர்கிளேட் கைட் என்ற பறவை நத்தைகளை மட்டுமே உண்ணும். பறவைகளின் வயிறு சிறப்புத் திறன் பெற்றது. கடினமான கொட்டைகள், செல்பிஷ் போன்றவற்றைக் கூட நொறுக்கி செரிமானம் செய்துவிடும். சில பழக்கொட்டை தின்னும் பறவைகள் சிறிய கூழாங்கற்களையும் சேர்த்து தின்கின்றன. இவை வயிற்றில் கொட்டைகளை நொறுக்க உதவுகின்றன. குஞ்சுகளுக்கு இரை எடுத்துச் செல்ல பல பறவைகள் வாய்க்குள் சிறிய பை போன்ற உறுப்புக்களைக் கொண்டுள்ளன. + +இரவில் வேட்டையாடும் ஆந்தை போன்றவற்றைத் தவிர பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குகின்றன. குஞ்சு பொரிக்கும் காலங்களில் மட்டுமே கூட்டில் உறங்குகிறது. மற்ற நேரங்களில் கிளையோ, மரப்பொந்தோ, சில சமயம் ஒற்றைக் காலிலோ கிடைத்த இடத்தில் உறங்கிக் கொள்ளும். அவைகளுக்கு மனிதனைப் போல நீண்ட நேரத்தூக்கம் தேவைப்படுவதில்லை, மூளைக்கு ஓய்வளிப்பதற்காக் உறங்குவதுமில்லை. தசைகளை தளர்த்தவும், சக்தியைச் சேமிக்கவும் மட்டுமே தூக்கம் தேவைப்படுகிறது. + +பெரும்பாலான பறவைகள் வாழ்நாளில் அல்லது குறைந்தது ஒரு கூடல்காலத்திற்காவது ஒரே இணையுடன் வாழ்பவை. வழக்கம் போல் இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு. பாடுகின்ற பறவைகள் பாட்டாலேயே தங்கள் துணையைப் பிடிக்கின்றன. பெரும்பாலும் சத்தமாக நீளமாக பாடும் ஆணின் பாட்டிற்குத் தான் பெண் மயங்கி வந்து சேரும். மற்ற பறவைகள் தங்கள் இறகு அலங்காரத்தால் துணையை அசத்துகின்றன. + +ஆண், பெண் இரண்டுமே முட்டையை அடைகாப்பதுண்டு. வெளிவரும் குஞ்சுகளில் பொதுவாக 10% மட்டுமே ஓர் ஆண்டு தாண்டி உயிர் வாழ்கிறது. + +உணவுத் தேவைகளுக்காகவும் மிக வெப்பம், மிகவும் குளிர் கால நிலைகளை தவிர்ப்பதற்காகவும் பறவைகள் வருடாந்த இடப்பெயர்ச்சி செய்கின்றன. கடல் பறவைகள் மிக அதிக தூரம் (சில வகைகள் ஒரு வருடத்தில் 32,000 கிமீ வரை) பயணிக்கின்றன. + +இடப்பெயர்ச்சி செய்யும் போது அது பல அடையாளங்களைக் கொண்டு சரியான இடத்திற்கு சென்று சேர்கிறது. பகலில் ��ூரியனின் திசையைக் கொண்டும், இரவில் சில நட்சத்திரங்களை அடையாளமாகக் கொண்டும், பூமியின் காந்த அலைகளைக் கொண்டும், சில நில அடையாளங்களைக் கொண்டும், சில தனிப்பட்ட ஒலி வேறுபாடுகளைக் கொண்டும் பாதையை உணர்ந்து கொள்கின்றன. + +பறவைகள் கூட்டமாகச் செல்லும் போது 'V' போன்ற வடிவத்தில் பறப்பதைப் பார்த்திருக்கலாம். இவ்வாறு செல்லும் போது முதல் பறவையைத் தவிர மற்ற எல்லாப் பறவைகளும் முன்னால் செல்லும் பறவையின் இறக்கை வீச்சில் உருவாகும் காற்றழுத்தம் காரணமாக எளிதாக பறக்கிறது. + +தனியே பறந்து செல்லும் முன்னனுபவமில்லாத (முன்துய்ப்பில்லாத) சில இளம் பறவைகள் சமயங்களில் வழி தப்பி அதன் இனம் செல்லும் வழக்கமான வழியை விட ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தள்ளி வந்து விடுவதையும் காணலாம். + +விஞ்ஞானிகள் தொன்மாக்களிலிலிருந்து பறவைகள் தோன்றினவா என்று ஆய்ந்திருக்கிறார்கள். டினோசாரின் ஒரு வகையான தெரொபோட் (Theropod) இனத்திலிருந்து பறவைகள் தோன்றின என்று ஒரு சாராரும், அதற்கு முன்பே தெகோடோன்ட்லிருந்து (Thecodont) (இது டினோசாரின் மரபுவழி முன்னோடி) பறவைகள் உருவானது என்று மற்றொரு சாராரும் கூறுகின்றனர். பறவைகளின் படிமலர்ச்சி (பரிணாம வளர்ச்சி) பற்றிய ஆய்வுகளில் தொல்லுயிர் படிவங்கள் பெரிதும் துணையாயிருக்கின்றன. இவற்றுள் 1861-ம் ஆண்டு செருமனியிலுள்ள பவேரியாவில் ஒரு சுண்ணாம்புக் காளவாயில் கிடைத்த புதைபடிவம் குறிப்பிடத்தக்கது. அது 14 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வா்ழ்ந்த தொல்சிறகி ("Archeopteryx") என்ற பறவையினுடையது. வாயில் பற்கள், அசைக்கத்தக்க மூன்று விரல்கள், சிறகில் நகங்கள் என மரக்கிளைகளில் தொற்றித்தாவும் வசதிகளையும் பெற்றிருந்த அவ்விலங்கு தொன்மாக்களுக்கும் இன்றைய பறவைகளுக்கும் இடைப்பட்ட படிமலர்ச்சிநிலையில் இருந்திருக்கக் கூடும். + +பறப்பதைப் பற்றியும் இரு கருத்துக்கள் உள்ளன. பறவைகளின் முன்னோர்கள் மரத்துக்கு மரம் தாவி அப்படியே பறக்கத் துவங்கினர் என்று சிலர் சொன்னாலும், நிலத்திலிருந்து இரைக்காகவும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் தாவித் தாவி பறக்கத் துவங்கியதாக பொதுவாக நம்புகின்றனர். + +இவ்வாறு இரு கருத்துக்கள் இருந்தாலும் 'க்ரெடாசியஸ்' (Cretaceous) யுகத்தில், அதாவது 138 மில்லியன் ஆண்டுகள் முன்பிலிருந்து 65 மில்லியன் வருடங்கள் முன்பு வரை உள்��� காலகட்டத்தில், பறவைகள் இருந்ததற்கான சான்றுகள் கிட்டியுள்ளன. + + +பண்டைக்காலம் தொட்டே பறவைகள் கடவுளாக வணங்கப்பட்டும் கடவுளரின் ஊர்தியாக உருவகப்படுத்தப் பட்டும் வந்துள்ளன. மேலும் கோழி, வாத்து போன்ற பறவைகள் மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகின்றன. + + + + + +பென்குயின் + +பென்குயின் (வரிசை: Sphenisciformes, குடும்பம்: Spheniscidae) என்பது நீரில் வாழும் பறக்காத பறவை ஆகும். இவை பெரும்பாலும் தெற்கு அரைக்கோளத்தில் மட்டுமே வாழ்கின்றன. எனினும் ஒரே ஒரு பென்குயின் இனம் மட்டும் நடுநிலக்கோட்டின் வடக்குப் பகுதியில் வாழ்கின்றது. இவை தங்களின் துடுப்பு போன்ற இரு இறகுகள் மூலம் கடலில் நீந்தும் திறன் பெற்றுள்ளன. இவை தங்கள் வாழ்வில் பாதியை நிலத்திலும் மீதியைக் கடலிலும் கழிக்கின்றன. + +பென்குயின் வகைகளில் மிகப் பெரியது பேரரசப் பென்குயின் ("Emperor Penguin") ஆகும். இது சுமார் 1.1 மீட்டர் உயரம் வரை வளருவதுடன், 35 கிலோகிராம் அல்லது அதை விட சற்று கூடிய எடையையும் கொண்டிருக்கும். சிறிய நீலப் பென்குயின் அல்லது தேவதைப் பென்குயின் என்பது மிகச் சிறிய பென்குயின் வகையாகும். இது சாதாரணமாக 35 செ.மீ தொடக்கம் 40 செ.மீ வரையான உயரத்தையும் சுமார் ஒரு கிலோகிராம் எடையையும் கொண்டிருக்கும். பொதுவாகப் பெரிய பென்குயின்கள், சிறப்பாக வெப்பத்தை உள்வைத்துக்கொள்ளக் கூடியவையாக இருப்பதால், அதிக குளிர்ப்பகுதிகளில் வாழக்கூடியவையாக உள்ளன. சிறிய பென்குயின் வகைகள் மிதவெப்பக் காலநிலைப் பகுதிகள் அல்லது வெப்பக் காலநிலைப் பகுதிகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன. + +பென்குயின்கள் நீர்வாழ்வுக்கு தக்கபடி இசைவாக்கம் பெற்றுள்ளன. துடுப்புகளாக மாற்றம் பெற்றுள்ள இவற்றின் இறகுகள், பறப்பதற்குப் பயனற்றவை. எனினும் அவற்றைத் துடுப்புகள் போன்று பயன்படுத்தி நீரில் பென்குயின்கள் வியக்கத்தக்க வகையில் விரைவாகவும், இலகுவாகவும் நீந்தவல்லவை. இவை நீந்தும் போது ஒரு பறவை பறப்பது போல் இருக்கும். எனவே நீரில் பென்குயின் நீந்தும்போது அவற்றின் பின்னால் தொடராக நீர்க்குமிழிகளைக் காணலாம். இறகின் கீழுள்ள காற்றுப் படலம், அட்லாண்டிக் கடல் குளிரில் இருந்து உடல் வெப்பத்தைப் பாதுகாக்க உதவுகிறது. வெப்ப மற்றும் மிதவெப்ப வலயங்களில் வாழும் பென்குயின்களின் இறகுகள் ஒப்பீட்டளவில் தடிப்புக் குறைந்தவை ஆகும். + +அனைத்துப் பென்குயின்களின் உடலும் வெண்ணிறக் கீழ்ப்பகுதியையும், இருண்ட நிறம் (பெரும்பாலும் கறுப்பு) கொண்ட மேற்பகுதியையும் கொண்டவை. இது உருமறைப்புக்கு உதவுகிறது. கொல்லும் திமிங்கிலம் அல்லது சிறுத்தை நீர்நாய் போன்ற, பென்குயின்களைக் கொன்று தின்னக்கூடிய விலங்குகள் நீரிலிருந்து பார்க்கும்போது, வெண்ணிற வயிற்றுப் பகுதியை கொண்ட பென்குயினையும், ஒளி தெறிக்கும் நீர்ப்பரப்பையும் வேறுபடுத்திக் கண்டுகொள்வது சிரமம். + +நீந்தும் போது பென்குயின்களின் வேகம் மணிக்கு ஆறு தொடக்கம் 12 கிலோமீட்டர் வரை இருக்கும். 27 கிமீ.மணி வரை வேகம் அவதானிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. சிறிய பென்குயின்கள் அதிக ஆழத்தில் நீந்துவதில்லை. அவை தங்கள் உணவுகளை நீர் மேற்பரப்புக்கு அருகிலேயே பிடித்துக்கொள்வதுடன், ஒவ்வொரு நீச்சலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கின்றது. தேவையேற்படின் கூடிய ஆழத்துக்கு நீந்தவும் அவற்றால் முடியும். பெரிய பேரரசப் பென்குயின்கள் 267 மீட்டர் ஆழம் வரை சென்றது பதியப்பட்டுள்ளதுடன் இதன் கால அளவும் 18 நிமிடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது. + +நிலத்தில் பென்குயின்களின் நடத்தை லாவகமற்றது. அவை காலால், இருபுறமும் அசைந்து அசைந்து நடக்கின்றன அல்லது அவற்றின் வயிற்றினால் பனிக்கட்டியின் மீது வழுக்கிச் செல்கின்றன. ஆனாலும், உண்மையில் பெரும்பாலான மனிதர்களுக்கு ஈடாக அல்லது அவர்களிலும் வேகமாக ஓடுவதற்கும் பென்குயினால் முடியும். சக்தியைச் சேமிப்பதற்காகவும் அதேவேளை வேகமாக நகர்வதற்காகவும் இவை வயிற்றினால் வழுக்கிச் செல்கின்றன. இது ஆங்கிலத்தில் tobogganing என அழைக்கப்படுகின்றது. + +இவற்றின் செவிப்புலன் மிகச் சிறப்பானது. கண்கள் நீர்க் கீழ்ப் பார்வைக்கு ஏற்ப இசைவாக்கம் பெற்றுள்ளன. இவையே உணவைப் பிடிப்பதற்கும், பிற விலங்குகளிடமிருந்து தப்புவதற்குமான, பென்குயின்களின் முதன்மையான வழியாகும். காற்றில் இவைகளால் நீண்டதூரம் பார்க்க முடியாது. இவற்றின் மணக்கும் சக்தி பற்றி அதிக தகல்வல்கள் தெரிய வரவில்லை. + +குடும்பம் "Spheniscinae" + + + + + +தீக்கோழி + +தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி (Ostrich, "Struthio camelus") வாழும் பறவைகளுள் மிகப்பெரியது ஆகும���. இது 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளரக்கூடியது. பறக்காத "ரடீட்" எனப்படும் ஒப்பீட்டளவில் பழமையான பறவைக் குழுவைச் சேர்ந்தது. + +இக் குழுவைச் சேர்ந்த ஏனையவை ரியாக்கள், எமுக்கள், கசோவரிகள் எக்காலத்திலும் அறிந்தவரை மிகப்பெரிய பறவையான, இன்று அழிந்துபோன எபியோர்னிக்ஸ் (Aepyornis) என்பவையாகும். தீக்கோழிகள் நீண்ட கழுத்தையும், கால்களையும் கொண்டவை. 70 கிமீ/மணி (43 மைல்/மணி) வேகத்தில் ஓடக்கூடியவை. + +தீக்கோழிகள் இயற்கையில், ஆபிரிக்காவின் பூமத்திய ரேகைக் காட்டு வலயங்களில், வடக்கு, தெற்கு ஆகிய இரு பகுதிகளிலுமுள்ள சவான்னாக்கள், அரைப் பாலைவனங்களில் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு இனமான "எஸ். சி. சிரியாக்கஸ்" இப்பொழுது அழிந்துவிட்டது. + +தீக்கோழிகளின் இறகுகள் பெண்களின் தொப்பிகளை அலங்கரிப்பதற்காக உபயோகப்பட்டு வந்தன. சிறிய உடலமைப்புள்ள மனிதர்கள் சவாரிசெய்யக் கூடிய அளவுக்குத் தீக்கோழிகள் பெரியவையாகும். இதனால் வட ஆபிரிக்காமற்றும் அரேபியாவின் சில பகுதிகளில் இவை ஓட்டப் பந்தயங்களில் பயன்படுத்தப்பட்டன. + +சுவீடன் போன்ற குளிர்ப் பிரதேசங்களிற் கூட இவை இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இறைச்சி கொழுப்பற்ற மாட்டிறைச்சி போன்ற சுவை கொண்டதாகச் சொல்லப்படுகின்றது. + +ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்ளும் என்ற கதை மிகவும் பிரபலமானது. இத்தகைய நடைமுறையைக் காட்டும் அவதானிப்புப் பதிவுகள் எதுவும் இல்லையெனினும், எதிரி விலங்குகள் அண்மையிலுள்ளபோது, தான் தெளிவாகக் காணப்படாமலிருப்பதற்காகத், தீக்கோழி, தனது கழுத்தையும், தலையையும் நிலத்தில், படுக்கை நிலையில், வைத்துக்கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது. பயமுறுத்தப்பட்டால், தீக்கோழி தனது வலுவான கால்களால் உதைத்துக் கடும் காயத்தை உண்டாக்கக்கூடியது. + +தீக்கோழிகளுக்கு பற்கள் இல்லை. எனவே உணவை அரைத்து உண்பதற்காகவே கூடவே கற்களையும் விழுங்குகிறது. + +தீக்கோழிகளில் கூட்டுக் கூடமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. பல பெண் தீக்கோழிகள் தங்கள் முட்டைகளை ஒரே கூட்டில் இடுகின்றன. இம் முட்டைகள் பகலில் பெண் தீக்கோழிகளாலும் இரவில் ஆண்களாலும் அடைகாக்கப் படுகின்றன. தீக்கோழிகளின் முட்டைகளே உலகில் பெரிய முட்டைகளாகும். + + + + +கிவி (பறவை) + +கிவி ("Kiwi") என்பது நியூசிலாந்தில் வாழும், அப்டெரிக்ஸ் (அப்டெரிகைடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரே இனம்) இனத்தைச் சேந்த சிறிய, பறக்காத, ஏதாவதொரு வகைப் பறவையைக் குறிக்கும். ஒரு வீட்டுக் கோழியின் அளவைக் கொண்ட கிவிகளே வாழுகின்ற றட்டைட்களில் மிகச் சிறியனவாகும். இவை கசோவரிகள் அல்லது மோவாக்களுக்கு நெருக்கமான உறவையுடையனவாகக் கருதப்பட்டாலும், இவற்றின் பரிணாமத் தோற்றம் உறுதியாகத் தெரியவரவில்லை. பல கிவி வகைகள் அழியும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளன. + +சுமார் 1300 CE அளவில், மனிதர்கள் வருவதற்குமுன், நியூசிலாந்தில் முள்ளந்தண்டுள்ள விலங்குகள் எதுவும் இருக்கவில்லை. உலகின் ஏனைய பகுதிகளில், குதிரைகள், ஓநாய்கள், எலிகள் எனப் பல்வேறுபட்ட பிராணிகளால் நிரம்பியிருந்த ecological niches, நியூசிலாந்தில், பறவைகளால் (குறைந்த அளவு ஊர்வனவற்றாலும்) நிரம்பியிருந்தன. + +கிவிகள் வெட்கம் கொண்ட, nocturnal பிராணிகளாகும். இவை சிறப்பாக வளர்ச்சி பெற்ற முகர்ச்சிப் புலனைக் கொண்டுள்ளதுடன், பறவைகளில் வழமைக்கு மாறாக இவற்றின் மூக்குகள் கூரான சொண்டின் நுனியில் அமைந்துள்ளன. இவை தங்கள் சொண்டுகளை நிலத்துக்குள் செலுத்திப் புழுக்கள், பூச்சிகள், முள்ளந்தண்டற்ற ஏனைய பிராணிகள் முதலியவற்றைத் தேடி உண்கின்றன. இவை பழங்களையும் கூட உண்கின்றன. சந்தர்ப்பம் ஏற்பட்டால், இவை, சிறிய crayfish, நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் மற்றும் eels போன்றவற்றையும் உணவாகக் கொள்கின்றன. + +கிவிகளில் நிலத்தில் வாழ்வதற்கான இசைவாக்கம் விரிவானது. ஏனைய எல்லா ratites போலவே, மார்பெலும்புகளில், சிறகுத் தசைகளைப் பொருத்துவதற்கான keel மற்றும் சிறகுகளோகூட இல்லை. சிறகுகள் இருந்ததற்கான அடையாளம் கூட, மிகவும் சிறிதாக, கிவியின் உரோமங்களைப் போன்ற, இரண்டாகக் கிளைத்த இறகுகளுக்கு அடியில் மறைவாக உள்ளது. பொதுவாகப் பறவைகளுக்குப் பறப்பதற்கு வசதியாக, நிறையைக் குறைப்பதற்காக, உள்ளீடற்ற எலும்புகளே காணப்படுகின்றன. கிவியில், பாலூட்டிகளைப்போல எலும்புகளில் மச்சை ("marrow") உண்டு. + +கிவிகளில் மூன்று வகைகளும், அவற்றிலொன்றில் ஒரு துணை வகையும் உண்டு: + + + + + + + + + +பெரிய ஓக் + +75 சதம மீட்டர் நீளமுள்ள, பறக்காத, பெரிய ஓக் ("Great Auk") பிங்குயினஸ் இம்பென்னிஸ் அல்லது "அல்கா இம்பென்னிஸ்"), எல்லா ஓக்க��களிலும் பெரியதாகும். பெரிய ஓக்குகள் வெல்ஷ் மொழியில், அவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து, "வெண் தலை" எனப் பொருள்படும் "பென் க்வின்" என அழைக்கப்பட்டன. இதுவே "பென்குயின்" என்ற பெயருக்கு அடிப்படையாகும். தென்னரைக் கோளத்தில் பெரிய ஓக்கை ஒத்த பறவைகளைக் கண்ட பயணிகள் அவற்றையும் அதே பெயரிலேயே அழைத்தனர். + +பெரிய ஓக்குகள் ஒரு வருடத்தில் ஒரு முட்டையை மாத்திரமே இடுகின்றன. இவை நன்றாக நீந்தக் கூடியவை. தங்கள் சிறகுகளை உபயோகித்து நீருக்கடியில் நீந்த வல்லவை. பெரிய ஓக்குகள் ஒரு காலத்தில், கனடாவுக்கு அப்பாலுள்ள தீவுகளிலும், கிறீன்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, அயர்லாந்து மற்றும் பிரித்தானியா போன்ற இடங்களில் பெரும் எண்ணிக்கையில் காணப்பட்டன. + +ஏனைய ஓக்குகளைப் போல, பெரிய ஓக்குகளால் பறக்க முடியாது. இதனால் தான் இப் பறவைகள் மனிதருக்கு இலக்காகக்கூடியனவாக இருந்தன. கி.பி. 8 ஆம் நூற்றாண்டிலிருந்து இப் பறவைகள், உணவுக்காகவும், மெத்தைகள் செய்வதற்காகவும் வேட்டையாடப்பட்டன. காலப்போக்கில் இப் பறவைகள் அழிந்து போகும் வரை வேட்டையாடப்பட்டன. இவ்வினத்தின் கடைசி இணைகள், 1844, ஜூலை 3ல் ஐஸ்லாந்துக்கு அப்பாலுள்ள ஒரு தீவில் வைத்துக் கொல்லப்பட்டன. + + + + + + +இந்திய மயில் + +மயில் எனப் பொதுவாக அழைக்கப்படுகின்ற, இந்திய மயில் ("Indian peafowl, [Pavo cristatus]") அல்லது நீல மயில் இந்தியத் துணைக்கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பறவைகளில் ஒன்றாகும். இது பசியானிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவையான மயிலின் இரு பேரினங்களுள் ஒன்றான, பேவோ (Pavo) பேரினத்தினுள் அடங்கும், cristatus என்ற இனத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இவற்றின் பூர்வீகம் இந்தியத் துணைக்கண்டமாக இருப்பினும், இவை உலகின் பல பாகங்களில் மனிதர்களால் கொண்டு செல்லப்பட்டதால் அங்கும் பரவி காணப்படுகின்றன. பேவோ பேரினத்தினுள் வரும் மற்றொரு இனமான muticus பச்சை மயில் என அழைக்கப்படும். இவை இரண்டும் தென்னாசியாவிற்குரிய பெரிய வண்ணமயமான கோழி இனவகைப் பறவைகளாகும். + +இந்தியாவின் தேசியப் பறவை மயில் ஆகும். + +ஆண் மயிலின் கழுத்து, மார்பு, வயிறு பளபளக்கும் கருநீல நிறத்திலும், இறக்கைகளில் வெள்ளையும், பழுப்புமாக இறகுகள் போன்ற பட்டைகளும் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்திலும், பளபளக்கும் கருநீ�� வட்டங்களையும் கொண்டிருக்கும். தோகையில் உள்ள சில சிறகுகளின் முனை பிற வடிவத்தில் இருக்கும். ஆண் மயில் உருவில் பெரியவை. மயிலின் அலகின் முனையில் இருந்து வால் சிறகு வரை சுமார் 100-115 செ. மீ. நீளமும், நன்கு வளர்ந்த முதிர்ந்த பறவைகளில் முழுவதுமாக வளர்ந்த தோகையின் கடைசி முனை வரை கணக்கிட்டால் சுமார் 195-225 செ.மீ. நீளமும் கொண்டிருக்கும். இதன் எடை சுமார் 4-6 கிலோ இருக்கும். தோகையில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறகுகள் இருக்கும். எனினும் வால் சிறகுகள் 20 மட்டுமே. + +பெண் மயிலுக்கு நீண்ட தோகை கிடையாது. இவற்றின் கழுத்து, பளபளக்கும் பச்சை, வெள்ளை, கருப்பு ஆகிய வண்ணங்களைக் கொண்ட செதில் வடிவ இறகுகளைக் கொண்டும், வயிற்றுப்பகுதி வெள்ளையாகவும், இருக்கும். இவை ஆண் மயில்களை விட உருவில் சிறியவை. சுமார் 95 செ.மீ. நீளமும், 2.75-4 கிலோ எடையும் உடையவை. கோழி வகைப் பறவைகளிலேயே மயில்கள்தான் உருவில் பெரிதாகவும், எடைமிக்கதாகவும் விளங்குகின்றன. + +மயிலின் ஆண், பெண் இரண்டிற்குமே தலையில் கொண்டை இருக்கும். ஆண் மயிலின் முகத்தில் கண்ணின் மேலும், கீழும் வெள்ளை நிறத்தில் பிறை வடிவில் அடர்ந்த சிறகுகள் இல்லாத பட்டைகள் போன்ற இறகுகள் இருக்கும். பெண் மயிலில் முகத்தில் கண்களுக்கு மேல் வெள்ளை நிறப் பட்டையும், முகத்தின் பக்கவாட்டிலும், கழுத்து ஆரம்பிக்கும் பகுதியிலும் வெள்ளையாக இருக்கும். + + + + + +இலங்கைக் காட்டுக்கோழி + +இலங்கைக் காட்டுக்கோழி ( கல்லஸ் லபாயெட்டீ - Gallus lafayetii ) பேசண்ட் குடும்பத்தைச் சேர்ந்தது. இது இலங்கைக்கு உரியது. இது வீட்டில் வளர்க்கும் கோழிகளை உருவாக்கிய காட்டுக்கோழியான, இந்தியாவின் சிவப்புக் காட்டுக்கோழி எனப்படும் "கல்லஸ் கல்லஸ்" வகைக்கு நெருங்கிய உறவுள்ளது. + +இவை அளவிற் பெரிய பறவைகள், ஆண் பறவைகள் பல நிறம் கொண்ட இறகுகளைக் கொண்டவை, எனினும் அடர்த்தியான காடுகளில் இவற்றைக் கண்டுகொள்வது கடினம். இவை காடுகளிலும், பற்றைகளிலும் வாழுகின்றன. இலங்கையில் இவற்றை, கித்துல்கல, யால, சிங்கராஜ ஆகிய இடங்களில் காணலாம். + +இது "கல்லஸ்" இனத்தைச் சேர்ந்த நான்கு வகைப் பறவைகளில் ஒன்று. இது ஒரு நிலத்தில் கூடு கட்டும் பறவை. இது ஒரு கூட்டில் 2 - 4 முட்டைகள் வரை இடும். பெசண்ட் குடும்பத்தைச் சேர்ந்த பல பறவைகளைப் போலவே இவ் வகையிலும், ஆண் பறவைகள், அடைகாப்பதிலோ அல்லது பொரிக்கும் குஞ்சுகளை வளர்ப்பதிலோ எவ்வித பங்கும் வகிப்பதில்லை. இவ் வேலைகளை மங்கலான நிறத்துடன், சிறப்பான உருமறைப்புக்கான உடலைக் கொண்ட பெண் பறவைகளே செய்கின்றன. + +ஆண் இலங்கைக் காட்டுக்கோழி சுமார் 66 - 73 சமீ. வரை நீளம் கொண்ட பறவையாகும். இது நாட்டுக் கோழி போன்ற உடலமைப்பும், செம்மஞ்சள் கலந்த சிவப்பு நிற உடல் நிறமும், கடும் ஊதா நிற சிறகுகளையும், வாலையும் கொண்டது. தலையின் பின்பகுதியும், கழுத்தும் பொன்னிறமானவை. முகம் வெறுமையான சிவப்புத் தோலையும், முகப்பகுதியிலிருந்து மடிந்து நீண்டு தொங்கும் செந்நிறத் தோற் பகுதியையும் கொண்டது. உச்சியிலமைந்துள்ள "கொண்டை" யும், மஞ்சளான மையப் பகுதியுடன் கூடிய சிவப்பு நிறமானதே. + +பெண் மிகவும் சிறியது, 35 சமீ. நீளம் மட்டுமே கொண்டது. இவை அடிவயிற்றிலும், மார்பிலும் வெள்ளை நிறம் அமைந்த, மண்ணிற உடல் நிறம் கொண்டவை. + +பெரும்பாலான பெசண்ட் குடும்பப் பறவைகளைப் போலவே இலங்கைக் காட்டுக்கோழியும் நிலத்தில் வாழும் வகையாகும். இவை நிலத்தைக் கால்களால் கிளறி, பல்வேறு விதைகள், விழுந்த பழங்கள், மற்றும் பூச்சிகள் போன்றவற்றை எடுத்து உண்கின்றன. + +காட்டுக்கோழி இலங்கையின் தேசியப் பறவையாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. + + + + + +எண்கணிதம் + +எண்கணிதம் (Arithmetic) என்பது கணிதத்தின் ஒரு பிரிவு (அல்லது அதன் முன்னோடி) ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும் இவற்றுடன் சேர்க்கப்படுவதுண்டு. எண்கணிதக் கணிப்பு ஒரு செய்முறை ஒழுங்குக்கு அமையச் செய்யப்படுகின்றது. + +இயற்கை எண்கள், முழு எண்கள், விகிதமுறு எண்கள் (பின்ன வடிவிலானவை) மற்றும் உண்மை எண்கள் (தசம எண்கள்) என்பவை தொடர்பான எண்கணிதம் பொதுவாக ஆரம்ப வகுப்பு மாணவர்களால் கற்கப்படுகின்றது. நூற்றுவீத அடிப்படையில் எண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைகளும் இந் நிலையிலேயே கற்கப்படுகின்றன. பொதுவாகப் பெரும்பாலான நாடுகளில் ஆரம்பநிலை மாணவர்கள் கூட்டல் வாய்பாடு, பெருக்கல் வாய்பாடு என்பவற்றை மனனம் செய்வது ���ட்டாயமானது. இது வாழ்நாள் முழுவதும் எண்கணிதச் செய்கைகளைச் செய்வதற்கு அம் மாணவனுக்கு வேண்டியது. தற்காலத்தில் பெரும்பாலான வளர்ந்தவர்கள் எல்லா எண்கணிதக் கணிப்புகளுக்கும் கணிப்பொறி அல்லது கணினிகளையே உபயோகிக்கிறார்கள். +எண்கணிதத்தின் முற்பகுதி வரலாறு பற்றி ஒரு சிறிய அளவில் தான் ஆதாரங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று மத்திய ஆப்பிக்காவில் உள்ள கொங்கோ குடியரசு நாட்டில் 20,000 மற்றும் 18,000 கி.மு. இடைப்பட்ட காலத்தை கொண்ட ஈசாங்கோ எழும்பு கிடைத்துள்ளது. + +கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பகுதியிலேயே அனைத்து அடிப்படை எண்கணித நடவடிக்கைகளையும் எகிப்தியர்கள் மற்றும் பாபிலோனியர்கள் முதன்முதலில் பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைக்கப்பட்டுள்ளது. அந்த ஆதாரங்கள் அவர்கள் கண்க்குகளில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு எந்த செயல்முறையை பயன்படுத்தினர் என்பதுப் பற்றிய எந்த ஒரு குறிப்பும்மில்லை. ஆனால் குறிப்பிட்ட எண் அமைப்பு முறையின் பண்புகளைப் பற்றியும் மற்றும் சிக்கலான தன்மையை குறித்தும் ஆதாரக் குறிப்புகள் உள்ளது. + +முந்தைய எண் அமைப்புகள், நிலைப்படுத்தப்பட்ட குறிமுறையை கொண்ட தசம எண்கள் அடிப்படையில் இல்லை. குறிப்பாக பாபிலோனிய கண்க்கீடு முறைகள் அறுபது (அடிப்படை 60) எண்களின் அடிப்படையிலும் மற்றும் மாயா எண்கள் இறுபது (அடிப்படை 20) எண்களின் அடிப்படையிலும் உள்ளதாக இருந்திருககிறது. இந்த இட மதிப்பு கருத்தின் காரணமாக, வெவ்வேறு மதிப்புகளுக்கு அதே இலக்கங்களை மறுபரிசீலனை செய்வது, எளிதான மற்றும் திறமையான கணக்கீட்டு முறைகளுக்கு வழிவகுத்தது. + +நவீன கணித தொடர்களின் தொடர்ச்சியான வரலாற்று வளர்ச்சி என்பது பண்டைய கிரேக்கத்தின் ஹெலனிசி நாகரீகத்தில் இருந்து ஆரம்பமாகிறது. இது பாபிலோனிய மற்றும் எகிப்திய உதாரணங்களைவிட மிகப் பிற்பாடு தோன்றியது. சுமார் 300   கி.மு. யுசிலிட் படைப்பிற்கு முன்னர், கணிதத்தில் கிரேக்க தத்துவ படிப்பு, ஆன்மீக நம்பிக்கையுடன் இணைந்திருந்தது. உதாரணமாக, நிகோமாச்சஸ், எண்களுக்கு முந்தைய பித்தேகோரியன் அணுகுமுறை மற்றும் அவரது படைப்பான "எண்கணிதம் அறிமுகம்" ஆகியவற்றில் ஆன்மீக நம்பிக்கையுடன் உள்ள உறவுகளை சுருக்கமாகக் குறிப்பிட்டார். + +ஆர்க்கிமிடீஸ், டிபோபாண்டஸ் பயன்படுத்திய கிரேக்க எண்கள் மற்றவர்கள் பயன்படுத்திய நிலைநிறுத்தக் குறிப்பு எண்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவை அல்ல. பூர்வ கிரேக்கர்கள் 0 பூஜ்ஜியத்திற்கான சின்னத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதால் (ஹெலனிஸ்டிக் காலம் வரை), அவை மூன்று தனித்தனி சின்னங்களைக் கொண்டிருந்தன. பத்தாவது இடத்திற்கு ஒன்று, நூறுக்கு ஒன்று. பின்னர் ஆயிரம் இடத்திற்கு அவை அலகு இடத்திற்கான சின்னங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவற்றின் கூட்டல் வழிமுறை நம்முடையது போலவே இருந்தது, அவற்றின் பெருக்கல் வழிமுறை மிகவும் சற்று வித்தியாசமானது இருந்திருக்கிறது. ஆனால் வகுத்தல் வழிமுறை நம்முடையது போலவே இருந்திருக்கிறது மற்றும் ஆர்க்கிமிடீஸ்க்கு சதுர ரூட் கண்க்கிடும் முறை அறிந்திருக்கவும் மற்றும் கண்டுபிடித்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது. அவர் ஹீரோ முறையை அதற்கு அடுத்தடுத்த தோராயமாக பயன்படுத்த விரும்புகிறார். ஏனெனில், ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஒரு எண் மாறாது, மற்றும் 7485696 போன்ற சரியான சதுரங்களின் சதுர ரூட், 2736 என உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பண்டைய சீனர்கள் இதேபோன்ற கண்க்கிடும் முறையை பயன்படுத்தினர். ஏனென்றால் அவரிகலிடத்தில் 0 பூஜ்ஜியத்திற்கான சின்னம் இல்லாதிருந்ததால், அவை ஒரு அலகு இடத்திற்கு ஒரு தொகுப்பு அடையாளமும், பத்தாவது இடங்களுக்கான இரண்டாவது தொகுப்பு அடையாளமும். நூறாவது இடத்திற்கு அடையாளங்களை மறுபடியும் மறுபடியும் பயன்படுத்தினர். அவர்களின் சின்னங்கள் பண்டைய எண்ணும் தண்டுகள் அடிப்படையிலானவை. சீனர்கள் நிலையான குறியீடுகள் எப்போது பயன்படுத்த தொடங்கினர் என்பது தெறியாது ஆனால் கி.மு. 400 க்கு முன்பே நிச்சயமாக இருந்திருக்கும். சிரியாவின் பிஷப், செவரஸ் செபோக் (650 கி.மு.), "இந்தியர்கள் கண்க்கிடும் முறையைப் பற்றி பாராட்ட எந்த வார்த்தையையும் போதுமானதாக இல்லை ஏனென்றால் அவர்கள் ஒரு சிறந்த கணக்கிடுவதற்கான முறையை கொண்டிருக்கிறார்கள்." + +லியனார்டோ பிசா பிபநோசி, 1200 ஆம் ஆண்டில் லிபர் அபாசியில் இவ்வாறு எழுதினார். "இந்தியர்களின் கணக்கிடும் முறை எந்த அறியப்பட்ட முறையும் விஞ்சிவிட்டது. இது ஒரு அற்புதமான முறை. ஒன்பது குறியீடுகள் மற்றும் 0 பூஜ்ஜியம் குறியீடு ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்கள் கணக்க���டுகிறார்கள்." + +இந்து-அரேபிய எண்களின் படிப்படியான வளர்ச்சி, இட மதிப்புத் தன்மை மற்றும் நிலைநிறுத்த குறிமுறை ஆகியவற்றை சுயாதீனமாக உருவாக்கியது, இது தசம கணக்கிடுதலுக்கான அடிப்படையான எளிமையான முறைகள் மற்றும் ஒரு இலக்கத்தின் 0 பூஜியத்தைக் குறிக்கும் பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது. இந்த முறையானது ஒரு பெரிய மற்றும் சிறிய முழு எண்களை குறிப்பதற்க்கு ஒரு நிலையான அமைப்பை அனுமதித்துள்ளது. இந்த அணுகுமுறை இறுதியில் மற்ற அனைத்து அமைப்புகளையும் மாற்றியது. 6 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், இந்திய கணிதவியலாளர் ஆர்யபட்டா இந்த அமைப்பின் தற்போதைய பதிப்பில் தனது ஆராய்ச்சிகளை தொட்ர்ந்தார், மேலும் பல்வேறு குறிப்புகளுடன் பரிசோதனைகளையும் செய்துள்ளார். + +7 ஆம் நூற்றாண்டில், பிரம்மகுப்தா 0 பூஜ்ஜியத்தைப் ஒரு தனி எண்ணாக பயன்படுத்தி, பூஜ்ஜியம் மற்றும் அனைத்து பிற எண்களின் பெருக்கல், பிரிவு, கூட்டல் மற்றும் கழித்தல் ஆகியவற்றின் முடிவுகளை நிர்ணயித்ததுள்ளார். ஆனால் 0 பூஜியத்தால் வகுப்படும் எண்ணின் முடிவை அவரால் கூறமுடியவில்லை. + +அடிப்படை எண்கணித செயல்பாடுகளை கூடுதலாக, கழித்தல், பெருக்கம் மற்றும் வகுத்தல் ஆகியவையாகும், இருப்பினும் இது மேலும் மேம்பட்ட செயல்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது, இது சதவிகிதம் கையாளுதல், சதுர வேர்கள், விரிவாக்கம் மற்றும் மடக்கை செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு நிலையான செயல்பாடுகளின் படி எண்கணித செய்ல்படுகிறது. அனைத்து நான்கு கணித செயல்களும் (0 ஆல் வகுக்கப்படுவதைத் தவிர) எப்படி வேண்டுமானாலும் செயல்படலாம், இந்த நான்கு செயல்பாடுகள் வழக்கமான விதிகளுக்குள் உள்ளடங்கி, ஒரு களமாக அல்லது ஒரு துறையாக அழைக்கப்படுகின்றன. + +கூட்டல் என்பது கணிதத்தின் அடிப்படை செயல்பாடு ஆகும். அதன் எளிய வடிவத்தில், கூடுதலாக இரண்டு எண்கள், எண்களின் கூட்டுத்தொகை (2 + 2 = 4 அல்லது 3 + 5 = 8) ஒரு ஒற்றை இலக்கமாக எண் கிடைப்பது, கூட்டல் ஆகும். + +இரண்டு எண்களை விட அதிகமான எண்களை மீண்டும் மீண்டும் சேர்த்துக் கூட்டல்; இந்த நடைமுறை கூட்டுத்தொகை என அறியப்படுகிறது மற்றும் எண்ணற்ற எண்ணற்ற எண்ணை எண்ணற்ற வரிசையில் சேர்க்க வழிகள் உள்ளன; எண் 1 இன் தொடர்ச்சியான எண்ணிக்கையின் கணக்கிடுதல் மிக அடிப்படை வடிவம் ஆகும். + +க���ட்டல் என்பது கூடுதலாக வகை மாற்று மற்றும் கூட்டுப்பண்புகள் கொண்டதாகவும் இருக்கிறது அதாவது ஒரு தொடரில் எண்ணின் நிலையை எப்படி மாற்றினாலும் அந்த எண்ணின் தொகை மாறாமல் இருக்கும். கூடுதலாக அடையாளம் உறுப்பு (கூடுதல் சேர்க்கை) 0 என்பது, எந்த எண்னுடன் கூட்டலின் போது அந்தக் கூட்டப்படும் எண்ணின் தொகை மாறாமல் அளிக்கிறது & nbsp; 0. கூடுதலாக, நேர்மாறு உறுப்பு (கூட்டல் நேர்மாறானது) +கூட்டப்படும் எண்ணின், அதாவது அந்த எண்ணின் எதிர் எண்ணுடன் சேர்த்துக்கொள்ளும் போது 0 பூஜ்ஜியம் கிடைக்கப்பெறும். உதாரணமாக, 7-ன் எதிர் -7, எனவே . + +கழித்தல் என்பது கூட்டலின் தலைகீழ் ஆகும். கழித்தல் இரண்டு எண்களுக்கு இடையில் உள்ள வேறுபாட்டைக் காண்கிறது, அதாவது கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட சிறியதாக இருந்தால் வேறுபாடு நேர்மறையாக இருக்கும் மாறாக கழிக்கப்படும் எண் கழிபடும் எண்னை விட பெறியதாக இருந்தால் வேறுபாடு எதிர்மறையாக இருக்கும். இரண்டு எண்களும் சமமாக இருந்தால் வேறுபாடு 0 பூஜ்ஜியமாக கிடைக்கும். + +பெருக்கல் என்பது கணிதத்தின் இரண்டாவது அடிப்படை செயல்பாடு ஆகும். பெருக்கல் இரண்டு வேறு வேறு முழு எண்களை ஒற்றை எண்ணின் தொடர் கூட்டுத்தொகையாக உருவாக்குகிறது. இரண்டு பெருக்கப்படும் அசல் அல்லது முழு எண்களை பெருக்கிகள் என்றும் , சில நேரங்களில் இரண்டு காரணிகள் என அழைக்கப்படுகின்றன. + +பெருக்கல் ஒரு அளவிடுதலுக்கு பயன்ப்டுகிறது . எண்களை ஒரு வரிசையில் நிற்பதாக கற்பனை செய்தால், அந்தப் பல எண்களின் பெருக்கல், " x " எனக் கூறினால், அந்த் " x " 1 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். இப்போது அந்த எண்கள் "X" எனற எண்ணின் எண்ணிக்கையில் சமமாக் அந்த வரிசையில் உள்ள எண்களின் கூட்டுத்தொகை " x " ஆகும். + +"a" மற்றும் "b" பெருக்கல் இவ்வாறு எழுதப்படுகிறது or . கணினி நிரலாக்க மொழிகளிலும், மென்பொருள் தொகுப்புகளிலும், ஒரு விசைப்பலகையில் பொதுவாக காணக்கூடிய எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்த முடியும், இது பெரும்பாலும் ஒரு நட்சத்திரத்துடன் எழுதப்படுகிறது: a * b. + +வகுத்தல் என்பது பெருக்கத்தின் தலைகீழ் ஆகும். இது இரண்டு முழு எண்களை வகுப்பதால் ஈவு கிடைக்கப்பெறும். இதில் வகுபடும் எண், வகு எண்னை விட பெரியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு நேர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இதுவே வகுபடும் எண், வகு எண்னை விட சிறியதாக இருந்தால் வகுத்தல் போது ஒரு எதிர்மறை எண் ஈவாகக் கிடைக்கும். இப்போது ஈவை அந்த வகு எண்ணால் பெருக்கினால் வகுபடும் எண் கிடைக்கும். ஒரு முழு எண்னை 0 பூஜ்ஜியத்தால் வகுத்தால் ஈவு என்பது ஒரு முடிவில்லா ஒன்றாகும். + +வகுத்தல் என்பது வகை மாற்று பண்போ அல்லது கூட்டுப்பண்புகள் கொண்டதாகவோ இருக்கிறது. மேலும் கழித்தலை +கூட்டலாக பார்க்கவும், வகுத்தலை பெருக்கலாகப் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கும். வகுபடும் "a" எண்னை வகு +"b" எண்னின் தலைகீழ் பெருக்கினால் கிடைக்கும் விடை சமமாகும் . மேலும் பெருக்கலின் அனைத்து பண்புகளையும் கொண்டிருக்கிறது. + + + + +ஆந்தை + +ஆந்தை,() ஸ்ட்றைஜிபோர்மெஸ் வரிசையைச் சேர்ந்த, தனித்த, இரவில் திரியும் 174 வகைப் பறவைகளில் ஒன்றைக் குறிக்கும். ஆந்தைகள் பெரும்பாலும் சிறிய பாலூட்டிகள், பூச்சிகள், மற்றும் ஏனைய பறவைகளை வேட்டையாடும். + +ஆந்தைகள் முன்நோக்கும் பெரிய கண்களையும், காதுகளையும், சொண்டையும், மற்றும் "facial disk" என அழைக்கப்படும், தெளிவாகத் தெரியும், கண்களைச் சுற்றி வட்டமாக அமைந்த இறகுகளையும் கொண்டுள்ளது. ஆந்தைகள் நீண்டதூரப் பார்வைச் சக்தியைக் கொண்டிருப்பினும், அவற்றின் கண்கள், அவற்றுக்குரிய குழிகளில் நிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பார்வைத் திசையை மாற்றுவதற்குத் தலை முழுவதையும் திருப்பவேண்டியுள்ளது. இது தனது தலையை இரு திசைகளிலும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது. + +ஆந்தைகள் தூரப்பார்வை கொண்டவை, அவற்றின் கண்களுக்குச் சில அங்குலங்கள் தூரத்திலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்க்கமுடியாதவை. எனினும், அவற்றின் பார்வை, விசேடமாக மங்கலான வெளிச்சத்தில் மிகவும் சிறப்பானது. + +பல ஆந்தைகள் முழு இருட்டிலும் கூட ஒலியை அவதானித்து வேட்டையாடக் கூடியவை. "facial disk"கள், கொறிணிகளிடமிருந்து வரும் ஒலியைக் குவித்துக் காதுக்கு அனுப்ப உதவுகின்றன. + +அவற்றின் தோற்ற ஒற்றுமைக்குப் புறம்பாக, இவை, பாறுகள் மற்றும் ஏனைய இரவிற் திரியும் ஊனுண்ணிகளைவிட, whippoorwills மற்றும் ஏனைய பக்கிகள் அல்லது Caprimulgiformes என்பவற்றுக்கு நெருங்கிய உறவுள்ளவை. சில taxonomists, nightjarகளையும் ஆந்தையிருக்கும் அதே order இலேயே சேர்த்துள்ளார்கள். (Sibley-Ahlquist taxonomy ஐப் பார்க்கவும்). + +ஆந்தைகளின் வலுவான நகங்களும், கூரிய சொண்டும���, உண்பதற்குமுன் அவற்றின் இரைகளைத் துண்டுதுண்டாகக் கிழிப்பதற்கு உதவுகின்றன. சத்தத்தை அமுக்கும் தன்மையுள்ள அவற்றின் சிறகுகளும், மங்கலான இறகுகளும், அவை சத்தமின்றியும், காணப்படாமலும் பறப்பதற்கு உதவுகின்றன. உணவின் சமிக்கப்படமுடியாத எலும்புகள், செதில்கள், மற்றும் இறகுகள் போன்றவற்றை, உருண்டை வடிவில் வெளிவிடும் இதன் நடத்தை, இவற்றின் உணவுப் பழக்கம் பற்றி ஆராயும் விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றது. உயிரியல் பாடங்களின்போது பகுத்தாய்வதற்கு மாணவர்களுக்கு உதவுவதால், சில நிறுவனங்கள், இந்த உருண்டைகளைச் சேகரித்துப் பாடசாலைகளுக்கு விற்பனை செய்கின்றன. + +ஆந்தை முட்டைகள் கிட்டத்தட்டக் கோளவடிவம் கொண்டவை. ஆந்தைகள் அவற்றின் வகையைப் பொறுத்து, ஒரு சிலவற்றிலிருந்து பன்னிரண்டு வரையிலான முட்டைகளை இடுகின்றன. இவற்றின் கூடுகள் செம்மையற்றவை, மரங்கள், நிலத்தின் கீழான வளைகள், குகைகள் போன்ற இடங்களில் காணப்படும். + +இந்தியாவில் பழமையான பஞ்சதந்திரக் கதைகளில் சித்தரிக்கப்பட்ட பல விலங்குக் கதாபாத்திரங்களில் ஆந்தையும் முக்கியமான ஒன்று. எனினும் இந்தியப் பண்பாட்டில் ஆந்தையின் அலறல், பயத்துக்குரியதாகவும், கெட்ட சகுனமாகவுமே கருதப்பட்டது. + +காகங்களும் வேறு பல பறவைகளும் அதிக புத்திக்கூர்மையுள்ளவையாக இருந்தும், ஆந்தைகள், பாரம்பரியமாகப் புத்திக்கூர்மையுடனும், ஆதெனா தெய்வத்துடனும் சம்பந்தப்படுத்தப்பட்டு வந்தது. பண்டைய எகிப்தியரின் எழுத்து வரிவடிவங்களில் "ம்" ஒலியைக் குறிக்க ஆந்தை உருவமே பயன்பட்டது. எனினும், ஊனுண்ணியான இது உயிர்பெற்றுத் தாக்குவதைத் தடுக்க, அதன் கால்கள் முறிந்த நிலையிலேயே வரைந்து வந்தார்கள். ஜப்பானியப் பண்பாட்டில், ஆந்தை இறப்பின் குறியீடாகக் கருதப்பட்டதுடன், இதனைக் காண்பதும் கெடுதியாகக் கருதப்பட்டது. ஹோபி பண்பாட்டில், இவை அழுக்கானவையாகவும், கஷ்டத்தைக் கொண்டுவருபவையாகவும் கருதப்பட்டன. 2003ல் அமெரிக்கப் பாடசாலைகளில் புழக்கத்திலுள்ள, மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களின் உள்ளீடுகளை, பல் பண்பாட்டு உணர்வுகளின் அடிப்படையில் மீளாய்வு செய்தபோது, பாம்புகள், தேள்கள் போன்ற பயத்தைக் கொடுக்கும் விலங்குகளுடன், ஆந்தைகளைப் பற்றிய கதைகள், கேள்விகளுக்கான உரைப்பகுதிகள் போன்றவற்றையும் நீக்கிவி��� முடிவு செய்யப்பட்டது. தென்மேற்கு அமெரிக்க இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்த மாணவர்களை, ஆந்தை பற்றிய கேள்விகள் பயமுறுத்திப் பரீட்சையிலிருந்து திசைதிருப்பக் கூடுமென்பதால் இம் முடிவு எடுக்கப்பட்டதாம். + + + + + +செனிகல் + +செனிகல் குடியரசு ("Republic of Senegal") மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது. + + + + + +கிளி + +கிளி "சித்தாசிடே" குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் ("Rose Ringed parakeet"). + +விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை. + +கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன. + +பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை. + + + + + +காகம் + +காகம் அல்லது காக்கை ("கோர்வஸ் ஸ்பிளெண்டன்ஸ்") (ஆங்கிலம்:"House Crow") மற்றும் கொழும்பு காகம் என வழங்கப்படும் காக்கை குடும்பத்தைச் சேர்ந்த, ஆசியாவைத் தனது இருப்பிடமாகக் கொண்டு விளங்கும் பொதுவான பறவையாகும். இதனைப் பேச்சு வழக்கில் காக்கா என்றும் அழைப்பர். இந்தியாவில் அதிகமாக காணப்படும் பறவை இனமாகும் பொதுவாக 43 செ.மீ அளவில் காணப்படும் ஆனாலும், கப்பல் போக்குவரத்தின் காரணமாக இந்நாளில், இந்தப் பறவை உலகின் பல இடங்களிலும் காணப்படுகின்றது. இது ஐரோப்பாவில் காணப்படுகின்ற "ஜாக்டோ" (Jackdaw) எனப்படும் காகம் மற்றும் கரியன் காகம் (Carrion Crow) என்னும் இரு வகைக் காகங்களுக்கு இடைப்பட்டதான தோற்றவமைப்பைக் கொண்டிருந்தாலும் குறித்த இரண்டு வகைக் காகங்களையும் விட மெல்லியதாகும். நெற்றி, உச்சி, தொண்டைப் பகுதி, மேல் மார்பு என்பன மினுக்கமான கடும் கரு நிறத்தைக் கொண்டுள்ள அதேவேளை, கழுத்து மற்றும் மார்பு ஆகியன சாம்பல் கலந்த மண்ணிறமானது. சிறகுகளும், வாலும், கால்களும் கருநிறமானவை.. + +காக்கையின் முட்டைகள் கருநீல நிறத்தில் காணப்படும். + +இவற்றின் பல்வேறு உடற் பகுதிகளின் நிறங்களின் கடுமைத்தன்மையும், சொண்டின் தடிப்பும் வேறுபாடாக அமைந்த, பல பிரதேச வேறுபாடுகளைக் கொண்ட காகங்கள் காணப்படுகின்றன.பொதுவாக காகமானது தங்களுடைய உணவை தாங்களே பகிர்ந்துக் கொள்கின்றன. + +ஒவ்வொரு நாளும் தமிழர்களின் வீடுகளில் சமைக்கப்படும் சாதத்தில் முதல் பங்கு வீட்டுக் காகத்திற்கு வைக்கப்பட்டு அதன் பின்பு வீட்டிலிருப்பவர்கள் சாப்பிடும் வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில வீடுகளில் மட்டுமே இந்த வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. "'காகம் கரைதல்:" வீட்டிற்கு உறவினர்கள் வருகையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இது. குறித்த nambikkaikalai.ithuthu.ithu + +நம்பிக்கைகள் தமிழர் பண்பாட்டில் பழங்காலத்தில். இருந்தே இருப்பதை சங்க இலக்கிய பாடல்களின் வழியே அறிய முடிகிறது.குடும்ப ஒற்றுமை வேண்டும் என்று நினைக்கும் சுமங்கலிப்பெண்கள் காக்கைகளை வழிபடுவது வழக்கம்.  தன் உடன் பிறந்தவர்கள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க தங்களிடம் பாசம் உள்ளவர்களாகத் திகழ இந்தக் கணுப்பிடி பூஜையையும் செய்கிறார்கள்.  திறந்த வெளியில் தரையைத் தூய்மையாக மெழுகிக் கோலமிடுவார்கள். அங்கே வாழை இலையைப் பரப்பி அதில் வண்ண வண்ண சித்தரான்னங்களை  ஐந்து ஏழு ஒன்பது என்ற கணக்கில் கைப்பிடி அளவு எடுத்து வைத்து காக்கைகளை கா………………….கா   என்று குரல் கொடுத்து அழைப்பார்கள்.  அவர்களின் அழைப்பினை ஏற்று காக்கைகளும் பறந்து வரும்.  அங்கு வந்த காக்கைகள் தன் சகாக்களையும் அழைக்கும்.  வாழை இலையில் உள்ள அன்னங்களைச்  சுவைக்கும்.  அப்படிச் சுவைக்கும்போது அந்தக் காக்கைகள் கா…………………கா,,,,,,,, என்று  கூவி தன் கூட்டத்தினரை அடிக்கடி அழைக்கும். அந்தக் காக்கைகள் உணவினைச் சாப்பிட்டுச் சென்றதும் அந்த வாழை இலையில் பொரி பொட்டுக்கடலை வாழைப்பழங்கள் வெற்றிலைபாக்கு வைத்து தேங்காய் உடைத்து வழிபடுவார்கள்.  இதனால் உடன் பிறந்த சகோதரர்களுடன் ஒற்றுமை நிலவும் என்பது பெண்களின் நம்பிக்கை. காக்கையின் இந்த குணமானது கூடி வாழ்வதின் சிறப்பினை உணர்த்த குறிப்பிடப்படுவது உண்டு. + +இந்த வழிபாட்டில் வயதான ஆண்களும் கலந்து கொள்வார்கள்.  மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்வதாக பெரியவர்கள் சொல்வர்.  இதனால் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை மேலும் காக்கைகளை அன்று வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள்.   காக்கை சனி பகவானின் வாகனம் என்றும் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனிக்கு மகிழ்ச்சி தரும் எனவும் தமிழர்கள் கருதுகின்றனர். + +அதிகாலையில் எழுந்து கரைதல்.  உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல். உணவு உண்ணும்போதே சுற்றும் முற்றும் பார்த்தல்.   பிறர் காணாமல் ஜோடி சேர்ந்து இணைதல்.  மாலையிலும் குளித்தல் பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாக்க் கொண்டவை. + +தங்கள் இனத்தில் ஏதாவது காக்கை இறந்து விட்டால் அனைத்துக் காக்கைகளும் ஒன்றுகூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.  மனிதனிடம் இருக்கும் பழக்கங்கள்தான்  ஆனால் மெல்ல மெல்ல இதை நாமே பெரிது படுத்துவதில்லையோ என்று தோன்றுகிறது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் உணர்வா இல்லை நிஜமாகவே பித்ருக்களின் ஆசியா தெரியவில்லை.  ஆனால் உங்கள் வாழ்வில் திடீரென்று  நடக்கும் அசம்பாவிதங்கள்  விபத்துக்கள் வீண்பழி போன்றவை உங்கள் கிட்டவே நெருங்காது.  செய்வினைக்கோளாறுகள் உங்கள் வீட்டுப்பக்கமே வராது. தீராத கடன் தொல்லைகள் புத்திர சந்தான பாக்கியம் போன்ற மிக முக்கியமான பலன்களையும் உங்கள்  நியாயமான கோரிக்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கியப்பங்கு வகிப்பது  உங்கள் முன்னோர் வழிபாடுதான்.  உங்கள் முன்னோர்களுக்கே நீங்கள் உணவிடும் புண்ணியம் என்கிற அபரிமிதான சக்தியை உங்களுக்கு அளிக்கவல்ல அற்புதமான ஜீவராசி  காக்கை இனம். + +காக்கையிடம் உள்ள தந்திரம் வேறு எந்தப் பறவைகளிடமும் காண முடியாது.அவை கூடிவாழ்பவை. மிகவும் சாதுவான பறவையாகும். + +காக்கைகளில் நூபூரம்  பரிமளம் மணிக்காக்கை அண்டங்காக்கை  என சில வகைகள் உண்டு. + + + + +கரியன் காகம் + +கரியன் காகம் (Carrion Crow), "கோர்வஸ் கொரோனே"யை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இருப்பதால் கட்டையாகத் தோற்றும். முதிர்ந்த Rook இல் மூக்குத் துவாரம் வெறுமையாக இருக்கும், ஆனால் காகத்தில் அதன் எல்லா வயதிலும் மூக்குத்துவாரம் தும்பு போன்ற இறகுகளினால் மூடப்பட்டிருக்கும். + +இந்த வகை, கிழக்காசியாவில் காணப்படும், தொடர்புள்ள "C. c. ஒரியெண்டலிஸ்" உடன், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழுகின்றது. இந்த இரண்டு வகைகளுக்கிடையிலான பிரிவு கடைசி பனி உலகில் இடம் பெற்றதாக நம்பப்படுகின்றது. இவையிரண்டுக்குமிடையிலான இடைவெளியை, நெருக்கமான தொடர்புள்ள Hooded Crow (தற்போது தனி "வகை" அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது) நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு வடிவங்களுக்குமிடையிலான எல்லைகளில், இவற்றுக்கிடையிலான கலப்பினங்கள் உருவாவது, இவை இரண்டுக்குமிடையிலான பரம்பரையியல் தொடர்புகளைக் காட்டுகின்றது. + +கரியன் காகத்தின் உடல் நிறம், பச்சை அல்லது ஊதாப் பளபளப்புடன் கூடிய கறுப்பாகும். ஆனால் பளபளப்பு பனி யுகம்Rook இலும் கூடிய பச்சையானது. சொண்டு, கால்கள், பாதங்கள் என்பனவும் கறுப்பு நிறமே. + +Rook பொதுவாகச் சேர்ந்து வாழ்வது. கரியன் காகம் தனிமையில் வாழ்வது. ரூக்குகள் எப்போதாவது தனியான மரங்களில் ��ூடு கட்டுகின்றன. காகங்கள் Rookகுகளுடன் சேர்ந்து உணவுண்ணக்கூடும். மேலும், காகங்கள் குளிர்காலத் தங்குமிடங்களில் சேர்ந்து வாழுகின்றன. இவற்றிடையே முக்கிய வேறுபாடு இவற்றின் குரலாகும். Rookகுகள் "கா" என்று கரைய, காகங்கள் "pawk, pawk" என்று சத்தம் எழுப்புகின்றன. அடித்தொண்டையிலிருந்து வரும் சிறிது அதிர்வுள்ள சத்தம், Rookகுகளின் சத்தங்களிலிருந்து வேறானது. + +இப் பறவை அதிகம் சத்தம் எழுப்பிக்கொண்டிருப்பது. மரக்கிளையில் இருந்துகொண்டு தொடராகக் கரையும். ஒரு தொடரில் விரைவாக அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு முறை ஒலியெழுப்பும், அடுத்தடுத்த தொடர்களிடையே சிறிது இடைவெளியிருக்கும். சிறகடிப்பு, ரூக்இன் சிறகடிப்பைக் காட்டிலும் மெதுவாகவும், நிதானமானதாகவும் இருக்கும். + +எல்லாவித அழுகும் உடல்களையும் தின்னும் வழக்கமுள்ளதாயினும், அதனால் பிடிக்கக்கூடிய சிறிய விலங்குகளைக் கொன்றும் தின்னக்கூடியது, அத்துடன் முட்டைகளைத் திருடித் தின்பதையும் வழக்கமாகக் கொண்டது. காகங்கள் இயற்கையில் தோட்டிகள், இதனால்தான், வீட்டுக் கழிவுகளை உண்பதற்காக மனிதர்கள் வாழும் இடங்களில் அடிக்கடி காணப்படுகின்றன. + +மலையுச்சிகளின் தொங்குபாறைகளில் இவை கூடுகட்டுகின்றன, ஆனால் உள்நாடுகளில் மரங்களிலேயே கூடுகளை அமைக்கின்றன. இக் கூடுகள் raven களுடையதிப் போலவே இருந்தாலும், அளவிற் சிறியவை. நான்கு முதல் ஐந்து வரையிலான முட்டைகளைப் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே இடுகின்றன. முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவையாக உள்ளன. முட்டையிலிருந்து வெளிவந்து ஆறு வாரகாலத்துக்குள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகிவிடுகின்றன. + +முன்னைய வருடங்களில் பொரித்த குஞ்சுகள் அவ்விடத்திலேயே இருந்து புதிய குஞ்சுகளை வளர்க்க உதவுகின்றன. அவை உணவு சேகரித்துக் குஞ்சுகளுக்குக் கொடுப்பதில் பெற்றோருக்கு உதவுகின்றன. + + + + + +சாதாரண மைனா + +சாதாரண மைனா (அக்ரிடொதெர்ஸ் ட்ரைஸ்டிஸ், Acridotheres tristis) தென்னாசியாவில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா, இலங்கை வரையான நாடுகளில் காணப்படும் மைனா இனமாகும். இது இந்திய மைனா எனவும் அழைக்கப்படுகிறது. இது மனிதக் குரலில் கதைக்க வல்லதாகையால் பேசும் மைனா எனவும் அழக்கப்படுகிறது. இது 25 சென்ரிமீட்டர் நீளமான பறவையாகும். + + + + + +கோராசீபோர்மெஸ் + +கொராசீபோர்மெஸ்கள், மீன்கொத்திகள், கொண்டலாத்தி, தேனீ உண்ணிகள், காடைகள், இருவாய்ச்சிகள் என்பவற்றை உள்ளடக்கிய, வழக்கமாகப் பல நிறம் கொண்ட பறவைகளாகும். + +இந்த வரிசை ஒரு கலவை போலத் தெரிகின்றது. டி. என். ஏ. பகுப்பாய்வு புழக்கத்துக்கு வந்தபின்னர், பல குழுக்கள் திருத்தப்பட்ட பட்டியல் ஒழுங்குகளில் வைக்கப்படுகின்றன. + + + + +மைனா + +மைனா "ஸ்டார்லிங்" ("ஸ்ட்டேண்டிடே") குடும்பத்து பறவையாகும். பசரீன் பறவைகள் குழுவைச் சேர்ந்த இவை, இயற்கையாகக் கிழக்காசியாவில் மட்டுமே வாழ்கின்றன, எனினும் இவற்றின் பல வகைகள், வட அமெரிக்காவுக்கும், சாதாரண மைனா தென்கிழக்கு அவுஸ்திரேலியாவுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. + +மைனாக்கள் வலுவான பாதங்களைக் கொண்ட, நடுத்தர அளவிலான பசரீன்களாகும். இவற்றின் பறப்பு வலுவானதும் நேரானதுமாகும். இவை கூட்டமாக வாழ்வன. இவை விரும்பும் வாழிடம் ஓரளவு திறந்த வெளிகளாகும். இவை பூச்சிகளையும், பழங்களையும் உண்ணுகின்றன. பல வகைகள் மனித வாழிடங்களுக்கருகில் வசிப்பதுடன், எல்லாவகை உணவுகளையும் உண்ணக்கூடியன. + +உடல் நிறம் பொதுவாகக் கடுமையானது, அதிகம் மண்ணிறம். சில வகைகள் மஞ்சள் நிறத்திலான தலை அலங்காரங்களைக் கொண்டுள்ளன.பெரும்பாலான வகைகள் பொந்துகளிலேயே கூடு கட்டுகின்றன. + + + + +மரம் + +மரம் என்பதை அளவிற் பெரிய பல்லாண்டுத் தாவரம் என வரைவிலக்கணம் கூறலாம். இது நிலத்தில் (ஒரு விதையிலிருந்து) தோன்றி, இடம் விட்டு இடம் தானே நகராது, நிலைத்து வளரக்கூடிய ஒரு நிலைத்திணை வகை ஆகும். இதற்கான அளவு குறித்த வரையறை எதுவும் கூறப்படாவிடினும், பொதுவாக முதிர்ந்த நிலையில் 4.5 மீட்டர் (15 அடி) உயரமும், ஒரு தனி அடிமரத்தில் தாங்கப்பட்ட கிளைகளையும் கொண்டிருக்கும். மரங்கள், இயற்கை நிலத்தோற்றத்தில் முக்கியமான அம்சமாக இருப்பதுடன் நிலத்தோற்றக்கலையில் ஒரு முக்கியமான கூறுமாகும். ஏனைய வகைகளைச் சேர்ந்த செடிகொடி போன்ற நிலத்திணை வகைகளை விட, மரங்கள் நீண்டகாலம் வாழக்கூடியவை. சிலவகை மரங்கள் 100 மீ. (300 அடி), உயரம் வரை வளரக்கூடியவை, சில ஈராயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்��ு மேலும் வாழக்கூடியவை. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள செம்மரம் என்னும் வகை இப்படிப்பட்டன. இதே போல தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகர பட்டினம் என்னும் ஊரில் கடற்கரை அருகில் அமைந்துள்ள ஆப்பிரிக்காவை பூர்வீகமாக கொண்ட "பவோபாப் மரம்" இன்றும் ஆயிரம் ஆண்டுகளை கடந்து வாழ்ந்துகொண்டு இருக்கிறது. + +இந்த மரம் தமிழர்கள் ஆதிகாலத்தில் கடல் வணிகத்தில் உலகின் முன்னோடிகளாக இருந்தனர் என்பதற்கு நல்ல உதாரணமாக கூறலாம். +காரணம் தமிழர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கப்பல் வழி வணிகம் செய்ய போகும்போது இந்த மரத்தின் விதைகளை அங்கிருந்து எடுத்து வந்து இங்கு விதைத்து இருகின்றனர். + +வேர்கள், அடிமரம், கிளைகள், சிறுகிளைகள், இலைகள் என்பவை மரத்தின் பகுதிகளாகும். மரத் தண்டு, தாங்குவதற்கானதும், நீர், உணவு முதலியவற்றைக் கடத்துவதற்குமான மென்சவ்வுகளைக் (காழ் ("xylem") மற்றும் உரியம் ("phloem")) கொண்டது. மரம் (மூலப்பொருள்), காழ்க் கலங்களைக் கொண்டது, மரப்பட்டை முக்கியமாக உரியங்களால் ஆனது. மரம் வளரும்போது இது ஆண்டு வளையங்களை உருவாக்குகின்றது. மிதவெப்ப மண்டலக் ("temperate") காலநிலைப் பிரதேசங்களில் இந்த வளையங்களை எண்ணுவதன் மூலம் மரத்தின் வயதைக் கணிக்க முடியும். மரத்தின் வேர்கள் பெரும்பாலும் நிலத்திற்கடியிலேயே காணப்படும். இவை மரம் நிலத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள உதவுவதுடன், மண்ணிலிருந்து நீர் மற்றும் போஷாக்குப் பொருட்களை உறிஞ்சவும் பயன்படுகின்றன. தாவரங்கள் உணவைத் தயாரிப்பதற்குச் சூரிய ஒளி தேவை. இலைகளின் மூலமே இச் செயற்பாடு நடைபெறுகின்றது. மரங்கள் அடர்த்தியாகவுள்ள இடங்களில் ஒளிக்காக மற்றத் தாவரங்களுடன், போட்டியிடவேண்டியுள்ளது. இதற்கு உதவும்பொருட்டுத், தண்டுகள், இலைகளைக் கொண்டுள்ள கிளைகளை உயரத்தில் வைத்திருக்க உதவுகின்றன. பல தாவரங்களில், இலைகள் கூடிய அளவு சூரிய ஒளியைப் பெறத்தக்கவகையில், கிளைகளின் ஒழுங்கு அமைந்திருக்கும். + +எல்லா மரங்களும் முன் கூறிய பாகங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. உதாரணமாகப் பன்னங்கள் கிளைகளைக் கொண்டிருப்பதில்லை. வட அமெரிக்காவில் வளரும் சாகுவாரோ கக்டஸ்களுக்குச் செயற்பாடுள்ள இலைகள் இல்லை. மரப் பன்னங்கள் பட்டைகளைக் கொண்டிருப்பதில்லை. அவற்றின் பருமட்டான ���டிவத்தையும், அளவையும், அடிப்படையாக வைத்து இவையனைத்தும் மரங்களாகவே கொள்ளப்படுகின்றன. சில சமயம் அளவே முக்கியமாகக் கருதப்படுகின்றது. பல கிளைகள் அல்லது தண்டுகளுடன் கூடிய, மரத்தைப் போலவே வடிவமுடைய தாவரமொன்று, அளவில் மிகவும் சிறிதாக இருக்கக்கூடும். இது செடியென்று அழைக்கப்படுகின்றது. எனினும் மரத்துக்கும், செடிக்கும் இடையில் சரியான வேறுபடுத்தும் எல்லை கிடையாது. சிறியனவாக இருப்பதால் "பொன்சாய்"கள் மரங்கள் என்று கொள்ளப்படமுடியாது, எனினும் மரவகைகளின் வடிவத்தைக் கருதும்போது, தனியொரு specimen இன் வடிவத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மூங்கில்கள் மரங்களின் பல இயல்புகளைக் கொண்டிருந்தாலும், அவை மரங்களென அழைக்கப்படுவதில்லை. + +ஒன்றாக வளரும் சிறு கூட்டம் மரங்கள் தோப்பு எனப்படுகின்றன, பெரியதொரு நிலப்பரப்பில் மரங்கள் அடர்ந்திருக்கும்போது அது காடு எனப்படுகின்றது. பெரிய ஆனால் ஐதாக இருக்கும் மரங்களையும் இடையில் புல்வெளிகளையும் (வழக்கமாக மேய்ச்சலுக்கு விடப்பட்ட அல்லது எரிக்கப்பட்ட) கொண்ட பகுதி வெப்பப் புல்வெளி ("savanna") எனப்படுகின்றது. மேலும்.. + +மரங்கள் பல்வேறுபட்ட தாவரக் குடும்பங்களுள் அடங்குகின்றன. அதனால், இவை பல்வேறுவகையான இலை வகைகள், வடிவங்கள், பட்டைகள், பூக்கள், பழங்கள், முதலியவற்றைக் கொண்டவையாக உள்ளன. ஆரம்பகால மரங்கள், பெரிய காடுகளில் வளரும் மரப் பன்னங்களாக இருக்கக்கூடும். பின்னர் ஊசியிலை மரங்கள், கிங்க்கோக்கள், சைக்காட்டுகள் மற்றும் எனைய வித்துமூடியிலிகள் ("gymnosperm") போன்றவை தோன்றின. இன்று பெரும்பாலான மரங்கள் பூக்கும் தாவரங்களும், ஊசியிலைத் தாவரங்களுமாகும். கிழேயுள்ள பட்டியல் பெரிதும் அறியப்பட்ட மரங்களின் பெயர்களையும், அவை பொதுவாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் காட்டுகின்றது. + + + + + + + + +மரங்களின், விசேடமாக ஊசியிலை மரங்களின், வாழ்க்கை வட்டம், காடு வளர்ப்புத் துறையில், கணக்கெடுப்பு மற்றும் ஆவணப்படுத்தும் நோக்கங்களுக்காக பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கப்படுகின்றது: + +மரத்தின் விட்டம், அதன் அடியில், நிலத்தின் அதியுயர்ந்த புள்ளியிலிருந்து 1.3 – 1.5 மீட்டர் உயரத்தில் அளக்கப்படுகின்றது. 7 சமீ விட்ட வரையறை பொருளாதார ரீதியிலானது. இதுவே கடதாசி உற்பத்தி போன்றவற்றுக்காக விற்கப்படக்கூ���ிய அதி குறைந்த விட்டமாகும். 30 சமீ விட்டமே அரியப்படும் மரங்களுக்கான ஆகக்குறைந்த விட்டம். ஒவ்வொரு கட்டமும் may be uniquely perceptive to different pathogens and suitable for especially adapted arboreal animals. + +மரங்கள் வழக்கமாக பழங்கதைகளிலும், சமயத்திலும் முக்கிய குறியீடுகளாக இருந்துவருகின்றன. உதாரணமாக நோர்ஸ் பழங்கதைகளில்Yggdrasil, ஜெர்மானிக் பழங்கதைகளிலிருந்து பெறப்பட்ட நத்தார் மரம், யூதாயிசத்தினதும், கிறிஸ்துவத்தினதும் அறிவு மரம், பௌத்தத்தின் போதி மரம் மற்றும் இந்துப் பழங்கதைகள் கூறும் கற்பகதரு என்பவற்றைக் கூறலாம். + + + + + +நல்லூர் கந்தசுவாமி கோவில் + +நல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயில்களுள் முக்கியமானது. இது இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில், யாழ்ப்பாண நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவிலுள்ள நல்லூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. நல்லூர் 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டின் முற்பகுதிவரை இருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. இக்கோயிலின் தோற்றம் பற்றிச் சரியான தெளிவு இல்லையெனினும், யாழ்ப்பாண அரசு காலத்தில் மிகவும் முக்கியமான ஒரு கோயிலாக இருந்ததாக அறியப்படுகிறது. + +யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கூழங்கைச் சக்கரவர்த்தியின் அமைச்சனொருவனான புவனேகவாகு என்பவனால் இக் கோயில் கட்டுவிக்கப்பட்டதென யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இதற்கு ஆதாரமான பின்வரும் தனிப்பாடல், 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் கைலாய மாலை என்னும் நூலின் இறுதியில் காணப்படுகின்றது. + +ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட கோட்டே சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட புவனேகபாகு அல்லது "புவனேகபாகு" எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, செண்பகப் பெருமாள் என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். சமஸ்கிருதத்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது: + +திருவருள் பொருந்தி��� தெய்வயானையுடனும், வள்ளியம்மனுடனும் சேர்ந்திருக்கின்ற சுப்பிரமணியரின் திருவடிகளை வணங்குபவனும், மன்னர்களுக்கு மன்னனும், மிகுந்த செல்வங்களுடையவனும், இப் பரந்த பூமண்டலத்தில் எல்லாத்திசைகளிலும் புகழப்படுபவனும், மக்கள் தலைவனும், பதினாறு பெருந்தானங்களைச் செய்பவனும், சூரிய குலத்தில் உதித்தவனுமாகிய சிறீசங்கபோதி புவனேகவாகு... என்பது இதன் பொருள். + +முன்னரே சிறியதாக இருந்த கோயிலைத் தனது ஆட்சிக்காலத்தில் புவனேகவாகு பெருப்பித்துக் கட்டியிருக்கக் கூடும் என்பதே பொருத்தம் என்பது வேறுசிலர் கருத்து. + +உண்மையில் நல்லூர் இப்போது உள்ள அமைப்பானது முன்றாவது கோயில் கட்டுமானம் ஆகும். இந்த 3 வது கோயிலின் அமைப்பில் அது வரை இருந்த பழைய ஆலயத்தின் எந்த கட்டுமானங்களும் சமந்தப்படாத புதிய கட்டுமானம் தான் இப்போதுள்ள நல்லூர்கந்தன் ஆலயம் அகும்.    + +யாழ்ப்பாண அரசின் இறுதிக்காலத்தில் நல்லூரிலிருந்த மிகப்பெரிய கோவில் இதுவேயென்பது போத்துக்கீசருடைய குறிப்புக்களிலிருந்து தெரியவருகிறது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசத் தளபதியான பிலிப்பே டி ஒலிவேரா, 1620ல் அரசின் தலை நகரத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றியபோது நல்லூர்க் கோயிலை இடித்துத் தரைமட்டமாக்கும்படி உத்தரவிட்டான். இதிலிருந்து பெறப்பட்ட கற்கள் யாழ்ப்பாணத்தில் புதிய கோட்டை கட்டுவதில் பயன்பட்டதாகத் தெரிகின்றது. இது இருந்த இடத்தில் போத்துக்கீசர் சிறிய கத்தோலிக்க தேவாலயமொன்றை அமைத்ததாகத் தெரிகிறது. பின்னர் ஒல்லாந்தர் இதனைத் தாங்கள் சார்ந்த புரட்டஸ்தாந்த கிறிஸ்தவ தேவாலயமாக மாற்றினார்கள். இன்றும் இவ்விடத்தில் பிற்காலத்தில் பெரிதாகத் திருத்தியமைக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயமே காணப்படுகின்றது. + +ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தின் (1658–1798) இறுதி ஆண்டுகளில் இந்துக் கோயில்கள் அமைப்பது தொடர்பாக ஆட்சியாளர்களின் இறுக்கம் ஓரளவு தளர்ந்தபோது, நல்லூர் கந்தசுவாமி கோயில் மீள அமைக்கப்பட்டது. முன்னைய இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் இருந்தபடியால் இன்னொரு இடத்தில் கோயிலை அமைத்தார்கள். + +மடாலயம் போல் காட்சியளித்துக் கொண்டிருந்த இவ்வாலயத்தை, ஆகமம் சார்ந்த கிரியை முறைக்கும், சிற்ப சாத்திர விதிக்கமைந்த கட்டட முறைக்கும் மாற்றியமைத்து, இன்றைய நிலைக்குக் கொ���்டுவர வித்திட்டவர் ஆறுமுக நாவலர் ஆவார். அவரைத் தொடர்ந்து, அவரது மாணவர்கள் இவ்வாலய வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார்கள். + +இவ்வாலயத்தின் கர்ப்பக்கிருகத்தில் சிலாவிக்கிருகத்திற்குப் பதிலாக வேல் அமைக்கப்பட்டுள்ளது. இதனைச் சுற்றி பிள்ளையார் முதலான பரிவாரத் தெய்வங்கள் அமைக்கப்பட்டுள்ளன. + +இவ்வாலயம் கிழக்கிலும், தெற்கிலும் வாசல்களைக் கொண்டுள்ளது. இவற்றின் மேல் பெருங்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. + +ஆலயத்தின் தெற்குப் புறத்தில் உள்ள தீர்த்தக்கேணி நன்கு திட்டமிடப்பட்டு, படிக்கட்டுகளும் மண்டபங்களும் கொண்டதாய் அமைக்கப்பட்டுள்ளது. முருகனின் மூர்த்தங்களில் ஒன்றான தண்டாயுதபாணிக்கு அங்கு சிறு ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. + +ஆலயத்தின் நான்கு பக்கங்களிலும் மடாலயங்கள் உள்ளன. + +இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன. + +தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி பூஜை இடம்பெறுகின்றமையும், மாலையில் பள்ளியறைப் பூஜை இடம்பெறுகின்றமையும் இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்றாகும். திருவிழா காலங்களில் மட்டுமல்லாமல் தினமும் மாலையில் முருகப் பெருமானை ஊஞ்சற் பாட்டுப்பாடி, அழகிய சிறு மஞ்சத்தில் ஏற்றி பள்ளியறையில் துயில்கொள்ளச் செய்வதும், மறு நாள் அதிகாலையில் திருநல்லூர்த் திருப்பள்ளியெழுச்சி பாடி, முருகனைத் துயிலெழுப்பி அதே சிறு மஞ்சத்தில் அழைத்து வந்து மூலஸ்தானத்தில் அமர்த்துவதும் சிறப்பான மரபாகும். + +இங்கு, ஆவணி அமாவாசையைத் தீர்த்தமாகக் கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. ஆடி அமாவாசையின் ஆறாம் நாள் கொடியேற்றத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாகிறது. + +மகோற்சவ காலங்களில் மெய்யடியார்கள் காவடியாட்டம்|காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அடியழித்தல், முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். + +இக்காலத்தில் புராண படனம் செய்தல், சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன. + + + + + + + + + + + + + + + +இசையமைப்பாளர்களின் பட���டியல் + +இந்திய மொழித் திரைப்படங்களில், பாடல்களின் பங்கு இன்றியமையாத ஒன்று. அதுபோலத் தான் அப்பாடல்களை உருவாக்கும் இசையமைப்பாளர்களின் பங்கும். இவர்களுள் ஒருசிலர் சிறந்த பாடகர்களாகவும் விளங்குகின்றனர். + + + + +இந்துக் கோயில்களின் பட்டியல் + +இந்துக் கோயில்கள் + + + +மலையாளன் காடு ஐயனார் அராலி கிழக்கு யாழ்ப்பாணம் + + + + + + +கைலாய மாலை + +கைலாயமாலை என்பது யாழ்ப்பாண வரலாற்று ஆய்வாளர்கள் முதல் நூலாகக் கொள்ளும் நூல்களில் ஒன்றாகும். ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்ட காலத்தில், யாழ்ப்பாண வரலாற்று நூலான யாழ்ப்பாண வைபவமாலையை எழுதிய மயில்வாகனப் புலவர் தான் பயன்படுத்திய முதனூல்களில் ஒன்றாகக் கைலாய மாலையையும் குறிப்பிட்டுள்ளார். இது யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் உறையூரைச் சேர்ந்த செந்தியப்பன் என்பவருடைய மகனான முத்துராசக் கவிராசர் என்பவரால் பாடப்பட்டது. நல்லூர் கைலாசநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள கைலாசநாதப் பெருமான் மேல் பாடப்பட்டதாகத் தோன்றினும், யாழ்ப்பாண அரசன் செகராசசேகரனின் புகழ் பாடுவதற்கான நூலே இதுவென்று கருதப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்துக்குமுன் எழுதப்பட்டு இன்றும் கிடைக்ககூடிய மிகச் சில நூல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஆறுமுக நாவலரின் தமையனார் மகன் த. கைலாசபிள்ளை அவர்களால் அச்சிடப்பட்டது. + +யாழ்ப்பாணத்தில் ஐரோப்பியர் ஆட்சி தொடங்குவதற்கு முன்பே இந்நூல் எழுதப்பட்டது என்பது யாழ்ப்பாண வரலாற்றாளர்களின் பொதுக் கருத்தாக இருந்தாலும், துல்லியமாக இதன் காலத்தை அறுதியிட்டுச் சொல்வதற்கான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை. + +போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னர், 1604 ஆம் ஆண்டுக்கும் 1619 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டு, இந்நூலும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது இராசநாயக முதலியாரின் கருத்து. காசி நகரத்துக் கங்காதரரை அனுப்பும்படி சேதுபதிக்குச் செய்தி அனுப்பிய தகவல் நூலில் காணப்படுகிறது. நாயக்க அரசன் முத்துக்கிருட்டின நாயக்கர், 1604 ஆம் ஆண்டில், உடையான் சேதுபதி எனப்படும் சடையப்ப தேவரை முதன் முதலாக இரா��நாதபுரத்துக்குத் தலைவராக நியமித்தார் என்பதால், இந்நூல் அந்த ஆண்டுக்குப் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பது அவரது வாதம். + +ஆனாலும், சேதுபதி என்னும் விருதுப் பெயர் நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவும், 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலேயே சேதுபதிகளுக்கும், யாழ்ப்பாணத்து அரசர்களுக்கும் தொடர்புகள் இருந்தன என்றும் பிற அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர். கிபி 1260 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்திலேயே இந்நூல் எழுந்திருக்கலாம் என்று சி. பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார். + +இந்நூல் செய்யுள் வடிவில் அமைந்தது. வெண்பா வடிவில் அமைந்துள்ள காப்புச் செய்யுள் நீங்கலாக, இரண்டிரண்டு அடிகளால் ஆன 310 கண்ணிகளால் இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. பாடுபொருளையும், யாப்பிலக்கணத்தையும் பொறுத்தவரை இந்நூல் மெய்க்கீர்த்திமாலை, உலா ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் கலவையாக அமைந்துள்ளது. + +கைலாயமாலையை அதன் உள்ளடக்க அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதற் கண்ணி தொடக்கம் 46 ஆவது கண்ணி வரையிலான முதற் பகுதி, செகராசசேகர மன்னனுக்கு முற்பட்ட கால நிகழ்வுகளைக் கூறுகிறது. கதிரமலையில் இருந்து அரசாண்ட வாலசிங்கன், நரசிங்கராசன் ஆகிய மன்னர்கள் குறித்தும், +நரசிங்கராசனின் முன் யாழ்ப்பாணன் ஒருவன் யாழ் இசைத்து நகரொன்றைப் பரிசாகப் பெற்றது குறித்தும், அதனால் அந்நகர் யாழ்ப்பாணம் எனப் பெயர் பெற்றது குறித்தும், அந்நகரை யாழ்ப்பாணன் அரசாண்டு இறந்ததன் பின்னர் அது அரசனின்றித் தளம்பியது குறித்ததுமான செய்திகள் இப்பகுதியில் சுருக்கமாக இடம்பெறுகின்றன. 47 ஆம் கண்ணியிலிருந்து 211 ஆம் கண்ணி வரையிலான இரண்டாம் பகுதியில் செகராசசேகரனின் பெருமைகள், அவனை யாழ்ப்பாணத்தை ஆள அழைத்து வந்தமை, நல்லூர் நகரத்தை அமைத்து ஆட்சி செய்தது ஆகிய விடயங்கள் கூறப்படுகின்றன. இதற்குப் பிற்பட்ட மூன்றாம் பகுதி, செகராசசேகர மன்னன் கைலாயநாதர் கோயிலைக் கட்டிக் குடமுழுக்குச் செய்வித்தது தொடர்பான விடயங்களை உள்ளடக்குகிறது. + + + + + +வண்ணார்பண்ணை வைத்தீசுவரர் ஆலயம் + +யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரர் ஆலயம் 18 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வைத்திலி��்கம் செட்டியார் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்துத் தமிழரசர் காலத்துக்குப் பின், இந்துக் கோயில்கள் அனைத்தும் போத்துக்கீசரால் இடித்துத் தள்ளப்பட்டபின்னர், சுமார் 160 ஆண்டுகள் கழித்துக் கட்டப்பட்ட முதல் கோயில்களில் இதுவும் ஒன்று. இது வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் எனவும் பரவலாக அறியப்படுகின்றது. + +இக்கோயில், காங்கேசந்துறை வீதியில், தற்கால யாழ்ப்பாண நகரின் மத்தியிலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்துக்குள்ளேயே அமைந்துள்ளது. + +யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில், சோழ நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் கோபாலச் செட்டியார். இவர் அங்கே வியாபாரம் செய்து வந்தார். இவ்வியாபாரம் மூலம் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த ஒல்லாந்த தேசாதிபதியின் தொடர்பு இவருக்குக் கிடைத்தது. இவருடைய மகன் வைத்திலிங்கன். இவர் சிறுவனாக இருந்தபோது இவரைக்கண்ட தேசாதிபதியின் மனைவி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் தேசாதிபதியின் மனைவி அவரைத் தம் மாளிகையிலேயே வளர்த்து வந்தார். வளர்ந்து பெரியவனான பின்னர், தேசாதிபதியின் பரிந்துரையின்படி மூன்று முறைகள் முத்துக்குளிக்கும் குத்தகையைப் பெற்றுத் திறம்பட நடத்தி நல்ல இலாபம் பெற்றார். + +இவ்வாறு சம்பாதித்த செல்வத்தின் ஒரு பகுதியை, இவருடைய நண்பராயிருந்த கூழங்கைத் தம்பிரான் என்பவரின் ஆலோசனைப்படி, சிவபெருமானுக்குக் கோயிலமைப்பதில் செலவிட எண்ணினார். 1787 ல் இக்கோயில் அமைந்திருக்கும் நிலத்தை வாங்கி கோயில் திருப்பணியைத் தொடங்கினார். 1790 ஆம் ஆண்டில் கோயில் கட்டிடப்பணி நிறைவேற்றப்பட்டு வைத்தீஸ்வரப் பெருமானையும், தையல்நாயகி அம்மனையும் பிரதிட்டை செய்து வைத்தார். + +யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலிலேயே ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் தமது முதலாவது பிரசங்கத்தை 31 டிசம்பர் 1847 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். + + + + +சிந்துவெளி நாகரிகம் + +சிந்துவெளி நாகரிகம் ("Indus Valley Civilisation") மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரி���ம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை. + +சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும், சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன. + +தற்போது ஹரப்பா நாகரிகம் என்று அறியப்படுகின்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம், முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் அக்காலத்து வேறெந்த நாகரிகத்திலும் பார்க்க அளவிற் பெரிதாக சுமார் 13 இலட்சம் சதுர கிலோமீட்டர் (5 இலட்சம் சதுர மைல்கள்) பரப்பளவு கொண்டதாக வளர்ந்திருந்தது. இங்கே சிறிதும் பெரிதுமாக 200 க்கும் மேற்பட்ட ஊர்களும், 6 மிகப் பெரிய நகரங்களும் இருந்தன. இந்த நகரங்கள், குடியேற்றங்களுடைய ஒரு தன்மைத்தான அமைப்பு இவையனைத்தும் ஒரு உயர் வளர்ச்சி நிலையில் சமூக ஒருங்கிணைப்பு வல்லமை கொண்ட ஒரே நிர்வாகத்திக் கீழ் அமைந்திருந்தமையைக் காட்டுகின்றது. + +முறையான ஹரப்பா பண்பாடு கி.மு 2600 இலிருந்து 1900 வரை நிலவியது. இதன் முன் நிலவிய மற்றும் பின் நிலவிய பண்பாடுகளான முந்திய மற்றும் பிந்திய ஹரப்பாப் பண்பாடுகளையும் சேர்த்துப் பார்க்கும்போது, இது, கி.மு 33 – 14 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து ஆரம்பித்ததாகக் கருதலாம். சிந்துவெளிப் பண்பாட்டின் காலப் பகுப்பு தொடர்பில் இரண்டுவகையான பகுப்புக உள்ளன. ஒன்று "சகாப்தங்கள்" (Eras) மற்றது "கட்டங்கள்" (Phases). + +சிந்து வெளிப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் என்பது பற்றி உறுதியாக அறிந்து கொள்வதற்கான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. ஆனாலும், ஆய்வாளர்கள் பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற கருத்துக்களை முன் வைத்து வாதிட்டு வருகின்றனர். சிந்து வெளி பண்பாட்டுக்கு உரியவர்கள் திராவிட இனத்தவர்களே என ஒரு சாராரும், இல்லை ஆரியரே என இன்னொரு பகுதியினரும் கூற வேறு பலர் பலவிதமான கலப்பினக் கொள்கைகளையும் முன் வைத்துள்ளனர். + +சிந்துவெளி நாகரிகத்தின் பொருளாதாரம் வணிகத்திலேயே பெரும்பாலும் தங்கியிருந்தது எனலாம். போக்குவரத்துத் தொழில்நுட்பத்தில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டமை இதற்குக் காரணமாகும். சிந்துவெளி நாகரிக மக்களே சக்கரத்தை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கக்கூடும். இன்று தெற்காசியா முழுவதும் காணக்கூடிய மாட்டு வண்டிகளும், படகுகளும் அன்று பயன்படுத்தப்பட்டிருக்கலாம். படகுகள் பெரும்பாலும் சிறிய தட்டையான வடிவில் காணப்பட்டதோடு, இவை பாய்மரம் மூலம் செயற்படுத்தப்பட்டிருக்கலாம். தொல்பொருளியலாளர்கள் மேற்கு இந்தியாவின் குஜராத்தின் கடற்கரை நகரான லோத்தலில் பாரிய ஆழமான கால்வாயொன்றைக் கண்டுபிடித்துள்ளனர். இது ஒரு கப்பற்துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரிய கால்வாய் வலையமைப்பொன்றை H. P. பிராங்போர்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். + +4300–3200 BCEக்கு இடைப்பட்ட கல்கோலிதிக் (செப்புக் காலம்) காலத்தில், சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செரமிக் பொருட்கள் தெற்கு துர்க்மெனிஸ்தானிலும், வடக்கு ஈரானிலும் காணப்பட்ட செரமிக் பாண்டங்களுடன் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் சிந்துவெளி மக்கள் அப்பகுதிகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. முந்திய ஹரப்பாக் காலத்தில் (கிட்டத்தட்ட 3200–2600 BCE) மட்பாண்டங்கள், முத்திரைகள், உருவங்கள், அணிகலன்கள் போன்றவை, மத்திய ஆசியா மற்றும் ஈரானியப் பீடபூமிப் பிரதேசங்களுடன் சிறப்பான முறையில் வணிகம் நடைபெற்றதை எடுத்துக்காட்டுகின்றன. + +சிந்துவெளி நாகரிக கலைப்படைப்புகளின் பரவலைக் கொண்டு மதிப்பிடும் போது, வணிகத் தொடர்புகள் ஒரு பரந்த பிரதேசத்தில் நடைபெற்றிருப்பதைக் காணமுடிகிறது. இப் பகுதிகள், ஆப்கானிஸ்தானின் பகுதிகள், பாரசீகத்தின் கடற்கரைப் பகுதிகள், வடக்கு மற்றும் மேற்கு இந்தியா மற்றும் மெசொப்பொத்தேமியா ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன. + +வணிகத் தொடர்புகள் கிரீட் மற்றும் எகிப்து வரை பரந்திருந்தமைக்கான சில சான்றுகளும் உள்ளன. + +நடு ஹரப்பாக் காலத்திலேயே, ஹரப்பா மற்றும் மெசொப்பொத்தேமிய நாகரிகங்களுக்கிடையில் பாரிய கடல்வழி வணிக நடவடிக்கைகள் காணப்பட்டுள்ளன. இவ் வணிக நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை "தில்முன்னிலுள்ள நடுத்தர வணிகர்கள்" முன்னெடுத்தனர் (பாரசீக வளைகுடாவிலுள்ள இன்றைய பக்ரைன் மற்றும் பைலகா பகுதிகள்). பலகையினால் கட்டப்பட்ட, தனிக் கொடிமரத்தில் கட்டப்பட்ட பாய்மரப் படகுகள் மூலமாக இவ்வாறான நீண்ட தூர கடல் வணிகம் சாத்தியமானது. + +பாகிஸ்தானிலுள்ள சொட்காஜென்-டோர் (ஜிவானிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் டாஸ்ட் நதி), சொக்டா கொஹ் (பஸ்னிக்கு வடக்கேயுள்ள அஸ்ட்ரைட் ஷாடி நதி) மற்றும் பாலாகோட் (சொன்மியானிக்கு அருகிலுள்ளது) போன்ற கரையோரக் குடியிருப்புக்கள் மற்றும் இந்தியாவிலுள்ள லோத்தல் ஆகியன, ஹரப்பாவின் வணிக நிலையங்களாக இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. கடலுக்கு அருகிலுள்ள கழிமுகங்களில் அமைந்துள்ள ஆழமற்ற துறைமுகங்கள், மெசொப்பொத்தேமிய நகரங்களுடன் சிறப்பான வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியுள்ளன. + +சமயச் சடங்குகளோடு தொடர்புடையவை அல்லது வணக்கத் தலங்கள் என்று சொல்லக்கூடிய கட்டிடப் பகுதிகள் எதுவும் தொல்பொருளாய்வில் அகப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. எனினும், சிறிய உருவச் சிலைகள், மற்றும் முத்திரைகளில் காணப்படுகின்ற உருவங்களையும், அவற்றிலே உருவகப்படுத்தப்பட்டுள்ள காட்சிகளையும் வைத்துச் சமயத் தொடர்புள்ள கருத்துருக்களையும் ஆய்வாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக இந்து சமயத்தில் காணப்படும் பெண் தெய்வ வழிபாடு, இலிங்க வழிபாடு, "பசுபதி" பற்றிய எண்ணக்கரு, பலி பீடங்கள் போன்றவற்றின் அடைப்படைகளுக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவற்றை வைத்துத் தற்கால இந்து சமயத்தின் கூறுகள் பல சிந்துவெளிக் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்கக் கூடும் எனக் கருதப் படுகின்றது. + +சிந்து வெளி மக்கள் பேசிய மொழி அல்லது மொழிகள் பற்றி உறுதியான முடிவுக்கு வரக்கூடிய தகவல்கள் இதுவரை வெளிப்படவில்லை. இங்கு பேசப்பட்ட மொழியின் எழுத்து வடிவ���்கள் எனக் கருதப்படும் குறியீட்டு வடிவங்கள் சிறிய அளவுள்ள முத்திரைகளின் வடிவில் ஏராளமாகக் கிடைத்துள்ளது தவிர வேறு சான்றுகள் எதுவும் கிடையாது. இவ்வெழுத்துக்களை வாசிக்கும் முயற்சிகளில் பல பத்தாண்டுகளாக ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் இன்னும் வெற்றி பெறாதது ஒரு புறமிருக்க இவை எழுத்துக்களே அல்ல வெறும் குறியீட்டு அடையாளங்களே என அண்மையில் சில ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள். எனினும் இது பற்றிய வாதங்கள் தொடர்ந்து தான் வருகின்றன. இது சிந்துச் சமவெளி மக்கள் பேசிய மொழிக்குரிய எழுத்துக்களே என நம்பும் ஆய்வாளர்களும், இம்மொழி எந்த மொழியினத்தைச் சார்ந்தது என்பது குறித்து ஒத்த கருத்துக்கு வரமுடியாமல் உள்ளனர். இன்று சிந்துவெளியைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதிலும் பெரும்பான்மையாகப் பேசப்படுவது இந்தோ-ஐரோப்பிய மொழிகளாகும். எனினும், இம்மொழி பேசுவோர், சிந்துவெளி நாகரீகம் வீழ்ச்சியடைந்த காலப் பகுதியிலேயே இந்தியாவுக்குள் வந்ததாகக் கருதப்படுவதால், இது இந்தோ-ஐரோப்பிய இனத்தைச் சாராத மொழியென்றே பெரும்பாலான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சிறப்பாக, இது திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்ற கருத்துக்குப் பல ஆய்வாளரிடையே ஆதரவு உண்டு. இது முண்டா மொழியாக இருக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். + +அண்மைக் காலத்தில், வட இந்திய ஆய்வாளர்கள் பலர், சிந்துவெளி மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழியே என நிறுவ முயன்று வருகிறார்கள். சிறப்பாக, இந்து தேசியவாதிகள் பலர் இதன் மீது தீவிர கருத்துக்களைக் கொண்டிருப்பதால், இது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், அரசியல் பின்னணி கொண்டவையாகவும், உணர்வு சார்ந்தவைவையாகவும் மாறிவருகின்றன. + +சிந்துவெளி நாகரீகத்தில், சிக்கல் தன்மை வாய்ந்த, உயர்நிலை நகர்சார் பண்பாடு இருந்தது. இங்கே காணப்படுகின்ற நகர அமைப்பின் தன்மை, சுகாதாரத்துக்கு, முக்கியத்துவம் கொடுக்கின்ற உள்ளூராட்சி அமைப்பு மற்றும் நகரத் திட்டமிடல் தொடர்பான அறிவு இந் நாகரீக மக்களிடையே நிலவியமையைக் காட்டுகின்றது. மொஹெஞ்சதாரோ, ஹரப்பா போன்ற முக்கிய நகரங்களின் தெருக்கள், முறையான வலைப்பின்னல் அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன. சத்தம், துர்நாற்றம், கள்வர் தொல்லை போன்றவற்றிலிருந்து பாதுகாக்கும் விதத்தில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. + +ஹரப்பா, மொஹெஞ்சதாரோ, மற்றும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ராக்கிகர்ஹி ஆகியவற்றில் காணப்படுகின்ற சுகாதார அமைப்பு முறைமைகள், உலகிலேயே முதல் நகர்சார் சுகாதார அமைப்பு முறைமைகளாகும். நகரங்களில், வீடுகள் தனியாகவோ அல்லது வேறு அயல் வீடுகளுடன் கூட்டாகவோ கிணறுகளில் இருந்து நீர் பெற்றன. குளிப்பதற்குத் தனியான அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது. வீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன. + +பண்டைக்காலச் சிந்து வெளியின் செல்வாக்குக்கு உட்பட்ட எல்லா நகரப் பகுதிகளிலும் காணப்பட்ட கழிவு நீரகற்றல் மற்றும் வடிகால் அமைப்பு முறைகள், சமகால மத்திய கிழக்கு நகரங்களில் காணப்பட்டவற்றிலும் திறன் மிக்கவையாக இருந்தது மட்டுமன்றித் தற்கால இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் உள்ள சில பகுதிகளில் காணப்படுபவற்றிலும் சிறந்தவையாகவும் காணப்படன. + +சிந்துவெளி நாகரீகக்காலக் கட்டிடக்கலையின் தரம் பற்றி, அங்கே காணப்படுகின்ற இறங்கு தளங்கள், தானிய சேமிப்புக் கிடங்குகள், களஞ்சியத் தொகுதிகள், செங்கற் கட்டுமான மேடைகள் மற்றும் பாதுகாப்புச் சுவர்கள் போன்ற இன்னோரன்ன அமைப்புக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பெரிய அளவிலான நகர் பாதுகாப்புக் கோட்டைகள், அக்காலத்து மெசொப்பொத்தேமியாவில் காணப்பட்ட பெரும்பாலான ஸிகரெட்டுக்களிலும் பெரியவை. + +இவ்வாறான கோட்டைகள் கட்டப்பட்டதற்கான காரணம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. மெசொப்பொத்தேமியா, எகிப்து போன்ற, இப் பண்பாட்டின் சமகாலப் பண்பாடுகளில் காணப்படுவதற்கு முரணாக, இங்கே பிரம்மாண்டமான கட்டுமானச் சின்னங்கள் (monumental structures) எதுவும் காணப்படவில்லை. இங்கே, அரண்மனைகளோ, கோயில்களோ இருந்ததற்கான முடிவான சான்றுகளோ, அரசர், படைகள், சமயக் குருமார் போன்றவர்கள் பற்றிய தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. ஒரு நகரத்தில், பொதுக் குளியல் இடம் எனக் கருதப்படுகின்ற, சிறப்பாகக் கட்டப்பட்ட குளியல் தடாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோட்டைகள் மதிலால் சூழப்பட்டிருந்தபோதும், இவை பாதுகாப்புக் காரணங்களுக்காகக் கட்���ப்பட்டவையா என்பதில் தெளிவு இல்லை. இவை வெள்ள நீர் உட்புகாது தடுப்பதற்காகக் கட்டப்பட்டவையாகவும் இருக்கலாம். + +பெரும்பாலான நகரவாசிகள், வணிகராகவும், கைவினைஞராகவும் இருந்ததாகத் தெரிகிறது. முத்திரைகள், மணிகள் (beads) மற்றும் பலவகைப் பொருட்களைச் செய்வதற்காக தொலைதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மூலப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. + +சில வீடுகள் ஏனையவற்றிலும் பெரியவையாகக் காணப்பட்டபோதிலும், பொதுவாக இவற்றின் அமைப்பு, சிந்துவெளி நகரச் சமுதாயம் பெருமளவுக்கு ஒரு சமத்துவச் சமுதாய அமைப்பைக் கொண்டு விளங்கியமையையே காட்டுகிறது. + +கி.மு 1800 அளவில் இப் பண்பாட்டின் படிப்படியான வீழ்ச்சிக்கான அறிகுறிகள் தென்படுகிறது. கி.மு 1700 இல் பெரும்பாலான நகரங்கள் கைவிடப்பட்டுவிட்டன. ஆனாலும்,சிந்துவெளிப் பண்பாடு சடுதியாக மறைந்துவிடவில்லை. இப் பண்பாட்டின் பல கூறுகள் பிற்காலப் பண்பாடுகளிலும் காணப்படுகின்றன. நடப்புத் தொல்லியல் தரவுகள், பிந்திய ஹரப்பாப் பண்பாடு என்று குறிக்கப்படுகின்ற பொருள்சார் பண்பாடு, கி.மு 1000 – 900 வரையிலுமாவது தொடர்ந்திருக்கக்கூடும் என்று காட்டுகின்றன. + +சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சிக்குக் காலநிலை மாற்றம் தொடர்பான இயற்கைக் காரணங்கள் இருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. .சிந்துவெளியின் காலநிலை கி.மு 1800 இலிருந்து, குறிப்பிடத் தக்க அளவு குளிரானதாகவும், வறண்டதாகவும் மாறியது. காக்கர் ஹக்ரா ஆற்று (Ghaggar Hakra river) முறைமையில் குறிப்பிடத்தக்க பகுதி இல்லாமல் போனதும் ஒரு முக்கியமான காரணியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. எனினும் மேற்படி எடுகோள் பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. + +ஆரியர் முதலாக, ஆப்கானியர், துருக்கியர், முகலாயர் போன்றோர் இந்து குஷ் பகுதியில் உள்ள கணவாய்கள் வழியாகத் தென்னாசியாவுக்குள் ஊடுருவிய பாதையில், இப் பகுதி உள்ளது. இதை அடிப்படையாக வைத்தே சிந்து வெளிப் பண்பாட்டின் வீழ்ச்சி மற்றும் ஆரியர் வட இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய-ஆரிய இடப்பெயர்வு தொடர்பான எடுகோள்கள் ஆராயப்பட்டன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இது ஒரு "ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை"யாக முன்வைக்கப்பட்டது. இதன் வீழ்ச்சிக்காலம் குறித்த தொல்லியல் சான்றுகளும், ஆரியர் உள்வரவு தொடர்பான கணிப்புக்களும் பொருந்தி வந்தது இக் கோட்பாட்டுக்கு ஒரு சான்றாக அமைந்தது. அத்துடன் போரில் இறந்த அடையாளங்களுடனான பலரின் புதை குழிகள் மேற்படைகளில் காணப்பட்டதும் இக் கோட்பாட்டிற்கு வலு சேர்த்தது. தொல்லியலாளரான மார்ட்டிமர் வீலர் (Mortimer Wheeler) இது பற்றிக் குறிப்பிட்டபோது, "இந்தோ-ஆரிய போர்க் கடவுளான இந்திரனே, அழிவுக்காகக் "குற்றம் சாட்டப்படுகிறான்"" என்றார். இன்று இக் கொள்கைக்கு மாற்றாக வேறு பல கொள்கைகளும் நிலவுகின்றன. ஆரியர் இந்தியாவுக்குள் வெளியிலிருந்து வரவில்லையென்றும், இந்தியாவே அவர்களது தாயகம் என்றும், இந்தோ ஐரோப்பிய மொழிகள் தோன்றியது இந்தியாவிலேயே என்றும், சில இந்திய ஆய்வாளர்கள், குறிப்பாக வட இந்திய ஆய்வாளர்கள் வாதாடி வருகிறார்கள். சிந்துவெளி நாகரீகம் ஆரியர்களுடையது என்பதும் இவர்களது வாதம். எனினும் இவ்வாதங்களுக்கு அனைத்துலக அளவில் அறிஞர்கள் மத்தியில் வரவேற்புப் பெறவில்லை. + +நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து. இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும். + +தமிழ்நாட்டின் காவிரிக் கழிமுகப் பகுதியில் சமீபத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் துறையின் அகழ்வாய்வின்போது பத்துக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த முதுமக்கள் தாழிகளில் காணப்பட்ட சில குறியீடுகள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகக் குறியீடுகளைப் போன்றே இருப்பதாக, பழங்கால எழுத்துக்களை ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தெரிவித்திருக்கிறார். + +சிந்து சமவெளி நாகரிகம் உள்ள நகரான மொகஞ்சதாரோவில் கிடைத்த முதுகைக் காட்டி உட்கார்ந்த நிலையிலான விலங்கு, கொக்கி, நாற்சந்தி, குவளை வடிவ முத்திரைகள் ஆய்வு செய்யப்பட்டன.இவற்றில் விலங்கு வடிவம் பண்டமாற்று முறை, கொக்கி வடிவம் வாங்குதல், எடுத்துக் கொள்வது, நாற்சந்தி வடிவம் தெருக்கள் அடங்கிய நகரம், கிராமம் என்பதை உணர்த்துகிறது. குவளை வடிவம் சிந்துவெளியில் அதிகம் காணப��படுகிறது. சொல்லின் இறுதியில் காணப்படும் இந்த வடிவம் அன், நகரத் தலைவன், பாண்டி, பாண்டியன் போன்றவற்றைக் குறிக்கிறது. இதற்கு இணையான வார்த்தைகள் பழந்தமிழிலும் உள்ளன. இந்த 4 எழுத்துகளையும் சேர்த்து வாசிக்கும்போது நகர வணிகன் என்ற வாக்கியம் கிடைக்கிறது. இதை, மாற செழிய வழுதிபாண்டியன் எனவும் வாசிக்க முடியும். + +இதையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது சிந்து சமவெளியில் திராவிட குடும்ப மொழியே பேசப்பட்டிருக்க வேண்டும் என்று கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருதுகிறார். +சென்னை அருங்காட்சியகத்தில் இந்த நாகரீக கால போருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. + + + + + + + + + + + +வேதம் + +வேதங்கள் என்பவை பொதுவாக இன்று இந்து சமயம் என்று அறியப்படும் சமயத்திலுள்ள அடிப்படையான நூல்களில் சிலவாகும். காலத்தால் முற்பட்டதும் ஆகும். வேதம் என்னும் சொல் பிற மதத்தாரும் தங்கள் சமயத்தின் முதன்மையான நூல்களுக்குப் பயன்படுத்துகின்றனர்.கி.மு 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்துக்களின் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தது என்று பண்டித பால கங்காதர திலகர் நிரூபித்துள்ளதாக சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டுள்ளார். + +இந்து மதத்தில், வேதம் என்ற சொல் "வித்" என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. "வித்" என்றால் சமசுகிருதத்தில் அறிதல் என்று பொருளாகும். வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும். + +இந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண +வேதம் ஆகியவை தான் அடிப்படையில் வேதங்களாகக் கருதப்பட்டன. அதர்வணத்தை தீமை என்று கருதினார்கள். பிற்காலத்தில் தான் அது நான்காவது வேதமாகச் சேர்க்கப்பட்டது. இவை தமிழில் "நான்மறை" என்றும் கூறப்படும். என்றாலும் தமிழில் "நான்மறை" என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). சமசுக்கிருத வேதங்கள்: +என்பனவாகும். வேதங்கள் நான்கு என வகுத்தவர் வியாசர். வேதங்களை "சுருதி, மறை" எனவும் கூறுவர். + +வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. அவையானவை: + +வேதங்களில் பல்வேறு கடவுள்களைப் புகழ்ந்து இந்த பாடல்கள் புனையப்பட்டிருக்கின்றன. சடங்குகளின் போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜூர் வேதத்தில் குற��ப்பிடப்படுகின்றன. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும். + +இவற்றுள் காலத்தால் முற்பட்டது ரிக் வேதமாகும். இது இந்தியாவில், கி.மு. 1500விற்கு முன் உருவாகியிருக்கக்கூடுமெனக் கருதப்படுகின்றது. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கிவந்துள்ளன. ஏறத்தாழ கி.மு 300 ஆம் ஆண்டளவில் எழுத்துவடிவம் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது என்றாலும் வாய்வழியாகவே தலைமுறை தலைமுறையாக நிலைப்பெற்று வந்துள்ளது. விசய நகரப் பேரரசை ஆண்ட முதலாம் ஹரிஹரர் காலத்தில் வாழ்ந்த சாயணாச்சாரியர் (सायण) என்னும் 14 ஆவது நூற்றாண்டு காலத்து வேத அறிஞர், வேதத்தின் பொருளை விளக்கி எழுதிய, வேதார்த்த பிரகாசா (Vedartha Prakasha) என்னும் நூலே முதன்முதலாக எழுத்து வடிவில் கிடைக்கும் வேதங்களாகும். + +இதன் சமய முக்கியத்துவம் தவிர, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் இதற்கு முக்கியத்துவம் உண்டு. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன. + +கி.பி. 14 ஆவது நூறாண்டில் வாழ்ந்த சாயனர் (சாயனாச்சார்யர்) வேதத்திற்கு விரிவான விளக்கம் எழுதியுள்ளார். இருக்கு வேதத்தில் 1028 சுலோகங்கள் உள்ளன (10522 மந்திர வரிகள்), மற்றும் அதற்குரிய பிராமணிய சடங்குகள், காடுவாழ் முனி உரை, உபநிடத தத்துவ உரை ஆகியவை உண்டு. வெள்ளை (சுக்ல) யசுர் வேதத்திற்கு எழுதப்பட்ட சதபத பிராமணம் என்னும் உரைநூல் தான் பழமையானதும், மிக முக்கியமானதும் ஆகும். இந்த 100 வழி என்னும் பொருள் படும் சதபத பிராம்மணம் சுமார் கி.மு 700-800 வாக்கில் எழுதப்படிருக்கலாம் என கருதப்படுகின்றது. + +முதல் இரண்டு பாகங்களும் "கர்ம கண்டங்களாகவும்", அதாவது செயலுக்கு (ஓதுவதுக்கும், சடங்குக்கும்) அல்லது அனுபவத்துக்குரியவையாகவும், கடைசி இரண்டும் மெய்ப்பொருள் உணர்வதற்குத் துணையான வேதாந்த பாகங்களாகவும் வகைப்படுத்தப்படுவதுண்டு.வேதாந்தம் என்றால் வேதத்தின் இறுதியில் வந்த கடைசி பாகம் என பொருள்படும். இதனை ஞான காண்டம் என்பர். நான்கு பாகங்களும் ஒரு நபராலோ அல்லது ஒரே குழுவாலோ அல்லது ஒரே காலத்திலோ எழுதப்படவில்லை. குறிப்பாக உபநிடதங்கள் முதல் இரண்டு பாகங்களுக்கும் பல எதிர்ப்புக்களையும், மறுப்புக்களையும் தெரிவிக்கின்றது. + +இது முந்தைய வேதகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் காலம் கி.மு 2200 முதல் கி.மு 1600 வரை ஆகும். ரிக் வேதத்தில் 10600 பாடல்கள் பாடப்பட்டுள்ளன. ரிக் வேத காலத்தில் ஆரியர்கள் சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்து வந்துள்ளனர். இப்பாடல்கள் ரிக் வேத மக்களின் வாழ்க்கைமுறை, அரசியல், பழக்கங்கள் ஆகியவற்றை தெளிவாக கூறுகின்றது. மேய்ச்சலே ரிக் வேதகால மக்களின் முக்கிய தொழிலாகும். ரிக் வேத மக்கள் தச்சு வேலைகளும் செய்துள்ளனர். மண்வேலைகள் செய்வது, நூல் நூற்றல் , பருத்தி கம்பளி உடைகள் தயாரிப்பது ஆகியன ரிக்வேத கால மக்களின் உப தொழிலாக இருந்துவந்துள்ளன. மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன. ரிக் வேத மக்கள் இந்திரனையும், அக்னியையும் முதற்கடவுளாக வழிபட்டுவந்துள்ளனர். +பிந்தைய வேத காலங்களில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளனர். இக்குறிப்புகளை பிந்தைய வேதங்கள் குறிப்பிடுகின்றன. பிந்தைய வேத காலங்களில் அவர்களின் நம்பிக்கை, பழக்கவழக்கங்களும் மாற்றம் பெற்றுள்ளன. முந்தைய வேதகாலங்களில் கடவுளான இயற்கையை விட சிவன், பிரம்மன், விஷ்ணு ஆகியோரை வழிபட்டு வந்துள்ளனர். + +இது பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும். இதன் காலம் கி.மு 1400 முதல் கி.மு 1000 வரை ஆகும். + +இதுவும் பிந்தைய வேதங்களில் ஒன்று ஆகும்.சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாகும். சாம வேதத்திலிருந்தே இந்திய இசை தோற்றியதாகவும் கூறப்படுகின்றது. + +அதர்வண வேதம் இறுதியான வேதமாகும். இதனை நான்காவது வேதம் என்றும் கூறுவர். அதர்வண வேதமும் சடங்குகளைப் பற்றியே குறிப்பது ஆகும். + +நான்கு வேதங்களைத் தவிர பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் மற்றும் இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் ஆகிய அனைத்தும் வேத இலக்கியங்களில் அடங்குவனவாகும். வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன. ஆன்மா, பிரம்மம், உலகின் தோற்றம், இயற்கை பற்றிய விளக்கங்களை உபநிடதங்கள் கூறுகின்றன. + + + + + + +பன்னம் + +பன்னம் (அல்லது வித்திலியம், "Fern") என்னும் செடி மற்றும் மர வகைகளை அறிவியலில் தெரிடொ-'வைட்டே ("Pteridophyte") என்று அழைப்பர். தெரிடொ-ஃபைட்டா (Pteridophyta) என்னும்பிரிவில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் இருபதினாயிரம் நிலைத்திணை வகைகளில் ஒன்றைக் குறிக்கும். இவை பூக்கும் தாவரங்கள் தோன்றும் முன்னரே மிகு பழங்காலத்தில் தோன்றி இன்றும் வளரும் நிலைத்திணை வகை. பன்னங்கள் அல்லது "வித்திலியங்கள்" எனப்படுவன, வித்துக்களில்லாது, புதிய பரம்பரையை உருவாக்குவதற்காக நுண்வித்துக்கள் ("spores") மூலம் இனப்பெருக்கம் செய்யும் குழாயுடைத் தாவரம் ("vascular plant") என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. உண்மையான இலைகளைக் கொண்டிருப்பதால் இவை லைக்கோபைட்டாக்களிலிருந்து வேறுபடுகின்றன. இவை வித்துக்கள் மற்றும் பூக்களைக் கொண்டிராததால், வித்துத் தாவரத்திலிருந்து வேறுபடுகின்றன. + +சாதாரணப் பன்னமொன்றின் வாழ்க்கை வட்டம், இரண்டு வேறுபட்ட உருவாக்கக் கட்டங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு: + +காழ்க்க்லன் மூலகம் இவற்றின் காழில் காணப்படுவதில்லை. இவற்றின் காழில் பிரதான கடத்தும் ஊடகம் குழற்போலிகளாகும். உரியத்தில் தோழமைக் கலங்கள் காணப்படுவதில்லை. மிகவும் எளிய கடத்தும் கலன்களைக் கொண்ட தாவரங்களாக பன்னங்கள் உள்ளன (லைக்கோபைட்டாக்களும் இது போன்ற எளிய கலன் இலையங்களைக் கொண்டுள்ளன.) + +பகுதிகளாகும். + + +மேலுள்ள கட்டமைப்பு பன்னத்தின் வித்தித் தாவரத்துக்கே (2n தாவரம்) பொருத்தமானதாகும். பன்னத்தின் புணரித்தாவரம் (n தாவரம்) கட்டமைப்பில் மிக எளிமையானதாகும். இது கட்டமைப்பில் ஈரலுருத் தாவரம் போலக் காணப்படும். பன்னத்தின் புணரித்தாவரக் கட்டமைப்பு பின்வருமாறு காணப்படும்: + + + + + + + + +தோட்டக்கலை + +தோட்டக்கலை என்பது, வழமையாக ஒருவருடைய வீட்டுக்கு அருகில், தோட்டம் என்று பொதுவாக அழைக்கப்படுகின்ற இடத்தில் தாவரங்களை வளர்க்கின்ற ஒரு கலையாகும். வீட்டுக்கு அருகாமையில் அமைந்திருக்கும் தோட்டம் வீட்டுத் தோட்டம் எனப்படுகின்றது. பொதுவாகத் தோட்டங்கள் வீட்டைச் சூழவுள்ள நிலப்பகுதியிலேயே அமைவது வழக்கமெனினும், வீட்டுக் கூரைகள், பலகணித் தொட்டிகள், பல்கனிகள் போன்ற பகுதிகளிலும் அமைக்கப்படுவதுண்டு. + +"உள்ளகத் தோட்டக்கலை" என்பது கட்டிடங்களுக்குள் தாவரங்களை வளர்ப்பது சம்பந்தமானது. வீட்டுத் தாவரங்கள் இதற்கென அமைக்கப்பட்ட காப்பகங்கள், பசுமைக்குடில் போன்றவற்றுள்ளும் வளர்க்கப்படுவதுண்டு. + +"நீர்த் தோட்டக்கலை", சிறு குளங்கள், தடாகங்கள் போன்றவற்றுக்குப் பொருத்தமான தாவரங்களை வளர்ப்பதோடு சம்பந்தப்பட்டது. + +வீட்டுத்தோட்டங்களில் மட்டுமன்றி, பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள், நெடுஞ்சாலையோரங்கள், சுற்றுலாப்பகுதிகள் போன்றவற்றிலும் தோட்டக்கலை சம்பந்தப்பட்டுள்ளது. + +தாவரங்கள் பயன்பாடு சார்ந்த மற்றும் பயன்பாடு சாராத பல்வேறு தேவைகளுக்காக வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் சில பின்வருமாறு: + +பயன்பாடு சார்ந்தவை + + +பயன்பாடு சாராதவை + + +மரக்கறி வகைகள், பழ வகைகள், மூலிகைகள், நிழல் மரங்கள், புல், பல்லாண்டுத் தாவரங்கள், அலங்காரத் தாவரங்கள், பூச்செடிகள் போன்ற பலவகைத் தாவரங்களும் தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. பல தோட்டங்களில், இவற்றில் பலவற்றை ஒருங்கே காணக்கூடும். + +பழ மரங்கள் வீட்டுத் தோட்டங்களிலே வளர்க்கப்படுவது வழக்கமெனினும் பெருமளவில் வளர்க்கும்போது தோப்புகளிலே வளர்ப்பார்கள். + + + + + + +சினேகா + +சினேகா எனப்படும் சுகாசினி இராசாராம் நாயுடு தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவரது ரசிகர்கள், குடும்பப் பாங்கான முகத்தோற்றத்துக்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவரை விரும்புகின்றனர். 2001 ஆம் ஆண்டு "இங்கே ஒரு நீலப்பக்சி" என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு "என்னவளே" திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். + +சினேகா மும்பையில் பிறந்தார். அவளுடைய குடும்பம் அவளுடைய பிறப்புக்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜாக்குச் சென்றது, அங்கு அவர் ஓன் ஆங்கில உயர்நிலை பள்ளியில் படிப்பை முடித்தார் . பின்னர் அவர் குடும்பத்தினர் தமிழ்நாட்டில் உள்ள பண்ருட்டி என்னும் ஊரில் குடியேறினர். அங்கே இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் ஒன்றும் உள்ளது. + +சினேகா முதலில் மலையாளத்தில் இங்கனே ஒரு நீல பாக்ஷி என்ற படத்தில் நடனமாடி நடித்துள்ளார். பின்னர் ���மிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார். பார்த்திபன் கனவு, +ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார். + +2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டுஅச்சமுண்டு படத்தில் இணைந்தார். பின்னர், பிரசன்னா சினேகா வின் மாடலிங் நிகழ்ச்சிகளில் காணப்பட்டார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சினேகா சென்னையில் கணவருடன் வசித்து வருகிறார். 2015 ஆகஸ்ட் 10 இல் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது . + +சரவண ஸ்டோர்ஸ், ஹார்லிக்ஸ் , ஆஷிர்வாட் போன்ற பல விளம்பரங்களில் அவர் தோன்றினார். திருமணத்திற்குப் பின் சினேகா தன் கணவருடன் பிரசன்னாவுடன் இணைந்து யுனிவர்சல் விளம்பரங்களில் பணிபுரிந்தார், சென்னை சர்வதேச ஃபேஷன் வீக், சிட்னி ஸ்லேடன் பேஷன் வாரம் மற்றும் சென்னை மற்றும் மும்பையில் நடந்த பல நிகழ்ச்சிகளில் அவர் நடித்தார். + +விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில 41 நாளாக போராடி வருகின்றனர். டெல்லியில் போராடி வரும் விவசாய குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு நடிகர் பிரசன்னா, சினேகா தம்பதியினர் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தனர். +என்னுடைய சம்பளம் முழுவதும் கொடுக்கும் அளவுக்கு நான் ஊதியம் பெறவில்லை என்றாலும், இயன்றதைச் செய்து இன்பம் பெறும் முயற்சியாகவே நிதியுதவி அளித்துள்ளதாகவும், இதே போன்று நடிகர்கள் மட்டுமல்ல அனைத்துத் தரப்பினரும் நிதியுதவி அளிக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். + + + + + + +மதுரை + +மதுரை ("Madurai") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்க��் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரமாகும் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31 ஆவது பெரிய நகரம் ஆகும். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது. + +இந்திய துணைக்கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை நகரம் சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் எனக் குறிக்கப்படும் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களைக் கொண்டு மூன்றாம் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. + +மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283), கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ் (350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புக்களில் மதுரை குறிப்பிடப்பட்டுள்ளது. மரபுச் சின்னமாகப் பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர். + +நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரைத் திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் "மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்" ஆண்டுதோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து இலட்சம் பேராற் கண்டுகளிக்கப்படும் சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக "கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு" நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல், நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதி��ளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் பெயர் பெற்ற நிகழ்வுகளாகும். + +மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்றுறை மையமாகவும் கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், இரசாயனம், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு, உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது. இது சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய மாநகராட்சி ஆகும். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளையும் உள்ளது. இது இந்தியாவில் மாநிலத் தலைநகரங்களுக்கு வெளியில் உள்ள நீதிமன்றங்களில் ஒன்றாகும். மதுரையில் பன்னாட்டுச் சேவைகளை வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய தொடர்வண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் தென்னிந்தியாவின் மாசில்லா மாநகரமாக மதுரை மாநகர் தெரிவு செய்யப்பட்டது. + +மதுரை 147.99 கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் முதற்கட்டத் தகவலின் படி மதுரை நகரில் 1,017,865 பேர் வசிக்கின்றனர். +மதுரையின் எல்லைகளாக பழமொழிகளில்.. +மதுரைக்கு எல்லைக் கோடு. + +சீறா நாகம், +கறவா பசு, +பிளிறா யானை, முட்டா காளை, +ஓடா மான், +வாடா மலை, +காயா பாறை, +பாடா குயில் + +இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லை ஊர்கள். + +சீறா நாகம் - நாகமலை +கறவா பசு - பசுமலை +பிளிறா யானை - யானைமலை +முட்டா காளை - திருப்பாலை +ஓடா மான் - சிலைமான் +வாடா மலை - அழகர்மலை +காயா பாறை - வாடிப்பட்டி +பாடா குயில் - குயில்குடி + +இந்நகரம் "மதுரை", "கூடல்", "மல்லிகை மாநகர்", "நான்மாடக்கூடல்", "திரு ஆலவாய்" போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத் துறை > மதுரை; மருத மரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத் துறை என்பது மருவி மதுரை என ஆனது என ஒரு கருத்தும், (வையை ஆற்���ங்கரையில் மருத மரங்கள் மிகுதி). இந்துக் கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால்(இனிப்பு) இப்பெயர் பெற்றது என மற்றொரு கருத்தும் நிலவுகிறது. 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பட்ட திருவிளையாடற் புராணத்தில் மதுரையின் பல்வேறு பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. "கூடல்" என்ற பெயர் மதுரையில் இருந்த மூன்று தமிழ்ச் சங்கங்களையும், நான்மாடக்கூடல் என்ற பெயர் மதுரையைச் சூழ்ந்துள்ள நான்கு கோயில் கோபுரங்களையும் குறிக்கிறது. சிவனடியார்கள் மதுரையைத் திரு ஆலவாய் எனக் குறிப்பிடுகின்றனர். தமிழகக் கல்வெட்டியலாளர் ஐராவதம் மகாதேவன் அவர்களின் குறிப்பின் படி, கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்ப் பிராமி கல்வெட்டு ஒன்று "மதிரை" எனக் குறிக்கிறது. இதற்கு மதிலால் சூழப்பட்ட நகரம் என்பது பொருள்.. + +கி. மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து மதுரையில் மக்கள் வசித்து வருவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. இலங்கையில் கி. மு. 570 ஆம் ஆண்டில் தம்பபன்னி இராச்சியத்தைத் தோற்றுவித்த விசயன் "மதுராபுரியைச்" சேர்ந்த பாண்டிய இளவரசியை மணந்ததாக இலங்கையின் வரலாற்று நூலான மகாவம்சம் குறிப்பிடுகிறது. இங்கே மதுராபுரி எனக் குறிப்பிடப்படுவது பண்டைய மதுரையையே. கி.மு 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பயணியான மெகசுதனிசு தனது குறிப்புகளில் "மதுரா" எனக் குறிப்பிடப்படுவதிலிருந்து, அவர் மதுரைக்கு வந்து இருக்கலாம் என அறியப்படுகிறது. இருப்பினும் சில அறிஞர்கள் "மதுரா" எனக் குறிப்பிடுவது மௌரியப் பேரரசில் புகழ் பெற்ற வடஇந்திய நகரமான மதுரா என்கின்றனர். மேலும் சாணக்கியர் எழுதிய "அர்த்தசாத்திரத்திலும்" மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. தமிழின் பழமையான இலக்கியங்களான நற்றிணை, திருமுருகாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகிய நூல்களில் மதுரை குறித்து கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் ""கூடல்"" என்றும் சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூறு முதலிய நூல்களில் ""மதுரை"" என்றும் மதுரை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சங்ககாலத்தில் நான்மாடக்கூடல் எனப் போற்றப்பட்டது மதுரையைத் "தமிழ்கெழு கூடல்" எனப் புறநானூறு குறிப்பிடுகிறது. "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நன��� மறுகின் மதுரை" என்று சிறுபாணாற்றுப்படையில், நல்லூர் நத்தத்தனாரும் மதுரையைப் பற்றி குறிப்பிடுகின்றார். "ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்" எனப் பல்வேறு அடைமொழிகளால் தான் எழுதிய சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகளும் மதுரையைச் சிறப்பிக்கிறார். இவை தவிர கிரேக்க, உரோமானிய வாரலாற்றிலும் மதுரை பற்றிய குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. உரோமானிய வரலாற்றாய்வாளர்களான இளைய பிளினி (61 – c. 112 கிபி), தாலமி (c. 90 – c. கிபி 168), கிரேக்க புவியுலாளரான இசுட்ராபோ (64/63 கிமு – c. 24 கிபி), மதுரை பற்றி குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக செங்கடல் செலவில் மதுரை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. +சங்க காலத்தில் பாண்டியர் ஆளுகையின் கீழ் மதுரை இருந்தது சங்க இலக்கியங்கள் மூலம் அறிய வருகிறது. சங்க காலத்துக்குப் பின், களப்பிரர் ஆளுகையின் கீழ் வந்த மதுரை கிபி 590 பாண்டியர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. ஆனால், 9 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், பாண்டியர்கள் சோழர்களிடம் தோல்வியுற்றனர். இதனால் சோழர்களின் ஆளுகையின் கீழ் வந்த மதுரையானது, 13 ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் பாண்டியப் பேரரசு உருவாக்கப்படும் வரை சோழர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்(கிபி1268 – 1308) மறைவுக்குப் பின் மதுரை தில்லி சுல்த்தானகத்தின் கீழ் வந்தது. பின் தில்லி சுல்தானகத்திலிருந்து பிரிந்து மதுரை சுல்தானகம் தனி இராச்சியமாக இயங்கியது. பின் கி.பி.1378 இல் விஜயநகரப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. கிபி 1559 இல் விசய நகரப் பேரரசிடமிருந்து நாயக்கர்கள் தன்னாட்சி பெற்றனர். பின் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கிபி 1736 இல் நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் வரும் வரை மதுரையானது சந்தா சாகிப்(கிபி 1740 – 1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (கிபி 1725 – 1764) ஆகியோரால் மீண்டும் மீண்டும் பலமுறை கைப்பற்றப்பட்டது. + +பின் 1801 இல், மதுரை ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் கட்டுப்பாட்டின் கீழ், சென்னை மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. அவர்கள் ஆட்சியின் தொடக்க கால கட்டங்களில் ஆங��கில அரசு மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நன்கொடை வழங்கியதுடன் திருவிழாக்களிலும் பங்கு பெற்றது. 19 ஆம், 20 ஆம் நூற்றாண்டுகளில் மதுரை நகரானது அரசியல், தொழிற்றுறை நகராக வளர்ந்ததுடன் அப்போதைய மதுரை மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்கியது. 1837 ஆம் ஆண்டில், கோவிலைச் சுற்றி இருந்த கோட்டையானது அகற்றபட்டு, அகழி நிலத்தப்பட்டது. கிடைத்த இடிபாடுகள் மற்றும் பொருட்களைக் கொண்டு, புதிய தெருக்களான வெளி, மாரட், பெருமாள் மேசுதிரி வீதிகள் அமைக்கப்பட்டன. கிபி 1836 இல் மதுரை நகராட்சியாகத் மாற்றப்பட்டது. நகராட்சியாக மாற்றப்பட்ட போது, ஆங்கில அரசானது மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்துதலிலும் வரி வசூலிப்பதிலும் சில சிக்கல்களைச் சந்தித்தது. எனவே, கிபி 1880 மற்றும் 1885 மதுரை நகரமும், மாவட்டமும் மறு அளவீடு செய்யப்பட்டது பின்னர் நிர்வாக வசதிக்காக 5 நகராட்சிகள், 6 தாலுகாக்கள் மற்றும் இரண்டு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. நகரில் காவல் நிலையங்கள் எழுப்பப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் மாவட்டக் காவல் துறை ஆணையர் பதவியும் ஏற்படுத்தப்பட்டது. + +1921 செப்டெம்பர் 26 ஆம் நாள், மதுரையில் அரையாடை அணிந்து வேலை செய்து கொண்டிருந்த விவாசாயிகளைக் கண்டு, இந்திய தேசியத் தலைவரான காந்தி முதன் முறையாக அரையாடையை அணிந்தார். 1939 இல் மதுரையில் ஆலய நுழைவுப் போராட்டத்தை மேற்கொண்ட தனது நண்பர் வைத்தியநாதையரைக் காப்பாற்றும் பொருட்டு அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராசகோபாலாச்சாரி தலைமையிலான அரசு ஆலய நுழைவு உறுதிப்படுத்தலும் பாதுகாப்பும் சட்டத்தை இயற்றி நாடார்களும் தலித்துகளும் ஆலயம் நுழைவதற்கான தடையை நீக்கியது. + +பண்டைய மதுரை நகரத்தின் புவியியல் மற்றும் வழிபாட்டு மையமாக விளங்கிய மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி மதுரை நகரமானது கட்டப்பட்டுள்ளது. நகரமானது பொது மையத்தைக் கொண்ட நான்கு நாற்கர வடிவமுடைய தெருக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களின் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) "சதுர மண்டல முறையில்" கட்டப்பட்டதாகும். இந்த தெருக்கள் அவற்றில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் தமிழ் மாதங்களின் பெயர்களால் ஆடி, சித்திரை, ஆவணி - மூல, மாசி வீதிகள் என தற்போதும் அழைக்கப்படுகின்றன. கோயில் பிரகாரத்திலும் அதனைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்களானது கொண்டாடப்படுவதுடன், தேரோட்டமும் நடைபெறுகிறது. நகர மையமும், அதனைச் சூழ்ந்துள்ள தெருக்களும் தாமரை மலர் மற்றும் அதன் இதழ் போன்ற தோற்றம் கொண்டதாக பழைய இலக்கியங்கள் கூறுகின்றன. நகரத்தின் அச்சானது காந்த ஊசிகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்து, கோவிலின் நான்கு வாசல்களும் அதன் முனைகள் போல் உள்ளன. இந்த அமைப்பில் உயர்சாதியினர் கோவிலுக்கு அருகிலுள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவிலுள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். பின் 19 ஆன் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறை வளர்ச்சி மற்றும் நகரமயாமாதல் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் (கோட்டைச் சுவர் அக்கற்றப்பட்டு புதிய தெருக்கள் உருவாதல்) ஏற்பட்டு தற்போது அனைத்து படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழுகின்றனர். +மதுரையின் கிழக்கு குடவரை கோவில் குன்னத்துார்(திருக்குன்றத்துார்) அமைந்துள்ளது. மாற வர்ம சுந்தரபாண்டியன் மற்றும் பலர் சிவலிங்க திருமேனியை மலையை குடைந்து உருவாக்கி உள்ளனர். இது கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இது மதுரையிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் உயரத்தில் வளமான வைகை ஆற்றின் சமவெளியில் அமைந்துள்ளது. வைகை ஆறு நகரின் வடமேற்கு-தென்கிழக்காக ஒடி நகரை ஏறக்குறைய இரு சமபகுதிகளாகப் பிறிக்கிறது. நகரின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதியில் சிறுமலை மற்றும் நாகமலைக் குன்றுகளும், வடகிழக்கே யானைமலைக் குன்றும் அமைந்துள்ளன. மதுரையைச் சூழ்ந்துள்ள நிலங்களில் பெரியாறு அணை பாசனம் மூலம் விவசாயம் நடைபெறுகிறது. மதுரை மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து தென்கிழக்கு திசையில் அமைந்துள்ளது. மதுரையைச் சூழ்ந்துள்ள பகுதிகள் தென்னிந்தியச் சமவெளிகள் போன்று சிறு சிறு குன்றுகள் காணப்படுகின்றன. மணலின் தன்மையைப் பொருத்த வரையில் மதுரையின் மையப்பகுதி களிமண்ணும், புறநகர்பகுதிகள் செம்மண் மற்றும் கரிசல் மண்ணும் கொண்டுள்ளன. நெல் அதிகம் பயிரிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து பயறு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும��பு ஆகியவை பயிரிடப்படுகின்றன. + +ஆண்டின் எட்டு மாதங்களுக்கு மதுரையில் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை நிலவுகிறது. அருகிலுள்ள திண்டுக்கல் மற்றும் மதுரையில் பிப்ரவரி மற்றும் மார்ச்சு மாதங்களில் குளிர் காற்று வீசுகிறது. மார்ச்சிலிருந்து சூலை வரை அதிக வெப்பமான மாதங்களாகும். ஆகசுட்டிலிருந்து அக்டோபர் வரை மிதமான வானிலையும், நவம்பரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை இடி மற்றும் கனமழையுடன் மிதமான குளிரும் காணப்படுகிறது. மதுரையில் மூடுபனியானது குளிர்காலங்களில் மிக மிகக் குறைவாகவே ஏற்படுகிறது. கடல் மற்றும் மலையிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளதால் வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழையால் சம விளைவுகளே ஏற்படுகிறது. இருப்பினும் அக்டோபரிலிருந்து திசம்பர் வரை வீசும் வடகிழக்கு பருவமழையால் அதிக மழைப்பொழிவைப் பெறுகிறது. மதுரை மாவட்டத்தில் சராசரி மழைப்பொழிவு 85.76 செ. மீ. + +கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 40 °செ, குறைந்தபட்ச வெப்பநிலை 26.3 °செ, இருப்பினும் சாதாரணமாக வெப்பநிலையானது 42 °செ வரை உயரும். நகரமயமாதல், வாகனப் பெருக்கம் மற்றும் தொழில்மயமாதல் காரணமாக மதுரையின் வளிமண்டல வெப்பநிலை உயர்ந்துள்ளது, இந்திய வானியலாய்வுத் துறையிடம் உள்ள 62 ஆண்டுகால தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது. 2001–2010 வரையான பத்தாண்டுகளில் அதிகபட்ச வெப்பநிலையான 42 °செ 2004 மற்றும் 2010 என இருமுறை பதிவாகியுள்ளது. + +2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மதுரையின் மொத்த மக்கள் தொகை 10,17,865 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 999 பெண்கள், இது தேசிய சராசரியான 929 ஐ விட மிக அதிகம் ஆகும். இதில் 1,00,324 பேர் ஆறு வயதிற்கும் கீழானவர்கள். இவர்களில் ஆண்கள் 51,485 மற்றும் பெண்கள் 48,389. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினர் எண்ணிக்கை முறையே 6.27% மற்றும் 0.31% ஆகும். நகரின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 72.99% ஐ ஒப்பிடும் போது, அதை விட அதிகமாக 81.95% உள்ளது. 1,224 விவசாயிகள், 2,178 முதன்மை வேளாண் தொழிலாளர்கள், 11,282 குடிசைத் தொழிலகங்கள், 3,48,849 பிற தொழிலாளர்கள், 27,782 குறு தொழிலாளர்கள், 388 குறு விவசாயிகள், 616 குறு வேளாண் தொழிலாளர்கள், 1,611 சிறு குடிசைத்தொழிலாளர்கள் மற்றும் 25,167 பிற குறு தொழிலாளர்கள் என மொத்தம் 3,91,315 தொழிலாளர்கள் உள்ளனர். மதுரை மாநகரரானது 14,62,420 மக்களுடன் தமிழக அளவில் மூன்றாவது பெரிய மற்றும் இந்திய அளவில் 31 வது பெரிய மாநகரம் ஆகும் (Metropolitan City). + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 8,73,601 (85.83%) ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 86,886 (8.54%), கிருஸ்துவர்கள் 52,737 (5.18%), மதம் குறிப்பிடாதோர் 3,002 (0.29%), சமணர்கள் 1,324, சீக்கியர்கள் 164, புத்த மதத்தினர் 74, மற்றவர்கள் 77 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றனர். தமிழ் மொழி அதிக அளவில் பேசப்படும் மொழியாகும். சௌராட்டிரம் கி. பி. 16 ஆம் நூற்றாண்டில் மதுரைக்கு இடம் பெயர்ந்த சௌராட்டிரர்களால் பேசப்படுகிறது. ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள், ரோமன் கத்தோலிக்க மதுரை டையோசிசுடனும், புரோசுடண்டு கிறித்தவர்கள் தென்னிந்திய திருச்சபையின் மதுரை – இராமநாதபுரம் திருமண்டலத்தில் இணைந்துள்ளனர். + +2001 இல் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 32.6 சதவீதமாகும். இது தேசிய சராசரியான 15.05% விட மிக அதிகம். + +(படத்திலிருந்து) 1971–1981 இல் 50% வரை மக்கள் தொகை வளர்ச்சி வீதம் அதிகரிப்பிற்கு 1974 ஆல் மதுரை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு 13 பஞ்சாயத்துகள் மதுரையுடன் இணைக்கப்பட்டதே காரணமாகும். 1981 மற்றும் 2001 இல் மக்கள் தொகை வீதம் குறைவிற்கு மதுரை மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, 184 இல் திண்டுக்கல் மற்றும் 1997 இல் தேனி மாவட்டம் உருவாக்கபட்டதே காரணமாகும். கூட்டாக ஆண்டு வளர்ச்சி வீதம் 1971–1981 இல் 4.10 சதவீதமும், 1991–2004 இல் 1.27 சதவீதமும் குறைந்துள்ளது. + +நகரமைப்புச் சட்டம் 1865 இன் படி, மதுரை 1866 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் நகராட்சியாக ஆக்கப்பட்டது. பின் ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் நடத்தப்பட்டு நகராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்(1891 மற்றும் 1896 தவிர). அப்போது இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற காரணத்தால், ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேசிய காங்கிரசே வெற்றி பெற்று வந்தது. மதுரை மாநகராட்சி சட்டம், 1971 இன் படி, மே 1, 1971 முதல் மாநகராட்சியாக மேம்பாடு செய்யப்பட்டது. மதுரை தமிழகத்தின் இரண்டாவது பழைய மாநகராட்சியாகும். மாநகராட்சியானது நிர்வாகத்திற்காக 6 துறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை: பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம், நகரத் திட்டமிடல் மற்றும் கணினிப் பிரிவு. இந்தத் துறைகள் அனைத்தும் மதுரை மாநகராட்சி ஆணையாளரின��� கட்டுப்பாட்டில் உள்ளன. இவரே மாநகராட்சியின் ஒட்டுமொத்த செயல்பாட்டின் தலைவராக உள்ளார். இது தவிர சட்டமியற்றும் அதிகாரம் மாநகராட்சி உறுப்பினர்கள் வசம் உள்ளது. மாநகராட்சியின் 100 வார்டுகளிலிருந்து ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு உறுப்பினர் என 100 உறுப்பினர்கள் மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகர் மன்றத்தின் தலைவராக மேயர் செயல்படுகிறார். இவருக்கு உதவியாக துணைமேயரும் உள்ளார். இது தவிர மாநகராட்சி நிர்வாக வசதிக்காக மண்டலங்களாப் பிரிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி அலுவலகம் தல்லாகுளம் அருகே செயல்பட்டு வருகின்றது. மதுரை மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளது. + +மதுரை நகரானது ஐந்து சட்டமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது தவிர மதுரை மக்களைவைத் தொகுதியும் உள்ளது. இவற்றிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது. + +சட்டம் ஒழுங்கு தமிழக காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மதுரை நகரமானது தனி காவல் துறை மாவட்டமாக உள்ளது. மதுரை மாநகர் காவல் துறையில், தல்லாகுளம், அண்ணா நகர், திலகர் திடல், டவுண் என நான்கு பிரிவுகளுடன் மொத்தம் 27 காவல் நிலையங்களும் உள்ளன. மாநகர் காவல் துறைத் தலைவராக காவல் துறை ஆணையாளர் உள்ளார். புறநகர் பகுதிகளில் சட்டம் ஒழுங்கானது மதுரை மாவட்டக் காவல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. + +இது தவிர சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளையும் உள்ளது. இது மாநிலத் தலைநகருக்கு வெளியில் இருக்கும் வெகு சில உயர் நீதி மன்றங்களுள் ஒன்று. இது சூலை 2004 முதல் செயல்பட்டு வருகிறது. + +தேசிய நெடுஞ்சாலை 7 (வாரணாசி-பெங்களூரு-கன்னியாகுமரி), தேசிய நெடுஞ்சாலை 49 (கொச்சி-தனுஷ்கோடி), தேசிய நெடுஞ்சாலை 45B (திருச்சிராப்பள்ளி-தூத்துக்குடி ), தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா) திருமங்கலம் – கொல்லம் ஆகியவை மதுரை வழிச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளாகும். இது தவிர மாநில நெடுஞ்சாலைகளான மா. நெ – 33, மா. நெ – 72, மா. நெ – 72ஏ, மா. நெ – 73 மற்றும் மா. நெ – 73ஏ ஆகியவையும் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் வண்ணம் உள்ளன. தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை வட்டங்களுள் மதுரையும் ஒன்றாகும். இது தவிர மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) இயங்கி வருகிறது. இதன் மூ��ம் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மதுரையில் மூன்று முக்கியப் பேருந்து முனையங்கள் உள்ளன. அவை மாட்டுத்தாவணி ஒருகிணைந்த பேருந்து முனையம்(MIBT), ஆரப்பாளையம் ஆகிய இரண்டும் புறநகர் பேருந்து முனையங்களாகவும், பெரியார் பேருந்து நிலையம் நகர் பேருந்து நிலையமாகவும் உள்ளது. அரசால் இயக்கப்படும் நகர் பேருந்துகள் தவிர 236 பதிவு பெற்ற தனியார் சிற்றுந்துகளும், 12,754 பதிவு பெற்ற தானிகளும் உள்ளன. + +மதுரை சந்திப்பு தென் தமிழகத்தின் முக்கிய இரயில் நிலையமாக உள்ளது. இதனைத் தலைமையிடமாகக் கொண்டு தென்னக இரயில்வேயின் மதுரை இரயில்வே கோட்டம் செயல்படுகிறது. இது சென்னையை அடுத்து அதிக வருமானம் தரக் கூடிய கோட்டமாக உள்ளது. மதுரையிலிருந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி, ஜெய்ப்பூர், ஐதராபாத், விசாகப்பட்டினம், கொல்லம், கோவை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, ராமேசுவரம், கன்னியாகுமரி போன்றவற்றை இணைக்கும் வண்ணம் நேரடி தொடருந்து சேவைகளும் உள்ளன. மதுரையானது நாட்டின் பிற பகுதிகளுடன் தொடருந்து சேவைகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மதுரையில் மாநில அரசினால் அறிவிக்கப்பட்ட மோனோ ரயில் சேவை திட்டமிடல் கட்டத்தில் உள்ளது. + +மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் தமிழகத்தின் முக்கிய விமான நிலையங்களுள் ஒன்றாகும். இது நகரின் மையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு உளநாட்டு விமானச் சேவையும் மற்றும் பன்னாட்டு விமானங்கள் இலங்கை, மலேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இயக்கப்படுகிறது. விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், மிகின் லங்கா, ஸ்பைஸ் ஜெட் ஆகியவற்றால் விமான சேவைகள் விளங்கப்படுகிறது. மதுரை விமான நிலையம் 5.2 இலட்சம் பயணிகளை ஏப்ரல் 2011 முதல் மார்ச்சு 2014 காலகட்டத்தில் கையாண்டுள்ளது. + +மதுரை பல நூற்றாண்டுகளாக தமிழ் கலாச்சாரம், இலக்கியம், இசை, நடனம் மற்றம் பல கலைகளைக் கற்பிக்கும் மையமாக விளங்கியது. மதுரையை மையமாகக் கொண்டு மூன்று தமிழ்ச் சங்கங்கள் இயங்கி வந்துள்ளன. சங்க இலக்கியங்கள் பல இங்கு தான் அரங்கேற்றப்பட்டன எனவும் நம்பப்படுகிறது. + +மதுரைத் தமிழ்ச் சங்கம் மற்றும் உலகத் தம���ழ்ச் சங்கம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் செயல்படுகிறது. +சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம் பழந்தமிழர்களின் மேன்மையை படம் பிடித்து காட்டுகிறது. + +மதுரையின் பழமையான கல்லூரி, 1881 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அமெரிக்கன் கல்லூரி ஆகும். நகரின் முதல் பெண்கள் கல்லூரியாக 1948 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட டோக் பெருமாட்டி கல்லூரி உள்ளது. இவை தவிர, தியாகராசர் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1949), மதுரைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1889), பாத்திமா கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1953), தியாகராசர் மேலாண்மைக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1962), நாட்டின் பழமையான மேலாண்மைப்பள்ளிகளுள் ஒன்று மற்றும் சௌராஷ்டிரா கல்லூரி,சௌராட்டிர மேல்நிலைப் பள்ளி, வக்பு வாரியக் கல்லூரி (துவங்கப்பட்ட ஆண்டு 1964),சரசுவதி நாராயணன் கல்லூரி(துவங்கப்பட்ட ஆண்டு 1966) ஆகியவை நகரின் பழமையான கல்வி நிலையங்களில் குறிப்பிடத்தக்கவை. + +மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் (ஆரம்ப காலங்களில் மதுரைப் பல்கலைக்கழகம்) 1966 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட, ஒரு மாநிலப் பல்கலைக் கழகமாகும். இதனுடன் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலுள்ள 109 க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் 47 (தன்னாட்சி, அரசு உதவி, சுயநிதி, உறுப்பு கல்லூரி மற்றும் மாலை நேரக் கல்லூரிகள் உட்பட) பல்கலைக்கழகத்தால் ஏற்பு பெறப்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இது தவிர ஏழு பல் தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் 5 தொழிற்பயிற்சிப் பள்ளிகள்(ஐடிஐ) மதுரையில் உள்ளன. இவற்றுள் அரசு தொழிற்பயிற்சிப் பள்ளி, தமிழ்நாடு பல்தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மகளிர் பல்தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை குறிப்பிடத்தக்கன. மதுரை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் என இரு மருத்துவக் கல்வி நிலையங்களும், 11 துணை மருத்துவக் கல்வி நிலையங்களும் மதுரையில் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற ஏழு பொறியியல் கல்வி நிலையங்கள் மதுரையில் உள்ளன. இதில் தியாகராஜர் பொறியியல் கல்லூரி பழமையானதாகும். + +இது தவிர மதுரையைச் சுற்றிலும் பல சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. 1979 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட மதுரை சட்டக்கல்லூரி, தமிழகத்தில் உ��்ள ஏழு அரசு சட்டக் கல்லூரிகளுள் ஒன்றாகும். இது தமிழ்நாடு அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இவை தவிர மதுரை நகரில் மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், இரு இசைக் கல்லூரிகள், மூன்று மேலாண்மைக் கல்லூரிகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 1965 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்தது) தென் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க வேளாண்மைக் கல்லூரி ஆகும். இதனுடன் மனையியல் கல்லூரி ஒன்றும் உள்ளது. மதுரை நகரில் சுமார் 369 ஆரம்ப, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. + +மதுரையில் பல கோவில்கள் இருப்பதால், இது கோவில் நகரம் என அழைக்கப்படுகிறது. மதுரையின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் மீனாட்சியம்மன் கோவில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோவிலாகும். இது வைகையாற்றின் தெற்கில் அமைந்துள்ளது. கோவில் கட்டிடமானது 45-50 மீ உயரம் கொண்ட பல்வேறு கோபுரங்களைக் கொண்டுள்ளது. இதில் தெற்கு கோபுரம் 51.9 மீ (170 அடி) உயரத்துடன் மிக உயரமானதாகும். கருப்ப கிரகத்தின் மேல் இரண்டு தங்க விமானங்களும் அமைந்துள்ளன. பண்டைய தமிழ் இலக்கியங்களில் இக்கோவில் பற்றி குறிப்பிடப்படுவது இதன் பழமைக்குச் சான்றாகும். கோவிலின் தற்போதைய அமைப்பானது கிபி 1623 இலிருந்து 1655 க்குள் கட்டப்பட்டதாகும். தினசரி 15,000 பேர்களும், வெள்ளிக்கிழமைகளில் 25,000 பேர் வரையும் கோவிலைப் பார்வையிடுகின்றனர். சுமார் 33,000 சிற்பங்கள் வரை கோவிலில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. புதிய உலக அதிசயங்களுக்கான முதல் முப்பது பரிந்துரைகளில் இக்கோவிலும் இடம் பெற்றிருந்தது. + +நகரினுள் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் கோவிலில் சிவாலயங்களில் காணப்படுவது போன்று நவக்கிரகங்கள் அமைந்துள்ளன. மதுரையிலிருந்து 21 கிமீ தொலைவில் சோலைமலை அடிவாரத்தில் அழகர் கோவில் அமைந்துள்ளது. சோலை மலையின் மேல் முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. +காசிமார் பெரிய பள்ளிவாசல் நகரின் பழமையான முசுலிம் வழிபாட்டுத் தலம் ஆகும். இப்பள்ளிவாசல் 13 ஆம் நூற்றாண்டில் குலசேகரப் பாண்டியனிடமிருந்து தானமாகப் பெற்ற நிலத்தில், ஓமனில் இருந்து வந்த காசி சையது தாசுத்தீன் அவர்களின் மேற்பார்வையில் கட்டப்பட்டது. சையது தாசுதீனின் வழித்தோன்றல்களே மதுரை நகரின் காசிகளாக தமிழக அரசால் நியமிக்கப்படுகின்றனர். மதுரை அசரத்தின் தர்காவான மதுரை மக்பரா இப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ளது. + +முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருப்பரங்குன்றம், மதுரையிலிருந்து எட்டு கிமீ தொலைவில் அமைந்துள்ளது. மீனாட்சியம்மன் கோவிலை அடுத்து திருப்பரங்குன்றம் அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. மேலும் மலைக் குன்றின் மீது அசரத்து சுல்தான் சிக்கந்தர் பாதுசாவின் தர்காவும் அமைந்துள்ளது. + +கோரிப்பாளையம் தர்காவானது கோரிப்பாளையத்தில் அமைந்துள்ளது. கோர் என்ற பாரசீக வார்த்தைக்கு கல்லறை என்பது பொருள். இங்கு அசரத்து சுல்தான் அலாவுத்தீன் பாதுசா, அசரத்து சுல்தான் சம்சுத்தீன் பாதுசா மற்றும் அசரத்து சுல்தான் அபிபுத்தீன் பாதுசா ஆகியோரின் கல்லறைகள் உள்ளது. + +புனித மரியன்னை தேவாலயமானது கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. + +மதுரை நகரமானது இரவிலும் செயல்பாட்டில் இருப்பதால் "தூங்கா நகரம்" என பரவலாக அறியப்படுகிறது. மதுரை அதிக அளவு சுற்றுலா பயணிகளைக் கவரும் நகரங்களுள் ஒன்று. 2010 ஆம் ஆண்டில் மட்டும் 91,00,000 சுற்றுலா பயணிகள் மதுரை நகருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 5,24,000 வெளிநாட்டினரும் அடக்கம். மருத்துவச் சுற்றுலாப் பயணிகளும் தற்போது மதுரைக்கு பெருமளவு வருகின்றனர். இந்தோ சரசானிக் பாணியில் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகால் சுற்றுலாப் பயணிகளைப் பெருதும் கவர்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தேசிய நினைவுச் சின்னம் ஆகும். இங்கு தமிழக தொல்லியல் துறையால் திருமலை நாயக்கர் மற்றும் மகாலின் வரலாற்றைக் கூறும் ஒலி - ஒளிக் காட்சிகளும் மாலையில் காட்டப்படுகின்றன. இராணி மங்கம்மாளின் அரண்மனை புதுப்பிக்கப்பட்டு, தற்போது காந்தி அருங்காட்சியமாகச் செயல்படுகிறது. இது நாட்டிலுள்ள ஐந்து காந்தி நினைவு அருங்காட்சியகங்களுள் ஒன்று. இங்கு நாதுராம் கோட்சேவால் கொல்லப்பட்டபோது காந்தி அணிந்திருந்த இரத்தக் கறை படிந்த ஆடை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இவ்வருங்காட்சியத்தை பார்வையிட்டதே தனது நிறவெறிக்கெதிரான அமைதி வழிப் போராட்டத்து��்கு தூண்டுதலாக இருந்தது என மார்டின் லூதர் கிங் குறிப்பிட்டுள்ளார். தல்லாகுளத்தில் அமைந்துள்ள சூழலியல் பூங்கா விளக்கு மற்றும் ஒளியிழைக் கம்பிகளால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள் மற்றும் நீர்ச் சுனைகளைக் கொண்டுள்ளது(மாலை நேரத்தில் மட்டும் அனுமதி). தமுக்கம் மைதானம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்துக்கு இடையே அமைந்துள்ள இராசாசி பூங்காவை விடுமுறை நாட்களில் 5000 பேர் வரையும் வேலை நாட்களில் 2000 – 3000 பேர் வரையும் பார்வையிடுகின்றனர். இது தவிர மதுரை – திண்டுக்கல் சாலையில் பரவை அருகே அதிசயம் பொழுதுபோக்கு பூங்காவும் உள்ளது. இது தவிர செயற்கை இழை மைதானம், நீச்சல் குளம் கொண்ட எம். ஜி. ஆர். ரேசு கோர்சு மைதானமும் உள்ளது. இங்கு பல்வேறு தேசிய விளையாட்டுப் போட்டிகளும், பன்னாட்டு கபாடி போட்டிகளும் நடைபெறுகின்றன. "ஜில் ஜில் ஜிகர்தண்டா" என்று உள்ளூர் கடைக்காரர்களால் அழைக்கப்படும் சீனப் பாசி கலந்த ஒரு வகைக் குளிர்பானம் மதுரைக்கு வரும் வெளியூர் சுற்றுலாப்பயணிகள் விரும்பி அருந்தும் குளிர்பானமாக உள்ளது. + +மதுரை நகரில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரைத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல், தேரோட்டம் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். ஏப்ரல் – மே மாதங்களில் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகும் முழுவதிலுமிருந்து பல இலட்சம் சுற்றுலா பயணிளைக் கவர்கிறது. இதை ஒட்டி திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆவணிமூல விழாவில் சிவனின் அறுபத்து நான்கு திருவிளாயாடல்களும் நடத்தப்படுகின்றன. அது தை மாதம் முழு நிலவு நாளில் கொண்டாடப்படும் தெப்பத்திருவிழாவில் அலங்கரிக்கப்பட கடவுள் சிலைகள் தெப்பதில் வைத்து விடப்படுகின்றன. + + + + +யாழ்ப்பாணக் கோட்டை + +யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஒல்லாந்த அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது. + +யாழ்ப்பாண அரசு 1619 இல் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை நல்லூரிலிருந்து அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு கோட்டையையும் கட்டினர். 1619 ஆகஸ்ட் மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள கோவாவிலிருந்த தலைமையகத்திலிருந்து பிலிப்பே டி ஒலிவேராவுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை 1625 ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. 1629 இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், 1637 இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே கத்தோலிக்கத் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், வைத்தியசாலையொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் யாழ்ப்பாண நகரம் (போர்த்துக்கேயர் குடியேற்றம்) கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது. + +யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் 1658 ஜூன் 22 இல் கைப்பற்றினர். போர்த்துக்கேயரின் கோட்டையையே ஒல்லாந்ததும் சில ஆண்டுகள் பயன்படுத்தினர். பின்னர் அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள். முதலில் ஐங்கோணக் கோட்டையின் உள் அரண்களையும், பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் வெளிச் சுற்று அரண்களையும் கட்டினர். + +1984–1987 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை இராணுவத்தின் வசமே இருந்து வந்தது. 1989 ஆம் ஆண்டில் இந்திய அமைதிகாக்கும் படை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட புலிகள் பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. 1995 ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோ��்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன. + + + + + +பிலிப்பே டி ஒலிவேரா + +பிலிப்பே டி ஒலிவேரா 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையிலிருந்த போத்துக்கீசத் தளபதிகளுள் ஒருவன். 1619 இல் இவன் தலைமையில் வந்த படையினரே யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி அதனைப் போத்துக்கீசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். இதன் பின்னர் இப்பகுதியின் "கப்டன் மேஜரா"க ஒலிவேராவே நியமிக்கப்பட்டான். கடும் போக்குக் கத்தோலிக்கனான இவன், பிரபலமான நல்லூர்க் கந்தன் கோயில் உட்பட, யாழ்ப்பாணத்திலிருந்த பல இந்துக் கோயில்களை இடிப்பித்தான். நல்லூர் கோயில் அழிக்கப்பட்டது தொடர்பாக குவைறோஸ் பாதிரியார் தானெழுதிய நூலில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: +யாழ்ப்பாண அரசின் கீழிருந்த பகுதிகளின் தலைநகரமாக யாழ்ப்பாண நகரத்தை உருவாக்கியவனும் இவனே. சுமார் எட்டு வருடங்கள் கப்டன் மேஜராக யாழ்ப்பாணத்தை நிர்வகித்துவந்த ஒலிவேரா, 1627 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் தனது 53 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானான். +பிற சமயங்களின்பால் கடுமையாக நடந்து கொண்டாலும், யாழ்ப்பாணத்தில் ஏழைகளுக்கும், விதவைகள் முதலியவர்களுக்கும் பயன்படும்வகையில் "மிசரிக்கோடியா" என்று அழைக்கப்பட்ட வைத்தியசாலையொன்றைத் தன் சொந்தச் செலவிலேயே கட்டிக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. எல்லோரும் ஒலிவேராமீது அன்பு கொண்டிருந்ததாகவும், அவனை "பிலிப்பே ராஜா" என்றே அழைத்து வந்ததாகவும் குவைறோஸ் பாதிரியார் குறிப்பிடுகின்றார். 1627 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ்ப்பாணத்தை உலுக்கிய சூறாவளியின் போது, அவனது வீட்டில் ஒதுங்கிய மக்கள் மீது அவன் காட்டிய அக்கறையையும் அவர்கள் தொடர்பில் அவன் நடந்துகொண்ட விதம் பற்றியும் குவைறோஸ் உயர்வாகப் பேசியுள்ளார். + + + + +சமசுகிருதம் + +சமற்கிருதம் ("Sanskrit"), அல்லது சங்கதம் என்பது இந்தியாவின் மிகப்பழைய மொழிகளுள் ஒன்று. இம்மொழியையும் பாகத மொழிகளையும் வடமொழி என்ற பொதுப்பெயரிலும் அழைப்பர். இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இது தற்போது பெரும்பாலும் பொது பேச்சு வழக்கில் இல்லாத மொழியாகும். இந்தியாவில், உத்தராகண்ட் மாநிலம் வடமொழியை இரண்டாம் அலுவலக மொழி���ாகக் கொண்டுள்ளது. தற்போது கர்நாடகா மாநிலத்தில் சிமோகா அருகே இரண்டு ஊர்களில் அலுவல் மொழியாக உள்ளது. எனினும் இந்து சமயத்தின் நான்கு வேதங்கள், பல சமய நூல்கள் உட்பட ஏராளமான தொன்மையான இந்திய இலக்கியங்கள் இம்மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. இந்தியாவின் அலுவல் மொழிகள் பதினைந்தில் இதுவும் ஒன்றாகும். இந்தி, வங்காளி, குஜராத்தி, மராத்தி, காசுமீரி, அரியான்வி, நேபாளி, ஒரியா, கொங்கணி, மைத்திலி, சிந்தி, பஞ்சாபி, உருது முதலிய மேம்பட்ட வட இந்திய மொழிகள் பலவற்றுக்கும் இதுவே மூல மொழியாகக் கருதப்படுகின்றது. தென் இந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவற்றிலும் வடச்சொல் இருப்பதைக் காணலாம். எனினும் பல சொற்கள் தமிழ் மொழியில் இருந்து எடுக்கப் பட்டவையாக அறிஞர்கள் (பாவணர் நூற்களில் நிரூபித்தார்) கூறுவர். +சமற்கிருத பாரதி அமைப்பு, பரந்த அளவில் பேச்சு வழக்கில் எளிய வடமொழியை மீண்டும் பயன்படுத்த மக்களுக்கு பயிற்சியளித்து வருகின்றது. + +தொல்காப்பியத்தின் மூன்று நூற்பாக்களிளும் தமிழில் "வடமொழி" என தமிழாக்க விதிக்கிறது. எனவே "சமசுகிருதம்" அல்லது "சமற்கிருதம்" எனும் சொற்கள் கொடுந்தமிழாக கருதப்படுகிறது. தற்கால பயனில் சீனிவாச சர்மா இயற்றிய "வடமொழி நாடக இலக்கிய வரலாறு", சு. சாத்திரியார் இயற்றிய "வடமொழி நூல்வரலாறு" எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. + +சமற்கிருதம் என்பதன் பொருள் (அழகு/இலக்கணம்) வடமொழி பிராகிருதத்தின் (பிராகிருதம் = மக்கள் பேச்சு வழக்கில் முதன்மை கொண்டது) செம்மையான மொழிவடிவம் என்று கருதப்படுகின்றது. பிராகிருதம் என்பது மகதி, மகாராஷ்டிரி, சௌரசேனி, பைசாச்சி முதலிய நான்கு அமைப்புகளுள் அடங்கும் மொழிகளை குறிக்கும். பாளி ஒரு பிராகிருத மொழியாகும். வேதிய வடமொழியிருந்து தோன்றி பிறகு கி.மு. முதலாம் ஆயிரவாண்டில் மக்கள் பேச்சுவழக்கில் திரிந்து வெவ்வேறு மொழிகளாக ஆனவை பிராகிருதம் என்ற பெயர் பெற்றது. + +இம் மொழி பல கட்டங்களில் இலக்கணங்கள் இயற்றப்பட்டு செம்மைப்படுத்தப்பட்டது. இதன் பழைய வேதகால வடிவம், எல்லாப் பிற்கால இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் மூலமான முதல்நிலை-இந்தோ-ஐரோப்பிய மொழிக்குக் கிட்டியதாகும். வேதகால வடமொழி ஈரானின் அவெஸ்தன் மொழியை ஒத்தது. இதன் இலக்கணமும் சொல்லாக்கமும் உறுதியான பின்னர், இது ஒரு அழகியல் ஒழுங்கமைவுக்கு உட்பட்ட மொழியானதுடன், நாடகம், மருத்துவம், அரசியல், வானியல், கணிதம் முதலியவை சார்ந்த இலக்கியங்களும் உருவாயின. + +பல மேம்பட்ட ஐரோப்பிய மொழிகளுடனும், கிரேக்கம், இலத்தீன் முதலிய செம்மொழிகளுடனுமான வடமொழியின் பொது உற்பத்தியை, வடமொழியில் தாய் (மாத்ர்), தந்தை (பித்ர்) என்பவற்றுக்கான சொற்கள் மூலம் அறிந்துகொள்ள முடியும். ஹெயின்றிச் ரோத் மற்றும் ஜொஹான் ஏர்ணெஸ்ட் ஹங்ஸ்லெடன் என்பவர்களால் ஆரம்பித்துவைக்கப்பட்ட ஐரோப்பிய வடமொழி ஆராய்ச்சி, வில்லியம் ஜோன்ஸ் இந்த மொழிக்குடும்பத்தைக் கண்டுபிடிக்க வித்திட்டதுடன், மொழியியலின் வளர்ச்சியிலும் தலைமையான பங்கு வகித்தது. உண்மையில், மொழியியல், வடமொழிக்கான விதிகளை ஒழுங்கமைக்கும் முயற்சியின்போது, இந்திய இலக்கணவியலாளர்களாலேயே முதலில் வளர்க்கப்பட்டது. பிற்காலத்தில் உலகின் ஏனைய பகுதிகளில் வளர்ந்த மேம்பட்ட மொழியியல், மேற்படி இலக்கணவியலாளர்களுக்குப் பெருமளவு கடமைப்பட்டுள்ளது. + +வடமொழியே இந்தோ-ஆரியனின் ஒரு கிளையான இந்தோ-ஈரானியனின் மிக மூத்த உறுப்பு மொழியாகும். + +வேதங்களும், தொன்மையான வடநூல்களும் எழுதப்பட்ட வேதகால வடமொழியே இம்மொழியின் மிகப்பழைய வடிவமாகும். மிகப் பழைய வேதமான இருக்கு வேதம் கி.மு இரண்டாவது ஆயிரவாண்டின் இடையில் இயற்றப்பட்டது என்பது தவறு. வேதங்களுக்கு கால வரையறை கிடையாது. வேதம் என்றும் உள்ளவை. வேதகால வடிவம் கி.மு முதலாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை வழக்கிலிருந்தது. ஏறத்தாழ இக் காலப்பகுதியில் வடமொழி, சமயம் மற்றும் கல்வியைப் பொறுத்தவரை தனது முதல் நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்கு இறங்கியது. இக்காலப்பகுதியில் நிகழ்ந்த வடமொழியின் அமைப்புப் பற்றிய ஆய்வுகள் மொழியியலின் தொடக்கத்துக்கு வழி சமைத்தன. இப்பொழுது கிடைக்கும் மிகத் தொன்மையான வடமொழி இலக்கணம் +பாணினியின் c. கி.மு 500 அஷ்டாத்தியாயி ("8 அத்தியாய இலக்கணம்"). காப்பிய வடமொழி என்று அழைக்கப்படும் ஒரு வடமொழி வடிவத்தை மகாபாரதம் மற்றும் ஏனைய இந்துக் காப்பியங்களில் காணலாம். + +கீழ் மட்ட வடமொழியே பிராகிருதமாகவும் (ஆரம்ப கால பௌத்த நூல்கள் இம் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன), மேம்பட்ட இந்திய மொழிகளாகவும் வளர்ச்சியடைந்திருக்கக்கூடும். வடமொழிக்கும் தென்னிந்தியா��ின் திராவிட மொழிகளுக்கிடையேயும்கூட இருவழிச் செல்வாக்கு இருந்துள்ளது. + +வரலாற்று நோக்கில் சமஸ்கிருதத்துக்கோர் எழுத்துமுறை இருந்ததில்லை. பண்டைய பிராமி எழுத்துக்கள் அசோகச் சக்கரவர்த்தியின் தூண் கல்வெட்டுக்களின் காலம் வரை கூடப் புழக்கத்திலிருந்தது. பின்னர், கிரந்த எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டதுடன், தெற்கே கன்னடம் போன்ற எழுத்துக்களும், வடக்கே வங்காளம் மற்றும் ஏனைய வட இந்திய எழுத்துக்களும் பயன்படுத்தப்பட்டன. எனினும் பல ஆண்டுகளாக, சிறப்பாக அண்மைக் காலங்களில் தேவநாகரி எழுத்துக்களே பரவலாக சமஸ்கிருதத்துடன் தொடர்புபட்டுள்ளது. சில சூழல்களில், குறிப்பாக தேவநாகரி எழுத்துக்கள் உள்ளூர் எழுத்து முறைமையாக இல்லாத பகுதிகளில் கிரந்த எழுத்துக்கள் அல்லது உள்ளூர் எழுத்துக்கள் பயன்பாட்டிலுள்ளன. + +சமஸ்கிருதத் தொடர்பில் எழுத்து அறிமுகப் படுத்தப்பட்டது பிற்காலத்திலே ஆகும். பரம்பரை பரம்பரையாக அறிவு வாய் மொழி மூலமே கடத்தப்பட்டு வந்தது. எழுத்து நடு கிழக்கிலிருந்து வந்த வணிகர்களூடாக இந்தியாவுக்கு அறிமுகப் படுத்தப்பட்டிருக்கலாம் என்று ரைஸ் டேவிட் (Rhys Davids) என்பார் கருதுகின்றார். எனினும், சமஸ்கிருதம் தொடர்ந்தும் பல காலம் வாய்மூல மொழியாகவே புழங்கி வந்தது. எனினும், ஒலிகள் தொடர்பான வேத தத்துவங்களும், எழுத்திலக்கணமும், இந்துக் குறியீட்டு முறையில் வகிக்கும் பங்கு கவனிக்கத் தக்கதாகும். 51 எழுத்துக்களைக் கொண்ட "வர்ணமாலா" என்று அழைக்கப்படும் ஒலிமாலை, காளியின் 51 மண்டையோடுகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. + +சமஸ்கிருதத்தின் சொற்தொகுதியையும், இலக்கண அடிப்படையையும் கொண்டு உருவான தற்காலத்து மொழிகள் மீதான அம் மொழியின் தாக்கம் மிகவும் பெரியது. சிறப்பாக, இந்தியச் சமுதாயத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் மத்தியில், சமஸ்கிருதம், இந்து சமய நூல்களின் களஞ்சியமாகவும், வழிபாட்டுக்குரிய மொழியாகவும் போற்றப்படுகின்றது. வழிபாடுகளில் நாட்டார் மற்றும் பிரதேச வழக்காறுகளும் பரவலாகக் காணப்பட்டபோதிலும், பல இந்துக்கள் சம்சுகிருத மந்திரங்களை ஓதி வருவதுடன், பெரும்பாலான கோயில்களில் கிரியைகளும் சமஸ்கிருத மொழியிலேயே இன்றும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பிரதேச மொழிகளான வங்காளி, குசராத்தி, இந்தி முதல���யவற்றின், தூய நிலை எனக் கருதப்படும், உயர்நிலை வடிவங்கள் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்டவையாகக் காணப்படுகின்றன. தற்கால இந்திய மொழிகளில், இந்தி பேச்சு வழக்கில் அரபி மற்றும் பாரசீக மொழிகளின் தாக்கத்தைப் பெருமளவில் கொண்டிருந்தபோதும், வங்காளி, மராத்தி போன்ற மொழிகள் கூடிய அளவில் சமஸ்கிருத சொல் மூலங்களைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தியாவின் தேசியப் பாடலாக கருதப்படும் "ஜன கண மன", என்ற பாடல் பெருமளவில் சமஸ்கிருதப் படுத்தப்பட்ட வங்காள மொழியின் உயர்நிலை வடிவில் இயற்றப்பட்டது. "வந்தே மாதரம்" என்ற சுதந்திரப்பாடல் முழுமையாக சமஸ்கிருததில் இயற்றப்பட்டதாகும். இந்து சமயம் தொடர்பான கல்வியைப் பொறுத்தவரை, சமுதாயத்தின் உயர்மட்டத்திலுள்ள படித்தவர்கள் மத்தியில் சமஸ்கிருதம் இன்னும் கற்கை மொழியாகப் போற்றப்பட்டது. சமஸ்கிருதம் அனைத்து மொழிகளின் தாயாகக் கருதப்படுகிறது. + +சீன மொழியிலும், பண்பாட்டிலும் கூடச் சமஸ்கிருத மொழியின் தாக்கங்கள் காணப்படுகின்றன. பௌத்த சமயம் சீனாவுக்குப் பரவியபோது சமஸ்கிருதம் கலந்த பிராகிருத மொழி நூல்களூடாகவே பரவியது. பௌத்த நூல்கள் சீன மொழியில் எழுதப்பட்டபோது, சமஸ்கிருதச் சொற்களை ஒலிமாற்றம் செய்தே எழுதினர். இதனால் பல சமஸ்கிருத மொழிச் சொற்கள் சீன மொழியிலும் கலந்தன. + +இந்திய மொழிகளல்லாத வேறும் பல மொழிகளிலும் சமஸ்கிருதச் சொற்கள் கலந்திருப்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாகத் தாய் மொழியிலும், மலைய மொழியிலும், ஜப்பானிய மொழியிலும், திபேத்திய மொழியிலும், பருமிய மொழியிலும் வேறு மொழிகளிலும் பல சமஸ்கிருதச் சொற்கள் உள்ளன. இந்துக் கடலோடிகளின் வழியாகப் பிலிப்பைன் நாட்டிலும் கூட அவர்களது தகாலாக் (Tagalog) மொழியிலும் "குரு" (ஆசிரியர்) போன்ற சொற்கள் வழக்கில் உள்ளன. + +சமஸ்கிருதம் 48 ஒலியன்களைக் கொண்டது (வேதகாலத்தில் 49 ஒலியன்கள் இருந்தன). பெரும்பாலான இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் சமஸ்கிருதத்தின் அசையெழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். உருது மற்றும் தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்றவற்றின் எழுத்து வடிவங்கள் இதற்கு விதி விலக்காகும் தமிழ் மட்டும் தனித்த மொழியாகும். + +ஒலிகள் அவற்றின் மரபுவழி வரிசைப்படி இங்கே தரப்படுகின்றன: உயிர்கள், வெடி���்பொலிகளும் (stops) மூக்கொலிகளும் (nasals)(வாயின் பின் பகுதியிலிருந்து முன்னோக்கி நகர்பவை|, இறுதியாக இடையொலிகளும் (liquids), குழிந்துரசொலிகளும் (sibilants). + +(குறிப்பு: நெட்டுயிர்கள், ஒத்த குறில்களிலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டவை. இவற்றுடன் மேலதிகமாக நீண்டொலிக்கும் உயிர்களும் உள்ளன. இவை அழைத்தல், வாழ்த்துதல் போன்ற சந்தர்ப்பங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பயன்படுகின்றன. + +சமஸ்கிருதத்தை ஒலிபெயர்ப்பதற்கு இலத்தீன் வரிவடிவங்களைப் பயன்படுத்தும் பல முறைகள் உள்ளன. பெருமளவு பயன்பாட்டிலுள்ளது IAST (International Alphabet of Sanskrit Transliteration) என்னும் அனைத்துலக சமஸ்கிருத ஒலிபெயர்ப்பு முறை ஆகும். கல்விசார்ந்த தேவைகளுக்கான தரநிலையான இம்முறை, ஒலியடிக் கூறுகளை (diacritical marks) உள்ளடக்கியது ஆகும். கணினிகளில் இம்முறையைப் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக வேறு முறைகளும் உருவாக்கப்பட்டன. இவற்றுள், ஹார்வார்ட்-கியோட்டோ (Harvard-Kyoto), ITRANS என்பனவும் அடங்கும். ITRANS இணையத்தில் பரவலான பயன்பாட்டில் உள்ளது. + +உயிரெழுத்துக்கள் மூக்கொலிச் சாயல் (nasalization) பெறுவதுண்டு. + +சமஸ்கிருதம், பின்வரும் ஒலிப்பிடங்களில் (places of articulation), அதிர்வில் ஒலி (voiceless), "ஹ்" இணையொலியுடன் கூடிய அதிர்வில் ஒலி (voiceless aspirate), அதிர்வுடை ஒலி (voiced), "ஹ்" இணையொலியுடன் கூடிய அதிர்வுடை ஒலி (voiced aspirate) மற்றும் மூக்குத் தடையொலி (nasal stop) என்பவற்றைக் கொண்டுள்ளது: + + + + + + +சிங்கப்பூர் + +சிங்கப்பூர் அல்லது அலுவல்முறையாக சிங்கப்பூர் குடியரசு ("The Republic of Singapore", சீனம்: 新加坡共和国, "Xīnjīapō Gònghéguó"; மலாய்: "Republik Singapura") தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு தீவு நாடு. மலேசியத் தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ளது, ஜொகூர் நீர்ச்சந்தி இதனை மலேசியாவிடமிருந்து பிரிக்கிறது. தெற்கில் சிங்கப்பூர் நீர்ச்சந்தி இந்தோனேசியாவின் ரியாவு தீவுகளைப் பிரிக்கின்றது. சிங்கப்பூர் பெரிதும் நகரமயம் ஆன நாடாகும். மிகக்குறைவான அளவிலேயே மழைக்காடுகள் உள்ளன. நிலச்சீரமைப்பு மூலம் கூடுதலான நிலங்கள் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ளன. + +கிபி 2 ஆம் நூற்றாண்டில் மனிதக் குடியேற்றம் தொடங்கிய நாளிலிருந்து சிங்கப்பூர் பல உள்ளூர் இராச்சியங்களின் பகுதியாக விளங்கி வந்துள்ளது. 