diff --git "a/train/AA_wiki_01.txt" "b/train/AA_wiki_01.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_01.txt" @@ -0,0 +1,2827 @@ + +191 பீச்ட்றீ கோபுரம் + +191 பீச்ட்றீ கோபுரம் (பொதுவாக "பீச்ட்றீ" கோபுரமென்றே அழைக்கப்படுகிறது) அட்லான்டாவின் நான்காவது உயரமான வானளாவியாகும். 50 மாடிகளையும், 235 மீட்டர் உயரத்தையும் கொண்ட இக் கட்டிடம், உலகின் மிக உயர்ந்த 200 கட்டிடங்களுள் ஒன்றாகும். + +மிகவும் அழகிய தோற்றம் கொண்ட இக் கட்டிடம், 1991, மற்றும் 1998 ஆம் ஆண்டுகளுக்கான போமா (BOMA) விருதைப் பெற்றது. இதன் இரண்டு கோபுரங்களினதும் முகப்புகளுக்கு "ரோசா தாந்தே" எனும் கருங்கல் பலகைகள் பதிக்கப்பட்டுள்ளன. யன்னல்கள், சாம்பல் நிற கண்ணாடிகளால் ஆனவை. ஒவ்வொரு கோபுரமும், இரவில் ஒளியூட்டப் படுகின்ற உச்சிகளைக் கொண்டுள்ளன. + +கட்டிடக்கலை நிறுவனங்களான கெண்டால்/ஹீற்றன் அசோசியேற் நிறுவனமும், ஜோன்சன்/பர்கீ ஆர்க்கிட்டெக்ட் நிறுவனமும் இக்கட்டிடத்தை வடிவமைத்துள்ளன. இக்கட்டடம் முன்னாள் முக்கிய விடுதியாகிய மஜஸ்டிக் விடுதி இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ளது. + + + + + +30 சென் மேரி அக்ஸ் + +30 புனித மேரி ஆக்சு "(30 St Mary Axe)" அல்லது கெருக்கின் அல்லது சுவிசு மீள்காப்புறுதி கட்டிடம் என்பது இலண்டனின் முதன்மை நிதி மாவட்டமாகிய இலண்டன் நகரத்தின் வணிக வானளாவிக் கட்டிடம் ஆகும். இது 2003 திசம்பரில் முடிக்கப்பட்டு 2004 ஏப்பிரலில் திறக்கப்பட்டது. இது 41 மாடி கொண்ட 180 மீ உயரக் கட்டிடம் ஆகும். இது முன்பு பால்டிக் தொடர்பகமும் கப்பல்வணிகப் பெருங்கூடமும் நிலவிய இடத்தில் நிறுவப்பட்டது. புனித மேரி ஆக்சு தெருவில் இருந்த இவை இரண்டும் 1992 இல் தற்காலிக ஐரியக் குடியரசு படையால் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டன. இக்கட்டிடம் அது அமைந்துள்ள புனித மேரி ஆக்சு தெருவின் பெயரைக் கொண்டுள்ளது. + +பின்னர் திட்டமிடப்பட்ட 92 மாடி புத்தாயிரக் கோபுரத் திட்டம் கைவிடப்பட்டது. இது நார்மன் பாசுட்டராலும் அரூப் குழுமத்தாலும் வடிவமைக்கப்பட்டது. இது சுகான்சுகா குழுமத்தால் 2001 இல் தொடங்கி 2003 இல் கட்டி முடிக்கப்பட்டது. + +இது இலண்டனின் சிறந்த காட்சிப் பொருளாகியது. இது இலண்டனின் மிக அண்மைக் கவின்கட்டமைப்பால் உருவாக்கப்பட்டதாக்க் கருதப்படும் கட்டிடம் ஆகும். + +இந்தக் கட்டிடம், முந்தைய கப்பல் விற்பனை, கப்பல்சார் தகவலுக்கான உலகச் சந்தை��ின் தலைமையகமாக விளங்கிய பால்டிக் தொடர்பகக் கட்டிடம் இருந்த இடத்திலும் (24-28, புனித மேரி ஆக்சு தெரு) கப்பல்வணிகப் பெருங்கூடம் இருந்த இடத்திலும் (30-32 புனித மேரி ஆக்சு தெரு) நிறுவப்பட்டுள்ளது. பால்டிக் தொடர்பகத்தின் அருகில் 1992 ஏப்பிரல் 10 இல் தாற்காலிக ஐரியக் குடியரசுப் படை குண்டுவெடித்து தகர்த்து, வரலாற்ருச் சிரப்பு வாய்ந்த அந்தக் கட்டிட்த்துக்கும் அருகமியில் இருந்த கட்டிடங்களுக்கும் பேரளவு அழிவை உருவாக்கியது. + +இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுச்சூழல் பற்றி, பிரித்தானிய அரசின் சட்ட அறிவுரைக் குழுமமாகிய ஆங்கிலேய பழமரபு அமைப்பும் இலண்டன் நகராட்சி அமைப்பும் எந்தவொரு மீளாக்கமும் புனித மேரி ஆக்சு தெருவில் பால்டிக் தொடர்பகம் பெற்றிருந்த பழமரபுப் பெருமையை மீட்கத் தக்கதாக அமையவேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். தொடர்பக்க் கூடம் கப்பல் தொழில்வணிகச் சந்தையின் கவின்மிகு பொருத்தமைவுகளைக் கொண்டிருந்தது. + +முதலில் கருதியதைக் காட்டிலும் சிதைவு கடுமையாக அமைவதை உணர்ந்த ஆங்கிலேய பழமரபுக் குழுமம், இருந்தாலும் கவின்கட்டமைப்பு வேட்போர் முழு மீள்கட்டுமானத்துக்காக வாதிட்ட போதும், முழுமையாக மீட்கும்வேண்டலைக் கைவிட்டு விட்டது;. இதற்கிடையில் பால்டிக் தொடர்பகமும் கப்பல்வணிகப் பெர்டுங்கூடமும் 1995 இல் தம் மனைகளை திரபால்கர் இல்லத்துக்கு விற்றுவிட்டனர்.இதற்கிடையில் பால்டிக் தொடர்பகத்தின் எஞ்சியிருந்த பெரும்பகுதிக் கட்டமைப்புகள் காப்பாக நீக்கப்பட்டன தொடர்பக பரிமாற்றக் கூடமும் முகப்பமைப்பும், இக்கட்டிடத்தின் எதிர்கால மீளமைப்பில் நம்பிக்கையோடு, பேணிப் பாதுக்க்கப்பட்டன . கட்டிடச் சிதைவுப் பொருள்க எசுத்தோனியாவைச் சேர்ந்த தாலினின் குழுமத்துக்கு 800,000 ப்வுண்டுகளுக்கு விற்கப்பட்டு, எசுத்தோனிய நகர வணிக மையத்தின் நடுப்பகுதியை மீளாக்கம் செய்ய கொண்டு செல்லப்பட்டது. + +திரபால்கர் இல்லம் 1996 இல் புத்தாயிரம் கோபுரக் கட்டிடத் திட்டத்தை ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்தத் திட்டத்தின்படி, கட்டிடம் 92 மாடிகளும் 386 மீ உயரமும் கொண்டது: பரப்பளவு140000 ச.மீ: இதில் அலுவலகங்கள், அடுக்ககங்கள், கடைகள் தங்கும் விடுதிகள் தோட்டங்கள் ஆகியவை அமையும். இது வான்போக்கு வரத்துச் சிக்கலாலும் இலண்டன் மாநகரை வ��ட பாரிய அமைப்பு கொண்டிருந்ததாலும் கைவிட நேர்ந்தது; மேலும் சிறிய கட்டிடத்துக்கான மாற்றிரிய வடிவமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +வில்லை என வழங்கும் இதன் உச்சிப் பன்முகக் கும்மட்டம் பல்டிக் தொடர்பகத்தின் கூம்புக் கண்ணாடிக் கும்மட்டத்தை நினைவுகூர்வதாக அமைந்துள்ளது. முன்பு இந்தக் கூம்புக் கண்ணாடிக் கும்மட்டம் பால்டிக் தொடர்கத்தின் தரைப்பகுதியில் இருந்தது. அதன் பெரும்பகுதி இப்போது தேசிய கடல்சார் அருங்காட்சியகத்தில்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. + +பிரித்தானியத் துணை முதன்மை அமைச்சர் ஜான் பிரெசுகோட்டு அக்களத்தில் முந்தைய தொடர்பகத்தை விட பெரிய கட்டிட்த்தை நிறுவும் திட்டத்துக்கான ஒப்புதலை 2000 ஆகத்து 23 இல் அளித்தார். இந்தக் களம் சிறப்பானதாகும். வளர்ச்சி வேண்டிநிற்கும் இடமாகும். ஆனால் அந்த வளர்ச்சி இலண்டனைச் சுற்றி எங்கிருந்து பார்த்தாலும் புனித பவுல் பேராலயக் கும்மட்டத்தை மறைக்கவோ அதன் பார்வையக் குன்றச்செய்யவோ கூடாது. + +இந்தத் திட்டம் பால்டிக் தொடர்பகத்தை மீள கட்டியமைத்தலுக்கானதே ஆகும். GMW கட்டிடக்கலை வல்லுனர்கள் குழுமம் மீட்ட தொடர்பகத்ட்தைச் சுற்றி செவ்வக வடிவில் புதிய கட்டிடம் அமைத்தலை முன்மொழிந்தது: சதுர வடிவம், பல வங்கிகள் விரும்பியபடி, பெரிய தரையமைப்பைக் கொண்டமையும். இறுதிடாக திட்டமீட்டாளர்கள் தொடர்பகத்தை மீட்டலியலாது என்பதை உணரலாயினர். எனவே கட்டிடம் சார்ந்த கட்டுத்தளைகளைக் கைவிட நேர்ந்தது; கணிசமான கவின்கட்டமைவுள்ள கட்டிட்டிடத்துக்கு மட்டுமே நகராட்சி அதிகாரமும் ஏற்பை அளிக்கும் என்பதையும் அறிந்தனர். எனவே, கட்டிடக்கலையாளர்கலுக்குக் கட்டற்ற முறையில் வடிவமைப்பை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தது, இது முதலீடு மிக்க பெருவருமானம் கிடைக்கும் வணிக்க் கட்டுபாடுகளைக் கருதவேண்டிய நிலை தளைந்து வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு வடிவமைக்க முடிந்தது. + +சுவிசு மீள்காப்புறுதி நிறுவனத்தின் தாழ் உயர திட்டம், திட்டமீட்டு அதிகாரத்தின் குறுகலான பல் தெருக்கள் அமைந்த இலண்டன் மரபு தெருவமைப்பைப் பாதுகாக்கும் விருப்பத்தைச் சந்திக்க வல்லதாயிற்று. சுவிசு மீலாக்க கோபுரம் கட்டுபாடுகள் குறைந்ததாகவும் அமைந்தது. இலண்டன் இலன்பார்டு தெருவில் உள்ள பார்க்கிளே வங்கியின் முந்த���ய நகரத் தலைமையகம் போல, அருகாமையில் உள்ள தெருக்களில் போவோர் வருவோர் கோபுர அடியில் வரும்வரை கோபுரத்தின் பார்வை தெளிவாக படவேண்டும் என்ற எண்ணக்கரு அல்லது ஏடல் திட்டமிடலில் கருத்தில் கொள்ளப்பட்டது. + +இந்தக் கட்டிடம் சுகான்சுகாவால் 2003 இல் கட்டி முடிக்கபட்டு, 2004 ஏப்பிரல் 23 இல் திறந்து வைக்கப்பட்டது. இதில் முதன்மை குடியிருப்போராக உலக மீள்காப்பீடுக் குழமமாகிய சுவிசு மீள்காப்பீட்டுக் கழகம் தனது பிரித்தானிய நாட்டுச் செயல்பாட்டுத் தலைமையக அமைவிடமாக இயங்கி வருகிறது. எனவே. இது சிலவேளைகளில் சுவிசு மீள்காப்பகம் என அழைக்கப்படுகிறது. ஆனால், இப்பெயர் அலுவல்சார் பெயரல்ல என்பது மட்டுமல்ல நாளடைவில் அருகி வருகிறது. அன்னல், இந்த குழுமத்தின் தலைமையகம் சூரிச்சில் அமைந்துள்ளது. கெருக்கின் என்ற பெயரே கட்டிடத்துக்குப் பரவலாக வழங்கலானது. + +கோபுரத்தின் 2/3 பகுதி உயரத்தில் அமைந்த கண்ணாடிப் பலகங்கள் 2005 ஏப்பிரலில் கீழிருந்த நயவளாகம் மீது விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த வளாகம் மட்டும் மூடப்பட்டது. கொப்புரப் பிற கட்டிடப் பகுதிகள் திறந்தே இருந்தன. ஒரு தற்காலிக நடைவழி வளாகத்தின் குறுக்கு வரவேற்பு பகுதிவரை உருவாக்கி வருகையாளர்கள் சென்றுவரவும் பாதுகாப்புக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே, பொறியாளர்கள் உடனடியாக கட்டிடத்தில் அமைந்த மற்ற 744 கண்ணாடிப் பலகங்களையும் ஆய்வு செய்தனர். பழுதுபார்ப்புச் செலவை முதன்மை ஒப்பந்தக்காரர் சுகான்சுகாவும் திரை சுவர் வழங்கிய சுகிமிட்லினும் ஏற்றனர். + +இக்கட்டிடத்தின் பகுதிகளை 2015 இல் பின்வரும் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்: + + +கூடுதலாக, Sterling and Bridge's Newsagent போன்ற பல நிறுவனங்களும் கோபுர அடிவாரத்தில் களத்தில் செயல்படுகின்றன. + + + + + +அல் அக்சா பள்ளிவாசல் + +அல் அக்சா பள்ளிவாசல் (அரபு:المسجد الاقصى, "மஸ்ஜித் அல்-அக்ஸா") யெருசலேமிலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும். + +இசுலாம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. பாறைக் குவிமாடம் இற்குப் பின்னர் (கிபி 690), கிபி 710 இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா பள்ளிவாசல் கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது. + +அல் அக்சா பள்ளிவாசலே யெருசலேமிலுள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், சிலுவைபடையினர்களின் (Crusader) பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. சிலுவைபடையினர் யெருசலேமைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த பள்ளிவாசல் ஓர் அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் யூத ஆலயம் இருந்த இடத்தில் இந்த பள்ளிவாசல் கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது "சொலமனின் ஆலயம்" என அழைக்கப்பட்டது. அவ்வப்போது, அல்-அகசா, யூதத் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், இசுரேல் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப் பட்டன. + +இம் பள்ளிவாசலின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், யெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முசுலிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது. + + + + + +பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல் + +பிரபல பரிசுகள், பதக்கங்கள், மற்றும் விருதுகள் என்பனவற்றின் பட்டியல் கிண்ணங்கள், சுற்றுக் கோப்பைகள், கோப்பைகள், படிகள் மற்றும், அரச அலங்காரங்கள் முதலியன உட்பட. + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +பின்வருவனவற்றையும் பார்க்கவும்:: திரைப்பட விருதுகளின் பட்டியல் +பின்வருவனவற்றையும் பார்க்கவும்: திரைப்பட விழா + + + + + + + + + + + + + + + + + + +தெலுங்கு மொழி + +தெலுங்கு அல்லது தெலுகு ("Telugu", ) தென்னிந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்காணத்தில் அரசு ஏற்புப்பெற்ற மொழி. இந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் தெலுங்கு ஒன்றாகும். இம்மொழி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக ��ளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9 கோடியே 30 இலட்சம் (93 மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். கர்நாடக இசையில் மிக அதிக அளவில் பயன்படும் மொழியும் தெலுங்கு ஆகும். 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் தெலுங்கு செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. + +தெலுங்கு திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி. மற்ற திராவிட மொழிகளைப் போலவே தெலுங்கு மொழி சமசுகிருதத்தில் இருந்து தோன்றவில்லை. இந்தியாவில் ஆரியமொழி நுழைவதற்கு முன்னர் இந்தியா முழுவதும் திராவிட மொழி பேசப்பட்டு வந்தது. முழுவதுமாக நிறுவப்படாது இருப்பினும், சிந்து சமவெளி நாகரீகம் திராவிட மொழி நாகரீகமாக இருப்பதற்கு அதிக அடிப்படை வாய்ப்புகள் உள்ளன. + +தெலுங்கு பழந்திராவிட மொழியில் இருந்து தோன்றிய ஒரு மொழி. இது தக்காண உயர்பீட நிலப்பகுதியில் உள்ள மக்கள் பேசும் தென்-நடு திராவிட மொழித் துணைக்குடும்பத்தைச் சார்ந்தது. இக்குடும்பத்தைச் சார்ந்த மற்ற மொழிகள் கொண்டி, கூய், குவி போன்ற தெலுங்குடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய மொழிகள் ஆகும். இந்தியாவில் மிக அதிகளவில் பேசப்படும் திராவிட மொழி தெலுங்கே. + +தெலுங்கு மற்ற மொழிகளின் சொற்களை மிகவும் எளிதாக ஏற்றுக்கொள்ளும். சமசுகிருத மொழி தெலுங்கு இலக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்தியது போல், வேறெந்த மொழியும் தாக்கம் ஏற்படுத்தியதில்லை என்று கூறுவர் (இதேக் கருத்தை வங்காளி, மராத்தி மொழியாளர்களும் கூறுவர்). தெலுங்கு மொழியில் பல எழுத்துக்கள் முக்கியமாக ஹகரம் கலந்த எழுத்துக்கள் சமசுகிருத மொழிக்காகவே நெடுங்கணக்கில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சமசுகிருத்தின் தாக்கம் அனைத்து இந்திய மொழிகளிலும் உள்ளது தான். உருது மொழி மற்றும் ஆங்கில மொழி சொற்களைக்கூட தெலுங்கு மொழி ஏற்றுக்கொண்டுள்ளது. + +கி.பி. 1000 ஆண்டுக்கு முந்டைய கல்வெட்டுகளில் "தெலுகு" என்ற சொல் காணமுடியாது. 11வது நூற்றாண்டில் "தெலுங்கு பூமிபாலுரு" (తెలుంగు భూమిపాలురు), "தெல்கரமாரி" (తెల్గరమారి), "தெலிங்ககுலகால" (తెలింగకులకాల), "தெலுங்க நாடோளகண மாதவிகெறிய" (తెలుంగ నాడోళగణ మాధవికెఱియ) போன்ற குறிப்புகள் காணக்கிடைக்கின்றன. + +11ஆம் நூற்றாண்டுக்கு பிறகே "தெனுகு" என்ற சொல் வழக்கில் வரத் துவங்கியது. சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். திரிலிங்கம் என்பது காலேஷ்வரம், ஸ்ரீசைலம், திரக்ஷராமம் முதலிய மூன்று சிவத்தலங்களை குறிக்கும். இம்மூன்று இடங்களும் தெலுங்கு தேசத்தின் எல்லைகளாக அமைந்த காரணத்தினால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் என சிலர் கருதுகின்றன்ர். சிலர் திரிலிங்கம் என்ற சொல்லில் இருந்து 'தெலுங்கு (தெலுகு)' தோன்றியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். ஆனால் இது பின்னர் எழுந்த பண்பாட்டு அடிப்படையில் தரும் காரணம் எனவும் "தெலுகு" என்ற சொல்லே பழமையானது எனவும் வரலாற்றாசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 12ஆம் நூற்றாண்டில் "நவலக்ஷ தெலுங்கு" (నవలక్ష తెలంగు) என்ற குறிப்பு காணப்படுகிறது. + +தெலுங்கு என்ற சொல்லின் தோற்றம் குறித்து பலவாறாகவும் கூறப்பட்டுள்ளது. "தெலு" என்றால் வெண்மை என்று பொருள் எனவே வெண்மையான மக்கள் என்ற பொருளில் தெலுங்கு தோன்றியிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதே நேரத்தில் "தென்" – என்ற பழந்திராவிட சொல்லிலிருந்து, "தென்னகத்தின் மக்கள்" என்ற பொருளில் தெலுங்கு தோன்றி இருக்கலாம் எனவும் கருதுவது உண்டு. + +எது எவ்வாறாக இருப்பினும், தெலுங்கு (తెలుగు – "தெலுகு") தேசத்தின் பெயர் தெலிங்க தேசம் அல்லது தெலங்க தேசம் என்றிருந்திருக்க வேண்டும். எனவே அதன் வேர்ச்சொல் "தெலி" (తెలి – "பிரகாசம்") ஆகவும் இருக்கலாம். தெலுங்குப்பண்டிதர்கள் தெலுங்கு (తెలుగు – "தெலுகு") என்பதன் சரியான வடிவம் "தெனுகு" எனக் கூறுகின்றனர். தெனுகு என்றால் தேன் போன்ற மொழி என்று பொருள் (తేనె (தேனெ) – "தேன்"). தேன் போன்ற இனிய மொழி ஆகையால் "தெனுகு" என்பது பிற்காலத்தில் "தெலுகு" என ஆகியிருக்கலாம் என்பது இவர்கள் கருத்து + +தெலுங்கு மொழியில் வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாகப் பிரிக்கலாம் + +பழங்கால பிராகிருத/சமசுகிருத பிராமி கல்வெட்டுகளில், தெலுங்கு இடம் மற்றும் பெயர்கள் காணப்படுகின்றனர். இதிலிருந்து ஆந்திர தேசத்தை ஆண்ட சாதவாகனர்கள் பிராகிருதத்தை தாய் மொழியாகக் கொண்டவர்கள் எனத்தெரிகிறது. தெலுங்குச் சொற்கள் மகாராஷ்டிரி பிரகிருதத்தில் எழுதப்பட்ட பாடல்களில் காணப்படுகின்றன. + +தெலுங்கு மொழ���, கல்வெட்டுகள் முதன்முதலாக ஆந்திரத்தின் கடப்பா மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது கி.பி 575ஆம் காலத்திய கல்வெட்டாகும். இக்கல்வெட்டு ரேனாட்டி சோழர்களால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர்களே முதன் முதலாக சமஸ்கிருதத்தை விடுத்து உள்ளூர் மொழியான தெலுங்கில் கல்வெட்டுக்களை வெளியிட்டனர். இவர்களுக்குப் பிறகு பிற சாளுக்யர்களும் கல்வெட்டுகளைத் தெலுங்கில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இக்காலத்தில் தான் தெலுங்கு இலக்கியம் தோன்ற ஆரம்பித்தது. தெலுங்கில் எழுதப்பட்ட முதல் இலக்கியமாகக் கருதப்படும் "நன்னய்யரின் மகாபாரதம்" இக்காலகட்டத்திலே எழுதப்பட்டது. மேலும், இதே காலத்தில் தெலுங்கு மொழியில் பல்வேறு ஒலியியல் வேறுபாடுகள் ஏற்பட்டன. + +இக்காலக்கட்டத்தில் இலக்கிய தெலுங்கு பேச்சு வழக்கில் இருந்து மிகவும் வேறுபடத்துவங்கியது. ஒரு நிலையில் கேதனர் என்ற புலவர் மக்கள் பயன்படுத்தும் சொற்களை இலக்கியங்களில் கையாளாகாது, எனக்கருத்தை வெளியிட்டார். மேலும் பல வடமொழி நூல்கள் தெலுங்கில் மொழிப்பெயர்க்கப்பட்டது. மேலும் தெலங்காணா பகுதிகளில் சுல்தான்களின் இதே காலக்கட்டதில்தான் துவங்கியது + +இக்காலத்தில், தெலுங்கு மற்ற இந்திய மொழிகளைப் போலவே பலவிதமான வேறுபாடுகளை சந்தித்தது. இசுலாமிய தாக்கத்தின் காரணமாக தெலங்காணா வழக்கு மற்றப் பொதுத் தெலுங்கு வழக்கிலிருந்து மிகவும் வேறுபட்டுவிட்டது. தெற்கில் கோதாவரி நதி பகுதிகளில், விஜயநகர அரசு 1336 முதல் 1600 வரை மிகவும் செல்வாக்குடன் திக்ழ்ந்தது. விஜய நகர அரசர் கிருஷ்ண தேவராயரின் காலம் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என கருதப்படுகிறது. தெலுங்கு இலக்கியம் இவரது காலத்தில் மிகவும் எழுச்சியுடன் திகழ்ந்தது. விஜய நகர அரசின் வீழ்ச்சிக்கு பிறகு தெலுங்கு பேசும் பகுதிகளில் இசுலாமிய ஆட்சி நிறுவப்பெற்றது. இதன் காரணத்தால் பல பாரசீக மற்றும் உருது சொற்களும் தெலுங்கு மொழியில் கலந்தன. + +20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் காரணமாக, ஆங்கிலத்தில் தாக்கம் தெலுங்கு மொழியில் ஏற்பட்டது. குறிப்பாகச் சென்னை மாகாணத்தில் இத்தாக்கம் உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் பல்வேறு நவீன கால இலக்கியங்கள் தோன்ற துவங்கின. + +ஆனால் பேச்சு வழக்குக்கும் எழுத்து வழக்குக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்தன. இதைக் கருத்தில் கொண்டு தெலுங்கை, மக்கள் பேச்சு மொழிக்கு ஒட்டிய நடையில் தற்போது எழுதி வருகிறார்கள். +தெலுங்கு மொழி, இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் பேசும் மொழி. மேலும் தமிழ் நாடு, கர்நாடகம், ஒரிசா முதலிய பக்கத்து மாநிலங்களிலும் பேசப்படுகிறது..விஜயநகரப் பேரரசின் காலத்தில் தமிழ் நாட்டில் தோன்றிய நாயக்கர் ஆட்சி ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. நாயக்கர்கள் ஆட்சியின் போது ஆந்திராவில் இருந்து பல்வேறு மக்கள் தமிழ்நாட்டில் குடியேறினர். + +மேலும் பஹ்ரேய்ன், இங்கிலாந்து, ஃபிஜி, மலேசியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளிலும் இம்மொழி பேசப்படுகிறது. + +தெலுங்கு மொழி ஆந்திர மாநிலத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாகும். மேலும் இந்திய அரசால் ஏற்கப்பட்டுள்ள 22 மொழிகளில் தெலுங்கும் ஒன்று. இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் ஆட்சிப்பகுதியைச் சேர்ந்த யானம் பகுதியின் ஏற்புபெற்ற மொழியாகவும் இது விளங்குகிறது. + +பேரத், தசரி, தொம்மரம், கொலரி, கமதி, கொண்டாவ், கொண்ட-ரெட்டி, சலேவரி, தெலங்காணம், வடகம், ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, ராயலசீமா, நெல்லூர், குண்டூர், வடரி மற்றும் ஏனாடு ஆகியவை தெலுங்கு மொழியில் வெவ்வேறு வட்டார வழக்குக்கள் ஆகும். + +தமிழ் நாட்டில் பேசும் தெலுங்கு மொழியை, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலம் வட்டார வழக்கென பிரிக்கலாம். மேலும், விருதுநகர், புதுக்கோட்டை, கடலூர், மதுரை, தஞ்சாவூர் பகுதிகளில் தெலுங்கு பேசுவோர் உள்ளனர். தமிழ்நாட்டில் பேசும் தெலுங்கில் அதிக அளவில் தமிழ் மொழி கலப்பைக் காண முடியும். + +இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்ததை அடுத்து தெலுங்கு மொழிக்கு செம்மொழி என்னும் சிறப்புநிலை வேண்டுமென கோரிக்கையை இந்திய அரசுக்கு விடப்பட்டு அது ஏற்கொள்ளப்பட்டது. தற்போது தெலுங்கு, கன்னடம் ஆகிய இருமொழிகளும் செம்மொழிகள் என அறிவிக்கப்பட்டுள்ளன. + +தெலுங்கு எழுத்துமுறை அபுகிடா வகையைச் சார்ந்தது. தெலுங்கு எழுத்துக்களை கோலமி போன்ற திராவிட மொழிகளை எழுதவும் அரிதாக பயன்படுத்தப்படுகிறது. தெலுங்கு எழுத்துக்கள் பிராமி எழுத்துக்களில் இருந்து உதித்த பல்லவ கிரந்த எழுத்திக்களில் இருந்து தோன்றியது. + +தெலுங்கில் ��ிராவிட மொழிகளுக்கே உரிய எகர ஒகர ஒலியுடன் சமஸ்கிருததில் உள்ள அனைத்து உயிரெழுத்துகளும் உள்ளன். + +అ ఆ ఇ ఈ ఉ ఊ ఋ ౠ ఌ ౡ ఎ ఏ ఐ ఒ ఓ ఔ అం అః + +தெலுங்கு சமசுகிருத நெடுங்கணக்கில் உள்ள அனைத்து எழுத்துக்களுடன், திராவிட மொழிகளுக்கு உரிய ளகரம் மற்றும் றகரமும் கொண்டுள்ளது. தெலுங்கு மொழியில் பழங்காலத்தில் 'ழ' கரம் இருந்தது. ஆனால் தற்சமயம் அவ்வொலி மறைந்து விட்டது. +క ఖ గ ఘ ఙ +చ ఛ జ ఝ ఞ +ట ఠ డ ఢ ణ +త థ ద ధ న +ప ఫ బ భ మ +య ర ఱ ల ళ +వ స శ ష హ + +தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழியாகப் பலரால் கருதப்படுகிறது. தெலுங்கில் அனைத்துச் சொற்களும் இத்தாலிய மொழியைப் போல் உயிரெழுத்துடன் முடிவடைகிறது. எனவே தான் இம்மொழியின் இனிமையைக்கருதி ஆங்கிலேயர்கள் இதை "கிழக்கின் இத்தாலிய மொழி" ("Italian of the East") என அழைத்தனர். தெலுங்கில் ஒரு பெயர் அறியப்படாத கவி இவ்வாறு கூறியுள்ளார். + +தெலுங்கு இலக்கியத்தை கீழ்க்கண்ட காலங்களாக பிரிப்பர்: + + +தெலுங்கு மொழியில் முதல் இலக்கியமாக நன்னய்யரின் (1022–1063) மகாபாரதம் கருதப்படுகிறது. இவரது காலத்துக்கு பிறகு திக்கன்னா, எர்ரன்னா போன்ற பல்வேறு புலவர்கள் தெலுங்கு இலக்கியம் செறிவடைந்தது. பிறகு ஸ்ரீநாதர் (1365–1441) என்பவர் பிரபந்த இலக்கியத்தை பிரபலமாக்கினார். வேறு சிலர் வடமொழி நூல்களை தெலுங்கு மொழியில் மொழிப்பெயர்த்தனர். ஸ்ரீநாதருக்கு பிறகு போதனா (1450–1510), ஜக்கன்னா, கௌரனா போன்றோர் சமயம் தொடர்பான இலக்கியங்களை எழுதினர். + +எனினும், பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர அரசர் கிருஷ்ணதேவராயரின் காலம் தான் தெலுங்கு இலக்கியத்தின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது. விஜயநகர காலத்தில் தஞ்சாவூர் மற்றும் மதுரையில் பல்வேறு தெலுங்கு இலக்கியங்கள் தோன்றின. பிறகு சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டதால் தெலுங்கு இலக்கியத்தில் சற்று தொய்வு ஏற்ப்பட்டது. இக்காலக்கட்டத்தில் தான் தியாகராயர் தன்னுடைய கீர்த்தனைகளைத் தெலுங்கு மொழியில் எழுதினார். + +20ஆம் நூற்றாண்டுகளில் மேலை நாட்டு இலக்கியங்களின் தாக்கத்தால் சிறுகதை, நாவல் போன்ற நவீன கால இலக்கியங்கள் தோன்றின. + +எதிர் + + + + + + +மலையாளம் + +மலையாளம் ("Malayalam" , "மலயாளம்") தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிக��ில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரப்பூர்வ மொழியாகும். தமிழினை மூல மொழியாக கொண்டு தோன்றிய மலையாளம், நாளடைவில் தனி மொழியாக உருப்பெற்றது. சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர். + +தமிழ், தோடா, கன்னடம் மற்றும் துளுவுடன் இணைந்து மலையாளம் தென் திராவிட துணைக்குடும்பத்தை சார்ந்தது ஆகும். தமிழுடன் மிகுந்த ஒற்றுமையுடைய மொழி மலையாளம். மலையாளம் ஆதித் தமிழ்-மலையாளம் என்ற கூட்டுமொழியிலிருந்து நான்காம் அல்லது ஐந்தாம் நூற்றாண்டுகளில் வேறுபடத் துவங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழிலிருந்து மிக வேறுபட்டு மலையாளம் ஒரு தனி மொழியாக உருப்பெற்றது. ஆட்சி மொழியாகவும் அவை மொழியாகவும் இருந்த தமிழின் பெருந்தாக்கம் மலையாளத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தது. பின்னர் நம்பூதிரிகளின் வரவால், வடமொழி ஆதிக்கம் நிலவியது. அரேபியர்களுடான வணிகம், போர்த்துகீசியர் வரவு ஆகியவற்றால் ரொமானிய மற்றும் செமிட்டிக் மொழியின் தாக்கத்தையும் மலையாளத்தில் உணரலாம் + +பழங்காலத்தில் கேரளம் என்பது சேர நாடாகத் தமிழக இலக்கியங்களில் அறியப்படுகிறது. + +மலையாளம் என்ற சொல்லுக்கு 'மலை மற்றும் கடல் சூழ்ந்த' என்று பொருள். அதாவது மலை + ஆளம்(கடல்) என்பதே மலையாளமாக ஆனது என சில வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். முதலில் இந்த சொல் மலைகளுக்கும் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை குறிக்க பயன்பட்டு பின்னர் அந்த நிலப்பகுதியில் பேசப்பட்ட மொழிக்கும் பெயராயிற்று என்று கருதப்படுகிறது. + +மலையாள மொழி தமிழும் வடமொழியும் சேர்ந்து தோன்றிய மொழி. இதை நிராகரிப்பதற்காக இரண்டு விதமான வாதஙகள் வைக்கப்பட்டன. ஒன்று மலையாளம் மலைநாட்டுத்தமிழில் இருந்து தோன்றியது இன்னொன்று பழந்திராவிடமொழியிலிருந்து தமிழுடன் ஒத்த மொழியாக உருவாகியது. + +மலையாள மொழியைக் குறித்து முதல் முதலில் ஆய்வு செய்தவர் அறிஞர் கால்டுவெல் அவர்கள். இவரைப் பொறுத்த வரையில் மலையாளம் தமிழின் ஒரு பிரிவு என அபிப்ராயம் தெரிவித்தார். புருஷபேத நிராசம், சமஸ்கிருத பாஹுல்யம் முதலியவற்றால் தமிழிலிருந்து மலையாளம் தமிழிலிருந்து வேறுபட்டு நிற்கிறது என கருத்து தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து ஏ.ஆர்.ராஜராஜவர்ம்மாவும் இதேபோன்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இவருடைய கருத்தின்படி, மலைநாட்டிலே பேசப்பட்டு வந்தது தமிழே. தமிழ் செந்தமிழ், கொடுந்தமிழ் என் இரண்டு வகையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. பலவகை கொடுந்தமிழ்களில் ஒன்றுதான் மலையாளமாக உருமாறியது. மலைநாட்டில் வழங்கி வந்த கொடுந்தமிழே சமஸ்கிருதத்தின் தாக்கத்தினால் தனி மொழியாக ஆனது என்பது ராஜராஜவர்ம்மாவின் கருத்தாகும். + +ஆனால் வி.கே.பரமேசுவரன் அவர்களின் கருத்துப்படி தமிழும் மலையாளமும் தனித்த மொழிகளாகும். கேரளத்தில் ஏற்பட்ட சோழ, பாண்டிய நாடுகளின் ஆதிக்கத்தால் மலையாளம் தமிழால் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அரசு சாசனங்களிலும், ஆட்சிமொழியாகவும், உயர்குடி மக்களின் மொழியாகவும் செந்தமிழே வழங்கிவந்தது. ஆனால் இந்தத் தாக்கம் அரசர்களிடம் மட்டுமே இருந்தது. மக்களிடம் மலையாளமே வழங்கி வந்ததாகவும் இவர் கருதுகின்றார். எனவே பிரதான திராவிட மொழியான தமிழுக்கு மலையாளத்துக்கு உள்ள பந்தம் மிகவும் முக்கியமானது ஆகும். + +ஆட்சியாளர்களின் மொழியாக ஒரு காலத்தில் கேரளத்தில் பயன்படுத்தப்பட்ட தமிழ் தாக்கம் மலையாளம் காண்பதில் வியப்பொன்றும் இல்லை. பிராமண குடியேற்றங்களினால் இந்தோ-ஆரிய மொழிகளின் தாக்கமும், அரபு மொழியின் தாக்கமும், ஐரோப்பிய தேசங்களின் ஆக்கிரமப்பினால் ஐரோப்பிய மொழிகளின் தாக்கமும் மலையாளத்தில் சில மற்றங்களை ஏற்படுத்தியுள்ளன + +மலையாளம் என்ற சொல் ஒரு காலத்தில் நாட்டின் பெயரை மட்டும் குறித்தது. எனவே மலையாள நாட்டில் பேசப்பட்டு வந்த மொழியாகையால் மலையாளம் என்பது மொழியின் பெயராக ஆகியிருக்கலாம். என்றாலும் இம்மொழி மலையாண்ம என்ற பெயராலேயே அறியப்பட்டு வந்தது. நாட்டின் பெயர் மொழியின் பெயர் ஆனவுடன், பழைய மலையாள மொழியின் பெயரை குறிக்க சிலர் மலையாண்ம என்ற சொல்லை பயன்படுத்தினர். + +மொழியியல் வல்லுனர்கள் கருத்து பின்வருமாறு. மலையாளம் தமிழிலிருந்தே பிற��்ததாகும். எல்லா மொழிகளையும் போல் தமிழுக்கும் வட்டார வழக்குகள் உள்ளது. இது ஒரு விதமான கொடுந்தமிழிலிருந்து தான் பின்னர் மலைநாட்டின் மொழியான மலையாளம் உருவம் பெற்றது. இவ்விதமான மாற்றம் நிகழ்ந்ததற்கு பின்வருபவன காரணமாகத் திகழ்ந்தன: + + +மலையாள மொழியின் வரலாற்றில் நிலையான பாதிப்பை ஏற்படுத்திய காரணங்களில் முதன்மையானது நம்பூதிரிமார்களின் சமஸ்கிருத பிரச்சாரமாகும். மேற்குடி சமூக-அரச சம்பவங்கள் இந்த ஒரு மாற்றத்தின் தாக்கத்தை கூட்டுவதாக இருந்தது. பாண்டிய சோழ சேர அரசர்களின் அதிகாரம் தென்னிந்தியாவில் குறைந்ததும், மலையாள நாட்டில் பெருமக்கன்மாரின் ஆட்சி ஏற்பட்டதும் தமிழக மக்களுடான வணிக உறவுகளில் குறைவுகள் ஏற்பட்டன. கிழக்கே இருந்த மலையும் தமிழ்நாட்டுக்கும் மலையாள நாட்டுக்குமான தூரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. இந்த காரணங்களினால் மொழியில் வட்டார வேறுபாடுகள் அதிகமாயின. மேலும் மருமக்கன்தாயம், முன்குடுமி, உடை வேறுபாடுகள் போன்றவை பண்பாட்டு வேறுபாடுகளும் தமிழகமக்களையும் மலையாள மக்களையும் வேறுபடுத்தி பிரித்தது. + +கி.பி ஆறாம் நூற்றாண்டுகளில் கேரள கிராமங்களில் பிராமண சமூகங்கள் குடியேறத் துவங்கின. தங்களுடைய உடைகளையும் சில ஆசார அனுட்டானங்களையும் திராவிட மக்களுக்க்காகப் புறக்கணித்ததினால் அவர்களுக்கு மலைநாட்டில் ஒரு நீங்காத இடம் கிடைக்குமாறு செய்தது. பிராமணர்களிடமிருந்தும் சமஸ்கிருதம் பொதுமக்களின் மொழியில் கலந்தது. இதனால் கொடுந்தமிழும் சமஸ்கிருதமும் இணைந்து ஒன்று சேர்ந்து மலையாண்ம என்ற மொழியாக உருவம் பெற்றது. + +மலையாள நெடுங்கணக்கில் வடமொழி நெடுங்கணக்கில் உள்ள எழுத்துக்களோடு திராவிட ஒலிகளான எ,ஒ,ற,ள்,ழ ஆகியவையும் மலையாள நெடுங்கணக்கில் உள்ளன. மேலும் 'ன'கரம் முற்காலத்தில் இருந்து, ஆனால் 'ந' ,'ன' கரத்துக்கான வேறுபாடுகள் மறைந்ததால், 'ன'கரம் மறைந்து விட்டது. + +உயிரெழுத்துக்கள் சேர்க்கப்படக்கூடாத சில்லெழுத்துக்கள். இவை அனைத்தும் ஒற்றெழுத்துக்களாக கருதப்படவேண்டும் + +திராவிட மொழிகளின் வரி வடிவங்கள் பிராமி எழுத்திலிருந்தே தோன்றியது ஆகும். +இந்த பிராமி எழுத்துமுறை திராவிட மொழிகளை எழுதுவதற்காக சில மாற்றங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்டு வந்தது. இந்த பிராமி எழுத்துமுறையே பிற்காலத்தில் தமிழகத்திலும் மலைநாட்டிலும் வட்டெழுத்தாக பயன்பட்டுவந்தது. திராவிட ஒலிகளுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக வட்டெழுத்து அமைந்திருந்தது. இதனால், சமஸ்கிருதம் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது. பல்லவ கிரந்தம், தமிழ் கிரந்தம் என்ற கிரந்த எழுத்து முறைகளில் பழமையான பல்லவ கிரந்தமே கேரளத்தில் அறிமுகப்படுதப்பட்டது. + +சமஸ்கிருததில் பிராசரத்தினால் சமஸ்கிருத சொற்கள் பயன்பாடு அதிகரித்தது. ஆனால் சமஸ்கிருத ஒலிகளை குறிக்க வட்டெழுத்து போதுமானதாய் இல்லை. எனவே திராவிட சொற்களை வட்டெழுத்திலும் சமஸ்கிருத சொற்களை கிரந்தம் கொண்டும் எழுதப்பட்ட நூல்கள் பதினைந்தாம் நூற்றாண்டில் இவ்வாறாக காணப்பட்டன. மணிப்பிரவாள இலக்கியத்தை இயற்றிவர்களும் இந்த முறையினேயே பின்பற்றிவந்தனர். இப்போதைய மலையாள எழுத்துமுறை துஞ்சத்து இராமானுசன் எழுத்தச்சன் என்பவரால் இயற்றப்பட்டதாக கருதப்படுகிறது. கலப்பு எழுத்துமுறைகளால் ஏற்பட்ட வேறுபாடுகளை தவிர்க்க கிரந்த எழுத்திலிருந்து திராவிட ஒலிகளுக்குறிய எழுத்துக்களோடும் தற்போதை மலையாள எழுத்துமுறையினை நிறுவினார். + +மூல மொழியில் வரலாற்றுரீதியாக, வந்துசெல்லும் உள்ளார்ந்த வேறுபாடுகளைக் கொண்டு மாத்திரம் ஒரு மொழியினைத் தனித்த, சுதந்திர மொழியாகக் கொள்ளல் ஆகாது. எனினும், இவ்விதமான மாற்றங்கள் அந்த மொழியின் தோற்றத்திலும், இலக்கணத்திலும் ஏற்படுத்தும் நிரந்தர மாற்றங்களே மூல மொழியிலிருந்து அதை ஒரு சுதந்திரமான தனித்த மொழியாக உருமாற்றி அடையாளப்படுத்துகிறது. +மலையாள வையாகரணனும் கேரளபாணினி என்றழைக்கப்படும் ஏ. ஆர். ரவி வர்ம்மாவின் கருத்துப்படி தமிழ் மொழியில் இருந்து மலையாளம் இவ்விதமாக வேறுபடுகிறது. அவையாவன: + +அதாவது, மெல்லினத்தை ஒட்டி வரும் இன எழுத்துக்கள், மெல்லினமாகவே மாறுதல். + +மலையாள இலக்கியத்தின் ஆரம்ப காலம் நாடோடி பாடல்கள், தமிழ் - சமஸ்கிருத மொழிகளுடன் துவங்கியது. . மலையாளத்தில் கிடைத்திருக்கும் மிகப்பழைய கல்வெட்டு சேரப்பெருமக்கன்மார்காளில் ராஜசேகரன் பெருமாளின் காலத்தியதாகும். கி.பி 830இல் எழுதப்பட்டதாக இந்த வாழப்பள்ளி கல்வெட்டு கருதப்படுகிறது. கிரந்த எழுத்துக்களில் உள்ள இந்த கல்வெட்டு, சேரப்பெருமக்கன்மார்களுடைய வம்சாவளியும் நிலவிவரங்களும் (കാ���്‍ഷികവിവരങ്ങളും) பதிவாகப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் வளர்ந்து வந்த மலையாள இலக்கியத்தை இவ்விதமாக பிரிக்கலாம். + + +பாட்டிலக்கியத்தில் பழமையானது "சீராமன்" எழுதிய "ராமசரிதம்" ("രാമചരിതം") ஆகும். பெயரில் குறிப்பிட்டது போல் இது ராமனின் கதையாகும். இதில் யுத்தகாண்டத்தின் சம்பங்களே பிரதானமாகவும் விவரமாகவும் கூறப்பட்டுள்ளது. வடமொழி காவிய முறையில் இருந்து விலகி உள்ளூர் முறையில் எழுத்தப்பட்ட காவிய என்ற நிலையில் ராமசரிதம் சிறந்த படைப்பாகும். லீலாதிலகத்திலும் மற்றும் அதைச்சார்ந்த பாட்டு காவியங்களையும் படித்தால் ஒரு தமிழ் படைப்பென்று பொது மக்களுக்கு தோன்றும். தமிழ் கலப்பில் இருந்து விலகி முற்றிலும் மலையாள மரபில் இயற்றப்பட்ட காவியம் என்றால் அது கண்ணஸ்ஸராமயணத்தில் காணலாம். +அதிதே வனிலமிழ்ந்த மனகாம்புடய சீரமானன்பினோடியற்றின தமிழ்கவி வல்லோர் - என தமிழ் கலப்போடு உள்ளது ராமசரிதம் + +நரபாலகர் சிலரிதின் விறச்சார் நலமுடெ ஜானகி சந்தோஷிச்சாள் அரவாதிகள் பயமீடுமிடி த்வனியால் மயிலானந்திப்பதுபோலே - என தெளிவான மலையளத்தில் உள்ளது கண்ணஸ்ஸராமாயணம்‍ +ராமசரிதம் எழுதப்பட்ட 12ஆம் நூற்றிண்டிலேயே வைகாசிகதந்திரம் என்ற மணிப்பிரவாள நூல் எழுதப்பட்டது. பொது மணிப்பிரவாளப் படைப்புகள் சமஸ்கிருத விபக்திபிரயோகங்களும் (വിഭക്തിപ്രയോഗങ്ങളും) தமிழ்ச் சொற்களும் மற்றும் பழைய மலையாளச் சொற்களும் சேர்ந்தவையாக இருந்தன. சமஸ்கிருதத்தின் கூடுதல் தாக்கமுடைய சுகுமாரகவின் ஸ்ரீகிருஷ்விலாசமும், சங்கராச்சாரியருடைய தோத்திர மரபில் இயற்றப்பட்ட நூல்களும் இதே காலக்கட்டதில் பிரபலமாக இருந்தன. வில்வங்கள சுவாமியாரின் சமஸ்கிருத தோத்திரங்களும் மணிப்பிரவாளத்தில் வசுதேவஸ்தவம் போலுள்ள படைப்புகளும் 12ஆம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டவையாகும். + +கேரள காவிய மரபு தெரிந்தது செறுச்சேரின் கிருஷ்ணகாதையில் ஆகும். தமிழிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் கலப்பதில் இருந்து இது அகன்று நின்றது. நாடோடிப் பாடல்களும் தெளிவான மலையாள மொழியும் சேர்ந்த கிருஷ்ணகாதை மலையாள கவிதைகளுக்கு ஒரு புதிய பிறவி நல்கியது. தற்கால மலையாள கவிகளான வள்ளத்தோள், வைலோபிள்ளி, பாலாமணியம்ம போன்றவர்களுடைய கவித���களில் கிருஷ்ணகாதையின் தாக்கத்தை காணலாம். + +தனித்த மலையாள மரபு என்ற நிலையில் மலையாள இலக்கியத்தில் தூதுகாவியங்களும் சம்பூக்களும் இவ்வகையில் சேரும். + +தற்கால இலக்கியக்கூறுகளை ஈர்த்துக்கொள்வதின் மூலம் மலையாள இலக்கியத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆங்கிலேயரின் காலத்தில், மற்ற ஐரோப்பிய மொழிகளைக் குறித்த அறிவு, அப்போதைய படைப்புகள் முதலியவற்றின் தாக்கம் மலையாள இலக்கியத்தில் சில நவீன சிந்தனைகளின் தோற்றத்துக்கு வழிவகுத்தது. அகராதிகள், இலக்கண நூல்கள், பத்திரிக்கைகள் முதலியவை இந்த வளர்ச்சிக்கு உதவின. ஆங்கிலேயர் காலத்துக் கல்விமுறைகள் மூலம் பெறப்பட்ட அறிவியல், சர்வதேசக் கருத்துகள் ஆகியவை மலையாள இலக்கியத்தின் கதியை நிர்ணயித்தது. + +உரைநடை இலக்கியமே தற்கால மலையாள இலக்கியத்தின் முகாந்திரமாக இருந்தது. திருவிதாங்கூர் மகாராஜாவின் ஆயில்யம் திருநாள் அன்று ராமவர்ம்மாவின் "பாஷாசாகுந்தளம்" ("ഭാഷാശാകുന്തളം") என்ற காளிதாசரின் நூலுக்கான உரை வெளியிடப்பட்டது. சில காலத்திலேயே மலையாள இலக்கியம் உரைநடையை நோக்கி வழிமாறச்செய்தது இந்தச்செயல். பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்ப்பதென்பது ராமவர்மாவின் காலம் முதல் இன்று வரை தொடர்கிறது. + +ஹெர்மன் குண்டர்ட் என்ற ஜெர்மன் பாதிரியாரின் மிகுந்த உழைப்பினால் மலையாளத்தின் முதல் அகராதியும் இலக்கண நூலும் இயற்றப்பட்டன. இந்த நூல்களை ஆதாரமாக கொண்டுதான் 19ஆம் நூற்றாண்டில் எண்ணற்ற நூல்கள் எழுந்தன. பி.கோவிந்தவிள்ளாவின் "பாஷாசரித்ரம்" ("ഭാഷാചരിത്രം") பிரசித்தி பெற்றதும் 19ஆம் நூற்றாண்டில் தான். கேரளவர்மாவின் தாய்மாமன் ஏ.ஆர்.