1819 ஆம் ஆண்டில் ஜொகூர் சுல்தானகத்தின் அனுமதியுடன் பிரித்தானிய கிழக்கிந்��ிய நிறுவனம் சிங்கப்பூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1824 இல் பிரித்தானியாவின் நேரடி ஆட்சியினுள் வந்தது. 1826 இல் தென்கிழக்காசியாவின் ஒரு பிரித்தானிய குடியேற்ற நாடாக ஆனது. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியர்களால் சிறிது காலம் ஆக்கிரமிக்கப்பட்ட சிங்கப்பூர் மறுபடியும் 1945ல் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் வந்து பிறகு 1963ல் ஏனைய பிரித்தானிய குடியேற்றப் பகுதிகளோடு சேர்ந்து மலேசியாவோடு இணைந்து பிரித்தானியாவிடமிருந்து விடுதலை அடைந்தது. 1965 ஆகத்து 9 இல் மலேசியாவிலிருந்து பிரிந்து, விடுதலை பெற்று தனிக் குடியரசு நாடாக உருவானது. அன்றிலிருந்து சிங்கப்பூரின் வளம் பெருமளவு விரிவடைந்து நான்கு ஆசியப் புலிகளில் ஒன்றானது. + +சிங்கப்பூர் வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமையில் ஓரங்க நாடாளுமன்றக் குடியரசு ஆட்சியைக் கொண்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு முதல் மக்கள் செயல் கட்சி அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சி நடத்தி வருகிறது. + +கொள்வனவு ஆற்றல் சமநிலையின் அடிப்படையில், சிங்கப்பூரின் ஆள்வீத வருமானம் உலக நாடுகளில் மூன்றாவது நிலையில் உள்ளது. சிங்கப்பூரின் மக்கள்தொகை 5 மில்லியனுக்கும் சற்று மிகுதியாகும். இவர்களில் 2.91 மில்லியன் உள்ளூரில் பிறந்தவர்கள். மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் சீனர்கள். இவர்களுக்கு அடுத்ததாக மலாய், மற்றும் சிங்கப்பூர் இந்தியர்கள் உள்ளனர். சிங்கப்பூரின் அலுவல்முறை மொழிகள்: ஆங்கிலம், சீனம், மலாய் மொழி, தமிழ் மொழி ஆகியவையாகும். ஆசியான் அமைப்பை நிறுவிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் ஏப்பெக் அமைப்பின் செயலகம் அமைந்துள்ளது. அத்துடன், கூட்டுசேரா இயக்கம், பொதுநலவாய நாடுகள் ஆகிய அமைப்புகளிலும் உறுப்பு நாடாக உள்ளது. + +மிகவும் சிறிய பரப்பளவு கொண்ட சிங்கப்பூர், தென்கிழக்காசியாவில் மிகச்சிறிய நாடாகும். விடுதலைக்குப் பின் நடந்த பல்வேறு பொருளாதார மாற்றங்களினாலும், அரசின் துணையோடு தன் உள்கட்டுமானத்தினைத் தரப்படுத்திக் கொண்டதாலும், சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது. + +சிங்கப்பூர் சிங்கம் +ஊர் = சிங்கப்பூர், அதாவது சிங்கத்தின் ஊர் என்ற தமிழ் பொருளைக் கொண்டதும் ஆகும். சிங்கப்பூர் என்ற பெயர் "சிங்கப்பூரா" என்ற மலாய் சொல்லிலிருந்து மருவிய���ாகவும் கூறப்படுகிறது. மலாய் சொற்களான சிங்கா (சிங்கம்) மற்றும் பூரா (ஊர்) சேர்ந்து சிங்கப்பூரா என்று அழைக்கப்படுகிறது. மலாய் வரலாற்றின்படி 14ம் நூற்றாண்டு சுமாத்திரா மலாய் இளவரசர் சாங் நிலா உத்தமா, ஒரு கடும் புயலின் போது இந்தத் தீவில் ஒதுங்கினார். அப்போது அவர் சிங்கம்போல ஒரு மிருகத்தைப் பார்த்து, சிங்கம் என்று தவறுதலாக நினைத்துக்கொண்டு சிங்கபூரா என்று அழைத்ததாக வரலாற்றுக்கதையும் உண்டு. + +சிங்கப்பூரின் வரலாறு 14 ஆம் நூற்றாண்டிலிருந்து குறிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முன் சிங்கப்பூரும் மலேசியாவும் கடாரம் கொண்ட சோழ மண்டலத்தின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம் என்று தமிழ்நாட்டின் வரலாறு காட்டுகிறது. 14ம் நூற்றாண்டில் அது துமாசிக் என்ற பெயர் கொண்ட நகரமாகக் காட்சியளித்தது. அது சுமாத்திராவில் இயங்கிய ஸ்ரீ விஜயப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டது. சிங்கை தீவில் ஒரு நகரம் இருந்தது என்றும் அந்த நகரம் தென்கிழக்காசியாவில் ஒரு முக்கிய வர்த்தக மையமாக விளங்கியது என்று மலாய் மக்களின் வரலாறு கூறுகிறது. + +ஸ்ரீவிஜய பேரரசு மறைந்த பிறகு, துமாசிக் மற்ற அரசுகளால் தாக்கப்பட்டது. ஜாவாவில் இருந்த மாஜாபாஹித் பேரரசு, தாய்லாந்தில் இயங்கிய அயுத்திய அரசு போன்றவை அந்த நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயன்றன. தாய்லாந்தின் அயுத்திய அரசு குறைந்தது ஒரு முறை துமாசிக் தீவைத் தாக்க முயன்று தோல்வி அடைந்தது என்று வரலாறு காட்டுகிறது. அந்நேரத்தில் – 15ம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் – துமாசிக் நகருக்கு "சிங்கப்பூரா" என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. + +1819 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் என்பார் தலைநிலப்பகுதியில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிட முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்ட அவர், வணிக நிலையொன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையொன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 1824 ஆம் ஆண்டுவரை சிங்கப்பூர் மலே ஆட்சியாளரின் ஆளுகைக்க�� உட்பட்ட பகுதியாகவே இருந்தது. ஆகஸ்ட் 1824ல் பிரித்தானியா முழுத்தீவையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோது சிங்கப்பூர் ஒரு பிரித்தானியக் குடியேற்றநாடு ஆகியது. சிங்கப்பூரிலிருந்த இரண்டாம் வதிவிட அதிகாரியான ஜான் குரோபுர்ட் என்பவரே சிங்கப்பூரை பிரித்தானியாவுக்கு உரியதாக்கியவர். இவர் 1824 ஆகஸ்ட் 2 ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் ஒப்பந்தமொன்றைச் செய்தார். இதன் அடிப்படையில் சுல்தான் தீவு முழுவதையும் பிரித்தானியாவுக்குக் கையளித்தார். இதுவே நவீன சிங்கப்பூரின் தொடக்கம் எனலாம். ராபிள்சின் உதவி அதிகாரியான வில்லியம் பர்குகார் ("William Farquhar") சிங்கப்பூரின் வளர்ச்சியையும், பல்லின மக்களின் உள்வருகையையும் ஊக்கப்படுத்தினார். இந்த உள்வருகை கட்டுப்பாடற்ற வருகுடியேற்றக் கொள்கை காரணமாக ஏற்பட்டது. 1856 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய இந்திய அலுவலகம் சிங்கப்பூரை ஆட்சிசெய்தது. ஆனால் 1867 ஆம் ஆண்டில், சிங்கப்பூர், மக்கள் பிரித்தானியாவின் முடிக்குரிய குடியேற்ற நாடாக, பிரித்தானிய அரசரின் நேரடி ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டது. 1869 ஆம் ஆண்டளவில் சுமார் 100,000 மக்கள் இத்தீவில் வாழ்ந்தனர். சிங்கப்பூரின் முதலாவது நகரத் திட்டமிடல் முயற்சி ஒரு பிரித்தாளும் உத்தியாகவே மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டப்படி தீவின் தெற்கு பகுதியில் வெவ்வேறு இன மக்கள் தனித்தனிப் பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். + +சிங்கப்பூர் ஆறு, பல்வேறு இனக்குழுக்களைச் சேர்ந்த வணிகர்களும், வங்கியாளர்களும் நிறைந்த பகுதியாக விளங்கியது. சீன, இந்தியக் கூலித் தொழிலாளர்கள் படகுகளில் பொருட்களை ஏற்றியிறக்கும் வேலை செய்துவந்தனர். மலாயர்கள் பெரும்பாலும் மீனவர்களாகவும், கடலோடிகளாகவும் இருந்தனர். அராபிய வணிகரும், அறிஞர்களும் ஆற்றுக் கழிமுகத்தின் தென்கிழக்குப் பகுதியில் வாழ்ந்தனர். அக்காலத்தில் மிகவும் குறைவாகவேயிருந்த ஐரோப்பியக் குடியேற்றக்காரர் கானிங் ஹில் கோட்டைப் பகுதியிலும், ஆற்றின் மேல் பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஐரோப்பியரைப் போலவே இந்தியர்களும் தீவின் உட்பகுதியிலேயே குடியேறினர். இன்று சின்ன இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி இருக்கும் இடமே இது. விடுதலைக்குப் பின்னர் 1960களில் பெருமெடுப்பிலான மீள்குடியெற்ற நடவடிக்கைகளின்போது அறிப��்பட்டது தவிர, அக்காலத்தின் நாட்டுப்புறத் தனியார் குடியேற்றங்கள்பற்றி மிகக்குறைவாகவே அறியவருகிறது. + +பினாங்கு, மலாக்கா ஆகிய நகரங்களுடன் சிங்கப்பூர் நீரிணைக் குடியேற்றங்களின் ("Straits Settlements") ஒரு பாகமாக இருந்தது. சப்பானியருடைய எழுச்சிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வேகமாகத் தமது படைகளைப் பெருக்கிவருவதைப் பிரித்தானியா அறிந்திருந்தது. தென்கிழக்காசியாவில் இருந்த தமது சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகச் சிங்கப்பூரின் வட முனையில் கடற்படைத் தளம் ஒன்றை அமைப்பதற்குப் பிரித்தானியா முடிவு செய்திருந்தது. ஆனால் ஜெர்மனியுடன் ஏற்பட்ட போரினால் போர்க் கப்பல்களையும், தளவாடங்களையும் ஐரோப்பாவுக்குக் கொண்டுவரவேண்டி இருந்ததனால் இத் திட்டம் நிறைவேறவில்லை. இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகள்(ஜப்பன் படைகள் ) மலாயாவைக் கைப்பற்றிக் கொண்டன. அப்படைகள் சிங்கப்பூரைத் தாக்கியபோது, பெரும்பாலான தமது படைகளை ஐரோப்பாவுக்கு அனுப்பிவிட்டுக் குறைந்த படைபலத்துடன் இருந்த பிரித்தானியர் 6 நாட்களில் தோல்வியடைந்ததுடன், புகமுடியாதது என்று சொல்லப்பட்ட கோட்டையையும் 1942 பெப்ரவரி 15 ஆம் தேதி சப்பானியத் தளபதி தொமோயுக்கி யாமாஷித்தாவிடம் ("Tomoyuki Yamashita") ஒப்படைத்துச் சரணடைந்தனர். இத்தோல்வியை "பெரும் இழப்பு" என்றும் "பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய சரணாகதி" என்றும் அப்போதைய பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் குறிப்பிட்டார். சிங்கப்பூரின் கடற்படைத் தளத்தைச் சப்பானியர் பயன்படுத்தாமல் இருப்பதற்காக, அது சப்பானியரிடம் வீழ்ச்சியடையு முன்பே அழிக்கப்பட்டுவிட்டது. சப்பானியர் சிங்கப்பூரின் பெயரை "ஷோவாவின் காலத்தில் பெறப்பட்ட தெற்குத் தீவு" என்னும் சப்பானியத் தொடரைச் சுருக்கி "ஷொனான்டோ" என மாற்றினர். உலகப் போரில் சப்பானியர் தோல்வியுற்ற ஒரு மாதத்தின் பின்னர் 1945 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் தேதி சிங்கப்பூர் மீண்டும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. + +1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசினுள் ஒரு தன்னாட்சி பெற்ற நாடானது. யூசோஃப் பின் இசாக் என்பவர் நாட்டுத் தலைவராகவும், லீ குவான் யூ பிரதமராகவும் ஆயினர். 1963 ஆகஸ்டில் சிங்கப்பூர் ஒருதலைப் பட்சமாகத் தன்னை முழு விடுதலைப��ற்ற நாடாக அறிவித்துக் கொண்டது. 1963 ஆம் ஆண்டு செப்டெம்பரில் மலாயா, சாபா, சரவாக் ஆகியவற்றுடன் சேர்ந்து மலேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது. இரண்டு ஆண்டுகள் கழித்து சிங்கப்பூரில் ஆட்சியிலிருந்த மக்கள் செயர் கட்சிக்கும் கோலாலம்பூரில் இருந்த மத்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்ட கொள்கை வேறுபாடுகள் காரணமாக 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி சிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி இறைமையுள்ள நாடானது. யூசோப் பின் இஷாக் சிங்கப்பூரின் முதலாவது தலைவர் ஆனார். லீ குவான் யூ பிரதமராகத் தொடர்ந்தார். + +சிங்கப்பூர் தன்னிறைவு பெற முயன்ற வேளையில், பெருமளவிலான வேலையின்மை, வீட்டுப் பற்றாக்குறை, நிலம் மற்றும் இயற்கை வளப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை அந் நாடு எதிர் நோக்கவேண்டியிருந்தது. லீ குவான் யூ பிரதமராக இருந்த, 1959 தொடக்கம் 1990 வரையான காலப்பகுதியில் பரவலான வேலையில்லாப் பிரச்சினையைச் சமாளித்ததுடன், வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்திப் பெருமளவிலான வீடமைப்புத் திட்டங்களும் அமைக்கப்பட்டன. இக் காலத்திலேயே நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன; இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது. + +அதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் உலகிலேயே செல்வம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. அதன் ஆள்வீத மொத்த தேசிய உற்பத்தி, ஐரோப்பிய நாடுகள் பலவற்றைவிட அதிகமாக இருக்கிறது. சிங்கப்பூரின் துறைமுகம் உலகில் அதிக வர்த்தகக் கப்பல்களைக் காணும் ஒன்று. + +சிங்கப்பூர் 63 தீவுகளை உடையது, இதில் பெரிய முதன்மை தீவு சிங்கப்பூர் தீவென அழைக்கப்படுகிறது . மலேசியாவின் ஜொகூர் மாநிலத்துடன் இரண்டு சாலைகளால் இணைக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள இணைப்பு சாலைக்குப் பெயர் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே, மேற்கில் உள்ள இணைப்பு சாலைக்கு டுவசு என்று பெயர். சந்தோசா, புளாவ் மேகோங்ர புளாவ் யுபின், ஜூராங் தீவு ஆகியவை மற்ற குறிப்பிடதக்க தீவுகள் ஆகும். + +கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் செயலில் உள்ளது. இதன் காரணமாக 1960ல் 581.5 ச. கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. 2030ம் ஆண்டில் மே���ும் 100 ச. கிமீ நிலம் மீட்கப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன. நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது . புகிட் திமா என்பது குறிப்பிடத்தகுந்த அழிக்கப்படாத காடாகும். + +சிங்கப்பூர் அயனமண்டல தட்பவெப்பநிலை உள்ள நாடாகும். ஆண்டு முழுவதும் வெப்பநிலையில் பெரிய மாறுதல்கள் இருக்காது. அதிகளவு ஈரப்பதம், மழைப்பொழிவு இருக்கும். இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் இங்கு வானம் மங்கலாக மூட்டத்துடன் காணப்படும். + +விடுதலைக்கு முன்பு இப்பகுதியிலிருந்த பிரித்தானிய குடியிருப்புக்களின் தலைநகராகச் சிங்கப்பூர் விளங்கியது. பிரித்தானியரின் முதன்மை கடற்படை தளமாகக் கிழக்காசியாவில் இது விளங்கியது. பிரித்தானியாவின் கடற்படை தளமாக இருப்பதால் சிங்கப்பூரில் உலகின் பெரிய உலர் கப்பல் பராமரிக்கும் களம் இருந்தது. சிங்கப்பூர் கிழக்கின் ஜிப்ரால்ட்டர் என்று அழைக்கப்பட்டது. சுயஸ் கால்வாய் திறந்ததால் உலக வணிகத்தில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டது. அதனால் சிங்கப்பூர் வணிகத்தின் முதன்மை வழியாக விளங்கியது. அதன் காரணமாகச் சிங்கப்பூர் துறைமுகம் உலகின் பெரிய துறைமுகமாக மாறியது. விடுதலைக்கு முன்பு சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நபர் ஒன்றுக்கு 511 டாலராக இருந்தது. இது அப்போது கிழக்காசியாவில் மூன்றாவது உயர்வான நிலையாகும். விடுதலைக்கு பின்பு அன்னிய நேரடி முதலீடு மற்றும் சிங்கப்பூர் முன்னெடுத்த தொழிற்புரட்சிக்கான வழிகளும் அந்நாட்டை புதிய பொருளாதார நாடாக மாற்றியது. + +தற்போதைய சிங்கப்பூர் சந்தை பொருளாதாரத்தின் மூலம் மிகவும் முன்னேற்றமடைந்துள்ளது. சிங்கப்பூரின் பொருளாதாரம் முதலீட்டாளர்க்கு உகந்ததாகவும் வணிக கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளது. இது உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்று. சிங்கப்பூர் உலகின் 14வது பெரிய ஏற்றுமதியாளராகவும் 15வது பெரிய இறக்குமதியாளராகவும் உள்ளது. இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு, மூடிசு, பிட்ச் ஆகிய மூன்று கடன் மதிப்பீடு நிறுவனங்களின் நாணயநிலை மதிப்பீட்டில் ஆசியாவில் சிங்கப்பூர் மட்டுமே உயர் மதிப்பீ���ு (AAA) பெற்ற நாடாகும் . ஐக்கிய அமெரிக்கா, நிப்பான், ஐரோப்பா ஆகியவற்றின் 7,000க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. 1500 சீன, இந்திய நிறுவனங்களின் கிளைகள் இங்குள்ளன. இங்குள்ள அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய அன்னிய முதலீட்டாளர் சிங்கப்பூராகும் . சிங்கப்பூரின் தொழிலாளர்களில் கிட்டதட்ட 44 விழுக்காட்டினர் சிங்கப்பூர் குடிமக்கள் அல்லாத வெளிநாட்டினராகும். சிங்கப்பூர் பத்தாவது பெரிய வெளிநாட்டு நிதியிருப்பை கொண்டுள்ள நாடாகும். சிங்கப்பூரின் நாணயம் சிங்கப்பூர் வெள்ளியாகும், இதை வெளியிடுவது சிங்கப்பூர் பண அதிகார அமைப்பாகும். சிங்கப்பூர் வெள்ளியை புருனை வெள்ளியுடன் பரிமாற்றிக்கொள்ளலாம் . + +சிங்கப்பூர் பொருளாதாராம் ஏற்றுமதியையே பெரிதும் நம்பி உள்ளது. இயந்திர பொறியியல் துறை, உயிரிமருத்துவ அறிவியல் துறை, வேதிப்பொருட்கள், மின்னனு பொருட்கள் போன்றவை ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கின்றன. சிறிய நாடாக இருந்தபோதிலும் சிங்கப்பூர் பன்முகத்தன்மை வாய்ந்த பொருளாதாரத்தை கொண்டுள்ளது. இந்த உத்தியால் ஏதாவது ஒரு துறையில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது நாட்டின் வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் பாதிக்காதென அரசு கருதுகிறது. +இதன் பொருளாதாரத்தில் சுற்றுலாத் துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. 2007ஆம் ஆண்டு 10.2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகைபுரிந்தார்கள் . சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு சூதாட்ட இடங்களை 2005ல் அரசு அனுமதித்தது. மருத்துவ சுற்றுலாவின் மையமாகத் தன்னை மேம்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் தீவிரமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 200,000 வெளிநாட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காகச் சிங்கப்பூர் வருகிறார்கள். 2012ல் ஒரு மில்லியன் மருத்துவ சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவம் பார்த்து 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியை வருமானமாகப் பெற அரசு குறிக்கோள் கொண்டுள்ளது . சிங்கப்பூர் கல்வி மையமாகவும் திகழ்கிறது. 2006ல் 80,000க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கு படித்தார்கள் . 5,000க்கும் அதிகமான மலேசிய மாணவர்கள் தினமும் ஜொகூர்-சிங்கப்பூர் காசுவல் வே வழியாகத் தினமும் வந்து படித்துச் செல்கிறார்கள். 2009ல் சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் 20% வெளிநாட்டு மாணவர்கள் படித்தார்கள். வெளிநாட்டு மாணவர்களில் பெரும்பாலோர் தென்கிழக்காசியா, சீனா, இந்தியாவைச் சார்ந்தவர்கள் + +சிங்கப்பூர் உலகின் நான்காவது முன்னணி நிதி மையமாகவும், சூதாட்டத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாகவும் திகழ்கிறது. அதிக பொருட்களைக் கையாளும் உலகின் முன்னணித் துறைமுகங்களில் சிங்கப்பூர் துறைமுகமும் ஒன்றாகும். உலக வங்கி வணிகம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் மிகக்குறைந்த இடம் எனச் சிங்கப்பூரைத் தெரிவு செய்துள்ளது இதைச் சிறந்த தளவாடங்கள் மையம் எனவும் வரிசை படுத்தியுள்ளது. இலண்டன், நியு யார்க், டோக்கியோவிற்கு அடுத்து சிங்கப்பூர் நான்காவது பெரிய வெளிநாட்டு நாணய பரிமாற்ற மையமாகும். + +2001ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகச் சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.2% குறைந்தது. இதனால் 2001 டிசம்பரில் பொருளாதார மீளாய்வு ஆணையம் ஏற்படுத்தப்பட்டு அது பொருளாதாரத்தைச் சீரமைக்க பல்வேறு கொள்கைகளைப் பரிந்துரைத்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியால் சிங்கப்பூர் மந்தநலையிலிருந்து மீண்டது. 2004ல் 8.3விழுக்காடு 2005ல் 6.4 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது, 2006ல் 7.9 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. 2009ல் 0.8 விழுக்காடு வளர்ச்சி குறைந்து 2010ல் பொருளாதாரம் மீண்டு 14.5 விழுக்காடு வளர்ச்சி ஏற்பட்டது. சேவைத் துறையிலேயே பெரும்பாலானவர்கள் வேலை செய்கிறார்கள். டிசம்பர் 2010 கணக்குப்படி 3,102,500 பணியிடங்களிலில் 2,151,400 பணியிடங்கள் சேவைத் துறையைச் சார்ந்தது ஆகும். 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் வேலை வாய்ப்பில்லாமல் இருப்பவர்கள் 2 விழுக்காடு ஆகும். + +விழுக்காடு கணக்கில் சிங்கப்பூரிலேயே அதிக மில்லியனர்கள் உள்ளனர். ஆறு வீட்டுகளில் ஒரு வீடு நிலம், வணிகம், வீடு, ஆடம்பர பொருட்கள் இல்லாமல் மில்லியன் அமெரிக்க வெள்ளியை கொண்டுள்ளது. சிங்கப்பூரில் நிலத்தின் மதிப்பு மிகவும் அதிகமாகும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்த நாடாக இருந்த போதிலும் இங்கு குறைந்தபட்ச ஊதியம் என்பது தீர்மானிக்கப்படவில்லை. முன்னேற்றமடைந்த நாடுகளில் இங்கு ஊதிய ஏற்றத்தாழ்வு மிக அதிகம் . + +சிங்கப்பூர் பண்பாடு ஒரு கலப்புப் பண்பாடு. மலாய் மக்கள், சீனர்கள், இந்தியர்கள், அரபு நாட்டினரின் பண்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. சிங்கப்பூரின் வெற்றிக்கும் அதன் தனித்துவத்துக்கும் சமய, இன நல்லுறவு அரசாங்கத்தில் முக்கிய காரணமாக அதன் சமய, இன நல்லுறவுக் கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் நாட்டின் மொத்தச் மக்கள்தொகையில் 42 விழுக்காடு வெளிநாட்டினராக உள்ளனர். அவர்கள் சிங்கப்பூரின் கலாசாரத்தில் பாரிய செல்வாக்குச் செலுத்துகின்றனர். + +பிரபலமான விளையாட்டுக்களாகக் கால்பந்து, கூடைப்பந்து, துடுப்பாட்டம், நீச்சல், படகோட்டம், மேசைப்பந்து, பூப்பந்து என்பன காணப்படுகின்றன. பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் பொது நீச்சல் குளங்கள், வெளிப்புற கூடைப்பந்தாட்ட திடல்கள், உள்ளரங்க விளையாட்டு வளாகங்கள் போன்ற வசதிகளை அருகில் கொண்ட பொது குடியிருப்பு பகுதிகளில் வாழ்கின்றனர். தண்ணீர் விளையாட்டுக்களான படகோட்டம், கயாகிங், நீர் சறுக்கு போன்றவை பிரபலமாக உள்ளன. இசுகூபா டைவிங் மற்றொரு பிரபலமான உற்சாக விளையாட்டாக இருக்கிறது. +1994 இல் உருவாக்கப்பட்ட சிங்கப்பூர் கால்பந்து லீக், தற்போது வெளிநாட்டு அணிகள் உட்பட 12 கழகங்களைக் கொண்டுள்ளது. முன்னாள் ஆஸ்திரேலிய தேசிய கூடைப்பந்து லீக் எனப்படும் சிங்கப்பூர் சிலிங்கர்சு அக்டோபர் 2009 இல் நிறுவப்பட்ட ஆசியான் கூடைப்பந்து லீக்கில் உள்ள தொடக்க அணிகளில் ஒன்றாகும். + +ஆங்கிலம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன. வசந்தம் என்பது தமிழ் தொலைக்காட்சியாகும். ஒலி என்பது தமிழ் வானொலி, தமிழ்முரசு என்பது செய்திதாள் ஆகும். மீடியாகார்ப் என்ற நிறுவனம் பெரும்பாலான தொலைக்காட்சி, வானொலி நிலையங்களை நடத்துகிறது. இது அரசு முதலீட்டு அமைப்புக்குச் சொந்தமானதாகும். சிங்கப்பூர் பிரசு கோல்டிங்சு என்பது செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பாகும். தமிழ்முரசை இவ்வமைப்பே நடத்துகிறது. சிங்கப்பூரில் ஊடக சுதந்திரம் குறைவு. சிங்கப்பூரில் 3.4 மில்லியன் இணைய பயனாளிகள் உள்ளனர். இது உலகளவில் அதிகமாகும். இணையத்திற்கு அதிக கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை. சில நூறு (பெரும்பாலும் ஆபாச தளங்கள்) இணைய தளங்களைத் தடை செய்துள்ளது. இத்தடை வீட்டு இணைப்புகளுக்கு மட்டுமே; அலுவலக இணைய இணைப்புகளுக்குத் தடை இல்லை. + +2011ம் ஆண்டின்படி சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர். 2009 கணக்கெடுப்பின்படி சீனர்கள் 74.2%மாகவும், மலாயர் 13.4%மாகவும், இந்தியர் 9.2%மாகவும் உள்ளனர். + +2010ம் ஆண்டுக்கு முன்பு சிங்கப்பூர் மக்கள் தங்களை ஏதாவது ஒரு இனத்தை சார்ந்தவர்களாகத் தான் குறிப்பிடமுடியும். இயல்பாகத் தந்தையின் இனத்தையே மகன் அல்லது மகள் சார்ந்ததாக அரசு பதிவேட்டில் குறிப்பிடப்படும். இதனால் அரசு கணக்கின் படி பல்லின கலப்பு மக்கள் இல்லை என்றே இருக்கும். 2010க்கு பின்பு இரு இனங்களை சார்ந்தவர் எனப் பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வந்தது. 1000 மக்களுக்கு 1400 அலைபேசிகள் உள்ளன. நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது. குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. + +சிங்கப்பூர் பல மதங்கள் கொண்ட ஒரு நாடு. 33% சிங்கப்பூர்வாசிகள் பௌத்தத்தையும், 18% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர். எந்த மதமும் சாராதவர்கள் 17% உள்ளனர். 15% மக்கள் இசுலாம் மதத்தினைப் பின்பற்றுகின்றனர். இசுலாமை பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் மலாய் மக்கள் ஆவர். டாவோயிசத்தை 11% மக்கள் பின்பற்றுகின்றனர். சிறுபான்மை மக்கள் பலர் இந்து சமயத்தையும், சீக்கிய சமயத்தையும் பின்பற்றுகின்றனர். பௌத்த சமயத்தையும் டாவோயிசத்தையும் பெரும்பாலும் சீனர்களே பின்பற்றுகின்றனர். இந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலோர் இந்தியர் ஆவர். + +பௌத்தத்தின் மூன்று பிரிவுகளான மகாயாணம், வஜ்ராயணம், தேரவாததிற்கு இங்கு மடங்கள் உண்டு. பெரும்பாலோர் மகாயாணத்தை பின்பற்றுகின்றனர் . சீன மகாயாணமே இங்கு பெரும்பாலானவர்களால் பின்பற்றப்படுகிறது. + +ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாகும். சிங்கப்பூர் விடுதலை அடைந்தது முதல் ஆட்சி மொழியாக ஆங்கிலம் வளர்க்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரர்களில் சுமார் 100,000 பேர் அல்லது 3 விழுக்காட்டினர் தமிழை தங்கள் சொந்த மொழியாகப் பேசுகின்றனர். + +சிங்கப்பூரின் தேசிய மொழி மல��ய். சிங்கப்பூரின் தேசிய கீதம் மலாய் மொழியில் இயற்றப்பட்டுள்ளது. மலாய் தேசிய மொழியாக இருந்தாலும் நடைமுறையில் ஆங்கிலத்துக்கே அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது, அண்டை நாடுகளான மலேசியா, இந்தோனேசியா போன்றவற்றில் மலாய் தேசிய மொழியாக உள்ளதால் அண்டை நாடுகளுடன் சச்சரவுகளைத் தவிர்க்க மலாயை தேசிய மொழியாகக் கொண்டுள்ளது . அரசாங்கத்தின் அலுவல்கள், வணிகம், கல்வி போன்றவை ஆங்கிலத்திலேயே நடக்கின்றன.. சிங்கப்பூரின் அரசியலமைப்பு மற்றும் சட்டங்கள் ஆங்கிலத்திலேயே உள்ளன, . நீதிமன்றத்தின் மொழியாகவும் ஆங்கிலமே உள்ளது. நீதிமன்றத்தில் ஆங்கிலம் அல்லாத மற்ற மொழியில் முறையிட வேண்டும் என்றால் மொழிபெயர்ப்பாளர் தேவை.. 20 விழுக்காடு சிங்கப்பூர் மக்களுக்கு ஆங்கிலத்தில் படிக்கவோ எழுதவோ தெரியாது. 2010ம் ஆண்டு கணக்கின்படி 71 விழுக்காடு மக்களுக்கு இரண்டு அல்லது அதற்கு அதிகமான மொழிகள் தெரியும் . சிங்கப்பூரில் பெரும்பான்மை (பாதி மக்கள்) மக்களின் மொழியாக சீனம் உள்ளது. + +ஆரம்ப, இரண்டாம், மூன்றாம் நிலைக் கல்விக்கு பெரும்பாலும் அரசு துணைபுரிகிறது. அனைத்து தனியார் மற்றும் பொதுக் கல்வி நிறுவனங்களும் கட்டாயமாகக் கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும். அரசு பள்ளிகளின் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. "தாய் மொழி" தவிர அனைத்து பாடங்களும் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதுடன் தேர்வுகளும் ஆங்கிலத்திலேயே நடாத்தப்படுகின்றன. அதே சமயம் பொதுவாக "தாய் மொழி" சர்வதேச அளவில் முதல் மொழியைக் குறித்தாலும்; சிங்கப்பூர் கல்வி முறையில், இது இரண்டாவது மொழியைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது, ஆங்கிலம் முதல் மொழி எனப்படுகிறது. வெளிநாடுகளில் சிலகாலம் இருந்த மாணவர்கள் அல்லது தங்கள் "தாய் மொழியைக்" கற்க சிரமப்படுபவர்களுக்கு ஒரு எளிமையான பாடத்திட்டத்தினை எடுக்க அல்லது பாடத்தைக் கைவிட அனுமதிக்கப்படுகிறது. + +கல்வி மூன்று நிலைகளில் நடைபெறுகிறது: அவை "ஆரம்பக் கல்வி", "இடைநிலைக் கல்வி", "பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வி" என்பனவாகும். இவற்றில் ஆரம்பக் கல்வி மாத்திரமே கட்டாயமானது, இது மாணவர்களுக்கு நான்கு ஆண்டு அடிப்படைப் பயிற்சியையும் இரு ஆண்டுகள் திசையமைவு பயிற்சியையும் வழங்குகிறது. மொத்தமாக ஆரம்பப் பள்ளி ஆறு ஆண்டுகளாகும். பாடத்���ிட்டமானது ஆங்கிலம், தாய்மொழி, கணிதம் ஆகியவற்றிலான அறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கிலம், தாய்மொழி, கணிதம், அறிவியல் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. + +சிங்கப்பூரின் இரண்டு முக்கிய பொதுப் பல்கலைக்கழகங்களான சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உலகின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களினுள் அடங்குகிறன. + +சிங்கப்பூர் சிறிய, மக்கள் அடர்த்திமிக்க நாடாகியதால் இங்கு தனியார் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது சாலைகளில் நெரிச்சலை தவிர்க்கவும் மாசுபடுதலை குறைக்கவும் அரசு மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். மகிழுந்து வாங்க அதன் சந்தை மதிப்பை விட ஒன்றறை மடங்கு சுங்கத்தீர்வை வாங்குபவர் அரசுக்கு செலுத்த வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரின் மகிழுந்து வாங்க உரிய தகுதி சான்றிதழ் (COE) வாங்க வேண்டும். இச்சான்றிதழ் 10 ஆண்டுகளுக்கு மகிழுந்தை சிங்கப்பூரில் ஓட்ட அனுமதிக்கிறது. இங்கு மகிழுந்தின் விலை அதிகம், சிங்கப்பூர்வாசிகளில் 10க்கு ஒருவர் மகிழுந்து வைத்துள்ளார் . + +தனிப்பட்ட முறையில் மகிழுந்து வைத்துக்கொள்ளப் பல கட்டுப்பாடுகள் இருப்பதாலும் பேருந்து தொடருந்து வசதி நன்றாக இருப்பதாலும் பெரும்பாலான சிங்கப்பூர்வாசிகள் பேருந்து, தொடருந்து, வாடகை மகிழுந்து, மிதிவண்டி மூலம் பயணம் மேற்கொள்கின்றனர். எசு.பி.எசு டிரான்சிட் என்ற நிறுவனம் பேருந்துகளை இயக்குகிறது. எசு.எம்.ஆர்.டி கழகம் என்ற நிறுவனம் பேருந்துகளையும் தொடருந்துகளையும் இயக்குகிறது. 12க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வாடகை மகிழுந்துகளை இயக்குகின்றன. 25,000 வாடகை மகிழுந்துகள் சிங்கப்பூரில் உள்ளன. மற்ற முன்னேரிய நாடுகளுடன் ஒப்பிடும் போது வாடகை மகிழுந்துகளின் வாடகை குறைவு, எனவே இவற்றின் பயன்பாடு மக்களிடையே அதிகம் உள்ளது. + +சிங்கப்பூரின் சாலைகளின் மொத்த தொலைவு 3,356 கி.மீட்டர், இதில் 161 கிலோ மீட்டர் விரைவுச் சாலைகளாகும். உலகின் முதல் நெரிச்சல் கட்டண திட்டமான சிங்கப்பூர் வட்டார உரிம திட்டம் 1975ல் நடைமுறை படுத்தப்பட்டது. 1998ல் இத்திட்டம் மேம்படுத்தப்பட்டு மின்னனு கட்டண சாலை என்ற பெயரில் செயல்படத் தொடங்கியது. இதன் மூலம் மின்னனுமுறையில் சுங்கம் வசு���ித்தல், மின்னனு முறையில் உணர்தல், காணொளிமூலம் கண்காணித்தல் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. + +ஆசியாவில் பன்னாட்டு போக்குவரத்தின் முக்கிய மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. 2005ல் சிங்கப்பூர் துறைமுகம் 1.15 மில்லியன் டன் (கப்பலின் மொத்த சுமையளவு) கையாண்டது. சாங்காய் துறைமுகத்துக்கு அடுத்தபடியாக அதிக அளவான சரக்குகளை (423 மில்லியன் டன்) கையாண்டது. கப்பலின் பொருட்களை வேறு கப்பலுக்கு மாற்றும் முதன்மை மையமாகவும் திகழ்கிறது. கப்பல்கள் எரிபொருளை நிரப்பும் மையமாகவும் திகழ்கிறது. + +தென்கிழக்காசியாவின் வானூர்தி மையமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது. இலண்டனிலிருந்து சிட்னி செல்லும் வானூர்திகள், பயணிகள் இடைத்தங்கும் இடமாகவும் சிங்கப்பூர் விளங்குகிறது . சிங்கப்பூரில் 8 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் 80 வானூர்தி நிறுவனங்கள் வந்து செல்லும் இடமாக உள்ளது. இவை 68 நாடுகளில் உள்ள 302 நகரங்களை இணைக்கின்றன. சிங்கப்பூர் வான்வழி இந்நாட்டின் தேசிய வானூர்தியாகும். + + + + + + +இராகம் + +இராகம் () (சமஸ்கிருதம்: रागः, இந்தி: राग) என்பது இந்தியப் பாரம்பரிய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள். இவை வைதீக இசையின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்திய பாரம்பரிய இசை இராகங்களின் அடிப்படையில் அமைக்கபட்டிருக்கின்றது. + +"இராகம் கேட்பதற்கு இனிமையைத் தரும் வகையில் ஒரு தனித்தன்மையைக் கொண்ட சில குறிப்பிட்ட சுரங்களின் சேர்க்கையைக் குறிக்கும்." + +இராகம், ஒரு பாட்டை எவ்வாறு உருவாக்கலாம் என்று காட்டும் விதிகளை விளக்குகின்றன எனலாம். அது இசை மேலே செல்லும்போதும் (ஆரோகணத்தில் - आरोहणम्) கீழே செல்லும்போதும் (அவரோகணத்தில் - अवरोहणम्) எந்த ஸ்வரங்களை (स्वर) வரிசையில் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. அதுமட்டுமல்ல, அது ராகத்தில் எந்தெந்த ஸ்வரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும், எந்தெந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதையும் எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும் என்பதையும் குறிப்பிடுகிறது. இதன் வாயிலாக இராகத்தில் இருக்கும் ஸ்வரங்களைப் பயன்படுத்தி இராகத்தின் ஸ்வர பாவங்களை முன்னிலையில் காட்டும் வகையில் இசையமைக்க இராக��் உதவுகிறது. + +ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். வெகு சில இராகங்களில் மட்டும் நான்கு அல்லது மூன்று ஸ்வரங்களோ, அல்லது ஏழுக்கு மேல் ஸ்வரங்கள் (அன்னிய ஸ்வரங்களை கூட்டி) வரலாம். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகணத்திலோ அவரோகணத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர (वक्र) ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்தா இராகங்கள் என்ற பெயர் உண்டு. + +ஒரு ஸ்தாயில் இருக்கும் ஏழு ஸ்வரங்களில் இரண்டாம், மூன்றாம், ஆறாம், ஏழாம் ஆகிய ஸ்வரங்கள் மூன்று வகைப்படலாம் (sharp and flat). நான்காம் ஸ்வரம் இரண்டு வகைப்படும். இந்த வகைகளில் எந்த ஸ்வரத்தை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்றும் இராகம் காட்டும். + +காலை, நன்பகல், மாலை, இரவு ஆகிய நான்கு பொழுதுகளுக்கும் தகுந்த இராகங்கள் உள்ளன. பொழுதிற்கு ஏற்ற ராகம் பாடும் வழக்கம் இந்துஸ்தானி இசையில் (வட இந்திய இசை) பின்பற்றப்படுகிறது, ஆனால் கர்நாடக இசையில் (தென் இந்திய இசை) குறைவாகவே பின்பற்றப்படுகின்றது. + +இந்திய பாரம்பரிய இசையின் இரு பாகங்களான கர்நாடக இசைக்கும் இந்துஸ்தானி இசைக்கும் வெவ்வேறு இராகங்கள் இருக்கின்றன. + + + +இந்துஸ்தானி இசையில் இராக வகைகள் பத்து "தாட்" (அடிப்படை ராக உருவம்) - களின் அடிப்படையில் வகுக்கப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் ராகங்கள் 72 மேளாகர்த்தா ராகங்களின் அடிப்படையில் ஜனக - ஜன்னிய ராகங்களாக வகுக்கப்படுகின்றன. + +ராகங்கள் பழங்காலத்தில் எழுதப்படாமல், குரு - சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாக கற்பிக்கப்பட்டதால் சில ராகங்கள் வெவ்வேறு இடங்களில் வேறு விதமாக தோன்றலாம். + +இந்திய பாரம்பரிய இசை எப்போதும் இராக அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தாலும், ராகத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இசை எல்லாம் பாரம்பரிய இசை என்பது உண்மை அல்ல. சினிமா பாட்டுகள் பலவும் ராகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. + +ஆரோகனம் அவரோகனம் தவி��� வேறு எதுவும் எழுதப்படாது. ராக பாவங்கள் (எந்த ஸ்வரங்களுக்கு கமகம் சேர்க்க வேண்டும், எந்த ஸ்வரங்களைத் தவிர்க்க வேண்டும் போன்றவை) குரு சிஷ்யன் பரம்பரையில் வாய்மொழியாகக் கற்பிக்கப்படுகின்றன. இராக பாவங்களை வெளிப்படுத்த உதவும் சில பாட்டுகளுக்கு "வர்ணம்" என்ற பெயர் உண்டு. இப்பாட்டுகள் இராகத்தை வர்ணிப்பதே இவற்றின் பெயருக்குக் காரணம். + + + + + +தேவநாகரி + +தேவநாகரி (Devanagari) (देवनागरी) என்பது சமஸ்கிருதம், ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி போன்ற இந்திய மொழிகளையும், நேபாளியையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு எழுத்து முறைமையாகும். தேவநாகரி அபுகிடா என்று அழைக்கப்படும் எழுத்து முறைமை வகையைச் சேர்ந்தது. அபுகிடா என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த பிராமியின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு அரமேய மொழி அரிச்சுவடி போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி.மு 2600 ஆண்டுகள் வரையாவது பழமையான சிந்து சமவெளி எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. பிராமிக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன. + +தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும். + +தேவநாகரி இடமிருந்து வலமாக எழுதப்படுகின்றது. சமஸ்கிருதத்தில் சொற்கள், மேற்கோடு முறியாமல் இடைவெளியின்றி எழுதப்படுகின்றன. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. நவீன மொழிகளில் சொற்கள் தனித்தனியாக எழுதப்படுகின்றன. தேவநாகரியில் ஆங்கிலத்திலிருப்பது போல் பெரிய, சிறிய எழுத்து வேறுபாடுகள் கிடையாது. + +சமஸ்கிருத எழுத்துக்கூட்டல் ஒலிப்பியல் முறை ஆனாலும் வரலாற்று மாற்றங்களினால் தேவநாகரியிலெழுதப்படும் நவீன மொழிகள் ஓரளவு மட்டுமே ஒலிப்பியல் ம��றைமையைக் கொண்டுள்ளது. அதாவது தேவநாகரியில் எழுதப்படும் சொற்கள் ஒரு வழியாக மட்டுமே உச்சரிக்கப்படமுடியுமாயினும், எல்லா உச்சரிப்புக்களையும் அச்சொட்டாக எழுத முடியாது. தேவநாகரி 34 மெய்யெழுத்துக்களையும் (வியஞ்சன்), 12 உயிரெழுத்துக்களையும் (ஸ்வர்) கொண்டுள்ளது. + +பின்வரும் அட்டவணைகளிலுள்ள transliterations பிரபல கல்கத்தா தேசிய நூலக ரோமனாக்கம் முறையைப் பின்பற்றியுள்ளது. ITRANS குறியீடு தேவநாகரியை ஆங்கிலத்துக்கு மாற்றுவதற்கான ஒரு lossless transliteration முறையாகும். இது Usenet இல் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. ITRANS முறையில் தேவநாகரி என்னும் சொல் "devanaagarii" என எழுதப்படும். + +"குறிப்பு: இப்பக்கத்தில் தேவநாகரி எழுத்துக்களைக் காண்பதற்கு, யுனிகோடு support மற்றும் தேவநாகரி எழுத்துக்களைக் கொண்ட fonts என்பன தேவை. fontsகளை இங்கே பெற்றுக்கொள்ளலாம்." + +தேவநாகரியின் எல்லா உயிர்க் குறிகளும் மெய்யெழுத்துக்களுக்கு மேல் அல்லது கீழ்ப் பகுதியில் அல்லது இடப்பக்கத்தில் சேர்க்கப்படுகின்றன. "இ" உயிர் மட்டும் மெய்யெழுத்துக்கு வலப்பக்கம் சேர்க்கப்படும். "தேவநாகரி உயிரெழுத்துக்கள்" அட்டவணையில் "எழுத்துக்கள்" நிரலில் மெய்யெழுத்துச் சேர்க்கையின்றி வரும் உயிரெழுத்துக் குறியீடுகள் காட்டப்பட்டுள்ளன. "உயிர்க் குறியீடு" நிரல், உயிர் மெய்யெழுத்துக்களுடன் சேரும்போது பயன்படும் குறியீடுகளைக் கொண்டுள்ளது. "'ப' உடன் உயிர்" நிரலில் "ப்" மெய்யுடன் உயிரொலிகள் சேரும்போது வரும் குறியீடுகள் உதாரணமாகத் தரப்பட்டுள்ளன. "யுனிகோடு பெயர்" நிரல், உயிரொலிகளுக்கான யுனிகோடு specification இல் காணப்படும் பெயர்களைக் காட்டுகின்றது. "IPA" நிரல் அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி முறையில் தேவநாகரி எழுத்துக்களுக்கான உச்சரிப்புகளைத் தருகின்றது. + +When no vowel is written, 'a' is assumed. To specifically denote the absence of a vowel, a "halant" (also called "virama") is used. + +Among these, ळ is not used in Hindi. The entire set is used in Marathi. + +Devanagari digits are written as follows: + +தேவநாகரியின் யுனிக்கோடு எல்லை U+0900 .. U+097F. + + + + + + +மானிடவியல் + +மானிடவியல் ("Anthropology") மனித இனம் பற்றிய அறிவியல் கல்வித்துறை ஆகும். இது மனித குலத்தைச் சமூக நிலை, பண்பாட்டு நிலை, உயிரியல் நிலை போன்ற வேறுபட்ட நிலைகளில் கடந்த கால மக்களையும், சமகால மக்களையும் (அதாவது எல்லாக் காலத்து மக்களையும் எல்லா இடங்களின் மக்களையும்) ஆராயும் பர���்த விரிந்த இலக்குடையதாக உள்ளது. + +இது இரண்டு வகைகளில் முழுதளாவிய (holistic) தன்மை கொண்டது: இது எல்லாக் காலங்களையும் சேர்ந்த எல்லா மனிதர்களையும், மனித இனத்தின் எல்லா அம்சங்களையும் பற்றிக் கருத்தில் கொள்கின்றது. பண்பாடு பற்றிய எண்ணக்கருவும், மனித இயல்பு பண்பாடே எனும் கருத்தும் (notion); அதாவது எங்களுடைய இனம் உலகத்தை குறியீட்டுமுறையில் விளங்கிக் கொள்வதற்கும், சமுதாய ரீதியில் குறியீட்டுமுறையில் பயிலவும் பயிற்றுவிக்கவும், அக்குறியீடுகளின் அடிப்படையில் உலகத்தையும் எங்களையும் மாற்றிக்கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான தகுதியை வளர்த்துக்கொண்டுள்ளது என்னும் கருத்துமே மானிடவியலின் அடிப்படையாகும். + +ஐக்கிய அமெரிக்காவில், மானிடவியல் பாரம்பரியமாக நான்கு துறைகளாக வகுக்கப்படுகிறது: + + + + + + + + +மகாபாரதம் + +மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. + +அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய "தெய்வீக நகைச்சுவை" (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. + +நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். + +இதனைத் தமிழில் இலக்கியமாக��் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார். + +இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 5ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது இது ஜெயம் என அழைக்கப்பட்டுள்ளது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது. + +இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம். + +"மகாபாரதம்" என்னும் நூல் தலைப்பு, "பரத வம்சத்தின் பெருங்கதை" என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே "பாரதம்" எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது "மகாபாரதம்" என அழைக்கப்பட்டது. + +இது, குருச்சேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், பிரம்மம், ஆத்மா என்பன தொடர்பானமெய்யியல் உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்��ங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம். + +மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், "இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா" என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன. + + + + + + +இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உக்கிரசிரவஸ் என்பவரால் நைமிசாரண்யம் எனும் காட்டில் வாழும் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது. + +மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து. + +மொத்தம் 18 பெரும் பருவங்கள் கொண்ட வியாச பாரதம் நான்கு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. + + +மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு: +99, 100 ஆகிய துணைப் பருவங்களை உள்ளடக்கிய அரிவம்ச பருவம் எனப்படும் பருவம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன. + +வரலாற்று நோக்கில் குருச்சேத்திரப் போர் பற்றித் தெளிவ��� இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிமு 1200 - 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும். + +புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன. + +தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.ஆனாலும் இதில் தவறு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது ஆரியர்களின் காலம் கி.மு 1300 க்கு பிறகே வருவதாலும் ,அதற்கு பிறகே நடந்திருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. + +மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு குலத்தவரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை குறித்து பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் இடையே உண்டான பிணக்கு ஆகும். திருதராட்டிரன் மற்றும் பாண்டு ஆகிய சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருக்ஷேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப்போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது. + +மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது. + +பாரதம் பாடிய பெருந்தேவனார் எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலத்தில் பாரதத்தை தமிழ்ப்படுத்தினார். இவரின் காலமும் உறுதியாகத் தெரியாகவில்லை. இவர் தமிழ் மொழிப்படுத்திய பாரதமும் கிடைக்கவில்லை. + +பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடி நாட்டு சனியூரைச் சேர்ந்��� வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மகாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள். + +இதன் பின்னர் மகாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவற்றுள் முழுமையானதாக திருத்தமிகு பதிப்பாகக் கருதப்படுவது, 1903 இலிருந்து இருபத்தைந்து ஆண்டு காலம், ம. வீ. இராமானுஜச்சாரியார் தலைமையில் பல வடமொழி தமிழ் மொழி வித்வான்களால் மொழிபெயர்க்கப் பட்ட மகாபாரதப் (கும்பகோண) பதிப்பாகும். 9000 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1930களிலும் 1950களிலும் 2008இலும் பதிப்பிக்கப் பட்டன. + +அதைத் தவிர குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது "வியாசர் விருந்து" குறிப்பிடத் தகுந்தது. +அ. லெ. நடராஜன் "வியாசர் அருளிய மகாபாரதம்" என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். + +பத்திரிக்கையாளர் சோ "மஹாபாரதம் பேசுகிறது" என்ற பெயரில் வியாச பாரதத்தை இரு பாகங்களாக எழுதியுள்ளார். + +இராமகிருஷ்ண தபோவனத்தின் நிறுவனர் சுவாமி சித்பவானந்தர் அவர்கள் வியாசரைத் தழுவி எழுதிய மகாபாரதம் குறிப்பிடத்தகுந்தது. 2013ஆம் ஆண்டு வெளியான பத்தொன்பதாம் பதிப்பு வரை 2,35,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. + +ஜெயமோகன் மகாபாரதத்தை வெண்முரசு என்ற பெயரில் நாவல் வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது இணையதளத்தில் தினமும் தொடராகப் பதிவேற்றப்படுகிறது. மொத்தம் பத்து தொகுதிகளாக வெளியிடத் திட்டமிட்டு, அதன் முதல் தொகுதி முதற்கனல், நற்றிணை பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. + +தற்போது ஆங்கில மொழி மகாபாரதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு முழு மகாபாரதம் எனும் இணையத்தில் வெளி வந்து கொண்டிருக்கிறது. + + + + + + +தொல்லியல் + +தொல்லியல் அல்லது தொல்பொருளியல் என்பது, கட்டிடக்கலை, தொல்பொருட்கள் (artifacts), தொல்லுயிர் எச��சம், மனித மிச்சங்கள், என்ணிமப் பொருட்கள் மற்றும் நிலத் தோற்றங்கள் என்பன உள்ளிட்ட எஞ்சிய பொருட்களைக் வெளிக்கொணர்ந்து, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்வதன் மூலம் செய்யப்படும் மனிதப் பண்பாடு பற்றிய படிப்பாகும். + +தொல்பொருளியலின் இலக்குகள் வேறுபடுவதுடன், இதன் நோக்கங்கள், பொறுப்புக்கள் தொடர்பான வாதங்களும் இருந்துவருகின்றன. சில இலக்குகள், வரலாற்றுக்கு முந்திய மற்றும் வரலாற்றுக் கால மனிதப் பண்பாட்டின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் ஆவணப்படுத்தல், அவற்றை விளக்குதல்; பண்பாட்டு வரலாற்றைப் புரிந்து கொள்ளுதல்; பண்பாட்டுப் படிமுறை வளர்ச்சியைக் கால வரிசைப்படுத்தல்; மனித நடத்தைகள் பற்றி ஆய்வு செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. + +தொல்லியலாளர்கள், தங்கள் துறையில் பயன்படுத்தப்படும் முறைகள் பற்றி ஆய்வு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். அத்துடன், கடந்தகாலம் பற்றிய அவர்களது கேள்விகளில் தொக்கி நிற்கும் கோட்பாட்டு மற்றும் தத்துவம் சார்ந்த அடிப்படைகள் தொடர்பான ஆய்வுகளிலும் அவர்களுக்கு ஆர்வம் உண்டு. புதிய தொல்லியற் களங்களைக் கண்டுபிடித்தல், அவற்றில் அகழ்வாய்வு செய்தல், வகைப்படுத்தல், பகுப்பாய்தல் பேணிக்காத்தல் என்பனவெல்லாம், தொல்லியல் சார்ந்த வழிமுறைகளின் பல்வேறு முக்கியமான கட்டங்கள் ஆகும். இவை ஒருபுறம் இருக்கத் தொல்லியலில் பெருமளவு பல்துறைசார் ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இதற்காக இது, வரலாறு, கலை வரலாறு, செந்நெறி இலக்கியம், புவியியல், நிலவியல், இயற்பியல், தகவல் அறிவியல், வேதியியல், புள்ளியியல், தொல்பழங்காலச்சூழலியல், தொல்விலங்கியல், தொல்தாவரவியல் போன்ற துறைகளில் தங்கியுள்ளது. + +ஃபிளவியோ பியோன்டோ என்ற இத்தாலிய வரலாற்று அறிஞர் பண்டைய ரோமின் தொல்பொருட்களைக் கொண்டு ஒரு முறையான காலக்கணிப்பு முறையை உருவாக்கினார். அதனால் இவர் "தொல்லியலைக் கண்டுபிடித்தவர்" என்று போற்றப்படுகிறார். சிரியேக்கோ பிசிகோலி என்ற இத்தாலிய வணிகர் கிழக்கு மத்திய கடலில் உள்ள தொல்பொருள்களைக் கொண்டு "கமான்டரியா" என்ற ஆறு தொடர் புத்தகங்களை பதினான்காம் நூற்றாண்டில் எழுதினார். அதனால் இவர் "தொல்லியலின் தந்தை" என்று போற்றப்படுகிறார். + +இதன்பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய நாடுகளில் இ���்துறை பெரும் வளர்ச்சி அடைந்தது. ஐரோப்பியர்கள் மறைந்து போனதாகக் கருதப்படும் ட்ராய் நிலத்தை பற்றி அறிவதற்கான முயற்சிகளும் சார்லசு டார்வினின் பரிணாமக் கொள்கையும் இத்துறை வளர்ந்ததற்கு முக்கியக் காரணிகளாக கருதப்படுகின்றன. + +காலத்தினால் அல்லது பிரதேசத்தினால் வேறுபடுத்தப்படுகின்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட சில துணைத்துறைகளைக் கீழே காண்க. + + +தொல்லியல் அகழாய்வுகளில் கிடைக்கும் பொருட்களை பல்வேறு முறைகளில் கிடைக்கும் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப அவற்றைக் காலக்கணிப்புக்கு உட்படுத்துகின்றனர். அவற்றை மூன்றாக வகைப்படுத்தி சார்பற்ற காலக்கணிப்பு முறைகள், சார்புடைய காலக்கணிப்பு முறைகள், சமான காலக்கணிப்பு முறைகள் அவற்றின் கீழ் பல்வேறு முறைகளை உள்ளடக்குகின்றனர். + + +சார்புடைய காலக்கணிப்பு முறைகளாக அதிகம் அறிய வருவது மண்ணடுக்காய்வாகும். இம்முறையின் படி அகழாய்வில் கிடைக்கும் பொருள் எத்தனை அளவு ஆழத்தில் கிடைக்கின்றன என்பதை பொறுத்து தோண்டி எடுக்கப்பட்ட தொல்பொருளின் காலம் கணிக்கப்படுகிறது. + + + + + + + +தாமரைக் கோலம் + +தாமரைக் கோலம் ஒன்றுடனொன்று 45 பாகை கோணத்தில் வெட்டும் 4 இரட்டைக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கோடுகளின் ஒன்றுவிட்டொரு முனைகளை வளை கோடுகளால் இணைத்து எட்டு இதழ்களுடைய தாமரை வடிவம் வரையப்பட்டுள்ளது. + +எளிமையான கோலங்களிலொன்று. இதன் ஒரு வேறுபாடாக ஒற்றைக் கோடுகளை உபயோகித்தும் இத் தாமரை வடிவம் வரையப்படுவதுண்டு. + +இந்தியப் பண்பாட்டில் தாமரை பன்னெடுங் காலமாகவே முக்கிய இடத்தை வகித்துவருகிறது. இந்து, பௌத்த கலைகளில் தாமரைக்கு முக்கியத்துவம் உண்டு. + +சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை போன்றவற்றில் தாமரை சிறப்பிடம் பெறுகிறது. இதனால் தாமரைக் கோலங்களும் மிகப் பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வருவதாகக் கூற முடியும். + + + + + +தொட்டில் கோலம் + +தொட்டில் கோலம், குழந்தைகளைத் தூங்க வைப்பதற்குப் பயன்படுத்தும் தொட்டிலை abstract வடிவில் வெளிப்படுத்தும் கோலம் ஆகும். + +குழந்தை கிருஷ்ணரின் தொட்டிலாகக் கருதி இக் கோலத்தை வரைவதுண்டு. எனவே "கண்ணன் தொட்டில்" என்ற பெயரும் உண்டு. + +வரைவதற்கு இலகுவான சிறிய கோலங்களில் இதுவும் ஒன்று. இக் கோலத்தில் ஓரிரு வேறுபாடுகளும் உள்ளன. இதன் அடிப்படையான வடிவத்தை பயன்படுத்தி பெரிய அளவு கோலங்களையும் வரையலாம். நிறப் பொடிகளை பயன்படுத்தி அழகு படுத்தவும் பொருத்தமானது இந்தக் கோலம். + + + + + +துளசி மாடக் கோலம் + +துளசி மாடக் கோலம் 7 x 7 நேர்ப்புள்ளி வலையமைப்பில் இடப்பட்ட புள்ளிகளைச் சுற்றிச்செல்லும் வளை கோடுகளைப் பயன்படுத்திவரையப்பட்ட ஒரேமாதிரியான ஆறு கூறுகளை இணைத்துப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான கூறுகளை ஒன்றுடனொன்று மூலைகளில் தொடுத்துக் கோலத்தை விரிவாக்கம் செய்யலாம். + +இணைக்கப்படும் கூறுகளின் எண்ணிக்கைக்கோ அல்லது உருவாக்கும் உருவமைப்புக்கோ எந்த வித எல்லையும் கிடையாது. கிடைக்கும் இடத்தின் அளவுக்கும், நேரத்துக்கும் தக்கபடி கோலத்தை அமைத்துக்கொள்ள முடியும். கோலம் வரைபவரின் கற்பனாசக்திக்கு ஏற்றபடி கோலத்தின் உருவ அமைப்புக்கு பொருத்தமான பெயரையும் இட்டுக்கொள்ளலாம். + +ஒரு கூறு கூட இங்கே காட்டப்பட்டதுபோல்தான் இருக்கவேண்டுமென்ற தேவை இல்லை. 7 x 7 நேர்ப்புள்ளிகளைப் பயன்படுத்தி பல்வேறு விதமான கூறுகளையும் கூட வரையமுடியும். அதுமட்டுமின்றி 7 x 7 நேர்ப்புள்ளிகளுக்குப் பதிலாக புள்ளிகளின் எண்ணிக்கையைக் குறைத்தோ, கூட்டியோகூட வெவ்வேறு அளவுள்ள கூறுகளை உருவாக்கலாம். + + + + + +குத்து விளக்குக் கோலம் + +குத்து விளக்குக் கோலம் 38 புள்ளிகளை உயரமாகக் கொண்டு வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை கட்டாயமல்ல. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றபடி அழகாயிருக்கத்தக்க வகையில் இந்த எண்ணிக்கையை மாற்றிக்கொள்ளலாம். +பல்வேறு முறைகளில் குத்துவிளக்கு வடிவத்தைக் கோலத்தில் கொண்டுவரமுடியும். + +குத்து விளக்கு, இந்துப் பண்பாட்டில் ஒரு மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது. முக்கியமான பாரம்பரிய நிகழ்ச்சிகளில், விருந்தினர்களை வரவேற்பதற்கும், அந் நிகழ்வுகளைத் தொடங்கி வைப்பதற்கும் குறியீடாகக் குத்துவிளக்கேற்றி வைத்தல் வழக்கம். + +இதனால் மேற்படி மங்களகரமான நிகழ்ச்சிகளில் கோலமிடுவதற்குக் குத்துவிளக்கு வடிவம் பொருத்தமாக அமையும். + + + + + +திருக்குளக் கோலம் + +திருக��குளக் கோலம் புள்ளிகளன்றி வேறொரு அடையாளம் ('+') மூலம் கோடுகளை வழிப்படுத்தி வரையப்படும் சில கோலங்களில் ஒன்று. வேண்டிய அளவுக்குப் பெரிதாக்கி வரையக் கூடிய மிக இலகுவான கோலமிது. கோலமிடுபவரின் கற்பனை வளத்துக்குத் தக்கபடி பல்வேறு வடிவங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். + + + + + +ஆபிரிக்க-ஆசிய மொழிகள் + +ஆபிரிக்க-ஆசிய மொழிகள் என்பன, வடக்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, சாஹேல், மற்றும் தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களில், அண்ணளவாக 28.5 கோடி மக்களால் பேசப்படுகின்ற சுமார் 240 மொழிகளை உள்ளடக்கிய மொழிக்குடும்பம் ஆகும். "ஆப்ரேசியன்", "ஹமிட்டோ-செமாட்டிக்", "லிஸ்ராமிக்" (Hodge 1972), எரித்ரேசியன் (Tucker 1966.) என்ற பெயர்களாலும் இந்த மொழிக்குடும்பம் குறிப்பிடப்படுகின்றது. + +ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் துணை மொழிக் குடும்பங்கள்: + +ஒங்கோட்டா மொழி ஆப்பிரிக்க-ஆசிய மொழியாகக் கருதப்பட்டாலும், இக்குடும்பத்துள் இதனுடைய வகைப்படுத்தல் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்துவருகிறது (போதிய தரவுகள் இல்லாமையும் ஒரு காரணம்) + +முதல்நிலை-ஆபிரிக்க-ஆசிய மொழி எங்கே பேசப்பட்டது என்பதிலே பொதுவாக ஒத்த கருத்துக் கிடையாது; இக் குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறுபட்ட மொழிகள் பேசப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, பொதுவாக ஆபிரிக்காவாக (உம். டயகோனோப், பெந்தர்), குறிப்பாக எதியோப்பியாவாக, இருக்கலாம் என்ற கருத்து உண்டு. இதே வேளை மேற்குச் செங் கடல் மற்றும் சகாரா பகுதியும் முன்வைக்கப்பட்டுள்ளது (உம். எஹ்ரெட்). அலெக்சாண்டர் மிலிட்டரேவ் இவர்களுடைய தாய் நிலம் லேவண்ட் ஆக இருக்கலாம் எனக் கருதுகிறார். + +செமிட்டிக் மொழிகளே, ஆபிரிக்காவுக்கு வெளியே காணப்படும், ஆபிரிக்க-ஆசிய மொழிக்குடும்பத்தின் ஒரே துணை மொழிக் குடும்பமாகும். எனினும் வரலாற்றுக் காலத்திலோ அல்லது வரலாற்றுக்கு மிக அணித்தான காலப்பகுதியிலோ சில செமிட்டிக் பேசும் மக்கள், தெற்கு அரேபியாவிலிருந்து மீண்டும் எதியோப்பியாவுக்கு வந்துள்ளார்கள், இதனால் சில நவீன எதியோப்பிய மொழிகள் (அம்ஹாரிக் போன்றவை) அடிப்படையான குஷிட்டிக் அல்லது ஒமோட்டிக் குழுக்களைச் சேராமல் செமிட்டிக்காக இருக்கின்றன. (முர்த்தொனென் (1967) போன்ற மிகச் சில ஆய்வாளர்கள் மேற்படி கருத்துடன் முரண���படுவதுடன், செமிட்டிக் எதியோப்பியாவில் உருவாகியிருக்கலாமெனக் கருதுகிறார்கள்). + +ஆபிரிக்க-ஆசிய etymologies க்கான சில முக்கிய மூலங்களில் பின்வருவனவும் உள்ளடங்குகின்றன: + + + + + + +நைகர்-கொங்கோ மொழிகள் + +மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகள் உலகின் மிகப்பெரிய மொழிக் குடும்பங்களில் ஒன்றாக இருப்பதுடன், நிலவியல் பரம்பல், பேசுபவர்களின் எண்ணிக்கை (600 மில்லியன் மக்கள், அதாவது 85% ஆப்பிரிக்க மக்கள் தொகை), பேசப்படும் ஆப்பிரிக்க மொழிகளின் எண்ணிக்கை (1514) போன்றவற்றின் அடிப்படையில், ஆப்பிரிக்காவில் மிகப் பெரிய மொழிக்குழுவாக நைகர்-கொங்கோ மொழிக்குழு இருக்கின்றது + +ஜோசேப் ஹெச். கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். ஜோன் பெந்தோர்-சாமுவேல் என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்) + +நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள். + + + + + +வானளாவி + +வழக்கமாக, 152 மீட்டர்களிலும் கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த கட்டிடங்கள் வானளாவிகள் ("skyscraper") எனப்படுகின்றன. + +19 ஆம் நூற்றாண்டுவரை ஆறு மாடிக்கு மேற்பட்ட உயரங்கொண்ட கட்டிடங்களைக் காண்பது அரிது. மனிதர்கள் இதற்கு மேற்படப் படிகளில் ஏறி இறங்குவது நடைமுறைக்கு உகந்ததல்ல. அத்துடன், 15 மீட்டர்களுக்கு மேல் நீர் வழங்குவதும் இயலாமல் இருந்தது. + +உருக்கு, வலுவூட்டிய காங்கிறீற்று (Concrete) மற்றும் நீரேற்றிகள் என்பவற்றின் உருவாக்கம், மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்ட இயன்றது. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி உயர்த்திகள் ஆகும். + +19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், நியூயார்க் நகரத்திலும், சிகாகோவிலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி, ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம் என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிகாகோவில் வடிவ���ைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது. + +வானளாவிகளின் பாரம் தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களில் இருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவை ஆதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின் மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. + + + + + + +மயில்வாகனப் புலவர் + +மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இவர் இயற்றியதாகத் தெரிகிறது. +இவர் யாழ்ப்பாணத்திலுள்ள மாதகல் என்னும் ஊரைச் சேந்தவர். "வைபவமாலை"யின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும், + +என வரும் அடிகளையும், இவரியற்றிய இன்னொரு நூலான "புலியூரந்தாதி" சிறப்புப் பாயிரச் செய்யுளில் வரும், + +என்னும் அடிகளையும் ஆதாரமாகக் கொண்டு இவர், யாழ்ப்பாண அரசர்களான ஆரியச் சக்கரவர்த்திகளின் இறுதிக்காலப் பகுதியில் வாழ்ந்து வையாபாடல் எனும் யாழ்ப்பாணச் சரித்திரம் கூறும் நூலொன்றை எழுதிய வையா அல்லது வையாபுரி ஐயர் என்பவரது பரம்பரையைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. + +இவர் வண்ணார்பண்ணைச் சிவன் கோயிலைக் கட்டுவித்த வைத்திலிங்கம் செட்டியாரின் நண்பராயிருந்தார் என்பதை வைத்து, இவரது காலம் 18 ஆம் நூற்றாண்டின் பின்னரையாக இருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது. "வைத்திலிங்கச் செட்டியார் கூழங்கைத் தம்பிரானிடம் பாடங்கேட்டது, மயில்வாகனப்புலவரை நடுவராக வைத்துக்கொண்டேயாம்." + + + + + +அபுதாபி + +அபுதாபி ("Abu Dhabi") என்னும் பெயர் ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாட்டில் உள்ள ஏழு அமீரகங்களில் மிகப்பெரிய அமீரகத்துக்கும், அந்த அமீரகத்தின் தலை நகரத்த���க்கும் வழங்கிவரும் பொதுப் பெயராகும். அபுதாபி நகரமானது குறிப்பிட்ட அபுதாபி அமீரகத்துக்கு மட்டுமன்றி, முழு நாட்டுக்குமே தலைநகரமாகவும் விளங்குகின்றது. இவை பற்றித் தனித்தனியாக அறியப் பின்வரும் பக்கங்களுக்குச் செல்லவும். + + + + + +அபுதாபி (நகரம்) + +அபுதாபி ("Abu Dhabi", ', அபூ ழபீ) ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். இது பாரசீக வளைகுடாவின் மத்திய மேற்குக் கரையில் இருந்து வளைகுடாவுக்குள் துருத்திக் கொண்டிருக்கும் "T" வடிவமான தீவொன்றில் அமைந்துள்ளது. 67,340 கிமீ2 (26,000 ச.மை) பரப்பளவு கொண்ட அபுதாபி நகரத்தில் 860,000 (2007) மக்கள் வாழ்கிறார்கள். + +இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன.அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. + +நாட்டின் தலைநகரம் என்ற வகையில் இது ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசியல், கைத்தொழில் நடவடிக்கைகளினதும், பண்பாடு மற்றும் வணிக நடவடிக்கைகளினதும் மையமாக விளங்குகிறது. அபுதாபி நகரம் மட்டும் நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15% ஐ உருவாக்குகின்றது. நாட்டின் முக்கியமான நிதி அமைபான மத்திய வங்கியும், வணிக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் தலைமையகங்களும் இங்கு அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பெற்றோலிய உற்பத்தியாளர்களில் ஒன்றான அபுதாபி அண்மைக்காலங்களில் அதன் பொருளாதார அடித்தளத்தை, பல்வேறு நிதிச் சேவைகளிலும், சுற்றுலாத்துறையிலும் முதலீடு செய்வதன் மூலம் விரிவாக்கியுள்ளது. + +இப் பகுதியின் மூன்றாவது செலவு கூடிய நகரமான அபுதாபி, உலகின் செலவு கூடிய நகரங்களின் வரிசையில் 26 ஆவது இடத்தில் உள்ளது. + +கிமு மூன்றாவது ஆயிரவாண்டுக் காலப்பகுதியிலேயே அபுதாபியின் சில பகுதிகளில் குடியேற்றங்கள் இருந்திருக்கின்றன. அக்காலத்தில் இப் பகுதிகளுக்கேயுரிய நாடோடி மந்தை வளர்ப்பும், மீன்பிடித்தலும் இருந்ததாகத் தெரிகிறது. தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனி யாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. + +20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அபுதாபியின் பொருளாதாரம், ஒட்டக வளர்ப்பு, அல் எயின், லீவா ஆகிய பாலைவனச் சோலைகளில் உற்பத்தியான பேரீச்சு, மரக்கறி வகைகள், அபுதாபி நகரக் கரையோரத்துக்கு அப்பால் இடம்பெற்ற மீன்பிடித்தல், முத்துக் குளிப்பு என்பவற்றில் தங்கியிருந்தது. அக்காலத்தில் அபுதாபி நகரத்தில் இருந்த வீடுகள் ஈச்சமர ஓலைலளால் அமைக்கப்பட்ட "பராஸ்தி"என்னும் வகையைச் சார்ந்தவையாகும். வசதி படைத்தவர்கள் மண்ணால் கட்டப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில், உலகில் செயற்கை முத்து உற்பத்தித் தொழில் வளர்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அபுதாபியின் முத்துக்குளிப்பு நெருக்கடிக்குள்ளானது. அப்போது முத்துக்களின் ஏற்றுமதியே அபுதாபி மக்களின் பணவருவாய்க்கான முக்கிய மூலமாக இருந்தது. 1939 ஆம் ஆண்டில் அக்கால அபுதாபியின் ஆட்சியாளரான சேக் சக்புத் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலிய சலுகையை வழங்கினார். 1958 ஆம் ஆண்டில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்கத்தில் பெட்ரோலிய வருமானம் அபுதாபியின் வளர்ச்சியில் மிகக் குறைந்த தாக்கத்தையே கொண்டிருந்தது. சில குறைந்த உயரம் கொண்ட காங்கிறீட்டுக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. தளமிடப்பட்ட முதலாவது சாலை 1961 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பெற்றோலிய வருமானம் நீடிக்குமா என்ற ஐயப்பாடு காரணமாக சேக் சக்புத் எச்சரிக்கையாக நடந்து கொள்ள விரும்பினார். வருமானத்தை வளர்ச்சிப் பணிகளில் முதலீடு செய்யாமல் சேமிக்க எண்ணினார். அவரது சகோதரரான சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான், பெற்றோலியத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் அபுதாபியை மாற்ற வல்லது என்னும் கருத்தைக் கொண்டிருந்தார். நகியான் குடும்பத்தினர் சேக் சக்புத்துக்குப் பதிலாக சேக் சாயித் ஆட்சியாளராகி வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என விரும்பினர். 1966 ஆகஸ்ட் 6 ஆம் தேதி பிரித்தானியரின் துணையுடன், சேக் சயத் ஆட்சியாளரானார். + + +கம் + + + + +வண்ணார்பண்ணை + +வண்ணார்பண்ணை ("Vannarpannai") தற்போதைய யாழ்ப்பாண நகரப்பகுதியில் அடங்கியுள்ள ஒரு பகுதியாகும். இப்பகுதியில் நகர மத்திக்கு மிகவும் அண்மையில் "வண்ணான் குளம்" என அழைக்கப்படும் குளமொன்றும் உண்டு. இது மிக அண்மைக்காலம் வரை, துணி சலவை செய்வதற்கு, சலவைத் தொழிலாளர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. + +தற்காலத்தில் வண்ணார்பண்ணை என்று அழைக்கப்படும் பகுதி, நகர மத்திக்கு அண்மையில் தொடங்கி, காங்கேசந்துறை வீதி, கஸ்தூரியார் வீதி என்னும் வீதிகளை அண்டிச் சுமார் ஒரு மைல் தூரம் வரை வியாபித்து உள்ளது. + +யாழ்ப்பாண அரசர் காலத்தில் நல்லூர் தலைநகரமாயிருந்தபோது, வண்ணார்பண்ணை பனங் கூடல்கள் நிரம்பிய சிற்றூராக இருந்ததாகத் தெரிகிறது. பின்னர் போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தைத் தங்களது நிர்வாக மையமாக மாற்றிக் கடற்கரையோரமாகக் கோட்டையொன்றையும், அருகில் தங்கள் வாழ்விடங்களையும் அமைத்துக்கொண்ட பின்னர், இப்பகுதி படிப்படியாக வளர்ச்சியடையத் தொடங்கியது. + + + + + + +வட்டம் + +யூக்கிளிட்டின் கேத்திர கணிதப்படி, ஒரு வட்டம் ( +Circle) என்பது, ஒரு குறிப்பிட்ட புள்ளியொன்றிலிருந்து சம அளவான தூரத்தில், ஒரே தளத்திலுள்ள புள்ளிகளின் கணமாகும். குறிக்கப்பட்ட புள்ளி அவ்வட்டத்தின் "மையம்" எனவும், சம அளவான தூரம் அதன் ஆரை எனவும் அழைக்கப்படும். ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து எப்பொழுதும் சமதூரத்தில் இருக்குமாறு இயங்கும் ஒரு புள்ளியின் இயங்குவரையாகவும் வட்டத்தை வரையறுக்கலாம். + +வட்ட விலகலின் மதிப்பு பூச்சியமாகக் கொண்ட கூம்பு வெட்டாகவும் வட்டத்தைக் கொள்ளலாம். ஒரு நேர் கூம்பை அதன் அச்சுக்குச் செங்குத்தான தளத்தால் வெட்டும்போது கிடைக்கும் வெட்டுமுகம் வட்டமாக இருக்கும். + +வட்டங்கள், அவை அமைந்துள்ள தளத்தை உட்புறம், வெளிப்புறம் என இரண்டாகப் பிரிக்கும் எளிமையான மூடிய வளைவுகளாகும். எல்லா வட்டங்களும் வடிவொத்தவை; அதனால், ஒரு வட்டத்தின் சுற்றளவும், அதன் ஆரையும் விகிதசமனானவை, அதுபோலவே, வட்டத்தின் பரப்பளவும் அதன் ஆரை��ின் வர்க்கத்துக்கு விகிதசமனானது. இவ் விகிதசமனின் மாறிலிகள் முறையே 2πயும் πயுமாகும். +வட்டத்தின் சுற்றளவு "பரிதி" எனப்படும். வட்டத்தைக் குறிக்க தமிழர்கள் பரிதி என்ற சொல்லைப் பயன்படுத்தி உள்ளனர். + + + +(0, 0) வை மையமாகக் கொண்ட 1 அலகு ஆரையுடைய வட்டம் அலகு வட்டம் எனப்படும். இதன் சமன்பாடு: + + +முக்கோணவியல் சார்புகள் சைன் மற்றும் கொசைன்களாலான துணையலகுகளைப் பயன்படுத்தி எழுதப்படும் வட்டத்தின் சமன்பாடு: +இங்கு "t" துணையலகு மாறி; இதன் மதிப்பு 0 - 2π வரை அமையும்; வடிவவியலாக இது ("a", "b") லிருந்து ("x", "y") ஐ இணைக்கும் கதிர் "x"-அச்சுடன் உண்டாக்கும் கோணம். + +"துணையலகு வாயிலாக மற்றொரு சமன்பாடு": + +இதில் "t" : "r" என்பது "x"-அச்சுக்கு இணையாக வட்டத்தின் மையத்தின் வழியாகச் செல்லும் கோட்டின் மீதான வட்டத்தின் திண்மவரைபட வீழலாகும் (Stereographic projection). + + +ஒரு விட்டத்தின் முனைப்புள்ளிகள் (x_1, y_1) , (x_2, y_2) எனில் அவ்வட்டத்தின் சமன்பாடு: + +இரு மாறிகளில் அமைந்த இருபடிச்சமன்பாடு, + +வட்டத்தின் வட்டவிலகல் பூச்சியமாதலால் மேற்காணும் கூம்புவெட்டின் சமன்பாடு வட்டத்தைக் குறிக்கும்போது, + +போலார் ஆள்கூற்று முறைமையில் வட்டத்தின் சமன்பாடு: + +இதில் வட்டத்தின் ஆரம் "a"; வட்டத்தின் மீதமைந்த ஏதேனும் ஒரு பொதுப்புள்ளியின் போலார் ஆயதொலைகள் formula_17; வட்ட மையத்தின் போலார் ஆயதொலைவுகள் formula_18; "r" என்பது ஆதிப்புள்ளிக்கும் வட்ட மையத்துக்கும் இடைப்பட்ட தூரம்; "φ" என்பது வட்ட மையத்தையும் ஆதிப்புள்ளியையும் இணைக்கும் கோடானது "x"-அச்சின் நேர்திசையுடன் உண்டாக்கும் கோண அளவு (இக்கோணம் எதிர் கடிகாரதிசையில் அளக்கப்படுகிறது) + +இச்சமன்பாட்டிலிருந்து "r" இன் மதிப்பு: +இதில் வர்க்கமூலத்திற்கு முன் வரக்கூடிய நேர் (+) மற்றும் எதிர்க் குறிகளுக்குக் (-) கிடைக்கும் இதன் வளைவரைகள் ஒன்றாகவே இருக்கும். + + + +சிக்கலெண் தளத்தில் மையம் "c" மற்றும் ஆரம் ("r") கொண்ட வட்டத்தின் சமன்பாடு: + +இது துணையலகு வடிவில் கீழுள்ளவாறு அமையும்: + +வட்டத்தின் சமன்பாட்டைப் பின்வருமாறு விரித்து எழுதி, அது பொதுமைப்படுத்த வட்டத்தின் சமன்பாட்டுடன் ஒத்துள்ளதைக் காண முடியும்: + +பொதுமைப்படுத்தப்பட்ட வட்டத்துடன் ஒப்பிட, + +பொதுமைப்படுத்தப்பட்ட வட்டங்கள் எப்பொழுதுமே வட்டங்களாக இருக்காது. அவை வட்டங்களாகவோ அல்லது கோடுகளாவோ அமைகின்றன. + +வட்டத்தின் சுற்றளவிற்கும் விட்டத்திற்குமுள்ள விகிதம் π (pi), ஒரு விகிதமுறா மாறிலி; அதன் மதிப்பு தோராயமாக 3.141592654. வட்டத்தின் சுற்றளவு C; விட்டம் d; ஆரம் r எனில்: + +வட்டத்தின் பரப்பளவானது, வட்டத்தின் சுற்றளவை அடிப்பக்கமாகவும் ஆரத்தைக் குத்துயரமாகவும் கொண்ட முக்கோணத்தின் பரப்பளவிற்குச் சமமென ஆர்க்கிமிடீசால் நிறுவப்பட்டுள்ளது. எனவே வட்டத்தின் பரப்பளவு A: + +அதாவது "d" பக்க அளவுள்ள சுற்றுச்சதுரத்தின் பரப்பளவில் 79சதவீதம். +கணக்குபாடங்களில்நம்நாட்டுமாணவர்கள்மற்றநாட்டுமாணவர்களிடமிருந்துவித்தியாசப்படுகிறார்கள், எப்படிஎன்றால்,மற்றநாடுகளில்பள்ளிக்குச்சென்றுமுறையாகக்கற்றால்தான்கணிதம்பயிலமுடியும். ஆனால்இந்தியாவில்சிலநடைமுறைப்பயிற்சிகளாலேயேபாமரர்கள்கூடக்கணக்கில்புலிகளாகஉலாவருவதைக்காண்கிறோம். +வட்டவடிவநிலத்தின்பரப்பளவைகாண, "காக்கைப்பாடினியம்" என்றதொன்மையானநூலில்செய்யுள்வடிவிலேயேவிளக்கியுள்ளனர். +"வட்டத்தரைகொண்டுவிட்டத்தரைதாக்க +சட்டெனத்தோன்றுங்குழி." + +விளக்கம் : + +இதன்படி, +வட்டத்தரை = அரைச்சுற்றளவு = π * வி / 2 +விட்டத்தரை = அரைவிட்டம் = வி/2 + +இதன்படி, +வட்டத்தின்பரப்பளவு = πவி2/4 +குழிஎன்பதுபரப்பைக்குறிக்கும்சொல். + + + + + + + + + + + + + + +இலங்கைக் கட்டிடக்கலை + +இலங்கைக் கட்டிடக்கலை மிகவும் தொன்மை வாய்ந்தது. 2500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இது பெரும்பாலும் பௌத்த சமயம் சார்ந்ததாகக் காணப்படுகின்றது. இதனால் இலங்கைக் கட்டிடக்கலை சார்ந்த கட்டிடங்கள் பெரும்பாலும் பௌத்த வழிபாட்டிடங்கள் தொடர்பானவையாகவே உள்ளன. பௌத்த மதமும் அயல் நாடான இந்தியாவில் தோன்றி அசோகப் பேரரசர் காலத்தில் இலங்கைக்குப் பரவியதாலும், அண்மை அமைவிடம் காரணமாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும், சிறப்பாகத் தமிழ்நாட்டுக்கும் இடையில், பண்பாட்டுத் தொடர்புகள் இருந்துவந்ததனாலும், தமிழ்நாட்டிலிருந்து காலத்துக்குக் காலம் நிகழ்ந்த படையெடுப்புக்களின் விளைவாகவும் இந்தியக் கட்டிடக்கலையின் தாக்கம் இலங்கைக் கட்டிடக்கலையில் காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் பண்டைய இலங்கைக் கட்டிடக்கலை தனித்துவமான பல குணாதிசயங்களைக் கொண்டு விளங்குவதை நாட்டின் பல இடங்களிலும் முழுமையாகவும், சிதைந்தும் காணப்படும் பல வழிபாட்டிடங்கள், அரண்மனைகள், பல வகையான பொதுக்கட்டிடங்கள் என்பவற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடியும். பழங் காலத்தில் கட்டப்பட்ட சைவ சமயக் கோயில்கள் சிலவும் ஆங்காங்கே காணப்படினும் அவை முற்றிலும் திராவிடக் கட்டிடக்கலை வடிவங்களாகவே காணப்படுகின்றன. + +இலங்கையின் வரலாறு கலிங்க இளவரசனான விஜயன் அவனது தோழர்களுடன் இலங்கையில் இறங்கி அரசனாக முடிசூட்டிக்கொண்டதிலிருந்து ஆரம்பமானதாகப் பாளி வரலாற்று நூல்கள் குறிப்பிட்டாலும், நாட்டின் முதலாவது பௌத்த அரசனான தேவாநாம்பியதீசனின் காலத்திலேயே (கி.மு 250 – 210) முக்கியமான கட்டிடக்கலை ஆதாரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. + +பௌத்தக் கட்டிடக்கலை தொடர்பில் இலங்கையில் காணப்படும் மிகப் பழைய கட்டிடவகை தாதுகோபுரங்கள் ஆகும். இது பாளி மொழியில் "தூபா" எனவும் சிங்கள மொழியில் "தாகபா" எனவும் குறிப்பிடப்படுகின்றது. இவை பல வடிவங்களைக் கொண்டவையாக இருப்பினும் ஏறத்தாளக் கவிழ்த்து வைக்கப்பட்ட அரைக் கோள வடிவம் கொண்டவை எனலாம். சிங்கள வரலாற்று நூல்கள் மூலம் அறியப்பட்ட மிகத் தொன்மையான தாதுகோபுரம், இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் முன்னர் குறிப்பிட்ட தேவாநாம்பியதீசன் காலத்தில் கட்டப்பட்ட தூபாராம தாதுகோபுரமாகும். இந்தத் தாது கோபுரம் திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் இன்றும் காணப்படுகின்றது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்ட தாது கோபுரங்கள் பல அனுராதபுரத்திலும், பிற்காலத் தலைநகரான பொலநறுவையிலும், ஏனைய இடங்களிலும் காணப்படுகின்றன. பின்னர் கட்டப்பட்ட தாதுகோபுரங்கள் பாரிய அளவு கொண்டவையாக இருந்தன. அனுராதபுரத்திலுள்ள கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த, ருவன்வலிசாய தாதுகோபுரமும், கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அபயகிரி தாதுகோபுரமும், கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜேதவன தாதுகோபுரமும் உலகின் மிகப்பெரிய திண்மக் கட்டிட அமைப்புக்களின் பட்டியலில் இடம் பெறக்கூடியன. + +"போதிகர" என்பது "வெள்ளரசுவீடு" எனப் பொருள்படும். புத்த பகவான் அமர்ந்திருந்து ஞானம் பெற்றதாகக் கருதப்படும் புனித வெள்ளரசு மரக் கிளையொன்று அசோகப் பேரரசர் காலத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டு அனுராதபுரத்தில் நடப்பட்டது. தொடர்ந்து இலங்கையின் பல இடங்���ளிலும் பௌத்த வழிபாட்டிடங்களில் வெள்ளரசு மரங்கள் நடப்பட்டன. இம் மரத்தின் கீழ், புத்தர் இருந்து ஞானம் பெற்ற இருக்கையைக் குறிக்க ஒரு கற்பலகை அமைக்கப் பட்டிருக்கும். பிற்காலத்தில் அங்கே ஒரு புத்தர் சிலையும் அமைக்கப்படுவது வழக்கமாயிற்று. இவை அனைத்துக்கும் பாதுகாப்பாக அமைக்கப்பட்ட கட்டிடமே "போதிகர" + + + + + +அங்குலம் + +அங்குலம் () என்பது பிரித்தானிய அளவை முறையில் நீளத்தை அளக்கப் பயன்படும் ஓர் அலகு. இது ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பங்காகும். மீட்டர் அளவை முறையில் ஓர் அங்குலம் அண்ணளவாக 2.54 சதம மீட்டருக்குச் சமமானது. + + + + +கோயில் + +கோயில் என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தைக் குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் "கோயில்" என்னும் சொல் "கோ + இல்" எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே "கோ" என்பது "இறைவனையும்", "இல்" என்பது "இல்லம்" அல்லது "வீடு" என்பதையும் குறிக்கும். எனவே "கோயில்" என்பது "இறைவன் வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் "கோயில்" மற்றும் "கோவில்", என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி "கோவில்" என்றே வருகிறது. + +"தேவஸ்தானம்", "அம்பலம்" போன்ற சொற்களும் கடவுளை வணங்கும் இடத்தினை குறிக்கும். "கோயில்" என்பதற்கு "ஆலயம்" என்றொரு பெயரும் உண்டு. "ஆலயம்" என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்", "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் "கோட்டம்" என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், "ப்ர் (pr)" என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக் கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன என்பது பெறப்படுகின்றது. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளிலும், சொற்பிறப்பியல் அடிப்படையில் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருந்தாலும், தற்காலத்தில் பல்வேறு சமயத்தினருடைய இறைவணக்கத்துக்கான ���டங்களைக் குறிக்க அவை பயன்படுவதை அவதானிக்கலாம். + +பண்டைக்கால எகிப்தின் தொடக்கக் கோயில்கள் ஒரு மூடிய மண்டபம் ஆகும். இவற்றின் கூரைகள் தூண்களினால் தாங்கப்பட்டு இருந்தன. புதிய இராச்சியக் காலத்தில், வாயில் கோபுர அமைப்புக்கள், முற்றம், கோயில் கருவறைக்கு முன் அமைந்த மண்டபம் என்பன அமைக்கப்பட்டன. இப் பாணி கிரேக்க -ரோமர் காலம் வரை நிலைத்து இருந்தது. பண்டை எகிப்தியக் கோயில்கள் கற்களால் கட்டப்பட்டன. சுற்று மதில்களுக்கு செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. + +எகிப்தியக் கோயில்களின் நடுவில் ஒரு அறையில் கடவுள் உருவம் வைக்கப்படிருக்கும். அரசனின் சார்பில் ஒரு மதகுரு இதற்குப் பொறுப்பாக இருப்பார். இக் கோயில்கள் பொதுவாக மக்கள் வழிபடுவதற்காகத் திறந்து வைக்கப்படுவது இல்லை. கோயில் அதிகாரிகளைத் தவிர வேறு எவரும் செல்ல முடியாதவாறு கோயில் பூட்டப்பட்டிருக்கும். விழா நாட்களில் மட்டும் சிலை மக்கள் வழிபடுவதற்காக கோயிலுக்கு வெளியில் எடுத்துவரப்படும். + +பண்டைக் கிரேக்கர்கள் தமது கோயில்களை "டெமெனோஸ்" என்று அழைத்தனர். இது "புனிதப் பகுதி" என்னும் பொருள் கொண்டது. பலி கொடுப்பதற்கான பலிபீடம் கட்டிடங்களுக்குப் புறத்தே அமைந்த வெளியிடத்திலேயே இருப்பதால், இக் கோயில்களின் புனிதம் முக்கியமாக இவ் வெளியிடங்களுடனேயே தொடர்புபட்டு உள்ளது. கிரேக்கக் கடவுளர் சிலைகளைத் தாங்கிய கட்டிடங்கள் தொடக்கத்தில் மிகவும் எளிமையான கட்டிடங்களாகவே இருந்தன. கி.மு ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் இவை விரிவான நுணுக்க வேலைப்பாடுகளுடன் அமைந்தன. கிரேக்கக் கோயில் கட்டிடக்கலை, பண்டைய கட்டிடக்கலை மரபுகளில் பெருமளவு தாக்கத்தைக் கொண்டிருந்தது. + +கோயில்களின் அமைவிடத்தைத் தீர்மானிப்பதற்கான கிரியைகள், பறவைகளின் பறப்பை அல்லது வேறு இயற்கைத் தோற்றப்பாடுகளை அவதானித்துக் குறி சொல்பவரினால் நடத்தப்பட்டது. ரோமர் கோயில்கள் பொதுவாகக் கிழக்கு நோக்கியபடி அமைந்திருந்தன. எனினும் கோயில்களின் திசை குறித்த நுணுக்க விபரங்கள் சரியாகத் தெரியவரவில்லை. சில கோயில்கள் வேறு திசைகளை நோக்கியும் அமைந்திருக்கின்றன. எடுத்துக் காட்டாக பந்தியன் (Pantheon) வடக்கு நோக்கியபடி உள்ளது. + +பல நூறு மொழிகளைப் பேசுவோர் இந்துக்களாக இருக்கிறார்கள். இதனால், இறைவனை வணங்குவதற்கான இடம், "மந்திர்", "மந்திரா", "தேவஸ்தானம்", "தேவாலயம்", "அம்பலம்" போன்ற எண்ணற்ற சொற்களால் குறிப்பிடப்படுவது உண்டு. எனினும் இவற்றின் நோக்கம் ஒன்றே. இந்து சமயத்தில் ஒரு மரத்தின் கீழ் ஒரு கல்லை வைத்து அதை இறைவனாக உருவகித்து வணங்கும்போது அது ஒரு கோயிலாகி விடுகிறது. எனவே வெறும் மர நிழலில் இருந்து, ஒரு நகரத்தையே உள்ளடக்கிய பெரிய கோயில்கள் வரை பல அளவுகளிலும் இந்துக் கோயில்கள் உள்ளன. + +இந்துக் கோயில்கள் மிக நீண்ட வரலாற்றைக் கொண்டவை. இந்து சமயத்தின் தாயகமான இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோயில்கள் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடைக்காலத்தில், படையெடுப்புக்களாலும், பண்பாட்டுத் தொடர்புகளாலும் இந்து சமயம் இந்தியாவைத் தாண்டியும் விரிவடைந்தபோது வேறு பல நாடுகளிலும் இந்துக் கோயில்கள் கட்டப்பட்டன. உலகின் மிகப்பெரிய இந்துக் கோயில்கள் இந்தியாவுக்கு வெளியே கம்போடியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அமைக்கப்பட்டன. இன்று, இந்துக்கள் உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி வாழுகின்றனர். அதனால், ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலும் கூடப் பல இந்துக் கோயில்கள் அமைக்கப்படுகின்றன. + +அமைந்திருக்கும் சமுதாயம், இடம், அமைக்கப்பட்ட காலம் ஆகியவற்றைப் பொறுத்து இந்துக் கோயில்கள் பல்வேறு அமைப்புக்களில் காணப்படுகின்றன. எனினும் சில அடிப்படையான அமைப்புக்கள் எல்லா இந்துக் கோயில்களிலும் உள்ளன. + +இந்து சமயக் கோயில்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. + + +மரபுவழியான புத்த கோயில்கள், மனிதருக்கு உள் மற்றும் வெளி அமைதியைக் கொடுக்கும் நோக்கில் வடிவமைக்கப் படுகின்றன. பௌத்தம் இறைவனைப் பற்றிப் பேசுவதில்லை ஆயினும், பௌத்த சமயத்தின் சில பிரிவுகள் கௌதம புத்தரைப் புத்த கோயில்களில் வைத்து வழிபடுகின்றனர். தாதுகோபுரம், அரச மரம், படிம வீடு, துறவிகள் மடம் போன்ற கூறுகள் புத்த கோயில்களில் காணப்படுகின்றன. இத் தாதுகோபுரங்களில் கௌதம புத்தரின் பல், எலும்பு போன்ற சின்னங்கள் வைக்கப்படுகின்றன. + +புத்த மதம் தோன்றிய இந்தியாவில் இன்று அம் மதம் அருகி விட்டாலும், இந்தியாவுக்கு வெளியே அது ஒரு பாரிய மதமாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும், சீனா, ஜப்பான், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்த மதம் பெரும்பான்மை மதமாக இருந்து வருகிறது. இதனால் அந் நாடுகளிலும், அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் வேறு பல நாடுகளிலும் புத்த கோயில்கள் உள்ளன. + +உலகின் மிகப்பெரிய தாதுகோபுரங்களைக் கொண்ட புத்த கோயில்கள் சில இலங்கையில் உள்ளன. அசோகப் பேரரசனால் அனுப்பி வைக்கப்பட்டதும், புத்தர் ஞானம் பெற்றதுமான வெள்ளரசு மரக் கிளையை நட்டு வளர்க்கப்பட்ட அரச மரம் இன்றும் அநுராதபுரத்தில் உள்ள புத்த கோயில் ஒன்றில் உள்ளது. + +சமண சமயம் அல்லது ஜைன மதம் என அழைக்கப்படும் மதம் ஒரு காலத்தில் இந்தியாவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. இம் மதம் செல்வாக்கிழந்த போது சமணக் கோயில்கள் பல அழிக்கப்பட்டு விட்டன. இன்று இந்தியாவில் சிறு அளவில் சமணர் வாழ்ந்து வருகின்றனர். + +சமணக் கோயில்களில் தீர்த்தங்கரர்கள் எனப்படும் மதப் பெரியார்களின் உருவங்கள் வைத்து வழிபடப்படுகின்றன. சமணக் கோயில்கள் பெரும்பாலும் சலவைக் கல்லினால் அமைக்கப்படுகின்றன. சில புகழ் பெற்ற சமணக் கோயில்கள் இந்தியாவில், பலித்தானா, சங்கேஸ்வர், சிக்கார்ஜி, வத்தமான், மும்பாய், அகமதாபாத் ஆகிய இடங்களில் உள்ளன. சமணக் கோயில்களில் பல சலவைக் கல் தூண்கள் அமைக்கப்படுகின்றன. இவை தேவதைகளின் உருவங்களைக் கொண்ட சிற்பவேலைகளினால் அழகூட்டப்படுகின்றன. சமணக் கோயில்களின் முதன்மை அறையில், பர்ஷ்வாநாதர், ரிஷபதேவர், மகாவீரர் ஆகிய மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் வைக்கப்படுகின்றன. மவுண்ட் அபுவில் உள்ள தில்வாரா கோயில்கள் சமணம் தொடர்பான மிக அழகிய யாத்திரைத் தலம் எனச் சொல்லப்படுகின்றது. + +சீக்கிய மதக் கோயில்கள் பொதுவாக குருத்துவாரா எனவே அழைக்கப்படுகின்றன. இச் சொல் பஞ்சாபி மொழியில் "குருவுக்கான வாயில்" என்னும் பொருள் கொண்டது. எனினும் கோயில் என்ற சொல் சீக்கிய மதக் கோயில்களுக்கும் பரவலாக வழங்கப்படுவது உண்டு. சீக்கியக் கோயில்களில் உருவங்கள் வைத்து வணங்கப்படுவது இல்லை. சீக்கிய மதத்தினர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்களுடைய மிகப் புனிதமான கோயிலும் பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் (அம்ரித்சார்) என்னும் நகரில் அமைந்துள்ளது. ஹர்மந்திர் சாகிப் என்னும் பெயர் கொண்ட இக் கோயில் பொதுவாகப் "பொற்கோயில்" என அழைக்கப்படுகிறது. + +சீக்கியக் கோயில்களு��்குள் பிற மதத்தினரும் அநுமதிக்கப்படுகின்றனர். எனினும், உட் செல்லும் எவரும் காலணிகளைக் கழற்றிவிட்டு, கைகழுவித் தலையில் துண்டு அல்லது தொப்பி அணிந்தே செல்ல முடியும். + +கிறித்தவர்கள் தங்களின் வழிபாட்டு இடங்களை ஆலயம் அல்லது கோவில் என அழைப்பர். இவ்வகைக் கோயில்கள் வகைகள் சிற்றாலயம், ஆலயம், பேராலயம், திருத்தலம், மறைமாவட்டப் பேராலயம் என பல வகைப்படும். கிறித்தவ கோயில்களுக்குள் பிற மதத்தினரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஆயினும் திருவருட்சாதனங்களில் குறிப்பாக நற்கருணை விருந்தில் பங்கு பெற முடியாது. எல்லா கிறித்தவ ஆலயங்களும் குறிப்பாக கத்தோலிக்க ஆலயங்கள் அனைத்தும் ஏதேனும் ஒரு புனிதரோ அல்லது இயேசு கிறித்துவின் பெயராலோ தந்தையாம் கடவுளுக்கே அர்பணிக்கப்பட்டதாகும். + + + + + + +கணபதி காங்கேசர் பொன்னம்பலம் + +ஜி. ஜி. பொன்னம்பலம் எனப்படும் கணபதி காங்கேசர் பொன்னம்பலம்("G. G. Ponnambalam", நவம்பர் 8, 1901 - பெப்ரவரி 9, 1977) இலங்கைத் தமிழர்களின் நலன்கருதித் துவக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் ஆவார். இலங்கையின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் வழக்குரைஞர் ஆவார். ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர். + +பொன்னம்பலம், யாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியிலுள்ள அல்வாய் என்னும் ஊரில் 1901 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் கணபதி காங்கேசர். தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் மானிப்பாய்க்கு அண்மையிலுள்ள நவாலியைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியிலும், கொழும்பு சென் ஜோசப் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்று இயற்கை அறிவியல் துறையிலும் சட்டத்துறையிலும் பட்டம் பெற்றார். இலங்கை திரும்பிய அவர் கொழும்பில் வழக்குரைஞராகத் தொழில் புரிந்தார். நல்ல வாதத் திறமை கொண்ட பொன்னம்பலம் சிறந்த குற்றவியல் வழக்குரைஞராகப் புகழ் பெற்றார். 1948 ஆம் ஆண்டில் அரச வழக்கறிஞர் ("King’s Counsel") என்னும் தகுதியைப் பெற்றார். + +இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் பிறந்தனர். இவரது மகன், குமார் என்று அழைக்��ப்பட்ட காசிநாதர் காங்கேசர் பொன்னம்பலம், இலங்கைத் தமிழர் அரசியலில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர். இவர் இனவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். + +1931 ஆம் ஆண்டில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது அரசாங்கச் சபைக்கான தேர்தலில் மன்னார்-முல்லைத்தீவுத் தொகுதியில் பொன்னம்பலம் போட்டியிட்டாராயினும் வெற்றிபெற முடியவில்லை. ஆயினும் இது இவரின் அரசியல் வாழ்வின் தொடக்கமாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் பருத்தித்துறைத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம், வெற்றி பெற்று அரசாங்கச் சபை உறுப்பினர் ஆனார். 1936 ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்ற இவர் 1947 ஆம் ஆண்டுவரை அரசாங்கச் சபை உறுப்பினராகத் தொடர்ந்தார். + +1944, ஆகஸ்ட் 29 இல் இலங்கையில் தமிழர் நலன்களைப் பேணும் நோக்கில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை இவர் தொடக்கினார். இக் காலகட்டத்தில் இலங்கையில் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பிரித்தானிய அரசினால் ஏற்படுத்தப்பட்ட சோல்பரி ஆணைக்குழு முன் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக சமபல பிரதிநிதித்துவ முறை ஏற்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டார். இதன் மூலம் பொதுவாக இலங்கை அரசியலிலும், சிறப்பாக இலங்கைத் தமிழர் அரசியலிலும் பெரும் செல்வாக்குப் பெற்றார். அக்காலத்தில் ஐம்பதுக்கு ஐம்பது என்று பரவலாக அறியப்பட்ட இச் சமபல பிரதிநிதித்துவக் கொள்கையை அடிப்படையில் 1947 இல் இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்துக்காக நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க் காங்கிரஸ் பெரு வெற்றி பெற்றது. இத் தேர்தலில் நல்ல அரசியல் செல்வாக்குக் கொண்டிருந்த அருணாசலம் மகாதேவாவை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் பெருமளவு வாக்குகளால் வெற்றி பெற்றார். + +1948 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியால் அமைக்கப்பட்ட முதலாவது அரசாங்கத்தில் சேர்ந்து கொண்டதும், மலையகத் தமிழரின் குடியுரிமை பற்றிய பிரச்சினைகளில் பொன்னம்பலத்தின் அணுகு முறைகளையும் ஏற்றுக்கொள்ளாத சில தலைவர்கள் காங்கிரசிலிருந்து வெளியேறினர். இதனால் கட்சி பிளவு பட்டது. எனினும் பொன்னம்பலம் ஐக்கிய தேசியக் கட்சி அரசில் தொழில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். சுமார் ஐந்தாண்டு காலம் அமைச்சராகப் பதவியில் இருந்த இவர், பல பாரிய தொழிற்சாலைகளைத் தமிழர் பகுதிகளில் நிறுவினார். வடக்கில், காங்கேசன்துறையில் நிறுவப்பட்ட காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலையும், வன்னிப் பகுதிக்கு அண்மையில் பரந்தன் என்னுமிடத்தில் நிறுவப்பட்ட பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்புக்கு அண்மையில் வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட காகித ஆலை ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. + +தமிழ்க் காங்கிரசில் இருந்து பிரிந்த செல்வநாயகம், வன்னியசிங்கம், நாகநாதன் முதலிய தலைவர்கள் தமிழரசுக் கட்சி என அழைக்கப்பட்ட கூட்டாசிக் கட்சியை ("Federal Party") உருவாக்கினர். தமிழ்க் காங்கிரசைவிடக் கூடிய தமிழ்த் தேசியவாதக் கட்சியாக அடையாளம் காணப்பட்ட இக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தபோது, காங்கிரசின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது. + +1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஈ. எம். வி. நாகநாதன், பொன்னம்பலத்தை எதிர்த்து யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்டார். இத் தேர்தலில் பொன்னம்பலம் வெற்றி பெற்றார் ஆயினும், வாக்கு வேறுபாடு குறைவடைந்ததுடன், நாடாளுமன்றத்தில் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் குறைந்தது. 1956 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தல் காங்கிரசுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது. இத் தேர்தலில் இக் கட்சியின் சார்பில் பொன்னம்பலம் மட்டுமே மிகவும் குறைந்த பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். + +1960 ஆம் ஆண்டில் இரண்டு தடவைகள் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மீண்டும் யாழ்ப்பாணத் தொகுதியில் போட்டியிட்ட பொன்னம்பலம் இரண்டிலும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளரான அல்பிரட் துரையப்பாவிடம் தோற்றார். + +1965 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத் தேர்தலில் இவருடன் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் இருவர் வெற்றி பெற்றனர். + +1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிலும் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலேயே போட்டியிட்டார். இத்தடவை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த, முன்னாள் மாவட்ட நீதவான் ஆகிய சி. எக்ஸ். மார்ட்டின் என்பவரிடம் தோல்வியடைந்தார். இத் தேர்தலில் மூன்றாம் இடமே இவருக்குக் கிடைத்தது. இதுவே பொன்னம்பலம் போட்டியிட்ட இறுதித் தேர்தலாகவும் அமைந்தது. + +1970 ஆம் ஆண்டுத் தேர்தலுக்குப் பின்னர் இலங்கைத் தமிழர் அரசியலில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசு தமிழருக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்தது. இதனால் தமிழ் இளைஞர் மத்தியில் தீவிரவாதம் முளைவிடத் தொடங்கியது. தமிழர் மிதவாதக் கட்சிகளின் தலைவர்கள் இனியும் பிரிந்து நின்று எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்தனர். தமிழரசு, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், மலையகத் தமிழர்களின் கட்சியான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசையும் சேர்த்துக்கொண்டு தமிழர் கூட்டணி என்னும் புதிய அமைப்பை உருவாக்கினர். இதன் தலைவர்களாக,எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். தொண்டமான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் அரசியலில் இருந்து ஓரளவுக்கு ஒதுங்கி இருந்த பொன்னம்பலம் மீண்டும் அரசியலுக்கு வந்தார். எனினும் தீவிர அரசியலில் இவர் நேரடியாக இறங்கவில்லை. + +தமிழர் கூட்டணியினர் தமிழீழம் என்னும் தனி நாட்டை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைத்துத் தீர்மானம் நிறைவேற்றினர். அத்தீர்மானத்தை அச்சிட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிய அமிர்தலிங்கம் முதலிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு "ட்ரையல் அட் பார்" எனப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களில் விசாரணை நடத்த ஏற்பாடாகியது. இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றில் மிகவும் கவனிக்கப்பட்ட ஒரு வழக்காக இது விளங்கியதுடன், தமிழ்க் கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது எனலாம். இவ்வழக்கை நடத்துவதற்காகச் செல்வநாயகம் தலைமையில் அமைக்கப்பட்ட வழக்கறிஞர் குழுவில் பொன்னம்பலம் பங்கேற்று வாதாடினார். இதில் பொன்னம்பலத்தின் வாதத்திறமையினால் கூட்டணித் தலைவர்கள் விடுதலையாயினர். இவ் வழக்கின் மூலம் தமிழர் மத்தியில் பொன்னம்பலத்தின் செல்வாக்கு மீண்டும் உயர்ந்தது எனலாம். + +இவ் வழக்கில் ஏற்பட்ட புகழ் காரணமாகத் தமிழ்நாட்டில் மு. கருணாநிதி மீது தொடரப்பட்ட ஊழல் வழக்கொன்றிலும் கருணாநிதிக்காகப் பொன்னம்பலம் வாதாடினார். எனினும் வழக்கு முடியுமுன்னரே மலேசியாவில் காலமானார். + +அவரது உடல் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுக் கொழும்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின்னர் யாழ்ப்பாணத்தி��் அவரது சொந்த ஊரான அல்வாயில் மக்கள் திரளின் மத்தியில் எரியூட்டப்பட்டது. + + + + + +காங்கேசன்துறை வீதி + +காங்கேசன்துறை வீதி ("Kankesanthurai Road" / "K.K.S Road") என்பது, யாழ்ப்பாண நகரத்திலிருந்து யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான காங்கேசன்துறை நோக்கிச் செல்லும் பாதையைக் குறிக்கும். இது கே.கே.எஸ். (காங்கேசன்துறை என்பதன் ஆங்கிலக் குறுக்கம்) வீதி எனவும் பரவலாக அறியப்படுகின்றது. இதனுடைய நீளம் அண்ணளவாக 10 மைல்களாகும். இவ் வீதி, வண்ணார்பண்ணை, கொக்குவில், கோண்டாவில், தாவடி, இணுவில், உடுவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் ஆகிய ஊர்களை ஊடறுத்துச் செல்கின்றது. செப்பமற்ற மண்பாதையாக இருந்த இவ் வீதி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் முறையான வீதியாகக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. + +காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாண நகரத்திலிருந்து, குடாநாட்டின் கரையோரங்களை நோக்கி விசிறி அமைப்பில் செல்லும் வீதிகளுள் ஒன்று. இந்த வீதிகளைச் செங்குத்தாக வெட்டிக்கொண்டு கிழக்கு - மேற்காகச் செல்லும் வீதிகள் பல உள்ளன. இத்தகைய வீதிகள் காங்கேசன்துறை வீதியை வெட்டிச் செல்லுவதனால் ஏற்படுகின்ற சந்திகள் அவற்றை அண்டியுள்ள ஊர்களுக்கான மையங்களாகச் செயற்படுகின்றன. இவ்வாறான சந்திகள் சில பின்வருமாறு: + + + + + + +கிலோமீட்டர் + +மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. +இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + + +தச்சர் + +மரவேலை (அல்லது தச்சு வேலை) செய்யும் ஒருவரைத் தமிழில் தச்சன் எனக் குறிப்பிடுவர். துண்டு துண்டாக அறுக்கப்பட்ட மரங்களை மரசாமான்களாக தச்சர் வடிவமைக்கின்றார். கதவு, சன்னல், அலமாரி, நற்காலி உட்பட அனைத்து மரச்சாமான்களை தச்சர் வட��வமைக்கிறார். +உளி, சுத்தி, வாள்,ஆணி, துளைக்கருவி, அரம், இழைப்புளி போன்றவை. + +மரவேலை செய்யும் தச்சர், நகை வேலை செய்யும் தச்சர், இரும்பு வேலை செய்யும் தச்சர் எனப்படுவர் (இதில் இரும்பு வேலை செய்யும் தச்சரை கருமார் என்ற பெயரில் அழைப்பர். + +பழங்காலத்தில் தச்சரின் பங்கு இன்றிமையாதது. தற்பொழுது பெரும்பாலும் தச்சு வேலைக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் மரத்தில் வடிவங்கள் தச்சர்கள் வெறும் உளி, சுத்தி பயன்படுத்தி வடிவமைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +தமிழ்த் திரைப்பட இயக்குநர்களின் பட்டியல் + + + + + +கைலாசம் பாலசந்தர் + +கைலாசம் பாலச்சந்தர் ("K. Balachander", கே. பாலச்சந்தர், சூலை 9, 1930 - திசம்பர் 23 , 2014) தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார் . இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர். 