ராஜராஜவர்மாவின் படைப்புகள் காதல் கதைகளுக்கும் (റൊമാന്‍റിസം) பிற உயர்தரமான (നിയോ-ക്ലാസിക്) இலக்கியத்துக்கும் வித்திட்டன. + +கேரள பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப்பிரிவு நடத்திய ஆய்வில், 12 வட்டார வழக்குகள் மலையாளத்துக்கு இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொக்கன்(திருவிதாங்கூர்), மத்திய கேரளம் (கோட்டயம்), திரிச்சூர், மலபார் ஆகிய நான்கு வழக்குகள் முதன்மையாக வழக்குகளாகும். இவற்றுள் கோட்டயம் வழக்கின் தாக்கம் எழுத்து மொழியில் அதிகமாக உள்ளது. இதற்கு அச்சுப்பதிப்பு கோட்டயம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலேயே முதலில் தோன்றியதே காரணமாகும். + +மலையாள மொழி மிகவும் அதிக அளவில் ஏற்றுக்கொண்டது தமிழ் மற்றும் வடமொழியே ஆகும். இதற்கு திராவிட பின்புலமும், பிராமண தாக்கமுமே காரணம் ஆகும். உலகின் பிற மொழிகளின் கூறுகளையும் மலையாள மொழியில் காணலாம். ஆதி காலம் தொட்டே, கேரளத்தின் வணிக உறவினால் இது நிகழ்ந்துள்ளது. இந்தி,உருது, ஐரோப்பிய மொழிகள், சீனம் ஆகியவற்றின் பல கூறுகளையும் மலையாளம் நல்கியுள்ளது. + +மலையாள யூனிகோடு U+0D00 முதல் U+0D7F வரை + +ஆங்கிலத்தில் மலையாளம் என்பது இருவழி ஒக்கும் சொல் (Palindrome) ஆகும். Malayalam என்பதை முன்னிருந்து பின்னாக படித்தாலும், பின்னிருந்து முன்னாக படித்தாக ஒரே சொல் வருவதை கவனிக்க. + + + + + + +கன்னடம் + +கன்னடம் ( , கந்நட, Kannada) தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 36 மில்லியன் மக்களால் பேசப்படும் ஒரு திராவிட மொழியாகும். பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில், இது திராவிட மொழிகளுள் மூன்றாவது பெரிய மொழியாகும். மேலும் தமிழுக்கு அடுத்தப்படியாக மிகப் பழமையான இலக்கியங்களைக் கொண்டுள்ள திராவிடமொழி கன்னடமே. இந்தியாவின் 22 தேசிய மொழிகளுள் இதுவும் ஒன்று. 2008ம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் கன்னடம் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. + +இம்மொழியின் எழுத்து வடிவம் தெலுங்கு மொழியின் எழுத்து வடிவத்தை ஒத்து இருந்தாலும் இலக்கணம்,சொற்கள் அடிப்படையில் தமிழ்தான் மிகவும் நெருங்கியதாகும். + +கன்னட மொழியானது மூல தென் திராவிட மொழியிலிருந்து பிரிந்ததாக எண்ணுகின்றனர். எப்பொழுது இப்பிரிவு நிகழ்ந்தது என்று கூறப் போதிய சான்றுகள் இல்லை. பேச்சு மொழியாக 2000 ஆண்டுகளேனும் இருந்திருக்க வேண்டும். பிராகிருத, சமசுகிருத மொழிகளின் தாக்கத்தை இம்மொழியில் காணலாம். மொழியின், அகரவரிசை நெடுங்கணக்கில் வல்லின மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் சமசுகிருதம் போல நான்கு வேறுபாடுகள் உள்ளனவாக அமைத்துக்கொண்டனர். இவ்வமைப்பு எப்பொழுதிலிருந்து நிலவி வருகின்றதெனத் தெரியவில்லை. + +கல்வெட்டுக்களில் மிகவும் தொன்மையானது கி.பி 450 ஐச் சார்ந்த ஹல்மிதி கல்வெட்டாகும். இது "ஹளே கன்னடம்" (= பழைய கன்னடம்) மொழியில் உள்ளது. பதாமி மலையில் கி.பி. 543 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் சமசுகிருத மொழி கல்வெட்டு ஒன்று உள��ளது. பழைய கன்னடத்தில் தமிழ் ழகரமும், தமிழ் வல்லின றகரமும், இரண்டுசுழி னகரமும் இருந்தன. தென்கன்னடப் பகுதியில் (தக்ஷின் கன்னடாவில்) 1980ல் தான் னகரத்தை விலக்கினார்கள். + +செப்பேடுகளில்: + +மேற்கு கங்கர் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 444) எழுதப்பட்டதாகக் கருதப்படும் தும்புலா செப்பேடுகளில் சமசுகிருத-கன்னட இருமொழி பொறிப்புகள் உள்ளது. 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென் கன்னடப் பகுதியில் பெல்மன்னு என்னும் இடத்தில், ஆலுவரச-2 என்னும் அரசன் ஆண்ட காலத்தில் ஹளே கன்னட மொழி எழுத்துக்களில் முழு கன்னட மொழி செப்பேடு ஒன்று அறியப்படுகின்றது. + +இலக்கிய வகையில், கி.பி. 700 ஆம் ஆண்டளவில் திரிபாதி சந்தத்தில் கப்பெ அரபட்டா எழுதிய பாடல்கள் பழமையானவை. ஆனால் இன்று கிடைத்துள்ளவற்றுள் நிருபதுங்க அமோகவர்ஷா என்னும் அரசனால் கி.பி. 850 ஆம் ஆண்டளவில் எழுதப்பட்ட கவிராஜமார்கம் என்னும் நூலே பழமையானது. கி.பி. 900ல் சிரவணபலகுலாவைச் சேர்ந்த பத்திரபாஃகுவின் வாழ்க்கையை விளக்கும், சிவகோட்டியாச்சார்யர் எழுதிய வட்டராதனே (?) என்னும் நூல் அடுத்ததாக உள்ள பழமையான நூல் ஆகும். + +20 ஆம் நூற்றாண்டு இலக்கியத்தில் கன்னடம் முன்னணி வகிக்கும் ஓர் இந்திய மொழி ஆகும். இந்தியாவில் எம்மொழியினும் அதிக எண்ணிக்கையில் ஞானபீடப் பரிசுப் பெற்ற மொழி கன்னடம் ஆகும். இதுவரை 7 இலக்கிய எழுத்தாளர்கள் ஞானபீடப் பரிசுகள் பெற்றுள்ளனர். இது தவிர 48 சாகித்திய அகாதமிப் பரிசகளும் பெற்றுள்ளது. + +ஞானபீட பரிசு பெற்றவர்கள்: + + +கன்னடத்தில் 13 உயிர் எழுத்துக்கள் உள்ளன. உயிரெழுத்துக்களை ஸ்வர என்று அழைக்கின்றனர். அவையாவன: + +ಅ (அ), +ಆ (ஆ), +ಇ (இ), +ಈ (ஈ), +ಉ (உ), +ಊ (ஊ), +ಋ (ரு), +ಎ (எ), +ಏ (ஏ), +ಐ (ஐ), +ಒ (ஒ), +ಓ (ஓ), +ಔ (ஔ) + +உயிர் எழுத்துக்கள் தவிர, பாதி உயிரெழுத்து ஒலியாகவும், பாதி மெய்யெழுத்து ஒலியாகவும் இருப்பதாகக் கருதப்படும் யோகவாஹா என்னும் இரு எழுத்துக்கள் உண்டு. அவையாவன: + + +கன்னட மொழியில் தமிழில் உள்ள க,ச,ட,த,ப ஆகிய ஐந்து வல்லின எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் நான்கு விதமாக வேறுபடுத்திக் காட்டுவர். +மேலுள்ளனவன்றி, தமிழில் உள்ளது போன்ற இடையின மெய்யெழுத்துக்கள் வரிசையும் உண்டு. அவையாவன: + +ಯ (ய, ya), +ರ (ர, ra), +ಲ (ல, la), +ವ (வ, va), +ಶ (ஷ, sha), +ಷ (ஷ, shha), +ಸ (ஸ, sa), +ಹ (ஹ, ha), +ಳ (ள, lla) + +கன்னடத்தின் எழுத்துருவம் தெலுங்கை ஒத்துள்ளபோதிலும் பேச்சுக் கன்னடம் தமிழை ஓர���வு ஒத்தாகும். + + + + + + +தென்னிந்தியா + +தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பில் 19.31% ஆக்கிரமித்து உள்ளது. இந்தியாவின் தெற்கு பகுதியான தக்காண பீடபூமியை உள்ளடக்கி, கிழக்கில் வங்காள விரிகுடா, மேற்கில் அரபிக் கடல் மற்றும் தெற்கில் இந்திய பெருங்கடலால் சூழப்பட்டிருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நடுவில் பீடபூமியை நடுப் பகுதியாக கொண்டுள்ளது. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் வைகை ஆறுகள் தலைமை நீர் அடையாளங்களாகும். சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கோயம்புத்தூர், கொச்சி, மதுரை மற்றும் விசாகப்பட்டினம் மிகப் பெரிய நகர்ப்புற பகுதிகளாகும். + +தென் இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மக்கள் நான்கு முக்கிய திராவிட மொழிகளில் ஒன்றான தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகியனவற்றயே பேசுகின்றனர். தென் இந்தியா பகுதிகளை பல வம்ச மன்னர்கள் ஆண்டனர் மற்றும் தென் இந்திய கலாச்சாரம் தெற்கு ஆசியா முழுவதும் பரவியது. சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை தென் இந்தியாவில் நிறுவப்பட்ட தலைமை வம்சாவளிகள் ஆகும். + +இந்திய சுதந்திரத்துக்கு பிறகு பல ஏற்ற இறக்கங்கள் பட்ட பிறகு, தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாக பொருளாதார முன்னேற்றம் அடைந்தன. கடந்த முப்பதாண்டுகளாக, நாட்டு சராசரி வளர்ச்சியை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. தென் இந்திய மாநிலங்களில் சில முன்னேற்றம் கண்ட அதே வேளை, வறுமை நாட்டின் ஏனைய பகுதிகளை போல சிக்கலாக இருக்கிறது. தென் மாநிலங்களில் பொருளாதாரம் வட மாநிலங்களை விட அதிக வேகத்தில் வளர்ச்சி பெற்றுவிட்டது. கல்வியறிவு விகிதம் தென் மாநிலங்களில் சுமார் 80% ஆக உள்ளது. இது இந்தியாவின் மற்ற பகுதிகளில் விட அதிகமாகதாகும். தென்னிந்தியாவின் குழந்தை பிறப்பு வீதம் 1.9 ஆகும். அனைத்து இந்திய பகுதிகளில் இதுவே குறைவானதாகும். + +2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதிப்பிடப்பட்ட தென் இந்தியாவின் மக்கள்தொகை 25.2 கோடியாகு��். இது இந்திய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு ஆகும். குழந்தை பிறப்பு வீதமானது மக்கள் தொகையை வீழ்ச்சி அடையாமல் வைத்திருக்கக்கூடிய 2.1க்கும் குறைவாகவே அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் உள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு இந்திய அளவிலேயே மிகக் குறைந்த குழந்தை பிறப்பு விதமாக 1.7 ஐப் பெற்றுள்ளன. இதன் காரணமாக 1981 முதல் 2011 வரை இந்திய மக்கள் தொகையில் தென் இந்தியாவின் பங்கு குறைந்து கொண்டே வந்துள்ளது. தென்னிந்தியாவின் மக்கள் தொகை அடர்த்தி சுமாராக ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 463 பேர். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் தென் இந்தியாவின் மக்கள்தொகையில் 18 சதவீதம் பேர் ஆவர். பெரும்பாலான மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். 47.5% பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தென் இந்தியாவின் மக்கள் தொகையில் 60% பேர் நிலையான வீட்டு அமைப்புகளில் வாழ்கின்றனர். 67.8% தென்னிந்தியா குழாய் குடிநீர் வசதி பெற்றுள்ளது. கிணறுகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் குடிநீர் வழங்குவதில் முக்கியமான ஆதாரங்களாக உள்ளன. + +இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தென் இந்திய பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களை சந்தித்தது. பிறகு கடந்த மூன்று தசாப்தங்களாக தேசிய சராசரியை விட அதிக வேகத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. தென்னிந்திய மாநிலங்கள் சில சமூக பொருளாதார அளவீடுகளில் மேம்பட்ட போதிலும், வறுமையானது மற்ற இந்திய பகுதிகளைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த வருடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் தொடர்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்திய மாநிலங்களின் மனித மேம்பாட்டுச் சுட்டெண் ஆனது அதிகமாக உள்ளது மற்றும் பெரும்பாலான வட இந்திய மாநிலங்களை காட்டிலும் பொருளாதாரமானது வேகமாக வளர்ந்துள்ளது. + +2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தென்னிந்தியாவில் எழுத்தறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் 80%. இது தேசிய சராசரியான 74% விட குறிப்பிடத்தக்க அளவு அதிகம். தென்னிந்திய மாநிலங்களில் கேரளா அதிகபட்ச எழுத்தறிவு வீதமாக 93.91% ஐப் பெற்றுள்ளது. தென்னிந்தியா, பாலின விகிதமான 1000 ஆண்களுக்கு எத்தனை பெண்கள் என்பதனை அதிகமாக பெற்றுள்ளது. இதில் கேரளா மற்றும் தமிழ்நாடு முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றன. பொருளாதார சுதந்திரம், ஆயுட்காலம், குடிநீர் வசதி, சொந்த வீடு வைத்திருப்பது மற்றும் சொந்த டிவி வைத்திருப்பது ஆகிய அளவீடுகளில் தென்னிந்திய மாநிலங்கள் இந்திய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் வருகின்றன. தென்னிந்திய மாநிலங்களில் 19% பேர் ஏழைகளாக உள்ளனர். அதே நேரத்தில் மற்ற இந்திய மாநிலங்களில் 38% பேர் ஏழைகளாக உள்ளனர். தென்னிந்திய மாநிலங்களில் சராசரி தனிநபர் வருமானம் . இது மற்ற இந்திய மாநிலங்களின் சராசரி தனிநபர் வருமானமான ஐக் காட்டிலும் அதிகம். ஐக்கிய நாடுகள் அவை 2015க்குள் அடைய வேண்டும் என்று சில இலக்குகளை புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகள் என்று அறிவித்து உள்ளது. இதில் மக்கள் தொகை சார்ந்த மூன்று புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்குகளை கேரளா மற்றும் தமிழ்நாடு 2009லேயே அடைந்துவிட்டன. அந்த இலக்குகள் தாயின் ஆரோக்கியம், சேய் இறப்பு விகிதத்தை குறைப்பது மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பது ஆகியவையாகும். + +தென்னிந்தியாவின் மிகப்பெரிய மொழிக் குடும்பம் திராவிட மொழிக் குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் சுமார் 73 மொழிகள் உள்ளன. தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகும். துளு மொழி கடற்கரையோர கேரளா மற்றும் கர்நாடகாவில், 15 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. கொங்கணி எனப்படும் இந்தோ ஆரிய மொழி கொங்கண் கடற்கரையில் 10 லட்சம் மக்களால் பேசப்படுகிறது. தென்னிந்தியாவின் நகரப்பகுதிகளில் ஆங்கிலமும் பரவலாக பேசப்படுகிறது. தென்னிந்தியாவில் உருது மொழி சுமார் 1.2 கோடி முஸ்லிம்களால் பேசப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மற்றும் கொங்கணி ஆகியவை அலுவல் மொழிச் சட்டம் 1963 இன் படி இந்தியாவின் அலுவல் மொழிகளான 22 இல் ஒன்றாக வருகின்றன. இந்திய அரசாங்கத்தால் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட முதல் மொழி தமிழ் ஆகும். 2004 இல் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது. செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்ட பிறமொழிகள் கன்னடம் (2008), தெலுங்கு (2008) மற்றும் மலையாளம் (2013) ஆகும். + +தென்னிந்தியாவின் மிகப் பெரிய மதமாக 80% மக்கள் பின்பற்றக்கூடிய இந்துமதம் உள்ளது. 11% பேர் இஸ்லாமையும், 8% பேர் கிறித்தவ மதத்தையும் பின்பற்றுகின்றனர். வரலாற்ற��க்கு முந்தைய மதம் தென்னிந்தியாவில் பின்பற்றப்பட்டுள்ளதற்கு ஆதாரமாக நடனங்கள் மற்றும் சடங்குகளை விவரிக்கும் கற்கால ஓவியங்கள் கிழக்கு கர்நாடகாவின் குப்கல் போன்ற இடங்களில் சிதறி காணப்படுகின்றன. அடிக்கடி உலகின் பழமையான மதமாக கருதப்படும் இந்து மதம் அதன் ஆரம்பத்தை இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் கொண்டுள்ளது. தென்னிந்தியாவின் முக்கியமான ஆன்மீக பாரம்பரியங்களாக இந்து மதத்தின் சைவ மற்றும் வைணவ கிளைகள் கருதப்படுகின்றன. எனினும் புத்த மற்றும் ஜைன தத்துவங்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் செல்வாக்கு செலுத்திய போதும் இவை அவ்வாறு கருதப்படுகின்றன. தென்னிந்தியாவின் தெற்குப் பகுதிகளில் அய்யாவழியும் பரவி காணப்படுகிறது. தென்னிந்தியாவிற்கு இஸ்லாமானது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கேரளாவின் மலபார் கடற்கரையில் அரேபிய வணிகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. 17 முதல் 18 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தக்காண சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இது பரவியது. அரேபிய வழி வந்த கேரள இஸ்லாமியர்கள் மாப்பிளமார் என்று அழைக்கப்படுகின்றனர். கிறித்தவ மதம் தென்னிந்தியாவிற்கு புனித தோமையாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் கி. பி. 52 இல் கேரளாவின் முசிறிக்கு விஜயம் செய்து கேரளாவின் யூதக் குடியிருப்புக்களுக்கு ஞானஸ்நானம் செய்தார். கேரளா உலகின் மிகப் பழமையான யூத சமூகங்களில் ஒன்றுக்கு உறைவிடமாகவும் உள்ளது. அவர்கள் சாலமன் ஆட்சிக்காலத்தில் மலபார் கடற்கரைக்கு வந்ததாக கருதப்படுகிறது. + + + + +இசை + +இசை () ("music") என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் தொனி(ஒலி)களைப் பற்றிய கலையாகும். இசையை வடமொழியில் நாதம் என அழைப்பர். + +இசை இன்று பல்வேறு பயன்களைத் தருகின்றது. தற்போது படித்தவர் முதல் பாமரர் வரை இசை பரவி நிற்கின்றது. இணையத்தில் அன்றாடம் பார்க்கப்படும் காணொளிகளில் இருபது விழுக்காடு இசை சம்பந்தமாகப் பார்க்கப்படும் காணொளிகளாகும். + +தொல்பொரு���ியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பல பொருட்களில் இருந்து, பண்டைய காலத்தில் இசை எவ்வாறு இருந்தது என்பதை ஊகித்தறிய முடிகிறது. பழைய கற்காலத்தில் மனிதர்கள் எலும்புகளில் துளைகளையிட்டு புல்லாங்குழல் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளனர். + +ஏழு துளைகள் கொண்ட புல்லாங்குழல், மேலும் சில வகையான நரம்புகள் கொண்ட இசைக்கருவிகள் என்பன, தொல்பொருளாய்வில் சிந்துவெளி நாகரிகம் இருந்த காலத்திலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. + +இந்தியா மிகப் பழமையான இசை மரபைக் கொண்டிருக்கும் நாடுகளில் ஒன்றாக இருப்பதாக அறியப்படுகிறது. +மிகப் பழமையானவையும், மிக அதிகளவிலான பழைய கற்கால இசைக்கருவிகள் சீனாவில் இருப்பதாக அறியப்படுகிறது. அவை 7000 – 6600 கி.மு விலானவையாக இருக்கின்றன. + +மொழியின் பேச்சு வடிவமும், எழுத்து வடிவமும் இயல். பண் இசைத்துப் பாடுவது இசை. நடித்துக் காட்டுவது நாடகம். நாடகத்தைப் பழந்தமிழ் கூத்து எனக் குறிப்பிடுகிறது. கூத்து என்பது பண்ணிசைக்கு ஏற்பக் காலடி வைத்து ஆடும் ஆட்டம். நாடகம் என்பது கதை நிகழ்வைக் காட்டும் தொடர் கூத்து. சங்ககாலத்தில் கூத்து ஆடியவரைக் கூத்தர் என்றனர். நாடகம் ஆடியவரைப் பொருநர் என்றனர். + +உலகில் பல்வேறு இசை முறைகள் வழங்கி வருகின்றன. அவையாவன: +இந்த ஒவ்வொன்றும் பல்வேறு அம்சங்களைத் தன்னுள் கொண்டுள்ளன. இவற்றுள் சிறப்பான சில அம்சங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. +இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. நூற்றுக்கணக்கான இனங்கள் /இனக்குழுக்களையும், மொழிகளையும், பண்பாடுகளையும் தன்னகத்தே அடக்கியது. இதனால் இப் பண்பாடுகளின் வெளிப்பாடுகளாகவுள்ள இசை, நடனம், நாடகம் முதலிய கலைகளும் பல்வேறு விதமான வேறுபாடுகளுடன் நாடு முழுவதும் பரந்துள்ளன. இவற்றுள் இசை மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. + +இந்தியாவின் இசைவடிவங்களுட் பல தொன்மையான வரலாற்றைக் கொண்டவை. நூற்றாண்டுகளினூடாக சீர்செய்யப்பட்டு வளமான முதிர்ந்த நிலையிலுள்ளவை. உலகம் முழுவதிலும் அறியப்பட்டவை. இவற்றைவிட ஏராளமான கிராமிய, உள்ளூர் இசை மரபுகள், அந்தந்தப் பிரதேசத்துச் சமூக, பொருளாதார, ஆன்மீகத் தேவைகளோடு இணைந்து பயிலப்பட்டு வருவனவாக உள்ளன. + +பின்வருவன இந்தியாவின் முக்கிய இசை மரபுகளுட் சிலவாகும். + + +கருநாடக இசை அல்லது பண்ணிசை தென்னிந்திய இசை வடிவமாக���ம். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளைச் ‘ஸ்வரம்’ என்றனர்..கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு ஸ்வரங்களும் ஸ - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. + +கிராமிய இசை கிராமங்களில் வசிக்கும் சாதாரண மக்கள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட ஒருவகை இசையாகும். இவற்றுக்கு "நாடோடி இசை", "நாட்டுப்பாடல்கள்" என்ற பெயர்களும் உண்டு. "மண்வாசனை வீசும் கிராமிய இசையை தமிழகமெங்கும் தவழவிட்டவர் இளையராஜா. கிராமிய மெட்டு, கிராமிய இசைக் கருவிகள் ஆனால் மேற்கத்திய பாணியில் வாத்தியங்களின் ஒருங்கிணைப்பு என்று இசைக்கலைஞனின் கற்பனையில் உச்சத்தில் நின்று பாடல்களை வழங்கியவர் இளையராஜா." + + +பழந்தமிழ் இசை என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழைமையான இசைச் செல்வமாகும். பழந்தமிழிசை எனக் குறிப்பிடும் போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத்தமிழானது இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலம் என அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம். + +இந்துஸ்தானி இசை வட இந்தியாவில் வழக்கத்தில் இருக்கும் சங்கீதப் பாரம்பரியமாகும். கருநாடக இசை போலவே இங்கும் தாளம், இராகம் முக்கியமான அங்கங்களாகும். வேத காலம் தொட்டு கி.பி. 13ம் நூற்றாண்டு வரை இந்தியா ��ுழுதும் ஒரே இசை மரபு மட்டுமே காணப்பட்டது. வட இந்தியாவை முகம்மதியர் கைப்பற்றிய பின்னர், பாரசீக, அரேபிய இசைக்கலப்பினால் இந்துஸ்தானிய இசை உருவாகியது. இவ்விசையும் கர்நாடக இசையும் சாமகானத்திலிருந்தே தோன்றியவை ஆகும். 13ம் நூற்றாண்டில் சாரங்கதேவரின் காலத்தின் பின் இஸ்லாமியர்கள் வடஇந்தியாவைக் கைப்பற்றிய பின் இந்தியாவின் கலாசாரங்களில் ஏற்பட்ட மாற்றங்களைப் போல இந்திய இசையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.பாரசீகக் கலையுடன் இருந்த தொடர்பே இந்துஸ்தானிய இசைக்கும் கர்னாடக இசைக்கும் இடையே ஏற்பட்ட இடைவெளிக்குக் காரணமாகும். + + +தமிழ்ச் சூழலில் பண்டைக் காலத்தில் இருந்த முச்சங்கங்கள் இசையைப் பேணி வளர்த்தன.இசை நூல்கள் பல இயற்றப்பட்டன. +அவை காலத்தால் அழிந்துபோயின.இவ்வாறு +மறைந்த நூல்களாக முதுநாரை,முதுகுருகு,சிற்றிசை,பேரிசை, +பெருநாரை,பெருங்குருகு,பஞ்ச பாரதீயம்,பரதம்,அகத்தியம்,செயிற்றியம், +குணநூல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. + +தொல்காப்பியம்,எழுத்ததிகாரம் +33 ஆவது நூற்பாவான, +'அளபிறந்து யிர்த்தலும் ஒற்றிசை நீடலும் +உள வென மொழிப இசையொடு சிவணிய +நரம்பின் மறைய என்மனார் புலவர்'என்பதில் சுட்டப்படும் 'நரம்பின் மறை'யை இசைநூலாகக் கொள்கின்றனர். + +சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார்,கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் +இசை நுணுக்கம்(சிகண்டியார்), +இந்திரகாளியம் +(யாமளேந்திரர்),பஞ்ச மரபு(அறிவனார்),பரத சேனாபதியம்(ஆதிவாயிலார்), +மதிவாணர் +நாடகத் தமிழ்(பாண்டியன் மதிவாணனார்)ஆகிய நூல்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். +இவற்றுள் பஞ்ச மரபு இன்றும் உள்ளது. + +இருபதாம் நூற்றாண்டில் பல்வேறு இசை நூல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை ஆபிரகாம் பண்டிதரின் கருணாமிர்த சாகரம்,விபுலானந்தரின் யாழ் நூல்,எஸ்.இராமநாதனின் சிலப்பதிகாரத்து +இசை நுணுக்கம்,குடந்தை ப.சுந்தரேசனாரின் இசைத் தமிழ்ப் +பயிற்சி நூல், மதுரை பொன்னுசாமி பிள்ளையின் பூர்வீக சங்கீத உண்மை ஆகியவையாகும். + +ஸ ரி க ம ப த நி, என்பவை ஏழு சுரங்களாகும். இவற்றை சப்தசுரங்கள் என்பர். சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலைகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமா��ின்றன. + +1.குரல் + +2.துத்தம் + +3.கைக்கிளை + +4.உழை + +5.இளி + +6.விளரி + +7.தாரம் + +ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ. + +இவை வடமொழியில், + +1.சட்ஜம்-ஸ + +2.ரிஷபம்-ரி + +3.காந்தாரம்-க + +4.மத்தியமம்-ம + +5.பஞ்சமம்-ப + +6.தைவதம்-த + +7.நிஷாதம்-நி + +என்று குறிப்பிடப்படுகின்றன.இந்த ஏழு +இசை ஒலிகளும் சுரங்கள் என அழைக்கப்படுகின்றன. + +ஏழு சுரங்களும் பின்னர் பன்னிரு +சுரங்களாக வளர்ச்சிப் பெற்றன.இவற்றுள் குரலும்(ஸ),இளியும்(ப)வகை பெறா சுரங்களாகும்.ஏனைய துத்தம்(ரி),கைக்கிளை(க),உழை(ம), +விளரி(த),தாரம்(நி) ஆகிய இரு வகைபெறும் சுரங்களாகும்.இவ்வாறு பன்னிரு சுரங்கள் உருவாகின. + +ஆங்கில மொழியில் Sharp,Flat என்பதுபோல் தமிழில் நிறை-குறை எனவும், வன்மை-மென்மை எனவும்,ஏறிய-இறங்கிய எனவும் குறிக்கப்பெறும்.வடமொழியில் கோமள-தீவிர என்று அழைக்கப்படுகின்றன.ஏழிசை அல்லது பன்னிரு இசைநிலைத் தொகுப்புகளை ஒரு மண்டிலம் என்று வழங்குவர்.இயக்கு,ஸ்தாயி,தானம் ஆகியவை இதன் வேறுபெயர்களாகும். + +1.குரல் -வகைபெறா சுரம்-குறியீடு(ஸ) + +2.துத்தம்-குறை துத்தம்(தமிழில்)-சுத்த ரிஷபம்(வட மொழியில்)-ரி1 + +3.துத்தம்-நிறை துத்தம்-சதுஸ்ருதி ரிஷபம்-ரி2 + +4.கைக்கிளை-குறை கைக்கிளை-சாதாரண காந்தாரம்-க1 + +5.கைக்கிளை-நிறை கைக்கிளை-அந்தர காந்தாரம்-க2 + +6.உழை-குறை உழை-சுத்த மத்தியமம்-ம1 + +7.உழை-நிறை உழை-பிரதி மத்தியமம்-ம2 + +8.இளி-வகைபெறா சுரம்-ப + +9.விளரி-குறை விளரி-சுத்த தைவதம்-த1 + +10.விளரி-நிறை விளரி-சதுசுருதி தைவதம்-த2 + +11.தாரம்-குறை தாரம்-கைசிகி நிஷாதம்-நி1 + +12.தாரம்-நிறை தாரம்-காகலி நிஷாதம்-நி2 + +இது சமன்,மெலிவு,வலிவு,சமன் மண்டிலம், மத்திய ஸ்தாயி எனவும்,மெலிவு மண்டிலம், மந்த்ர ஸ்தாயி எனவும், வலிவு மண்டிலம், தாரஸ்தாயி எனவும் மூவகைப்படும்.மெலிவில் நான்கு சுரங்களும்(ம ப த நி மற்றும் நான்கு கீழ்ப்புள்ளிகள்),சமனில் ஏழு சுரங்களும்(ஸ ரி க ம ப த நி),வலிவில்(ச ரி க மற்றும் மூன்று மேல் புள்ளிகள்) என பதினான்கு சுரங்கள் இசைக் குறிப்பில் குறிக்கப்பெறும். + +பாலை என்பது பகுப்பு ஆகும்.எழுவகைப் பாலைகள் உள்ளன.ஏழிசையின் பகுப்பானது ஆயம்,சதுரம்,திரிகோணம்,வட்டம் ஆகிய நான்கு வகைகளில் அமைகின்றன.வட்டப் பாலை எனப்படுவது முழுமையாக ஒரு வட்டத்தில் பன்னிரண்டு கோணம் அமைத்து அதில் ஏழு கோணத்தைக் கொண்டு உறழ்வதாகும். + +சுரங்கள் ஏழும் பன்னிரண்டு இராசிகளில் வல,இட முறையாக உறழப்படுவதால் ஏழு பெரும்பாலைகள் உருவாகின்றன. அவையாவன: + +1.குரல் குரலாயது-செம்பாலை-அரிகாம்பதி ராகம். + +2.துத்தம் குரலாயது-படுமலைப் பாலை-நடபைரவி ராகம். + +3.கைக்கிளை குரலாயது-செவ்வழிப் +பாலை-பஞ்சமமில்லாத தோடி ராகம். + +4.உழை குரலாயது-அரும்பாலை-சங்கராபரணம் ராகம். + +5.இளி குரலாயது-கோடிப்பாலை-கரகரப்ரியா ராகம். + +6.விளரி குரலாயது-விளரிப்பாலை- +தோடி ராகம் + +7.தாரம் குரலாயது-மேற்செம்பாலை-கல்யாணி ராகம். + +இராகம் என்னும் வடமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் பண் ஆகும். +பண் எனப்படுவது இனிமையான இசைத் தொடருடைய ஒலி உருவ அமைப்பாகும். + + + + + +கருநாடக இசை + +கருநாடக இசை அல்லது கர்நாடக சங்கீதம் தென்னிந்திய இசை வடிவமாகும். உலகின் தொன்மையான இசைவடிவங்களிலொன்றாகக் கருதப்படுகின்றது. + +தமிழகத்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியதாகும். செம்மொழியில் ஏழிசை என: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி மற்றும் தாரம் என அழைக்கப்பட்டதையே தமிழ்மொழியில் வடமொழிக் கலப்பு ஏற்பட்டபோது இந்த ஏழு இசைகளை ‘சுரம்’ என்றனர். + +தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் என்னும் மூவரும் கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் ஆதி மும்மூர்த்திகள் என முத்துத் தாண்டவர், அருணாசலக் கவிராயர், மாரிமுத்துப் பிள்ளை என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள். + +கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச – ரி – க – ம – ப – த – நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்க��ிலும், முற்கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக்கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன. இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன. + +செவிக்கு இனிமை கொடுக்கும் த்வனி நாதம் எனப்படும். சங்கீதத்தில் மூலாதாரமாக விளங்குவது நாதம் ஆகும். ஒழுங்கான முறையில் எழுப்பப்படும் ஒலி நாதம் எனப்படுகிறது. ஒழுங்கற்ற முறையில் எழுப்பப்படும் ஒலி இரைச்சல் எனப்படுகிறது. நாதத்திலிருந்து சுருதியும், சுருதியிலிருந்து ஸ்வரமும், ஸ்வரத்திலிருந்து இராகமும் உண்டாகிறது. நாதத்தில் இரு வகை உண்டு அவையாவன. + +பாட்டைத் தொடங்குவதற்கு அடிப்படையாக உள்ள விசேட ஒலியே சுருதி எனப்படும். இதுவே இசைக்கு ஆதாரமானது. இது கேள்வி என்றும், அலகு என்றும் அழைக்கப்படும்.நாதத்திலிருந்து சுருதி உற்பத்தியாகிறது. சுத்தமாக இசைக்கப்படும் சங்கீதம் அதாவது சுருதி தான் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். சுருதி சங்கீதத்திற்கு மிகப் பிரதானம் என்பதால் சுருதி மாதா என அழைக்கப்படும். சுருதி இரண்டு வகைப்படும், அவையாவன... + +சாதாரண உருப்படிகள் யாவும் பஞ்சம சுருதியிலேயே பாடப்படுகிறது. நிஷாதாந்திய, தைவதாந்திய, பஞ்சமாந்திய இராகங்களில் அமைந்த பாடல்கள் மத்திம சுருதியில் பாடப்படுகின்றன.அனேகமான நாட்டார் பாடல்கள் மத்திம சுருதியில் தான் பாடப்படுகிறது. சுருதி சேர்க்கப்படும் ஸ்வரங்கள் ஸபஸ் (ஸா பாஸாபாஸா). + +இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும். சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும். தமிழிசையில் ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு. ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும் தமிழ்ப் பெயர்களும் பின்வருமாறு அமையும். + +கையினாலாவது கருவியினாலாவது தட்டுதல் தாளம் எனப்படும். இது பாட்டை ஒரே சீராக நடத்திச்செல்கிறது. இது எமக்குத் தந்தை போன்றது. அதனால் தான் இசையில் சுருதி மாதா எனவும் லயம் பிதா எனவும் அழைக்கப்படுகிறது. லகு, துருதம், அனுதுருதம் என மூன்று அங்கங்கள���க விரிவு பெறுகிறது. + +பாட்டின் வேகத்தை ஒரே சீராகக் கொண்டு செல்வது லயம் எனப்படும். சுருதி இல்லாமல் பாட்டு எப்படி மதிப்பில்லையோ அதே போல் லயம் இல்லாத பாட்டிற்கும் மதிப்பில்லை எனவே இது பிதா எனப்படுகிறது. லயம் மூன்று வகைப்படும். + +அவையாவன, + + +ஒரு தாளத்தில் அங்கங்கள் முழுவதையும் ஒரு முறை போட்டு முடிப்பது ஓர் ஆவர்த்தம் எனப்படும். இது ஆவர்த்தனம், தாளவட்டம் என்றும் அழைக்கப்படும். இதன் குறியீடு / உதாரணமாக ஆதி தாளத்தை எடுத்துக்கொண்டால் ஒரு லகுவையும் 2 துருதங்களையும் போட்டு முடித்தால் ஒரு ஆவர்த்தனம் எனப்படும். + +தாளங்கள் கர்நாடக இசையில் கால அளவுக்கு அடிப்படையாக அமைகின்றன. ஏழு அடிப்படையான தாளங்களும், அவற்றிலிருந்து உருவாகும் நூற்றுக்கு மேற்பட்ட தாளங்களும் உள்ளன. + + + + + + +கருநாடக இசைக் கருவிகள் + +இசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும். + + + + + + + + +மிருதங்கம் + +மிருதங்கம் அல்லது தண்ணுமை என்பது தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும். மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும். மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. + +'மதங்கம்' என்னும் பழந்தமிழ்ச் சொல்லின் திரிபே 'மிருதங்கம்' என்னும் வடமொழிச் சொல் எனக் கருதுகிறார்கள். தமிழின் 'மெது' என்பதே 'மிருது' எனத் திரிந்தது. + +பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது. இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன. வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். + +மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம். + +'மிருத்+அங்கம்' என்று பகுபடும் வடமொழிச் சொல்லுக்கு 'மண்ணை அங்கமாகக் கொண்டது' என்பது பொருள் என்ற போதிலும், இன்றைய மிருதங்கங்கள் மரத்தால் ஆனவை. முதிர்ந்த பலா மரத்தைக் கடைந்து செய்யப்படும் இந்த வாத்தியத்தின், நடுப்பகுதி பெருத்தும், வாசிக்கும் இரு பக்கங்களில் நடுப் படுதியை விட சிறியதாகவும் அமைந்திருக்கும். தோலால் மூடப்பட்ட இரு பக்கங்களையும், தோல்வார் இணைத்திருக்கும். வலப்பக்கத்தை வலந்தலை என்றும், இடப்பக்கத்தை இடந்தலை அல்லது தொப்பி என்றும் கூறுவர். + +வலந்தலையின் நடுவே கரணை இடப்பட்டிருக்கும். கிட்டான் என்ற ஒரு வகைக் கல்லைப் பொடியாக்கி, அதை அரிசிச் சோற்றுடன் கலப்பதன் மூலம் கிடைக்கும் கலவைக்கு சிட்டம் என்று பெயர். இந்தச் சிட்டம் அடுக்கடுக்காய் வட்டமாக வலந்தலையின் மத்தியில் இடப்படும். இதற்குக் கரணை அல்லது சோறு என்று பெயர். இந்தக் கரணையினாலேயே மிருதங்கம் ஸ்ருதி வாத்யம் ஆகிறது. அதாவது பாடகரின் ஸ்ருதியிலேயே மிருதங்கத்தின் ஸ்ருதியையும் கூட்டிக் கொள்ளும் வசதி உண்டு. தவில், கஞ்சிரா போன்ற வாத்தியங்களும் கேட்பதற்கு இனிமையாக இருப்பினும், அவற்றை பாடகர் அல்லது வீணை, குழல் முதலான வாத்தியத்தின் ஸ்ருதியோடு சேர்த்துக் கொள்ள முடியாது. + +கடம் போன்ற வாத்யங்களுக்கும் ஸ்ருதி உண்டென்ற போதும், மிருதங்கத்தில் மட்டுமே பல்வேறு சொற்களை வாசிக்க முடியும். இந்தக் காரணங்களாலேயே மிருதங்கத்தை ராஜ வாத்தியம் என்றும் அழைப்பதுண்டு. + +சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் , மராட்டியர் ஆட்சியில் 'மிருதங்கம்' தமிழகத்துக���குள் நுழைந்தது என்பது இசை ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.அது வரை பஜனை, ஹரிகதை, மராட்டிய நடனங்கள் ஆகியவற்றில் வாசிக்கப்பட்டு வந்து மிருதங்கம், தஞ்சை வந்தபின் தமிழ்நாட்டின் சங்கீதம், சதிர் முதலியவற்றிலும் இடம் பெற்றது. காலப்போக்கில், தமிழ்நாட்டில் வேரூன்றியிருந்த லய வடிவங்களும் மிருதங்க வாசிப்பின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின. + +வலது பக்கத்தில் இரு தோல்களுக்கு நடுவே மெல்லியக் குச்சிகளை சொருகுவர். இதன்மூலம் வித்தியாசமான ஒலியினைக் கொண்டுவர இயலும்.. + +மிருதங்கக் கலைஞர்கள் + + + + + + +கடம் (இசைக்கருவி) + +கடம் () கருநாடக இசையுடன் தொடர்புடைய தென்னிந்தியத் தாள வாத்தியக் கருவிகளில் ஒன்றாகும். இது மிக எளிமையான ஓர் இசைக்கருவி ஆகும். இது ஒரு பெரிய மண் பானையில் தட்டுவதன் மூலம் ஒலி எழுப்பப்படும் இசைக்கருவியாகும். கட இசைக்கலைஞர்கள் அமர்ந்த நிலையில் கடத்தின் வாயைத் தன் வயிற்றோடு ஒட்டவைத்துக்கொண்டு இரண்டு கைகளாலும் அடித்து வாசிப்பார். + +சில வித்துவான்கள் கடத்தைத் தூக்கிப் போட்டு அது கீழே வரும்போது தாளத்திற்கேற்ப ஒலி எழுப்பி இரசிகர்களை பிரமிக்க வைப்பார்கள். + +கர்நாடக இசைக் கச்சேரிகளைப் பொறுத்தவரை, மிருதங்கத்தைப்போல இன்றியமையாத ஓர் இசைக்கருவியாக இல்லாவிட்டாலும், பல இசை நிகழ்ச்சிகளில் கடம் பயன்படுத்தப்படுகின்றது. + +வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சிகளுக்கு இடையிலும், தனி நிகழ்ச்சிகளாகவும் நடைபெறும். மிருதங்கம், கடம், கஞ்சிரா, தவில் போன்ற கருவிகள் சேர்ந்த தாளவாத்தியக் கச்சேரிகளில், கடத்தின் பங்கு ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுவதாகும். + +தமிழ் நாடு, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை மட்பாண்ட தயாரிப்புகளுக்குப் பிரசித்தி பெற்ற இடமாகும். இங்கு தயாரிக்கப்படும் கடத்துக்கு தனிச் சிறப்பு உண்டு. + +மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கி கௌரவித்துள்ளது. + + + + + +நடன வகைகள் பட்டியல் + + + + + + + + +முதன்மைக் கட்டுரை: "பிளமேன்கோ நடனங்கள்" + + + + + +பரதநாட்ட��யம் + +பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம். + +இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது. + +உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்ட���்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன. + +பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார். + +பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். + +பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை: +ஆகியவையாகும். + +அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை +என்பனவாகும். + +பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர், + +"கைவழி நயனஞ் செல்லக் +கண்வழி மனமும் செல்ல" +மனம் வழி பாவமும் +பாவ வழி ரசமும் சேர". +எனக் குறிப்பிட்டுள்ளார். + +ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர். +தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர். + +புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர். + +உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,��தடு,முகவாய் ஆகியனவாகும். + +உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும். + +பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள் + +என்பவையாகும். + + + + + + + +குச்சிப்புடி + +குச்சிப்புடி (தெலுங்கு: కూచిపూడి) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு பண்டைய நடன நாடக வடிவமாகும். இது தென்னிந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஒரு நடன வகையாகும். ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள "குச்சிப்புடி" என்னும் கிராமத்தின் பெயராலேயே இது அழைக்கப்படுகின்றது. + +கருநாடக இசையோடு இவ்வகை நடனம் ஆடப்படுவது வழக்கமாகும். அதோடு மிருதங்கம், வயலின், புல்லாங்குழல் மற்றும் தம்புரா ஆகிய இசைக்கருவிகளும் பயன்படுத்தப்படலாம். இது 7ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் புகழ்பெறத்தொடங்கியது. + +நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது. +தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம். +நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கோ ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயற்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம். + +இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும். + +குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு. + + + + +கதகளி + +கதக்களி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதக்களி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன. +கதக்களி என்றால் கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல் என்று பொருள். ஆட்டக்கதை என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. +முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதல��ன இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக பழன்காலதிலிருந்தே நிலைத்திருக்கின்றன. + +முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன. + +தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர். + +தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். கதக்களி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும். + +மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது. கோரப்பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்றத்தை அளிக்க வல்லன. +சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது. + +கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர். + +உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர். + +பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் மொழியாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதக்களி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும். + +கதக்களி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெத��வாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதக்களி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும். + + + + +துபாய் + +துபாய் அல்லது துபை ("Dubai", , "") என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் சீர்படுத்துவதற்காகச் வகையில் முதலாவது நகரமாகும். இது அராபியத் தீபகற்பத்தில் அராபிய வளைகுடாவின் (பாரசீக வளைகுடா) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் அபுதாபி அமீரகத்தை அடுத்து இரண்டாவது நிலையில் உள்ளது. துபாய் மற்றும் அபுதாபி ஆகியவை மட்டுமே நடுவண் அரசின் முக்கிய தீர்மானங்களுக்கு எதிர்வாக்கு (வீட்டோ) அதிகாரம் கொண்டுள்ள அமீரகங்கள் ஆகும். + +துபாய் மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், முத்துக் குளித்தல் போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், அபுதாபி பகுதியிலிருந்து, "பனியாஸ்" என்னும் இனக்குழுவினர் அல்-மக்தூம் குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. + +2012 ஆம் ஆண்டில், துபாய் உலகிலேயே மிக விலையுயர்ந்த 22 நகரமாகவும் மத்திய கிழக்கில் மிகவும் விலையுயர்ந்த நகரமாகவும் இருந்தது. 