90களுக்குப் பிறகு கையளவு மனசு போன்ற பெரும் வரவேற்பை பெற்ற தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கினார். + +இவரது சொந்த ஊர் நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி. தந்தை கைலாசம் தாயார் காமாச்சியம்மாள். தந்தைக்கு கிராம முனிசிப் பணி. நன்னிலத்தில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. முடித்தார். இராம. அரங்கண்ணல் இவரது பள்ளித் தோழர். எம். எஸ். உதயமூர்த்தி இவரது கல்லூரித் தோழர். +"கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நிறுவினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்துள்ளார். அவற்றில் நெற்றிக்கண், ராகவேந்தர், சிவா ஆகியவ��� குறிப்பிடத்தக்கவை. + +இயக்குனர் ஸ்ரீதரைப் போலப் பல புதுமுகங்களை அறிமுகம் செய்தவர் பாலச்சந்தர். அவர்களுள் மிக உச்சத்தை அடைந்தவர் ரஜினிகாந்த். கமலஹாசனை கதாநாயகனாக்கியது பாலச்சந்தர் அல்லவெனினும், வரிசையாக அவருக்கு வாய்ப்புக்களை அமைத்துக் கொடுத்தவர் பாலச்சந்தர். + +அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஃபடாஃபட் ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இது ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் ஒரு வெற்றிப்படமே. + +மேலும், பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (டூயட்) ஆகியோர் அடங்குவர். + +வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் அறிமுகமான திலீப் மற்றும் நிழல் நிஜமாகிறது படத்தில் அறிமுகமான அனுமந்து ஆகியோர் எதிர்பார்த்த அளவில் திரையுலகில் முன்னேறவில்லை. பாலச்சந்தர் அவர்களை அறிமுகம் செய்த படத்தில் மிகுந்த அளவில் நற்பெயரைப் பெற்றிருந்தனர். + +எஸ். வி. சேகர் (வறுமையின் நிறம் சிவப்பு) மற்றும் மௌலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி. மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி இராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை திரைக்கு பாலச்சந்தர் அறிமுகப்படுத்தினார். பாலச்சந்தரின் பல படங்களில் நடித்திருந்த மேஜர் சுந்தரராஜன் (மேஜர் சந்திரகாந்த்) இவ்வாறு அறிமுகமானவரே. அவரது இடுபெயரான மேஜர் என்பது இப்படத்திலிருந்தே விளைந்தது. + +எம். ஆர். ராதாவின் மகன் ராதாரவியை அறிமுகப்படுத்தியவர் இவரே. + + + + +இவற்றில் முதலாவதைத் தவிர மற்றவை இரண்டும் பெரும் தோல்வியைத் தழுவின. + + +உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாலசந்தர் திசம்பர் 23, 2014 அன்று காலமானார். + + + + + +மைல் + +பிரித்தானிய அளவை முறையில் நீண்ட தூரங்களை அளக்கப் பயன்படும் நீள அலகு மைல் ஆகும். மெட்ரிக் முறையில் இது அண்ணளவாக 1.6 கிலோமீட்டருக்குச் சமமானது. + +ப���்டைய அரபிகளும் தூரத்தை அளக்க மைல் என்பதைப் பயன்படுத்தினார்கள். இது பிரித்தானிய அளவை முறைக்கு மிகவும் முற்பட்டதாகும். முகம்மது நபியவர்களின் காலத்திலும் அதற்கு முன்னரும் இது பயன்பாட்டிலிருந்தது. ”அரபு மைல்” என்று தற்கால வரலாற்றாளர்களால் அழைக்கப்படும் இந்த அலகு 1900 முதல் 2000 மீட்டருக்கு சம்மானதாக இருந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. + +1 மைல் + + + + + +மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் + +மொழியியல் தொடர்பான அடிப்படைத் தலைப்புகள் கீழே தரப்பட்டுள்ள அம்சங்களைத் தழுவி அமைகின்றன. + +"மொழியியலில் கேட்கப் படுகின்ற அடிப்படையான கேள்விகள் எவை?" + +"மொழியியலில் அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்துருக்கள் அல்லது சொற்கள் எவை?" + +"அடிப்படைக் கருத்துருக்கள் முதன் முதலில் விளக்கப்பட்டது எப்போது? யாரால்?" + +"மொழியியல் துறை வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க செல்வாக்குச் செலுத்தியவர்கள்" + + + + + + + + +இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி + +இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பொதுவுடமைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் கட்சி. பொதுவுடமைக் கொள்கையின் ஆதரவாளர்களால் இலங்கையில் தொடங்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியிலிருந்து ஸ்டாலினிசத்துக்குச் சார்பானவர்கள் பிரிந்து உருவாக்கிய ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற பெயரிலான கட்சியின் தொடர்ச்சியாக 1943ல் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. வைத்திய கலாநிதியான எஸ். ஏ. விக்கிரமசிங்க தலைமை தாங்கி ஐக்கிய சோஷலிசக் கட்சியையும் பின்னர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியையும் வழிநடத்தினார். + +1952 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரான திருமதி டொரீன் விக்கிரமசிங்க இலங்கைப் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். + +1960ல் கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் மகாஜன எச்சத் பெரமுன என்ற கட்சியும் இணைந்து இடதுசாரிக் கூட்டணியொன்றை உருவாக்கின. ஐக்கிய இடதுசாரிக் கூட்டணி என்று அழைக்கப்பட்ட இக் கூட்டணி, 1964ல் அப்போதைய பிரதம அமைச்சரான சிரிமாவோ பண்டாரநாயக்கா கம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்கா சமசமாஜக் கட்சிக்கும் அமைச்சர் பதவிகளைக் கொடுக்க முன்வந்தபோது உட���ந்தது. + + + + +இந்தியப் பொதுவுடைமைக் கட்சி + +இந்தியப் பொதுவுடமைக் கட்சி அல்லது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இக்கட்சி எப்பொழுது தொடங்கப்பட்டது என்பது குறித்து இந்தியக் கம்யூனிச இயக்கத்தில் இரு வேறு கருத்துகள் உள்ளன. திசம்பர் 26, 1925ஐ தன் நிறுவன நாளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிடுகிறது. எனினும், இக்கட்சியிலிருந்து பிரிந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இக்கட்சி சோவியத் ஒன்றியத்தில் 1925ல் நிறுவப்பட்டதாக சொல்கிறது. இது இடது முன்னணியின் ஒரு அங்கமாகும். இரா. முத்தரசன் என்பவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருக்கிறார். + +ரஷ்யப் புரட்சி அக்டோபர் 1917ல் வெற்றி பெற்ற பிறகு மேற்கத்திய நாடுகளிலும் கீழ்த் திசை நாடுகளிலும் [மார்க்சியம்||மார்க்சியக்] கொள்கைகளில் ஈடுபாடு கொண்டிருந்த படித்த அறிவாளிகள் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைக்கத் தொடங்கினார்கள். அதே போன்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்த படித்த அறிவாளிகளின் சில குழுக்கள் மார்க்சியத்தின் பொதுவான கோட்பாடுகளை இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்ப பிரயோகிக்கத் தெடங்கினார்கள். + +1925 களின் முதல் பாதியில் இந்தக் குழுக்கள் [கம்யூனிஸ்ட் அகிலம்|கம்யூனிஸ்ட் அகிலத்தின்] (Comintern - சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கூட்டமைப்பு) வழிகாட்டலில் ஒன்று சேர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைத் துவக்கின. மக்களை ஒன்று திரட்ட மும்பை, வங்காளம், பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாநிலங்களில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சிகள் அமைக்கப்பட்டன. இந்தக் கட்சிகள் மூலமாகவும் [[அகில இந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் ([[All India Trade Union Congress]]-AITUC) மூலமாகவும் விவசாயிகள், தொழிலாளர்கள் இயக்கங்களில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்றனர். பம்பாயில் பலம் வாய்ந்த [[கர்னி-காம்கார் யூனியன்]] மூலம் நடந்த கூலி உயர்வுக்கான போராட்டங்களுகு கம்யூனிஸ்ட்டுகள் தலைமை வகித்தனர். + +அப்போது இந்தியாவில் [[குடிமைப்பட்ட கால இந்தியா|ஆங்கிலேய காலனிய ஆட்சி]] நடந்து கொண்டிருந்தது. அவர்கள் ஆரம்பக் காலத்திலிருந்து கம்யூனிஸ்டுகளை வேட்டையாடத் தொடங்கினர். ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாக சதி வழக்குகள் போட்டு கம்யூனிஸ்டுகளின் அரசியல் நடவடிக்கைகளை முடக்க முயற்சித்தனர். +1929 மார்ச்சில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்கள் [[கான்பூர்]], [[மீரட்]] போன்ற சதி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். + +[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] ஆரம்பத்தில் போர் எதிர்ப்பின் காரணமாக பல தலைவர்கள் கைதாகினர். [[இட்லர்|இட்லரை]] [சோவியத் யூனியன்|சோவியத் யூனியனை] ஆங்கிலேயருக்கு ஆதரவாக தாக்கிய போது ஆங்கிலேயர்கள் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு ஆதரவாக இருக்க ஆரம்பித்தார்கள். + +கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தேசிய விடுதலை இயக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமையை தட்டிக் கேட்கவில்லை. தேசிய விடுதலை இயக்கத்துக்கு தலைமை ஏற்கவும் முயற்சிக்கவில்லை. காங்கிரசின் உள்ளிருக்கும் முற்போக்கு பிரிவினரை ஈர்த்து காங்கிரசுக் கட்சியை இடது சாரி திசையில் திருப்பலாம் என்று 1921 [[அகமதாபாத் காங்கிரஸ்]] மாநாட்டில் கம்யூனிஸ்டுகள் முயற்சித்தனர். முழு விடுதலையை அடைவதை காங்கிரஸ் கட்சியின் திட்டமாக நிறைவேற்றும்படி செய்யப் போராடினார்கள். + +[[பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்]] +[[பகுப்பு:இந்திய அரசியல் கட்சிகள்]] +[[பகுப்பு:1920இல் நிறுவப்பட்ட அரசியல் கட்சிகள்]] + + + +ஆவியில் வேகவைத்தல் + +இந்திய உணவு வகைகளில் இட்லி, பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகள் ஆவியில் வேகவைக்கும் முறையைப் பயன்படுத்தித் தயார் செய்யப்படுகின்றன. மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு வகை உணவுக்கும் வெவ்வேறு விதமான பாத்திரங்கள் பயன்படுகின்றன. அடிப்படையில் கீழே நீரைக்கொண்டுள்ள ஒரு பாத்திரம் இருக்கும். இது அடுப்பில் வைத்துச் சூடாக்கப்படும் போது வெளிவரும் ஆவி படக்கூடிய வகையில் இதற்கு மேல் வேகவைக்கப்பட வேண்டிய பதார்த்தம் வைக்கப்படும். வெளிவரும் ஆவி தப்பிப் போகாதபடி மூடி வைக்கப்படும். + + + + + +இடியப்பம் + +இடியப்பம் அல்லது இடியாப்பம் () என்பது அரிசி மாவினால் தயாரிக்கப்படும் ஒருவகை உணவாகும். இந்தியாவில் கேரள மாநிலத்திலும், இலங்கையிலும் அதிக அளவில் உண்ணப்படுகிறது. இலங்கைத் தமிழர் மத்தியில் இது ஒரு முக்கிய உணவு வகையாக உள்ளது. இது அரிசி மாவிலேயே செய்யப்படுகின்றது. கோதுமை மாவும் பயன்படுகிறது. இடியப்பம் பிழிவதற்கான சிறு உபகரணம் "இடியப்ப உரல்" ஆகும். + +இலங்கை உணவு முறையில் இடியப்பம் சம்பல் என்னும் தேங்காயினால் செய்யப்பட்ட உணவுடனும் சொதி எனப்படும் நீர்ம உணவுடனும் சேர்த்து உண்ணப்படுகிறது. + + + + + +உயர்த்தி + +உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும். பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும். + +வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும். + +இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ரோமானியர்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற பிரெஞ்சு நாட்டவர் பறக்கும் நாற்காலி ஒன்றை அமைத்தார். இதன் மூலம் பயணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic Elevators) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை தொழிற்சாலைகளிலும் சுரங்ககளிலும் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டன. +இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான மின்-உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனி யில் உருவாக்கினார். + +உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. 1853 ல், எலிஷா ஒட்டிஸ் என்பவர் தூக்குகின்ற கயிறுகள் அறுந்தாலும் பயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். மார்ச் 23, 1857 இல், அவரத��� முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, நியூயார்க்கில் அமைக்கப்பட்டது. + +அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. + +உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும். அப்போது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது எதிர் எடை என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும். + +இவ்வகை உயர்த்திகள் தரைக்கு மேல் அல்லது கீழே உள்ள ஒரு உந்துத் தண்டின் மேல் அழுத்தம் ஏற்படுத்தி பெட்டியை நகர்த்துகின்றன. நீரியல் வகை உயர்த்திகள் பெரும்பாலும் இழுவை வகை உயர்த்திகளை விட மெதுவாக செயல்படும். + +உயர்த்தி கதவுகள் உயர்த்தியில் பயணம் செய்வோர் தவறி விழுவதை தடுக்க பயன்படுகின்றன. பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது. சில உயர்த்திகளில் இரு கதவுகளும் ஒன்றன் பின் ஒன்று சரிந்து செல்லும் வகையிலும் அமைக்க பெற்றிருக்கும். ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும். + +மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொ���்தன்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. + +உயர்த்தி படிமுறை என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது: + +இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும். +உயர்த்தி படிமுறை ஆனது கணினி இயக்கு தளத்தில் வன்தட்டு நிலை நினைவக வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது. அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன. + +வானளாவி போன்ற உயர்ந்த கட்டிடங்களில், சேரிட கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தபடுகிறது. இம்முறையில், நாம் எந்த தளத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அதை பதிவு செய்திட வேண்டும். உடனே நாம் எந்த உயர்த்தியில் பயணிக்க வேண்டும் என்பதை கணினி கணக்கிட்டு சொல்லி விடும். அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும். ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது. + +பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு: + + + + + +பாரிஸ் + +பாரிஸ் அல்லது பாரி எனப்படுவது பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாகும். உலகத்தில் உள்ள‌ நகரங்களிலேயே மிக அழகிய நகரம் என்று பெயரெடுத்த பாரிஸ், நாட்டிலுள்ள மிகப் பெரிய நகரமும் இதுவே. இந் நகரம் சீன் நதியினால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வலது கரை வடக்கிலும், சிறிய இடது கரை தெற்கிலும் உள்ளது. இந்த ஆறு, அதன் கரையிலுள்ள மர வரிசைகளோடு கூடிய நடை பாதைகள் ("quais"), திறந்த வெளிப் புத்தக விற்பனை நிலையங்கள், ஆற்றின் வலது, இடது கரைகள��� இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் உள்ள பாலங்கள் என்பவற்றுக்குப் பெயர் பெற்றது. சம்ஸ் எலிசீஸ் ("Champs-Élysées") போன்ற மரவரிசைகளோடு கூடிய "புலேவாட்"டுகள் மற்றும் பல கட்டிடக்கலைச் சிறப்பு வாய்ந்த கட்டிடங்களுக்கும்கூடப் பாரிஸ் புகழ் பெற்றது. + +இந்நகர் அண்ணளவாக 20 லட்சம் சனத்தொகையைக் கொண்டது (1999 கணக்கெடுப்பு: 2,147,857). பிரெஞ்சு மொழியில் "aire urbaine de Paris" என வழங்கப்படும் பாரிஸின் பெருநகரப் பகுதியில் சுமார் 1.1 கோடி மக்கள் (1999 கணக்கெடுப்பு: 11,174,743) வசிக்கிறார்கள். + +"(முழுமையான விவரங்களுக்குப் பாரிஸின் வரலாறு கட்டுரையைப் பார்க்கவும்)" + +பாரிஸ் என்ற பெயர், ரோமர் இப் பிரதேசத்தை ஆக்கிரமித்த காலத்தில் அங்கே வாழ்ந்துவந்த "கலிக்" இனக் குழுவின் பெயரான "பரிசிஸ்" என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. + +வரலாற்று அடிப்படையில் பாரிஸின் மையக்கரு, பலைஸ் டி ஜஸ்டிஸ் "(Palais de Justice)" மற்றும் நோட்ரே-டேம் டி பாரிஸ் தேவாலயம் என்பவற்றினால் பெரிதும் இடங் கொள்ளப்பட்டுள்ள, இலே டி லா சிட்டே (Île de la Cité) எனப்படும் ஒரு சிறு தீவாகும். இது பெரும்பாலும் 17ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அழகிய வீடுகளைக்கொண்ட இன்னொரு தீவான "இலே செயிண்ட்-லூயிஸ் என்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. + +கி.மு 52ல் ரோமர் வரும் வரை பாரிஸில், கலிக் இனக்குழுவினர் வாழ்ந்து வந்தனர். இவர்களை ரோமர் பாரிஸீ என அழைத்தனர், எனினும் நகரத்தின் பெயரை "சதுப்பு இடம்" எனப் பொருள்படும் "லூட்டேசியா" எனவே குறிப்பிட்டனர். சுமார் 50 வருடங்களுக்குப் பின்னர், நகரம், தற்போது "லத்தீன் பகுதி" என வழங்கும், சீன் நதியின் இடது கரைக்கு விரிவடைந்தது, இது பின்னர் "பாரிஸ்" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +ரோமர் ஆட்சி 508ல் முடிவடைந்தது. பிரான்க் குளோவியஸ், பாரிஸை, பிரான்க்ஸின் மெரோவிங்கியன் வம்சத்தின் தலைநகரமாக ஆக்கினான். 88 களில் இடம்பெற்ற "Viking" ஆக்கிரமிப்புகள், இலே டி லா சிட்டேயில் கோட்டை ஒன்றைக் கட்டவேண்டிய நிலையைப் பாரிஸியர்களுக்கு ஏற்படுத்தின. மார்ச் 28, 845 ல், ரக்னார் லொட்புரொக் என்பவனின் தலைமையில் நடந்ததாகக் கருதப்படும் "Viking" தாக்குதல்களுக்கு பாரிஸ் அடி பணிந்தது, எனினும் பெருந்தொகையைக் கப்பமாகப் பெற்றுக்கொண்டு அவன் பாரிஸை விட்டு நீங்கினான். பிற்காலக் கரோலிங்கியன் அரசர்களின் வலிமைக் குறைவினால், பாரிஸின் கவுண்ட்கள் ப��ிப்படியாக வலிமை பெற்று வந்தனர். இதன் விளைவாக பாரிஸின் கவுண்ட், ஓடோ நிலப் பிரபுக்களினால் பிரான்சின் அரசனாகத் தெரியப்பட்டான், எனினும் சார்ள்ஸ் IIIயும் அரியணைக்கு உரிமை கோரினான். இறுதியாக 987ல் இறுதிக் கரோலிங்கியனின் மறைவுக்குப் பின், பாரிஸின் கவுண்டான ஹியூ கப்பெட் அரசனாகத் தெரிந்தெடுக்கப்பட்டான். + +11 ஆம் நூற்றாண்டில் நகரம் ஆற்றின் வலது கரைக்கும் விரிவடைந்தது. பிலிப் II அகஸ்தஸின் காலத்தையும் (1180–1223) உள்ளடக்கிய 12ஆம், 13ஆம் நூற்றாண்டுகளில் நகரம் மிகவும் வளர்ச்சியடைந்தது. முக்கிய பாதைகளுக்குத் தளமிடப்பட்டது, முதல் லூவர் ஒரு கோட்டையாகக் கட்டப்பட்டது, நோட்ரே டேம் தேவாலயம் அடங்கலாகப் பல தேவாலயங்கள் கட்டப்பட்டன அல்லது ஆரம்பிக்கப்பட்டன. வலது கரையிலிருந்த பல கல்விக்கூடங்கள் Sorbonne ஆக ஒழுங்கமைக்கப்பட்டன. அல்பர்ட்டஸ் மக்னஸ், சென். தோமஸ் அக்குவைனஸ் போன்றவர்கள் இவற்றைச் சேர்ந்த ஆரம்பகால அறிஞர்களாயிருந்தார்கள். 14 ஆம் நூற்றாண்டில் Black Death தாக்கம் காரணமாக ஏற்பட்ட தற்காலிக தடங்கல் தவிர மத்திய காலப் பகுதியில், பாரிஸ் ஒரு வர்த்தக மற்றும் அறிவு சார்ந்த மையமாக விளங்கியது. சூரிய அரசன் ("Sun King") என அழைக்கப்பட்ட லூயிஸ் XIV அரசன் காலத்தில் (1643–1715) அரச மாளிகைகள் பாரிஸிலிருந்து, அண்மையிலுள்ள வெர்சாய்க்கு மாற்றப்பட்டது. + +பாரிஸ், சீன் ஆற்றின் வடக்கே திரும்பும் வளைவில் செயிண்ட் லூயி, டி லா சிட்டே என்னும் இரண்டு தீவுகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. "டி லா சிட்டே" பாரிசின் பழைய பகுதியாகும். ஒப்பீட்டளவில் நகரம் மட்டமானது. மிகக்குறைந்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 35 மீட்டர் (115 அடி). பாரிஸ் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் உயரமானது 130 மீட்டர் (427 அடி) உயரமான மொண்ட்மார்ட்ரே ஆகும். நகரின் புறப்பகுதியில் அமைந்துள்ள பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென்ஸ் என்னும் பூங்காக்களைத் தவிர்த்து, பாரிசின் பரப்பளவு 86.928 சதுர கிலோ மீட்டர்கள் (34 சதுர மைல்கள்) ஆகும். இறுதியாக 1860 ஆம் ஆண்டில் நகரத்துடன் அதன் புறத்தே அமைந்திருந்த பகுதிகளையும் இணைத்துக்கொண்டது, நகருக்கு இன்றைய வடிவத்தை அளித்தது. 1860ல் நகர எல்லை 78 சதுர கிலோ மீட்டரில் இருந்து, 1920ல் 86.9 சதுர கிலோ மீட்டர் ஆகுவரை சிறிதளவு அதிகரித்துள்ளது. 1929 ஆம் ஆண்டில் பொயிஸ் டி பொலோங்னே, பொயிஸ் டி வின்சென���ஸ் என்னும் காட்டுப் பூங்காக்கள் நகருடன் இணைக்கப்பட்டன. இதனால் பாரிசின் மொத்தப் பரப்பளவு 105.397 சதுர மீட்டர்கள் (41 சதுர மைல்கள்) ஆனது. + +பாரிஸ், பெருங்கடல் காலநிலையைக் கொண்டது. இது வட அத்திலாந்திக் நீரோட்டங்களினால் பாதிக்கப்படுகின்றது. இதனால் நகரத்தில் அதி கூடிய வெப்பநிலையையோ அதி குறைந்த வெப்பநிலையையோ காண்பது அரிது. கோடையில் சராசரி வெப்பநிலைகளாக உயர்ந்த அளவு 25 °ச (77 °ப)ம், குறைந்த அளவு 15 °ச (59 °ப) ஆகவும் இருக்கும். குளிர் காலத்தில் குளிர் அதிகமாக இருந்தாலும் வெப்பநிலை உறை நிலைக்குக் கீழ் செல்வதில்லை. சராசர் வெப்பநிலைகள் 3 °ச (37 °ப) – 8 °ச (46 °ப) ஆகக் காணப்படும். இளவேனில் மற்றும் இலையுதிர் காலங்களில் பகலில் மிதமான வெப்பநிலையும், இரவில் குளிரும் இருக்கும். ஆண்டின் எந்த நேரத்திலும் இங்கே மழை முகில்கள் காணப்படலாம். பாரிஸ் அதிக மழை கொண்ட நகரம் இல்லாவிட்டாலும், சடுதியான மழைக்கு இந் நகரம் பெயர்பெற்றது. மழை வீழ்ச்சி ஆண்டுக்கு 650 மிமீ (26 அங்) ஆக உள்ளது. ஆனால் ஓரளவு மிதமான மழை வீழ்ச்சி ஆண்டு முழுதும் பரவலாகப் பெய்யும். பெரும்பாலும் பாரிசில் பனி பெய்வதில்லை. சில மாரிகாலங்களில் இலேசாகப் பனி பெய்வது உண்டு. பாரிசில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வெப்பநிலை 40.4 °ச (105 °ப). இது 1948 ஜூலை 28 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மிகக் குறைந்த வெப்பநிலை −23.9 °ச (−11 °ப). இது 1879 டிசம்பர் 10 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு உள்ளது. நகரின் மையப்பகுதியில் நகர்ப்புற வெப்பத் தாக்கம் காரணமாக இரவுகளிலும் காலையிலும் மிதமான வெப்பநிலை காணப்படுகின்றது. அத்துடன் நகரின் புறப்பகுதிகளைவிடக் குறைவான பனியும் பெய்கிறது. + +தற்காலப் பாரிஸ், பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இடம் பெற்ற பெருமெடுப்பிலான நகர மீளமைப்புத் திட்டங்களின் விளைவாகும். பல நூற்றாண்டுகளாகப் பாரிஸ் ஒடுங்கிய தெருக்களையும், மரச் சட்ட வீடுகளையும் கொண்ட நகரமாக இருந்தது. ஆனால் 1852 தொடக்கம் ஓஸ்மான் பிரபுவின் நகராக்கத் திட்டங்களினால் பல பழைய கட்டிடங்கள் உடைக்கப்பட்டுச் சாலைகள் அகலமாக்கப்பட்டதுடன், இரண்டு பக்கங்களிலும் கல்லாலான புதிய செந்நெறிப் பாணிக் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. இன்று வரை நிலைத்துள்ள பழைய கட்டிடங்கள் பெரும்பாலும் இக்காலத்தனவே. அக்காலத்தில் வரையறுக்கப்பட்ட "வரிசையாக்க" ("alignement") சட்டவிதிகளைப் பாரிஸ் நகரம் பல புதிய கட்டிட வேலைகளில் இன்றும் பயன்படுத்தி வருவதனால், இந்த இரண்டாம் பேரரசுத் திட்டங்கள் பல இடங்களில் இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன எனலாம். கட்டிடங்களின் உயரங்களும் அன்று வரையறுக்கப்பட்ட சாலை அகலங்களின் அடிப்படையிலேயே இன்றும் தீர்மானிக்கப்படுகின்றன. அத்துடன், உயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் நோக்கில் 19 ஆம் நூற்றாண்டுக்குப் பின் கட்டிடச் சட்ட விதிகளில் சில திருத்தங்களே செய்யப்பட்டுள்ளன. +பாரிசின் எல்லைகள் மாறாமல் இருப்பதும், கட்டிடங்கள் கட்டுவதற்கான கடுமையான சட்டவிதிகளும், புதிய கட்டிடங்களுக்கான நிலங்கள் பற்றாக்குறையும் "அருங்காட்சியகமாதல்" ("museumification") என்னும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது. பாரிசின் வரலாற்றைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளும், நகர எல்லைக்குள் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்பப் புதிய பெரிய கட்டிடங்களையும், பிற சேவை வழங்கும் கட்டமைப்புக்களையும் அமைப்பதைக் கடினமாக்கியுள்ளது. பாரிசின் பல நிறுவனங்களும், பொருளாதாரக் கட்டமைப்புகளும் ஏற்கனவே புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ளன அல்லது இடம் பெயர்வதற்குத் திட்டமிடுகின்றன. நிதி வணிகப் பகுதி, முக்கியமான உணவு மொத்த விற்பனைச் சந்தை, முக்கியமான பெயர் பெற்ற பள்ளிகள் பல, உலகப் புகழ் பெற்ற ஆய்வுக் கூடங்கள், மிகப் பெரிய விளையாட்டு ஸ்டேடியம், போக்குவரத்து அமைச்சு போன்ற சில அமைச்சகங்கள், என்பன பாரிஸ் நகருக்கு வெளியே அமைந்துள்ளன. பிரான்சின் தேசிய ஆவணக் காப்பகம் 2010 ஆம் ஆண்டுக்கு முன் வடக்குப் புறநகர்ப் பகுதிக்கு இடம் பெயர உள்ளது. பாரிசை விரிவாக்க வேண்டிய தேவையை பிரான்ஸ் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. நவம்பர் 2007ல் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போதிலும், எந்தப் பகுதிகளைப் பாரிசுடன் இணைப்பது என்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. + + + + + + + + + +தமிழ்நாடு + +தமிழ்நாடு ("Tamil Nadu") என்து இந்தியாவின் 29 மாநிலங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு, தமிழகம் என்றும் பரவலாக அழைக்கப்படுகிறது. இதன் தலைநகராகச் சென்னை உள்ளது. தமிழ்நாடு இந்தியத் துணைக்கண்டத்தின் தென்முனையில் அமைந்துள்ளது. இதன் ஆட்சிப்பகுதி எல்லைகளாக மேற்கிலும் வடக்கிலும் கேரள���, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி ஒன்றியப் பகுதியின் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சுற்றிலும் தமிழ்நாடு மாநிலம் எல்லைகளைக் கொண்டுள்ளது. புவியியல் எல்லைகளாக வடக்கே கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் நீலமலை வீச்செல்லை, ஆனை மலை வீச்செல்லை, பாலக்காடு கணவாய் ஆகியவையும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும், தென்கிழக்கில் மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணை ஆகியவையும் தெற்கில் இந்தியப் பெருங்கடலும் உள்ளன. + +தமிழகம் ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பெற்றது. இதனைத் தமிழ்நாடு என்று மாற்றக்கோரி போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். பின்னர் மதராசு ஸ்டேட் என்று இருந்த பெயர் 1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது. + +தமிழ்நாடு இந்திய மாநிலங்களில் பரப்பளவில் 11 ஆவதாகவும், மக்கள்தொகையில் ஏழாவதாகவும் விளங்குகிறது. இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் பங்களிப்பதில் இரண்டாவதாகவும் உள்ளது. 2006 ஆம் ஆண்டில் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணில் பத்தாமிடத்தில் (ஒன்றிய ஆட்சிப்பகுதிகளையும் சேர்த்தால் பதினாறாவது இடத்தில்) இருந்தது. மேலும் இந்தியாவிலேயே அதிக நகர்ப்புறமாக்கப்பட்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் 6% மக்கள்தொகையே கொண்டிருந்தும் மிகக் கூடுதலான வணிக நிறுவனங்கள் கொண்ட மாநிலமாகவும் (10,56%) மொத்த வேலை வாய்ப்புகள் கொண்ட மாநிலங்களுள் இரண்டாவதாகவும் (9,97%) விளங்குகிறது. + +கி.மு. 500க்கும் முன்பிருந்தே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். 20000 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்த தமிழ் மொழி கல்வெட்டுக்களும் இலக்கியமும் காணக் கிடைக்கின்றன.தொன்கதை பாரம்பரியத்தின் படி தமிழ் மொழியானது சிவ பெருமானால் அகத்தியருக்கு கற்பிக்கப்பட்டதாக நம்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் பல இயற்கை வளங்கள், தமிழர் கட்டிடக் கலை சாற்றும் கோவில்கள், மலைத்தலங்கள், கடலோர ஓய்விடங்கள், பல சமயத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் நிறைந்துள்ளன; எட்டு உலக பாரம்பரியக் களங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. + +தமிழ்நாடு இந்திய தீபகற்பத்தின் தென் கோடியில் அமைந்துள்ளது. வடக்��ில் கருநாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், மேற்கில் கேரளாவும் உள்ளன. யூனியன் பிரதேசமாகிய புதுச்சேரி (முன்பு பாண்டிச்சேரி என்று அழைக்கப்பட்டது) தமிழ் நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்துக்குத் தென்கிழக்கில் இலங்கைத் தீவு உள்ளது. நாட்டின் ஏனைய பல பகுதிகளைப் போலன்றி, தமிழ்நாடு, அக்டோபர் – திசம்பர் மாதங்களில் "வடகிழக்குப் பருவப் பெயர்ச்சிக் காற்று" மூலமே மழை பெறுகிறது. இக்கால கட்டத்தில் வங்காள விரிகுடாவில் உருவாகும் புயற்சின்னங்களின் மூலம் பெய்யும் மழையை உழவர்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இம்மாநிலத்தின் முதன்மையான ஆறான காவிரி ஆறு வடக்கே கர்நாடக மாநிலத்தில் குடகு மலையில் உருவாகித் தமிழ்நாட்டில் பாய்கிறது. வைகை, தாமிரபரணி, பாலாறு ஆகியவை பிற முதன்மையான ஆறுகளாகும். +மதராஸ் என்று 1996 வரை அழைக்கப்பட்டு வந்த சென்னையே தமிழ்நாடு மாநிலத்தின் மிகப் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். பதின்மூன்று கிலோமீட்டர் நீளமுடையதும், உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையுமான, மெரீனா கடற்கரை சென்னையில் உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருநெல்வேலி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி மற்றும் வேலூர் தமிழ் நாட்டின் ஏனைய பெரிய நகரங்களாகும். + +தமிழ்நாடு பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பெற்றது. மேலும், இம்மாநிலம் பல கோயில்களையும், சிற்பங்களையும் பெற்ற கலை அம்சம் கொண்ட பகுதியாக விளங்குகிறது. + +தமிழகத்தின் எல்லைகளைத் தொல்காப்பியப் பாடல் + +என்று வரையறுக்கிறது (தொல்காப்பியம், சிறப்புப் பாயிரம், 1-3). + +தொன்றுதொட்டே தமிழ் மக்கள் வாழ்ந்த நிலப்பரப்பு தமிழகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதற்குச் சான்றாகக் கீழ்வரும் இலக்கியக் குறிப்புகளைக் காட்டலாம்: + +தமிழ்நாடு, ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற தமிழ் இன மக்களின் தோற்றம் தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருந்த தமிழர்கள், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக�� கொள்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இக்கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு தமிழர்களை இன்றைய இந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளா ஆகியவை அடங்கிய தென்னிந்தியாவுக்குள் ஒடுக்கியதாகக் கருதப்படுகின்றது. வரலாற்று உண்மைகள் எவ்வாறு இருப்பினும், தற்காலத் தமிழ் மக்களுடைய அடையாளம் மேற்கண்ட கொள்கைகளின் அடிப்படையிலேயே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது எனலாம். +இன்றைய தமிழ்நாட்டையும் உள்ளடக்கிப் பரந்திருந்த பண்டைய தமிழர் நாடு, பல்வேறு நாடுகளாகப் பிரிந்திருந்தது. இவற்றைக் காலத்துக்குக் காலம் பல அரச வம்சங்கள் ஆண்டுவந்தன. இவற்றுள் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கவர்கள்,வேளிர்கள் பாண்டியர், சேரர், சோழர், பல்லவர், சாளுக்கியர், விஜய நகரத்தார், நாயக்கர் என்போராவர். + +மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது. பாண்டிய நாடு கல்வியிலும், வணிகத்திலும் சிறந்து விளங்கியது. தமிழகத்தின் மக்கள் அக்காலத்தின் பேரரசுகளாகிய கிரேக்க, ரோமப் பேரரசுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். அவ்வப்போது பல்லவர்களாலும், சோழர்களாலும் அடக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க அரச பரம்பரைகளில் ஒன்றாகப் பாண்டியர் விளங்கினர். + +சங்ககால மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர் கிபி முதலாம் நூற்றாண்டு தொடங்கி நான்காம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் ஆட்சி செலுத்தினர். இவர்களுள் சேரர்களில் செங்குட்டுவன் மன்னனும், சோழர்களில் கரிகால் சோழன் மன்னனும், பாண்டியர்களில் நெடுஞ்செழியன் மன்னனும் பெயர் பெற்ற ஆட்சியாளர்களாகத் திகழ்ந்து, மிகவும் புகழ்பெற்று விளங்கினர். சேரர்கள் தற்கால கேரள மற்றும் கொங்கு மாவட்டங்களிலும், சோழர்கள் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளிலும், பாண்டியர்கள் மதுரை, நெல்லை மற்றும் தென் கேரள மாவட்டங்களிலும் செல்வாக்கு செலுத்தினர். இவர்கள் கூட்டணியால் தமிழகம் வடதிசை மவுரிய குப்தா பேரரசுகளின் ஆளுகையினை எதிர்த்து தனியரசுகளாக விளங்கின இவர்களின் போர் நடவடிக்கைகளில் சிறந்து வி���ங்கியதாக நம்பப்படுகிறது. + +கி.பி. நான்காம் நூற்றாண்டு முற்பகுதியில் களப்பிரர் என்னும் குலம் தெரியாத அரசர்கள் தமிழகத்தை ஆண்டனர். அவர்கள் மூவேந்தர்களையும் அடக்கி ஆண்டதால் அவர்களின் வரலாறு தெரியாமல் போயினும், பல்லவர் என்னும் அக்கால புதிய அரசர்கள் சுயாட்சி செலுத்தியதால் அவர்களைப் பற்றி மட்டும் குறிப்பிடத் தக்க ஆவணங்கள் கிடைத்துள்ளன. இக்களப்பிர அரசர்கள் கிபி 4 தொடக்கம் 6 ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட காலத்தைத் தமிழகத்தின் இருண்ட காலம் என்று வரலாற்றாளர்கள் கூறுவதுண்டு. கி.பி. நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சிறந்த கோவில்களை அமைத்த பல்லவர்கள் முன்னணிக்கு வந்தனர். இவர்கள் தென்னிந்தியாவில் 400 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினர். காஞ்சிபுரத்தைத் தலை நகரமாகக் கொண்டு தமிழ் நாட்டின் பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பல்லவர்கள் சோழரைத் தோற்கடித்தனர். இவர்கள் செல்வாக்கு இலங்கை வரை பரவியிருந்ததாகக் கருதப்படுகிறது. முதலாம் மகேந்திரவர்மனும், அவனுடைய மகனான நரசிம்மவர்மனும் பல்லவர்களுள் சிறந்து விளங்கிய அரசர்களாவர். பல்லவர் கட்டிடக்கலை பல்லவர் காலத்திலேயே வளர்ச்சியடைந்து உருப்பெற்றது. இறுதிப் பல்லவ மன்னன் அபராசிதன் ஆவான். இவன் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஆதித்த சோழனால் தோற்கடிக்கப்பட்டதுடன் பல்லவராட்சி தமிழ் நாட்டில் முடிவுக்கு வந்தது. + +இக்காலக்கட்டத்தில் (கிபி 300 – கிபி 600) பெளத்தம் தமிழகத்தில் மிகவும் செல்வாக்கோடு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. + +கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் சோழர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர். இராசராச சோழன் மற்றும் அவனது மகனான இராசேந்திர சோழன் ஆகியோரது காலத்தில் சோழர், தென்னிந்தியாவில் ஆற்றல் மிக்கவர்களாக உருவெடுத்தனர். இவர்களுடைய பேரரசு, மைய இந்தியா, ஒரிசா, மற்றும் வங்காளத்தின் சில பகுதிகள்வரைகூடப் பரவியிருந்தது. + +இராசராச சோழன் கிழக்கிலிருந்த சாளுக்கிய அரசர்கள் மற்றும் சேர மன்னர்களை வீழ்த்தினான். அத்துடன் பாண்டிய அரசிடமிருந்து இலங்கையின் சில பகுதிகளையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் மேலும் முன்னேறி அந்தமான் நிக்கோபார் தீவுகள், இலட்சத்தீவுகள், சுமத்ரா, சாவா, மலேயா மற்றும் பெகு ��ீவுகளையும் தன் கப்பற்படையைக் கொண்டு கைப்பற்றினான். அத்துடன் தற்போதைய பீகார் மற்றும் வங்காளப் பகுதிகளை ஆண்டு வந்த மகிபாலனையும் வீழ்த்தினான். தன் வெற்றியைக் கொண்டாடும் வகையில் "கங்கை கொண்ட சோழபுரம்" எனும் தலைநகரை உருவாக்கினான். பதின்மூன்றாம் நூற்றாண்டுவாக்கில் சோழர்களின் ஆதிக்கம் குறைந்தது. + +14ஆம் நூற்றாண்டில் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பாண்டியர்கள் மீண்டும் எழுச்சி பெற்றனர். ஆயினும் அந்த எழுச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை. 1316 இல் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கில்சி ஆட்சியாளர்கள், மதுரையை முற்றுகையிட்டு சூறையாடினர். இசுலாமியர்களின் படையெடுப்பு சோழர்களையும் பாண்டியர்களையும் ஆற்றலற்றவர்களாக்கி இசுலாமிய "பாமினி" ஆட்சிக்கு வித்திட்டது. இசுலாமியப் படையெடுப்புக்கு பதிலடி தரும் வண்ணம் பல்வேறு சிற்றரசுகள் சேர்ந்து விசயநகர பேரரசைத் தோற்றுவித்தன. இப்பேரரசின் பல்வேறு பகுதிகள் பிரிக்கப்பட்டு அவற்றை மேற்பார்வையிட நாயக்கர்கள் என்னும் ஆட்சியாளர்கள் நியமிக்கப் பட்டனர். அம்பியை தலை நகராகக் கொண்டிருந்த விசய நகரப் பேரரசு செல்வச் செழிப்போடும் அமைதியுடனும் திகழ்ந்தது. + +ஆனால், 1564 ஆம் ஆண்டு வாக்கில் நடந்த தலிகோட்டா போரில் தக்காணப் பீடபூமியைச் சேர்ந்த சுல்தான்களால் விசயநகர ஆட்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, அவர்கள் ஆட்சிக்கடங்கிய பகுதிகள் யாவும் நாயக்கர்களிடையே பிரித்தளிக்கப்பட்டன. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசியல் அமைப்புகள் மாற்றி அமைக்க பட்டன பாளையங்கள் உருவாக்கப்பட்டு கிராம சுய ஆட்சி முறை ஒழிக்க பட்டது. தஞ்சை மற்றும் மதுரையைச் சேர்ந்த நாயக்கர்கள் புகழ் பெற்று விளங்கியதோடு பழங்கால கோயில்களைப் புதுப்பிக்கவும் செய்தனர். + +இன்றைய கேரளாவும் மலபாரை ஒட்டிய பகுதிகளும் சேர நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. கடலை ஒட்டியிருந்த சேரர்களின் ஆட்சிப்பகுதி ரோமானியர்களுடனான வாணிபத்திற்கு ஏதுவாக இருந்தது. ஆங்கிலேய படையெடுப்பு நிகழும் வரை சேரர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்த சிறிய நிலப்பகுதி பெரும்பாலும் வேறெவருடைய படையெடுப்பிற்கும் ஆளாகாமல் இருந்தது. + +1639 இல்ஆ ங்கிலேயர்கள் மதராசில் (தற்பொழுது சென்னை என்று அழைக்கப்படுகிறது) கிழக்கிந்தியக் கம்பெனிய��� நிறுவியபிறகு தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றில் புதிய பகுதி தொடங்கியது. தமிழ் நாட்டு சிற்றரசர்களிடையே நிலவி வந்த சச்சரவுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பிரித்தாண்டு, அவர்களின் மேல் தங்கள் அதிகாரத்தைச் செலுத்தத் தொடங்கினர். தமிழ்நாடும் அதைத் தொடர்ந்து தென்னிந்தியாவும் மெல்ல மெல்ல ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் அதிகாரத்தைத் தம் வசப்படுத்திய இந்தக் காலக்கட்டத்தில் அவர்களை எதிர்த்துப் போராடிய தமிழ் ஆட்சியாளர்களும் கணிசமானோர் இருந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன்,அனந்த பத்மநாப நாடார், பூலித்தேவன், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வாண்டாயத் தேவன், அழகு முத்துக்கோன், வீரன் சுந்தரலிங்கம், ஒண்டி வீரன், பெரிய காலாடி, தீரன் சின்னமலை, போன்ற ஆட்சியாளர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போரிட படைகளைத் தலைமையேற்று நடத்தினர். + +1947இல் இந்தியா விடுதலை அடைந்தபோது, மதராசு மாகாணம் (படம்) ("The Madras Province") மதராசு மாநிலம் ஆனது. ஆனால் 1948ஆம் ஆண்டுவரை புதுக்கோட்டை சமஸ்தானம் தொண்டைமான் மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. இதுவே இந்தியாவோடு சேர்ந்த கடைசி சில சமஸ்தானங்களுள் ஒன்றாகும். தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தன. 1953இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்களுள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது. 1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. 1969இல், மதராசு மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ‎திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் தென்பகுதியில் தமிழ் பேசும் மக்கள் வாழிடம் கன்னியாகுமரி மாவட்டமாக உருவாக்கப்பட்டு, நவம்பர் 1, 1956இல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. + +தமிழ்நாடு, இன்றும் செழிப்புடன் விளங்கும், வளமான இலக்கிய, இசை, நடனப் பாரம்பரியங்களுக்குப் பெயர் பெற்றது. இது இந்தியாவின் அதிக அளவு கைத்தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்று. + +சுப்பிரமணிய பாரதி, வ. உ. சிதம்பரம்பிள்ளை, சி. வி. இராமன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ,பெருந்தலைவர் காமராசர், சுப்பிரமணியன் சந்திரசேகர், ஆர். கே. நாராயண், ஆர். வெங்கட்ராமன், சி. என். அண்ணாதுரை, சீனிவாச ராமானுசன், அப்துல் கலாம், பாரதிதாசன், அயோத்தி தாசர், திரு.வி.க., கண்ணதாசன், என்.எஸ்.கிருட்டிணன்,ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் மாநிலத்தின் நன்கு அறியப்பட்டவர்களில் சிலராவர். இவர்களோடு, இளங்கோவடிகள், கண்ணகி, திருவள்ளுவர், தொல்காப்பியர், ஔவையார், கம்பர், கரிகால்சோழன், இராசராச சோழன், போன்ற முற்காலத்தவரும் இன்றும் நினைவில் இருப்பவர்களாகும். + +தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234. நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ் நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றனர். + +தமிழ் நாட்டின் முதன்மையான அரசியல் கட்சிகளாகத் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை விளங்குகின்றன. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி,இந்திய தேசிய காங்கிரசு, இந்தியக் குடியரசுக் கட்சி, அகில இந்திய பார்வார்ட்டு பிளாக், இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், முஸ்லீம் லீக்,அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளாக உள்ளன. + +பெரியார் 1916இல் தோற்றுவித்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து வந்து, 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தை சி. என். அண்ணாதுரை தோற்றுவித்தார். 1947 இல் இந்திய விடுதலைக்குப் பிறகு 1967 வரை தமிழ்நாட்டை இந்திய தேசிய காங்கிரசு ஆண்டது. 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தது. 1972 இல் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பிரிந்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ம. கோ. இராமச்சந்திரன் தோற்றுவித்தார். 1977இல் அண்ணா திராவிட முன்னேற்றக�� கழகம் முதன் முதலில் ஆட்சியைப் பிடித்தது. + +1967 முதல் 2016 இல் கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தல்வரை தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளில் ஒன்று அல்லது அக்கட்சிகள் தலைமை வகிக்கும் கூட்டணிகள் பெரும்பான்மை தொகுதிகளை வென்று வருகின்றன. தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தல்களில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுண்டு என்றாலும், இதுவரை தனிக்கட்சி ஆட்சியே நடைபெறுகிறது. முதன் முறையாகத் தி.மு.க. ஒரு அறுதிப் பெரும்பான்மையற்ற சிறுபான்மை அரசாகச் (2006–2011) செயல்பட்டது. இருப்பினும், தமிழக கட்சிகள் நடுவண் அரசில் செல்வாக்கோடு விளங்கிக் கூட்டணி ஆட்சி அமைக்க உதவவும், பங்கேற்கவும் செய்கின்றன. + +தமிழ் நாட்டில் தற்போது 33 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களின் பெயரிலேயே பெரும்பாலும் மாவட்டங்களின் பெயரும் அமையப் பெற்றுள்ளன. இவற்றுள் விதிவிலக்காக, கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில், நீலமலை மாவட்டத்தின் தலைநகர் உதகமண்டலம் என்றுள்ளன. தற்போதுள்ள மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு விதமாகப் பெயர்மாற்றம் பெற்றுவந்துள்ளன. ஒரு சில காலகட்டங்களில் மாவட்டங்களின் பெயருடன் காலம் சென்ற தமிழக தலைவர்கள் பெயரும் இணைத்துப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்தன. தற்போது அப்பெயர்கள் நீக்கப்பட்டு, மாவட்டங்களின் பெயர்கள் மட்டும் நிலைத்து நிற்கின்றன. இந்த 33 மாவட்டங்களில் 288 வருவாய் வட்டங்கள் உள்ளது. + +2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் முதல் 15 பெரிய நகரங்கள்: + +தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளும், 125 நகராட்சி மன்றங்களும், 529 பேரூராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும் மற்றும் 12,524 ஊராட்சி மன்றங்களும் உள்ளது. + +தமிழ்நாடு இந்தியாவின் ஏழாவது மக்கட்தொகை மிகுந்த மாநிலமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 72.147.030 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 36.137.975 மற்றும் பெண்கள் 36.009.055 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 7,423,832 ஆக உள்ளது. அதில் சிறுவர்கள் 3.820.276 ஆகவும்: சிறுமிகள் 3.603.556 ஆகவும் உள்ளனர். மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.61% ஆக உள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 996 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 555 ப���ர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் படிப்பறிவு 51,837,507 (80.09 %) ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 28.040.491 (86,77 %) ஆகவும், பெண்களின் படிப்பறிவு 23.797.016 (73,44 %) ஆகவும் உள்ளது. நகரப்புறங்களில் 48,40% மக்களும், கிராமப்புறங்களில் 51,60 % மக்களும் வாழ்கின்றனர். + +தமிழகத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 63.188.168 (87,58 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 4,229,479 (5,86 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 4.418.331 (6,12 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 14.601 (0,02 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 89.265 (0,12 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 11.186 (0,02 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7.414 (0,01 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 188.586 (0,26 %) ஆகவும் உள்ளது. + +89 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தெலுங்கு (5.65%), கன்னடம் (1.68%), உருது (1.51%), மலையாளம் (0.89%) ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன. + +தமிழகத்தின் மக்கள்தொகையில் 3.5% மக்கள் பழங்குடிகள் (2001 கணக்கெடுப்பு). மாநிலத்தில் 40-க்கும் மேற்பட்ட பழங்குடிகள் உள்ளனர். நீலமலை, ஆனைமலை, கொல்லிமலை ஆகிய பகுதிகளில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில் தோடர், காடர், குறும்பர், காணிக்காரர், மலமலசர், பணியர், பழியர் முதலிய பழங்குடி இன மக்கள் வாழ்கின்றனர். + +தமிழ்நாடு, நல்ல தொழில் வளர்ச்சி கண்டுள்ள ஒருசில இந்திய மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. தமிழக மக்கள் தொகையில் குறிப்பிடத் தகுந்த பகுதியினர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் பொறியியல், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்கள், நெசவாலைகளுக்கும், ஆடை ஏற்றுமதி, விவசாய உபகரணங்கள், மோட்டார், கிரைண்டர் உற்பத்திக்கும், ஈரோடு மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனை, பால் உற்பத்தி, போர்வைகள் மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் இல்ல உப-சவுளி ஏற்றுமதி மற்றும் கனரக வாகன கூடு கட்டும் தொழில்களுக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், சேலம் இரும்பு உருக்கு, அலுமினியம், ஆலைகளுக்காகவும், சவ்வரிசி, மாம்பழ, பட்டு சேலை, பருத்தி உற்பத்திக்கும் , கனரக தொழிற்சாலைகளுக்கும் ,மின்சார உற்பத்திக்காகவும், கனரக வாகனங்கள் கட்டுமானத்திலும், நிலக்கடலை, கரும்பு, தக்காளி போன்ற பயிர் உற்பத்திக்கும், நாமக்கல் கோழிப் பண்ணைகளுக்கும், சிவகாசி அச்சுத்தொழில், பட்டாசு உற்பத்திக்கும், காவிரி பாசன பகுதியில் ��மைந்துள்ள திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாட்டுப் பகுதியும் விவசாயத்திற்கும், வேலூர் தோல் தொழிலுக்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகக் கோலிவுட் என்னும் பெயரோடு (கோடம்பாக்கம் + ஹாலிவுட் என்பதன் பெயர்த் தழுவல்) திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் திரைப்படங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. + + +ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[2013ஆம் ஆண்டு], தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. இது மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகயில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு . + +2004/2005ஆம் ஆண்டுகள் எடுத்த கணக்கெடுப்பு பணியின்போது 29.4 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருந்தனர். ஆனால் இது 1999/00 கணிப்பீட்டின் படி 12-17 மில்லியன் மக்கள் அல்லது 21 விழுக்காடு மட்டுமே இருந்தது. + +சமூக முன்னேற்றத்தின் குறியீடுகளான (மனித வளர்ச்சிச் சுட்டெண்) பரவலான கல்வியறிவு, ஆண் - பெண் சமத்துவம், மேம்பட்ட பொது சுகாதாரம், நீண்ட சராசரி மனித ஆயுள், சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. + +தமிழ்நாட்டு மக்களின் கல்வியறிவு இந்தியாவின் சராசரியைவிட அதிகம். இங்கு 2001–2011 காலக் கட்டத்தில் 74,04%ல் இருந்து 80,33% என்று கல்வியறிவு அதிகரித்தது. இன்று தமிழ்நாட்டில் 86,81% ஆண்களும் 73,86% பெண்களும் கல்வியறிவுடையவர் ஆவர். தமிழ்நாட்டில் 37 பல்கலைக்கழகங்கள், 454 பொறியியல் கல்லூரிகள், 1.150 கலைக் கல்லூரிகள், 2550 பள்ளிக்கூடங்கள் மற்றும் சுமார் 5.000 மருத்துவமனைகள் உள்ளன. இங்கு இரண்டு நடுவண் அரசு கல்வி நிறுவனங்கள் உள்ளன. அவை சென்னையில் அமைந்த இந்திய தொழில்நுட்பக் கழகம்,பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் திருச்சியில் அமைந்த தேசிய தொழில்நுட்ப கழகம் ஆகும். மேலும் புகழ் மிக்க சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்,அண்ணாமலை பல்கலைக்கழகம்,சேலம் சோனா பொறியி���ல் கல்லூரி்,பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், வேலூர் கிருத்துவ மருத்துவ கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்,பச்சையப்பன் கல்லூரி ,சென்னை, இலயோலாக் கல்லூரி ஆகியனவும் உள்ளன. தமிழகத்தில் வருடந்தோறும் 130.000 பேர் பொறியியல் படிப்பு முடித்துத் தேர்ச்சி பெறுகின்றனர். இந்திய மேலாண்மை நிறுவனம் திருச்சியில் அமைந்துள்ளது. + + +தமிழர் பண்பாடு நீண்ட கால வரலாறு கொண்டது. இலக்கியம், இசை, நாடகம் என்பன சார்ந்த பல்வேறு கலை வடிவங்கள் தமிழ் நாட்டில் சிறப்பான நிலையில் உள்ளன. பரத நாட்டியம், கர்நாடக இசை, திராவிடக் கட்டிடக்கலை போன்ற புகழ் பெற்ற உயர் கலை வடிவங்கள் பெரும்பாலும் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து சிறப்பெய்தியவை. + +தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் ஆகும். ஆங்கிலமும் அலுவல் மொழியாகப் பயன்படுகிறது. இந்தியா செம்மொழியாக அங்கீகரித்துள்ள மொழிகளில் தமிழ் முதலிடத்தில் உள்ளது. தமிழரின் பண்பாட்டில் தமிழ் மொழி மிக இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. சங்க இலக்கியங்கள் எனப்படும் தமிழின் மிகப் பழமையான இலக்கியங்கள் யாவும் செய்யுள் வடிவில் இயற்றப்பட்டவையாகும். தொன்மைக் காலம் முதலே இலக்கியம் மட்டுமல்லாமல் மக்களின் வாழ்க்கைக்கும் இலக்கணம் கண்ட மொழி தமிழ் மொழியாகும். + +திருக்குறள் என்ற அறநூல் தமிழின் மிகச் சிறந்த நீதிநூல் ஆகும். இது உலகின் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தன்னை இன்னாரென அடையாளம் காட்டாத ஒரு சிறந்த தமிழ்ப் புலவரால் இயற்றப்பட்டது இந்நூலாகும். நாடு, மொழி, இனம் கடந்து உலக மக்கள் யாவருக்கும் பொதுவான நீதியைக் கூறுவதால் திருக்குறள் உலகப் பொதுமறையெனப் போற்றப்படுகிறது. + +மாடல்ல மற்றை யவை +தமிழின் இலக்கியங்களிலிருந்து அக்கால தமிழ் மக்களின் தலைசிறந்த பண்பாடு, வாழ்க்கை முறை போன்ற கூறுகளை நாம் அறியமுடிகிறது. இந்தியாவின் முதல் நூல்கள் தமிழிலேயே அச்சாயின. தமிழகத்தின் முதல் அச்சுக்கூடம் புன்னைக்காயலில் 1578இல் போர்த்துகீசியரால் நிறுவப்பட்டது. பின்னர் தரங்கம்பாடி அச்சுக்கூடத்திலும் சென்னையிலும் ஏராளமான தமிழ் இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றன. இந்திய விடுதலைப் போரில் மக்களின் விடுதலை உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கு தமிழ் கவிஞர்களான ���ாரதியார், பாரதிதாசன் போன்றோரின் கவிதைகள் உதவியாய் இருந்தன. தற்காலத்தில் வாலி, வைரமுத்து, தாமரை போன்ற தமிழ்க் கவிஞர்கள் கவிதை படைக்கின்றனர். தமிழ் எழுத்தாளர்களால் புதினங்கள், சிறுகதைகள், பெருங்கதைகள் எனத் தமிழ் நூல்கள் வெளிவருகின்றன. + +தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து மூலம் சிறு கிராமங்களை இணைப்பதால் போக்குவரத்து வளர்ச்சி அடைந்துள்ளது.இரயில் போக்குவரத்து மூலம் பெரும்பான்மையான நகரங்களையும், விமான போக்குவரத்து மூலம் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. 2013-ஆம் கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. + + + + +தமிழ்நாடு அழகிய நிலப் பகுதிகள், பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த சுற்றுலா முதன்மைத்துவம் உள்ள மாநிலமாகும். தமிழ்நாடு, திராவிட கட்டிடக்கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன.இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரம், உலகின் மிகப் பெரியதாகும். சோழர் கால தஞ்சை பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இராமநாதபுரம், தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு காஞ்சி,சேலம்,தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்,மேச்சேரி பத்ரகாளியம்மன் மற்றும் செங்காட்டூர்(சேலம்) ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும். எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்குக் கடற்கரை, ஏற்காடு, மேட்டூர், பூலாம்பட்டி போன்ற மனம் கவரும் தலங்களும் உண்டு. + + + + + + +கேரளம் + +கேரளம் அல்லது கேரளா ("Kerala", (ஆங்கிலமாக்கப்பட்டது) அல்லது (உள்ளூர்); மலையாளம்: കേരളം, — "") இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்று. இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படு���ினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி,கோழிக்கோடு திருச்சூர் மற்றும் கோட்டயம் ஆகும். இந்திய மாநிலங்களில் கல்வியறிவு (எழுத்தறிவு) விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது. + +கேரளா என்ற சொல், தமிழ்ச் சொல்லான “சேரளம்” (மலைச் சரிவு) அல்லது சேர நாடு என்பதிலிருந்து தோன்றியது என்பது அறிஞர்களின் கூற்று. இன்றைய கேரளா, வரலாற்று காலத்தில் “சேர நாடு” என்று அழைக்கப்பட்டு வந்தது. 3ஆம் நூற்றாண்டு பேரரசர் அசோகரின் கல்வெட்டில் கேரளா - “கேரளபுத்திரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய வணிகன் பெரிபுளீஸின் நிலவரைபடத்தில், இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்று குறிப்பிடுகின்றார். கேரள மக்கள் மலையாளிகள் என்று அழைக்கப்படுகின்றனர். மலையில் (மேற்கு தொடர்ச்சி மலைகள்) வாழ்பவர்கள் என்பது அதன் பொருள் ஆகும். + + +38,852 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தின் கிழக்கே மேற்கு தொடர்ச்சி மலைகள்; மேற்கில் அரபிக் கடல்; தென்கிழக்கில் தமிழ்நாடு; வடகிழக்கில் கர்நாடகம் எல்லைகளாக அமைந்துள்ளது. + +நெய்யாறு, பம்பை, மணிமலை, பெரியாறு, பாரதப்புழை, சித்தாறு மற்றும் மூவாற்றுப்புழை ஆகியவை கேரளத்தின் முக்கிய ஆறுகள். + +பரசுராமரின் கோடரி கடலைப் பிளந்த தால் தோன்றிய நாடு கேரளம் என்பது புராணக் கதை.இதனை பார்க்கவ சேத்திரம் என்றும் பரசுராம சேத்திரம் என்றும் வழங்குகின்றனர். + +போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என பல ஐரோப்பியர் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டினர். 1947வாக்கில் கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக இருந்தது. +மலபார் சீரமைப்புச் சட்டம் 1956ன் படி, திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் பகுதிகள் இணைக்கப்பட்டு, நவம்பர் 1956ல் இன்றைய கேரளம் உதயமானது. + +விவசாயம் முக்கிய தொழில். உணவுப் பொருள் சாகுபடியை விட பணப்பயிர் சாகுபடி அதிகரித்து வருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகிறது. + +கேரளம் பதினான்கு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை பின்வருவன: + +கேரளத்தில் 63 வட்டங்களும், 1634 வருவாய் ஊராட்சிகளும், 978 ஊராட்சிகளும் ஐந்து நகராட்சிகளும் உள்ளன. + +இத��� இருபது மக்களவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. +கேரள சட்டமன்றத்திற்காக, கேரளத்தை 140 தொகுதிகளாகப் பிரித்துள்ளனர். + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கேரளா மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 33,406,061 ஆக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி 4.91% விகிதம் ஆக உயர்துள்ளது. மக்கள்தொகையில் ஆண்கள் 16,027,412 மற்றும் பெண்கள் 17,378,649 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1084 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 860 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 94.00% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 96.11% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 92.07% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,472,955 ஆக உள்ளது. + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள்தொகை 18,282,492 (54.73 %) ஆகவும், இசுலாமியர் மக்கள்தொகை 8,873,472 (26.56 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள்தொகை 6,141,269 (18.38 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள்தொகை 3,814 (0.01 %) ஆகவும், சமண சமய மக்கள்தொகை 4,489 (0.01 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 4,752 (0.01 %) ஆகவும், பிற சமயத்து மக்கள்தொகை 7,618 (0.02 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள்தொகை 88,155 (0.26 %) ஆகவும் உள்ளது. + +இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மலையாத்துடன், தமிழ், கன்னடம், உருது மற்றும் கொங்கணி மொழிகள் பேசப்படுகிறது. + +கூடியாட்டம், கதகளி, கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவை கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை, களரி போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்திலிருந்து தோன்றியவையே. செண்டை மேளம் புகழ் பெற்றது. + +தேக்கடி, பெரியார் தேசியப் பூங்கா, மூணார், வயநாடு, ஆலப்புழாவின் கட்டு வள்ளம்,கொச்சி மற்றும் கொல்லம். + +சபரிமலை, ஆற்றுக்கால் பகவதி கோவில், சோட்டானிக்கரை பகவதி கோயில், ஆறு அய்யப்பன் கோயில்கள்,மீன்குளத்தி பகவதி கோயில்,குருவாயூர் குருவாயூரப்பன் கோயில், திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் மற்றும் மங்கலதேவி கண்ணகி கோவில் ஆகும். + +108 வைணவத் திருத்தலங்களில் 11 வைணவத் திருத்தலங்கள் கேரளத்தில் அமைந்துள்ளது. அவைகள்: + + +ஓணம் மற்றும் விஷு கேரளத்தின் முக்கிய பண்டிகைகளாகும். கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் இங்கு கொண்டாட படுகிறது. மேலும் திருச்சூர் பூரம் திருவிழா, பெண்களின் ஐயப்பன் கோயில் எனப்படும் சோட��டானிக்கரை பகவதி அம்மன் கோயில் மகம் திருவிழா, மகர விளக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. + +கேரள மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையின் தகவல்படி 2009–2010 ஆண்டில் மட்டும் 61 லட்சம் பசு உட்பட்ட கால்நடைகள் தமிழகம் மூலம் கேரளாவிற்கு இறைச்சிக்காகக் கொண்டு வரப்பட்டன. 18 லட்சம் கால்நடைகள் சோதனையை மீறிக் கடத்தப்பட்டவை. + + + +bs + + + +அருணாசலப் பிரதேசம் + +அருணாசலப் பிரதேசம் ("Arunachal Pradesh") இந்தியாவின் ஒரு மாநிலமாகும். அருணாச்சலப் பிரதேசம் 1987ல் மாநிலமாக அறிவிக்கப்படும் வரை, வட கிழக்கு எல்லைப்புற முகமை என்ற பெயரில் இயங்கியது. + +இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் உரிமை கோரும் இரண்டு முக்கிய பிரதேசங்களில் இதுவும் ஒன்று. மற்றது அக்சாய் சின். + +இம்மாநிலம் 12 நகரங்களையும்; 3649 கிராமங்களையும் கொண்டுள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். + +இம்மாநிலத்தில் 20 முக்கிய இனக்குழுக்களும், பல துணை இனக்குழுக்களும் வாழுகின்றன. ஒரு பொதுக் குழுவிலிருந்து உருவானதால், இச் சமுதாயங்களிற் பெரும்பாலானவை இனரீதியில் ஒத்தவை, எனினும் புவியியல் ரீதியில் தனிமைப் படுத்தப்பட்டிருந்த காரணத்தால், மொழி, உடை மற்றும் பழக்க வழக்கங்களில் சில வேறுபட்ட சிறப்பியல்புகள் அவர்களிடையே இருப்பதைக் காணலாம். + +அவர்களுடைய சமூக-சமய ஒற்றுமையின் அடிப்படையில் இவர்களை மூன்று பண்பாட்டுக் குழுக்களாகப் பிரிக்கலாம். தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களைச் சேர்ந்த, மொன்பாஸ் மற்றும் ஷெர்டுக்பென்ஸ், லாமாயிச மரபில் வந்த மகாயான பௌத்தத்தைப் பின்பற்றுகிறார்கள். இதனால் இவர்கள் வாழும் கிராமங்களில் அதிக அளவில் அழகுபடுத்தப்பட்ட "கொம்பாஸ்" எனும் பௌத்த கோயில்களைக் காண முடியும். பெரும்பாலானவர்கள், படியமைப்புப் பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளும் விவசாயிகளாக இருந்த போதிலும், இவர்களிற் பலர் கவரிமா மற்றும் மலையாட்டு மந்தை வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார்கள். இவர்களை ஒத்த பண்பாட்டைக் கொண்டவர்களே, வடக்கு எல்லையோரமுள்ள உயர்ந்த மலைகளில் வாழும் மெம்பாக்கள், கம்பாக்கள் போன்றவர்களாவர். மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் வாழும் கெம்��்டி மற்றும் சிங்போ இனத்தவர்கள் தேரவாத பௌத்தர்கள். இவர்கள் தாய்லாந்து, மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளிலிருந்து நீண்ட காலத்துக்கு முன் இடம் பெயர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் தாயகத்தில் வழக்கிலிருந்த பண்டைய எழுத்துக்களிலிருந்து உருவான எழுத்துக்களையே இன்னும் பயன்படுத்தி வருகிறார்கள். + +இரண்டாவது குழுவினர், தொன்யி-போலோ, அபோ தானி என அழைக்கப்படும் சூரிய, சந்திரக் கடவுளர்களை வணங்கும், "அதி"கள், "அகா"க்கள், அப்தானிகள், பங்னிகள், நிஷிகள், மிஷ்மிகள், மிஜிகள், தொங்சாக்கள் போன்றவர்களாவர். இவர்களுடைய சமயக் கிரியைகள், பெரிதும் விவசாய வட்டங்களின் கட்டங்களுடன் பொருந்துகின்றன. அவர்கள் இயற்கைத் தேவதைகளுக்கு விலங்குகளைப் பலியிடுகிறார்கள். இவர்கள் பாரம்பரியமாக ஜும்மிங் அல்லது shifting பயிர்ச் செய்கையைக் கைக்கொள்ளுகிறார்கள். அதிகளும், அப்தானிகளும் ஈர நெற் செய்கையில் பெருமளவில் ஈடுபட்டு, குறிப்பிடத்தக்க விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். அப்தானிகள் அவர்களுடைய, நெல்லுடன்கூடிய மீன்வளர்ப்புக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள், ஒவ்வொரு நெற்பயிற் செய்கையிலும், இரண்டு முறை மீன் விளைவைப் பெறுவதில் நூற்றாண்டுகளாக அநுபவம் பெற்றவர்கள். + +மூன்றாவது குழுவினர், நாகலாந்தை அண்டியுள்ள திரப் மாவட்டத்தைச் சேர்ந்த நொக்டேக்கள், மற்றும் வஞ்சோக்கள் ஆவர். பாரம்பரிய கிராமத் தலைவர்கள் இன்னும் முக்கிய பங்கு வகிக்கும் இக் குழுவினர் இறுக்கமான சமூகக் கட்டமைப்பைக் கொண்ட கிராம சமுதாயத்துக்காக, அறியப்பட்டவர்கள். நொக்டேக்கள் ஆரம்பநிலை வைஷ்ணவத்தையும் பின்பற்றி வருகிறார்கள். + +அருணாசலப் பிரதேசத்தில் கிடைத்த புதிய கற்காலக் கருவிகளைக் கொண்டு பார்கும்போது இமயமலைப்பகுதி உள்ளிட்ட இப்பகுதியில் மக்கள் குறைந்தது பதினொரு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து வாழ்ந்து வருகின்றனர் என்று உறுதியாகிறது. இப்பிராந்தியத்தில் பழங்கால மக்கள் குடியேற்றமானது பூட்டான் மற்றும் அதன் பக்கத்தில் இமயமலைப் பகுதிகளான தெற்காசியப் பகுதிகள், சிந்து சமவெளி பகுதியிலிருந்தும் மக்கள் குடியேறியுள்ளனர், இக்குடியேற்ற வரலாறு தெற்காசியாவின் வெண்கலக் காலமான கி.மு. 3300 க்கு முற்பட்ட காலத்தில் துவங்குகிறது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு திபெத் மற்றும் தென்சீனப் பகுதிகளிலிருந்து மற்ற இன குழுக்கள் வந்து குடியேறினர். +அருணாசலப் பிரதேசத்தின் துவக்கக்கால வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. வாய்மொழி வரலாற்றுத் தகவல்களின்படி இப்பகுதி பழங்குடி மக்கள் திபெத்திய-பர்மிய பகுதியில் இருந்து குடியேறியதாக தெரிகிறது, என்றாலும் இதை உறுதிப்படுத்துவது சிரமமாக உள்ளது. பொருள் கலாச்சாரக் கண்ணோட்டத்தில் அருணாச்சலப் பிரதேச பழங்குடிக் குழுக்கள் பர்மிய பகுதியின் மலைவாழ் பழங்குடியினர் உடன் நெருக்கமானவர்கள் என்று தெளிவாக தெரிகிறது. இப்பகுதியானது வடக்கு பர்மிய கலாச்சாரத்தின் மேற்கு நோக்கிய பரவலின் நீட்சியாக இருக்க முடியும் என்பது ஒரு உண்மை ஆகும். + +அருணாசலப் பிரதேச அரசாங்கத்தின் கூற்றின்படி, இந்து மத புராண நூல்களான காளிகா புராணம், மகாபாரதம் ஆகியவற்றில் இப்பிராந்தியத்தின் பிரபு மலைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் இங்குதான் பரசுராமர் தன் பாவங்களைக் கழுவியதாகவும், வியாசர் தியானித்ததாகவும், மன்னர் பீஷ்மக்கா தன் அரசை நிறுவியதாகவும், கிருட்டிணன் தன் துணைவியான ருக்மணியை மணந்ததாகவும் கூறப்படுகிறது. + +இப்பிராந்தியத்தின் பதிவுபெற்ற அதிகாரப்பூர்ர வரலாறு அஹோம் மற்றும் சுதியா ஆகிய வெளியார் கண்ணோட்டத்தின் மூலமாக மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது. இந்த பகுதியின் வடமேற்கு பாகங்கள் கி.மு 500 மற்றும் கி.பி.600 ஆண்டுகளுக்கு இடையே மோன்யூலின் போன்பா பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. பின்னர் இப் பகுதியின், திபெத் மற்றும் பூட்டான் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. மாநிலத்தின் பிற பகுதிகள் குறிப்பாக மியான்மர் எல்லையை ஒட்டிய பகுதிகள், சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் 16 ஆம் நூற்றாண்டில் அஹோம்-சுதியா போர்வரை இருந்தது. ஆங்கிலேயர்களால் இந்தியா கைப்பற்றும் காலம்வரை அஹோம் மரபினரின் கட்டுப்பாட்டின்கீழ் இப்பகுதி 1858 வரை இருந்தது. என்றாலும், பெரும்பாலான அருணாச்சலப் பழங்குடியின மக்கள் 1947 இல் இந்தியா விடுதலைப் பெற்று இப்பகுதியின் உள்நாட்டு நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் வரை இம்மக்களின் தன்னாட்சி நடைமுறையில் இருந்தது. + +அண்மைய அகழ்வாய்வில் மேற்கு சியாங் மாவட்டப் பகுதியின் சியாங் மலைக���ின் அடிவாரத்தில் 14 ஆம் நூற்றாண்டின் சுதியா அரசு காலத்திய இந்து சமய கோயில்களின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. + +1913-1914 இல், சீனா, திபெத், பிரித்தானிய இந்தியா ஆகியவற்றின் பிரதிநிதிகள் எல்லைக் கோட்டை முடிவு செய்வது தெடர்பாக சிம்லாவில் சந்தித்தனர். இருப்பினும், சீனப் பிரதிநிதிகள் அங்கு உடன்படிக்கைக்கு மறுத்துவிட்டனர். இந்த உடன்படிக்கையின் நோக்கம் உள் மற்றும் வெளி திபெத் மற்றும் பிரிட்த்தானிய இந்தியா இடையே எல்லைகளை வரையறுப்பதாக இருந்தது. பிரித்தானிய நிர்வாகி சர் ஹென்றி மெக்மகன் என்பவர் சிம்லா மாநாட்டில் 550 மைல்கள் (890 கி.மீ.) நீளமுடைய பிரித்தானிய இந்தியா மற்றும் வெளி திபெத் ஆகியவற்றுக்கு இடையிலான எல்லையாக மக்மகன் கோட்டை வரைந்தார். மாநாட்டின் முடிவுகளை திபெத் மற்றும் பிரித்தானியப் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டு, அதன்முடிவாக பிரித்தானியப் பேரரசு கேட்டதினால் தவாங் மற்றும் திபெத்தின் சில பகுதிகளை திபெத் விட்டுக்கொடுத்து. ஆனால் சீனப் பிரதிநிதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, வெளியேறினார். இதுவே விடுதலைக்குப் பிறகு இந்திய சீனப்போருக்கு வழிவகுத்தது. + +சுதந்திர இந்தியாவால் இப்போதைய அருணாச்சலப் பிரதேசம் வட-கிழக்கு முன்னணி முகமை என்ற பெயரில் 1954 இல் உருவாக்கப்பட்ட பிறகு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தம், சீன-இந்திய உறவுகள் சுமூகமாகவும் அமைதியாகவும் இருந்தது, ஆனால் அதன்பிறகு பிரச்சினை மறு எழுச்சிபெற்று 1962 இல் இந்திய சீனப் போருக்கு எல்லை ஒரு முக்கிய காரணமாக ஆனது. + +இந்த மாநிலத்தில் மொத்தம் 17 மாவட்டங்கள் உள்ளன. அவை பின்வருமாறு; + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அருணாசலப் பிரதேசம் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 1,383,727 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 77.06% மக்களும், நகரப்புறங்களில் 22.94% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001–2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 26.03% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 713,912 ஆண்களும் மற்றும் 669,815 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. 83,743 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 17 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 65.38 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.55 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 57.70 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 212,188 ஆக உள்ளது. + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 401,876 (29.04 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 27,045 (1.95 %) ஆகவும், சீக்கிய சமயத்தவரின் மக்கள் தொகை 3,287 (0.24 %) ஆகவும் கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 418,732 (30.26 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 771 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 162,815 (11.77 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 362,55 (26.20 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 6,648 (0.48 %) ஆகவும் உள்ளது. + +பழங்குடி மக்கள் பெரும்பான்மையாக வாழும் இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான ஆங்கிலத்துடன் வட்டார மொழிகளும் பேசப்படுகிறது. + + + + + + +மணிப்பூர் + +மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் ஒரு princely state ஆக 1891ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு உட்பட்டது. மணிப்பூர் அரசியற் சட்டம், 1947, செயற்படுத்து அதிகாரமுள்ள தலைவராக மகாராஜாவையும், தெரிந்தெடுக்கப்பட்ட சட்டசபையொன்றையும் கொண்ட ஜனநாயக அரசாங்கமொன்றை நிறுவியது. அக்டோபர் 1949ல் இது இந்தியாவுடன் இணைந்த போது, சட்ட சபை கலைக்கப்பட்டது. மணிப்பூர், 1956 முதல் 1972 வரை ஒரு யூனியன் பிரதேசமாக இருந்தது. 1972ல், ஒரு மாநிலமானது. + +இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது. + +இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது. + +இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது. + +மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலக்கட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள். + +மணிப்பூரில் ஒன்பது மாவட்டங்கள் இருக்கின்றன. + +கிருஷ்ணன், ராதை மற்றும் கொபியர்களுடன் ஆடும் ராசலீலையை விளக்கும், மணிப்புரி நடனம் மணிப்பூர் மாநிலத்தில் பிறந்த நடனக் கலையாகும். மணிப்புரி நடனத்தை பெண்களுடன் ஆண்களும் ஆடுகின்றனர். + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மணிப்பூர் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,855,794 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 70.79% மக்களும், நகரப்புறங்களில் 29.21% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 24.50% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,438,586 ஆண்களும் மற்றும் 1,417,208 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 985 பெண்கள் வீதம் உள்ளனர். 22,327 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 128 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 76.94 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு +83.58 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 70.26 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 375,357 ஆக உள்ளது. +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,181,876 (41.39 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 239,836 (8.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,179,043 (41.29 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,692 (0.06 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 7,084 (0.25 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,527 (0.05 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 233,767 (8.19 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,969 (0.38 %) ஆகவும் உள்ளது. + +இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மணிப்புரியம் மொழியுடன், வங்காளம், இந்தி மற்றும் இருபத்து ஒன்பது பழங்குடி இன மொழிகளும் பேசப்படுகிறது. + +மீதெய் பழங்குடி மக்கள் மணிப்பூர் மாநிலத்தின் பெரும்பான்மையின பழங்குடிகள் ஆவர். அதற்கு அடுத்து தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளனர். +குக்கி மற்றும் நாகா பழங்குடியின மக்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெறுகிறது. + + + + + +கண்ணகி + +சங்ககால வரலாற்றில் கண்ணகி என்னும் பெயரில் இரண்டு பெண்கள் காணப்படுகின்றனர். +கள் போல் மயக்கும் சிரிப்பை உடையவள் என்னும் பொருள் விளங்கும்படி, 'கண்ணகி' என்றனர். +கண்+நகி என்று பிரித்து சிரிக்கின்ற - மலர்ந்த கண்ணைக் கொண்டவள் என்றும் பொருள்காண்பர். + +கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற் சிறந்தவளாக காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. + +சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என்று சொல்லப்படுகிறது.தமிழ் நாட்டில் இருந்த சித்தர்களில் திருமூலர், இடைக்காட்டுச் சித்தர், புண்ணாக்கீசர் இடையர் நாங்குனேரி, கொங்கண சித்தர் இடையர் திருப்பதி, மற்றும் குதம்பைச் சித்தர் இடையர் மாயூரம் ஆகியோர் ஆயர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என அறியப்படுகிறார்.கண்ணகி வணிகர் குலத���தில் நகரத்து செட்டியார் சமுதாயத்தில் உதித்த நங்கை.(ஆதாரம் தேவை) + +சிலப்பதிகாரம் எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா எடுத்தான். இவ்விழாவில் இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு கூறுகிறது. இவன் மூலம் இலங்கையில் கண்ணகியை பத்தினித் தெய்வமாக வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. + +கண்ணகி போல் இருக்கவேண்டிய தலைவி தன்னிடம் சினம் கொள்கிறாளே என்று பரத்தை ஒருத்தி அங்கலாய்த்துக் கொள்கிறாள். அவள் கண்ணகி முலையை அறுத்து மதுரையை எரித்த செய்தியை நினைவுகூர்கிறாள். + +கண்ணகியை அவள் திருமாவுண்ணி என்று குறிப்பிடுகிறாள். அழகால் திருமகளைத் தின்றவள் என்பது இத்தொடருக்குப் பொருள். + +பொதினி என்று சங்கக் காலத்தில் வழங்கப்பட்ட பழனிமலைப் பகுதியைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய நாடு வையாவி நாடு. இதனை ஆண்ட சங்க கால அரசர்களுள் ஒருவன் 'வையாவிக் கோப்பெரும் பேகன்' இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான். புலவர்கள் பலர் இவனுக்கு அறிவுரைக் கூறித் திருத்தியிருக்கிறார்கள். அரிசில் கிழார் கபிலர் பரணர் பெருங்குன்றூர் கிழார் ஆகிய புலவர்கள் கண்ணகி காரணமாக வையாவிக் கோப்பெரும் பேகனைப் பாடி அறிவுரைக் கூறியுள்ளனர். + + + + + + +ஐம்பெருங் காப்பியங்கள் + +முற்காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்கள் ஒருங்கே ஐம்பெருங் காப்பியங்கள் என அறியப்படுகின்றன. இவற்றுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் சங்கம் மருவிய காலத்தில் தோன்றியவை. ஏனையவை சோழர் காலத்தில் தோன்றியவையாகும். + +தமிழில் தோன்றியுள்ள காப்பியங்களுள் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி மற்றும் பெரியபுராணம் மட்டுமே தமிழ்நாட்டுக் கதைகளை மூலக் கருவாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளன. மற்றவைகள் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளின் தழுவல்களாகவோ அல்லது தமிழாக்கங்களாகவோ உள்ளன. + +இந்த நூலின் பெயர்கள் அணிகலன்களின் பெயரால் அமைந்துள்ளன. + +சிலப்பதிகாரம் சேர நாட்டவரான இளங்கோ அடிகளால், கி.பி. இரண்டாம் நூற்றாண்டளவில் ��ழுதப்பட்டது. சோழ நாட்டின் தலை நகரமாக விளங்கிய பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் என்னும் வணிகனதும், அவனது மனைவியாகிய கண்ணகியினதும் கதையைக் கூறுவதே இக் காப்பியமாகும். கோவலனுடன் தொடர்பு கொள்கின்ற நடனமாதான மாதவி இன்னொரு முக்கிய கதாபாத்திரம் ஆகும். + +என்கிற பதிக வரிகளில் முழுக் காப்பியத்தின் முக்கியச் செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. + +மணிமேகலை ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்று. மணிமேகலையின் கதைக்களன், கதை மாந்தர், கதை நடக்கும் காலம் ஆகியவை சிலப்பதிகாரத்தை ஒத்து இருப்பதால் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இக்காப்பியத்தின் நாயகி மணிமேகலை, சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகளாவாள். கோவலன் மற்றும் கண்ணகியின் சோக மறைவிற்கு பிறகு, மாதவி பொது வாழ்விலிருந்தும் கலைப் பணியிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டாள். +தான் கடந்த காலத்தில் வாழ்ந்த முறையையும் நினைவுகளையும் மாற்ற நினைத்த மாதவி, அவற்றின் சுவடுகளும் உலக சுகங்களும் இன்றி மணிமேகலையை வளர்க்க எண்ணி புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள். + +அவள் வாழ்ந்து வந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, அவனிடமிருந்து விடுபட்டு மணிபல்லவத் தீவுக்குச் சென்று புத்த சமயத் துறவியானாள். அங்கு அவளுக்கு பசிப்பிணி போக்கும் 'அட்சய பாத்திரம்' கிடைத்தது. அன்று முதல் மக்களின் பசியைப் போக்குவதையே தன் கடமையாகக் கொண்டு வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள். + +இக் காப்பியத்தில் இருந்து சில வரிகள்: +
+ +தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பௌத்த துறவியாகி அச் சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும். + +தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின��� கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. + +கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. + +திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் - ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898 இல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. + +நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருவாலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது. + + +
+ +சென்னை + +சென்னை ("Chennai") தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் ("Madras") என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. 17ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை தென்னிந்தியாவின் வாசலாகக் கருதப்படுகிறது. சென்னை நகரில் உள்ள மெரினா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளுள் ஒன்று. சென்னை கோலிவுட் ("Kollywood") என அறியப்படும் தமிழ்த் திரைப்படத் துறையின் தாயகம். பல விளையாட்டு அரங்கங்கள் உள்ள சென்னையில் பல விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றன. + +சென்னையின் பொருளாதாரம் பலதரப்பட்ட தொழில்களைச் சார்ந்தது. ஊர்தி, தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் தயாரிப்பு, மருத்துவம் போன்ற பல துறைகளைக் கொண்டது. ஊர்தி மற்றும் ஊர்திகளின் உதிரி பாகங்கள் உற்பத்தியில் நாட்டின் 35 விழுக்காடு சென்னையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பத் துறையில் நாட்டில் இரண்டாம் இடத்தில் உள்ளது. + +நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது. + +சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது.கி.பி. 1ஆம் நூற்றாண்டு முதல் பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாகக் கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னைக் கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. +1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி தான் தமிழர்களின் அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும் இந்நகரம் உருவானது. அன்றைய தினம் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு கோகன் ஆகியோர் தங்களது உதவியாளர் பெரிதிம்மப்பா என்பவருடன் இப்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள இடத்தை வாங்கினார்கள். அந்த இடத்தை இவர்களிடம் விற்ற அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரின் தந்தையான சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாகக் கோட்டைக்கு வடக்கில் உள்ள ஊர் சென்னப்பட்டினம் என்று அழைக்கப்பட்டது. + +ஆங்கிலேயர்கள் 1639ஆம் ஆண்டு செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டியதைத் தொடர்ந்து தான் சென்னை நகரம் உருவாகி வளர்ந்தது என்றால���ம் பின்னர் நகரத்தோடு இணைந்த ஊர்களான திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், திருவான்மியூர் ஆகிய பகுதிகள் அதற்கு மேலும் பல நூற்றாண்டுகள் தொன்மையானவை. சென்னையில் உள்ள மயிலாப்பூர் பல்லவ அரசின் முக்கிய துறைமுகமாக விளங்கியது. இயேசுவின் தோழர்களுள் ஒருவரான புனித தாமஸ் கி.பி. 52 முதல் 70 வரை இங்கு வந்து போதித்ததாகக் கருதுபவர்கள் உண்டு. 16ஆம் நூற்றாண்டில் இங்கு வந்த போர்த்துகீசியர் 1522ஆம் ஆண்டு சாந்தோம் (சான் தோம - "புனித தோமஸ்") என்ற பெயரில் ஒரு துறைமுகத்தை நிறுவினர். பிறகு 1612ஆம் ஆண்டு டச்சு நாட்டவரிடம் இவ்விடம் கைமாறியது. + +1639ஆம் ஆண்டு ஆங்கிலேயே கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜென்டுகளான பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகியோரால் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாகத் தேர்வு செய்யப்பட்டது. + +ஓராண்டிற்குப் பின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்தக் கோட்டையை மையமாகக் கொண்டு ஆங்கிலேயரின் குடியிருப்பு வளர்ச்சி அடைந்தது. சென்னப்பட்டணத்தை ஒட்டி இருந்த திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு ஆகிய கிராமங்கள் இத்துடன் இணைந்தன. + +1522ஆம் ஆண்டில் இங்கு வந்த போத்துக்கீசர்கள் செயின்ட் தாமஸ் கோட்டையைக் கட்டினர். அதைத் தொடர்ந்து அந்தப் பகுதி போத்துக்கீசர் வசம் வந்தது. தற்போதைய சென்னைக்கு வடக்கே புலிக்காடு என்ற பகுதியில் 1612ஆம் ஆண்டில் அவர்களது குடியிருப்பு உருவானது. 1688ஆம் ஆண்டில் சென்னை முதல் நகர அவையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் முதல் நகராட்சி என்ற பெருமையைச் சென்னை பெற்றது. கிழக்கிந்தியக் கம்பெனியின் ராபர்ட் கிளைவ் தனது படை நடவடிக்கைகளுக்கான தளமாக இதைப் பயன்படுத்தினார். பின்னர் இது பிரித்தானிய அரசின் இந்தியக் குடியிருப்புப் பகுதியில் இருந்த 4 மாகாணங்களில் ஒன்றான "சென்னை மாகாணம்" என்ற பெயர் பெற்றது. + +1746ஆம் ஆண்டில் செயின்ட் ஜார்ஜ் கோட்டையையும் சென்னை நகரையும் பிரஞ்சு படைகள் கைப்பற்றின. 1749ஆம் ஆண்டு இவை மீண்டும் ஆங்கிலேயர் வசம் வந்தன. அதற்குப் பின் சென்னை நகரம் பெரிதும் வளர்ச்சி அடைந்தது. இந்தியாவில் இருந்த முக்கிய நகரங்கள் ரயில் மூலம் சென்னையுடன் இணைக்கப்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா விடுதலை அடைந்த பிறகு மதராஸ் மாகாணத்தின் தலை��கராக மதராஸ் ஆனது. சென்னை மாகாணம் 1969ஆம் ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகரின் பெயரான மதராஸ் என்பதும் 1996ஆம் ஆண்டு சென்னை என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. + +இந்திய விடுதலைக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து 1956ஆம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்களைப் பிரித்த போது, தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகி மாநிலத்தின் தலைநகரானது சென்னை. மதராஸ் என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வைக்கப்பட்டது என்று கருதியதால் தமிழக அரசு 1966இல் "சென்னை" என மாற்றம் செய்தது. வெங்கடபதி சகோதரர்களிடமிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டை நிலத்தை பிரித்தானியர் வாங்கியதால், தங்கள் தந்தை 'சென்னப்ப நாயக்கர்' பெயரால் சென்னப்பட்டணம் என இந்நகரம் அழைக்கப்பட வேண்டும் என வெங்கடபதி சகோதரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆகவே சென்னை ஜார்ஜ் கோட்டை நிலமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் சென்னை என அழைக்கப்படுகிறது. + +டிசம்பர் 2004 ஆழிப்பேரலை தாக்குதலில் பெரும் பாதிப்புக்குள்ளான இடங்களில் சென்னையும் ஒன்றாகும். + +இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை, தமிழகத்தின் வடகிழக்கு கோடியில் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அருகில் உள்ளது. சென்னை நகரின் கிழக்கில் வங்காள விரிகுடா உள்ளது. + +சென்னை நகரத்தின் பரப்பளவு 174 கி.மீ². சென்னை மாவட்டமும், திருவள்ளூர், மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளும் சென்னை மாநகரப் பகுதிகளாகக் கருதப்படுகின்றன. சென்னை நகரின் அருகாமையில் மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஸ்ரீஹரிக்கோட்டா ஆகிய ஊர்கள் உள்ளன. + +சென்னையில் வெப்பமும் ஈரப்பதமும் வருடம் முழுவதும் மிகுந்து காணப்படுகிறது. சென்னையில் பதிவு செய்யப்பட்ட அதிக வெப்பநிலை 44.1˚ செல்சியஸ், குறைந்த வெப்பநிலை 15.8˚ செல்சியஸ். தென்கிழக்கு பருவமழையும், முக்கியமாக வடகிழக்கு பருவமழையும் நகருக்கு மழை கொண்டு வருகிறது. சென்னையில் வருடத்திற்கு சுமார் 1300 மி.மீ மழை பெய்கிறது. + +பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சென்னையின் கடற்கரை நகரின் மிக உட்புறத்தே அங்கப்ப நாயக்கன் தெரு உள்ள தொலைவில் இருந்தது. பிற்பட்ட காலப்பகுதியில் கடல் நன்றாக உள்வாங்கித் தற்போதைய இடத்தில் நிலைக்கொண்டுவிட்டது. +கோட்டைக்குள் இருக்கும் அருங்காட்சிய���த்தில் வைக்கப்பட்டிருக்கும் வண்ண வரைபடங்கள் சிலவற்றில் கடலின் அலைகள் கோட்டையின் சுவர்களுக்கு மிக மிக அருகில் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. +கூவம், மற்றும் அடையாறு ஆகிய நதிகள் சென்னை நகரின் வழியாகப் பாய்கின்றன. புழல் ஏரி, சோழவரம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளிலிருந்து நகருக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. + +சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலகின் இரண்டாவது பெரிய கடற்கரை ஆகும். 13 கி.மீ. நீளம் உள்ள இக்கடற்கரை, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையின் வடகோடியில் கூவம் கடலில் கலக்கும் இடத்திற்கு தெற்கில் உள்ள பகுதி மெரினா கடற்கரை என்றும், அதன் தெற்கில் அடையாறு கடலில் கலக்கும் பகுதிக்கு வடக்கில் உள்ள பகுதி சாந்தோம் கடற்கரை என்றும், அடையாற்றின் தெற்கில் உள்ள பகுதி எலியட் அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்றும் அழைக்கப்படுகிறது. + +சென்னை நகரின் தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை வட சென்னையில் உள்ளன. மத்திய சென்னை, சென்னையின் முக்கியப் பகுதியாகும். தென் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. + +சென்னை மாநகரின் நிர்வாகம் சென்னை மாநகராட்சியின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியின் மேயர் (மாநகரத் தந்தை) என்று அழைக்கப்படுகிறார். இவர் தவிர 200 வட்டங்களிலிருந்து 200 மாமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போதைய மேயர் சைதை துரை சாமி அவர்களும் துணைமேயர் பெசமின் அவர்களும் அக்டோபர் 29, 2011 முதல் இப்பதவியை வகித்து வருகிறார்கள். சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் செயல்பட்டு வருகின்றது. சென்னை மாநகராட்சி 1688 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது இந்தியாவில் மட்டுமின்றி இங்கிலாந்து அல்லாத காமன் வெல்த் நாடுகளின் மாநகராட்சியைக் காட்டிலும் பழமையானது. + +தமிழகத் தலைமைச்செயலகம் இங்கு உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் செயல்பட்டு வந்தது. பின் 13 மார்ச் 2010 அன்று ஓமந்துரார் அரசினர் தோட்டத்தில் 400 கோடிகளுக்கு மேல் செலவில் கட்டப்பட்ட பசுமை கட்டடத்தில் மாற்றப்பட்டது. இது உலகின் முதல் பசுமை சட்டமன்ற கட்டடமாகும். ஓராண்டிற்கு பிறகு தமிழகத் தலைமைச்செயலகம் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கே மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் 18 தமிழக சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. வட சென்னையில் திருவொற்றியூர்,ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி), இராயபுரம் ஆகிய தொகுதிகளும், மத்திய சென்னையில் வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகளும்,தென் சென்னையில் விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர்,மைலாப்பூர்,வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய தொகுதிகளும் உள்ளன. + +இந்திய பாராளுமன்றத்தின் மூன்று தொகுதிகள் சென்னையில் உள்ளன. அவை வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகியவையாகும். + +தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களின் உயர்நீதிமன்றம் சென்னையில் உள்ளது. + +தமிழகக் காவல் துறையின் பிரிவான சென்னை பெருநகரக் காவல்துறை சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கிறது. சென்னை மாநகர் முப்பத்தாறு காவல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 121 காவல் நிலையங்கள் சென்னை மாநகரப் பகுதியில் உள்ளன. + +ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் முதலே தெற்காசியாவின் முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கி வருகிறது. பல இந்திய நிறுவனங்களின் கிளைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகவும், தமிழகத்தின் தலைநகராகவும் சென்னை விளங்குவதால், பல தேசிய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் சென்னையில் உள்ளன. + +1990களிலிருந்து, சென்னை இந்தியாவின் முக்கிய தகவல் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. தென் சென்னையில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன. தரமணியில் உள்ள டைடல் பூங்கா இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காவாகும். சோழிங்கநல்லூர் எல்காட் தொழில்நுட்ப பூங்கா, சிறுசேரி சிப்காட் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை மென்பொருள் உருவாக்கம் மற்றும் தொழில்நுட்ப சேவைகள் உள்ளிட்ட பல பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. மேலும் சில தகவல் தொழில்நுட்ப பூங்காக்களும் நகரங்களும் கட்டப்பட்டு வருகின்றன. + +இந்தியாவின் வாகன உற்பத்தியில் சென்னை முதலிடம் வகிக்கிறது. பெரம்பூரில் இயங்கிவரும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை ("Integral Coach Factory") இந்திய ரயில்வேயின் முதன்மையான ரயில் உற்பத்தி தொழிற்சாலையாகும். அம்பத்தூர் மற்றும் பாடி பகுதிகளில் பல தொழிற்சாலைகள் உள்ளன. டி.வி.எஸ், அசோக் லேலண்ட், ஹுண்டாய் , ஃபோர்டு , மிட்சுபிசி, டி.ஐ மிதிவண்டிகள், எம்.ஆர்.எஃப், பி.எம்.டபிள்யூ ("BMW"), ரினல்ட் நிசான் போன்ற நிறுவனங்களின் தொழிற்சாலைகள் சென்னையில் உள்ளன. சென்னையை அடுத்த ஆவடியில் கன ஊர்தி தொழிற்சாலை உள்ளது. இந்தியாவின் முக்கிய போர் பீரங்கியான "அர்ஜுன்" இங்கு தயாரிக்கப்படுகிறது. + +சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 மில்லியன் ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர். + +சென்னையில் தமிழ் மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர ஆங்கிலம், தெலுங்கு, உருது, கன்னடம், மலையாளம், ஹிந்தி, போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது. + +அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் ஆங்கிலம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர். + +இங்கு பேசப்படும் பல மொழிகளின் கலவையில் உருவான மெட்ராஸ் பாஷை உள்ளூர் மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்களாலும், ஆட்டோ மற்றும் லாரி ஓட்டுனர்கள் போன்றோராலும் ஒயிலாகப் பேசப்படுகிறது. இந்த "மொழி" அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத மொழியாகக் கருதப்படுகிறது. + +சென்னையில் வாழும் பலதரப்பட்ட மக்களின் பிரதிபலிப்பாகச் சென்னையின் கலாச்சாரம் விளங்குகிறது. நவீனமும் பாரம்பரியமும் இங்கு கலந்து காணப்படுகிறது. + +சென்னையில் வருடந்தோறும் டிசம்பர் மாதம் முழுவதும் இசைத் திருவிழா இசை ஆர்வலர்களால் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில் தினந்தோறும் சென்னையின் பல இடங்களில் கர்நாடக சங்கீத கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. சென்னை அடையாறில் உள்ள கலாக்ஷேத்ராவில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்து பரதநாட்டியமும் மற்ற பாரம்பரியக் கலைகளும் பயின்று செல்கின்றனர். + +தமிழ் மற்றும் ஆங்கில நாடகங்கள் வருடந்தோறும் அரங்கேற்றப்படுகின்றன. சென்னையிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள கல்லூரிகளில் வருடந்தோறும் கலைத்திருவிழாக்கள் மாணவர்களால் நடத்தப்படுகின்றன. + +சென்னையில் உள்ள கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் திரைப்படத் துறை இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக மிகப் பெரியது. தமிழ் திரைப்படப் பாடல்கள் சென்னை மக்களால் மிகவும் ரசிக்கப்படுகிறது. தனியார் தொலைக்காட்சிகளிலும் வானொலி அலைவரிசைகளிலும் திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சிகள் அதிகம் ஒலிபரப்பப்படுவதைக் காணலாம். + +அரிசி இங்கு பிரதான உணவாக இருக்கின்றது. பிரபலமான தெற்காசிய உணவான பிரியாணியும், இட்லி, வடை, தோசை போன்ற தென்னிந்திய உணவு வகைகளும் சமீபத்தில் மேற்கத்திய நாகரிகத்தின் பாதிப்பால் பீட்ஸா, பர்கர் போன்ற உணவு வகைகளும் சென்னையில் பிரபலமாய் உள்ளன. + +புனித ஜார்ஜ் கோட்டை, ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் அரசு அருங்காட்சியகம் போன்று ஆங்கிலேயரின் பாதிப்பில் உருவான கட்டடங்களையும் அதிகமாகக் காணலாம். சமீபத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியால் பல நவீன கட்டடங்கள் பெருகி வருகின்றன. + +2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மற்ற தமிழ் நகரங்களைப்போல, சென்னை மாநகரிலும் இந்து மக்களின் எண்ணிக்கை அதிக அளவிலுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக, இசுலாமியம் மற்றும் கிறித்துவம் மேலோங்கிக் காணப்படுகிறது. இதை தவிர, சைணம், பௌத்தம் மற்றும் சீக்கிய சமயங்களும் உ ள்ளன. + +சென்னையில் மயிலை கபாலீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் மற்றும் திருவொற்றியூர் வடிவுடை அம்மன் போன்ற பல பழங்கால கோயில்கள் உள்ளன. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில் என நான்கு தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் சென்னை மாவட்டத்திற்குள் அமைந்துள்ளன. + +தொன்மையான சாந்தோம் தேவாலயம், தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த தேவாலயமாகும். சாந்தோம் அவர்கள், இயேசுவின் 12 சீடர்களில் ஒருவராவர். சிலவும் இங்கு உள்ளன. இதை போர்சுக்கல் நாட்டை சார்ந்தவர்கள் எழுப்பியதாகக் கருதப்படுகிறது. + +சென்னையில் ஆகாய மார்க்கமாகவும், கடல் வழியாகவும், ரயில் மற்றும் சாலை வழியிலும் போக்குவரத்தை மேற்கொள்ளலாம். இந்திய நாட்டின் ரயில் அமைப்பு, சென்னையில் தான் தொடங்கியது எனக் கூறலாம். + +1832ம் ஆண்டில் சென்னையில் முதல் ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. + +1837ல் சரக��கு ஏற்றுமதி செய்வதற்காக, ஒரு சிறிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. 