2014 ஆம் ஆண்டில், ஜெனீவாவுக்குப் பிறகு, உலகின் மிக அதிக விலையுயர்ந்த ஹோட்டல் அறைகளாக துபாயின் ஹோட்டல் அறைகள் மதிப்பிடப்பட்டன. அமெரிக்க உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெர்சர் மூலம் மத்திய கிழக்கில் வாழும் சிறந்த இடங்களில் துபாய் மதிப்பிடப்பட்டது. + +துபாய் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாரசீக வளைகுடா கரையோரத்தில் அமைந்துள்ள���ு மற்றும் இது கடல் மட்டத்திலிருந்து 16 மீற்றர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும். துபாய் நேரடியாக அரேபிய பாலைவனத்தில் உள்ளது. துபாயின் நிலப்பரப்பு, துபாய் வனப்பகுதிகளின் தெற்குப் பகுதியிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு வித்தியாசமாக உள்ளது, இது மணல் பாலைவகை வடிவங்களால் உயர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் க்வெவர் பாலைவனங்கள் நாட்டின் தெற்குப் பகுதியின் பெரும்பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன. இங்குள்ள மணல் நொறுங்கிய சிப்பிகள், பவளங்களைக் கொண்டுள்ளதுடன் வெள்ளை நிறத்தில் நல்ல நிலையில் காணப்படுகின்றது. நகரத்தைச் சுற்றியுள்ள மணல் பாலைவனமானது காட்டு புற்கள் மற்றும் அவ்வப்போது பேரீச்சை மரங்களையும் கொண்டுள்ளது. + +மக்கட்தொகையைப் பொறுத்தமட்டில் துபாய் மட்டுமன்றி, ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே ஒரு தனித்தன்மை உடையதாகும். இந்நாட்டின் மக்கள் தொகையில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் வெளிநாட்டினராக உள்ளனர். இருப்பினும் ஆட்சி அதிகாரத்திலும், அரசுப் பணிகளிலும் பிற நாட்டினர் நுழையப் பல தடைகள் உள்ளன. மேலும், இந்நாட்டின் குடிமகனாவதற்கு கடுமையான பல சட்ட திட்டங்கள் உள்ளன. இதன் மூலம் இந்நாட்டு மக்கள் சிறுபான்மை இனமாகவே இருந்தாலும், நாட்டின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் உள்ளது. + +துபாய் அமீரகத்தின் மக்கள்தொகை சுமார் 22 லட்சம் ஆகும். + +துபாய் மட்டுமன்றி ஐக்கிய அரபு அமீரகம் என்ற நாடே இசுலாமிய மதத்தைப் பின்பற்றும் ஒரு நாடாகும். + +இந்நாட்டில் வாழும் வெளிநாட்டினர்களில் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவற்றுள் இசுலாமியர், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும், அங்கு வசிக்கும் மற்ற மதத்தினரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நாடாகவே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக எல்லா மதத்தவர்களுக்கும் அவர் அவர் விருப்பபடி வணங்குவதற்கு கோயில், கிறித்தவக் கோவில்கள் மற்றும் சீக்கியக் கோயிலும் உள்ளது. + +2008 தரவுகளின்படி துபாயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 82.11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். துபை ஐக்கிய அரபு அமீரகங்களில் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய அமீரகம் ஆகும். அபுதாபியை விட நிலப்பரப்பிலும், எண்ணெய் வளத்திலும் பல மடங்கு சிறிய ஒரு அமீரகம் துபாய். துபாய் அமீரகத்தின் தொடக்க கால வளர்ச்சிக்கு, அதன் எண்ணெய் வளம் காரணமாகவும், போதுமானதாகவும் இருந்தது. ஆனால் துபாயின் எண்ணெய் வளம் அதன் தொடர் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்பதை அந்த அமீரகத்தின் அரசாங்கம் உணர்ந்தே இருந்தது. இதன் காரணமாக, துபாய் அரசு எண்ணெய் சாரா பிற தொழில்துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது. வெளிநாட்டு மூலதனத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசு நடைமுறைப்படுத்திய திட்டங்களின் விளைவாக துபாய் கடந்த முப்பது ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பல மடங்கு வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக 2005-ல் வெளிநாட்டவர்கள் துபாயில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்தது வெளிநாட்டு முதலீடு பெருக ஒரு முக்கிய காரணம் ஆகும். + +துபாயின் கட்டுமானத் துறை, 2004 தொடங்கி ஐந்து ஆண்டுகள் அசாதாரண வளர்ச்சியை அடைந்தது. இதற்கு இந்தியா, இங்கிலாந்து, உருசியா, ஈரான், பாகித்தான் மற்றும் அமெரிக்கா முதலிய நாடுகளில் இருந்து வந்த முதலீடுகள் பெரும் காரணமாக அமைந்தது. 2008 ஆண்டு இறுதி வாக்கில் துபையின் கட்டுமானத் துறையும் அதை நம்பி இருந்த துபையின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியை அடைந்தன. இந்த வீழ்ச்சிக்கு உலகப் பொருளாதாரப் பின்னடைவு மற்றும் அளவுக்கு அதிகமாக அதிகரித்த சொத்துக்களின் மதிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள். + +துபாய் வெப்ப பாலைவனக் காலநிலையைக் கொண்டது ஆகும். பொதுவாக ஆகஸ்ட் மாதமே அதிகூடிய வெப்பம் நிலவும் மாதம் ஆகும். + + + + + +தேவாரம் + +தேவாரம் என்பது சைவ சமய கடவுளான சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் ஆகும். இந்த ஏழு திருமுறைகளை திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய நாயன்மார்கள் தமிழில் பாடியுள்ளார்கள். + +முதல் இருவரும் கிபி 7ஆம் நூற்றாண்டிலும், மூன்றாமவர் கிபி 8ஆம் நூற்றாண்டிலும் இவற்றைப் பாடியதாகக் கருதப்படுகிறது. தேவாரங்கள் பதிக வடிவிலே பாடப்பட்டுள்ளன. பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது. + +7ஆம் நூற்றாண்டு, தமிழ்நாட்டிலே பல்லவர் ஆட்சி பலம் பெற்றிருந்த காலமாகும். மிகவும் செல்வாக்குட��ிருந்த பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கெதிராகச் சைவ சமயம் மீண்டும் மலர்ச்சி பெறத்தொடங்கிய காலம். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்றோர் தோன்றி ஊர்ரூராகச் சென்று சமயப்பிரசாரம் செய்தனர். சென்ற இடங்களிலெல்லாம் இருந்த கோயில்கள் மீது தேவாரங்களைப் பாடினர். திருஞானசம்பந்தர் தனது மூன்றாவது வயதில் தேவாரங்களைப் பாடத்தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. இவர் தனது சொந்த ஊரான சீர்காழியிலுள்ள தோணியப்பர் மீது, "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் அவரது முதற் பதிகத்தைப் பாடினார். + +தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர்பெற்றதாகக் கூறுவர்.ஆனால், இசையியலில் "வாரம்" என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். வாரநடை என்பது முதல் நடை, இரண்டாம் நடையில் பாடுவது என்பதையே குறிக்கிறது.“பொன்னார் மேனியனே”, “தோடு டைய செவியன்” பாடல்களை, ஓதுவார்கள் முதல் நடையில் தான் பாடுகிறார்கள். முதல் நடையில் ஓரெழுத்தாக பாடுவதையே, முதல்நடை என்பர். + +திருவதிகை வீரட்டானம் என்னும் தலத்தில் பாடிய "கூற்றாயினவாறு விலக்ககலீர்" என்று தொடங்கும் பதிகமே அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசரின் முதற் பதிகமாகும். "பித்தா பிறைசூடி" என்று தொடங்கும் தேவாரம் சுந்தரரின் முதற் பதிகம். + +10ம் நூற்றாண்டில் இராஜராஜ சோழனின் ஆட்சியின்போது, சிதம்பரம் கோயிலிலே கவனிப்பாரற்றுக் கிடந்த தேவாரங்களையும், வேறுபல சமய இலக்கியங்களையும் எடுத்து, பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சியவற்றை, நம்பியாண்டார் நம்பி என்பவர் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். + +சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களை திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள். + +இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில் செந்துருத்திப் பண் கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களை பாடவில்லை. + +சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101. + + பண் வாரியாகத் திரட்டி ஒன்று முதல் ஏழு திருமுறையாக அடைவு செய்துள்ள முறை முதலாவதாகும். இது “பண்முறை” எனப்படும். +திருமுறைகளாகவும், இவ்விரு பெருமக்களும் வாழ்ந்த காலப்பகுதியையொட்டிச் சில ஆண்டுகள் பிற்பட்டுத் தோன்றிய நம்பியாரூரர் ஆகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருப்பதிகங்கள் ஏழாம் திருமுறையாகவும் தொகுக்கப்பட்டன. +இப்பெருமக்கள் மூவரூள் முறையே ஒவ்வொருவரும் அருளிச் செய்தத் திருப்பதிகங்களில் அமைந்த பண்களை வகைப்படுத்தி +ஒவ்வொரு பண்ணுக்கும் உரிய திருப்பதிகங்களையும் ஏழு திருமுறைகளாக வகுத்தெழுதியது பழைய முறையாகும். + + திருத்தலங்கள் வாரியாக மூவர் பாடல்களைத் தொகுத்து அடைவு செய்த முறை இரண்டாவதாகும். இது “அடங்கன் முறை” எனப்படும். + மூவரில் ஒவ்வொருவர் பதிகங்களையும் தனித்தனியாக வைத்துத் தலங்கள் வாரியாகத் தொகுத்து அடைவு செய்த முறை மூன்றாவதாகும். இது தலமுறை எனப்படும். + +தலமுறையென்பது, கோயில், திருவேட்களம் முதலாகத் திருப்பதிகக் கோவையிற் குறித்த முறையையொட்டித் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களையெல்லாம் தில்லைப் பெருங்கோயில் முதலாக வரிசைப்படுத்தி அவ்வத்தலங்களுக்குரிய தேவாரப் பதிகங்களை முற்குறித்த ஏழு திருமுறைப் பாகுபாட்டிற்கு ஏற்ப முறைபடச் சேர்த்து அமைத்த முறையாகும். + + பெரியபுராணத்தில் மூவரின் வரலாறுச் சேக்கிழார் கூறிவரும் போது, இன்ன பதிகம் – ஊர் எல்லையில் / இறைவன் திருமுன் / வலம் வரும்போது பாடப்பெற்றது என்று கூறி வருவதை அறியலாம். அதன்படி தேவாரம் பாடப்பெற்ற காலமுறைப்படி ஒரு தொகுப்பு இருந்தது என்று உறுதி செய்யலாம். சோழர் வரலாற்றில் அக்குறிப்பு உள்ளது. அதற்கு “பாடியவாறு” என்று பெயர். + +தலமுறை, பண்முறை வகைகளில் பண்முறையமைப்பே பழைய ஏட்டுச்சுவடிகளில் இடம் பெற்றுள்ளது. + +மூவர் தேவாரப்பதிகங்களை ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கும் திருமுறைப் பகுப்புக்கு அடிப்படையாயமைந்தது இப்பண்முறையமைப்பே எனக் கருதல் பொருந்தும். பண்முறையமைப்பாகிய இதனை ஆதாரமாகக் கொண்டு நோக்கினால்தான் மூவர் திருப்பதிகங்களையும் முதல் ஏழு திருமுறைகளாகப் பகுத்து வழங்கிய நம் முன்னோரது பகுப்பு இனிது விளங்கும். தேவாரத் திருப்பதிகங்களைத் தலமுறையில் அமைத்துப் பயிலும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியதெனவே கருதவேண்டியுள்ளது. மூர்த்தி, தலம், திர்த்தம் என்பவற்றை முறையே கண்டு வழிபடும் விருப்புடைய சிவநேசச்செல்வர்கள், தாம் வழிபட விரும்பிய ஒவ்வொரு தலத்திற்கும் அமைந்த தேவாரத் திருப்பதிகங்கள் முழுவதையும் நாள்தோறும் முறையே பாராயணஞ் செய்தற்கு ஏற்ற வண்ணம் முறைப்படுத்தப்பெற்றதே இத்தலமுறைப் பகுப்பாகும். இப்பகுப்பு தில்லைப்பெருங்கோயிலை முதன்மைத் திருத்தலமாகக் கொண்டு அமைந்திருப்பது தேவார ஆசிரியர் மூவர் திருவுள்ளத்திற்கும் ஏற்புடையதாகும். இது சிவத்தலங்களெல்லாவற்றிற்கும் முதலில் வைத்துப் போற்றத்தகும் + +சிறப்புடைய திருத்தலம் என்ற நோக்கத்துடன் தில்லைப் பெருங்கோயிலைப் பற்றி அம் மூவரும் உளமுவந்து பாடிய திருப்பாடற் குறிப்புகளால் நன்கு புலனாகும். இக்குறிப்பினை விளக்கும் முறையில் கோயில், திருவேட்களம், நெல்வாயில், கழிப்பாலை எனத் தொடங்கும் திருப்பதிகக் கோவை அமைந்திருத்தல் அறியத்தக்கதாகும். மேற்குறித்த பண்முறை, தலமுறை என்னும் இருவகை முறைகளுள் தேவார ஆசிரியர் காலந்தொட்டு இடையீடின்றி வழங்கிவருவதும் சைவத்திருமுறைகள் பன்னிர்ண்டு என்ற பகுப்பிற்கு நிலைக்களமாக அமைந்ததும் பண்முறையே யாதலின் அம்முறையினைப் பின்பற்றித் தேவாரத் திருப்பதிகங்களின் அமைப்பினை நோக்குதல் ஏற்புடையதாகும். + +இப்பொழுதுள்ளபடி தேவாரப் பாடல்களுக்குப் பண் அமைத்துக் கொடுத்தவர் இராசேந்திர பட்டணத்திலிருந்த ஒரு பெண்மணி என்று உ.வே.சாமிநாதய்யர் குறிப்பிடுகின்றார். + +1. யாழ் 2. வீணை 3. குழல் 4 கின்னரி 5, கொக்கரி 6. சச்சரி 7. தக்கை 8. முழவம் 9. மொந்தை 10.மிருதங்கம் 11. மத்தளம் 12. தமருகம் 13. துந்துபி 14 குடமுழா 15. தத்தலகம் 16. முரசம் 17. உடுக்கை 18. தாளம் 19 துடி 20. கொடுகொட்டி முதலியன. இவற்றுள், பல பண்டைக்கால முதலே தமிழகத்தில் இருந்தவை. தேவாரத்தில் காணப்படும் பெரும்பாலான பண்கள் தமிழ்நாட்டிற்கே உரியவை. அவை பண்டை இசை நூல்களில் (அழிந்துபோன நூல்களில்) கூறப்பட்ட இசை நுணுக்கம் பொருந்தியவை. அப் பண்களில் சில சிலப்பதிகாரத்துட் காணலாம். பல்லவப் பேரரசர் காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ்ப்பண்களும் தமிழ் இ���ையும் களிநடம் புரிந்தன என்பதற்குத் திருமுறைகளே ஏற்ற சான்றாகும். + + + + + + + +பண் + +பண் என்பது இசையின் அடிப்படை வடிவங்களில் ஒன்று. முறைப்படி இசையொலிகளை வகைப்படுத்தி, அவ்வொலிகளால் பல்வேறு இசைப்போக்குகளுடன் உள்ளத்தில் ஓருணர்வு ஓங்க அமைக்கபடுவது பண். இசையொலிக் கூறுகள் சுரம் என்றும், நரம்பு என்றும் (ஒரோவொருக்கால் துளை என்றும்) வழக்கப்படும். + +2500 ஆண்டுகளுக்கும் மேலாக பண் இசை தமிழகத்தில் இருந்துவந்துள்ளது. தொன்றுதொட்டு இருந்துவரும் முத்தமிழ் என்பதில் உள்ள இசைத்தமிழ்தான் பண்ணிசை. தற்காலத்தில் தென்னிந்திய கருநாடக இசை மற்றும், இந்துஸ்தானி இசைகளில் வழங்கும் இராகங்கள் என்பது பண்ணிற்கு ஏறத்தாழ இணையான ஒரு வடிவம். தேவாரப் பாடல்கள் பண்முறைகளிலே சுமார் 1000 ஆண்டுகளாக பாடப்பட்டுவருகின்றன. உலகிலேயே தாளத்தோடும், பண்ணோடும், ஆழ்பொருள் பொதிந்த இசைப்பாடல்களாய், பல்லாயிரக்கணக்கான பாடல்கள் காலத்தால் முற்பட்டு உள்ளது தமிழிசையில் உள்ள தேவாரப்பாடல்களே. கி.பி. 7-9 ஆம் நூற்றாண்டுகளில் எழுந்த தேவாரத்தில் அப்பர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், சுந்தரர் ஆகிய மூவர் பண் அமைத்துப் பாடிய பாடல்கள் மட்டுமே 9295 பாடல்கள் ஆகும். உலகில் வேறு எந்த மொழியிலும் இசை இப்படி வளமாக வளர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. தேவாரப் பாடல்கள், வழிவழியாய் வரும் பழந்தமிழ் இசையின் பண்பாட்டில் வளர்ந்த ஒன்று. கி.மு. 200 - கி.பி. 200 ஆகிய நூற்றாண்டுகளில் எழுந்த சங்க இலக்கியத்தில் பண்களைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. இக்குறிப்புகள் அக்காலத்தில் இருந்த இசையின் நுட்பம், வளர்ச்சி பற்றி தெளிவாக உணர்த்துகின்றது. பண்பற்றிய செய்திகட்கொண்ட மறைந்த இசை நூல்கள் பலவற்றைப் பற்றியும் அறியமுடிகின்றது. கி.பி. 200 - கி.பி. 400 நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுந்ததாகக் கருதப்படும் சிலப்பதிகாரத்தில், பண்களைப்பற்றி விரிவான குறிப்புகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின் உரையாசிரியர்கள் தரும் விளக்கங்களினால், பண்ணிசையின் மிக வளர்ந்த நிலையும், இசை, நடன நிகழ்ச்சிகளின் வளர்ச்சியடைந்த நிலையையும் தெளிவாக விளங்குகிறது. + +பண்கள் மொத்தம் 103 என்று குறிப்பிடப்பட்டுள்ளன. தேவாரத்திலும் திருமுறைகளிலே குறிக்கப்பட்டுள்ள 24 பண்களைக் க��ழே காணலாம். அவற்றுக்குச்சமமான தற்கால இராகங்கள் அருகே தரப்பட்டுள்ளன. + + + + + +சங்க இலக்கியம் + +சங்க இலக்கியம் எனப்படுவது தமிழில் கிறிஸ்துக்கு முற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியம் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன. + +19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களானசி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் ஆகியோரது முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அச்சுருப் பெற்றன. சங்க இலக்கியங்கள் "எட்டுத்தொகை" நூல்கள்,"பத்துப்பாட்டு" நூல்கள்,"பதினெண் கீழ்க்கணக்கு" நூல்கள் எனப் பெரும்பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. + + + + + + + +புஜைரா + +புஜைரா ("Fujairah") என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் ஒன்று. அந்த அமீரகத்தின் ஒரே நகரமும் அதே பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நாட்டின் கிழக்குக் கரையில் முழுமையாக அமைந்துள்ள ஒரே அமீரகம் இதுவேயாகும். + + + + +கோர்பக்கான் + +கோர்பக்கான், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலொன்றான சார்ஜாவின் ஒரு பகுதியாகும். இந்த நகரம், நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதிகள் கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கொண்டவை. மேற்குக்கரையிலுள்ள முக்கிய நகரங்களைப்போலன்றி, மலைப்பாங்கான நிலத்தோற்றத்தைக் கொண்டது இப்பகுதி. கோர்பக்கான் துறைமுகம் நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகும். + +இதன் அழகிய கடற்கரை, நாட்டின் சந்தடி மிக்க நகரப் பகுதிகளிலிருந்து அமைதி வேண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றது. + + + + +துபாய் கடைவல விழா + +துபாய் கடைவல விழாவில், ("Dubai Shopping Festival") "குளோ��ல் வில்லேஜ்" என்று ஆங்கிலத்தில் அறியப்படும் உலகக் கிராமம் ஒரு முக்கியமான அங்கமாகும். ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய உலகின் பல பகுதிகளிலிருந்தும் கொண்டுவரப்படுகின்ற பலவகையான உற்பத்திப் பொருட்களும், கலை நிகழ்ச்சிகளும் இங்கே ஒரு சேரக் காட்சியளிக்கின்றன. + +ஒவ்வொரு ஆண்டும், முன்னைய ஆண்டிலும் அளவிலும் தரத்திலும் வளர்ச்சியடைந்து செல்லும் இது, 2004 ஆம் ஆண்டில் 58 நாடுகளின் காட்சியகங்களைக் கொண்டுள்ளது. ஓவ்வொரு ஆண்டும், இந்நாடுகள் தங்கள் தங்கள் நாடுகளின் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில், புத்துப்புதுக் கருத்து வடிவங்களைக் கொண்டு, இந்தத் தற்காலிகக் கட்டிடங்களைக் கண்கொள்ளாக் காட்சியாகத் தருகின்றன. 2003 ல், ராஜஸ்தான் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தியக் காட்சியகம், சிறந்த காட்சியகமாகத் தெரிவுசெய்யப்பட்டது. 2004 ல், இந்தியக் காட்சியகம் கேரளத்தின் பாணியைத் தழுவியுள்ளது. + +இந்த விழா நடைபெறும் ஒரு மாதகாலம் முழுதும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்து குவியும் மக்களுக்கு இந்த உலகக் கிராமம் ஒரு முக்கிய இலக்காகும். இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிங்கப்பூர், எகிப்து, சிரியா, தாய்லாந்து, லெபனான் போன்ற நாடுகளின் காட்சியகங்களுக்குள் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். அதுபோல வித்தியாசமான கைப்பணிப் பொருட்களால் நிறைந்திருக்கும் ஆபிரிக்க நாடுகளின் காட்சியகங்களும் மக்களைப் பெருமளவில் கவர்கின்றன. + +ஒவ்வோராண்டும் இந்தியா தனது காட்சியகத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்படும் அரங்கில் கலைநிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இதேபோல் வேறும் பல நாடுகள் தங்கள் தங்கள் கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் கலை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். + + + + + +மேளகர்த்தா + +மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன. + +இதைத் "தாய் இராகம்", "கர்த்தா இராகம்", "சம்பூர்ண இராகம்", "மேள இராகம்", "ஜனக இராகம்", என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் எ��்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது, ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன. + +ஜனக இராகங்கள் அல்லது தாய் இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன: + +72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. வெங்கடமகி இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் கிரந்தத்தினின்றும் விளங்கியது. 72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சம பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. 72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களாக வகுக்கப் பட்டிருக்கின்றது. + +மேளகர்த்தாக்களின் வரலாறு 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த "வெங்கடமகி" எழுதிய "சதுர்த்தண்டிப் பிரக்காசிகை" என்னும் நூலிலும் "கோவிந்தாச்சாரியார்" என்பவர் இயற்றிய "சங்கிரக சூடாமணி" என்னும் நூலில் இருந்தும் அறிய முடிகின்றது. + +மேளகர்த்தா இராகங்களையும், அவற்றின் வகைகளையும், அவை உருவாகும் விதத்தையும் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம். + + + + + +தீரசங்கராபரணம் + +சங்கராபரணம் (அல்லது தீரசங்கராபரணம்) கருநாடக இசை முறையில் 29 ஆவது மேளகர்த்தா அல்லது ஜனக இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். இந்துஸ்தானி இசையில் "பிலாவல் தாட்" என்றழைக்கப்ப்டுகிறது. + + + + + + + + + +புகழ்பெற்ற கருநாடக இசைக்கலைஞர்களின் பட்டியல் + +உலகின் தொன்மையான இசைவடிவங்களில் ஒன்றாகக் கருதப்படும் கருநாடக இசையை வளர்த்து உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்ததிலும், தற்போது பேணி காத்து வருவதிலும் ஏராளமான இசைக் கலைஞர்களுக்குப் பங்கு உண்டு. சிலருடைய பெயர்கள் இசை வரலாற்றில் நின்று நிலைத்துள்ளன. வேறும் சிலருடைய பெயர்கள் போதிய பிரபலமில்லாது போயிருக்கலாம். + +இசை ரசிகர்களுடைய மனங்களில் இருக்கும் கலைஞர்கள் ஆயி���க்கணக்கில் இருக்கக்கூடும். அவர்களில் சிலருடைய பெயர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. + + +"முதன்மைக் கட்டுரை": தமிழிசை மூவர் + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +கோலங்களின் வகைகள் பட்டியல் + + + + + + + + + + +வில்வ இலைக் கோலம் + +இது மிகப்பரவலாக அறியப்பட்டதும், பொதுவாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுவதுமான ஒரு கோலமாகும். மிகச் சிறிய ஐந்து புள்ளிக் கோலத்திலிருந்து, விரும்பியபடி எந்த அளவுக்கும் பெரிதாக்கிக் கொண்டு செல்லக்கூடிய இலகுவான கோலங்களில் இதுவுமொன்று. நிறப் பொடிகளால் நிரப்பி அழகு படுத்துவதற்கும் மிகவும் ஏற்றது. + + + + + +சமையல் + +சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது "பக்குவப்படுத்துதல்" என்ற பொருள் கொண்ட "சமை" என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும். + +குறுகிய பொருளில் இது, உணவுப்பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும். மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட காலம் முதல் சமையல் என்பது பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக வளர்ச்சி பெற்றுள்ளது. + +தீமை விளைவிக்கக் கூடிய கோலுரு நுண்ணுயிர்களைக் கொல்வதும் வெப்பமூட்டுவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 45 முதல் 140 °F (அல்லது 5 to 60 °C) வரையான வெப்பநிலையே ஆபத்து வலயமாகும். இவ் வெப்பநிலைகளில் பக்டீரியாக்கள் தீவிரமாக வளர்ச்சியடைகின்றன. அதிக வெப்பமூட்டல் பலவகையான உயிர்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் சிதைத்துவிடக் கூடும். + +வெப்பம் பயன்படுத்தாமலும் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதுண்டு. + +உணவு எப்போது முதன்முதலில் சமைக்கப்பட்டது என்பது தொல்லியல் ரீதியாக இன்றும் மிகத்துல்லியமாக அறியப்படவில்லை. 250,000 ஆண்டுகளுக்கு முன்னரே மனிதன், அடுப்புகள் தோன்றியதும் சமைக்கத் தொடங்கிவிட்டான் என்பது மானிடவியலாலர்களின் கருத்தாகும். கிரிஸ் ஓர்கன், சார்லஸ் நுன், சாரின் மச்சாண்டா மற்றும் ரிச்சார்ட் ரங்கம் ஆகிய தொகுதிப் பிறப்பு ஆய்வாளர்கள், சமைப்பது சுமார் 1.8 மில்லியன் ஆண்டிலிருந்து 2.3 மில்லிய��் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியதாக கூறுகின்றனர். + +சமைத்தல் என்பது மனிதக் கூர்ப்புபின் முக்கிய அம்சம் என ரங்கம் குறிப்பிடுகிறார், இது மனிதனுடைய நேரத்தையும் வேலையையும் இலகுவாக்கியதால் மூளை வளர்ச்சிக்கு வித்திட்டது என கூறுகிறார். அவர் ஆரம்ப மனிதனின் குடல் அளவு சதவீதம் குறைய நேரடியாக மூளையின் வளர்ச்சி அதிகரித்திருக்கும் என மதிப்பிடுகிறார். எப்படியிருந்தாலும் அதிகமான ஏனைய மனிதவியலாளர்கள் ரங்கமை எதிராக கூறுகின்றனர், அவர்கள் 300,000 ஆண்டுகளுக்கு முதலே மனிதன் சமையலைத் தொடங்கினான் என்பதற்கு ஆதாரங்களை முன்வைக்கின்றனர். முற்கால அடுப்புக்கள் மற்றும் பூமி அடுப்புக்கள் என்பன ஐரோப்பாவிலும் மத்தியகிழக்கிலுமே முதலில் தோன்றின. இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இவ்வுலகில் மனிதனால் தேவைக்காக எரிக்கப்பட்டதென நம்பப்படுகின்ற இடங்களே மற்ற மானுடவியலாளர்களுக்கு நிரூபணமாக உள்ளது. அதிகமான மானிடவியலாளர்கள், மூளை வளர்ச்சி சமையல் அறிமுகமாக முதலே மனிதன் இடம்பெயர்ந்த போது கொட்டைகள், பெரிகள் மற்றும் இறைச்சி போன்றவற்றை பெற்றுக்கொள்ளும்போதே ஏற்படாதென நம்புகின்றனர். + +உணவு மற்றும் சமையற்கலை கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியாவில் உணவு ஒரு உன்னதமான அடையாளமாக மாறியது. எப்படியிருந்தாலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமையற்கலை என்பது ஒருநாட்டின் அடையாளத்தை பிரதிபலிப்பதாக மாற்றமடைந்தது. நவீன உலகக் கண்டுபிடிப்புக்கள் உணவு வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. காரணம் ஐரோப்பாவிலிருந்தும் ஐரோப்பாவிற்கும் மாற்றம் செய்யப்பட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, சோளம், அவரை மற்றும் மரக்கறிகள் போன்றவை. தொழிற்புரட்சியும் தேசியத்தில் உணவின் முக்கியத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தியது. + +உணவைச் சமைக்க பயன்படுத்தும் பொருட்கள் பெரும்பாலும் உயிரினங்களிலிருந்து பெறப்படுகின்றன. மரக்கறிகள், பழங்கள், தானியங்கள், சுவைச்சரக்குகள் போன்றவை தாவரங்களிலிருந்து பெறப்பட இறைச்சி, முட்டை மாறும் பாலுணவுகள் மிருகங்களிலிருந்து பெறப்படுகின்றன. சமைப்பதற்குப் பயன்படும் காளான் மற்றும் மதுவம் என்பன ஒரு வகையான பூஞ்சையிலிருந்து பெறப்படுகி��்றன. சமையற்காரர்கள் நீர் மற்றும் உப்பு போன்ற கனிமங்களையும் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். + +புரதம், கார்போவைதரேட்டு மற்றும் கொழுப்பு போன்ற பல்வேறு வகையான மூலக்கூறுகள் இயற்கையாகவே உணவில் காணப்படும். அவைகளும் நீர் மற்றும் கணிமங்களையும் கொண்டுள்ளன. + += சமையல் முறைகள் == + +சமையலில் பல வகையான முறைகள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. + + +பல்வேறு நாடுகளில் உள்ள உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள் இங்கு இடம்பெறும். + + + + + +பாகல் இலைக் கோலம் + +பாகல் இலைக் கோலம் பாகற்கொடியின் இலைகளை ஒத்த வடிவங்களைக் கொண்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். அருகில் உள்ள படம் 15 புள்ளிகளில் தொடங்கி, ஊடுபுள்ளிகளாக ஒன்றுவரை புள்ளிகள் இட்டு வரையப்பட்ட கோலம் ஒன்றைக் காட்டுகிறது. புள்ளிகள் நேர்கோடுகளாலும், வளைகோடுகளாலும் இணைக்கப்படுகின்றன. + +இக் கோல வடிவத்தின் அடிப்படை அலகு, ஒன்பது புள்ளிகளுடன் தொடங்கி வரையப்படக்கூடியது. ஒரு அலகில், ஆறு இலைகள் ஒரு வளையம் போல் இணைந்த அமைப்பு உள்ளது. இவ்வளையத்தின் நடுவில் ஒரு நட்சத்திர வடிவம் உள்ளது. மையத்தில் உள்ள தனிப் புள்ளியைச் சுற்றி ஒரு சிறு வட்டம் வரையப்படும். + +இங்கே காட்டப்பட்டுள்ள கோலம் இத்தகைய நான்கு அலகுகள் இணைந்த வடிவமாகும். மேலும் அலகுகளை இணைப்பதன்மூலம் இதனை வளர்த்துச் செல்ல முடியும். + + + + + +தேர்க் கோலம் + +இது இவ்வகைக் கோலத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது கோயில்களில் பயன்படுத்தப்படுகின்ற தேரின் வடிவத்தைப் போல் வரையப்பட்டது. கோலம் போடுபவர்கள் தமது கற்பனை வளம், கால அவகாசம், இட வசதி என்பவற்றுக்கு அமைய இக் கோலத்தின் அளவு, வடிவம் என்பவற்றைத் தேவைக்கேற்ப மாற்றுவதன் மூலம் பல வகைத் தேர்க் கோலங்களை உருவாக்குகிறார்கள். + + + + + +கோலம்-8 + +குறைந்த நேரத்தில் இலகுவாக வரையக்கூடிய அழகிய கோலம். புள்ளிகளில்லாத வேறு குறியீடுகளை உபயோகப்படுத்தும் கோலங்களில் இதுவுமொன்று. அளவும், வடிவமும் வேண்டியபடி மாற்றிக்கொள்ளப்படக் கூடியது. + + + + + +யாழ்ப்பாண மாவட்டம் + +யாழ்ப்பாண மாவட்டம் ("Jaffna District") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்று. இது நாட்டின் வடகோடியில் அமைந்துள்ளது. மேற்கில் மன்னார் வளைகுடாவும், வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியாலும் சூழப்பட்டுள்ளது. இலங்கையின் தலை போல் அமைந்துள்ள, யாழ்ப்பாணத் தீபகற்பத்தின் பெரும்பகுதியை இந்த மாவட்டம் உள்ளடக்கியுள்ளதுடன், தெற்கேயுள்ள பல தீவுகளும் இதனுள் அடங்கும். இத் தீபகற்பத்தினுள்ளிருக்கும், தொண்டமானாறு, உப்பாறு போன்ற கடல்நீரேரிகளால், இம்மாவட்டம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப் பிரிவுகள், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவுப் பகுதி என அழைக்கப்படுகின்றன. இம் மாவட்டத்தின் தெற்கு எல்லையில், யாழ்மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இருந்து 1984 பெப்ரவரியில் பிரிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டம் உள்ளது. + +யாழ்ப்பாண மாவட்டம் இலங்கையின் வரண்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவிலிருந்து வரும் வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றினால் மழையைப் பெறும் இப்பகுதி ஆண்டு தோறும் 1231 மிமீ மழை வீழ்ச்சியைப் பெறுகிறது. ஆகக்கூடிய மாதாந்த சராசரி வெப்பநிலை 29.5 C ஆகவும், குறைந்த வெப்பநிலை 25.2 C ஆகவும் உள்ளது. சராசரி ஈரப்பதன் --- ஆகும். + +யாழ்ப்பாண மாவட்டத்துக்குச் செல்லும் எவருக்கும், அம் மாவட்டத்தின் தனித்துவமான தன்மையாகத் தெரியும் முதல் விடயம், மைல் கணக்கில் பரந்து கிடக்கும் பனந்தோப்புக்களாகும். + +யாழ் மாவட்டம் வரண்டதாகவும், அளவிற் சிறியதாகவும் இருந்தும், இது மிகவும் சனத்தொகைச் செறிவு மிக்கதாகும். ஐந்து மாவட்டங்களையும் 8848.11 ச.கிமீ பரப்பளவையும் கொண்ட வடமாகாணத்தில், 1025.2 ச.கிமீ அளவுக்குள் அடங்கியுள்ள இம்மாவட்டத்தினுள் 66.6% வீதமான மக்கள் வாழ்ந்ததாக 1981 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்புக் காட்டுகிறது. இங்கே தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர் எனும் மூவினத்தவரும் வாழ்ந்தாலும், யாழ்மாவட்டத்தின் மக்கள் தொகையில் மிகப்பெரும்பான்மையினர் இலங்கைத் தமிழர் ஆவர். சமய அடிப்படையில், இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சிறுபான்மையாக உள்ளனர். பௌத்தர்கள் மிகக் குறைவே. + +இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இம்மாவட்டத்தை நிர்வகிக்கும் அதிகாரி, மாவட்டச் செயலாளர் (முன்னர் அரசாங்க அதிபர்) என அழைக்கப்படுகிறார். இம்மாவட்டம் 14 ��ிரதேசச் செயலாளர் பிரிவுகளாக (முன்னர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள்) என அழைக்கப்படும் பல துணைப் பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. + + +ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவும் ஒரு பிரதேச செயலாளரின் கீழ் செயல்படுகின்றது. இந்தத் துணைப் பிரிவுகளும் மேலும் 434 கிராம சேவை அலுவலர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. + +இவற்றைவிட மக்களால் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி நிர்வாக அமைப்பில் அடங்கும், மாநகரசபை, நகரசபை, மற்றும் பிரதேச சபைகளாகவும் யாழ்ப்பாண மாவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் + + +ஏ-9 கண்டி-யாழ் நெடுஞ்சாலை 2006, ஆகத்து 11 முதல் மூடப்பட்டு 2009 ஆம் ஆண்டில் நான்காம் ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து மீளத் திறக்கப்பட்டது. + + + + + +பனை + +பனை ("Palmyra Palm"), புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப் பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு ("borassus") என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. + +பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். + +பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும் + +பொது வழக்கில் மரம் என்று தமிழில் வழங்கப்படினும், இது மர வகையைச் சார்ந்தது அல்ல. தற்காலத் தாவரவியல் அடிப்படையில் மட்டுமன்றித் தமிழ் இலக்கண மரபுகளின்படியும் பனையை மரம் என்பது தவறு. தமிழில் உள்ள மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் புல், மரம் என்பவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பின்வருமாறு வரையறை செய்கிறது. + +பலவகையான பயன்களை நெடுங்காலத்துக்குத் தருவதால் பனையை, கேட்டதைக் கொடுக்கும் தேவலோகத்து மரம் எனத் தொன்மங்கள் கூறும் கற்பகதருவுக்கு ஒப்பிடுவர். + +பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை + +1. ஆண் பனை, 2. பெண் பனை, 3. கூந்தப்பனை, 4. தாளிப்பனை, 5. குமுதிப்பனை, 6.சாற்றுப்பனை, 7. ஈச்சம்பனை, 8. ஈழப்பனை, 9. சீமைப்பனை, 10. ஆதம்பனை, 11. திப்பிலிப்பனை, 12. உடலற்பனை, 13. கிச்சிலிப்பனை, 14. குடைப்பனை, 15. இளம்பனை 16. கூறைப்பனை, 17. இடுக்குப்பனை, 18. தாதம்பனை, 19. காந்தம்பனை, 20. பாக்குப்பனை, 21. ஈரம்பனை, 22. சீனப்பனை, 23. குண்டுப்பனை, 24. அலாம்பனை, 25. கொண்டைப்பனை, 26. ஏரிலைப்பனை, 27. ஏசறுப்பனை, 28. காட்டுப்பனை, 29. கதலிப்பனை, 30. வலியப்பனை, 31. வாதப்பனை, 32. அலகுப்பனை, 33. நிலப்பனை, 34. சனம்பனை + +போரசசு (பனை) என்னும் பேரினத்தில் வரும் சிற்றினங்கள் + +இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது எனக் கூறப்படுகிறது. ஆப்பிரிக்காவிலிருந்து மனித இனம் எங்கெங்கு இடம்பெயர்ந்ததோ அவ்விடங்களில் எல்லாம் ஆதி மனிதர்கள் பனை விதைகளை தங்களுடன் எடுத்துச் சென்றனர் எனச் சொல்லப்படுகிறது. ஏனென்றால், பனை மரங்கள் மக்கள் வாழும் பகுதிகளின் அருகிலேயே பெரும்பாலும் இருக்கிறது. இது பெரும்பாலும் அடர் காடுகளில் காண இயலாததற்கு காரணமாக இது கூறப்படுகிறது. + +இது ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன. +கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்த்தியாக உள்ளன. சேலம்,நாமக்கல்,சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. + +பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் ���தநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. + +அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது. + +விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும். + + +பனங்கை அல்லது பனை வரிச்சல் என்பது பனை மரத்தை நீளவாக்கில் அறுத்தால் வரும் நீளமான மரக்கட்டை ஆகும். இது கட்டிடக் கூரைகளில் பயன்படுத்தப்படுகிறது. + +பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகத்து மாதம் வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகத்து முதல் மார்ச்சு மாதம் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது. + +பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர். + +80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள். + +பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். + +உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது. + +எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன. + +தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது. + + + + + +மொழியியல் + +மொழியியல் "(Linguistics)" என்பது ஒரு மொழியை அறிவியல் முறைப்படி ஆராய்வதற்குரிய ஒரு துறையாகும். மொழியின் வடிவம், பொருள், சூழல் போன்றவற்றையும் மொழியியல் ஆய்வு செய்கிறது . முன்னதாக 4 ஆம் நூற்றாண்டில் இந்திய இலக்கண அறிஞரான பானிணி மொழியைப்பற்றி ஒரு முறையான ஆய்வு விளக்கத்தை எழுதியுள்ளார் . இந்நூலில் இவர் சமசுகிருத மொழியைப் பற்றி ஆய்வு செய்து முறையான விளக்கத்தை எழுதியுள்ளார் . +மொழியியலாளர்கள் ஒலி மற்றும் அர்த்தத்திற்கு இடையிலான ஓர் ஒற்றுமையைக் கவனிப்பதன் மூலம் பாரம்பரியமாக மனித மொழியை பகுப்பாய்வு செய்கின்றனர் . ஒலிப்பியல் என்பது பேச்சு மற்றும் உரையாடல் ஒலிகளைப் பற்றிய ஆய்வு ஆகும், மேலும் இது அவர்களின் ஒலி ���ொடர்பான மற்றும் ஒலிகளை தெளிவாக உச்சரிப்பதற்குரிய உச்சரிப்பொலியியல் பண்புகளுக்குள்ளும் நுழைகிறது. மறுபுறம், மொழியின் அர்த்தத்தை ஆய்வு செய்து உலகின் பிற கூறுகள், பண்புகள் மற்றும் உலகின் பிற அம்சங்கள் ஆகியவற்றிற்கு இடையேயான உறவுகளை எவ்வாறு புரிந்துகொள்வது, செயல்படுத்துவது மற்றும் பொருளை வழங்குவது, அத்துடன் எவ்வாறு நிர்வகிப்பது, தோன்றும் கருத்து மயக்கத்தை எவ்வாறு தீர்ப்பது ஆகியவற்றைப் பற்றியும் மொழியியல் பேசுகிறது . அதேவேளையில் சொற்பொருள்களைப்பற்றிய ஆய்வு, சூழல் எவ்வாறு மொழிக்கான பொருளை உருவாக்குகிறது என்ற உண்மை நிலையையும் ஆராய்வதை மொழியியல் நடைமுறையாகக் கொண்டுள்ளது . + +இலக்கணம் என்பது ஒரு மொழியில் சொற்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகள் தொடர்பான நடைமுறையாகும். இவ்விதிமுறைகள் ஒலிகளுக்கும் அவை தரும் பொருளுக்கும் பொருந்தும். மேலும், ஒலிக்கும் ஒலியமைப்புகளின் அமைப்பு சார்ந்த குரலியல், சொற்களின் அமைப்பு மற்றும் உருவாக்கம் சார்ந்த உருபனியல், சொற்றொடர்கள் உருவாக்கம் மற்றும் அமைப்பு சார்ந்த தொடரியல் உள்ளிட்டவற்றின் உட்கூறுகள் சார்ந்த துணைவிதிகளையும் இலக்கணம் வரையறை செய்கிறது. இலக்கணத்தின் கொள்கைகளில் நவீன இலக்கணக் கோட்பாடுகள் கவனம் செலுத்துகின்றன. இவை பெரும்பாலும் நோம் சோம்சுகியின் சித்தாந்தக் கல்வியின் பொது இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. [ +மொழியியல் ஆய்வு, கீழே தரப்பட்டுள்ள மூன்று விதமான அடிப்படைகளில் நடைபெறுவதாகக் காணப்படுகிறது. பழங்கால இலக்காண பதிப்பான தொல்காப்பியம், தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் உலக மொழிகளில் ஒரு மொழியியல் அய்வு என்பதில் முதான்மயும், தொன்மையும் பெற்றது. + + + + +இவ்வாறான பகுப்புகள் இருந்தாலும், பொதுவாக எவ்வித சிறப்பு அடைமொழிகளுமில்லாது, வெறுமனே "மொழியியலாளர்கள்" என்று அழைக்கப்படுபவர்கள், மொழியியலின் மையக்கருவாகக் கருதப்படும் சுதந்திர, கோட்பாட்டு விளக்கமுறை (synchronic) மொழியியல் பற்றியே முக்கியமாக ஆர்வமுடையவர்களாக உள்ளார்கள். இதுவே பொதுவாகக் "கோட்பாட்டு மொழியியல்" என்று அழைக்கப்படுகிறது. + +கோட்பாட்டு மொழியியல் பொதுவாக, ஓரளவுக்குத் தனித்தனியாக ஆராயத்தக்க வகையில் பல்வேறு பிரிவுகளாக வகுக்கப்படுகிறது. கீழ்வரும் பிரிவுகள் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன: + +இந்த ஒவ்வொரு பகுதியினதும் தனிப்பட்ட முக்கியத்துவம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, எனினும், கிட்டத்தட்ட எல்லா மொழியியலாளருமே இந்தப் பிரிவுகள் குறிப்பிடத்தக்க அளவு பொதுப் பகுதிகளைக் கொண்டிருக்கின்றன என்பதை ஒத்துக்கொள்வர். இருந்தாலும் ஒவ்வொரு துணைப்பிரிவும், குறிப்பிடத்தக்க அறிவுபூர்வ ஆய்வுகளைச் செய்யக்கூடிய அளவுக்குத் தனியான அடிப்படையான எண்ணக்கருக்களைக் கொண்டுள்ளன. + +கோட்பாட்டு மொழியியலின் மையக்கருவானது, மொழியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் (அநேகமாக நிகழ்காலம்) ஆராய்வதோடு சம்பந்தப்பட்டிருக்கும் அதேவேளை, வரலாற்று மொழியியல், எப்படி மொழி காலப்போக்கில், சிலவேளைகளில் நூற்றாண்டுகளில், மாற்றமடைகின்றது என்பதை ஆராய்கின்றது. வரலாற்று மொழியியல் வளமான வரலாற்றையும் (மொழியியல் துறை வரலாற்று மொழியியலிலிருந்தே உருவானது), மொழி மாற்றங்களை ஆராய்வதற்கான பலமான கோட்பாட்டு அடிப்படையையும் கொண்டுள்ளது. + +அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில், வரலாறல்லாத நோக்கின் கையே ஓங்கியுள்ளதாகத் தெரிகிறது. வரலாறல்லாத நோக்கு சார்ந்த திருப்பம், பேர்டினண்ட் சோசருடன் தொடங்கி நோம் சொம்ஸ்கி காலத்தில் முன்னணிக்கு வந்தது. + +வெளிப்படையாக வரலாற்று நோக்கு வரலாறுசார்-ஒப்பீட்டு மொழியியல் மற்றும் சொற்பிறப்பியல் (etymology) என்பவற்றை உட்படுத்தியுள்ளது. + +கோட்பாட்டு மொழியியல், ஒவ்வொரு மொழிக்கு உள்ளேயும், ஒரு குழுவாக எல்லா மொழிகளுக்கு இடையேயும் உள்ள பொதுவான தன்மைகளைக் கண்டுபிடித்து விளக்கமுயலுகின்ற அதேவேளை, பயன்பாட்டு மொழியியல், இந்தக் கண்டுபிடிப்புகளின் பெறுபேறுகளை ஏனைய துறைகளில் பயன்படுத்துகிறது. வழக்கமாகப் "பயன்பாட்டு மொழியியல்", மொழியியல் ஆய்வை, மொழி கற்பித்தல், மற்றும் ஏனைய துறைகளில் பயன்படுத்துவதைக் குறிப்பிடுகிறது. பேச்சுத் தொகுப்பு (Speech synthesis) மற்றும் பேச்சு அடையாளம்காணல்(Speech recognition), என்பன, கணனிகளில் குரல் இடைமாற்றிகளை ஏற்படுத்துவதற்கு மொழியியல் அறிவைப் பயன்படுத்தும் உதாரணங்களாகும். + +சூழ்நிலை மொழியியலே, மொழியியல் ஏனைய கல்வித்துறைகளுடன் தொடர்பு கொள்ளும் பகுதியாகும். சமூக மொழியியல், மானிடவியல்சார் மொழியியல் (anthropological linguistics), and மொழியியல்��ார் மானிடவியல் (linguistic anthropology) என்பன சமூகத்தை முழுமையாகக் கருத்திலெடுக்கின்ற சமூக அறிவியலும், மொழியியலும் தொடர்பு கொள்ளுகின்ற இடமாகும். + +திறனாய்வுப் பேச்சுக்கூறுபாடு (critical discourse analysis) இலே தான்பேச்சுக்கலை (rhetoric) உம் தத்துவமும் மொழியியலோடு தொடர்புகொள்ளுகின்றன. உளமொழியியலும் (psycholinguistics) நரம்புமொழியியலும் (neurolinguistics), மருத்துவ அறிவியல்கள் மொழியியலைச் சந்திக்கும் இடமாகும். ஏனைய, மொழியியலின் வேறு துறைத்தொடர்புகளுள்ள பகுதிகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும். மொழி கற்றல் (language acquisition), படிமலர்ச்சி மொழியியல், stratificational linguistics, மற்றும் அறிதிற அறிவியல் (cognitive science). + +எந்த அளவு பரந்த மொழி பயன் படுத்தும் குழுவினரை ஆராயவேண்டும் என்பதிலும் மொழியியலாளர்கள் வேறுபடுகிறார்கள். சிலர் குறிப்பிட்ட ஒருவருடைய மொழியை அல்லது மொழி அபிவிருத்தியை மிகவும் நுணுக்கமாக ஆராய்வர். சிலர் ஒரு முழு பேச்சுச் சமுதாயத்தினதுக்குத் தொடர்பான மொழிபற்றி ஆய்வு செய்வர். வேறு சிலர் எல்லா இடங்களிலும் உள்ள எல்லா மனித மொழிகளுக்கும் பொருந்தக்கூடிய விடயங்கள் பற்றி ஆராய முயல்வர். கடைசியாகக் குறிப்பிடப்பட்ட திட்டத்துக்காக நோம் சொம்ஸ்கி பிரபலமாக வாதிட்டார், அத்துடன் இது, உளவியல்சார் மொழியியல் (psycholinguistics) மற்றும் அறிதிற அறிவியல் துறைகளைச் சேர்ந்த பலரைக் கவர்ந்தது. மனித மொழியிற் காணப்படும் பொதுமைகள் மனித மனத்தின் பொதுமைகள் பற்றிய முக்கியமான உண்மைகளை வெளிப்படுத்தும் எனக் கருதப்பட்டது. + +"மொழியியல்" என்ற பெயரில் தற்போது நடைபெறும் பெரும்பாலான வேலைகள், சுத்தமாக விபரிப்பு சார்ந்தவையாகும். மொழியியலாளர்கள், கருத்துக்களெதையும் கூறாமல் அல்லது மொழியின் எதிர்காலப் போக்குத் திசைகளைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மொழியின் இயல்பை விளக்கவே முனைகிறார்கள். எனினும் பல தொழில்சார் மற்றும் அமெச்சூர் மொழியியலாளர்கள், எல்லோரும் பின்பற்றவேண்டிய நியமங்களை வைத்து, மொழிக்கான விதிகளையும் குறித்துக் காட்டுகிறார்கள். + +விதிப்புமுறை சார்பாளர்கள் (Prescriptivists), "பிழையான பயன்பாடு" என்று கருதி முத்திரை குத்தும் ஒரு விடயத்தில், விளக்கமுறையாளர்கள் (descriptivists) அப் பயன்பாட்டின் மூலம் எதுவென்று ஆராய முயல்வர்; அல்லது அதை "வினோதப் போக்கு" (idiosyncratic), என விளக்குவர், அல்லது, மிக நவீனமானது அல்லது அங்கீகரி���்க முடியாத வட்டார மொழிகளிலிருந்து பெறப்பட்டது போன்ற காரணங்களுக்காக விதிப்புமுறை சார்பாளர்களால் விரும்பப்படாத சில ஒழுங்குமுறைகளை வெளிப்படுத்துவார்கள். + +பெரும்பாலான சமகால மொழியியலாளர்கள் பேச்சு மொழியே மிகவும் அடிப்படையானது அதனால், எழுத்து மொழியிலும், பேச்சு மொழி பற்றி ஆராய்வதே முக்கியமானது என்ற கருதுகோளுடன் வேலை செய்கிறார்கள். இதற்கான காரணங்கள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்: + + +எழுத்து மொழியைப் பயில்வது பெறுமதியானது என்பதில் எல்லா மொழியியலாளர்களும் ஒத்த கருத்தையேகொண்டுள்ளார்கள். மொழித் தொகுப்பு மற்றும் கணிப்புமுறை மொழியியல் (computational linguistics), முறைகளைப் பயன்படுத்தும் மொழியியல் ஆராய்ச்சிகளில், பெருமளவு மொழியியல் தரவுகளைக் கையாள்வதற்கு, எழுத்து மொழி மிகவும் வசதியானதாகும். பெருமளவு பேச்சு மொழித் தரவுகளை உருவாக்குவதும், கண்டுபிடிப்பதும் கடினமாகும். + +மேலும், எழுத்து முறைமை பற்றிய ஆய்வும் மொழியியலின் பாற்பட்டதேயாகும். + + + + + + + +எழுத்து முறை + +எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logographic), அசையெழுத்து முறை (syllabic) மற்றும் ஒலியனெழுத்து முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். + +உலகின் முதல் எழுத்து முறைமை, கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் சுமேரியர்களிடையே உருவான ஆப்பெழுத்து (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, எகிப்திலும், சிந்துப் பள்ளத்தாக்கிலும் எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின. + +உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன. + +ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லை அல்லது உருபனை��் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு உருபனெழுத்துக்கள் தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், ஒலியனெழுத்து முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் எல்லா மொழிகளுக்கும் பயன்படக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, சீன மொழியின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். கொரிய மொழியும் ஜப்பானிய மொழியும் சீன உருபனெழுத்துக்களைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும். + +பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன உருபனெழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம் அராபிய எண்கள்ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை "வண்", "யூனோ", "ஒன்று", "ஏக்" என்று எப்படி அழைத்தாலும், 1 எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனைய உருபனெழுத்துக்கள் &, @ என்பவற்றையும் உள்ளடக்கும். + +உருபனெழுத்துக்கள் சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். மொழியியலாளர்கள் இதன் உபயோகத்தைத் தவிர்க்கிறார்கள். + +மிக முக்கியமான (அத்துடன், ஓரளவுக்கு, வாழுகின்ற ஒரே) நவீன உருபனெழுத்து முறைமை சீனம் ஆகும். இதன் எழுத்துக்கள் வேறுபாடான அளவு மாற்றங்களுடன், சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி மற்றும் பல ஆசிய மொழிகளில் பயன்படுகின்றன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் உருபனெழுத்து வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன. + +முழு உருபனெழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். + +"முதன்மைக் கட்டுரை: அசையெழுத்து" +உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, அசையெழுத்து, சொற்களை உருவாக்கும் அசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது. + +ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது. + +அசை எழுத்து முறைமையைப் பயன்படுத்தும் மொழிகளுள் பின்வருவனவும் அடங்கும். மைசீனியன் (Mycenaean) கிரேக்கமொழி (லீனியர் B) மற்றும் செரோக்கீ போன்ற உள்ளூர் அமெரிக்க மொழிகள். பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள், சில அசை அல்லாத அம்சங்களையும் கொண்ட அசையெழுத்து முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின. + +முழு அசையெழுத்துக்களின் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். + +"முதன்மைக் கட்டுரை: ஒலியனெழுத்து" + +ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ��ல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள்- ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது. + +ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமல் இருக்கவோ கூடும். + +முழுமையான ஒலியன் எழுத்துக்கள் பயன்படுத்துவதற்கும், பயிலுவதற்கும் இலகுவானது என்பதுடன், கல்வி வளர்ச்சியில் அவ்வாறான மொழிகள், சிக்கலானதும், ஒழுங்கற்றதுமான எழுத்துக்கூட்டு முறைகளைக் கொண்ட ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குறைந்த தடைகளைக் கொண்டவையாகும். பொதுவாக மொழிகள் எழுத்துமுறைமைகளில் தங்கியிராமல் வளர்வதாலும், எழுத்து முறைமைகள், குறிப்பிட்ட மொழிகளுக்கென வடிவமைக்கப்படாது, வேறு மொழிகளிலிருந்து கடன் பெறுவது உண்டு என்பதாலும், ஒலியன்களும், எழுத்தும் ஒன்றுடனொன்று பொருந்தும் அளவு மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சில சமயம் ஒரு மொழிக்குள்ளேயே வேறுபடுகின்றது. நவீன காலத்தில், மொழியியலாளர், ஏற்கனவே எழுத்துமுறைகளைக் கொண்டிராத மொழிகளுக்குப் புதிய எழுத்துமுறைமைகளை உருவாக்கும்போது, முழுமையான ஒலியன் எழுத்து முறைமைகளை உருவாக்குவதே இலக்காக உள்ளது. + +ஒலியன் எழுத்து (alphabet) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஒலியன் எழுத்து கட்டுரையைப் பார்க்கவும். +எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். + +விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, "அப்ஜாட்" (Abjad) ஆகும். "அப்ஜாட்" என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். "அப்ஜாட்"கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. "அப்ஜாட்"டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை. + +அறியப்பட்ட எல்லா அப்ஜாட்களும் செமிட்டிக் குடும்ப எழுத்துவகையைச் சார்ந்தவை. அத்துடன் அவையனைத்தும், மூல வடக்கு நீள் அப்ஜாட்டிலிருந்து பெறப்பட்டவயாகும். செமிட்டிக் மொழிகள், பெரும்பாலான சமயங்களில் உயிர்க் குறியீட்டைத் தேவையற்றதாக்கும் உருபன் அமைப்பைக் (morphemic structure) கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும். + +அரபி, ஹீப்ரூ பொன்ற சில "அப்ஜாட்"கள் உயிர்களுக்கான குறியீடுகளையும் கொண்டுள்ளனவெனினும், கற்பித்தல் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. "அப்ஜாட்"களிலிருந்து பெறப்பட்ட பல மொழிகள், உயிர்க் குறியீடுகளைச் சேர்த்து விரிவாக்கப்பட்டதன் மூலம், முழுமையான உருபன் எழுத்துகள் ஆகின. போனீசியன் "அப்ஜாட்"டிலிருந்து, முழுமையான கிரேக்க ஒலியன் எழுத்து உருவானது, ஒரு பிரபலமான உதாரணமாகும். இவ்வெழுத்துக்கள் செமிட்டிக் அல்லாத மொழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோதே பெரும்பாலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது. + +முழு abjads இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும். + +தமிழ் பிராமி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது. + +பனை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு ஏதுவாகத் தமிழ் பிராமி எழுத்துமுறையானது வட்டெழுத்து முறையாக உருமாறத் தொடங்கியது. வட்ட வடிவில் எழுதப்படும் தமிழ் எழுத்து வட்டெழு���்து என வழங்கப்பட்டது. தமிழில் வட்டெழுத்துகள் உருவான அதே கால கட்டத்தில், வடமொழியின் பிராமி எழுத்துமுறையில் பல்லவ கிரந்தம் என்ற புதிய எழுத்துமுறை பல்லவர் காலத்தில் உருவானது. தமிழ் வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒருசேர வளர்ச்சி பெறத் தொடங்கின. +ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் இந்த வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது. இது சற்றேறக்குறைய ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னர், தமிழ் வட்டெழுத்து முறையின் பயன்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. பிறகு, நவீன தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியில், பல்லவத் தமிழ் எழுத்துமுறை உருவாகியது. இருப்பினும், 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனாலும், கேரளத்தின் மலையாள மொழியில் இவ் வட்டெழுத்து முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. வட்டெழுத்து முறையின் மற்றுமொரு எழுத்து வடிவமாகத் திகழ்ந்த கோலெழுத்து முறையானது, மலையாள மொழியில் நீண்ட காலம் வழக்கில் இருந்து வந்தது. +வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடுகள் மிகுதியாகக் காணப்படும். இதன்விளைவாக, எகரம் மற்றும் ஒகரம் ஆகியவை தெளிவாக எழுதப்பெறும். இவற்றில் பகர, வகர வேறுபாடுகளைத் தெளிவாக வட்டெழுத்தில் அறிய முடியாதது ஒரு பெருங்குறையாகும். ஏனெனில், தமிழ் வட்டெழுத்து முறையில் இவை இரண்டும் வேறுபாடுகள் அறியவியலாத வகையில் ஒத்த வடிவங்களைக் கொண்டதாக அமைந்து காணப்படும். + +அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும். + +எனினும், பல்லவர் கால தமிழ் எழுத்துமுறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. தமிழ் எழுத்துகளில் இடம்பெறும் புள்ளி குறிக்கப்படாதது வாசித்தலில் சிக்கல்கள் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால், ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டு வாசிப்புகளும் எளிதில் பொருள் கொள்ளும் விதமும் இடையூறாக அமைந்தன. + + + + + + +மந்திரிமனை + +மந்திரி மனை என்பது இலங்க���யின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து. + +தற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70 x 80 மீட்டர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில், அதன் தென்மேற்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரிதாக இருந்திருக்கக்கூடும். + +இக்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களான செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும்; இக்கட்டிடத்தின் அமைப்பையும், அதன் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு, இக்கட்டிடம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என யாழ்ப்பாணச் சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனாலும், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள், குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்துக்கு உரியவை என்ற கருத்தும் உண்டு. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன்படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு. "மந்திரிமனை" என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமைக்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும் என்பதும் இவர்களது கருத்து. + +இக்கட்டிடத்தில் கடந்த நூற்றாண்டில் சில திருத்த வேலைகள் சில நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில், இது முக்கியத்துவம் பெறுகிறது. + +சில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வநதுள்ளது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது இது ஓரளவு திருத்தப்பட்டு உள்ளது. + + + + + + +பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் + +பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள். பனையிலிருந்து ஏராளமான உற்பத்திப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. முற்காலத்தில் தயாரித்துப் பயன்படுத்தப்பட்ட எத்தனையோ பொருட்கள் நவீன மாற்றீடுகளுக்கு இடம் கொடுத்து ஒதுங்கிக் கொண்டன. பனையிலிருந்து பல உப உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் மனிதர்களின் உணவும், விலங்குகளின் உணவும் அடங்கும். உணவுப்பொருட்களை விட கட்டடப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என பல பொருட்கள் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. + + + + + + + + + + + +திராவிடக் கட்டிடக்கலை + +இந்தியக் கட்டிடக்கலை வரலாற்றில் திராவிடக் கட்டிடக்கலை முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் ஆறாம் நூற்றாண்டளவில் தற்போதைய கர்நாடகப் பகுதிகளில் சாளுக்கிய ஆட்சியின் கீழ், அக்கால இந்தியக் கட்டிடக்கலைப் பாணியிலிருந்து விலகி, புதிய திராவிடக் கட்டிடக்கலைப் பாணி முகம் காட்டத் தொடங்கியது. எனினும், இப் பாணியின் மூலக்கருவை குப்தர்காலப் பௌத்த கட்டிடங்கள் சிலவற்றில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இந்தப் பாணியை ஏழாம் நூற்றாண்டளவில் ஆந்திரப் பிரதேசப் பகுதிகளிலும் காணக்கூடியதாக இருந்தது. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்லவ அரசர்களின் கீழும் பின்னர் சோழர், பாண்டியர், விஜயநகரம், நாயக்கர் ஆகிய ஆட்சிகளின் கீழும் தொடர்ந்து வளர்ந்து உயர்நிலை அடைந்தது. + +திராவிடக் கட்டிடக்கலையைப் பல துணைப் பிரிவுகளாகப் பிரித்து ஆராய்வது வழக்கம். பொதுவாகக் கால அடிப்படையில், அந்தந்த காலங்களில் முதன்மை பெற்றிருந்த அரசுகளின் தொடர்பில் இத் துணைப் பிரிவுகளை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்தியக் கட்டிடக்கலை (Indian Archtecture) என்னும் ஆங்கில நூலில் பேர்சி பிறவுன் என்பார் பின்வருமாறு திராவிடக் கட்டிடக்கலையைத் துணைப்பிரிவுகளாக வகுத்துள்ளார். + +பல்லவர் காலம் – (கி.பி 600 - கி.பி 900), சோழர் காலம் – (கி.பி 900 - கி.பி 1150), பாண்டியர் காலம் – (கி.பி 1100 - கி.பி 1350), விஜயநகரக் காலம் – (கி.பி 1350 - கி.பி 1565), நாயக்கர் காலம் – (கி.பி 1600 - ) + + +கல்லினால் கட்டிடங்களை அமைக்கும் முறையைத் தென்னகத்தில் அறிமுகப்படுத்தியது பல்லவர்களே. ஆரம்பத்தில் பாறைகளைக் குடைந்து குடைவரை கோயில்களை அமைத்தனர். அத்துடன் பாறைகளை வெளிப்புறத்தில் செதுக்கி ஒற்றைக்கல் கோயில்களையும் அமைத்தனர். பின்னர் கற்களைப் பயன்படுத்திக் கட்டுமானக் கோயில்கள் அமைக்கப்பட்டன. திருச்சிராப்பள்ளி, திருக்கழுங்குன்றம், தளவானூர், பல்லாவரம், நாமக்கல் ஆகியவை உட்படப் பல இடங்களில் பல்லவர்களின் குடைவரை கோயில்களைக் காணலாம். மாமல்லபுரத்திலுள்ள புகழ் பெற்ற "பஞ்ச பாண்டவர் ரதங்கள்" என அழைக்கப்படும் கோயில்கள் ஒற்றைக் கல்லில் செதுக்கி எடுக்கப்பட்டவை ஆகும். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்தப்பெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் என்பனவும் புகழ் பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலும் பல்லவர்களின் கட்டுமானக் கோயில்களுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். + + +தமிழகத்தில் சோழராட்சி முன்னணிக்கு வந்த முற்பகுதியில் (10 ஆம் நூற்றாண்டு) மிகுதியான அளவில் கோயில்கள் கட்டப்படதாகத் தெரியவில்லை; கட்டப்பட்டவையும் அளவிற் சிறியவையே. இக் காலத்தில் கட்டப்பட்ட கோயில்களுக்கு எடுத்துக்காட்டாகத் திருக்கட்டளையிலுள்ள சுந்தரேஸ்வரர் கோயில், கொடும்பாளூரிலுள்ள மூவர் கோயில், திருமயம், கண்ணனூரிலுள்ள பாலசுப்பிரமணியர் கோயில், திருச்சிராப்பள்ளி, சிறீனிவாசநல்லூரில் கட்டப்பட்ட குரங்கநாதர் கோயில் என்பவற்றைக் கூறலாம். + +சோழராட்சியின் தொடக்கக்காலக் கோயில்களில் பல கூறுகளில் புதிய பாணிகள் தென்பட்டபோதும், பல்லவர் காலக் கட்டிடக்கலை கூறுகளும் முற்றாக மறைந்து விடவில்லை. இக்காலக் கட்டிடங்கள் முன்னர் கூறியது போல் அளவிற் சிறியனவாக இருந்தாலும், பல்லவர் கட்டிடங்களோடு ஒப்பிடுகையில் முழுமை பெற்றவையாகக் காணப்படுகின்றன. + +சோழராட்சியின் பிற்பகுதி திராவிடக் கட்டிடக்கலையின் பொற்காலம் எனலாம். இராஜராஜ சோழன் காலத்தில் சோழர்கள் மிகவும் பலம் பெற்று விளங்கினர். அவர்களுடைய நாடு பரந்து விரிந்து இருந்தது. இந்திய நாட்டுக்கு வெளியேயும் அவர்களுடைய ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலம். இந்த அதிகார பலத்தினதும், செல்வ வளத்தினதும் பின்னணியிலேயே தஞ்சைப் பெரிய கோயில் என அழைக்கப்படும் பிருஹதீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. + + + + + +கட்டிடக்கலை வரலாறு + + + + + + + + + + + + + + + + +புல்லாங்குழல் + +புல்லாங்குழல் () மிகவும் தொன்மையான வரலாற்றையுடைய ஒரு இசைக்கருவி. உலகின் எல்லாப் பாகங்களிலும் காணப்படும் இது துளைக்கருவி ("aero phones") வகையைச் சேர்ந்தது. புல்லாங்குழல்கள் மிகப் பழங்கால இசைக்கருவியாகும். இவற்றில் கையினால்-துளையிடப்பட்ட துளைகள் கொண்ட பழங்கால புல்லாங்குழல்கள் கிடைத்துள்ளன. சுமார் 43,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம் வரையான பல புல்லாங்குழல்கள் இன்றைய ஜெர்மனியின் ஸ்வாபியன் ஜுரா பகுதியில் கிடைத்துள்ளன. இந்தப் புல்லாங்குழல்கள் ஐரோப்பாவில் நவீன கால மனிதனுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வளர்ந்துள்ள ஒரு இசை பாரம்பரியத்தின் சாட்சியாக உள்ளது. புல்லாங்குழல்களில் புகழ்பெற்ற பன்சூரி உட்பட குழல்கள், கி.மு. 1500 முதல் இந்திய பாரம்பரிய இசையில் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இந்து சமயத்தின் ஒரு முதன்மைக் கடவுளான கண்ணன் புல்லாங்குழலைக் கொண்டிருப்பார். +1150 - 1500 காலகட்டத்த��ல், ஆங்கிலத்தில் புல்லாங்குழல் முதன்முதலில் புளூட் (floute) அல்லது else flowte, flo(y)te எனவும், 9 முதல் 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பேசப்பட்ட பழைய பிரெஞ்சு மொழியில் ப்ளாட் (flaute) எனவும், பழைய ஆக்சிதம் மொழியில், அல்லது மற்றும் பழைய பிரெஞ்சு மொழியில் ஃபிளாட் (flaüt), ஃப்ளூட்டெ ( fleüte), ஃப்லாட்டெ ( flaüte), ஃப்ளஹுட் ( flahute) எனவும் அழைக்கப்பட்டது.  இடைக்கால உயர் ஜேர்மன் மொழியில் floite அல்லது இடச்சு மொழியில் fluit எனவும் வழங்கப்பட்டது. புல்லாங்குழலை குறிக்கும் புலூட் (flute) என்ற சொல் முதன்முதலில் 14 ஆம் நூற்றாண்டில் அறியப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியின்படி, இது ஜெஃப்ரி சாசர்ரின் த ஹவுஸ் ஆஃப் ஃபேமில், c.1380 இல் பயன்படுத்தப்பட்டது. + +இன்று, புல்லாங்குழல் குடும்பத்தைச் சார்ந்த எந்தவொரு கருவியையும் வாசிக்கும் ஒரு இசைக்கலைஞர் ஆங்கிலத்தில் flutist (அமெரிக்காவின் பொதுவான உச்சரிப்பு "FLEW-tist"), அல்லது flautist (ஐக்கிய இராச்சியத்தில் பொதுவாக உச்சரிக்கப்படுவது "FLAW-tist"), அல்லது வெறுமனே ஒரு புலூட் பிளேயர் (flute player) (மிகப் பொதுவாக) என அழைக்கப்படுகிறார். இப்போது கிட்டத்தட்ட வழக்கற்றுப் போன பிற ஆங்கில சொற்கள் ஃப்ளட்டர் (fluter) (15 -19 நூற்றாண்டுகள்) மற்றும் புளூட்டினிஸ்ட் (flutenist) (17 -18 ஆம் நூற்றாண்டுகள்). + +இதுவரையான காலக்கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புல்லாங்குழலில் பழமையான புல்லாங்குழலானது, ஒரு இளம் குகைக் கரடியின் தொடை எலும்பால் ஆனதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதில் இரண்டு முதல் நான்கு துளைகள்வரை இருந்திருக்கலாம், இது சுலோவியாவின் டிஜீ பேபே பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது சுமார் 43,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இருப்பினும், இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. 2008 ஆம் ஆண்டில் குறைந்தது 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மற்றொரு புல்லாங்குழல் மீண்டும் ஜெர்மனியின் உல்ம் நகருக்கு அருகில் உள்ள, ஹோஹெல் ஃபெல்ஸ் குகையில் காண்டெடுக்கப்பட்டது. இந்தப் புல்லாங்குழலானது ஐந்து துளைகளுடன் V- வடிவ வாயைக் கொண்டதாக உள்ளது. இது ஒரு பிணந்தின்னிக் கழுகின் இறக்கை எலும்பில் செய்யப்பட்டதாகும். இந்தக் கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் 2009 ஆகத்தில் நேச்சர் பத்திரிக்கையில் தங்கள் கண்டுபிடிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர். இந்த கண்டுபிடிப்பானது, உலக வரலாற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எந்தவொரு இசைக் கருவியையும்விட பழமையானதாகும், ஜெர்மனியின் ஜியாசென்ஸ்கொஸ்டெர்லேர் குகையில் காண்டெடுக்கப்பட்ட புல்லாங்குழல்கள் வரலாற்றில் புரட்சியை ஏற்படுத்தின அவை 42,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை பழமையான காலக்கட்டத்தவையாக கருதப்பட்டன. + +இந்தியாவின் பழைய இலக்கியங்களிலே இக்கருவியைப்பற்றிய ஏராளமான குறிப்புக்கள் உண்டு. தமிழின் சங்க இலக்கியங்களும் குழல் பற்றிப்பேசுகின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள ஆய்ச்சியர் குரவையிலே கொன்றைக்குழல், ஆம்பர் குழல், முல்லைக்குழல் என 3 வகைக் குழல்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் கடவுளான விஷ்ணு பகவானின் அவதாரமான கண்ணனின் கையிலுள்ளதாகச் சித்தரிக்கப்படும் புல்லாங்குழலுக்கு சமய ரீதியான முக்கியத்துவமும் உண்டு. + +முதன்முதலில் புல்லாங்குழல் வாசித்தவர் முருகன். கிருஷ்ணர் இல்லை. கிருஷ்ணர் காலம் ஐயாயிரம் ஆண்டு. முருகப் பெருமான் ஆதியும் அந்தமும் இல்லாதவர். திருமுருகாற்றுப் படையிலே, + +என வருகிறது. குழல் என்றால் புல்லாங்குழல் என்று அர்த்தம். யாழ் செயற்கை வாத்தியம். குழல் இயற்கை வாத்தியம். + +என்று வள்ளுவர், முதலில் குழலைச் சொல்லிவிட்டுப் பிறகு யாழைச் சொல்லுகின்றார். எது முக்கியமோ அதை முதலில் சொல்லுகின்றார். முருகப்பெருமான் குறிஞ்சி நிலக் கடவுள். குறிஞ்சி நிலத்திலே (மலையிலே) வாழ்கின்ற தெய்வம், மலையிலே விளைகின்ற மூங்கிலை வெட்டி அதைத் துளையிட்டுப் புல்லாங்குழல் வாசித்தாராம் சுப்பிரமணிய சுவாமி. + +இந்திய பாரம்பரிய இசை வரலாற்றில் புல்லாங்குழல்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன.இவை மூங்கிலால் தயாரிக்கப்படுகின்றது.இந்தியர்களின் கடவுளான கிருஷ்ணரே புல்லாங்குழலின் குருவாக கருதப்படுகிறது.மேற்கத்திய புல்லாங்குழலினை விட இவை சாதாரணமாகவே இருக்கின்றன.இந்திய புல்லாங்குழல்களில் இரண்டு வகைகள் உள்ளன.ஒன்று பன்சூரி வகையாகும்.இதில் ஆறு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.வட இந்திய ஹிந்துஸ்தானி இசைக்கு இவை பயன்படுகின்றன.மற்றொருவகை வேணு இவை தெனிந்திய கர்நாடக இசைகளில் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில் எட்டு விரல் துளைகளும் ஒரு ஆற்றுவாய் துளையும் இருக்கும்.தற்போது தென்னிந்திய புல்லாங்குழலாக கருதப்படுவது 20-ஆம் நூற்றாண்டில் சரப சாஸ்திரி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஏழு விரல்துளைகள் கொண்ட புல்லாங்குழல் ஆகும். + +சீனப் புல்லாங்குழல்கள் டிசி என அழைக்கப்படுகின்றன. இவை பல்வேறு அளவுகளிலும், பல்வேறு அமைப்புக்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் துளைகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 11 வரை வேறுபடுகின்றன. பெரும்பாலானவை மூங்கிலால் தயாரிக்கப்பட்டுள்ள போதிலும் மரம், எலும்பு, இரும்பு ஆகியவற்றாலும் ஆக்கப்பட்டவையும் காணப்படுகின்றன. + +நவீன சீன இசைநிகழ்ச்சிகளில் காணப்படக்கூடிய புல்லாங்குழல்களாவன பங்டி (梆笛), கூடி (曲笛), சிந்தி (新笛), டாடி (大笛) என்பனவாகும். நிலைக்குத்தாக வைத்து வாசிக்கப்படும் மூங்கிலாலான புல்லாங்குழல் சியாவோ (簫) என அழைக்கப்படுகின்றது. + +ஜப்பானியப் புல்லாங்குழல்கள் ஜப்பானிய மொழியில் பியூ (fue) (笛) (ஹிரகனா ふえ) என அழைக்கப்படுகின்றன. முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படுபவை, குறுக்க்காக வைத்து வாசிக்கப் படுபவை என இரு வகையிலும் பல சங்கீதப் புல்லாங்குழல்கள் ஜப்பானில் காணப்படுகின்றன. + +சோடினா எனப்படுவது முடிவுப் பகுதியில் வைத்து வாசிக்கப்படும் ஒருவகைப் புல்லாங்குழல் ஆகும். இது இந்து சமுத்திரத்தில் உள்ள தென்கிழக்கு ஆபிரிக்காவைச் சேர்ந்த மடகஸ்கார் தீவுகளில் பரவலாகக் காணப்படுகின்றன. தென்கிழக்காசியாவிலும் இந்தோனேசியாவிலும் இது சுலிங் என அழைக்கப்படுகின்றது. சமகாலத்தில் வசித்த பிரசித்தி பெற்ற சோடினா வாசிப்பவரான இரகோடோ பிராவின் (இறப்பு2001) புகைப்படம் அந்நாட்டுப் பணத்தாள் ஒன்றில் அச்சிடப்பட்டுள்ளது. + +புல்லாங்குழல், புல் இன வகையான மூங்கில் "மரத்தினால்" செய்யப்படுகின்றது. இதனால் இதற்குப் புல்லாங்குழல் என்று பெயர் ஏற்பட்டது. இளமையும் மூப்புமின்றி நடுவளர்ச்சியுடைய மூங்கில் மரத்தை வெட்டி நிழலிலே ஒராண்டு காலம் வைத்து அதிலிருந்து குழல் செய்வர். சீரான விட்டமுடைய ஒடுங்கிய மூங்கில் குழாயில், வாயினால் ஊதிச் இசையொலி எழுப்புவதற்காக நுனியில் ஒரு துளையும், விரல்களால் மூடித்திறப்பதன் மூலம் இவ் இசையொலியை வெவ்வேறு சுரங்களாக மாற்றி எழுப்ப உதவும் குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய பல்வேறு துளைகளையும் கொண்ட எளிமையான கருவியாக இது இருப்பதால், சமுதாயத்தின் எல்லாத் தரப்பிலுள்ளவர்களுக்கும் இலகுவில் கிடைக்கக்கூடியதாக இருக்கும் கர��வி + +புல்லாங்குழலின் நீளம் 15 அங்குலம்; சுற்றளவு 3 அங்குலம். இடப்பக்கம் மூடப்பட்டிருக்கும். வலப்பக்கம் திறந்திருக்கும். குழலில் மொத்தமாக 9 துளைகள் உண்டு. வாய் வைத்து ஊதப்படும் முதல் துளைக்கு முத்திரை அல்லது "முத்திரைத்துளை" என்று பெயர். இத்துளை, மற்ற எட்டு துளைகள் ஒவ்வொன்றுக்கும் நடுவில் உள்ள இடைவெளியை விட சற்றுத் தள்ளி இருக்கும். + +குழலின் 7 துளைகள் மீது 7 விரல்களை வைத்து வாசிக்க வேண்டும். 8 வது கடைசித்துளை பாவிப்பது இல்லை. இடது கை விரல்களில் கட்டை விரலையும், சிறு விரலையும்நீக்கி எஞ்சியுள்ள 3 விரல்களையும், வலது கை விரல்களில் கட்டை விரலைத்தவிர மற்ற 4 விரல்களையும் 7 துளைகளின் மீது வைத்து, முத்திரத் துளைக்குள் வாயின் வழியாகக் காற்றைச் செலுத்தி, துளைகளை மூடித் திறக்கும்போது இசை பிறக்கின்றது. + +புல்லாங்குழலின் நீளம், உள்கூட்டின் அளவு கூடும் போது சுருதி குறையும். புல்லாங்குழலில் 7 சுரங்களுக்கு 7 துளைகள் இருந்தாலும் வாசிப்பவரின் மூச்சின் அளவைக் கொண்டே நுட்ப சுரங்களை சரியாக ஒலிக்க முடியும். + +உலகம் முழுவதிலுமுள்ள பல விதமான இசைகளுக்கு ஒத்ததாகப் பல்வேறு சிறிய மாற்றங்களுடன் வெவ்வேறு விதமாகப் புல்லாங்குழல்கள் செய்யப்படுகின்றன + + + + + + + +டோரிக் ஒழுங்கு + +டொரிக் ஒழுங்கு என்பது கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகள் அல்லது ஒழுங்கு முறைமைகளுள் ஒன்றாகும். அயனிக் ஒழுங்கு, கொறிந்தியன் ஒழுங்கு என்பன ஏனைய இரண்டு ஒழுங்குகளுமாகும். இவற்றுள் டொறிக்கே காலத்தால் முந்தியது. கி.மு 7 ஆம் நூற்றாண்டிலிருந்து அறியப்பட்ட இது கி.மு 5 ஆம் நூற்றாண்டில் முதிர்ச்சி நிலையை எட்டியது. + +கிரேக்க டொறிக் தூண்கள் அடியில் பீடம் எதுவுமின்றி, நேரடியாகவே தளத்தின் மீது நிறுத்தப்பட்டுள்ளன. ஆரம்பகாலத்தில் தூண்களின் அடிப்பகுதியின் விட்டத்துக்கும், உயரத்துக்கும் உள்ள விகிதம் கிட்டத்தட்ட ஒன்றுக்கு நான்காக அமைந்திருந்தது. பிற்காலத்தில் உயரம், விட்டத்தின் ஐந்தரை மடங்குகளுக்கு மேல் உயரமுடையனவாக மெலிந்து அமைந்தன. தூண்களின் தம்பங்களைச் சுற்றித் தவாளிகள் (grooves) உருவாக்கப்பட்டன. அடிப்பகுதியிலிருந்து மேல்பகுதிவரை ஒடுங்கிச் செல்லுகின்ற இத் தூண்களின் மேற்பகுதி, அடிப்பகுதியின் ��ுக்கால் தொடக்கம் நாலில் மூன்று பங்கு வரையிலான விட்டத்தைக் கொண்டிருக்கின்றது. தம்பத்தின் உச்சியில் தூண்களின் தலைகள் அல்லது போதிகைகள் உள்ளன. தூணின் கழுத்துப் பகுதியிலிருந்து வளைவுடன், விரிந்துசெல்லும் இது, "அபகஸ்" என்று அழைக்கப்படும் சதுரவடிவப் பலகையில் நிறைவுறுகிறது. "எண்ட்ராபிளேச்சர்" (entablature) எனப்படும் தலைமை உத்திரம் இதன் மீது தாங்கப்பட்டுள்ளது. இந்த "எண்ட்ராபிளேச்சர்", ஒன்றன்மீதொன்று அமைந்துள்ள மூன்று பகுதிகளாக உள்ளது. இப்பகுதிகள் 1) ஆர்க்கிட்றேவ் (Architrave), 2) பிறீஸ் (Frieze), 3) கோர்னிஸ் (Cornice) என்பனவாகும். பிறீஸ், ஒரு குறிப்பிட்ட இடைவெளியிலமைந்த, தவாளிப்புகளிட்டு அலங்கரிக்கப்பட்ட நீள்சதுர வடிவுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளது. இவை "ட்றைகிளிப்ஸ் (triglyphs)" எனப்படுகின்றன. உண்மையில் இவை கோயில்கள் மரத்தால் கட்டப்பட்ட காலத்தில் இருந்த உத்திரங்களின் அந்தலைகளைப் பிரதிநிதித்துவப் படுத்துவனவாகும். "ட்றைகிளிப்ஸ்" களுக்கு இடையில் அமையும் வெளிகள் "மெட்டோப்ஸ் (metopes)" எனப்படுகின்றன. இவை வெறுமையாக விடப்படுவதுண்டு; அல்லது செதுக்கு வேலைகளால் நிரப்பப்படுவதுமுண்டு. +டொறிக் ஒழுங்கின் ஆரம்பகால உதாரணங்களுள் ஒன்றாக, மக்னா கிறீசியா என் அழைக்கப்படும், தெற்கு இத்தாலியின் பீஸ்ட்டம்(Paestum) என்னுமிடத்திலுள்ள கோயில் விளங்குகின்றது. கி.