16 வருடங்களுக்கு பின்னர், முதல் நுகர்வோர் ரயில் பாதை தானேவில் அமைக்கப்படது. +1931ம் ஆண்டில், சென்னை கடற்கரைக்கும் தாம்பரத்துக்கும் இடையே புறநகர் ரயில் பாதை அமைக்கப்பட்டது. சென்னைய்ல் சுமார் 65 ஆண்டுகள், டிராம்ஸ் போக்குவரத்து அமைப்பு இயங்கியது. பின்னர் 1950ல், ராஜகோபாலச்சாரி முதலமைச்சாராய் பணியாற்றியப் போது, டிராம்ஸ் போக்குவரத்து நிறுத்தப்படது. + +2012ன் போது சுமார் 37,60,000 வாகனங்கள் பதிவுச் செய்யப்பட்டிருந்த்தது. பின்னர், 2016ல் சுமார் 47,57,000 வாகனங்கள் இயங்கிவருகின்றன. + +சென்னை விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற நகரங்களுக்கும் தெற்கு, மற்றும் தென்கிழக்காசியா, வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் நல்ல விமானப் போக்குவரத்து உண்டு. சென்னை விமான நிலையம், இந்தியாவில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சரக்கு விமான நிலையமாகும். + +சென்னை துறைமுகம் இந்தியாவில் முக்கிய துறைமுகங்களுள் ஒன்று. மேலும் சென்னையின் வடக்கில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் நிலக்கரி, தாதுக்கள் போன்ற பொருட்களின் போக்குவரத்து நடைபெறுகிறது. + +சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகியவை சென்னையின் இரு முக்கிய ரயில் நிலையங்கள். சென்னை சென்ட்ரல், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. சென்னை எழும்பூர், மற்ற தமிழக நகரங்களுக்குச் சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. இப்போது சென்னையில் உள்ள தாம்பரம் ரயில் நிலையத்தையும் சென்னையின் மூன்றாவது முனையாக மாற்றப் பட்டுள்ளது. + +சென்னை புறநகர் இருப்புவழி நான்கு மார்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் – செங்கல்பட்டு ஆகியவை. இவை தவிர சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் சேவை முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரையிலான 10.15 கி.மீ தூரத்திற்கும் பின்னர் இரண்டாம் கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயான 8.6 கி.மீ தூரத்திற்கும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிற வழி���்தடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது. + +சென்னை நகரிலிருந்து இந்தியாவின் மற்ற நகரங்களுக்குச் சென்று வர நல்ல சாலை வசதிகள் உள்ளன. ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சென்னையை கொல்கத்தா, பெங்களூர், திருச்சி, பாண்டிச்சேரி, திருவள்ளூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். + +சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களையும் இணைக்கும் பொதுப் போக்குவரத்து வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வருகிறது. சுமார் 2773 பேருந்துகள் 375 வழித்தடங்கள் மூலம் சென்னை நகரின் பகுதிகளை இணைக்கின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நூற்றுக்கணக்கான சிற்றுந்துகளும் நகர் முழுவதும் இயக்கப்படுகின்றது. இது தவிர பல்லாயிரக்கணக்கான ஆட்டோக்களும், கால் டாக்ஸிக்களும் நகரத்தில் ஓடுகின்றன. + +தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களின் முக்கிய இடங்களுக்கும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. + +தென்கிழக்காசிய கண்ணாடி நூலிழை மையங்களுள் ஒன்றான சென்னை இந்தியாவில் தகவல் தொடர்பில் முதலிடம் வகிக்கிறது. இங்கு பி.எஸ்.என்.எல், டாடா, ரிலையன்ஸ், ஏர்டெல் ஆகிய தொலைபேசி நிறுவனங்கள் தொலைபேசி இணைப்பு அளிக்கின்றன. பி.எஸ். என்.எல், ஏர்டெல், வோடபோன், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ், ஐடியா ஆகிய நிறுவனங்கள் நகர்பேசி இணைப்பு அளிக்கின்றன. இது தவிர இந்நிறுவனங்கள் அகலப்பாட்டைஇணைய இணைப்புகளும் அளிக்கின்றன. + +அனைத்து தேசிய, அனைத்துலக தொலைக்காட்சிகளும் சென்னையில் தெரிகின்றன. சன் டிவி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான சன் மியூசிக்,சன் நியூஸ்,கே டிவி, ஆதித்யா, மக்கள் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி மற்றும் அதன் பல்வேறு சிறப்பு அலைவரிசைகளான கலைஞர் செய்திகள், இசையருவி, சித்திரம், சிரிப்பொலி, ராஜ் தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ராஜ் நியூஸ், ராஜ் டிஜிட்டல் ப்ளஸ், ஸ்டார் விஜய், ஜெயா தொலைக்காட்சி மற்றும் அதன் அலைவரிசைகள் ஜெயா மாக்சு, ஜெயா பிளசு, தூர்தர்சன் பொதிகை, டிஸ்கவரி தமிழ் ஆகிய தொலைக்காட்சி அலைவரிசைகள் அவற்றில் பரவலான சிலவாகும். நான்கு ஏ. எம் மற்றும் பதினொன்று பண்பலை அலைவரிசைகளில் வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. சூரியன் பண்பலை,ரேடியோ மிர்ச்சி, ரேடியோ சிட்டி, ஹலோ, ரேடியோ ஒன், ஆஹா, பிக், ரெயின்போ பண்பலை, எப் எம் கோல்டு ஆகியன அவற்றில் சிலவாகும். + +தினகரன், தமிழ் முரசு, தினத்தந்தி, தின மலர், தினமணி, மாலை மலர், தி இந்து ஆகிய தமிழ் செய்தித் தாள்களும், தி இந்து, தி நியூ இந்தியன் எக்சுபிரசு, டெக்கான் கிரானிக்கிள், தி டைம்சு ஆப் இந்தியா ஆகிய ஆங்கில செய்தித்தாள்களும் சென்னையில் அச்சிடப்படுகின்றன. ஆனந்த விகடன், குமுதம், கல்கி, குங்குமம், நக்கீரன், புதிய தலைமுறை ஆகியவை இங்கு அச்சிடப்படும் முக்கிய வார இதழ்கள். + +சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராயபேட்டை அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத்துவமனை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை ஆகியவை புகழ்பெற்ற அரசு மருத்துவமனைகளாகும். இவை தவிர அப்போல்லோ மருத்துவமனை, மலர் மருத்துவமனை, "MIOT" மருத்துவமனை, குளோபல் மருத்துவமனை, விஜயா மருத்துவமனை போன்ற சிறந்த தனியார் மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன. + +சென்னையில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் சுட்டெரிக்கும் நாட்கள் மே முதல் சூன் வரையான காலமாகும். அப்போது சில நாட்களைக் கத்தரி வெயில் அல்லது அக்னி நட்சத்திரம் என்றும் அழைக்கின்றனர். அக்காலங்களில் அதிக பட்ச வெப்பமாக இருக்கும். சனவரியில் குளிர் அதிகம் இருக்கும். அப்போது குறைந்த பட்ச வெப்பநிலை . மிகக் குறைந்த வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது மேலும் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது சராசரி மழைப்பொழிவு . இந்நகரம் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்திருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து திசம்பர் மாதங்களில் மழைக்காலமாகும். சில சமயங்களில் புயல் காற்று வங்காளவிரிகுடா பக்கங்களிலிருந்து வருகிறது. 2005 ஆம் ஆண்டு அதிக பட்ச மழைப்பொழிவாகப் பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரை தென்மேற்கு பருவக்காற்று காலமாகும் மற்ற எல்லா மாதங்களிலும் வடகிழக்கு காற்று அடிக்கிறது. பொதுவாக வடகிழக்கு பருவமழையின் காரணமாக 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காலையில் மட்டும் 16 சென்டிமீட்டர் மழைபெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. + +சென்னையில் உள்ள ஐ.ஐ.டியும், அண்ணா பல்கலைக்கழகமும், இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுள் சிலவாகும். இவை தவிர பல தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளும் நிகர்நிலை பல்கலைகழகங்களும் மருத்துவ கல்லூரிகளும் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ளன. + +சென்னை பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தைப் பயன்படுத்தும் பல கலை, அறிவியல் கல்லூரிகள் சென்னையில் உள்ளன. அவற்றுள் சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, லயோலா கல்லூரி, புதுக்கல்லூரி, வைஷ்ணவ் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, "S.I.E.T" கல்லூரி, விவேகானந்தா கல்லூரி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர என்.ஐ.எஃப்.டி ("National Institute of Fashion Technology –" தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி), ஏ.சி.ஜெ ("Asian College of Journalism"), சென்னை சமூகப்பணிப் பள்ளி ("Madras School of Social Work") போன்ற கல்வி நிறுவனங்களும் உள்ளன. + +வருடந்தோறும் பள்ளி இறுதித் தேர்வுகளில் இந்தியாவிலேயே சென்னை மாணாக்கர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெறுவதைக் காணலாம். + + +மற்ற இந்திய நகரங்களைப் போலச் சென்னையிலும் கிரிக்கெட்டே பிரபலமான விளையாட்டாகும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் 50000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இந்திய கிரிக்கெட் அணி இங்கு தான் முதன் முதலாக டெஸ்ட் போட்டியை வென்றது. ஐ.ஐ.டி வளாகத்திலுள்ள கெம்பிளாஸ்ட் கிரிக்கெட் மைதானம் மற்றொரு முக்கிய மைதானம். + +நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் அரங்கத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் சர்வதேச ஏ.டி.பி பந்தயமான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபறுகின்றன. விஜய் அமிர்தராஜ், இராமநாதன் கிருஷ்ணன், ரமேஷ் கிருஷ்ணன் போன்று சர்வதேச போட்டிகளில் முத்திரை பதித்த பல இந்திய ஆட்டக்காரர்கள் சென்னையைச் சேர்ந்தவர்களே. + +எழும்பூரிலுள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கம் 4000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வசதி கொண்டது. இது செயற்கை தரை கொண்டது. 1995ஆம் ஆண்டு இங்கு சாம்பியன் கோப்பைப் பந்தயத்தொடர் நடந்தது. 2005 டிசம்பரிலும் இப்போட்டிகள் இங்கு நடைபெறும். + +ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் கால்பந்து, தடகளப்போட்டிகள் போன்றவை நடைபெறுகின்றன. இதன் வளாகத்தில் உள்ள உள்ளக விளையாட்டரங்கில் கூடைப்பந்து, பூப்பந்தாட்டம், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் போன்ற போட்டிகள் நடத்தும் வசதிகள் உள்ளன. 1996 ஆம் ஆண்டு தெற்காசிய விளையாட்டுப் ���ோட்டிகள் சென்னையில் நடைபெற்றது. + +மூன்று கோல்ஃப் விளையாடும் இடங்கள் உள்ளன. ஸ்ரீபெரும்புதூரில் மோட்டர் பந்தய போட்டிகள் நடைபெறும் களம் உள்ளது. + +கிண்டியில் உள்ள உயிரியல் பூங்காவில் மான்கள், பாம்புகள், ஆமைகள் ஆகியவை உள்ளன. ஆளுனர் வசிக்கும் ராஜ் பவனிலும், அதை ஒட்டியுள்ள ஐ.ஐ.டி வளாகத்திலும் குரங்குகளும் மான்களும் துள்ளி விளையாடுவதைக் காணலாம். வண்டலூரிலுள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் சுமார் 80 மிருக வகைகள் உள்ளன. சென்னையின் தெற்கில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு முதலைகள், ஆமைகள், பாம்புகள் ஆகியவை வளர்க்கப்படுவதுடன் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது. + +உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரை, எழில்மிகு பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை ஆகியவை புகழ்பெற்ற இடங்களாகும். வள்ளுவர் கோட்டம், அரசு அருங்காட்சியகம், முட்டுக்காடு படகு குழாம், பிர்லா கோளரங்கம் மற்றும் தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் கிஷ்கிந்தா, குயின்ஸ் லேன்ட், விஜிபி கோல்டன் பீச், மாயாஜால், "MGM Dizzee World" உள்ளிட்டவைகள் மக்களை கவர்ந்த சிறந்த சுற்றுலாத் தலங்களாகும். + + + +சென்னை ராஜீவ் காந்தி சாலையில் அமைந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்ட பல தேவைகளுக்குமாக நிலத்தடி தண்ணீர் லாரிகளால் உறிஞ்சப்படுவதால் பாதிக்கப்படும் சோழவரம், திருமழிசை. போன்ற பகுதி மக்கள் மக்கள் 2013ஆம் ஆண்டு தண்ணீர் லாரிகளை அனுமதிக்கப்பட்டதற்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுத்ததால், அப்பகுதியின் தனியார் தண்ணீர் லாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்தனர்.ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருந்த மென்பொருள் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன, சில நிறுவனங்கள் தண்ணீர்த் தட்டுப்பாடால் விடுமுறை விட எத்தனித்தன. அரசால் விவசாயிகள் சமாதானப்படுத்தப்பட்டு மீண்டும் தண்ணீர் உறிஞ்சப்பட அனுமதிக்கப்பட்ட பின்னர் இந்நிறுவனங்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கிற்று. + +நிலத்தடி நீர் இவ்வாறு உறிஞ்சப்படுவதால் வேறு வழியின்றி விவசாயிகள் நிலத்தை விற்று விட்டு பிழைப்பு தேடி சென்னை நகருக்குள் வரவேண்டிய தேவை ஏற்படுத்தப்படுகின்றது. + +சென்னை நகரம் உருவாகி 2014ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22ஆம் நாளுடன் 375 ஆண்டுகள் நிறைவ���ற்றதை கொண்டாடும் விதமாக சென்னை 375 விழா, சென்னைவாசிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.. +.* . + +உலகில் உள்ள சில நகரங்கள் சென்னை அரசு நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ தொடர்புகளைக் கொண்டுள்ளது. கலை, கலாச்சாரத்தை அந்த நகரங்கள் சென்னையுடன் பகிர்ந்து கொள்கின்றன. சென்னையுடன் தொடர்புடைய சகோதர நகரங்கள் கீழே. +2015 டிசம்பர் மாதம் சென்னையில் கனமழை கொட்டியது. செம்பரம்பாக்கம் ஏரி தூர்வாரப்படாததால் உடையும் அபாயம் ஏற்பட்டது. + + + + + + +கா. ந. அண்ணாதுரை + +காஞ்சீவரம் நடராச முதலியார் அண்ணாதுரை ("C. N. Annadurai", 15 செப்டம்பர், 1909 - 3 பெப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர். + +அண்ணாதுரை, சின்னகாஞ்சீபுரத்தில் வரகுவாசல் தெருவில் கதவெண் 54 உள்ள வீட்டில் நிலப்பத்திர எழுத்தர் நடராசன் என்பவருக்கும் பங்காரு அம்மையார் என்பவருக்கும் மகனாக செளமிய ஆண்டு ஆவணித்திங்கள் 31ஆம் நாள் (1909 - செப்டம்பர் 15) அண்ணாதுரை பிறந்தார். நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்விக் கற்றார். + +அண்ணாதுரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர் 15, 1909, இல் நடராச முதலியார் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார். அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர்; தாய் பங்காரு அம்மாள் கோயில் பணியாளர். அண்ணாவின் பெற்றோர் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்டனர். அண்ணா தம் சிற்றன்னை ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார். அவரை அண்ணா "தொத்தா" என்று அன்புடன் அழைப்பார். மாணவப்பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அண்ணாதுரை குடும்ப வறுமைக் காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிமாக நிறுத்திக்கொண்டு, நகரா��்சி அலுவலகத்தில் உதவியாளராக சிறிது காலம் பணிபுரிந்தார். + +1934 இல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) , மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார் . ஆசிரியப்பணியை இடைநிறுத்தி பத்திரிகைத்துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். + +அன்றைய காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும் அதிகமிருந்தது. ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர் பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது, அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக் காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து "ஆங்கிலம் பேசினால் உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல் வேண்டாம்" என்று மறுத்துவிட்டார். அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை. + +தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார். + +ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர், +என்று உடனே பத���லளித்தார். + +அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார். + +ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன. + +அண்ணாதுரை இந்துக் குடும்பத்தில் பிறந்தவராயிருந்தாலும் அவரின் கோட்பாடு சமயம் சாராதவராகவே வெளிப்படுத்துகின்றது. அவர் என்ற கோட்பாட்டை வெளிப்படுத்தினார்.. என்பது அவர் கட்சியின் கொள்கை பரப்பாகவும், அவரின் தொண்டர்களாக கருதப்படும் அவரின் தம்பிகளின் கட்சி வாசகமாகவும் பின்பற்றப்பட்டது. அவர் ஒரு நேர்காணலில் "..."நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்"..." என்றார். + +அண்ணாதுரை மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை. + +அறிஞர் அண்ணா அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும் அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும��� கடைப்பிடிக்கவேண்டிய அடிப்படையான பண்பாடுகள் இவை. கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்டு ஓர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதபடுகின்றது. கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் - அரசியலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் காட்டிடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல், எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்மை பொதுவாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும். + +அண்ணாதுரை அரசியலில் ஈடுபாடு கொண்டு நீதிக்கட்சியில் 1935 இல் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். நீதிக்கட்சி பிராமணரல்லாதோருக்கான அமைப்பாக 1917 +இல் மதராஸ் ஒருங்கிணைப்பு இயக்கம் என்ற அமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிராமணரல்லாதோர் மாணவர்களின் கல்விச் செலவை ஏற்கும் விதத்திலும் அவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு வழிவகை செய்யும் விதமாக பல உதவிகளை புரிந்து வந்தது. + +பின்னாளில் இது அரசியல் கட்சியாக சர். பி.டி. தியாகராய செட்டி மற்றும் டி. எம். நாயர் தலைமையில் துவக்கப்பட்டது. இக்கட்சி பின்னர் தென்னிந்தியர் நலவுரிமைச் சங்கம் எனப் பெயரிடப்பட்டு பின் நீதிக்கட்சியாக பெயர்மாற்றம் கண்டது. இக்கட்சியே சென்னை இராசதானியில் சுயாட்சி முறையை பின்பற்றி 1937 இல் இந்திய தேசிய காங்கிரசால் தோற்கடிக்கப்படும்வரை ஆட்சியில் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் அண்ணாதுரை நீதிக்கட்சியில் பெரியாருடன் சேர்ந்தார். பெரியார் அப்பொழுது நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். + +அண்ணாதுரை நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பொறுப்பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணைப் பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார். பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் (திராவிட நாடு தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி துவக்கப்பட்டது) தொடங்கினார். 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றினார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார். + +பிரித்தானிய காலணிய ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிக வன்மையாக எதிர்த்து இந்தியாவின் சுதந்திரத்துக்கு வழிவகுத்தது. இக்கட்சி பெரும்பாலும் பிரமாணர்கள் மற்றும் வட இந்தியர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக தென்னிந்திய மக்களாலும் குறிப்பாக பெரியாராலும், தமிழர்களாலும் பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இவர்களிடமிருந்து தென்னிந்தியாவை மீட்கப் பெரியார் பெரிதும் விரும்பினார். இக்காரணங்களை முன்வைத்தே பெரியார் இந்தியாவின் சுதந்திர தினமான ஆகத்து 15, 1947 அந்த நாளை கருப்பு தினமாக எடுத்துக்கொள்ளுமாறு அவரின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார். + +அண்ணாதுரை இக்கருத்தில் முரண்பட்டார். இக்கருத்து பெரியாருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கும் கருத்து வேறுபாட்டால் விரிசல் ஏற்படக் காரணமாயிற்று. அண்ணாதுரை இந்தியாவின் சுதந்திரம் "அனைவரின் தியாகத்தாலும், வியர்வையினாலும் விளைந்தது". அது வெறும் "ஆரிய, வடஇந்தியர்களால் மட்டும் பெற்றது அல்ல" என்பதை வலியுறுத்தினார். + +திராவிடர் கழகம் சனநாயகமான தேர்தலில் பங்குகொள்ளாமல் விலகி நிற்கும் பெரியாரின் கொள்கையை எதிர்த்தும் அண்ணாதுரை முரண்பட்டார். இதன் வெளிப்பாடாக 1948 இல் நடைபெற்ற கட்சிக்கூட்டத்திலிருந்தும் வெளிநடப்பு செய்தார். + +பெரியார் தேர்தலில் பங்குபெறுவதால் தனது பகுத்தறிவு, சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு போன்ற அவரின் கொள்கைகளுக்கு சமாதானமாக போகக்கூடிய நிலையை அல்லது சற்று பின்வாங்கும் நிலைபாட்டை அவர் கட்சிக்கு ஏற்படுத்துவதில், (தேர்தலுக்காக கொள்கையை விட்டுக்கொடுக்கும் நிலை) பெரியார் விரும்பவில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தாலொழிய சமுதாய சீர்திருத்தங்களை, சமுதாய விழிப்புணர்வு பிரச்சாரங்களைத் தடையின்றி, அரசுக்கெதிராகவும் மேற்கொள்ள முடியும் என்பதை பெரியார் நம்பினார். + +இறுதி நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40 வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின் வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். + +அண்ணாதுரை, மற்றும் பெரியாரின் அண்ணன் மகன் மற்றும் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத்) மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதிய கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பெற்றது. "அண்ணாதுரை ஏழைகள் மற்றும் கீழ்த்தட்டு சாதி வகுப்பினரின் சமூக உரிமைகளுக்காக பாடுபட்டமையால் அம்மக்களின் "அபரிமிதமான செல்வாக்கை வெகு விரைவிலேயே பெற்றார்" என்று 'இந்தியாவின் தலித் கலைக்களஞ்சியம்' கூறுகிறது. அவர் தொடங்கிய தி.மு.க. வும் செல்வாக்கை பெற்றது. தேர்தல் அரசியலில் ஆர்வம் கொண்ட திமுக, பங்கெடுத்த முதல் சட்டமன்ற தேர்தலிலேயே 13 இடங்களை கைப்பற்றியது. + +திராவிடர் கழகத்தில் அண்ணாதுரை இடம்பெற்றிருந்தபொழுது, பெரியாரின திராவிடநாடுக் கொள்கைக்கு ஆதரவு நல்கினார். திமுக வின் ஆரம்ப காலகட்ட கொள்கையிலும் இது இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் வாரிசாக கருதப்பட்ட ஈ.வெ.கி. சம்பத் திராவிட நாடு கொள்கையை எதிர்த்து, திராவிட நாடு கோரிக்கை நிச்சயமற்ற இலக்கை அடைய எடுக்கப்படும் வீண்முயற்சி என்று கருதி திமுகவில் இணைந்தவர் ஆவார். + +ஈ.வெ.கி. சம்பத்தின் கொள்கையை வலியுறுத்தும் விதமாக அண்ணாதுரை இவ்வாறு அறிவித்தார் +தமிழ் திரைக்கலைஞர்களை முன் நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்டது. இது ஈ. வெ. கி. சம்பத்திற்கு அக்கட்சியில் அதிருப்தியை உருவாக்கியது. அதன் காரணமாக திமுக விலிருந்து விலகி தமிழ் தேசியக் கட்சி என்ற தனிக்கட்சியை 1961 -ல் துவங்கினார். 1962-ல் அண்ணா மாநிலங்களைவையில் "திராவிடர்கள் தங்கள் சுயமரியாதையை காத்துக்கொள்ள விரும்புகின்றனர்.. நாங்கள் கோருவது தென்னிந்தியா என்ற தனிநாடு" என்று உரையாற்றினார். + +இந்தியா மொழிவாரி மாநிலமாக அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் என சென்னை இராசதானியிலிருந்து (மெட்ராஸ் இராஜதானி) அந்தந்த மொழிவாரியான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழர்கள் வாழும் பகுதி மதராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த உண்மையை அறிந்த பிறகு அண்ணாதுரை திராவிட நாடு திராவிடர்களுக்கே என்ற கோரிக்கையை கைவிட்டு தமிழ்நாடு தமிழர்களுக்கே என்று மாற்றினார். + +இந்திய சீனப் போர் இந்திய அரசியலமைப்பில் சில மாறுதல்களை உருவாக்கியது. இந்தியாவின் "16 வது திருத்தச் சட்டமாக" (பெரும்பாலும் அனைவராலும்அறியப்படும் சட்டம் -பிரிவினைவாத தடைச்சட்டம்) பிரிவினைவாதத்தை முற்றிலும் தடைசெய்யும் விதமாக கொண்டுவரப்பட்டது. இச்சட்டம் இந்திய நாடாளுமன்றத்தின் முன்வைக்கப்படும்பொழுது அண்ணாதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இச்சட்டத்தை அண்ணாதுரைப் பலமாக ஆட்சேபித்தும் அச்சட்டம் நிறைவேற்றப்படுவதை அவரால் தடுக்க முடியவில்லை. அதன் விளைவாக திமுக கட்சியினர் அக்கோரிக்கையை வலியுறுத்துவதிலிருந்து தங்களை விலக்கி கொண்டனர். திமுகவின் "தனித்தமிழ்நாடு நாடு கோரிக்கை" கிடப்பில் போடப்பட்டது. அதுமுதல் அண்ணாதுரை நடுவண் அரசின் இணக்கமான ஆதரவை தென்னிந்திய மாநிலங்கள் பெறும் விதமாக தன்னுடைய மாநில சுயாட்சி கொள்கையினை வலியுறுத்த ஆரம்பித்தார். தமிழகத்தின் மாநில சுயாட்சியை பெரிதும் வலியுறுத்தினார். + +மாநில சுயாட்சி கொள்கையில் அவர் கட்சியின் நிலைப்பாட்டை இவ்வாறு தெளிவுபடுத்தினார். + +1953 இல், அண்ணாதுரை வழிகாட்டுதலின்படி திமுக மூன்று கண்டனத்தீர்மானங்களை முன்மொழிந்தது: + +இந்தி முதன்முதலில் அலுவலக மொழிக்கான தகுதியான மொழியாக மோத்திலால் நேரு தலைமையிலான குழு இந்திய அரசாங்கத்திற்கு (பிரித்தானிய அரசாங்கம்) பரிந்துரைச் செய்தது. அது முதல் தமிழ் நாட்டில் பலதரப்பட்ட மக்களாலும், அரசியல் தலைவர்களாலும் எதிர்ப்புகள் காட்டப்பட்டன. இதனால் "தமிழ் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக" "இந்தி பேசும் வட இந்தியர்களால் தமிழர்கள் வேறுபடுத்தி காட்டப்பட்டனர்". + +1938 இல் மதராசு இராசதானியில் காங்கிரசு அரசு சி. ராசகோபாலாச்சாரி தலைமையில் ஆட்சி நடத்தி வந்தது. தமிழகத்தில் இந்தி பயன்பாட்டை இராசாசி முன்மொழிந்து, பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக அறிவித்தார். தமிழ் ஆன்றோர்கள், தலைவர்கள், புலவர்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தமிழ் பற்றாளர்களும் வெகுண்டு எழுந்தனர். முதலாம் இந்தி எதிர்ப்பு போராட்டமும் வெடித்தது. + +இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த நூற்றுக்கணக்கானோரை இராசாசி அரசு கைது செய்தது; தடியடியில் ஈடுபட்டது. அவ்வாறு தமிழ் காக்க புறப்பட்டு சிறை சென்றோரில் ஒருத்தர் நடராசன். இளைஞர்; தாழ்த்தப்பட்டச் சமூகத்தவர். எதிர்ப்பைக் கைவிடாது 1939 ஆம் ஆண்டு, சனவரி 15 ஆம் நாள் தன் உயிரை நீத்தார். தமிழுக்காக உயிரை ஈகம் செய்தார். + +நடராசனின் இறப்பு இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் புத்துணர்ச்சியை ஊட்டியது. அண்ணாதுரை, பாரதிதாசன் உட்பட பல தமிழறிஞர்கள் இந்தி எதிர்ப்பு இயக்கங்களை நடத்தத் தொடங்கினர். காஞ்சிபுரத்தில் 27 பெப்ரவரி, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை கலந்து கொண்டார். மாநாட்டை கலைக்க காவல் துறை கொடுத்த தடியடியில் பலர் காயமுற்றனர். இவர்களில் பலர் கைதும் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பெப்ரவரி 13 இல் நடந்த போராட்டத்தில் கைதான தாளமுத்து என்ற இன்னொரு தமிழர், மார்ச் 11 இல் காலமானார். + +நடராசன் - தாளமுத்து ஆகிய இருவரின் ஈகங்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரட்டியது. காங்கிரசு அரசை அவ்வாண்டு இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர், பெப்ரவரி 1940 இல், மதராசு மாகாண ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இந்திக் கல்வியை விலக்கினார்.. + +இந்தியா 1950 இல் அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டதிற்கு பின், இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கபட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தனி அங்கிகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக, ஆட்சி மொழியாக 15 ஆண்டிற்குப் பின் 1965 இல் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு தமிழக மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டது குறித்து அண்ணாதுரை: +திமுக கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து 1960 இல் ஆகஸ்டில் சென்னை, கோடம்பாக்கத்தில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு அண்ணாதுரை தலைமையில் நடத்தப்பட்டது. இந்தி திணிப்பிற்கெதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்தியக் குடியரசுத்தலைவர் வருகையின் பொழுது அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவெதெனவும் முடிவு செய்யப்பட்டது. இதன் கிளர்ச்சியையும் இந்தி எதிர்ப்பு உணர்வாளர்களின் எழுச்சியையும் கண்ட பிரதமர் ஜவஹர்லால் நேரு, "இந்தி பேசா மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும்" வண்ணம் இந்திய அரசியலமைப்பில் திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்றினார். இதனால் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. + +இந்த திருத்தச் சட்டம் கொண்டு வரப்படாவிட்டால் இந்தியாவின் 15 வது குடியரசு தின்த்தை 26 ஜனவரி, 1965 துக்கதினமாக அறிவிக்கப்போவதாக அண்ணாதுரை அறிவித்தார். இந்த அறிவிப்பை அன்றைய மதராஸ் மாநில முதலமைச்சரான பக்தவச்சலம் அண்ணாதுரைக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார். இதன் காரணமாக கருப்புதின அறிவிப்பை 24 ஜனவரி அன்று மாற்றியமைத்தார். இதற்கான அறைகூவலாக அண்ணாதுரை முழங்கியவை "இந்தியை ஒழித்து, இந்தியக் குடியரசு நீண்ட ஆயுளுடன் வாழ்க" + +சட்டமன்றத்தில் அண்ணாதுரை எதிர்கட்சியாக இருந்தபொழுதிலும், ஆளுங்கட்சியாக இருந்த பொழுதிலும் அவர் பணி சிறந்ததாகவே கருதப்பட்டது. அவரின் பேச்சு கண்ணியத்துடன் எதிர்த்து கேள்வி கேட்பவரையும் சிந்திக்கவைக்கவும், கோபக்கணைகளுடன் வார்த்தைகளை தொடுப்பவர்களையும் வெட்கித் தலைக்குனிய வைக்கும் நிலையிலேயே அவரின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. + +1962 இல் அண்ணாதுரை மற்றும் அவரது கட்சியினர் 50 உறுப்பினர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்தில் இடம்பெற்றிருந்தபொழுது, ஆளும் காங்கிரஸ் சார்பில் வைக்கபட்ட குற்றச்சாட்டுக்கு, மிக சாதுர்யமாக பதிலளித்ததை கண்டு ஆளுங்கட்சியான காங்கிரசு கட்சியே வியந்தது. அவர்கள் அண்ணாவை நோக்கி வைத்த குற்றச்சாட்டு, அண்ணாதுரையால் நல்ல எதிர்க்கட்சியாக இயங்கத் தெரியவில்லை என்று கேலியுடன் தெரிவித்த குற்றசாட்டை அண்ணாதுரை இவ்வாறு பதிலுரைத்தார். + +1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6ல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை 1967 ஏப்ரல் 16 இல்தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார். + +மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன. + +ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ���ரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு. + +அண்ணாதுரை மிகச் சிறந்த தமிழ் சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக, அடுக்கு மொழிகளுடன், மிக நாகரிகமான முறையில், அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறன் பெற்றவர். எழுத்தாற்றலும் பெற்றவர். + +பல புதினங்களும், சிறு கதைகளும் மற்றும் அரசியல் நாடகங்களுக்கும் நாடாகமாக்கம், திரைக்கதைகள் எழுதியவர். அவரே கதாபாத்திரமேற்று நாடகங்களில், திராவிடர் கழக பிரச்சார நாடகங்களில் நடித்துள்ளார். + +திரைப்படங்களை முக்கிய பிரச்சார ஊடகங்கங்களாக அரசியலுக்காக பயன்படுத்தியவர் அண்ணாதுரை. இவரின் முதல் திரைப்படம் "நல்லதம்பி" (1948). இதில் முக்கிய கதாபாத்திரத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நடித்துள்ளார். இது ஜமீன்தாரி ஒழிப்புமுறையை வலியுறுத்தி எடுக்கப்பட்டத் திரைப்படமாகும். இவரின் "வேலைக்காரி" (1949), "ஒர் இரவு" ஆகிய நாடகங்களும் தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ரங்கோன் ராதா, வண்டிக்காரன் மகன் ஆகிய கதைகளும் திரைப்படமாக எடுக்கப்பட்டன. திராவிட அரசியலின் பிரச்சாரமாக இத்திரைப்படங்கள் திகழ்ந்தன. + +வேலைக்காரியில் அண்ணாதுரை அடக்குமுறையை கையாளும் நிலச்சுவான்தாரர்கள் ஜவஹர்லால் நேரு மற்றும் காந்தியுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்கள் என்பதை விளக்குகின்ற விதமாக எடுத்துக்காட்டப்பட்டது. + +இவரின் திரைப்படங்கள் பெரும்பாலும் பிராமண எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு பிரச்சாரங்களாக விளங்கின. இப்பிரச்சாரங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நாடகமேடை கலைஞர்கள் மற்றும் திரைக்கலைஞர்களாக அண்ணாதுரைக்கு பக்கபலமாக விளங்கியவர்கள், டி.வி. நாராயணசாமி, கே. ஆர். ராமசாமி, என்.எஸ்.கிருஷ்ணன், எஸ். எஸ். ராஜேந்திரன், சிவாஜி கணேசன், மற்றும் எம்.ஜி.ராமச்சந்திரன். + +அண்ணாவின் சில நூல்கள் மிகுந்த சர்ச்சைகளை உருவ��க்கியவை. அவற்றில் ஆரிய மாயை (ஆரியர்களின் போலித்தோற்றம்) பிராமணர்களை கடுமையாகச் சாடியதாக விமர்சிக்கப்பட்டது. ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதபட்டிருப்பதாக விமர்சனம் வைக்கப்பட்டது. இந்த நூலுக்காகவும், கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காகவும் அவருக்கு ரூபாய் 700 அபராதமும் (தண்டம்), சிறைத்தண்டனையும் அளிக்கப்பட்டது. + +மே 1956 இல் திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி வி.ஆர்.நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின்படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்குகொண்டது. + +1957 ல் நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டமன்றத் தொகுதிகளையும் இரண்டு நாடாளுமன்றத்தொகுதிகளையும் வென்றது. அண்ணாதுரையும் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார்.. திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டமன்றத்திற்குள் நுழைந்தது. + +1962 இல் திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரசை அடுத்து உருவெடுத்திருந்தது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 சட்டமன்றத் தொகுதிகளில் வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியுற்றார். பின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கபெற்று அண்ணா மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார். 1967 ல் நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதலமைச்சரானார். + +அண்ணாதுரைக்கு ஈ.வெ.ரா.பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டவுடன் குடியரசு இதழில் துணையாசிரியாரகப் பணியாற்றினார். பின்னர் விடுதலை இதழின் ஆசிரியாரக இருந்தார். 1942ஆம் ஆண்டில் திராவிடநாடு தொடங்கி அதற்கு ஆசிரியராகவும் அச்சிட்டு வெளியிடுபவராகவும் இருந்தார். பெரியாரோடு பிணக்கு ஏற்பட்ட பொழுது தமது தரப்பு வாதங்களைகக்கூறுவதற்காக டி. எம். பார்த்தசாரதி தொடங்கிய மாலைமணி இதழில் ஆசிரியராக இருந்தார். 1956 சூன் 15இல் தி.மு.க.விற்கென நம்நாடு என்னும் நாளிதழைத் தொடங்கியபொழுது அதன் ஆசிரியராக இருந்தார். 1963ஆம் ஆண்டில் காஞ்சி என்னும் வார இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். Home Land என்ற ஆங்கில வார இதழை 2-6-1957ஆம் நாள் தொடங்கி அதன் ஆச��ரியராகவும் இருந்தார். + +அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பெப்ரவரி, 1969 அன்று மரணமடைந்தார். அவர் புகையிலையை உட்கொள்ளும் பழக்கமுடையவராததால் (புகையிலைப் பொடி நுகரும் பழக்கம்) இந்நோய் தீவிரமடைந்து மரணமடைந்தார். அவரின் இறுதி மரியாதையில் பெருந்திரளான மக்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில். இடம் பெற்றுள்ளது. இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 இலட்சம் பேர் கலந்துக் கொண்டு இறுதி மரியாதைச் செலுத்தினர். இவரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்றப் பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. + +தமிழ்நாடு அரசு அண்ணாவின் நினைவாக இவர் வாழ்ந்த காஞ்சிபுரம் இல்லத்தை பேரறிஞர் அண்ணா நினைவு இல்லம் என்கிற பெயரில் நினைவுச் சின்னமாக மாற்றியமைத்துள்ளது. இங்கு அண்ணா அமர்ந்த நிலையிலான சிலை வைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தை பேரறிஞர் அண்ணா நினைவிடம் எனும் பெயரில் நினைவிடமாக ஆக்கியுள்ளது. இங்கு அண்ணாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகமும் செயல்பட்டு வருகின்றது. இங்குள்ள பேரறிஞர் அண்ணா அருங்காட்சியகத்தில் இவரது வாழ்க்கை வரலாற்றுப் புகைப்படங்கள் இவர் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. எம். ஜி. ராமச்சந்திரன் திமுகவிலிருந்து பிரிந்து தனிகட்சி தொடங்கியபோது அதற்கு அண்ணா திமுக என்று பெயர் வைத்தார். சென்னையில் உள்ள திமுக தலைமைச்செயலக கட்டிடத்துக்கு “அண்ணா அறிவாலயம்” என்றும், தமிழ்நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப பலகலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு அண்ணா சாலை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சென்னை, மதுரை போன்ற நகரங்களின் முக்கிய குடியிருப்பு பகுதிகள் அண்ணா நகர் என்று பெயரிடப்பட்டுள்ளன. வேலூரில் உள்ள அரசு திரையரங்கம் அண்ணா கலையரங்கம் என பெய��் சூட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இங்கு 24-9-1968 முதல் சிறுவர்களுக்கான திரைப்படம் திரையிடப்பட்டு பின்பு 9-7-1971 முதல் "அண்ணா கலையரங்கம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு முழு நீளத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.. 2009ம் ஆண்டு மத்திய அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்டது. 2010ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு பூர்த்தியடைவதை நினைவு கூறும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது. + + + + + + +ம. கோ. இராமச்சந்திரன் + +எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன், சனவரி 17, 1917 – திசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். + +எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். + +இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர். + +இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் (1880 - 5/08/1952) ) மகனாகப் பிறந்தார். + +அவருடைய தந்தை மருதூர் கோபாலமேனன் வழக்கறிஞராக கேரளாவில் பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில�� திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமாவார். காந்திய கொள்கைகளால் உந்தப்பட்டு, இவர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். + +எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார். + +அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தார். + +ம. கோ. இரா. இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். அவர் ம. கோ. இரா.வின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது ம. கோ. இரா.விற்கு ஈர்ப்பு ஏற்பட்டது. + +அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக ம. கோ. இரா.வும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது. அக்காலகட்டத்தில் ம. கோ. இரா.வால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதற்கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதிபட்டிக் கைகளில் கிடைத்தன. கணபதிபட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த ம. கோ. இரா.வின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார். ம. கோ. இரா. அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார். கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் ம. கோ. இரா.வும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை ம. கோ. இரா. தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார். இத்திருமணத்தை ம. கோ. இரா.வின் அண்ணனும் நடிகருமான ம. கோ. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர். எனினும் ம. கோ. இரா.வின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோ��ு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே ம. கோ. இரா.வும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together). 12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் ம. கோ. இரா.வும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர். + +மூன்று திருமணங்கள் என்றாலும் எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் இல்லை. எனவே ஜானகி- கணபதிபட் ஆகிய இருவருக்கும் பிறந்த அப்பு என்ற சுரேந்திரனையும் ஜானகியின் தம்பியாகிய மணி என்னும் நாராயணன் குழந்தைகளாகிய லதா (ராஜேந்திரன்), கீதா (மதுமோகன்), சுதா (கோபாலகிருஷ்ணன்). ஜானகி (சிவராமன்), தீபன் ஆகிய ஐவரையும் தன் வளர்ப்புப் பிள்ளைகளாகத் தத்தெடுத்துக் கொண்டார். + +எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன் மற்றும் சினிமாவில் வலம் வந்த கோவை சரளா என்று எம்.ஜி.ஆர் 25ல் ஆனந்த விகடன் இதழ் குறிப்பிட்டுள்ளது. + +எம்.ஜி.ஆர் ராஜா-ராணி என்ற பெயர்களுடைய இரண்டு சிங்கங்களை வளர்த்தார். ராணி சிங்கம் இறந்துவிட ராஜா சிங்கமும் உடல் தளர்ந்திருந்தது. அது தனியாக இருக்க வேண்டாமென வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு அளித்தார். நெடுநாட்கள் வாழ்ந்த ராஜா மறைந்த போது, அதன் உடலைத் தகுந்த ஆவணத்துடன் பெற்று, பாடம் செய்து தன் தி.நகர் வீட்டில் வைத்துக் கொண்டார். + +சிங்கங்களைத் தவிர எம்.ஜி.ஆர் தனது வீடு அமைந்திருந்த ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும் வளர்த்தார். இவற்றைக் கவனிக்க தனி மருத்துவரைப் பணியமர்த்தியிருந்தார். + +சிறுகுட்டியாக எம்.ஜி.ஆரிடம் இருந்த கரடி வளர்ந்ததும் மருத்தவரின் உதவியுடன் மூக்கில் சங்கிலி இணைக்க ஏதுவாகத் துளையிட முயன்றபோது எதிர்பாராத விதமாக இறந்துவிட்டது. இதை நடிகர் சங்கத்தின் நாளிதழில் ஒரு பேட்டியின் போது வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார் எம்.ஜி.ஆர். + +1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமா��வர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. + +இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த காவல்காரன் திரைப்படமானது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971 ஆம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. இது சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக்சாக்காரன்" படத்தில் நடித்ததற்காகக் கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. + +அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஆகும். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார். + +இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார். + +1972-இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது. + +திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானா���். 1984ல் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர். 1984 இல் இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. + +இவரது கட்சி 1988-இல் பிரிந்து 1989-இல் இணைந்தது. 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது. + +இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் திராவிடக் கட்சியில் இருந்தபோதிலும் தமிழ்நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள். இவர் இறந்து 29 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த பெரும் செல்வாக்கைக் காட்டுகிறது. + + +1921ம் ஆண்டு தமிழ் மொழிக்கு எனத் தனியே ஒரு தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றிய உமாமகேசுவரனார் பிறந்த தஞ்சையில், தீர்மானம் இட்ட அறுபது ஆண்டுகள் கழித்து தமிழ்ப் பல்கலைக் கழகத்தை நிறுவினார் எம்.ஜி.ஆர். தமிழ்மொழி, தமிழர்களின் கலை, இசை, நாடகம், ஓவியம், சிற்பம், கட்டிடக் கலை, தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், மொழியியல், வரலாறு, புவியியல், மெய்யியல், கடலியல், சித்த மருத்துவம், கைவினைக் கலை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழை மேம்படுத்த, தமிழர்களின் மரபுப் பெருமையைப் பரப்ப, 1981 இல் அன்று முதலமைச்சராகயிருந்த திரு.எம்.ஜி. இராமச்சந்திரன் முன் முயற்சியில் தமிழக அரசால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. + +இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார். + +1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார். + +விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார். + +1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார். + +"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற ந���ம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார். + +எம்.ஜி.ஆர் தானே தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தினைப் பற்றிப் புத்தகம் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தில் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரைப் பற்றியும் எழுதியுள்ள எம்.ஜி.ஆர், படத்தின் கதை, அதை தானே தயாரிக்கவேண்டிய நிலை என பல விஷயங்களை எழுதியுள்ளார். இந்தப்படம் வெளிவந்தபின் வெற்றி அடைந்தால் தாம் ஒரு மன்னன் என்றும், தோல்வியுற்றால் தாம் ஒரு நாடோடி என்றும் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார். + +‘நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர். அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கிய ‘எனது வாழ்க்கை பாதையிலே’ தொடரும் முற்றுப் பெறவில்லை. + +எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும். + + + + + +தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் நினைவாகச் சென்னையில் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்துக்கு அருகில் அவரது உடல் புதைக்கப்பட்டது. அந்த இடத்தில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆரின். மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் அரிய புகைப்படங்களும், அவருடைய சில பொருட்களும் மக்களின் பார்வைக்கு தனி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளன. + +தாமரை மலர் விரிந்த நிலையில் இருப்பது போன்ற அமைப்பின் நடுவே அவர் உடல் வைக்கப்பட்டுள்ள சமாதி உள்ளது. சமாதியின் அருகே நினைவுத்தூண் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், பல கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தொண்டர்களும் வந்து அஞ்சலி செலுத்துகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த நினைவிடத்திற்கு வருகை தந்து தங்களின் அன்பு தலைவருக்கு மரியாதை செலுத்துகின்றனர். + +சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் சி. கிருஷ்ணன் (ஓமலூர்) மார்ச் 2012 பட்ஜெட் மீதான விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காகப் பாடுபட்டவர். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் ஏழைகளுக்குக் கோவில் போன்றது. ���தனால் கோவில்களில் வழங்கப்படுவதைப் போல அன்னதானம் எம்.ஜி.ஆர் நினைவிடத்திலும் வழங்க வேண்டும் என்று கூறினார். + +சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். எம்.ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையொன்று அழகிய சிறு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எம்.ஜி.ஆர் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்திய TMX 4777 எண்ணுள்ள அம்பாசிடர் கார் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட பரிசு பொருள்களும், அவர் பயன்படுத்திய பொருள்களும் இந்த இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளன. + +திருநின்றவூர் நத்தம் மேடு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் சாலையில் 1800 சதுர அடி மனையில் எம்.ஜி.ஆருக்கான ஆலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுப்பேட்டையை சேர்ந்தவர் கலைவாணன் மற்றும் சாந்தி தம்பதியினர் இந்தக் கோவிலை அமைத்துப் பாதுகாவலர்களாக உள்ளார்கள். 15.08.11 அன்று எம்.ஜி.ஆர் கோவிலுக்குக் கும்பாபிசேகமும், உற்சவர் சிலைக்குப் பக்தர்கள் 108 குடங்களில் பால் அபிசேகமும் நடந்தது. + +மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும் புகழ்பெற்ற நடிகருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதிலும் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன என்று 30, மே 2011ல் வெளிவந்த நக்கீரன் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. + + + + + +