மு 449 அளவில் கட்டப்பட்ட, ஏதென்சிலுள்ள ஹெப்பீஸ்தஸ் கோயில் டொறிக் ஒழுங்கின் உயர்நிலை விளக்கமாக அமைந்துள்ளது. இதன் சமகாலத்ததும், அக்கால ஏதென்ஸின் மிகப்பெரிய கோயிலுமான பார்த்தினனும், சிற்றளவு அயனிக் அம்சங்கள் இருந்தாலும், பெரிதும் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றியே கட்டப்பட்டுள்ளது. + + + + +எப்பெசுடசு கோயில் + +எப்பெசுடசு கோயில் ( Temple of Hephaestus ) கிரீஸ் நாட்டின் மத்திய ஏதென்ஸில் உள்ளது. உலகில், கூடிய அளவு நல்ல நிலையிலிருக்கும் பழங்காலக் கிரேக்கக் கோவில் இதுவே எனினும், இதன் அண்மையிலிருக்கும், பிரபலமான கோயிலான பார்த்தினனிலும் குறைவாக அறியப்பட்டதாகவே இது உள்ளது. "எப்பெசுடத்தியம்" என்றும் இது அழைக்கப்படுகின்றது. பைசண்டைன் காலத்தில், கிரேக்கக் காவிய நாயகனான தீசியஸ் என்பவனுடைய எலும்புகள் இங்கே புதைக்கப்பட்டுள்ளதாக நிலவும் ஐதீகத்தைத் தொடர்ந்து, தீசியம் ( Theseum ) என்றும் இது அழைக்கப்படுவதுண்டு. + +இந்தக் கோயில், அக்கிரோப்பொலிஸிலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், நவீன ஆதென்ஸின் மையமான சிந்தக்மா சதுக்கத்திலிருந்து ஒரு கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கி.மு 449ல், அக்கால ஏதென்ஸின் மேற்கு எல்லையில், வார்ப்புத் தொழிலகங்களையும், உலோக வேலைத்தலங்களையும் கொண்டிருந்த பகுதியில் கட்டப்பட்டது. இதனால் இக்கோயில், கொல்லர்கள் மற்றும் உலோகவேலைக்கான கிரேக்கக் கடவுளான எப்பெசுடசுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. பார்த்தினனின் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்த இக்தினஸ் என்னும் கட்டிடக்கலைஞரால் இது வடிவமைக்கப்பட்டது. இது சிறிது உயர்வான இடத்தில் அமைந்திருப்பதால், பழங்காலத்தில், அகோராவிலிருந்து பார்க்கக்கூடியதாக இருந்திருக்கும். + +"பெந்தெலுஸ்" மலையிலிருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்களினால் டொறிக் ஒழுங்கைப் பின்பற்றிக் கட்டப்பட்ட இக் கட்டிடம், "ஹெக்சாஸ்டைல்" என அழைக்கப்படுகின்றது. இதன் முகப்பிலும், பின் பக்கத்திலும் ஒவ்வொன்றும் ஆறு தூண்களைக் கொண்டிருக்கின்றன என்பது இதன் கருத்தாகும். பக்கங்கள் ஒவ்வொன்றிலும் தலா 13 தூண்கள் உள்ளன. நடுவில் நாற்புறமும் சுவர்களால் சூழப்பட்ட அறை உண்டு. தூண் வரிசைகளுக்கு மேல் அவற்றின் மீது தாங்கப்பட்டுள்ள எண்ட்ராபிளேச்சர் என வழங்கப்படும் உத்திரப் பகுதியில் அமைந்துள்ள பிறீஸ், பொதுவாக ஒரு டொரிக் பாணிக்கட்டிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய படி, அலங்காரங்களற்றதாகவே உள்ளது. எனினும் இதற்கு மேல் அமைந்துள்ள, மரக்கட்டிடங்களில் துருத்திக்கொண்டிருக்கும் மர உத்திரங்களின் அந்தங்களைப் பிரதிபலிக்கும், தவாளிப்புகளினால் அலங்கரிக்கப்பட்ட "ட்ரிக்ளிப்ஸ்"(triglyphs) எனப்படும் உறுப்புக்களிடையேயுள்ள இடைவெளிகள் புடைப்புச் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. + +பார்த்தினனைப் போலன்றி, இக் கோயிலின் தூண்கள், பீடம், கூரையின் பெரும் பாகம் என்பன குறிப்பிடத்தக்க அளவு நல்ல நிலையிலேயே உள்ளன. எனினும் சில பகுதிகளும், அலங்கார அம்சங்களும், திருடர்களாலும், அரும்பொருட் கொள்ளையர்களாலும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் இக்கட்டிடம் கிறிஸ்தவ தேவாலயமாகப் - சென் ஜோர்ஜ் தேவாலயமாக - பயன்படுத்தப்பட்டது, இக்கட்டிடம் நல்ல நிலையிலி��ுப்பதற்கு முக்கிய காரணமாகும். எனினும் இதே காரணம் இதன் உட்புறத்தின் பழங்கால அம்சங்கள் அகற்றப்பட்டு கிறித்தவ தேவாலயத்துக்கேற்ற புதிய உட்புறம் அமைவதற்கு ஏதுவாகியது. + +கிறீசில் ஓட்டோமான் ஆட்சி நிலவிய நூற்றாண்டுகளில் எதென்ஸின் முதன்மையான கிரேக்க ஓதோடொக்ஸ் தேவாலயமாக இதுவே விளங்கியது. கிரீசின் முதலாவது சுதந்திர அரசனான மன்னன் ஓதோன், 1834ல் நகருக்குள் நுழைந்தபோது, அவனை வரவேற்பதற்கான முதல் பிரார்த்தனையும் இங்குதான் நடைபெற்றது. + +இன்று, கிரேக்க உட்துறை அமைச்சின் கீழுள்ள அரும்பொருட் செயலகத்தின் மேற்பார்வையில், ஒரு தொல்பொருள் களமாகப் பாதுகாக்கப்படுகின்றது. இதனைச் சுற்றி ஒரு வேலி போடப்பட்டிருப்பினும், பார்த்தினன் மற்றும் பல தொல்பொருட் சின்னங்களைவிட அருகில் சென்று இக்கட்டிடத்தைப் பார்க்க முடியும். இப்பொழுது இதனைச் சுற்றி ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இது ஏதென்ஸின் மத்தியில் ஒரு ரம்மியமான பசுமைப் பகுதியாக உள்ளது. இருந்தும், அக்ரோபொலிஸ் போன்ற இடங்களைவிடக் குறைவான சுற்றுலாப்பயணிகளே இங்கு வருகிறார்கள். + + + + +பார்த்தினன் + +பார்த்தினன் "(Parthenon)" என்பது கிரீசு நாட்டின் ஏதென்சு நகரத்திற்கு அண்மையிலுள்ள கோட்டையில் காவல் தெய்வம் கன்னி ஆதெனாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழங்கால கிரேக்க கோயிலாகும். கிரீசு நாட்டில் எஞ்சியுள்ள கட்டிடங்களில் மிகவும் புகழ்பெற்றது இந்தப் பார்த்தினன் கோயில் ஆகும். உலகம் போற்றும் இப்பழைய கோயில் கட்டிடம் 2500 ஆண்டுகளாக அங்கு நின்று கொண்டிருக்கிறது. ஏதெனியப் பேரரசின் ஆட்சி உச்சகட்டத்தில் இருந்த கி.மு 447 ஆம் ஆண்டு இக்கட்டிடத்தின் கட்டுமாணமப் பணி தொடங்கியது. கி.மு. 438 இல் கோயில் கட்டி முடிக்கப்பட்டாலும் கி.மு.432 வரை கோயிலை அலங்கரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. பொதுவாக இக்கோயில் கிரேக்கக் கட்டிடக்கலையின் மூன்று ஒழுங்குகளுள் ஒன்றான டோரிக் ஒழுங்கின் உச்சநிலையாக கருதப்படுகிறது. கோயிலுள்ள அலங்கார சிற்பங்கள் கிரேக்க கலையின் உச்சப்புள்ளிகளாகக் கருதப்படுகின்றன. பண்டைய கிரேக்கம், ஏதெனியக் குடியரசு மற்றும் மேற்கத்திய நாகரிகம் ஆகியனவற்றுக்கான ஒரு நிலையான அடையாளச் சின்னமாகவும் , உலகின் மிகச்சிறந்த கலாச்சார நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் பார்த்தினன் கோயில் கருதப்படுகிறது. பார்த்தினன் மற்றும் அக்ரோபோலிசில் கட்டப்பட்ட நினைவுச்சின்னங்களை கட்டிய ஏதென்சியர்கள் இவற்றை பாரசீக படையெடுப்பாளர்கள் மீது போரிட்டு வெற்றி பெற்ற எலனிக்கியர்களை கொண்டாடுவதற்காகவும், அவ்வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி சொல்வதற்காகவும் கட்டியதாகவே நினைத்தார்கள் . + +கோயிலின் சீரழிந்த பகுதிகளை சிரமைப்பதற்குத் தேவையான தேர்ந்தெடுக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டங்களை கிரேக்க கலாச்சார அமைச்சகம் தற்போது நடத்தி வருகிறது . பழைய ஆதெனா ஆலயம் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக புதிய பார்த்தினன ஆலயம் மட்டும் அங்கு நிறுவப்பட்டுள்ளது. வரலாற்று அறிஞர்கள் அதை முந்தைய பார்த்தினன் அல்லது பழைய பார்த்தினன் என்று அழைத்தார்கள் இது கி.மு. 480 இல் பாரசீக படையெடுப்பின் போது பழைய பார்த்தினன் ஆலயம் அழிக்கப்பட்டது. பார்த்தினன் ஆலயம் வாந்தொல்பொருளியல் அடிப்படையில் ஐயாடெசு விண்மீன்கொத்தை நேரமைத்து கட்டப்பட்டுள்ளது . பெரும்பாலான கிரேக்க கோயில்களைப் போலவே, பார்த்தினன் கோயிலும் நடைமுறையில் ஒரு கருவூலமாகப் பணியாற்றியது . + +ஒரு காலத்தில் இக்கோயில் டெலியான் லீக் என்ற நகர அரசின் கருவூலமாக இருந்தது, பின்னர் அது ஏதேன் பேரரசு ஆனது. ஆறாம் நூற்றாண்டின் இறுதி பத்தாண்டில் பார்த்தினன் கன்னி மேரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. 1460களின் தொடக்கத்தில் ஒட்டோமான் வெற்றிக்குப் பிறகு இது ஒரு மசூதியாக மாறியது. நீண்ட வரலாறு கொண்ட பார்த்தினான் 1687 ஆம் ஆண்டு. நடைபெற்ற துருக்கியப் போரின் (1683-1699) ஒரு பகுதியாக, வெனிசியர்கள் ஏதென்சைத் தாக்கவும் அக்ரோபோலிசைக் கைப்பற்றவும் மேற்கொண்ட போரில் மிகப்பெரிய பேரழிவினால் சேதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் மாதம் 26 அன்று கோயில் கட்டிடத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த தேவையற்ற படைதளவாடங்களை வெனீசியன் ஒருவன் பற்றவைத்த காரணத்தால் தீவிபத்து ஏற்பட்டு கோயில் வெடித்துச் சிதறியது. சிலைகள் சேதமடைந்தன. + +எல்கின் பளிங்குகள் அல்லது பார்த்தினன் பளிங்குகள் என்று அழைக்கப்பட்ட அச்சிலைகள் 1816 ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்திற்கு விற்கப்பட்டன. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அச்சிலைகளைத் ���ிரும்ப ஒப்படைக்கும்படி 1983 ஆம் ஆண்டு முதல் கிரீசு அரசாங்கம் பிரிட்ட்டன் அரசை கேட்டு வருகிறது. + +பார்த்தினன் என்ற பெயரின் தோற்றம் கிரேக்கச் சொல்லான παρθενών (பர்தினோன்) என்பதிலிருந்து வந்தது ஆகும், "திருமணமாகாத பெண்களின் அடுக்கு மாடி குடியிருப்பு" என்பது இதன் பொருள் எனக் குறிப்பிடப்படுகிறது, பார்த்தினனைப் பொறுத்தவரை கோவிலின் ஒரு குறிப்பிட்ட அறைக்கு மட்டுமே இப்பொருள் பயன்படுத்தப்பட்டது . கோயிலின் எந்த அறை இவ்வாறு பயன்படுத்தப்பட்டது? அதற்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதைப் பற்றி விவாதங்கள் நடந்தன. லிடெல்-சுகாட்-யோன்சு என்ற கிரேக்க-ஆங்கில அகராதி தொகுப்பாளர் யே.பீ. ப்யூரி கூறியது போலவே இந்த அறை பார்த்தினானின் மேற்கு செல்லாதான் எனக் கூறுகிறார் .. பனாதெனாயிக் விழாவில் ஆதெனாவுக்கு உடுத்துவதற்காக ஆடை நெய்யும் நான்கு பெண்கள் இருக்கும் அறையே பாத்தினான் என்று யமௌர்டி டி கிரீன் தெரிவிக்கிறார் . ஆதெனா பார்த்தியோசு ஆதெனா பொலியாசுடன் ஒத்ததாக இருக்கவில்லை, ஆனால் அதனுடன் நெருக்கமாக இணைந்திருக்கின்ற ஆதெனா பார்தியோசு உருக்குலைந்த ஒரு தனித்துவமான வழிபாட்டு ஆதெனாவை கொண்டிருப்பதாக கிறிசுடோபர் பெல்லிங் வலியுறுத்துகிறார் . இந்த கோட்பாடுகளின் அடிப்படையில் விளக்கினால் பார்த்தினான் என்ற சொல்லின் பொருள் "கன்னித் தேவியின் ஆலயம்" என்றும் கோவில் தொடர்புடைய ஏதெனா பார்த்தினோசின் வழிபாட்டு முறையையும் குறிக்கிறது . பார்த்தினோசு என்ற புனைப்பெயர் கன்னிப்பெண், ஆனால் திருமணமாகாத கன்னிப் பெண் என்பது பொருளாகும். மேலும் குறிப்பாக ஆர்ட்டெமிசு என்ற வனவிலங்குகளைக் காப்பாற்றுவதாகக் கருதப்படும் பெண் தெய்வத்தைக் குறிக்கும். வேட்டை மற்றும் தாவரங்கள், கைவினைகள், தந்திரம், புத்திசாலித்தனம், நடைமுறைகள் முதலானவற்றின் தெய்வமும் பார்த்தினோசு எனப்படுகிறது . + +கோயிலின் பெயர் மறைமுகமாகத் திருமணமாகாத கன்னிப் பெண்னைக் குறிப்பதால் அப்பெண்களின் உன்னதமான தியாகம் நகரத்தின் பாதுகாப்பிற்கு வழிவகுக்கும் என்றும் கருதப்பட்டது . பார்த்தினாசு கிறித்துவப் பெண் தெய்வம் கன்னி மரியாவைக் குறிப்பிடுவதாகவும் கொள்ளப்படுகிறது. இதனால் பார்த்தினான் கோயில் ஆறாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் கன்னி மேரிக்கு அர்ப்பண���க்கப்பட்ட ஒரு கிறித்துவ தேவாலயமாக மாற்றப்பட்டது. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த . டெமோசுடேனசின் எழுத்துக்களில் பார்த்தினன் என்பது கண்டிப்பாக முழு கட்டிடத்தையும் குறிக்கின்ற ஒரு பெயர் என்று காணப்படுகிறது. 5 ஆம் நூற்றாண்டு கட்டிடக் கணக்குகளில் இந்த அமைப்பு வெறுமனே ஒரு கோயில் என்று மட்டும் சுட்டுவதாக கருதப்ப்படுகிறது. கட்டிடக்கலைஞசர்களின் குறிப்புகளில் ஏதெனியக் கட்டிடக்கலையைச் சிறப்பிக்கும் நூறு அடிக் கட்டிடம் என்று அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது , மேலும் நான்காம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் இந்த கட்டிடம் நூறு அடிக்கட்டிடமாகவும் பார்த்தினனாகவும் இருந்தது என்றும் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் புளுடார்ச்சு இந்த கட்டிடத்தை எகாடோம்பெடோசு பார்த்தினன் எனக் குறிப்பிடுகிறார் . + +கிரேக்கர்களின் காக்கும் தேவியான ஆதெனாவிற்கு பார்த்தினன் அர்ப்பணிக்கப்பட்டதால் சில நேரங்களில் அது மினெர்வா கோயில் என்று குறிப்பிடப்படுகிறது, இது, குறிப்பாக 19 ஆம் நூற்றாண்டில் ஆதெனாவின் ரோமானிய பெயர் மினெர்வா ஆகும் . + +பார்த்தினோன் கட்டடக்கலையின்படி ஒரு கோயில் என்றாலும், பொதுவாக இது அழைக்கப்படுகின்ற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் உண்மையில் இல்லை . பழைய சரணாலயத்தின் தளத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டிடத்திற்குள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆதெனாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆதெனாவை நெருங்கி தெய்வத்தின் அருளைப் பெறவியலும் எனக்கருதப்பட்டது . ஆனால் ஏதென்சின் காவல்தெய்வமான ஆதெனா போலியாசின் வழிபாட்டுக்கு ஒருபோதும் பாத்தினன்னை வழங்கவில்லை. ஆதெனோபோலியாசிற்கு அக்ரீபோலிசுக்கு வடக்கில் ஆலயம் உள்ளது. + +1975 ஆம் ஆண்டில் கிரேக்க அரசாங்கம் பார்த்தினன் மற்றும் பிற அக்ரோபோலிசு கட்டமைப்புகளை மீட்டெடுக்க ஒரு ஒருங்கிணைந்த முயற்சியைத் தொடங்கியது. சிறிய தாமதத்திற்கு பின்னர், அக்ரோபோலிசு நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதறகான குழு ஒன்று 1983 இல் நிறுவப்பட்டது . இந்தத் திட்டம் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியைப் பெற்றது. தொல்பொருள் குழுவானது தளம் முழுவதும் மீதமுள்ள ஒவ்வொரு கலைப்படைப்பையும் முழுமையாக ஆவணப்படுத்தியுள்ளது, மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்கள் கணினி மாதிரிகளின் உதவியினால் தங்கள் மாதிரி இடங்களை தீர்மானித்தனர். அக்ரோபோலிசு அருங்காட்சியகத்திற்கு சிலைகள் மாற்றப்பட்டன. மீட்டெடுக்கும் பணி மிகவும் கவனத்துடன் தொடங்கப்பட்டது. . + + + + + +பைசண்டைன் கட்டிடக்கலை + +பைசண்டைன் கட்டிடக்கலை என்பது, பைசண்டைன் பேரரசு காலத்தில் உருவாகி வளர்ந்த ஒரு கட்டிடக்கலைப் பாணியாகும். கி.பி 330ல், கொன்ஸ்டண்டைன், உரோமப் பேரரசின் தலைநகரத்தை பைசண்டியத்துக்கு மாற்றியதுடன் பைசண்டைன் பேரரசு உதயமானது. இந்த "பைசண்டியம்" என்றபெயர் பின்னர் கொன்ஸ்டண்டினோப்பிள் என்று மாற்றப்பட்டது. தற்போது இதுவே இஸ்தான்புல் என வழங்குகிறது. + +ஆரம்பகால பைசண்டைன் கட்டிடக்கலை, உரோமக் கட்டிடக்கலையின் தொடர்ச்சியாகவே இருந்தது. இக் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணங்களாக, பைசண்டியம் சுவர்கள், யெரெபாட்டன் சரே என்பன விளங்குகின்றன. + +அண்மைக் கிழக்கு நாடுகளின் கட்டிடக்கலைச் செல்வாக்கினால், படிப்படியாகப் புதிய பாணியொன்று உருவாகத் தொடங்கியது. அத்துடன், கிறிஸ்தவ ஆலயக் கட்டிடக்கலையில் இன்றுவரை பின்பற்றப்படும், கிரேக்க சிலுவைக் கிடைப்பட வடிவம் பின்பற்றப்பட்டது. கற்களுக்குப் பதிலாகச் செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன. கிளாசிக்கல் ஒழுங்குகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. வளைவான அலங்காரங்களுக்குப் பதில் மொசைக்குகள் பயன்படுத்தப்பட்டன. குவிமாடங்களைத்(dome) தாங்குவதற்காகப் பெண்டெண்டிவ் என வழங்கப்படும் புதிய முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டது. + +இறுதியில் பைசண்டைன் கட்டிடக்கலை, ரோமனெஸ்க் மற்றும் கோதிக் (Gothic) கட்டிடக்கலைகளுக்கு இடம் விட்டு ஒதுங்கியது. கிழக்கில் இது, ஆரம்பகால இஸ்லாமியக் கட்டிடக்கலையில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டிருந்தது. டமாஸ்கஸில் உள்ள உம்மாயாட் பெரிய பள்ளிவாசல், மற்றும் ஜெரூசலத்தில் உள்ள டோம் ஒப் த ரொக் (Dome of the Rock) என்பன சிறந்த உதாரணங்களாகும். +பைசண்டைன் கட்டிடக்கலைக்குச் சிறந்த உதாரணங்களாக விளங்குவன: + +தற்கால எகிப்தில் + + +தற்கால கிரீசில் + + +தற்கால இத்தாலியில் + + +தற்காலத் துருக்கியில் + + +தற்கால உக்ரேனில் + + + + + +ஹேகியா சோபியா + +ஹேகியா சோபியா (; , "புனித ஞானம்"; / "Sancta Sapientia"; ) துருக்கியின் தலைநகரமான இஸ்தான்புல்லில் உள்ளது. முன்னர் கிழக்கத்திய மரபுவழிக் கிறித்தவப் பிரிவினரின் பெருங்கோவிலாக விளங்கிய இது, பின்னர் 1453 இல், மசூதியாக மாற்றப்பட்டது. 1935 ஆம் ஆண்டில் இது ஒரு அருங்காட்சியகம் ஆக்கப்பட்டு, "அயசோஃப்யா அருங்காட்சியகம்" என அழைக்கப்படுகின்றது. இது உலகின் சிறந்த கட்டிடங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகின்றது. எட்டாவது அதிசயம் என வர்ணிக்கப்படும் கட்டிடங்களில் இதுவும் ஒன்று. ஓட்டோமான் பேரரசு நிகழ்த்திய படையெடுப்பைத் தொடர்ந்து காண்ஸ்டாண்டிநோபுள் வீழ்ச்சியுற்றபோது, இப்பெருங்கோவிலை ஓட்டோமான்கள் கைப்பற்றினர். இதன் விளைவாகக் கிறித்தவம் நலிவடையத் தொடங்கியது. + +இக்கட்டடத்தை உருவாக்கும் பணி கி.பி. 532-537இல் நடந்தது. அதிலிருந்து கி.பி. 1453ஆம் ஆண்டுவரை அக்கட்டடம் கீழை மரபுவழித் திருச்சபையின் பெருங்கோவிலாகவும், திருச்சபை முதுமுதல்வரின் ஆட்சியிருக்கையாகவும் விளங்கியது. கி.பி. 1204–1261 காலக்கட்டத்தில் மட்டும் அப்பெருங்கோவில் உரோமன் கத்தோலிக்க இலத்தீன் பிரிவினரின் கையகம் வந்தது. உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்கு மாறியது. + +ஓட்டொமான் பேரரசு (உதுமானியப் பேரரசு இக்கோவிலைக் கைப்பற்றியது 1453இல் ஆகும். கிறித்தவ சமயத்தின் போதனைகளை விளக்கும் விதத்தில் அக்கோவிலில் எண்ணிறந்த கலை ஓவியங்கள் இருந்தன. அவற்றை இசுலாமிய ஆளுநர்கள் பெரும்பாலும் அழித்துவிட்டனர். அல்லது அக்கலை ஓவியங்களுக்கு மேலே இசுலாமியக் கலை அமைப்புகளைத் திணித்தனர். ஹாகியா சோபியா ஒரு முசுலிம் தொழுகைக் கூடமாக மாற்றப்பட்டது. + +1453–1931 ஆண்டுக்காலத்தில் முசுலிம் தொழுகைக் கூடமாகச் செயல்பட்ட ஹாகியா சோபியா கட்டடம் சமயச் சார்பற்ற கட்டடமாக மாற்றப்பட்டது. 1935ஆம் ஆண்டு பெப்ருவரி 1ஆம் நாளிலிருந்து அது ஒரு கலைக்கூடமாக மாற்றப்பட்டது. + +ஆறாம் நூற்றாண்டில் ஹாகியா சோபியா பெருங்கோவில் கட்டப்பட்டபோது அதற்கு அளிக்கப்பட்ட கிரேக்கப் பெயர் ”Ναός τῆς Ἁγίας τοῦ Θεοῦ Σοφίας” (Shrine of the Holy Wisdom of God = ”இறைவனின் தூய ஞானத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம்”). கிறித்தவக் கொள்கைப்படி, கடவுளின் ஞானமாக விளங்குபவர் கடவுளின் வார்த்தை ஆவார். அவரே மனிதராக இவ்வுலகில் உருவெடுத்த இயேசு கிறித்து ஆவார். இயேசு கிறித்து மனிதராக��் பிறந்த விழா திசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்பட்டது. + +இக்கோவில் சுருக்கமாக “புனித ஞானம்” (கிரேக்கம்: ஹாகியா சோபியா; இலத்தீன்: Sancta Sophia) என்று அழைக்கப்பட்டது. + +ஹாகியா சோபியா கோவிலின் குவிமாடம் உலகப் புகழ் பெற்றது. பிரமாண்டமாக அமைந்துள்ள அக்குவிமாடம் பைசான்சிய கலைக்கு உன்னத எடுத்துக்காட்டாக விளங்குகிறது.அது கட்டடக் கலையின் போக்கையே மாற்றியதாகக் கருதப்படுகிறது.ஏறக்குறைய ஆயிரம் ஆண்டளவாக இக்கோவில் உலகனைத்திலுமுள்ள எல்லாக் கிறித்தவக் கோவில்களிலும் மிகப் பெரிய பெருங்கோவிலாக விளங்கியது. 1520இல் எசுப்பானியா நாட்டு செவீயா பெருங்கோவில் (Seville) கட்டப்பட்ட வரை ஹாகியா சோபியா கோவில் பரப்பளவில் முதலிடம் பெற்றது. + + + + + + + + + +கொலோசியம் + +கொலோசியம் அல்லது கொலிசியம் ( ) ("Colosseum", "Coliseum", அல்லது "Flavian Amphitheatre") மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, (Latin: "Amphitheatrum Flavium"; Italian: "Anfiteatro Flavio" அல்லது "Colosseo" ), என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது பைஞ்சுதை மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும், கொலோசியம் ரோமானிய மன்றத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கி.பி. 72 இல் பேரரசர் வெஸ்பாசியின் ஆட்சிக் காலத்தில் இதன் கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது, கி.பி .80 ஆம் ஆண்டில் அவரது வாரிசான டைட்டஸின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. டோமிடியன் (81-96) ஆட்சி காலத்தில் கட்டடத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்த மூன்று பேரரசர்கள் ஃபிளவியன் வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர். + +அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 முதல் 80,000 மக்கள்வரை இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள். எனினும் இதில் சராசரியாக சுமார் 65,000 பார்வையாளர்களைக் கொண்டுருக்கலாம்; கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய ரோமப் பேரரசின் தலைநகரான ரோம் நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான கட்டிடம் ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் ���யங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்ட வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை "அம்ஃபிதியேட்டர்" (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் "வட்டவடிவ அரங்கம்" என்ற பொருள் கொண்டது. ‘’மிகப் பிரம்மாண்ட’’ எனும் வேறு அர்த்தமும் கொலோசியத்திற்கு இருந்துவந்துள்ளது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, "பிளேவியன் அம்ஃபிதியேட்டர்" என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். துவக்கக்கால இடைக்கால சகாப்தத்தில் பொழுதுபோக்கிற்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் வீடுகள், பட்டறைகள், மத ஒழுங்கு, கோட்டை, கிறிஸ்தவ ஆலயம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டது. + +நிலநடுக்கங்கள் மற்றும் கல்-திருட்டு ஆகியவற்றால் ஏற்படும் சேதங்கள் காரணமாக பகுதியளவு பாழடைந்தாலும், கொலோசியம் இன்னும் உரோமைப் பேரரசின் ஒரு சின்னமாக உள்ளது. மேலும் ரோமின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் இது ஒன்றாகும், மேலும் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்துடன் தொடர்புடையதாக உள்ளது, ஒவ்வொரு புனித வெள்ளி அன்றும் போப்பால், கோஸ்ஸியத்தைச் சுற்றியுள்ள பகுதியில் சிலுவைப்பாதை ஊர்வலம் துவக்கி வழிநடத்தப்படுகிறது. + +கோசோசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. + +கோலோசியத்தின் அசல் லத்தீன் பெயர் ஆம்பிபிடியம் ஃப்ளாவியம் (Amphitheatrum Flavium), பின்னர் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் (Flavian Amphitheatre) என ஆங்கிலமயமானது. இந்தக் கட்டடம் நீரோவின் ஆட்சியைத் தொடர்ந்துவந்த ஃப்ளாவியன் வம்சத்தின் பேரரசர்களால் கட்டப்பட்டது. இந்த பெயர் இன்னும் நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பொதுவாக இந்த அமைப்பு கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது. + +கோலோஸ்ஸியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது). இந்த சிலை பின்னர் ஹெரோயோஸ் (சோல்) அல்லது அப்போலோ போன்ற தோற்றத்திலும், சூரியக் கிரீடத்தைச் சேர்ப்பதன் மூலம் சூரியன் கடவுளாகவும், நீரோவுக்கு பின்வ���்தவர்களால் மாற்றியமைக்கப்பட்டது, இதேபோல நீரோவின் தலையும் பல முறை மாற்றப்பட்டது. இந்த சிலை அதிசயத்தக்கதாகவாறு இடைக்காலக் கட்டத்திலும் நன்றாக நின்று கொண்டிருந்து, ரோமின் நிரந்தரதிர அடையாள சின்னமாக இது காணப்பட்டது. கொலோசஸ் சிலை இறுதியில் விழுந்துவிட்டது, +இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காக சவ ஊர்வலத்தின் முன் மூன்று சோடிகளிடையே சண்டையிட்டுக்கொள்ளும் வழக்கம் ரோமானிகளின் வழக்கமாகும். இதனை பிற்காலத்திய அரசர்கள் ஒரு விழாவாக கொண்டாடத் தொடங்கினர். இதற்காக கட்டப்பட்டதே கொலோசியம் ஆகும். இதில் சண்டையிடுபவர்கள் கிளாடியேட்டர்கள் என்று அழைக்கப்பட்டனர். சுபானிய மொழியில் கிளாடி என்பதற்கு கத்தி என்று பொருளாகும். முதலில் இவ்வகை சண்டைகள் கத்தியை வைத்தே போடப்பட்டன. பின் கோடாரி, இரும்பிலால் ஆன வளையம், கேடையம், வீச்சரிவாள், பழுக்கக்காய்ச்சிய இரும்பு ஆகியவற்றைக் கொண்டு சண்டையிடத் தொடங்கியுள்ளனர். இங்கு சண்டையிடுபவர்கள் அடிமைகளாகவும், கீழ்சாதிகாரர்களாகவும், கைதிகளாகவும், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாகவும் இருந்துவந்துள்ளனர். மேலும் கிறித்துவ மதம் அக்காலத்தில் வளர்ச்சி அடையாத காரணத்தினால் கிறித்துவர்களும் இது போன்ற சண்டை விளையாட்டுகளில் பங்கு பெறச் செய்யப்பட்டுள்ளனர். இந்த சண்டையில் ஒரே ஒருவர் மட்டுமே வெல்ல முடியும். மற்றவர்கள் அரசரின் ஆணைக்கேற்ப சிறைபிடிக்கப்படுவர் அல்லது விடுதலை செய்யப்படுவர். கைதி ஒருவர் வென்றால் அவருக்கு விடுதலைக் கொடுப்பதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இவ்விளையாட்டுகளில் உணவிடாத சிங்கம், புலி ஆகியவற்றைக் கொண்டும் மனிதர்களைக் கொன்றுள்ளனர். + +கி.பி 72 ஆம் ஆண்டில், வெஸ்பாசியன் (Vespasian) என்பவன் ரோமப் பேரரசனாக இருந்தபொழுது, இதன் கட்டிடவேலைகள் தொடங்கின. எனினும், கி.பி 80 ஆம் ஆண்டில் அவன் மகனான டைட்டஸ் காலத்திலேயே கட்டிடம் நிறைவு பெற்றது. இதன் உயரம் சுமார் நூற்றைம்பது அடிகளாகும். இது நீரோ மன்னனின் மாளிகைக்கு அருகில், நீரோவின் ஏரி இருந்த இடத்தில் அமைந்துள்ளது. நீரோ அரசரின் பிரம்மாண்ட சிலைக்கு அருகினில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் நான்கு கேலரிகள் கட்டப்பட்டுள்ளன. முதல் கேலரி அரசர் மற்றும் அவரது குடும்பத்தினரும் அமர்வதற்கான இடமாகும். இரண்டாம் கேலரி பெரும் நிலப்பிரபுக்களும், முக்கியமானவர்களும் அமரும் இடம் ஆகும். கோலோசியத்தின் கூரையாக கப்பல்களில் பயன்படுத்தப்படும் பாயினை பயன்படுத்தியுள்ளனர். போட்டிகள் நடைபெறும் பொழுது மட்டும் இவற்றை வைத்து அரங்கத்தை மூடியுள்ளனர். எண்ணற்றவர்கள் வந்து செல்வத்ற்கு வசதியாக பல நுழைவு வாயில்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கொலோசியம் உலக அதிசயமாகவும் கருதப்பட்டது ஆகும். மூன்றாம் கேலரி தொழிலாளர்களும், நான்காம் கேலரி பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டது ஆகும். நான்கு கேலரிகள் மட்டும் அல்லாது ஒரு அடித்தளமும் கொலோசியதில் கட்டப்பட்டுள்ளது. இது அடிமைகள் காத்திருக்கும் இடமாகவும், ஆயுதங்கள் வைக்கும் இடமாகவும் , மிருகங்களின் இடமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது. கொலோசியத்தின் திறப்புவிழாவுக்கான நூறு நாள் நடைபெற்ற கொண்டாட்டங்களின் போது 9,000 காட்டு விலங்குகள் கொல்லப்பட்டதாக பண்டைய ரோமானிய வரலாற்றாளரான டியோ கசியஸ் (Dio Cassius) என்பவர் கூறியுள்ளார். மேலும் இவ்விழாவில் ஆயிரம் கிளாடியேட்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக அரங்கம் முழுவதும் நீர் நிரப்பி படகில் அடிமைகளை சண்டையிட வைத்துள்ளனர். + +217 ஆம் ஆண்டு மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட தீயில் சேதமாகும் வரை, கொலோசியம் தொடர்ச்சியாகப் பயன்பாட்டில் இருந்தது. 238 ல் மீண்டுமமைக்கப்பட்ட இது, கிறிஸ்தவம், படிப்படியாக மனித உயிர்கள் பலியாகும் வீரவிளையாட்டுக்களுக்கு முடிவுகட்டும் வரை பயன்பட்டு வந்தது. காட்டு விலங்குகளை வேட்டையாடும் விளையாட்டுகளுக்காகவும், வேறு நிகழ்ச்சிகளுக்காகவும், கொலோசியம் 524 ஆம் ஆண்டுவரை பயன்பட்டது. 442 இலும், 508 இலும் ஏற்பட்ட புவியதிர்வுகளினால் இக்கட்டிடம் பலத்த சேதத்துக்கு உள்ளானது. + +847, 1349 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் ஏற்பட்ட புவியதிர்வுகளால் கடுமையாகச் சேதமடைந்த இது, பின்னர் ஒரு கோட்டையாக மாற்றப்பட்டது. இதன் ஒரு பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் அமைக்கப்பட்டது. + +இதன் முகப்பை மூடியிருந்த சலவைக் கற்கள், வேறு கட்டிடவேலைகளில் பயன்படுத்தப்பட்டதுடன், இவற்றை எரித்துச் சுண்ணாம்பும் தயாரித்தார்கள். மறுமலர்ச்சிக்காலத்தில், சிறப்பாக 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளில், ரோம ஆளும் குடும்பங்கள், புனித பேதுரு பேராலயம் மற்றும��� தனியார் மாளிகைகளைக் கட்டுவதற்காக இந்தக் கட்டிடத்திலிருந்து சலவைக் கற்களை எடுத்துவந்தனர். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தினால் இக்கொலோசியத்தில் இருந்த இரும்பு துண்டுகளை உள்ளூர் மக்களே பெயர்த்து எடுத்து மேலும் சிதிலமாக்கியுள்ளனர். + + + + + +தொல்பழங்காலம் + +தொல்பழங்காலம் என்பது கற்காலம் தொடங்கிய காலத்துக்கும், மனிதர்களுக்கு எழுதும் பழக்கம் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலம் எனக் கருதப்படுகிறது. இது ~3.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் கல் கருவிகள் பயன்படுத்தத் தொடங்கியது முதல் ~5300 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும் முறைமைகள் கண்டுபிடிக்கப்பட்டது வரையிலான காலம் என்று வரையறுக்கப்படுகிறது. + +மெசபடோமியாவில்  உள்ள சுமேரிய நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம், பண்டைய எகிப்து நாகரிகம் ஆகியவை முதன்மை நாகரிகங்கள் ஆகும். இவை தங்களுக்கு சொந்த எழுத்துக்களைக் கொண்டிருந்தன. வரலாற்று பதிவுகளை உருவாக்கின. இது வெண்கலக் காலத்திலேயே தொடங்கி விட்டது. அண்டை நாகரிகங்கள் இவற்றைப் பின்பற்றின. மற்ற பெரும்பாலான நாகரிகங்கள் இரும்புக் காலத்தின் போது தொல்பழங்காலத்தின் இறுதியை அடைந்துவிட்டன. தொல்பழங்காலத்தில் மூன்று கால அமைப்புகள் உள்ளன. அவை கற்காலம் வெண்கலக் காலம், மற்றும் இரும்புக் காலம் ஆகியவை. ஐரோவாசியா மற்றும் வட ஆப்ரிக்கா ஆகியவற்றில் உலோகப் பயன்பாடு மிகுந்து இருந்தது +அமெரிக்கா, ஓசியானியா, ஆஸ்திரேலியா மற்றும் சப்-சஹாரா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இதன் தாக்கம் குறைந்திருந்தது. ஆனால், இங்கு புதிய கலாச்சாரங்களுடன் அதிக அளவு கடின உலோகப் பயன்பாடு கொண்ட வேலைகள் நடைபெற்று வந்தன. அமெரிக்காவில்  முன் கொலம்பிய நாகரிகங்கள் ஏற்படும் முன்னும், ஐரோவாசியகள் கலாச்சாரத்திற்கு முன்னும், சிக்கலான எழுத்து முறைமைகள் அறியப்படவில்லை. மிகச் சமீப காலங்களில் இவை முன் வரலாற்றுக் காலத்தை எட்டின. + +யூரேசியாவுக்கு வெளியே உள்ள பல கலாச்சாரங்களில் எழுது பொருட்கள் வெவ்வேறு காலங்களில் அறிமுகமாகின. எழுது பொருட்களின் புழக்க காலமே உள்ளூர் வரலாற்றுக் காலமாகும். அதன்பின் எழுத்துமுறை என்பது வெற்றிக் கலாச்சாரமாக அறியப்பட்டது. முன் கலாச்சாரங்கள் எழ��தப்பட்டன. தொல்பழங்காலத்தைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகள் ஏதும் இல்லை. எனவே வரலாற்றுக்கு முந்தைய காலப் பொருட்களின் வயதைக் கணிப்பது கடினமாக உள்ளது. 19 ஆம் நூற்றாண்டு வரை காலத்தை கணிப்பதற்கான தெளிவான நுட்பங்கள் அறியப்படவில்லை. + +அண்டம் அல்லது பூமி தோன்றியதிலிருந்து உள்ள இடைவெளிக் காலம் அல்லது அதிகளவில் குறிப்பிடப்படுவதுபோல் பூமியில் உயிர்கள் தோன்றியதிலிருந்து உள்ள காலம் அல்லது மிகக் குறிப்பாக கூறுவோமானால் மனிதன்-போன்ற உயிரினங்கள் தோன்றியது முதல் உள்ள காலம் "முன் வரலாற்றுக் காலம்" அல்லது தொல்பழங்காலம் என்பதன் "தொடக்கம்" என்று வரையறுக்கப்படுகிறது. +ஒரு மதத்திலோ அல்லது பிராந்தியத்திலோ, முன் வரலாற்றுக் காலம் அல்லது தொல்பழங்காலத்தின் "இறுதி" என்பது, அந்த மதத்தில் அல்லது பிராந்தியத்தில், அவை தொடர்பாக எழுதப்பட்ட வரலாற்றுப் பதிவுகள், ஒரு அறிவுசார் வளமாக பயன்பாட்டுக்கு வந்த காலமாகும். எழுத்தில் வரலாற்றுப் பதிவுகள் வரத் தொடங்கிய காலத்துடன், அந்த மதம் அல்லது பிராந்தியத்திற்கான தொல்பழங்காலம் முடிவுக்கு வருகிறது. + +உதாரணமாக: +இந்நிலையில், வரலாற்றாசிரியர்கள் உரிய ஆதாரங்களுடன் பாரபட்சமற்ற முறையில் வரலாற்றுக்கு முந்தைய கால இறுதியைக் கணக்கிட வேண்டும். இது ரோமன் மற்றும் கிரேக்க கலாச்சாரங்களுக்கு மிகவும் பொருந்தும். + +வரலாற்றுக்கு முந்தைய காலத்தை பிரிக்கும் முறைகள்: + +வரலாற்றின் முற்பகுப்பானது, மூன்று தொடர்ச்சியான காலங்களில், பகுக்கப்பட்டது. அவற்றின் அடிப்படையில் முக்கிய கால அளவிடல் கருவி தொழில்நுட்பங்கள் திட்டமிடப்பட்டன. + +தொல்பொருள் வல்லுநர்கள், எழுதப்படாத பதிவுகளற்ற பழங்கால மக்களைக் குறிக்கும் போது, முதனிலை இன மனிதன் என்று குறிப்பிட்டனர். இந்நிலையில், "வரலாற்றுக்கு முந்தைய காலம்" சார்ந்த விளக்கத் தெளிவு பெறுதல் அவசியமானது. எனவே இச்சொற்றொடர் உருவானது. 1836 இல் ஆங்கிலத்தில் வெளியுறவு காலாண்டு ஆய்வுப் பதிப்பில் இருப்பினும், வரலாற்றுக்கு முந்தைய காலம் என்ற சொற்றொடரின் முதல் பயன்பாடு வெளியானது. + +வரலாற்றுக்கு முந்தைய காலம் பற்றி அறிய உதவும் முக்கிய மூலம் தொல்பொருளியல் ஆகும். ஆனால், சில அறிஞர்கள் இயற்கை மற்றும் சமூக அறிவியல் சான்றுகளைப் பயன்படுத்தத் தொடங்குகி உள்ளனர். ஆழ்ந்த வரலாற்றறிஞர்களால் இந்த கருத்து முன்வைத்து ஆதரிக்கப்படுகிறது. + +பழைய கற்காலம், கல் கருவிகள் பயன்பாட்டைக் முதலாகக் கொண்டு தொடங்குகிறது. + +பழைய கற்காலம் என்பது ஆரம்ப காலக் கற்காலமாகும். + +பழைய கற்காலத்தின் ஆரம்பப் பகுதி கீழ்ப் பழைய கற்காலம் என அழைக்கப்படுகிறது. இது சுமார் 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஹோமோ ஹபிலிஸ்களையும் ("Homo habilis"), தொடர்புடைய இனங்களையும், அதிலிருந்து வந்த மனித சேப்பியன்களின் ("Homo sapiens") வாழ்வையும், அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் கருவிகளையும் குறிக்கிறது. + +ஆரம்பகால மனித சேப்பியன்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருந்தன. இது "மத்திம பழைய கற்காலம்" என்று அழைக்கப்படுகிறது. "மத்திம பழைய கற்காலத்தின்போது" நவீன மொழி திறனைக் குறிக்கும் உடற்கூறு மாற்றங்கள் எழுகின்றன. + +"மத்திம பழைய கற்காலம்" முழுவதும், மனிதர்கள் பொதுவாக நாடோடிகளாகவும், வேட்டைக்காரர்களாகவும், நாடோடி வேட்டைக்கார சமூகங்களாகவும் வசித்து வந்தனர். இச்சமூகங்கள், சிறியனவாகவும், மனித சமூக சமத்துவம் உடையதாகவும் இருந்தன. இச்சமூகங்கள், ஏராளமான இயற்கை ஆதாரங்களைப் பெற்றிருந்தன. மேம்பட்ட உணவு-சேமிப்பு நுட்பங்களைக் கொண்டிருந்தன. சில சமயங்களில் சிக்கலான சமூக கட்டமைப்புகளுடன் கூடிய ஒழுக்கமான வாழ்க்கை முறையைப் பின்பற்றின. + +இடைக் கற்காலம் என்பது கிரேக்க மொழியில் ""mesos=நடுத்தர"", மற்றும் ""lithos=கல்"" என்பதைக் குறிக்கிறது. + +பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையே உள்ள மனித தொழில்நுட்ப வளர்ச்சி, இடைக் கற்காலத்தின் தாக்கம் ஆகும். இந்த காலத்தில் காடழிப்புக்கான முதல் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு நிலங்கள் தேவைப்பட்டதால் அவர்கள் காடுகளை அழித்தனர். இது நவீன கற்காலத்திற்கான ஆரம்ப அறிகுறியாகும். + +புதிய கற்காலம் பழைய கற்காலத்தில், பல வகை மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம். எனினும், புதிய கற்காலத்தில் ஹோமோசெபியன்ன்ஸ் மட்டுமே இருந்தனர். புதிய கற்காலம் என்பது நடத்தைகள், கலாச்சார பண்புகள், நடத்தை மாற்றங்கள், கலாச்சார மாற்றங்கள் ஆகியவற்றின் முன்னேற்றமாகும், இது, காட்டுப் பயிர்கள், உள்நாட்டுப் பயிர்கள், காட்டு விலங்குகள், வீட்டு விலங்குகள் ஆகியவற்றின் பயன் தெரிந்த காலமாக இருந்தது. + +12,200 ஆண்டுகளுக்கு முன்பு, புதிய கற்காலத் தொடக்கம் வரை, புளோரெஸ் மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இது பழமையான தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு காலமாகும். இது கி.மு. 10,200ல் மத்திய கிழக்கில் சில பகுதிகளிலும், பின்னர், உலகின் பிற பகுதிகளிலும், பரவியது. கி.மு. 4,500ல் புதிய கற்காலம் தொடங்கி கி.மு. 2,000ல் முடிவுற்றது. + +காலக் கோடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் அனைத்து தேதிகளும் தோராயமானவை. மானுடவியல், தொல்லியல், மரபியல், புவியியல், அல்லது மொழியியல் துறைகளில் ஆராய்ச்சி மூலம் பெறப்பட்டவை மற்றும் உய்த்துணரப்பட்டவை. + +புதிய கண்டுபிடிப்புகள் அல்லது மேம்படுத்தப்பட்ட கணக்கீடுகளால் இவை அனைத்தும் திருத்தியமைக்கப்படுகின்றன. இவற்றில் குறிக்கப்படும், பி.பி. (BP) என்பது, தற்போதைய காலத்திற்கு முன் (1950) என்பதையும், பி.சி.ஈ. (BCE) என்பது, பொது சகாப்தத்திற்கு முன் என்பதையும் குறிக்கின்றன. + + + + + + +மில்லெனியம் டோம் + +மில்லெனியம் டோம் இங்கிலாந்தின் தென்கிழக்கு லண்டனில் அமைந்துள்ளது. மூன்றாவது ஆயிரவாண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அமைந்த கண்காட்சியொன்றுக்காக இது கட்டப்பட்டது. அக்கண்காட்சி ஜனவரி 1, 2000 முதல் டிசம்பர் 31, 2000 வரை நடைபெற்றது. + + + + +தாஜ் மகால் + +தாஜ் மகால் ("Taj Mahal", தாஜ் மஹால்), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக் கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது. + +1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள். பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவ��� அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின. முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது: + +தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது. சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன. முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன. + +தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம். பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது. + +இதன் வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன. கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது. +இக் கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது. இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும��� இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது. இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது. இப் பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை. வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது. கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன. + +அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன. கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன. இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன. இக் குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன. +தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது. மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன. தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் "துலுத்" எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை. + +தாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது. இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட "போலி"க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது. + +தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன. கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது. பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது. இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது. + +பெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், "மஹ்தாப் பாக்" அல்லது "நிலவொளிப் பூங��கா" கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், "நிலவொளிப் பூங்கா"வையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது. இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப் பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர். + +தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யாமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை. சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது. இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது. + +முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது. + +ஆக்ரா நகருக்குத் தெற்கே உள்ள நிலமொன்ற���ல் தாஜ்மகால் கட்டப்பட்டது. மகாராஜா ஜெய் சிங் என்பவருக்குச் சொந்தமான இந்த நிலத்தைப் பெறுவதற்காக, ஷா ஜகான் அவருக்கு ஆக்ரா நகரின் மையப்பகுதியில் பெரிய நிலமொன்றை வழங்கினார். ஏறத்தாழ மூன்று ஏக்கர் நிலப்பரப்புக் கொண்ட பகுதி அகழப்பட்டு மண் நிரப்பி இறுக்கப்பட்டு ஆற்று மட்டத்திலிருந்து 50 மீட்டர் உயரத்துக்கு நிரப்பப்பட்டது. முதன்மைக் கட்டிடப் பகுதியில் ஆழமான கிணறு போன்ற அமைப்புகள் தோண்டப்பட்டு கற்களும், சிறு பாறைகளும் இட்டு நிரப்பி அத்திவாரம் இடப்பட்டது. மூங்கிலால் ஆன சாரமரங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்காக செங்கற்களால் தற்காலிக அமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன. இவ்வமைப்புக்கள் மிகவும் பெரிதாக இருந்ததால் இதை அகற்றுவதற்குப் பல ஆண்டுகள் ஆகக்கூடுமென்று அக்காலத்து மேற்பார்வையாளர்கள் கருதியதாகத் தெரிகிறது. மரபுவழிக் கதைகளின்படி கட்டிடம் கட்டி முடிந்ததும், இந்தத் தற்காலிக அமைப்பில் இருந்து எவரும் கற்களை எடுத்துத் தாங்களே வைத்துக் கொள்ளலாம் என அறிவித்தானாம் இதனால் ஓரிரவிலேயே இவ்வமைப்புக்கள் அகற்றப்பட்டனவாம். சலவைக்கற்களை கட்டிடக் களத்துக்கு எடுத்துச் செல்வதற்கு 15 கிலோமீட்டர் நீளமான சாய்தளப் பாதை ஒன்று மண் போட்டு இறுக்கி அமைக்கப்பட்டதாம். 20 தொடக்கம் 30 எருதுகளைக் கொண்ட குழுக்களைக் கொண்டு இதற்கென உருவாக்கப்பட்ட வண்டிகளில் கற்களை ஏற்றி இழுத்துவந்ததாகச் சொல்லப்படுகின்றது. இக்கட்டிடப் பணியை வடிவமைத்த பலர் பின்னாட்களில் இதனைப் போன்று உருவாக்காவண்ணம் இருக்க அவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. + +தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகள���ப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும். + +தாஜ் மஹால் அமில மழையால் மெல்ல மெல்ல சேதமடைந்து வருகிறது. அருகில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது. 1996 ஆம் ஆண்டு இந்திய உச்சநீதி மன்றம் தாஜ்ம ஹாலைச் சுற்றி உள்ள 10,400 சதுர கிலோ மீட்டர் பகுதியில் உள்ள அனைத்து தொழிலகங்களும் நிலக்கரிக்குப் பதில் இயற்கை எரிவாயுவையே பயன்படுத்த வேண்டும் என ஆணையிட்டது. + +தாஜ்மகால் மீது களிமண் பூசி தூய்மைப்படுத்தி அழகுபடுத்தும் நடவடிக்கையை தொல் பொருள் ஆய்வுத்துறை தொடங்க உள்ளதாகவும் +வெயில், மழை, பனி, காற்றினால் பரவு தூசி போன்ற காரணங்களினால் உலகப் பிரசித்திப் பெற்ற இந்த தாஜ்மகால் கட்டடம் மாசு படிந்து வருகின்றது என்றும் கவலையான தகவல்கள் வெளிவருகின்றன. அத்துடன் தாஜ்மகாலை காண உலகெங்கும் இருந்து கிட்டத்தட 25 லட்சம் பயணிகள் வந்து செல்வதாகவும், தாஜ்மகாலை கட்டடத்தைச் சுற்றி குப்பை கூளங்கள், பசுவின் சாணம் போன்றனவும் பரவிக்கிடக்கின்றனவாம். அத்துடன் தாஜ்மகால் வரும் சுற்றுலாப் பயணிகளது உடைமைகளை வைத்துக்கொள்வதற்கான அறை வசதிகள், மலசலக்கூடங்களுக்கான வழிகாட்டு அடையாளக் குறிகள் போன்றனவும் போதிய அளவில் இல்லை எனும் செய்திகளும் வருகின்றன. இவை பொறுப்பானவர்களின் பொறுப்பின்மையைக் காட்டுகிறது. + +சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்." + + + + +ஐக்கிய நாடுகள் தலைமையகம் + +ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூயார்க் நகரில் உள்ள தனித்துவமானதொரு கட்டிடத் தொகுதியாகும். இது 1952 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகமாகச் செயற்பட்டு வருகின்றது. இது மான்ஹட்டனின் கிழக்குப் பகுதியில், "டர்ட்டில் பே" (Turtle Bay) வட்டகையில், ஈஸ்ட் ஆற்றை நோக்கியிருக்கும் பரந்த நிலத்தில் அமைந்துள்ளது. இது நியூயார்க் நகரத்தில் இருந்தாலும், இக் கட்டிடத்தொகுதி அமைந்துள்ள இடம் ஒரு அனைத்துலக ஆட்சிப் பகுதியாகும். இந் நிலப்பகுதி, மேற்கில் முதலாவது அவெனியூவையும், கிழக்கு 42 ஆவது தெருவைத் தெற்கிலும், கிழக்கு 48 ஆவது தெருவை வடக்கிலும், ஈஸ்ட் ஆற்றைக் கிழக்கிலும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஃபிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் ஈஸ்ட் ஆற்றுச் சாலை (Franklin D. Roosevelt East River Drive) இக் கட்டிடத்தொகுதியின் கீழாகச் செல்கிறது. + +இக் கட்டிடத் தொகுதியில் மூன்று முக்கியமான கட்டிடங்கள் உள்ளன. 39 மாடிகளைக் கொண்ட செயலகக் கட்டிடம், சபையின் உறுப்பு நாடுகள் கூடுகின்ற பொதுச் சபைக் கட்டிடம், டாக் ஹாமர்ஷீல்ட் நூலகம் என்பனவே அவையாகும். இவை தவிர இத் தொகுதி, கட்டிடங்களைச் சுற்றி அமைந்துள்ள பூங்காக்களுக்கும், சிற்பங்களுக்கும் பெயர்பெற்றது. + +ஐக்கிய நாடுகள்சபையின் இந்தத் தலைமையகக் கட்டிடத் தொகுதி, 1949, 1950 ஆம் ஆண்டுகளில், ஜோன் டி, ராக்பெல்லர் ஜூனியர் வழங்கிய 8.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையைக் கொண்டு வாங்கிய நிலத்தில் கட்டப்பட்டது. + + + + +சுவர்க்கக் கோவில் + +சுவர்க்கக் கோவில் என்பது பீஜிங் நகரத்தில் உள்ள சமயக் கட்டிடங்களின் வளாகம் ஆகும். இவ்வளாகம் கட்டும் பணி 1420-ல் தொடங்கியது. + +பீஜிங்கில் உள்ள நான்கு பெருமைக்குரிய கோவில்களின் இதுவே மிகவும் பெரியதாகும். + + + + +ஹிரோஷிமா சமாதான நினைவகம் + +ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த அணுகுண்டால் இந்தக்கட்டடம் ���ேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றல் மிக்க அணுகுண்டால் பாதிக்கப்பட்டும் அந்நகரத்தில் எஞ்சி நின்ற ஒரே கட்டடம் இதுதான். கட்டடத்தின் புறச்சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் குவிமாடம் பாதிக்கப்படவில்லை. நகரத்தை மீண்டும் உருவாக்கியபோது, இதை மீண்டும் கட்டாமல் அணுகுண்டின் அவலங்களை நினைவுகூரும்வகையில் இதை நினைவகமாக பராமரிக்க முடிவுசெய்யப்பட்டது. இது 26.ஆகத்து 1996 இல் யுனெஸ்கோ, பாரம்பரிய கட்டடமாக அறிவித்தது. இந்த கட்டடத்தை செக் குடியரசைச் சேர்ந்த ஜான் லெட்செல் (Jan Letzel) வடிவமைத்துள்ளார். இது கட்டப்பட்ட 1915 முதல் ஹிரோஷிமா வர்தக கண்காட்சியகம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. 1933இல் ஹிரோஷிமா தொழிற்சாலை மேம்பாட்டு காட்சியகம் என்ற பெயர் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. + + + + +நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா + +நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். + +இதன் கட்டிடம், கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம். இதன் உள் பகுதி பல நிறங்களைக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இதன் விதானம் (ceiling), கருநீல நிறம் பூசப்பட்டுப் பொன் நிற நட்சத்திர வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது நூற்றுக்காணக்கான நுண்ணிய மரச் செதுக்கு வேலைகளினாலும், சமயம் சார்ந்த பல சிலைகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதன் பின்புறச் சுவரில் அமைந்துள்ள நிறக் கண்ணாடி வேலைப்பாடுகள், வழமையான தேவாலயங்களில் உள்ளதைப் போல பைபிள் சம்பந்தமான காட்சிகளைச் சித்தரிக்காமல் மொன்றியலின் சமயம் சார்ந்த வரலாற்றுக் காட்சிகளைச் சித்தரிக்கின்றன. + +1657 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க Sulpician Order ஐச் சேர்ந்தவர்கள், இன்று மொன்றியல் என அழைக்கப்படும், "வில்லே-மேரி"யை (Ville-Marie) வந்தடைந்தார்கள். தீவின் கட்டுப்பாடு இவர்களுக்கு வழங்கப்படவே, இவர்கள் இதனை 1840 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தனர். இங்கு அவர்கள் உருவாக்கிய பங்கு (parish) மேரியின் புனித பெயரால் அர்ப்பணம் செய்யப்பட்டதுடன், இப் பங்குத் தேவாலயமான நொட்ரே-டேம் 1672 இல் அங்கே நிறுவப்பட்டது. + +1824 இல், இத் தேவாலயத்துக்கு வ���ுவோர் தொகை அது கொள்ளக்கூடிய அளவுக்கு மேலாக வளர்ந்ததனால், நியூயார்க்கைச் சேர்ந்த ஐரிஷ்-அமெரிக்க புரட்டஸ்தாந்தவரான ஜேம்ஸ் ஓ'டொன்னெல் (James O'Donnell) என்பவரிடம், புதிய தேவாலயமொன்றை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கோதிக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை இயக்கத்தின் ஆதரவாளரான ஓ'டொன்னெல், அப் பாணியிலேயே அத் தேவாலயத்தை வடிவமைத்தார். இந்தத் தேவாலயத்தின் நிலவறையில் புதைக்கப்பட்டவர் இவர் மட்டுமே. இதற்காகவே மரணப்படுக்கையில் இவர் கத்தோலிக்க மதத்தைத் தழுவிக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. கட்டி முடிக்கப்பட்ட காலத்தில், வட அமெரிக்காவின் மிகப் பெரிய தேவாலயமாக இது விளங்கியது. + + + + +பண்டைய உலக அதிசயங்கள் + +பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும், ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது எனினும், இவை பற்றிய குறிப்புக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. + +தற்போது வழக்கிலுள்ள, அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கத்தை உள்ளடக்கிய, பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் மத்திய காலத்தில் ஏற்பட்டதாகக் கருதப்படுகின்றது. அண்டிப்பேற்றரின் பட்டியலில், இக்கலங்கரை விளக்கத்துக்குப் பதிலாக, பபிலோனின் சுவர்களே காணப்பட்டது. காலவரிசையில் அமைந்த பட்டியல் இது. + + +இவற்றில் தலா இரண்டு அதிசயங்கள், இன்றைய எகிப்து, கிரீஸ், துருக்கி ஆகிய நாட்டின் எல்லைகளுக்குள்ளும், ஒன்று ஈராக்கிலும் அமைந்திருந்தன. இன்றுவரை தப்பியிருப்பது கிசாவின் பெரிய பிரமிட் மட்டுமே. இவற்றுள் மிகக் குறைந்த காலம் நிலைத்திருந்தது, ரோட்ஸின் கொலோசஸ் ஆகும். நின்றநிலையில் 56 ஆண்டுகள் மட்டுமேயிருந்த இது, பூமியதிர்ச்சியொன்றினால் விழுந்துவிட்டது. + + + + + +பாபிலோனின் தொங்கு தோட்டம் + +பாபிலோனின் தொங்கு தோட்டமும் ("Hanging Gardens of Babylon") (செமிராமிஸின் தொங்கு தோ��்டம் எனவும் அறியப்படுகிறது) பாபிலோனின் சுவர்களும் பண்டைய ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுகாத்நேசர் ("") தற்போதைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பாபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது. + +இரண்டாம் நெபுகாத்நேசர் என்ற மன்னனின் முயற்சியால் அவருடைய அரண்மனையில் கி.மு.600 ஆண்டுகளுக்கு முன் +கற்களால் வளைவுகளும் மொட்டை மாடிகளும் கட்டப்பட்டன. அவற்றில் செடிகளும் தாவரங்களும் பயிரிடப்பட்டன. யூப்ரேட்ஸ் ஆற்றிலிருந்து கப்பி முறையில் தண்ணீரை இறைத்து குழாய்கள் வழியாகச் செடிகளுக்குப் பாய்சசினர். + +ஸ்ட்ராபோ ("Strabo"), டையோடோரஸ் சிகுலஸ் ("Diodorus Siculus") போன்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பாபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. + + + + + + + +அங்கோர் வாட் + +அங்கோர் வாட் ("Angkor Wat") என்பது, அங்கோர், கம்போடியாவில் உள்ள இந்துக்கோயிலாக இருந்து பின்னர் புத்த மதக் கோயிலாக மாறிய ஒரு தொகுதியாகும். 162.6 எக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இது உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாகும். இது இரண்டாம் சூரியவர்மன் (கிபி 1113-1150) என்பவரால் 12ஆம் நூற்றாண்டின் போது யசோதரபுரத்தில் (இப்போதைய அங்கோர்) கட்டப்பட்டது. இது மாநில கோயிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அப்போதைய அரசர்களின் சைவ பாரம்பரியத்தை உடைக்கும் விதமாக இக்கோயில் இறைவன் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கபட்டது. இக்கோயில் கெமர் பாரம்பரியத்தின் உயர்தர கட்டமைப்பை கொண்டது. இக்கோயில் கம்போடியா நாட்டின் சின்னமாக அந்நாட்டு கொடியில் இடம்பெற்றுள்ளது. +"அங்கோர்" என்பது நகரத்தையும், "வாட்" என்பது கோயிலையும் குறிக்கும் கெமர் மொழிச் சொல். + +அங்கோர் வாட், சியம் ரீப்பின் நவீன நகரத்தின் வடக்கே 5.5 கிலோமீட்டர் தொலைவில், முந்தைய தலைநகரமான பாஃபுஆனுக்கு சற்றே தென் கிழக்கில் அமைந��துள்ளது. +இக்கோவிலின் தொடக்க வடிவமைப்பும், கட்டுமானமும் 12ஆம் நூற்றாண்டின் பாதியில் இரண்டாம் சூரியவர்மனால் ஆரம்பிக்கப்பட்டது. இக்கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்க பட்டிருந்தாலும் அரசனின் மாநிலக்கோவிலாகவும், தலைநகரமாகவும் செயல்பட்டு வந்தது. இக்கோயிலின் உண்மையான பெயர் தெரியவில்லை. இரண்டாம் சூரியவர்மனின் மறைவுக்கு பின்னரே இக்கோயில் முழுத்தோற்றம் பெற்றது. 1177ல் தோராயமாக இரண்டாம் சூரியவர்மன் மறைந்து 27 வருடங்களுக்கு பின், அங்கோரை கெமரின் பாரம்பரிய எதிரிகளான சம்ப்பாக்கள் கைபற்றினர். அதன் பின்னர் புதிய அரசர் ஏழாம் ஜயவர்மன் சிறிது தூரம் வடக்கே தள்ளி தன் புதிய தலைநகரத்தையும், மாநில கோவிலையும் நிறுவினார். 13ஆம் நூற்றாண்டின் போது, அங்கோர் வாட், இந்து கோவிலில் இருந்து தேராவத புத்த மத பயன்பாட்டுக்காக இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கோர் வாட், அங்கோர் கோயில்களிலேயே மிகவும் அசாதாரணமானது, 16ஆம் நூற்றாண்டிலேயே அக்கோயில் ஒரளவு புறக்கணிக்கப்பட்டு வந்தாலும் முழுமையாக கைவிடப்படவில்லை, ஏனெனில், அக்கோயிலின் அகழி காட்டின் அத்துமீறலில் இருந்து சிறிது பாதுகாப்பளித்தது. + +மேற்கத்திய பார்வையாளர்கள் இக்கோயில் கெமர் மக்களால் கட்டப்பட்டது என்பதை நம்ப இயலாமல் இக்கோயில் உரோம சகாப்தத்தின் போதே கட்டப்பட்டது எனத் தவறாக தேதியிட்டனர். ஆனால், அக்கோயிலைப் புதுப்பித்த போது மேற்கொள்ளப்பட்ட கல்வெட்டுகளின் ஆய்வில் அது மற்ற அங்கோர்களிருந்து தனித்து இருப்பதை உணர்ந்தனர். 20ஆம் நூற்றாண்டின் போது தொடங்கப்பட்ட புதுப்பித்தல் பணி, உள்நாட்டுப் போர் மற்றும் 1970, 1980களின் கெமர் ரூச்சின் ஆட்சியினால் நிறுத்தப்பட்டது. ஆனால் மற்ற அங்கோரியன் சிலை திருட்டு மற்றும் சேதத்தை ஒப்பிடும் போது அங்கோர் வாட்டின் சேதம் குறைவே. + +இக்கோயில் கடவுள்களின் இருப்பிடமாகக் கருதப்படும் மேரு மலையினைக் குறிப்பதாக உள்ளது. மத்திய கோபுரங்கள், மேரு மலையின் ஐந்து சிகரங்களைக் குறிக்கின்றது. சுவர்களும், அகழியும், பிற மலைத்தொடர்களையும், கடலையும் குறிக்கின்றது. இக்கோயில் நகரத்தில் இருந்து சிறிது உயர்த்தப்பட்ட ஒரு தளத்தின் மீது அமைந்துள்ளது. மூன்று சதுர கூடங்கள், மத்திய கோபுரத்துடன் இணைந்துள்ளது. இக்கூடங்களும், கோபுரமும் அரசன், பிரம்மா, சந்திரன் மற்றும் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கபட்டுள்ளது என கூறபடுகிறது.முதல் மண்டபம் வெளிப்புறம் சதுரத் தூண்களையும், உட்புறம் மூடிய சுவரையும் கொண்டுள்ளது. தூண்களுக்கு இடைப்பட்ட விதானம் (ceiling) தாமரைவடிவ அலங்காரங்களைக் கொண்டுள்ளது. மூடிய சுவர் நடன உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இச்சுவரின் வெளிப்புறம் தூண்களோடுகூடிய பலகணிகள், அப்சரஸ்கள் மற்றும் விலங்குகளின் மீதமர்ந்து நடனமாடும் ஆண் உருவங்கள் முதலியவற்றால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. எல்லா மண்டபங்களின் சுவர்களிலும் அப்சரஸ் உருவங்கள் காணப்படுகின்றன. முதல் மண்டபத்திலிருந்து நீண்ட வழிமூலம் இரண்டாவது மண்டபத்தை அடைய முடியும். இது இரண்டு பக்கங்களிலும் சிங்கச்சிலைகள் அமைந்த படிக்கட்டைக் கொண்ட மேடையிலிருந்து அணுகப்படுகிறது. இரண்டாவது மண்டபத்தின் உட்சுவர்களில் வரிசையாக அமைந்த புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. மேற்குப் பக்கச் சுவரில் மகாபாரதக் காப்பியக் காட்சிகள் காணப்படுகின்றன. மூன்றாவது மண்டபம், உயர்ந்த மேல்தளத்தின் மீது ஒன்றோடொன்று மண்டபங்களால் இணைக்கப்பட்ட ஐந்து கோயில்களைச் சூழ அமைந்துள்ளது. மண்டபங்களின் கூரைகள், பாம்புகளின் உடல்களையும், சிங்கம் அல்லது கருடனின் தலையையும் கொண்ட உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. +மேற்குப் பக்கத்திலுள்ள முதன்மைக் கோயிலின் வெளி முற்றத்தில் இரண்டு நூலகங்கள் அல்லது சிறிய கோவில் அமைப்புக்கள் உள்ளன. அகழிக்கு வெளியே அதனைச் சுற்றி புல்வெளிகளமைந்த பூங்காக்கள் உள்ளன. + +1982 மற்றும் 1992ன் மத்தியில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் இக்கோயிலின் புதுப்பித்தல் பணியினை செய்தது. அப்போதிலிருந்து இக்கோயிலின் சுற்றுலா வரவு பெருகியது. இக்கோயில் 1992ல் நிறுவப்பட்ட அங்கோரின் உலக பாரம்பரிய களத்தின் ஒரு பகுதியாக இருப்பதனால் இதைப் பராமரிக்க கம்போடிய அரசுக்கு ஊக்கமும், நிதி உதவியும் அளிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மன் அப்சரா பாதுகாப்பு திட்டம், இக்கோயிலின் அலங்காரத்தையும், கட்டமைப்பையும் பேணும் தேவதாக்களைப் பாதுகாத்து வருகிறது. + +உலக நினைவிடங்கள் நிதியம், 2008ல் பாற்கடல் கூடத்தை பல ஆய்வுகளுக்கு பின்னர் புதுப்பிக்கும் பணியினை மேற்கொண்டுள்ளது, இப்பணியின் முக்கிய கட்டம் 2012ல் முடிவடைந்தது, இறுதிக் கட்டமாக முக்கோண வடிவிலான அலங்கார கும்பம் 2013ல் நிறுவப்படும் எனத் தெரிகிறது. + +2004 மற்றும் 2005ல், கம்போடிய அரசாங்க புள்ளிவிவரங்களின் படி முறையே, 561,000 மற்றும் 677,000 வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இரண்டு ஆண்டுகளாக கம்போடியாவுக்கு வருகை புரிந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சுற்றுலா வர்த்தகம் இக்கோயிலைப் பாதுகாக்க பெரும் அளவில் உதவியது. ஆனால் அதிக அளவு பார்வையாளர்களின் வரவால் இக்கோயிலின் சுற்று வட்டாரம் மாசு பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இதைக் கட்டுப்படுத்த யுனெஸ்கோவும் அதன் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவும் சேர்ந்து அதனைப் பாதுகாக்க முடிவு கொண்டது. + +கம்போடியாவில் உள்ள பிற பழமையான கோயில்களைப் போலவே அங்கோர் வாட்டும் தாவர வளர்ச்சி, பூஞ்சை, தரை இயக்கங்கள், போர் சேதம் மற்றும் திருட்டு ஆகியவற்றை ஏராளமாக சந்தித்துள்ளது. கம்போடியாவின் கோவில் இடிபாடுகளை மீதமுள்ள கோயில்களுடன் ஒப்பிடும்போது அங்கோர் வாட் கோயிலுக்கான போர் சேதம் மிகவும் குறைவாகவே உள்ளது, மேலும் இதை மிகவும் கவனமாக புதுப்பிக்க வேண்டியதாகவும் உள்ளது.. + +நவீன காலத்திய அங்கோர் வாட் மறுசீரமைப்பும் பாதுகாப்பும், பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம் என்ற பிரான்சுநாட்டு அமைப்பு மேற்கொண்டது. இதற்கு முன்னர் 1908 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முதன்மையாக தள ஆராய்ச்சியுடன் சம்பந்தப்பட்டிருந்தன . 1970 களின் முற்பகுதி வரை அங்கோர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் அதன் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு அங்கோர் வாட் பாதுகாப்பு மையம் பொறுப்பு வகித்தது. 1970 களின் முற்பகுதிவரை புதுப்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன . 1960 களில் அங்கோர்வாட்டின் பெரும்பான்மையான புதுப்பிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன . கெமர் ரூச் ஆட்சிக்காலத்தில் இப்பணிகள் கைவிடப்பட்டன. அங்கோர்வாட் பாதுகாப்பு மையம் கலைக்கப்பட்டது . 1986-க்கும் 1992-க்கும் இடையில் இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் கோவில் மீது மறுசீரமைப்பு பணியை மேற்கொண்டது, அந்த நேரத்தில் கம்போடிய அரசாங்கத்தை பிரான்சு அங்கீகரிக்கவில்லை . +தொடக்கக்கால பிரெஞ்சு மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் குறிப்பாக இந்தியா மேற��கொண்ட புதுப்பித்தல் வேலைகள் ஆகியவற்றைப் பற்றி விமர்சனங்கள் எழுப்பப்பட்டன, இப்பணிகளில் பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களும் சிமெண்ட்டும் கற்களின் மேற்பரப்பில் சேதத்தை ஏற்படுத்தியது என்ற ஐயம் இருப்பதாகக் கூறப்படுகிறது . + +1992 ஆம் ஆண்டில் கம்போடியாவின் மன்னர் நொரடோம் சீயனூக், உதவியால் அங்கோர் வாட் யுனெசுகோவின் உலகளாவிய அபாயநிலையில் உள்ள உலகளாவிய மரபுச்சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றது. (2004 ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது) அங்கோரை காப்பாற்றுவதற்காக சர்வதேச சமூகத்திற்கு யுனெசுகோ மூலம் முறையிடப்பட்டது 1994 ஆம் ஆண்டில் அங்கோர் தளத்தை பாதுகாப்பதற்காக ஒரு மண்டலம் அமைக்கப்பட்டது . அங்கோர் மற்றும் சீயெம் ரீப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை ஆணையம அப்சரா என்ற பெயரில் 1995 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கம்போடிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான சட்டமும் 1996 இல் உருவாக்கப்பட்டது. பிரான்சு, சப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது பலவகையான அங்கோர் வாட் பாதுகாப்பு திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. + + + + + +ஸ்டோன் ஹெஞ்ச் + +ஸ்டோன் ஹெஞ்ச் என்பது வில்ட்ஷையர், இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிய கற்கால மற்றும் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த நினைவுச் சின்னமாகும். இது, பெருங்கற்கள் (megalith) என அழைக்கப்படும், வட்டவடிவில் நிலைக்குத்தாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய கற்களையும் அவற்றைச் சுற்றியமைந்துள்ள மண்அமைப்புக்களையும் உள்ளடக்கும். இதன் காலம் பற்றி இன்னும் விவாதங்கள் இருப்பினும், பெரும்பாலான தொல்லியல் ஆய்வாளர்கள் இவ்வமைப்பு கி.மு 2500 க்கும், கி.மு 2000 க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கப் பட்டிருக்கலாம் என எண்ணுகிறார்கள். இத்தொல்பொருட் சின்னத்தின், மிகப் பழைய பகுதியாகக் கருதப்படும், பழைய வட்டவடிவ மண் மேடுகளும், குழிகளும் கி.மு 3100 ஐச் சேர்ந்தவையெனக் கூறப்படுகின்றது. இது அமைந்துள்ள இடமும், சுற்றாடலும், 1986ல் யுனெஸ்கோ வினால், உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டது. இது பண்டையகால தேசிய நினைவு சின்னமாதலால், சட்டபூர்வமாக பாதுகாக்கப்படுகிறது. தேசிய அறக்கட்டளைக்கு சொந்தமான ஸ்டோன்ஹெஞ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலங்கள், இங்க்லீஷ் ஹெரிடேஜ் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. +மைக் பார���க்கர் பியர்சன், ஸ்டோன்ஹெஞ்ச் ரிவர்சைட் ப்ராஜெக்டின் தலைவர், ஸ்டோன்ஹெஞ்ச் என்பது பண்டையக் கால கல்லறையுடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும் என்கிறார். இக்கட்டுமானங்கள் குறைந்தது 1500 வருடங்களாவது நீடித்திருக்கிறது. கால அளவீடும், புரிந்துக்கொள்ளுதலும்; ஆரம்பகால தரமில்லாத அகழ்வாராய்ச்சி, விலங்குகளின் துளைத்தல் மற்றும் சரியில்லாத அறிவியல் பூர்வ கால் அளவீடு முதலிய காரணங்களால் மிகவும் கடினமாகிறது. + +2008 ஆம் ஆண்டின் ஸ்டோன்ஹெஞ் ரிவர்சைடு திட்டம் மூலம் கிடைத்த தொல்லியல் சான்றுகள் ஸ்டோன்ஹெஞ் அதன் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு கல்லரையாக இருந்திருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. தளத்தில் காணப்படும் மனித எலும்புகள் கி.மு. 3000 ஆம் ஆண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தெரிகிறது. இத்தகைய உடல் தகனங்கள் குறைந்தது அடுத்த 500 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. இந்த தளம் யாத்திரை மேற்கொள்ளும் மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாக இருந்துள்ளது. [சான்று தேவை] + +ஸ்டோன்ஹெஞ் பல கட்டங்களாக உருவானது. அதன் கட்டுமானம் குறைந்தது 1,500 ஆண்டுகள் நீடித்திருந்தது. அதை சுற்றி பெரிய அளவிலான கட்டுமானம் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. இது ஒருவேளை 6,500 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கலாம். விலங்குகளின் செய்கையால் சுண்ணாம்புக்கல் சிதைவுற்றிருப்பது, தரமற்ற ஆரம்ப அகழ்வாராய்ச்சி பதிவுகள், மற்றும் துல்லியமான, அறிவியல் பூர்வமான தேதிகள் இல்லாததால் பல்வேறு காலகட்டங்களில் கட்டுமானம் குறித்து புரிந்து கொள்வது சிக்கலாக உள்ளது. + +ஸ்டோன்ஹெஞ் எழுதப்பட்ட பதிவுகளை விட்டு செல்லும் ஒரு கலாச்சாரத்தால் கட்டப்படவில்லை. ஸ்டோன்ஹெஞ்சின் பல அம்சங்கள் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றன. +ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்ட கட்டுமான நுட்பங்கள் குறித்து எந்த நேரடி சான்றும் இல்லை. பல ஆண்டுகளாக, பல ஆசிரியர்கள் இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் (இல்லையெனில் அந்த கற்களை நகர்த்துவது சாத்தியமற்றது) என்று கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் இத்தளம் வானியல் ஆய்வுக்கோ, சமய தளமாகவோ பயன்படுத்தப்பட்டிருக்களாம் என்ற கருத்தும் நிலவுகிறது. + +சமீபத்தில் இரண்டு முக்கிய புதிய கோட்பாடுகள் முன்மொழியப்பட்டுள்ளன. பேராச��ரியர் ஜெஃப்ரி வைன்ரைட் மற்றும் புர்னெமவுத் பல்கலைக்கழகம் சேர்ந்த பேராசிரியர் டிமோதி, ஸ்டோன்ஹெஞ் லூர்து சமமான ஒரு சிகிச்சையளிக்கும் இடமாக இருந்தது என்று கருதுகின்றனர். இந்த பகுதியில் உள்ள கல்லறைகளில் புதைக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை வைத்து அவர்கள் வாதிடுகின்றனர். எனினும் மூதாதையர் வழிபாட்டிற்கு இத்தளம் பயன்படுத்தப்பட்டிறுக்கிறது என்பதையும் அவர்கள் ஒப்புகொள்கின்றனர். ஐசோடோப்பு பகுப்பாய்வு புதைக்கப்பட்ட நபர்களில் சிலர் மற்ற பகுதிகளில் இருந்தவர்கள் என்று தெரிகிறது. ஸ்டோஹெஞ் ஒரு இறுதி ஊர்வல நினைவுச்சின்னமாக கட்டப்பட்டது என்ற யோசனையை முன்வைப்போரும் உண்டு. அதன் வடிவமைப்பு கிரகணம் உள்ளிட்ட பிற வான நிகழ்வுகளை கணிப்பதை முக்கியமான குறிக்கோளாக கொண்டுள்ளது. + +2012 ல் முன்மொழியப்பட்ட மற்றொரு கோட்பாடு, ஸ்டோன்ஹெஞ் பிரிட்டிஷ் தீவின் பல்வேறு மக்களை ஐக்கியப்படுத்தும் விதமாக அமைக்கப்பட்டது என்று அறிவுறுத்துகிறது. இந்த கோட்பாட்டின் படி ஸ்டோன்ஹெஞ் கட்டுமானத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இடையேயான பிராந்திய ஒத்துழைப்பு மிகவும் தேவை குறிப்பாக கற்கள் வேல்ஸ் போன்ற பகுதியில் இருந்த குவாரிகளில் இருந்து, மிக நீண்ட தூரம் எடுத்து செல்லப்பட்டது. + +ஹீல் ஸ்டோன் தற்போதைய A344 சாலையை அடுத்து , ஸ்டோஹெஞ்சின் முக்கிய நுழைவாயிலுக்கு வெளியே உள்ளது. 16 அடி (4.9 மீ) உயரமான அந்த கரடுமுரடான கல் கல் வட்டம் நோக்கி உட்புறமாக சாய்ந்து இருக்கிறது. இது "ஹீல் ஸ்டோன்" மற்றும் "சன் ஸ்டோன்" உட்பட, கடந்த காலத்தில் பல பெயர்களில் அழைக்கப்பட்டுது. கோடைகால உச்சத்தில் கல் வட்டத்தின் உள்ளே நின்று வாசல் வழியாக வட கிழக்காக பார்த்தால் ஹீல் ஸ்டோன் மீது சூரிய உதயத்தை காணலாம். + +இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி அமெஸ்பரி அபே மற்றும் அதன் சுற்றியுள்ள நிலங்களை கைப்பற்றியது முதல் ஸ்டோன்ஹெஞ்சின் உரிமை பல முறை மாறிவிட்டது. 1540 ம் ஆண்டில் ஹென்றி, ஹெர்ட்ஃபோர்டை சேர்ந்த கோமானுக்கு கொடுத்தார். இது பின்னர் லார்ட் கார்லேடன் பின்னர் மார்க்வெஸ் குயின்ஸ்பரியிடம் சென்றது. சேஷையரை சேர்ந்த அன்ட்ரோபஸ் குடும்பம் 1824 ஆம் ஆண்டு அதை வாங்கியது. முதல் உலக போரின் போது ஒரு விமான நிலையம் இந்த வட்டத்தின் மேற்கு பகுதியில் கட்டப்பட்டது. உலர் பள்ளத்தாக்கில் ஒரு முக்கிய சாலை சந்திப்பும், ஓட்டலும் கட்டப்பட்டது. அவர்களின் கடைசி வாரிசு பிரான்ஸ் மோதல்களில் கொல்லப்பட்ட பின் அன்ட்ரோபஸ் குடும்பம் அந்த இடத்தை விற்றது. பின்னர் சாலிஸ்ப்யூரியை சேர்ந்த நைட் பிராங்க் & ருட்லெய் முகவர் மூலம் 21 செப்டம்பர் 1915 அன்று ஏலம் விடப்பட்டது. + + + + +அக்ரோபோலிஸ் + +அக்ரோபோலிஸ் ("acropolis", ) என்பது பண்டைக்காலத்தில் கிரேக்க நகரங்களின் குறியீட்டு மையப்பகுதியைக் குறித்தது. சமயம் தொடர்பான கட்டிடங்களும், குடிமக்களுக்கான பொதுக் கட்டிடங்களும் இப்பகுதியில் ஒருங்கே அமைந்திருந்தன. அக்காலத்து ஏதென்சில் இருந்த அக்ரோபோலிஸ் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு ஆகும். + +அக்ரோபோலிஸ் (Acropolis) என்னும் சொல், "acron" = விளிம்பு, "polis" = நகரமென்னும் இரு கிரேக்கச் சொற்களின் இணைவினால் உருவானது. நேரடியாக மொழி பெயர்க்கும்போது, "நகரத்தின் விளிம்பு" என்ற பொருள் தருகின்றது. + +அக்ரோபோலிஸ்கள் உயர்ந்த நிலப்பகுதிகளிலேயே அமைக்கப் பட்டிருக்கின்றன. பொதுவாக செங்குத்தான பக்கங்களைக் கொண்ட குன்றுகளே தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய இடங்கள் நகரத்தின் பாதுகாப்புக்கு வாய்ப்பான இடங்களாகும். பண்டைய கிரேக்க நகரங்களான ஏதென்ஸ், ஆர்கோஸ் (Argos), தேபிஸ் (Thebes), கொறிந்த் (Corinth) என்பவற்றில் அக்ரோபோலிஸ்கள் இருந்தன. இது கிரேக்க நகரங்கள் தொடர்பிலேயே உருவானபோதும், பிற்காலத்தில் பல இடங்களிலும் உருவான நகர மையங்களும் அக்ரோபோலிஸ் என்று அழைக்கப்பட்டன. + +மிகவும் பிரபலமான அக்ரோபோலிஸ், கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரிலுள்ள அக்ரோபோலிஸே ஆகும். இதனால் எவ்வித அடைமொழியுமின்றி அக்ரோபோலிஸ் என்றால் அது ஏதென்ஸில் உள்ளதையே குறித்தது. + + + + + +கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் + +கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எகிப்து நாட்டின் கீசா பீடபூமியில் நைல் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள பாதி மனித உருவம் கொண்ட ஒரு பெரிய ஸ்பிங்ஸ் சிலையாகும். இது உலகில் உள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகும். இது பண்டைய எகிப்தியர்களால் கி.மு. மூன்றாம் ஆயிரமாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. + + + + +சீனப் பெருஞ் சுவர் + +சீனப் பெருஞ் சுவர் (Great Wall of China) (長城 எளிதாக்கப்பட்டது: 长城 பின்யின்: (ச்)சாங் (ச்)செங், நேரடிக் கருத்து: "நீண்ட நகர் (கோட்டை)") என்பது, ஆறாம் நூற்றாண்டிலிருந்து மங்கோலியாவிலிருந்தும், மஞ்சூரியாவிலிருந்தும் வந்த 'சியோங்னு'களின் படையெடுப்புகளிலிருந்து சீனப் பேரரசைக் காப்பதற்காக அதன் வடக்கு எல்லையில் கட்டப்பட்ட அரண் ஆகும். பல்வேறு காலப்பகுதிகளில், கல்லாலும் மண்ணாலும், பல பகுதிகளாகக் கட்டப்பட்டுப் பேணப்பட்டு வந்த இச்சுவரின் முக்கிய நோக்கம் ஆட்கள் நுழைவதைத் தடுப்பது அன்று; எதிரிகள் குதிரைகளைக் கொண்டுவராமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். பெருஞ்சுவர் என்று பெயரிட்டு அழைக்கப்பட்ட பல சுவர்கள் காலத்துக்குக் காலம் கட்டப்பட்டிருந்தாலும், கிமு 220-200 காலப்பகுதியில், சீனப் பேரரசர் சின் சி ஹுவாங்கினால் கட்டப்பட்ட சுவரே மிகப் பெயர் பெற்றது ஆகும். இதன் மிகச் சிறு பகுதியே இப்போது எஞ்சியுள்ளது. இது மிங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட தற்போதுள்ள சுவருக்கும் வடக்கே அமைந்திருந்தது. + +இது யாலு நதியிலுள்ள, கொரியாவுடனான எல்லையிலிருந்து கோபி பாலைவனம் வரை 6,400 கிமீ அளவுக்கு நீண்டு செல்கிறது. மிங் வம்சக் காலத்தில், இதன் உச்சநிலைப் பயன்பாட்டின்போது இச் சுவர்ப்பகுதியில் 10 இலட்சம் படையினர் வரை காவல் கடமையில் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. பல நூற்றாண்டுகளாக இடம் பெற்ற இச் சுவரின் கட்டுமானப் பணிகளின்போது 20 தொடக்கம் 30 இலட்சம் மக்கள் இறந்திருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. + +கிமு ஏழாம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலேயே சீனர்கள் சுவர்க் கட்டுமான நுட்பங்கள்பற்றி அறிந்திருந்தனர். இச் சுவர், குறுகிய காலமே நிலைத்திருந்த கின் வம்சத்தின் முக்கியமானவரான முதலாவது பேரரசர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இந்தச் சுவர் ஒரே தனி முயற்சியின் கீழ் கட்டப்படவில்லை. கிமு ஐந்தாம் நூற்றாண்டுக்கும் கிமு 221 க்கும் இடைப்பட்ட காலத்தில், சண்டையிட்டு வந்த சி, யான், சாவோ ஆகிய நாடுகளினால் தங்கள் சொந்தப் பாதுகாப்புக்காகக் கட்டப்பட்ட பல்வேறு தனித்தனியான சுவர்களின் ஒன்றிணைப்பால் பெறப்பட்டது. இச் சுவர்கள் பொதுவாக இறுக்கப்பட மண், சரளைக் கற்கள் என்பவற்றினால் கட்டப்பட்டு, வாள், ஈட்டி போன்ற சிறு ஆயுதங்களையே தாக்குப்பிடிக்கக் கூடியனவாக இருந்தன. கிமு 221 ஆம் ஆண்டில் சின் ஷி ஹுவாங் எதிரி நாடுகள் அனைத்தையும் கைப்பற்றி சீனாவை ஒன்றிணைத்து சிங் வம்ச அரசை நிறுவினார். மையப்படுத்திய ஆட்சியை நடத்துவதற்காகவும், நிலப்பிரபுக்கள் மீண்டும் வலுப்பெறுவதைத் தடுக்கவும், தனது பேரரசுக்கு உட்பட்ட நாடுகளின் இடையில் அமைந்திருந்த எல்லைச் சுவர்களை இடித்துவிட அவர் ஆணையிட்டார். இடையிடையே காணப்பட்ட இடைவெளிகளையும் நிரப்பி வடக்கு எல்லைச் சுவரை முழுமைப்படுத்தினார். பின் வந்த வம்சங்களினால் திருத்தப்பட்டும், விரிவாக்கப்பட்டும் வந்த இச்சுவர், மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தற்போதைய வடிவத்தைப் பெற்றது. + +வெவ்வேறான நான்கு முக்கிய கட்டுமானங்களும், திருத்தவேலைகளும் நடைபெற்றிருக்கின்றன: + + +மிங் வம்சப் பெருஞ் சுவர், கிழக்கு முனையில் ஹேபெய் மாகாணத்திலுள்ள கிங்ஹுவாங்டாவோ (Qinghuangdao)வில் போஹாய் குடாவுக்கு அருகில் ஷன்ஹாய் கடவையில் தொடங்குகிறது. ஒன்பது மாகாணங்களையும், 100 'கவுண்டி'களையும் கடந்து, மேற்கு முனையில், வடமேற்கு கன்சு மாகாணத்திலுள்ள ஜியாயு கடவையில் முடிவடைகின்றது. ஜியாயு கடவை, பட்டுச் சாலை வழியாக வரும் பயணிகளை வரவேற்பதற்காக அமைக்கப்பட்டது. பெருஞ் சுவர், ஜியாயு கடவையில் முடிவடைகின்றபோதும், ஜியாயு கடவையையும் தாண்டிப் பட்டுச் சாலையில் காவல் கோபுரங்கள் உள்ளன. இக்கோபுரங்கள் படையெடுப்புக்களை அறிவிக்கப் புகைச் சைகைகளைப் பயன்படுத்தின. + +முக்கிய படை அதிகாரியான வு சங்குயியை, ஷஹாய்க் கடவையின் கதவைத் திறந்துவிடச் சம்மதிக்க வைத்ததன் மூலம், மஞ்சுக்கள் சுவரைத் தாண்டினார்கள். அவர்கள் உள்ளே வந்து சீனாவைக் கைப்பற்றிய பின்னர், யாரைத் தடுப்பதற்காகச் சுவர் கட்டப்பட்டதோ அவர்களே நாட்டை ஆண்டுகொண்டிருந்ததால், பெருஞ் சுவர் அதன் பாதுகாப்பு முக்கியத்துவத்தை இழந்தது. + +அரசாங்கம் சுவர் கட்டும் வேலையில் ஈடுபடும்படி மக்களுக்கு உத்தரவிட்டது. அவர்கள் படைகளால் தாக்கப்படக்கூடிய ஆபத்தைத் தொடர்ச்சியாக எதிர் நோக்கினார்கள். சுவரின் கட்டுமானப் பணிகளின்போது பலர் இறந்த காரணத்தால், இச்சுவர் "உலகின் அதி நீளமான மயானம்" என்றும் அழைக்கப்படுவதுண்டு. + +பின்வரும் மூன்று பகுதிகள் பெய்ஜிங் மாநகரசபைப் பகுதிக்குள் வருகின்றன. இவை திருத்தப்பட்டு இருப்பதுடன���, தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் வரும் இடங்களாகவும் உள்ளன. + + +இன்னொரு குறிப்பிடத்தக்க பகுதி சுவரின் கிழக்கு முனைப் பகுதிக்கு அண்மையில் உள்ளது. இங்கேதான் பெருஞ் சுவரின் முதல் கடவை இச் சுவர் ஏறும் முதல் மலையான ஷான்ஹாய்குவானில் கட்டப்பட்டது. இச் சுவரில் பாலமாகக் கட்டப்பட்ட ஒரே பகுதியான ஜியோமென்கூ உள்ளது. சோங் வம்சக் காலத்தில் கட்டப்பட்ட மெங் ஜியாங்-நு கோயில் இங்கிருப்பதால், ஷான்காய்குவான் பெருஞ் சுவர், "பெருஞ்சுவர்க் கட்டுமானத்தின் அருங்காட்சியகம்" எனப்படுகிறது. + +பெருஞ்சுவரின் நீளம் முழுவதும் இருந்த படையினருக்கு இடையேயான தகவல் தொடர்புகளும், தேவையான போது கூடுதல் படைகளை அழைப்பதற்கான வசதிகளும், எதிரிகளின் நகர்வுகள்குறித்து, பாசறைகளில் இருந்த படைகளை எச்சரிக்க வேண்டியதும் முக்கியமான தேவைகள். இதனால், மலை முகடுகளிலும், சுவர்ப் பகுதிகளில் அமைந்த பிற உயரமான பகுதிகளிலும், சமிக்ஞைக் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. + +செங்கற்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பெருஞ்சுவர் மண், கற்கள், மரம் ஆகியவற்றைப் பயன்படுத்தியே கட்டப்பட்டிருந்தது. மிங் வம்சக் காலத்தில், சுவரின் பல இடங்களில் செங்கற்களும், கற்கள், ஓடுகள், சுண்ணாம்பு என்பனவும் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. செங்கற்களின் அளவு, கற்கள், மண் என்பவற்றைப் பயன்படுத்திச் செய்வதிலும் பார்க்கக் கட்டுமான வேலையை வேகமாகச் செய்ய உதவியது. அத்துடன் செங்கற்கள் கூடுதலான சுமையைத் தாங்கக்கூடியவையாக இருந்ததுடன் மண்சுவர்களை விடக் கூடிய காலம் நிலைத்திருக்கக் கூடியதாகவும் இருந்தது. கற்கள் அவற்றின் நிறை காரணமாகச் சுவரை உறுதியாக வைத்திருக்கக் கூடியன என்றாலும், அவற்றைப் பயன்படுத்துவது மிகவும் கடினமானது. இதனால், நீள்சதுரக் குற்றிகளாக வெட்டப்பட்ட கற்கள், அத்திவாரம், வாயில் பகுதிகள் போன்றவற்றுக்குப் பயன்பட்டன. + +பெய்ஜிங்குக்கு வடக்கே சுற்றுலா மையங்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டும், சில வேளைகளில் மீளமைப்புச் செய்யப்பட்டும் இருந்தாலும் ஏனைய இடங்களில் சுவர் நல்ல நிலையில் இல்லை. சில இடங்களில் இது ஊர் விளையாட்டு இடங்களாகவும், இன்னும் சில இடங்களில், சுவரின் சில பகுதிகளில் சுலோகங்களும் எழுதப்படுகின்றன. கட்��ுமானத் திட்டங்களின்போது குறுக்கேயிருந்தமையால் சில பகுதிகள் இடித்துத் தள்ளப்பட்டுமுள்ளன. சீனப் பெருஞ் சுவர்ச் சங்கம் சுவரைப் பாதுகாப்பது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஜூன் 2003 வரை சீன அரசாங்கம் சுவர்ப் பாதுகாப்புக்கான எந்தச் சட்டத்தையும் உருவாக்கவில்லை. விரிவான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இச்சுவரின் எவ்வளவு பகுதி எஞ்சியுள்ளது என்று கூறமுடியாதுள்ளது. குறிப்பாகத் தொலைதூரப் பகுதிகளில் இச் சுவரின் நிலை பற்றிக் கூறுவது கடினமானது. கான்சு மாகாணத்திலுள்ள 60 கிலோமீட்டர் நீளமான இச் சுவரின் பகுதி, மணற்புயலினால் ஏற்படும் அரிப்பினால் இன்னும் 20 ஆண்டுகளுக்குள் அழிந்துவிடக்கூடும் என அஞ்சப்படுகின்றது. + +இச் சுவர் சிலசமயம் "நவீன உலகின் ஏழு அதிசயங்களுள்" ஒன்றாகக் குறிப்பிடப்படுகின்றது. ஆனாலும் இது கிரேக்கர்களினால் அடையாளம் காணப்பட்ட பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றல்ல. + +1987 ஆம் ஆண்டில் இது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் அறிவிக்கப்பட்டது. + +1938 ஆம் ஆண்டில், ரிச்சர்ட் ஹலிபர்ட்டன் எழுதிய "அதிசயங்களின் இரண்டாவது புத்தகம்", சந்திரனிலிருந்து பார்க்கக்கூடிய மனிதனால் கட்டப்பட்ட ஒரே அமைப்பு சீனப் பெருஞ் சுவர் மட்டுமே என்று குறிப்பிட்டது. இந்தக் குறிப்பு நிலைத்து, நகரத்துப் பாரம்பரியக் கதை நிலையைப் பெற்றதுடன், பாடப் புத்தகங்கள் சிலவற்றிலும் இடம் பெற்றது. எனினும் சீனப் பெருஞ் சுவரை நிலவிலிருந்து வெறும் கண்ணால் பார்க்கமுடியும் என்ற பொருளை இது தருமாயின் அது உண்மையல்ல. + +எனினும் தாழ்வான பூமியைச் சுற்றும் சுற்றுப்பாதையிலிருந்து, அதாவது சந்திரனிலும் ஆயிரம் மடங்கு குறைவான தூரத்திலிருந்து பார்க்கும்போது, சில வாய்ப்பான சமயங்களில் இது வெறும் கண்ணுக்குத் தெரியக்கூடும். பெருஞ் சுவர் சில மீட்டர்கள் அகலம் மட்டுமே கொண்டது, அதனால் நெடுஞ்சாலைகள், விமான ஓடுபாதைகள் முதலிய பூமியிலுள்ள பல்வேறு அமைப்புக்களுடன் ஒப்பிடக்கூடியது. விண்வெளி விமானிகள் வெவ்வேறுவிதமான குறிப்புகளைத் தந்துள்ளனர். இது அதிசயப்படத்தக்கதல்ல. ஒளியின் திசையைப் பொறுத்து, சில சமயங்களில் தெளிவாகத் தெரியும் சந்திர மேற்பரப்பிலுள்ள சில அம்சங்கள், வேறு சமயங்களில் கண்ணுக்குப் புலப்படாமற் போவதுண்டு. + +"விமான ஓடுபாதையளவுக்குச் சிறியவற்றைக்கூட நாங்கள் பார்க்கமுடிகிறது, (ஆனால்) 180 மைல்கள் மட்டுமேயான உயரத்திலிருந்து சீனப் பெருஞ் சுவர் தெரியவேயில்லை" என ஒரு விண்வெளிக் கலத்தின் விமானி அறிக்கையிட்டார். விமானி வில்லியம் போக் என்பவர் ஸ்கைலாப்பிலிருந்து தான் அதைப் பார்த்ததாக நினைத்தார். ஆனால் பின்னர், உண்மையில் அவர் பார்த்தது பீக்கிங்குக்கு அண்மையிலுள்ள பெருங் கால்வாயையே எனக் கண்டுகொண்டார். இவர் தொலை நோக்குக் கண்ணாடிகளைப் பயன்படுத்திப் பெருஞ் சுவரைக் காண்பதில் வெற்றிகண்டார் என்றாலும் வெற்றுக் கண்களுக்குச் சுவர் தெரியவில்லை என்றார். அண்மையில் சீன விண்வெளி விமானி யாங் லிவெய், தன்னால் அதைப் பார்க்கவே முடியவில்லை என அறிவித்தார். ஒரு அப்போல்லோ விமானி, சில ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து பார்க்கும் போது எந்த மனிதரமைத்த அமைப்புமே தெரியவில்லை என்றார். + +அனுபவம் மிக்க அமெரிக்க விமானி Gene Cernan, 160 கிமீ தொடக்கம் 320 கிமீ உயரத்திலுள்ள பூமிச் சுற்றுப்பாதையிலிருந்து சீனப் பெருஞ் சுவர் வெற்றுக் கண்ணுக்குத் தெரியவே செய்கிறது என்று கூறினார். + +எவ்வாறெனினும் சீனப் பெருஞ் சுவர், மனிதனாலாக்கப்பட்ட வேறெந்த அமைப்பையும் விட விண்வெளியிலிருந்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியக் கூடியது என்ற கதை உண்மைக்குப் புறம்பானது என்பது தெளிவு. + + + + + + +எல் காஸ்ட்டீயோ பிரமிட் + +எல் காஸ்ட்டிலோ பிரமிட் என்பது மெக்சிக்கோவின் மாநிலமான யுகட்டானிலுள்ள தொல்பொருளியற் களப்பகுதியான சிச்சென் இட்சாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மெசோஅமெரிக்க படிக்கட்டுப் பிரமிட் ஆகும். எல் காஸ்ட்டிலோ என்பது "கோட்டை" என்னும் பொருள் தரும் ஸ்பானிய மொழிச் சொல்லாகும். + +9 ஆம் நூற்றாண்டளவில், மாயன் நாகரீக மக்களால் கட்டப்பட்ட இது குகுல்கன் (குவெட்சால்கோட்டில் ("Quetzalcoatl") என்பதற்கான மாயன் மொழிச் சொல்) கடவுளுக்கான கோயிலாகப் பயன்பட்டது. + +இது சதுரவடிவத் தளங்களைக் கொண்ட ஒரு படிக்கட்டுப் பிரமிட் ஆகும். இதன் நான்கு பக்கங்களிலும், மேலேறிச் செல்வதற்கான படிக்கட்டுகள் உள்ளன. உச்சியில் கோயில் அமைந்துள்ளது. காலத்துக்குக் காலம், பழைய பிரமிட்டுகளைப் பெருப்பித்து அவற்றைப் பெரிய பிரமிட்டுகளாக உருவாக��குவது மெசோஅமெரிக்க நகரங்களில் வழக்கமாக இருந்தது. இதுவும் அத்தகைய ஒரு பிரமிட்டுக்கான எடுத்துக்காட்டு ஆகும். இப்போதைய பிரமிட்டின் அடிப்பகுதியின் வடக்குப் பக்கத்தில் உள்ள கதவொன்றின் வழியாக உள்ளே சென்று பழைய பிரமிட்டில் அமைந்துள்ள படிமீது ஏற முடியும். உள்ளே அமைந்துள்ள பழைய பிரமிட்டின் உச்சியிலுள்ள அறையொன்றில் குகுல்சான் மன்னனின் அரியணை அமைந்துள்ளது. இதன் வடிவம் சந்திர கால அட்டவணையான புதிய பிரமிட்டை உள்ளடக்கிய சூரிய கால அட்டவணையாக பழைய பிரமிட் உள்ளதாக கூறப்படுகிறது. + +இதன் கட்டமைப்பு முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிறிது பாழடைந்த நிலையிலிருந்து அறைகுறையாக மறுக்கட்டுமானம் செய்யப்பட்டது. இதன் இரு பக்கங்கள் வாஷிங்டன் நகரிலுள்ள கார்னெகி கல்வி நிறுவனத்தின் 17 ஆண்டுகால பெருமுயற்சியால் ஏறத்தாழ முழுமையுமாக மறுகட்டுமானம் செய்யப்பட்டது. நன்கறிந்த மாயன் நாகரீக நிபுணர் சில்வேனஸ் ஜி. மார்லே என்பவரது தலைமையில் 1920களின் கடைக்காலத்தில் தொடங்கிய இந்த மறுகட்டுமானப்பணி 1940 ஆம் ஆண்டு நிறைவேறியது. இந்த கோயில் மெக்சிகோவின் புகழ்வாய்ந்த சின்னமாக மாறியது. மற்ற இரு பக்கங்களை மெக்சிக்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980-களில் புனர்நிர்மாணம் செய்தனர். + +நான்கு பக்கதிலும் படிக்கட்டுகளை உடைய இக்கட்டிடத்தின் ஒவ்வொரு படிக்கட்டும் 91 படிகளை கொண்டதாக அமைந்துள்ளது. மேல்தளத்தையும் ஒரு படியாகக் கணக்கிட்டால் மொத்தம் 365 படிகள். ஒவ்வொரு படியும் ஹாப் என்னும் மாயன் நாகரீக கால அட்டவணையின் ஒரு நாளை குறிக்கிறது. இந்த கட்டிடத்தின் உயரம் மேல்தளம் வரை 24 மீட்டர், கூடுதலாக மேலுள்ள கோயில் ஒரு 6 மீட்டர். சதுரமான கீழ்த்தளம் குறுக்கில் 55.3 மீட்டராக உள்ளது. + +பிரமிட்டின் வெளிமுனையிலுள்ள பெரிய படிகள் ஒன்பதும் சூரியக் குடும்பத்தின் ஒன்பது கோள்களை குறிப்பதாகக் கருதப்படுகிறது. + +ஸ்பெயினின் யுகாட்டன் ஆக்கிரமிப்புக் காலமான 1530-களில் ஆக்கிரமிப்பு அரசர் இளைய ஃப்ரான்சிஸ்கோ-டி-மான்டியோ இந்த கட்டிடத்தின் மேல் பீரங்கி பொருத்தி கோட்டையாக பயன்படுத்தினார். + +இன்று 'எல் காஸ்ட்டிலோ' மிகப்புகழ்பெற்ற மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மெக்சிகோவின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று. + + + + + +எவரெசுட்டு சிகரம் + +எவரெசுட்டு சிகரம் (அல்லது எவரெஸ்ட் சிகரம்), நேபாளத்தில் சாகர்மா என்றும், சீனாவில் சோமோலுங்குமா என்றும் அழைக்கப்படுகிறது. இது உலகிலேயே யாவற்றினும் மிக உயர்ந்த கொடுமுடியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 8,848 உயரம் மீட்டர் (29,029 அடி) ஆகும். இமயமலையின் மஹாலங்கூர் மலைத்தொடரில் எவரெஸ்ட் மலை அமைந்து உள்ளது. +மேலும், பூமியின் மையத்தில் இருந்து அளக்கப்பட்டால், 5 வது உயரமான மலை ஆகும். இது இமயமலையின் பிரிவில் அமைந்துள்ளது. சீனா (திபெத் தன்னாட்சிப் பகுதி) மற்றும் நேபாளம் இடையேயான சர்வதேச எல்லையானது எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உள்ளது. அதன் மேல்பகுதியில் அண்டை சிகரங்கள் இலோட்ஃசே மலை, 8,516 மீ (27,940 அடி); நபுட்சே, 7,855 மீ (25,771 அடி), மற்றும் சாங்சே, 7,580 மீ (24,870 அடி) ஆகும். + +1856 ஆம் ஆண்டில், இந்தியாவின் கிரேட் டிரிகோனெமெட்டிகல் சர்வே ஆஃப் இந்தியா எவரெஸ்ட்டின் உயரத்தை முதலில் வெளியிடப்பட்டது. பின்னர் பீக் XV என அழைக்கப்பட்டு,   8,840 மீ (29,002 அடி) என நிறுவியது. சீனா மற்றும் நேபாளால் அங்கீகரிக்கப்பட்ட தற்போதைய அதிகாரபூர்வ உயரம் 8,848 மீ (29,029 அடி) 1955 ஆம் ஆண்டு இந்திய ஆய்வின் மூலம் இது நிறுவப்பட்டது, பின்னர் 1975 ஆம் ஆண்டு சீன ஆய்வு ஒன்றால் இது உறுதிப்படுத்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், சீனா மலை உயரத்தை 8844.43 மீ என அளந்தது. +சீனாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் எவரெஸ்டின் உயரம் பற்றிய வாதம் 2005 முதல் 2010 வரை ஐந்து ஆண்டுகள் நீடித்தது. சீனா மலையின் உயரத்தை பாறையின் உயரம்வரை 8,844 மீட்டர் உயரம் என்று வாதிட்டது,   ஆனால் நேபாளம் அதன் பனி உயரம் 8,848 மீட்டர் என்ற அளவே சரி என்றது. 2010 ஆம் ஆண்டில் எவரெஸ்ட் உயரம் 8,848 மீ என்று இரு தரப்பினரிடனும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீ என சீனாவின் கூற்றை நேபாளம் அங்கீகரிக்கிறது. + +இந்திய பிரிட்டிஷ் சர்வேயர் ஜெனரல் ஆண்ட்ரூ வாவ் ஒரு பரிந்துரையின் பேரில். 1865 ஆம் ஆண்டில், எவரெஸ்ட் என்ற அதிகாரப்பூர்வ ஆங்கில பெயரை ராயல் புவியியல் சமூகம் வழங்கியது. பல்வேறு உள்ளூர் பெயர்கள் இருப்பதாகத் தோன்றியதாலும், ஜார்ஜ் எவரெஸ்டின் ஆட்சேபனைகள் இருந்த போதிலும், வு பதவிக்கு வந்த பிறகு, மலைக்கு தன் முன்னோடியின் பெயரை தேர்வு செய்தார். + +எவரெஸ்ட் சிகரம் பல ஏற்ற வீரர்களை ஈர்க்கிறது, அவற்றில் சிலர் மிகவும் அனுபவமுள்ள மலையே���ிகளாவர். இரண்டு முக்கிய ஏறும் வழிகள் உள்ளன, நேபாளத்தில் தென்கிழக்குப்பகுதியில் ("நிலையான பாதை" என அழைக்கப்படும்) பாதை ஒன்று மற்றும் சீனாவின், திபெத்தின் வடக்கில் உள்ள ஒரு பாதை. நிலையான பாதைகளில் ஏற கணிசமான தொழில்நுட்ப சவால்கள் இல்லாதபோதும், உயரத்தில் ஏறும்போது ஏற்படும் வாத நோய், வானிலை, காற்று, பனிச்சரிவுகள், பனிப்பொழிவு போன்ற குறிப்பிடத்தக்க ஆபத்துகள் எவரெஸ்ட் சிகரத்தில் உள்ளன. 2016 ஆம் ஆண்டுவரை மலை மீது 200 க்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளன.   இதில் சில இடங்களின் அடையாளங்களாகவும் செயல்படுகின்றன. +இது நேபாள-திபெத்திய எல்லையில் அமைந்துள்ளது. இக்கொடுமுடியை 1953ஆம் ஆண்டு மே மாதம் 29ம் நாள் முதன் முதலாக எடுமண்டு இல்லரி என்னும் நியூசிலாந்துக்காரரும் டென்சிங் நார்கே என்னும் நேப்பாளத்து செர்ப்பாக்காரரும் ஏறி கொடி நாட்டி உலக சாதனை நிகழ்த்தினார்கள். இது உலகிலேயே ஒப்பரிய சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. நில உருண்டையின் உச்சிக்கோடுதனையே (கோடு = மலை உச்சி) மனிதன் வென்றுவிட்டான் என்று எண்ணி உலகம் பெருமைப்பட்டது. + +மலையேற்றத்தில் மிகத்தேர்ந்தவர்கள் மட்டுமே எவரெசுட்டு உச்சியை எட்ட முடியும் என்றாலும் அண்மையில் இரு கால்களும் இல்லாதவரும், கண் பார்வை அற்றவர்களும் இக்கொடுமுடியை எட்டிப் புகழ் படைத்துள்ளனர். எவரெசுட்டுக்கு பல பழம்பெயர்கள் வழக்கில் உள்ளன. தேவ'கிரி, தேவ'துர்கா என்று வடமொழியிலும், (அண்மைக்காலத்தில், சுமார் 1960ல் இருந்து "சாகர்மாதா" என்றும்), திபேத்திய மொழியில் "கோமோலுங்குமா" (= அண்டங்களின் தாய்) என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மலை ஆண்டொன்றுக்கு 4 மில்லி மீட்டர் உயரம் கூடுவதாக அறிஞர்கள் கண்டுள்ளனர். இப்பெருமலைத்தொடர் எவ்வாறு உருவாகியது என்பதற்கு இமயமலை கட்டுரையைப் பார்க்கவும். + +இராதானாத் சிக்தார் (1813–1870) என்னும் வங்காளத்து இந்தியரே முதன் முதலாக 1852 ஆம் ஆண்டில் இதன் உயரம் சுமார் 8,848 மீட்டர் என்று கண்டுபிடித்தார். அவர் சுமார் 240 கி.மீ தொலைவில் இருந்து கொண்டே தியோடலைட்டு என்னும் கருவியினால் முக்கோண முறையின் அடிப்படையில் இதன் உயரத்தைக் கணித்தார். + +இச்சிகரத்தை முறைப்படி அளவிடும் முன் இதனை "கொடுமுடி-15" என்றுமட்டும்தான் குறித்து வைத்திருந்தார்கள். பின்னர் நில அளவை அணியின் தலைவராக இருந��த சியார்ச் எவரெசுட்டு (George Everest) என்பவரின் பெயரை இக்கொடுமுடிக்கு ஆங்கிலேயர் ஆண்ட்ரூ வாகு (Andrew Waugh) என்பவர் சூட்டினார். இச்சிகரம் கடல் மட்டத்திலிருந்து 28844 அடி உயரமுடையது. + +எவரெசுட்டு சிகரம் பூமியின் இளம் சிகரங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின்படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம். இந்த மடிப்பு மலைகளில் எவரெசுட்டும் ஒன்று ஆகும். + +வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாக தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்த படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது. + +இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு, ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது + +நேபாளம் இதன் உயரத்தை 8848மீ என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் சீனா இதன் உயரம் 8844மீ என்கிறது. சீனா அரசு எவரெசுட்டின் உயரத்தை அளக்க அதன் சிகரத்தை அளவுகோலாக கொள்ளவேண்டும் என்கிறது. நேபாளம் சிகரத்தில் உள்ள பனிக்கட்டியையும் கணக்கில் கொள்ளலாம் என்கிறது. உலகின் மற்ற கொடுமுடிகளின் உயரம் அதன் உச்சியில் உள்ள பனியை கணக்கில் கொண்டுதான் அளக்கப்படுகிறது என்று நேபாளம் கூறு���ிறது. உயரம் தொடர்பாக நேபாளத்திற்கும் சீனாவிற்கும் நடந்த பேச்சில் இறுதியான உடன்பாடு எட்டப்படவில்லை. 1999 மே மாதத்தில் அமெரிக்க குழு புவியிடங்காட்டி கொண்டு எவரெசுட்டின் உயரம் 8850மீ என்று கணித்தது, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை 8850மீ என்பதையே பயன்படுத்துகிறது. இதை நேபாளம் ஏற்கவில்லை. + +2010 ஏறும் பருவத்தின் முடிவில், 3,142 தனிநபர்கள் உச்சி தொட்டுள்ளனர். + +மின் பகதூர் செர்ஷன் தனது முதல் முயற்சியிலேயே உச்சியை அடைந்த போது அவருக்கு கிட்டத்தட்ட 77 வயது + +அப செர்ப்பா உச்சியை 21 முறை அடைந்துள்ளார். + +1922 - ஜார்ஜ் பின்ச் மற்றும் கேப்டன் சி ஜெஃப்ரி புரூஸ் 8,000 மீட்டர் (26,247 அடி) முதல் ஏறு, + +1952 – 1952 சுவிஸ் எவரெஸ்ட் பயணம் மூலம் தென் கோல், முதல் ஏறு + +1953 – 1953 பிரிட்டிஷ் எவரெஸ்ட் பயணமாக நார்கே மற்றும் எட்மண்ட் ஹிலாரி டென்சிங் முதல் ஏற்றம் + +1975 - ஜுங்கோ, முதல் பெண் ஏற்றம், + +1978 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் மற்றும் பீட்டர் ஹபெலெர் ஆக்சிஜனை இல்லாமல் முதல் ஏற்றம் + +1980 - ரீன்ஹோல்ட் மெஸ்னர் , முதல் தனி ஏற்றம் + +1988 - ஜீன் மார்க் பொய்வின், மிதப்பான் மூலம் முதல் ஏற்றம் + +1995 - அலிசன் ஹார்க்ரீவஸ் ,ஆக்சிஜன் இல்லாமல் முதல் பெண் ஏற்றம் + +1998 -. வேகமான 20 மணி நேரத்தில் ,ஆக்சிஜனை இல்லாமல், முதல் ஏற்றம் + +2000 – Davo Karničar மூலம் ஸ்கை முதல் வம்சாவளியை + +2001 - எரிக் வெய்ன்மேயர், ஒரு பார்வையற்றவர் முதல் ஏற்றம் + +2004 - செர்ப்பா, 8 மணி நேரம், 10 நிமிடங்களில் முதல் ஏற்றம் + + + + + +விடுதலைச் சிலை + +சுதந்திர தேவி சிலை ("Statue of Liberty" அல்லது "Liberty Enlightening the World") என்பது ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிலையாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இச்சிலையை பிரான்ஸ் நாடு அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கியது. இச் சிலையை வடிவமைத்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரடெரிக் ஆகஸ்ட் பார்த்தோல்டி ஆவார். அவர் அக்டோபர் 28, 1886 இல் இதனை வழங்கினார், + +அமெரிக்கப் புரட்சியின் போது ஐக்கிய அமெரிக்காவிற்கும், பிரான்சிற்கும் இடையே நிலவிய நட்புறவின் வெளிப்பாட்டினை எடுத்தியம்பும் முகமாக பிரான்ஸ் நாட்டினால் ஐக்கிய அமெரிக்காவிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்தச் சுதந்திரதேவி சிலை. இது சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெள��ப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. + +ஐக்கிய அமெரிக்காவிற்கு விடுதலை கிடைத்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றதை சிறப்பிக்கும் முகமாக அமெரிக்காவும், பிரான்சும் ஒன்றிணைந்து சிலை ஒன்றினை வடிவமைக்க அமெரிக்காவில் நடைபெற்ற மாநாடொன்றில் ஒத்துக்கொண்டன. அதன் அடிப்படையில் பீடத்தினை அமெரிக்க மக்கள் நிர்மாணிப்பதென்றும், பிரான்ஸ் மக்கள் சிலையினை நிர்மாணிப்பதென்றும் முடிவு செய்தனர். அதன்பின் இரு நாட்டவர்களையும் நிதிப்பிரச்சினை பெரிதும் பாதித்தது. அதனால் பிரான்ஸ் நாடு களியாட்டங்கள், அதிர்ஷ்டலாபச் சீட்டிழுப்பு, மூலம் நிதியைத் திரட்டியது. அமெரிக்கா கலை நிகழ்வுகள், கண்காட்சிகள், மற்றும் வேறு நிகழ்வுகள் மூலமும் நிதியை திரட்டினர். + +1875-ஆம் ஆண்டு இந்த சிலையின் கட்டுமானம் தொடங்கியது. 1884-ஆம் ஆண்டு இச்சிலை முழுமை அடைந்தது. பிரான்சில் இருந்து அது கப்பல் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி அமெரிக்க மக்களுக்குச் சுதந்திர தேவி சிலை அர்ப்பணிக்கப்பட்டது. +1924 ஆம் ஆண்டு இந்தச் சிலை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. + +சுதந்திர தேவியின் வலது கையில் தீப்பந்தம் உள்ளது. இடது கையில் ஜூலை 4, 1776 என்று எழுதப்பட்ட புத்தகம் இருக்கிறது. இது அமெரிக்கா விடுதலைப் போரின் சரித்திரத்தைக் குறிக்கிறது. தலையில் 7 முனைகள் கொண்ட கிரீடம் இருக்கிறது இந்த 7 முனைகள், 7 கண்டங்களையும்,7 கடல்களையும் குறிக்கின்றன. பீடத்திலிருந்து சிலையின் உயரம் 93 மீட்டர். சிலையின் உயரம் மட்டும் 34 மீட்டர் ஆகும். சிலையில் பயன்படுத்தப்பட்ட மொத்தத் தாமிரத்தின் எடை 27.2 டன். இரும்பின் எடை 113.4 டன். சிலையின் மொத்த எடை 204.1 டன் ஆகும். + + + + + +விக்டோரியா அருவி + +விக்டோரியா அருவி அல்லது விக்டோரியா நீர்வீழ்ச்சி, உலகின் மிக அழகிய அருவிகளுள் ஒன்று. இது ஸாம்பிசி ஆற்றில், சாம்பியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் (17°55′1″S, 25°51′0″E) அமைந்துள்ளது. இது அண்ணளவாக 1.7 கிலோமீட்டர் (1 மைல்) அகலமும், 128 மீட்டர் (420 அடிகள்) உயரமும் கொண்டது. + +டேவிட் லிவிங்ஸ்டன் என்னும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பயணி ஒருவர் 1855 இல் இவ்விடத்துக்கு வந்தார். உள்ளூர் மக்கள் இந் நீர்வீழ்ச்சியை, "புகையும�� இடியும்" என்னும் பொருளில், மோசி-ஓவா-துன்யா ("Mosi-oa-Tunya") என்று அழைத்து வந்தார்கள். எனினும், லிவிங்ஸ்டன், இதன் பெயரை மாற்றி விக்டோரியா அரசியின் பெயரை அதற்கு வைத்தார். + +இது இரண்டு தேசியப் பூங்காக்களின் பகுதியாக உள்ளது. ஒருபக்கத்தில் இது ஸாம்பியாவிலுள்ள, மோசி-ஓவா-துன்யா தேசியப் பூங்காவும், மறுபக்கம், ஸின்பாப்வேயின் விக்டோரியா அருவி தேசியப் பூங்காவும் உள்ளன. இது ஆபிரிக்காவிலுள்ள மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவதுடன், யுனெஸ்கோ வின் உலகப் பாரம்பரிய இடமாகவும், உள்ளது. + +இங்கு விழும் தண்ணீர் மற்றும் தெளிக்கும் மூடுபனி மூலம் வானவில் உருவாகிறது. இந்த அருவி உலக புவியியல் மற்றும் புவிப்புறவியல் அம்சங்களில் மிக சிறந்ததாகும். வறண்ட பருவத்தில் தண்ணீர் குறைவாக இருக்கும் போது யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், ஒட்டகசிவிங்கிகள் போன்ற விலங்கினங்கள் சாம்பேஸி பகுதியை கடந்து செல்வது கண் கொள்ளாக்காட்சியாகும். மேலும் பால்கான், கருப்பு நாரை, கழுகு, வல்லூரு போன்ற பறவைகளும் அடிக்கடி இங்கு காணலாம். இந்த உலகின் மிக பெரும் நீர்வீழ்ச்சியாக இது உள்ளது. இந்த சாம்பேஸி அருவி 2 கிலோமீட்டர் அகலம் கொண்டது. + + + + + +ரோடொஸின் கொலோசஸ் + +ரோடொஸின் கொலோசஸ் (Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது. + + + + +கிசாவின் பெரிய பிரமிடு + +கிசாவின் பெரிய பிரமீடு அல்லது கூபுவின் பிரமீடு மற்றும் சாப்சின் பிரமீடு ("Great Pyramid of Giza") நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கீசா நெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் ஆகும். இது பழங்கால ஏழு உலக அதிசயங்களில் மிகப்பழமையானதும் இன்றுவரை மீண்டிருப்பதுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கிமு 2560 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது என்று கணக்கிடப்பட்டுள்ளது. + +பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 எக்டேர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமான ஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தி +பிரமிட், ஒவ்வொன்றும் இரண்டு தொடக்கம் நான்கு தொன்கள் வரை நிறையுள்ள, சுண்ணக்கல், எரிமலைப்பாறை, கருங்கல் போன்ற கற்களால் கட்டப்பட்டது. இதன் மொத்த நிறை 7 மில்லியன் தொன்கள் எனவும், கன அளவு 2,600,600 கன மீட்டர்கள் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுவே எகிப்தியப் பிரமிட்டுக்களுள் மிகப் பெரியது. (மெக்சிக்கோவிலுள்ள சோலுலாவின் பெரிய பிரமிட் கன அளவில் இதைவிடப் பெரியது.) ) + +இது 4வது வம்ச எகிப்திய பாரோ மன்னனான கூபுவின் சமாதி என்றும் இதன் கட்டுமானம் 20 ஆண்டுகள் வரை நீடித்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. கூபுவின் தலைமைப் பணியாளரான ஹேமன் அல்லது ஹெமயுனு என்றழைக்கபட்டவரால் இந்த பிரமிடு வடிவமைக்கபட்டிருக்கலாம். உண்மையில் கிசாவின் பெரிய பிரமீடு 146.5மீட்டர் உயரம் உடையதாகும். ஆனால் காலத்தால் ஏற்பட்ட அறிப்புகளாலும் இதன் மேல்முனையில் உள்ள தலைமை கல்லின் சேதத்தினாலும் இதன் தற்போதய உயரம் 138.8மீட்டராக உள்ளது. இதன் ஒவ்வொரு பக்கவாட்டு அளவானது 230.4மீட்டர்களாகும். கிசா பிரமிடின் மொத்த அடர் எடை 5.9மில்லியன் என அளவிடப்பட்டுள்ளது. இதன் உள்ளீடோடு சேர்த்து இந்த பிரமீடின் கன அளவானது 2500000 கன மீட்டர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவீடுகளின் படி இதனை கட்டிமுடிக்க 20 ஆண்டுகள் ஆயிருக்கலாம் எனவும் அளவிடப்பட்டுள்ளது. மேலும் இதன் கட்டுமானத்தின் பொழுது தினசரி 800 ���ொன்கள் அளவுள்ள கட்டுமான கற்களை நிறுவியிருக்க கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் முதல் நுணுக்க மதிப்பீடானது எகிப்திய வரலாற்றின் ஆராய்ச்சியாளரான சர் ப்ளிண்டேர்ஸ் பெற்றி என்பவரால் 1880 - 82 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டது. பிராமிட் ஹிம்ஹோடப் என்பவரால் உருவாக்கப்பட்டது.இவர் எல்லா கல்வி துறைகளிலும் சிறந்து விளங்கினார்.அரசர்களுக்கு ஆலோசகராகவும் பணிப்புரிந்துள்ளார். + +கிசா பிரமிடு 2.3 மில்லியன் சுண்ணாம்புக் கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அருகில் உள்ள கற்க்குவாரியில் இருந்து எடுத்துவரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. அரசனின் பகுப்பறையை சுற்றிலும் 20 முதல் 80 தொன்கள் எடையுள்ள மிகப்பெரிய கட்டுமான கற்கள் அமைக்கப்பட்டுள்ளன.அவை அனைத்தும் 500 மைல்களுக்கு அப்பாலுள்ள அஸ்வான் எனுமிடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டுள்ளன. பாறைகளில் வரிசையாக சிறு துளையிட்டு அந்த துளைகளில் மரத்தாலான ஆப்புக்களை இறுக்கி அவற்றின் மீது நீரை ஊற்றும்போது மரம் ஈரத்தின் காரணமாக உப்பலாகி பாறைகளில் பெரிய விரிசலை ஏற்படுத்துகின்றன. இந்த பிரபலமான முறைதான் பழங்கால எகிப்தியர்கள் கற்களை வெட்டி எடுக்கவும் உதவியிருக்கிறன.இப்படி வெட்டி எடுக்கப்பட்ட பெரிய கற்களானது படகுகள் மூலம் நைல் நதியின் வழியாக கட்டுமான இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டிருக்கின்றன. இவ்வாறு கொண்டுவரப்பட்ட 5.5 மில்லியன் தொன்கள் எடையுள்ள சுண்ணாம்பு கற்களும் 8000 தொன்கள் எடையுள்ள கிரனைட் கற்களும் 500000 தொன்கள் எடையுள்ள சாந்து கலவையும் இதன் கட்டுமானத்திற்கு உபயோகிக்கப்பட்டுள்ளன. + +இந்த பிரமிடின் கட்டுமான முடிவின் உச்சமாக வார்ப்பு கற்கள் உள்ளன. வார்ப்பு கற்கள் என்பன சாய்வு முகப்புடைய, தட்டையான மேற்பரப்பைடைய கற்கள் ஆகும்.இவை உயர் தரத்தில் மெருகேற்றப்பட்ட வெள்ளை சுண்ணாம்புக் கற்கள் ஆகும். மிக கவனமாக ஒரே சாய்கோணத்தில் வெட்டப்பட்ட இந்த சுண்ணாம்புக் கல்லானது பிரமிடுக்குத் தேவையான வடிவத்தைக் கொடுக்கிறது. இன்றைய நிலையில் உட்பக்கமாக அமைக்கப்பெற்ற வர்ப்புகர்களின் அடிப்பாகங்கள் மட்டுமே பெரும்பாலும் எஞ்சியிருக்கின்றன.வெளிப்பக்கமாயிருந்த வழவழப்பான வார்ப்பு கற்கள் அனைத்தும் கி.பி.1300இல் ஏற்பட்ட பூகம்பத்தின் காரணமாக அழிந்துவி���்டன. பின்னாளில் அவற்றை கொண்டு தான் பஹ்ரி வம்சாவழியில் வந்த பஹ்ரி சுல்தான் அன்-நசிர் நசிர்-அத்-தின் அல்-ஹசன் என்பார் 1356இல் கெய்ரோவில் மசூதிகள் கட்டினார். இன்றும் இந்த மசூதிகளின் கட்டுமானத்தில் இந்த பிரமிடின் வார்ப்பு கற்கள் காணப்படுகிறன. + +பெரிய பிரமிடின் உண்மையான நுழைவு வாயில் தரைமட்டத்தில் இருந்து 17 மீட்டர் (56 அடி) உயரத்திலும் பிரமிடு மையக்கோடில் இருந்து கிழக்கே 7,29 மீட்டர் ( 23.9 அடி ) தூரத்தில் உள்ளது. இந்த நுழைவு வாயிலில் இருந்து கீழே 26° 31' 23"" கோணத்தில் .96 X 1.04 மீட்டர்(3.1 X 3.4 அடி) அளவிலான ஒரு இறங்கு பாதையை கொண்டுள்ளது. இது 105,23 மீட்டர் (345.2 அடி) தூரத்தினை கடந்த பிறகு கிடைமட்டப் பாதையை அடைகின்றது. இப்பகுதி முழுமை அடையாமல் உள்ளது. மேலும் இப்பகுதியானது ஒரு தோண்டப்பட்ட குழியை கொண்டுள்ளது.இதுவே அரசனின் உண்மையான புதைகுழியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். + +நுழைவு வாயிலில் இருந்து 28.2 மீட்டர் (93 அடி) தூரத்தில் கீழிறங்கும் பாதையின் கூரையில் ஒரு சதுர துளை உள்ளது. கற்களால் மறைக்கப்பட்ட இது இந்த ஏறும் பாதையின் ஆரம்பமாக உள்ளது. ஏறும் பாதை 39.3 மீட்டர் ( 129 அடி) நீளம் உடையது. மேலும் இது இறங்கு பாதையின் அதே நீள அகலங்களையும் கோணத்தையும் உடையது. அதிலிருந்து இராணியின் அறைக்கு செல்லும் வழியில் பெரும் சித்திர காட்சி உள்ளது. +இராணியின் அறையானது மிகச்சரியாக பிரமிடின் கிழக்கு மற்றும் வடக்கு முகங்களில் நடுவில் உள்ளது.இது 5.23 மீட்டர் ( 17.2 அடி ) நீளம் மற்றும் 5.75 மீட்டர் ( 18.9 அடி ) அகலத்துடன் அதிகபட்சம் 6.23 மீட்டர் உயரத்துடன் ஒரு முக்கோண வடிவ கூரையை கொண்டுள்ளது. + +இராஜாவின் அறையானது கிழக்கு மேற்காக 5.234 மீட்டர் (17.17 அடி) நீளமும் வடக்கு தெற்காக 10.47 மீட்டர் ( 34.4 அடி ) அகலமும் 5,974 மீட்டர் (19.60 அடி) உயரமுடைய ஒரு தட்டையான கூரை கொண்ட அறையாகும்.தரையில் இருந்து 0.91 மீ (3.0 அடி) உயரத்தில் வடக்கு மற்றும் தெற்கு சுவர்களில் இரண்டு குறுகிய துளைகளை கொண்டுள்ளது.எனினும் இதன் பயன்கள் தெளிவாக தெரியவில்லை. +இந்த அறையானது முழுவதும் கருங்களால் ஆன 400 டன் எடை கொண்ட 9 பாளங்களால் ஆனது. + +இன்று சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் நுழைவு வாயிலானது கி.பி.820 ல் கலிப்-அல்-மாமுமின் வேலையாட்களால் தோண்டப்பட்ட திருடர்கள் ' சுரங்கமாகும்.இந்த சுரங்கப்பாதையானது ஏறு பாதையை அடையும் வ��ை சுமார் 27 மீட்டர் ( 89 அடி ) தூரம் சென்று இடபுறம் திரும்புகிறது.ஏனெனில் அப்பகுதியின் கற்களை அகற்றமுடியாததால் அதை சுற்றியுள்ள மென்மையான சுண்ணாம்பு கற்களை சுற்றி சென்று ஏறும் பாதையை அடைகின்றது. + + + + + + +ஆர்ட்டெமிஸ் கோயில் + +ஆர்ட்டெமிஸ் கோயில் ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. +கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது மகன் மெத்தாசெனசு என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது. + + + + +சி. என். கோபுரம் + +சி. என். கோபுரம்(CN Tower () ), 553.3 மீட்டர் உயரம் (1,815.3 அடி) உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும். 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2010 ஆம் ஆண்டில் புர்ஜ் கலிஃபா என்னும் துபாய் கோபுரம் மற்றும் கன்டொண் கோபுரம் ஆகிய கோபுரங்கள் கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது . + +மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது. இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் . இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும். + +1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும். + +1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர். + +சி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது. + +WZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன். + +சி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. இதன் கட்டுமானப் ���ணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது. + +சி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் + + + +செஞ்சதுக்கம் + +செஞ்சதுக்கம் ("Red Square", ) உருசிய நாட்டின் மாசுக்கோவிலுள்ள ஒரு புகழ் பெற்ற சதுக்கமாகும். இது முன்னைய அரசர் காலத்துக் கோட்டையும், தற்போதைய உருசிய சனாதிபதியின் வசிப்பிடமும் ஆகிய கிரெம்லினை "கித்தாய்-கோரோட்" எனப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வணிகப் பகுதியில் இருந்து பிரிக்கிறது. இங்கிருந்து விரிந்து செல்லும் முக்கியமான சாலைகள் நகருக்கு வெளியே நெடுஞ்சாலைகள் ஆகி நாட்டின் பல பகுதிகளுக்கும் செல்கின்றன. இதனால், செஞ்சதுக்கம் மாசுக்கோவினது மையமாக மட்டுமன்றி, முழு உருசியாவினதும் மையச் சதுக்கமாகக் கருதப்படுகின்றது. + +இச் சதுக்கத்தைச் சுற்றிலும் காணப்படும் செங்கற் கட்டிடங்களைக் காரணமாக வைத்தோ, பொதுவுடைமைக் கொள்கைக்கும் செந்நிறத்துக்கும் உள்ள தொடர்பினாலோ இதற்குச் செஞ்சதுக்கம் என்னும் பெயர் ஏற்படவில்லை. "கிராஸ்னாயா" (красная) என்னும் உருசியச் சொல்லுக்கு "சிவப்பு", "அழகு" என்னும் இரு பொருள்கள் உள்ளன. இச் சதுக்கத்துக்கு அருகில் அமைந்துள்ள புனித பசில் பேராலயத்தைக் குறிக்க "அழகு" என்னும் பொருளில் "கிரானஸ்யா" என்னும் பெயர் வழங்கியது. இது பின்னர் அருகில் உள்ள சதுக்கத்தைக் குறிப்பதாயிற்று. இச் சதுக்கம் முன்னர் "எரிந்துபோன இடம்" என்னும் பொருள்படும் "போசார்" என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 17 ஆம் நூற்றாண்டிலேயே இதற்குத் தற்போதைய பெயர் புழங்கத் தொடங்கியது. + +செஞ்சதுக்கத்தின் சிறப்பான வரலாறு, வசிலி சுரிக்கோவ், கான்சுட்டன்டின் யுவோன் போன்ற பல ஓவியர்களினால் வரையப்பட்ட ஓவியங்களில் வெளிப்படுகின்றன. இச் சதுக்கம் மாசுக்கோவின் முக்கிய சந்தைப் பகுதியாகவே உருவாக்கப்பட்டது. பல்வேறு பொது விழாக்கள் இடம்பெறும் இடமாகவும், பிரகடனங்கள் செய்யப்படும் இடமாகவும் இச் சதுக்கம் பயன்பட்டதுடன், சிலவேளைகளில் சார் மன்னர்களின் முடிசூட்டு விழாக்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. படிப்படியாக வளர்ச்சி பெற்ற இச் சதுக்கம் பின்னர் எல்லா அரசாங்கங்களினதும் அரச விழாக்களுக்கான இடமாக விளங்கி வருகிறது. + +13 ஆம் நூற்றாண்டில் இருந்து உருசிய வரலாற்றோடு பிரிக்க முடியாதபடி இணைந்திருப்பதனால் இச் சதுக்கமும் கிரெம்லினும், 1990 ஆம் ஆண்டில் யுனெசுக்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. + + + + + + +கோல்டன் கேற் பாலம் + +கோல்டன் கேற் பாலம் ("Golden Gate Bridge") பசிபிக் பெருங்கடலில் உள்ள சான் பிரான்சிஸ்கோ விரிகுடா திறக்கும் இடத்தில் உள்ள கோல்டன் கேட் சந்தியின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு தொங்குபாலம் ஆகும். +இப்பாலத்தின் மொத்த நீளம் 1.7 மைல்கள் ஆகும். 1937-ல் கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலமாக இருந்தது. மேலும் இப்பாலமே சான் பிரான்சிஸ்கோவின் சின்னமாக விளங்கியது. + +கோல்டன் கேட் பாலம் கட்டப்படுவதற்கு முன்னால் சான் பிரான்சிஸ்கோ மற்றும் மாரின் மாகாணத்தை இணைக்கும் ஒரே வழி பசிபிக் பெருங்கடலில் படகு சவாரி செய்வது தான். ஸ்ட்ராஸ் என்னும் பொறியாளர் கோல்டன் கேட் பாலத்தின் வடிவம் மற்றும் கட்டுமானப்பணியின் தலைமை பொறுப்பு வகித்தார். + + + + + +ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை + +ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை ("Statue of Zeus at Olympia") கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ் நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது. + +இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது. + + + + + + +அறிவியலில் 1600 + +அறிவிய���ிலும் தொழில் நுட்பத்திலும் 1600 ஆம் ஆண்டு பல நிகழ்வுகளைக் கண்டுள்ளது. அவற்றுட் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. + + + + + + +மனித-வலுப் போக்குவரத்து + +மனித-வலுப் போக்குவரத்து என்பது ஆட்களையும் பொருட்களையும் மனிதர்கள் தங்கள் சொந்த வலுவையோ அல்லது பிற மனிதர்களுடைய வலுவையோ பயன்படுத்தி ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நகர்த்துவதைக் குறிக்கும். இதுவும், விலங்கு-வலுப் போக்குவரத்துமே இயந்திரங்களுக்கு முற்பட்டகாலப் போக்குவரத்து முறைகளாகும். சில இயந்திரங்கள் மனித-வலு இயக்கத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்பட்டன. + +எடுத்துக்காட்டுகள்: + + + + + +கணிதம் + +கணிதம் (() ("Mathematics") என்பது வணிகத்தில், எண்களுக்கு இடையான தொடர்பை அறிவதில், நிலத்தை அளப்பதில், அண்டவியல் நிகழ்வுகளை வருவதுரைப்பதில் மனிதனுக்கு இருந்த கணித்தலின் தேவைகள் காரணமாக எழுந்த ஓர் அறிவியல் பிரிவாகும். இந்த நான்கு தேவைகளும் பின்வரும் நான்கு பெரிய கணிதப் பிரிவுகளைப் பிரதிபடுத்துகின்றன: + + +பல்வேறு கணிதவியலாளர்களுக்கும் இடையே கணிதத்தின் சரியான வீச்சையும் வரையறையையும் குறித்து பல்வேறு கருத்துக்கள் உள்ளன. + +கணிதவியலாளர் தோரணங்களைத் தேடுகின்றனர்; கண்டுபிடித்த தோரணங்களைப் பயன்படுத்தி புதிய கணிப்புகளை உருவாக்குகின்றனர். தங்கள் கணிப்புகளின் மெய்,பொய் நிலைகளை கணித நிறுவல் மூலம் தீர்க்கின்றனர். உண்மை நிகழ்வுகளின் நல்ல முன்மாதிரிகளாக கணித அமைப்புக்கள் இருக்கும்போது கணித ஏரணங்கள் இயற்கை குறித்த புரிதலையும் முன்னறிவிதல்களையும் சாத்தியமாக்குகின்றது. எண்ணுதல், கணக்கிடுதல், அளவியல் இவற்றிலிருந்து நுண்கருத்துக்களையும் ஏரணத்தையும் பயன்படுத்தி கணிதம் முன்னேறியுள்ளது; பொருட்களின் வடிவங்களையும் இயக்கங்களையும் ஒழுங்குமுறையுடன் ஆராய்கின்றது. ஆவணங்கள் பதியப்பட்டபோதே செயல்முறைக் கணிதம் மாந்தச் செயற்பாடாக விளங்கியது. சில கணிதத் தீர்வுகளுக்கு பல ஆண்டுகள் அல்லது நூற்றாண்டுகள் தொடர்ந்த தேடுதல் நடந்துள்ளது. + +கிரேக்க கணிதத்தில் கடுமையான கருத்தாய்வுகள் முதலில் தோன்றின; குறிப்பாக யூக்ளிடின் கூறுகளைக் கூறலாம். சூசெப்பெ பியானோ (1858–1932), டேவிடு இல்பேர்ட்டு (1862–1943) போன்றோரின் ஆக்கங்கள் மற்றும் பிற 19வது நூற்றாண்டு கணிதவியல் அமைப்புகளை அடுத்து ஏற்றுக்கொண்ட வரைவிலக்கணத்தின்படி கடுமையான கணித பகுத்தறிதல் மூலம் மெய்கோள்களின் உண்மையை நிறுவவதே கணித ஆராய்ச்சி என்ற கருத்து உருவானது. மறுமலர்ச்சிக் காலம் வரை மெல்லவே முன்னேறிய கணிதவியல் அறிவியல் கண்டுபிடிப்புகளின் இடைவினையால் கணித புத்தாக்கங்கள் மிக விரைவாக மேம்படத்தொடங்கின; இந்த விரைவான வளர்ச்சி இன்றுவரை தொடர்கின்றது. + +கணிதம் இயற்கை அறிவியல், பொறியியல், மருத்துவம், நிதியியல், சமூக அறிவியல் போன்று உலகின் பல துறைகளில் முக்கியமானக் கருவியாகப் பயன்படுத்தப்படுகின்றது. கணிதத்தை மற்றத் துறைகளில் பயன்படுத்துவதைக் குறித்த பயன்பாட்டுக் கணிதம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்களைத் தூண்டவும் அவற்றைப் பயன்படுத்தவும் பயனாகின்றது. புள்ளியியல், ஆட்டக் கோட்பாடு போன்ற கணிதத்துறைகள் இவ்வாறு உருவானவையே. கணிதவியலாளர்கள் கணிதத்தைக் கொண்டு கணிதத்தை (தனிக் கணிதவியல்) அறியவும் முயல்கின்றனர். இந்தத் தனிக் கணிதத்தையும் பயன்பாட்டுக் கணிதத்தையும் பிரிக்கும் தெளிவான வரையறைகள் ஏதுமில்லை. தனிக்கணிதமாக துவங்கியவை பயன்பாட்டுக் கணிதமாக மாறுகின்றன. + +கணிதம் (Math அல்லது Maths) இலக்கங்களும், அதன் செய்முறைகளும் (கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல்), அத்துடன் உருவ அமைப்புக்களும் ("shapes") மட்டுமல்லாது விஞ்ஞான ஆராய்ச்சிகளுடனும், அதன் பிரயோகங்களுடனும் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் ஒரு அறிவியல் சாதனமாகும். கணிதத்தின் தேவை எமது அறிவியல் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். கலிலியோ "கணிதத்தின் உதவியால் நாம் இவ்வுலகத்தையே அறியலாம்" என்று கூறினார். + +எண்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட கணிப்பியலோ ("arithmetic") வடிவங்களை வைத்துக்கொண்டு உண்டாக்கப்பட்ட வடிவியலோ இவைதான் கணிதவியல் என்று நினைப்போர் பலர். இன்னும் சிலர் எண்களுக்குப் பதிலாகக் குறிப்பீடுகளை வழங்கி அவைகளையும் எண்கள்போல் கணிப்புகள் செய்யும் இயற்கணிதம் தான் கணிதத்தின் முக்கிய பாகம் என்பர். மற்றும் சிலர் வடிவங்களை அலசி ஆராயும் வடிவியல் வளர்ச்சி தான் கணிதத்தின் இயல்பு என்று கூறுவர். ஆனால் கணிதம் இதையெல்லாம் தாண்டிய ஒன்று. + +தொடர்ந்து வளர்ந்த நுண்கருத்துக்��ளின் தொடராக கணிதம் உருவானது. பல விலங்குகளும் பகிரும் முதல் நுண்கருத்து எண்களாக இருக்கக் கூடும்: இரண்டு எண்ணிக்கை ஆப்பிள்களின் தொகுப்பும் இரண்டு எண்ணிக்கை மாம்பழங்களின் தொகுப்பும் ஏதோவொரு வகையில் பொதுவாக உள்ளன, அது அவற்றின் எண்ணிக்கை என்ற உணர்வாகும். +எலும்புகளில் காணப்பட்ட கணக்கீடு குறிகளைக் கொண்டு, தொல் பழங்கால மக்கள் கட்புலனாகும் பொருட்களை எண்ணுவதை அறிந்திருந்ததுடன் நாட்கள், பருவ காலங்கள், ஆண்டுகள் போன்ற கட்புலனாகா அமைப்புக்களையும் எண்ணக் கற்றிருந்தனர் என அனுமானிக்கலாம். + +மிகச் சிக்கலான கணிதவியல் கி.மு.3000 வரை தோன்றவில்லை; அப்போதிலிருந்துதான் பபிலோனியர்கள், எகிப்தியர்கள் வரி மற்றும் பிற நிதிக் கணக்கீடுகள், கட்டிட மற்றும் கட்டுமானம், வானியல் போன்ற துறைகளில் எண்கணிதம், இயற்கணிதம், வடிவவியல் போன்றவற்றைப் பயன்படுத்தத் துவங்கினர். வணிகம், நில அளவியல், ஓவியக் கலை, நெசவுத் தோரணங்கள் மற்றும் நேரப் பதிகை ஆகியன கணிதத்தின் ஆரம்பக் கால பயன்பாடுகளாக இருந்தன. + +எண்ணும் எழுத்தும் இரண்டு கண்கள் போல என வள்ளுவர் கூறுகிறார். திருக்குறளில் "ஒன்று", "இரண்டு", "மூன்று", "நான்கு", "ஐந்து", "அறு", "எழு", "எண்", "பத்து", "கோடி" ஆகிய எண்கள் அல்லது தொகையீடுகள் அங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன. எனினும் "தொண்டு" அல்லது "தொன்பது" பயன்படுத்தப்படவில்லை. + +எண்களை எழுதுவதில் இடமதிப்புத் திட்டத்தையும் பூச்சியம் என்ற கருத்தையும் உருவாக்கி வருங்காலக் கணிதக்குறியீட்டுமுறைக்கு அடிகோலிட்டது பழையகால இந்தியா. இதைத்தவிர இந்தியக் கணிதவியலர்கள் (ஆரியபட்டர், பிரம்மகுப்தர், பாஸ்கராச்சாரியர், இன்னும் பலர்) மேற்கத்தியநாடுகள் மறுமலர்ச்சியடைந்து அறிவியலில் வளர்வதற்கு முன்னமேயே பலதுறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தனர். + + +இவையெல்லாம் இந்தியக்கணிதத்தின் சிறப்புகள். + +14 வது நூற்றாண்டில் தொடங்கி, சென்ற ஆறு நூற்றாண்டுகளில் கணிதத்தின் வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள கணிதவியலாளர்கள் பலரின் வரலாறுகளே தக்க சான்றுகள். ஃபெர்மா, நியூட்டன், ஆய்லர், காஸ், கால்வா, ரீமான், கோஷி, ஏபல், வியர்ஸ்ட்ராஸ், கெய்லி, கேன்ட்டர், ஹில்பர்ட், இப்படி இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கு கொண்டு உருவாக்கப்பட்ட கணிதம் இன்றைய கணிதம். +இன்று கணிதவியலில் பயன���படுத்தப்படும் பல குறியீடுகள் 16வது நூற்றாண்டு வரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு முன்னால் கணிதத்தை சொற்களால்தான் விவரித்தனர்; இது மிகவும் கடினமாகவும் புத்தாக்கங்களுக்குத் தடையாகவும் இருந்தது. இன்று பயன்படுத்தப்படும் பல குறியீடுகள் ஆய்லரால் (1707–1783) உருவாக்கப்பட்டவை. தற்காலக் குறியீடுகள் கணிதவியலாளர்களுக்கு கணிதத்தை எளிமையாக்கினாலும் புதியவர்களுக்கு கடினமாக உள்ளது. இவை மிகவும் சுருக்கப்பட்டவை; சிலக் குறியீடுகள் அல்லது சின்னங்கள் நிரம்ப தகவலை உள்ளடக்கி உள்ளன. இசைக் குறியீடுகளைப் போலவே தற்கால கணிதக் குறியீடுகளுக்கும் கடுமையான இலக்கணங்கள் உள்ளன (ஆசிரியருக்கு ஆசிரியர் அல்லது துறைக்குத் துறை இவை சிறிதே வேறுபட்டிருக்கலாம்). இவற்றிலுள்ளத் தகவலை எழுத்தில் வடிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். + +புதியவர்களுக்கு கணித மொழி மிகவும் கடினமானதாகத் தெரியலாம். "அல்லது" மற்றும் "மட்டுமே" போன்ற சொற்கள் வழக்குமொழியை விட மிகத் துல்லியமான பொருளைக் கொண்டவை. தவிரவும், சிலச் சொற்கள் சிறப்பானத் தனிப் பொருள் உடையன. கலைச்சொற்களான "இடவியல் உருமாற்றம்", "தொகையீடு" போன்றவற்றிற்கு கணிதத்தில் துல்லியமானப் பொருள் உண்டு. மேலும், சில சொல்லாடல்கள் "iff for "if and only if"" கணிதத்திற்கு மட்டுமேயானவை. சிறப்பு குறியீடுகளுக்கும் கலைச்சொற்களுக்கும் காரணம் உள்ளது: கணிதத்திற்கு வழக்குசொல்லாடலை விடத் துல்லியம் தேவைப்படுகின்றது. கணிதவியலாளர்கள் இந்தத் துல்லியமான மொழியையும் ஏரணத்தையும் "கடும்நெறி" ("rigor") என்கின்றனர். + +கணிதத்தின் தற்காலப் புலங்களைப் பற்றிப் பட்டியலிடவேண்டுமானால் அப்பட்டியலில் 100 புலங்களுக்கும் மேலாக இருக்கும். இப்புலங்களுக்குள் மிகவும் வியப்பு தரும் உறவுகளும் உண்டு. இவைகளிலெல்லாம் கணிதத்திற்கென்றே தனித்துவம் வாய்ந்த மரபும் குறிப்பிடத்தக்கது. இம்மரபுதான் கணிதத்தை மற்ற அறிவியல் துறைகளிலிருந்து பிரித்துக் காட்டுகிறது.இவைதவிர, கணிதத்தின் அடிப்படைகளுக்கும் மற்ற துறைகளுக்குமான தொடர்பை ஏரணவியல் ஆய்கின்றது. மேலும் புள்ளியியல் போன்ற நேரடியாகப் பயன்படும் கணிதப் புலங்களும் உண்டு. + + + +கணித விமரிசனங்கள் ("Mathematical Reviews") என்ற ஒரு பத்திரிகை 1940 இல் ஒரு சில பக்கங்களுடன் தொடங்கி ஒவ்வொருமாதமும் கணிதத்தி��் எழுதப்படும் புது ஆய்வுக்கட்டுரைகளை விமரிசிக்கவென்றே ஏற்படுத்தப்பட்டது. அது இன்று மாதத்திற்கு 2000 பக்கங்கள் கொண்டதாக வளர்ந்து, ஆயிரக்கணக்கான ஆய்வுப்பத்திரிகைகளிலிருந்து ஏறக்குறைய இருபது லட்சம் கட்டுரைகளின் விமரிசனத்தைக் கணிதப் பொக்கிஷமாகக் காத்து வருகிறது. + + + + + + +எண் + +எண் ("Number") என்பது எண்ணுதல், அளவிடுதல் மற்றும் சிட்டையிடுதலுக்குப் பயன்படும் ஒரு கணிதப் பொருளாகும். கணிதத்துறையில் பலவகையான எண்கள் உள்ளன. +எண்களுக்கான இயல் எண்கள் (1, 2, 3, 4, ...) எண்களுக்கான அடிப்படை எடுத்துக்காட்டாகும். எண்களைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடானது எண்ணுரு எனப்படும். + +மனிதன் தோன்றிய காலத்திலேயே அவன் கைவிரல்களை எண்ண எப்பொழுது தானே கற்றுக்கொண்டானோ அன்றே 'எண்' என்ற கருத்து உண்டானதாகக் கொள்ளலாம். எண்களின் கருத்து வளர்ச்சியே கணிதவியலின் தோற்றம் ஆகும். + +கணிதத்தில், பல நூற்றாண்டுகளாக பூச்சியம் எதிர்ம எண்கள், விகிதமுறு எண்கள் ( + + + + + +எண்களின் பட்டியல் + +இது எண்களைப் பற்றிய கட்டுரைகளின் ஒரு பட்டியலாகும். + +கணித இயல்புகளுக்காகவோ அல்லது பண்பாட்டுக் காரணங்களுக்காகவோ குறிப்பிடத்தக்க ஏனைய எண்கள்: + +ஏனைய சிறப்பாக அறியப்பட்ட முழு எண்கள் Steinhaus' Mega and Megiston, Moser's number, Skewes' number மற்றும் கிரகாமின் எண். + +See How to name numbers in English for more information on nameing numbers. + + + +and probably + + + + + + + + + + +முக்கோணம் + +முக்கோணம் அல்லது முக்கோணி ("Triangle") என்பது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள நேர்கோடுகளால் ஒரு பரப்பை அடைக்க வல்ல ஓர் அடிப்படையான வடிவம். வடிவக்கணித (கேத்திர கணித) அடிப்படை வடிவங்களில் ஒன்று. பெயருக்கு ஏற்றாற் போல் இவ்வடிவம் மூன்று கோணங்களையும் மூன்று உச்சிகளையும் நேர்கோடுகளாலான மூன்று பக்கங்களையும் கொண்ட, ஒரு தட்டையான இரு பரிமாண உருவமாகும். + +யூக்களிடியன் வடிவியலில் ஒரே நேர்கோட்டில் அமையாத மூன்று புள்ளிகள் ஒர் குறித்த முக்கோணத்தையும் தளத்தையும் வரையறுக்கின்றன.(இருபரிமாண யூக்ளிடியன் வெளி). + +முக்கோணங்களை, அவற்றின் பக்கங்களின் நீளங்கள் தொடர்பில் வகைப்படுத்தமுடியும். அவை பின்வருமாறு:- + + +முக்கோணங்களின் மிகப்பெரிய உட்கோணத்தின் அடிப்படையிலும், முக்கோணங்களை வகைப்படுத்தலாம். + + +முக்கோணம் மூன்று பக்கங்களுடைய ஒரு பல்கோணமாகும். + +ஒரு முக்கோணத்தைச் சீராக விரிவடையச் செய்வதன் மூலம் மற்றைய முக்கோணத்தைப் பெறமுடியுமெனில், அவ்விரு முக்கோணங்களும் "ஒத்த முக்கோணங்கள்" எனக் கூறப்படுகின்றன. இதில் அம்முக்கோணங்களின் பக்கங்கள் விகிதசமனானவை. முக்கோணமொன்றின் நீளமான பக்கம், ஒத்த முக்கோணமொன்றின் நீளமான பக்கத்தின் இரண்டு மடங்காயின், முதல் முக்கோணத்தின் சிறிய பக்கமும் மற்ற முக்கோணத்தின் சிறியபக்கத்தின் இரண்டு மடங்காக இருக்கும். மூன்றாவது பக்கமும் அவ்வாறே மற்றதன் இரண்டு மடங்காகக் காணப்படும். அத்துடன் முதல் முக்கோணத்தின் ஏதாவது இரண்டு பக்கங்களுக்கிடையேயான விகிதம், இரண்டாவது முக்கோணத்தின் ஒத்த பக்கங்களுக்கிடையேயான விகிதத்துக்குச் சமனாகும். இரண்டு முக்கோணங்களின் ஒத்த கோணங்கள் ஒன்றுக்கொன்று சமனாக இருப்பின் மட்டுமே அவ்விரு முக்கோணங்களும் ஒத்தவையாக இருக்கும். + +செங்கோண முக்கோணங்களையும் ஒத்த முக்கோணங்கள் பற்றிய எண்ணக்கருவையும் பயன்படுத்தி, சைன், கோசைன் போன்ற திரிகோணகணிதச் சார்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. + +A, B, C என்பவற்றை உச்சிகளாகவும் α, β, γ என்பவற்றைக் கோணங்களாகவும் a, b, c ஆகியவற்றைப் பக்கங்களாகவும் கொண்ட முக்கோணத்தில், பக்கம் a கோணம் α வுக்கும், உச்சி A க்கும் எதிரேயுள்ளது. இதே போலவே ஏனைய பக்கங்களுமாகும். எனின், + +α, β, γ கோணங்களின் கூட்டுத்தொகை இரண்டு செங்கோணங்களுக்குச் சமன் அல்லது 180 பாகை ஆகும். (α + β + γ = 180 பாகை). + +முக்கோணம் தொடர்பான தேற்றங்களில், பைதகரசின் தேற்றம் முக்கியமான ஒன்று. இது ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களுக்கிடையேயான தொடர்பைக் காட்டுகிறது. இதன்படி, ஒரு செங்கோண முக்கோணத்தில், செம்பக்கத்தின் வர்க்கம், ஏனைய இரண்டு பக்கங்களின் வர்க்கங்களின் கூட்டுத்தொகைக்குச் சமன். மேலேயுள்ள முக்கோணத்தில் γ ஒரு செங்கோணமாக இருந்தால், + +பைதகரசின் தேற்றத்தை எல்லா முக்கோணங்களுக்கும் பொருந்தக்கூடியவகையில் பொதுமைப்படுத்த முடியும். இது கோசைன் விதி என அழைக்கப்படும். இதன்படி: + +முக்கோணம் தொடர்பான சைன் விதியின் படி, + +ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களும் அவற்றுக்கு ஒத்த மற்றய முக்கோணத்தின் கோணங்களுக்குச் சமனாக இருப்பின் அவை இயல்பொத்தவை அல்லது வடி���ொத்தவை எனப்படும். அந்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் நீளங்களிற்கிடையேயான விகிதங்கள் சமனாக இருக்கும், இந்தப்பண்பு இயல்பொப்புமையை நிறுவ போதுமானது. + +இயல்பொத்த முக்கோணங்களின் சில பண்புகள்: + +அளவிலும் வடிவத்திலும் சர்வ சமனாக இருக்கும் இரு முக்கோணங்கள் ஒருங்கசைவானவை எனப்படும். அனைத்து ஒத்தசோடி உட்கோணங்களும் சமனானவை, அனைத்து ஒத்தசோடிப் பக்கங்களும் ஒரே நீளத்தை கொண்டிருக்கும். + +இரு சோடி முக்கோணங்கள் ஒருங்கிசைவதற்கான நிபந்தனைகள்: + +ப.கோ.ப: முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளங்கள் அதற்கொத்த மற்றய முக்கோணத்தின் இரு பக்கங்களின் நீளத்திற்கு சமனாக இருக்க வேண்டும், அந்தப் பக்கங்களிற்கிடையேயான கோணம் இரு முக்கோணங்களிலும் சமனாக இருக்க வேண்டும். + +கோ.ப.கோ: முக்கோணத்தின் இரு கோணங்களும் அவற்றிற்கிடையேயான பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் அவற்றிற்கிடையேயான பக்கத்திற்கும் சமனாக இருக்க வேண்டும். + +ப.ப.ப:முக்கோணத்தின் மூன்று பக்கங்களின் நீளங்களும் மற்றய முக்கோணத்தின் அதற்கொத்த பக்கங்களின் நீளங்களிற்கு சமனாக இருக்கவேண்டும். + +கோ.கோ.ப: ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும் ஒரு பக்கமும் மற்றய முக்கோணத்தின் இரு கோணங்களிற்கும் குறித்த பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும். + +செ.ப: இரு செங்கோண முக்கோணிகளில் ஒரு முக்கோணியின் செம்பக்கமும், ஒரு பக்கமும் முறையே மற்றய முக்கோணியின் செம்பக்கத்திற்கும் ஒரு பக்கத்திற்கும் சமனாக இருக்கவேண்டும். + +பைத்தகரசின் தேற்றத்தின் படி யாதயினும் ஓர் செங்கோண முக்கோணியில் செம்பக்க நீளத்தின் வர்க்கமானது மற்றய பக்க நீளங்களின் வர்கங்களின் கூட்டுத்தொகைக்கு சமனாகும். செம்பக்க நீளத்தை "c" எனவும் மற்றய பக்க நீளங்களை "a", "b" எனக்கொண்டால் தேற்றத்தின் படி + +இதன் மறுதலையும் உண்மையானது, ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் மேற்படி சமன்பாட்டை சரி செய்தால் பக்கம் "c" இற்கு எதிர்ப்பக்கத்தில் செங்கோணம் அமைந்திருக்கும். + +செங்கோண முக்கோணத்தைப் பற்றிய வேறுசில உண்மைகள்: + +ஒரு முக்கோணத்தின் பரப்பளவு பின்வரும் சமன்பாட்டினால் தரப்படுகின்றது. + +இங்கு "S" முக்கோணத்தின் பரப்பளவாகும். + +முக்கோணங்களின் பரப்பளவைக் கணிக்கப் பயன்படும் இன்னொரு சமன்பாடு எரோனின் வாய்ப்பாடு பின்வருமாறு:- + +இங்கே "s" = 1/2 ("a" + "b" + "c") அதாவது முக்கோணத்தின் சுற்றளவின் அரைவாசி. + +மாற்றாக + +இங்கே "s" மேலே வரையறுக்கப்பட்டபடியும், "r" முக்கோணத்தின் உள்வட்டத்தின் ஆரையுமாகும். + + + + + +முக்கோண எண் + +வடிவவியலில் முக்கோண எண் ("triangular number") என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும். படத்தில் உள்ளவாறு, ஒரு முக்கோண எண் என்பது ஒரு சமபக்க முக்கோண வடிவில் ஒழுங்குபடுத்தத்தக்க ஒரு எண்ணாகும். (மரபின்படி, முதலாவது முக்கோண எண் 1 ஆகும்.) "n" -ஆம் முக்கோண எண் என்பது ஒரு பக்கத்திற்கு "n" புள்ளிகளெனக் கொண்ட சமபக்க முக்கோணத்துக்குள் அமையும் மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கையாகும். ஒவ்வொரு வரிசையும் அதற்கு முன்னுள்ள வரிசையைக்காட்டிலும் ஒரு அலகு கூடுதலாக உள்ளது. இதன் மூலம் முதல் முக்கோண எண் 1; இரண்டாம் முக்கோண எண் 1+ 2 = 3; மூன்றாம் முக்கோண எண் 1 + 2 + 3 = 6;... என இயல் எண் களின் கூட்டுத்தொகையாக ஒவ்வொரு முக்கோண எண்ணும் அமைவதைக் காணலாம். "n" -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் "n" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமமாக இருக்கும். + +முக்கோண எண்களின் தொடர்வரிசை : + +"n" -ஆம் முக்கோண எண்ணின் மதிப்பு 1 முதல் "n" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம் என்பதால் முக்கோண எண்களுக்கான மீள்வரு வாய்ப்பாடு: + +வலது இறுதியில் உள்ளது ஒரு ஈருறுப்புக் கெழு. இக்கெழு, "n" + 1 பொருள்களில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய சோடிகளின் எண்ணிக்கையைத் தருகிறது. பெருக்கலில் உள்ள தொடர் பெருக்கத்தைப் போன்றவை கூட்டலுக்கு முக்கோண எண்கள். தொடர் பெருக்கம் "n" !, 1 முதல் "n" வரையிலான இயல் எண்களின் பெருக்கலுக்குச் சமம். முக்கோண எண் formula_2 1 முதல் "n" வரையிலான இயல் எண்களின் கூடுதலுக்குச் சமம். + +ஒவ்வொரு புள்ளியையும் இணைத்து வரையக் கூடிய கோடுகளின் எண்ணிக்கையைப் பின்வரும் வாய்ப்பாடு மூலம் காணலாம்: + +formula_3 + +புள்ளிகள் மற்றும் இக்கோடுகளின் எண்ணிக்கைகளுக்கு இடையிலான விகிதம்விகிதத்தின் குறிப்பிடத்தக்கதொரு பண்பு: + +formula_4 + +முக்கோண எண்கள் மற்ற வடிவ எண்களோடு அதிகத் தொடர்புடையன. + +எடுத்துக்காட்டுகள்: + + +மேலேயுள்ள ஒவ்வொரு எடுத்துக்காட்டிலும், இரண்டு பொருந்துகின்ற முக்கோணங்களிலிருந்து ஒரு சதுரம் அமைவதைக் காணலாம். + + +அனைத்து வர்க்க முக்கோண எண்களையும் பின்வரும் மீள்வரு வாய்ப்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம். + + + + +எடுத்துக்காட்டு: + +"n" -ஆம் மையப்படுத்தப்பட்ட "k"-கோண எண்ணைக் காணும் வாய்ப்பாடு: + +இரு முக்கோண எண்களின் நேர்ம வித்தியாசம் ஒரு சரிவக எண். + + + + + +பல்கோண எண் + +கணிதத்தில், ஒரு பல்கோண எண் (Polygonal number) என்பது, ஒழுங்கான பல்கோண வடிவில் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒரு எண்ணாகும். பண்டைய கணிதவியலாளர்கள், எண்கள் கற்கள், விதைகள் போன்றவற்றால் குறிக்கப்படும்போது, அவற்றைக் குறிக்கப்பட்ட விதங்களில் ஒழுங்குபடுத்த முடியும் எனக் கண்டறிந்தனர். எடுத்துக்காட்டாக எண் 10 ஐ, ஒரு முக்கோணமாக ஒழுங்குபடுத்தமுடியும் (முக்கோண எண் பார்க்கவும்): + +ஆனால் 10 ஐ ஒரு சதுரமாக அடுக்கமுடியாது. எண் 9 ஐ அவ்வாறு அடுக்கமுடியும். (சதுர எண் பார்க்கவும்): + +36 போன்ற சில எண்களைச் சதுரமாகவும், முக்கோணமாகவும் அடுக்கமுடியும். ( முக்கோண சதுர எண்): + +ஒரு பல்கோணத்தின் இரு அடுத்துள்ள பக்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒரு புள்ளியை அதிகப்படுத்தி அப்புள்ளிகளுக்கிடையே மற்ற தேவையான பக்கங்களைச் சேர்த்தால் இதற்கு அடுத்த அளவுப் பல்கோணம் கிடைக்கும். கீழேயுள்ள படங்களில் புதிதாகச் சேர்க்கப்பட்ட புள்ளிகள் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளன. + +முக்கோண எண்கள் + +சதுர எண்கள் + +ஐங்கோணி, அறுகோணி போன்ற கூடிய பக்கங்களைக்கொண்ட பல்கோணிகளும் புள்ளிகளின் அடுக்காகக் காட்டப்படக்கூடியவை. (convention படி, எத்தனை பக்கங்கொண்ட பல்கோணிக்கும் 1 முதலாவது பல்கோண எண்ணாகும்). + +ஐங்கோண எண்கள்: + +அறுகோண எண்கள் + +36: (இது முக்கோண எண்ணும், ஒரு சதுர எண்ணுமாகும்.) + +"s" -பலகோணத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எனில், + +"n" -வது "s"-கோண எண், "P"("s","n") காணும் வாய்ப்பாடு: + +"n"-வது "s"- கோண எண்ணுக்கும் முக்கோண எண் "T" -க்குமுள்ள தொடர்பு: + +எனவே: + +தரப்பட்ட "s"-கோண எண் "P"("s","n") = "x" எனில் + + + + + + +தமிழ் எழுத்து முறை + +தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துகளின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை "சிறு" என்னும் பொருள் கொண்டது. இவை "தமிழ் அகரவரிசை", "தமிழ் நெடுங்கணக்கு" போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது. தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும், 216 உயிர்மெய் எழுத்துகளும், ஓர் ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. த���்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துகள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல. + +உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றுடனும் சேர்ந்து உருவாகும் எழுத்துகள் உயிர்மெய் எழுத்துகள் எனப்படும். உயிர்மெய்யெழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துகளும், 18 மெய் எழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துகள் தமிழ் மொழியில் உள்ளன. தமிழ் நெடுங்கணக்கில் சேராச் சில கிரந்த எழுத்துகள் (ஜ, ஷ, ஸ, ஹ வரிசைகள்) 52ம் க்ஷ, ஸ்ரீ முதலான எழுத்துகளும் இன்று பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இதனைப் பலரும் எதிர்த்தும் வருகின்றனர். + +தமிழ் எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்படும். + +தமிழ் எழுத்து ஏனைய பிராமிய குடும்ப எழுத்துகள் போன்று பிராமி எழுத்துமுறையில் இருந்து உருவாகியது என்று கருதப்படுகின்றது. தொடக்ககாலத் தமிழ்க் கல்வெட்டுக்களில் காணப்படும் அசோக பிராமியை ஒத்த எழுத்துகளை ஆய்வாளர்கள் தமிழ்ப் பிராமி அல்லது தமிழி எனக் குறிப்பிடுகின்றனர். இது, பல அம்சங்களில் அசோக பிராமியில் இருந்து வேறுபட்டுக் காணப்பட்டது. எடுத்துக்காட்டாக, அசோக பிராமியைப் போலன்றித் தமிழ்ப் பிராமியில் அகரமேறிய உயிர்மெய்களில் இருந்து தனி மெய்யெழுத்தைப் பிரித்துக் காட்டுவதற்கான முறை ஒன்று இருந்தது. அத்துடன், ஐராவதம் மகாதேவனின் கூற்றுப்படி, தொடக்ககாலத் தமிழ்ப் பிராமியில் உயிர்மெய் எழுத்துகளில் உயிரொலிகளைக் குறிக்கச் சற்று வேறுபட்ட குறியீடுகள் பயன்பட்டன. மேலும், சமசுக்கிருதத்தில் இல்லாத ஆனால் தமிழில் உள்ள ஒலிகளைக் குறிக்கக் கூடுதலான எழுத்துகள் இருந்ததுடன், சமசுக்கிருதத்தில் உள்ள ஆனால் தமிழுக்குத் தேவையற்ற ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் இல்லாமலும் உள்ளன. எடுத்துக்காட்டாக ஒலிப்புள்ள மெய்யொலிகள் தமிழ்ப் பிராமியில் காணப்படவில்லை. + +2 ஆம் நூற்றாண்டுக்குப் பிந்திய கல்வெட்டுகளில் சற்று மாறுபட்ட தமிழ்ப் பிராமி வடிவம் காணப்படுகிறது. இவ்வடிவம், தொல்காப்பியத்தில் விளக்கப்பட்ட தமிழ் எழுத்து முறையைப் பெருமளவுக்கு ஒத்ததாக உள்ளது. முக்கியமாக, அகரமேறிய மெய்யெழுத்துகளில் இருந்து தனி மெய்யைப் பிரித்துக்காட்ட புள்ளிகள் பயன்பட்டதைக் காண முடிகிறது. இதன் பின்னர் தமிழ் எழுத்துகள் வளைகோடுகளைக் கொண்டனவாக வளர்ச்சியடைந்தன. கிபி 5 ஆம் 6 ஆம் நூற்றாண்டுகளில் இவை தொடக்க வட்டெழுத்து என அழைக்கப்படும் வடிவத்தை அடைந்தன. +தற்காலத் தமிழ் எழுத்துகள் வட்டெழுத்துகளில் இருந்து வளர்ச்சி அடைந்தவை அல்ல. 7 ஆம் நூற்றாண்டில், பல்லவர்கள் புதிய தமிழ் எழுத்துமுறையைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துகள் கிரந்த எழுத்துகளை எளிமையாக்கி உருவாக்கப்பட்டவை. கிரந்த எழுத்துகள் சமசுக்கிருதத்தை எழுதுவதற்காகத் தென்னிந்தியாவில் உருவான எழுத்துகள். 8 ஆம் நூற்றாண்டளவில், தமிழகத்தின் வடபகுதியான சோழ நாட்டிலும், பல்லவ நாட்டிலும் இப்புதிய எழுத்துமுறை வட்டெழுத்துக்குப் பதிலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. தமிழ்ககத்தின் தென் பகுதியில் இருந்த சேர நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் வட்டெழுத்து முறை 11 ஆம் நூற்றாண்டில் பாண்டிநாடு சோழர்களால் கைப்பற்றப்படும்வரை பயன்பாட்டில் இருந்தன. பின் வந்த நூற்றாண்டுகளில் சோழ-பல்லவ தமிழ் எழுத்துமுறை நவீன தமிழ் எழுத்து முறையாக வளர்ச்சி பெற்றது. + +உயிரெழுத்துகளில் அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்து எழுத்துகள் குறைந்த ஒலியளவு கொண்டவை இதனால் இவை "குறில்கள்" என்றும், கூடிய ஒலிப்பளவு கொண்ட ஆ, ஈ, ஊ, ஏ, ஓ என்னும் எழுத்துகள் "நெடில்கள்" என்றும் குறிக்கப்படுகின்றன. ஐ, ஔ என்னும் இரு எழுத்துகளும் கூட்டெழுத்துகள். இவை முறையே அ + இ, அ + ஒ என்னும் சேர்க்கையால் உருவாகும் ஒலிப்புக்களைக் குறிக்கின்றன. தொல்காப்பியர் காலத் தமிழ் எழுத்து முறையில், ஏகாரமும், ஓகாரமும் மேல் புள்ளி பெற்று எகரத்தையும், ஒகரத்தையும் குறித்தன. பிற்காலத்தில் 18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை எகரம், ஏகாரம் என்னும் இரண்டும் எ என்னும் எழுத்தாலும், ஒகரம், ஓகாரம் என்னும் இரண்டும் ஒ என்னும் எழுத்தாலும் குறிக்கப்பட்டன. இந்தக் குழப்பத்தைப் போக்குவதற்காக 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் எனப்பட்ட இத்தாலிய மதபோதகரான கான்சுடன்டைன் பெசுக்கி என்பார் நெடிலைக் குறிக்க சுழிகளைப் பயன்படுத்தும் முறையைக் கையாண்டார். ஓகாரத்தைக் குறிக்க அவரது முறையே இன்றும் பயன்பட்டு வருகிறது. ஆனாலும் ஏகாரத்தைக் குறிக்க அவரது சுழிப்பு முறை இன்று பயன்பாட்டில் இல்லை. அதற்குப் பதிலாக எ என்னும் எழுத்தின் நிலைக்குத்துக் கோட்டில் கீழ் முனையில் இருந்து இடப் பக்கம் சாய்ந்த கீழ் நோக்கிய கோடொன்றைச் சேர்த்து இப்போது ஏ என எழுதப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஐ, ஔ ஆகிய எழுத்துகளைக் கைவிட்டு, அய், அவ் என்று எழுதவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனாலும் இக்கோரிக்கை இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. + +பிற இந்திய மொழி எழுத்துமுறைகளைப் போலவே தமிழிலும் அகரமேறிய மெய்களே அடிப்படைக் குறியீடுகளாக இருக்கின்றன. இவற்றுக்கு மேலே புள்ளி இடுவதன் மூலம் மெய்யொலிகள் குறிக்கப்படுகின்றன. "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" என்று தொல்காப்பியம் குறிப்பிடுவதில் இருந்து இது பழமையான வழக்கு என்பதை அறிந்துகொள்ள முடியும். பிற்காலத்தில், பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதும்போது பனையோலை கிழிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காகப் புள்ளியிடும் முறை கைவிடப்பட்டது. அப்போது, மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய்களும் ஒரே மாதிரியாகவே குறிக்கப்பட்டு வந்தன. மயக்கத்தைத் தவிர்க்கும் பொருட்டுப் பிற்காலத்தில் மீண்டும் புள்ளியிடும் வழக்கம் புழக்கத்துக்கு வந்தது. + +உயிரும் மெய்யும் சேர்ந்து உருவாகும் ஒலிகளைக் குறிப்பன உயிர்மெய் எழுத்துகள் ஆகும். உயிர்மெய் எழுத்துகளின் வடிவங்கள் குறித்துத் தொல்காப்பியம், எழுத்ததிகாரத்தில் 17 ஆவது நூற்பா கூறுகிறது. இதன்படி மெய் அகரத்தோடு கூடும்போது உருவம் திரிபடையாமல் இருக்கும். பிற உயிர்களோடு சேரும்போது உருவம் திரிபு அடையும். திரிபடையும் எழுத்துகள், பின்வருமாறு திரிபடைகின்றன: + +தற்கால எழுத்து முறையில் இவை பின்வருமாறு அமைகின்றன. +தொல்காப்பியர் காலத்தில் மேல், கீழ் விலங்குகள், கோடு, புள்ளி என்பவை, தற்கால வடிவங்களுடன் வேறுபட்டுக் காணப்பட்டாலும், அடிப்படைக் கருத்துரு தற்கால எழுத்து முறையிலும் மாறாமல் இருப்பதைக் காணலாம். + +கீழேயுள்ள அட்டவணையின் முதலாவது வரிசையில் மெய்யெழுத்துகள் காட்டப்பட்டுள்ளன. முதல் நிரலில் உயிரெழுத்துகள் உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்துக்குரிய நிரலும், உயிரெழுத்துக்குரிய வரிசையும் கூடும் இடத்தில் அவற்றின் புணர்ச்சியினால் உருவான உயிர்மெய்யெழுத்து காட்டப்பட்டுள்ளது. + +அஃகேனம், தனிநிலை, முப்புள்ளி, முப்பாற்புள்ளி என பல பெயர்களுள்ள ஆய்த எழுத்து. + +கிரந்தம் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலும் கேரளத்திலும் சமஸ்கிருத மொழியில் இருந்து தோன்றி தமிழில் பயன்படுத்தப்பட்ட சொற்களை எழுதப் பயன்பட்ட ஒரு லிபி (எழுத்து முறை). இருபதாம் நூற்றாண்டில் தேவநாகரி எழுத்துகள் பிரபலமடைந்ததாலும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் சமற்கிருதம் மீது பொதுவாக செய்த தாக்கத்தாலும் கிரந்தத்தின் உபயோகம் பெருமளவு குறைந்து விட்டது. + +தமிழில் சமஸ்கிருதம் மற்றும் தமிழின் கலப்பால் உருவான மணிப்பிரவாளம் பரவலாக இருந்த பொழுது கிரந்த எழுத்துகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. மணிப்பிரவாளத்தின் செல்வாக்கு குறைந்தாலும், 'ஜ', 'ஶ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ', 'ஸ்ரீ' போன்ற கிரந்த எழுத்துகள் வடமொழி மூலம் தோன்றிய சொற்களிலும் பிறமொழிச் சொற்களிலும், தமிழில் இல்லா இவ்வோசைகளை குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. + +தமிழ் எழுதும் முறைமை மூலம், நீங்கள் அடிப்படைத் தமிழ் எழுத்துகளை எழுதப் பழகலாம். பிறரைப் பழக்கலாம். +நீங்கள் விரும்பும் கோப்பினை, உங்கள் கணினியிலேயே தரவிறக்கம் செய்து கொண்டு, இணைய இணைப்பு +இல்லாமலேப் பயன் படுத்தலாம். ஒவ்வொரு கோப்பும், ஏறத்தாழ 6kb அளவிலேயே இருக்கிறது. + +தமிழில் 0 முதல் 9 வரைக்குமான எண்களும் 10, 100, 1000 ஆகியவற்றைக் குறிக்கவென தனி எண்களும் உள்ளன. அத்துடன் நாள், மாதம், ஆண்டு, செலவு, வரவு, மேலேயுள்ளபடி, ரூபாய், இலக்கம் என்பவற்றைக் குறிக்க குறியீடுகளும் உள்ளன. + +தமிழ் ஒருங்குறி U+0B80 முதல் U+0BFF வரை உள்ளது. + + + + + + +எண்ணுரு + +எண்ணுரு அல்லது எண்குறி ("Numeral") என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். "1, 2, 3, 4, 5..." என் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் எண்ணுருக்கள் அராபிய எண்ணுருக்கள் எனப்படுகின்றன. இவை "I, II, III, IV, V, ..." என எழுதப்படும் ரோம எண்ணுருக்களிலிருந்து வேறுபட்டிருப்பினும், இரண்டும் ஒரே எண்களையே குறிக்கின்றன. இதேபோல சொற்களும் எண்ணுருக்களாகலாம். மேலே குறிப்பிட்ட எண்களை, "ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து..." எனச் சொற்களைப் பயன்படுத்தியும் இலகுவாக குறித்துக் காட்டலாம். கணனிச் சமூகத்துக்குப் பழக்கமான பதினறும எண்ணுரு முறைமையில் "A" தொடக்கம் "F" வரையிலான எழுத்துக்கள் எண்ணுருக்களை உருவாக்கப் பொதுவாகப் பயன்படுகின்றன. + +சில வெவ்வேறுவகை எண்ணுருக்கள் பின்வருமாறு: + + + + + +இந்து-அரபு எண்ணுருக்கள் + +அராபிய எண்ணுரு முறைமை அல்லது இந்து-அரபு எண்ணுரு முறைமை ("Hindu–Arabic numeral system") எனப் பொதுவாக அழைக்கப்படும் எண்ணுரு முறைமையே, எண்களைக் குறிக்க மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டுமுறை. அராபிய எண்ணுரு முறைமை இடஒழுங்கிலமைந்த, அடி 10 ஐக் கொண்ட ஒரு எண்ணுரு முறைமையாகும். இதில் 10 இலக்கங்களைக் குறிக்க 10 வெவ்வேறான glyphs உள்ளன. வலது கோடியிலமைந்த இலக்கமே ஆகக்கூடிய பெறுமானத்தைக் கொண்டது. அராபிய எண்ணுரு முறைமை ஒரு பதின்மக் குறியையும் (பொதுவாக ஒரு பதின்மப் புள்ளி அல்லது ஒரு பதின்மக் காற்புள்ளி) பயன்படுத்துகின்றது. இது ஒற்றைத் தானத்தையும், பத்திலொன்றாம் தானத்தையும் பிரிக்கின்றது. இதைவிடப் பதின்மத் தானங்கள் திரும்பத் திரும்ப முடிவிலியாகத் தொடர்வதைக் குறிக்கும் ஒரு குறியீடும் பயன்படுகின்றது. இவ்வாறாக வளர்ச்சியடைந்த இன்றைய அராபிய எண்ணுரு முறைமை எந்தவொரு விகிதமுறு எண்ணையும், 13 glyph களைப் (பத்து இலக்கங்கள், தசமப் பிரிப்பான், தொகுப்புக்கோடு, எதிரெண்ணைக் குறிக்கும் இடைக்கோடு) பயன்படுத்திக், குறியீடாகத் தரவல்லது. + +அராபிய எண்ணுரு முறைமை பலவகையான glyph தொகுதிகளைப் பயன்படுத்தியுள்ளது. இந்தத் தொகுதிகளை இரண்டு முக்கியக் குடும்பங்களாகப் பிரிக்கலாம். ஒன்று மேற்கு அராபிய எண்ணுருக்கள், மற்றது கிழக்கு அராபிய எண்ணுருக்கள். இன்றைய ஈராக் நாட்டினுள் அடங்கும் பகுதியில், ஆரம்பத்தில் வளர்ச்சி பெற்ற, கிழக்கு அராபிய எண்ணுருக்கள் "அரபு-இந்திக்" என்னும் பெயரில் கீழேயுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. கிழக்கு அரபு-இந்திக் என்பது, கிழக்கு அராபிய எண்ணுருக்களின் ஒரு வகையாகும். ஸ்பெயின், மக்ரெப் போன்ற இடங்களில் வளர்ச்சியடைந்த மேற்கு அராபிய எண்ணுருக்கள், படத்தில் "ஐரோப்பிய" என்று காட்டப்பட்டுள்ளன. +இந்து-அராபிய எண்ணுருக்கள் முதலில் இந்தியக் கணிதவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த எண்ணிருக்களை ”இந்து எண்ணுருக்கள்” எனப் பெர்சிய-அராபியக் கணிதவியலாளர்கள் அழைத்தனர். பின்னர் அராபிய வணிகர்கள் மூலம் மேற்கு நாடுகளுக்கு இவை பரவியதால் ஐரோப்பாவில் “அராபிய எண்ணுருக்கள்” என அழைக்கப்பட்டது. + +அராபிய எண்ணுரு முறைமை, கணிதத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. இதன் தோற்றம் பற்றிய பல்வேறு கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பின்வருவனவும் அவற்றுள் அடங்கும். + + +மேற்கண்ட ஒவ்வொரு கோட்பாட்டிலும் வெவ்வேறு அளவு உண்மையிருந்தாலும், இக் கோட்பாடுகளை ஆதரிப்பவர்கள் தங்கள் தங்கள் கோட்பாடுகளுக்குச் சாதகமானவற்றை மட்டும் பெருப்பித்துக் காட்டுகிறார்கள். எனினும், அராபிய எண்ணுரு முறைமையில் இந்தியக் கணிதத்தின் செல்வாக்கு இருந்ததைப் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். + + + + + +பபிலோனிய எண்ணுருக்கள் + +பபிலோனியர்கள், சுமேரியர்களிடம் இரவல் வாங்கிய, அடி-60 (or sexagesimal) கொண்ட தானங்களினடிப்படையிலான எண்ணுரு முறைமையைப் பயன்படுத்தினர். + +1, 2, 3, 4, 5, 6, 10, 12, 15, 20, and 30 ஆகிய எண்களால் வகுக்கப்படக்கூடியதாக இருந்ததாலேயே அறுபது அடியாகக் கொண்ட sexagesimal முறைமை பயன்படுத்தப்பட்டது. Integers உம் பின்னங்களும் ஒரேவிதமாகவே குறிக்கப்பட்டன. எனினும் சந்தர்ப்பங்களைப் பொறுத்துத் தெளிவாக இருக்கச் செய்யப்பட்டது. + +திரிகோண கணிதத்தில், பாகைகள், கலைகள், விகலைகள் மூலமும்,நிமிடம், செக்கன் ஆகிய நேர அளவைகள் மூலமும், Sexagesimals இன்னும் வழக்கிலிருந்து வருகிறது. + + + + + +எழுத்து முறைமைகளின் பட்டியல் + + + + + + +இந்த எழுத்து முறைகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. + + +Omniglot - எழுத்து முறைமைகளுக்கான வழிகாட்டி + + + + +சிந்துவெளி வரிவடிவம் + +சிந்துவெளி/ஹரப்பா வரிவடிவம் என்பது, சிந்துவெளி நாகரிக அழிபாடுகளிடையே கிடைத்த ஆயிரக்கணக்கான முத்திரை குத்துவதற்கான அச்சுக்களிலும், அவற்றின்மூலம் முத்திரை குத்தப்பட்ட பல களிமண் வில்லைகளிலும் காணப்படுகின்ற வரிவடிவங்கள் ஆகும். இவை அக்காலத்தில் சிந்துவெளி மக்களால் பேசப்பட்ட மொழிக்கான வரிவடிவங்களாகக் கருதப்படுகின்றன. கிடைத்த சான்றுகளின்படி இவ்வரிவடிவங்கள் கி.மு 2,500 அளவில் பயன்பாட்டில் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. சுமார் 450 வெவ்வேறான குறியீடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ் வரிவடிவங்கள் இன்னும் வாசித்துப் புரிந்துகொள்ளப்பட��ில்லை. 1920ல் இவ் வரிவடிவங்கள் வெளிக்கொணரப்பட்ட பின்னர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலுமுள்ள அறிஞர்கள் பலர் இவ்வரிவடிவங்களை வாசித்தறிய முயன்றுவருகின்றார்கள். எனினும் 1960 களுக்கு முன்னர் இவ்வாராய்ச்சி முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. + +குறியீடுகளின் தொடக்ககால எடுத்துக்காட்டுக்கள் தொடக்ககால அரப்பா, சிந்துவெளி நாகரிகச் சூழலில் கிடைக்கின்றன. இவை கி.மு 35 நூற்றாண்டுகளுக்கு முந்தியவையாக இருக்கலாம். கி.மு 2600 முதல் கி.மு 1900க்கு இடைப்பட்ட முதிர் அரப்பாக் காலத்தில் தட்டையான சதுரவடிவ முத்திரைகளிலும் கருவிகள், அணிகள், மட்பாண்டங்கள் போன்ற பிற பொருட்களிலும், இவ்வாறான குறியீடுகளின் தொடர்கள் காணப்படுகின்றன. இக்குறியீடுகள் வெட்டுதல், செதுக்குதல், பூசுதல், அழுத்திப் பதித்தல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்திக் குறித்த பொருட்களில் பொறிக்கப்பட்டுள்ளன. குறியீடுகள் பொறிக்கப்பட்ட பொருட்களும், மாவுக்கல், எலும்பு, ஓடுகள், சுடுமண், மணற்கல், செப்பு, வெள்ளி, பொன் போன்ற பல வகைகளாகக் காணப்படுகின்றன. + +கி.மு 1900க்குப் பின்னர், அதாவது முதிர் அரப்பாக் காலத்தின் கடைசிக் கட்டத்துக்குப் பின்னர், குறியீடுகளின் முறைப்படியான பயன்பாடு முடிவுற்றதாகக் காணப்படுகிறது. சில அரப்பாக் குறியீடுகள், கி.மு 1100 (இந்திய இரும்புக் காலத்தின் தொடக்கம்) வரை காணப்படுவதாகச் சொல்லப்படுகிறது. குசராத்தில் உள்ள வெட் துவாரகைக்கு அருகில் கரையோரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூன்றுதலை விலங்குடன் கூடிய பிற்காலச் சிந்துவெளி முத்திரைகளை வெளிப்படுத்தியுள்ளன. பிந்திய அரப்பாக் குறியீடுகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், மினுக்கமுள்ள சிவப்புப்பாண்டக் கிண்ணங்கள், தட்டுகள், கால் பொருத்திய கிண்ணம், துளைகள் உள்ள சாடிகள் போன்ற கி.மு 16 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஏராளமான மட்பாண்டப் பொருட்கள் துவாரகை, ரங்பூர், பிரபாசு ஆகிய இடங்களில் கிடைத்துள்ளன. வெப்பவொளிர்வுக் காலக்கணிப்பு வெட் துவாரகையின் மட்பாண்டங்கள் கி.மு 1528ஐச் சேர்ந்தவையாகக் காட்டுகின்றன. இது, அரப்பாக் குறியீடுகள் கி.மு 1500 வரையாவது பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றாகக் கொள்ளப்படுகிறது. + +கிடைக்ககூடிய சான்றுகளின்படி இவ்வரிவடிவத்தின் தன்மைகள் குறித்துச் சில தகவ��்கள் தெரியவந்துள்ளன. + + +ஒரு புறத்தில் பல ஆய்வாளர்கள் சிந்துவெளிக் குறியீடுகளை வாசித்தறிய முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்போது, மைக்கேல் விட்செல், இசுட்டீவ் ஃபாமர் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிகளுக்கானவை அல்ல என்றும் இவை குடும்பங்கள், இனக்குழுக்கள், கடவுள்கள், மதக் கருத்துருக்கள் போன்றவற்றுக்கான குறியீடுகளே என்றும் ஒரு எடுகோளை முன்வைத்தனர். 2004 ஆம் ஆண்டில் தாம் எழுதிய கட்டுரையொன்றில், ஃபாமர், இசுப்புரோட், விட்செல் ஆகியோர் இக்குறியீடுகள் மொழிக்கானவை அல்ல என்ற தமது கருத்தை நிறுவப் பல வாதங்களை முன்வைத்தனர். பொறிப்புக்கள் மிகமிகச் சுருக்கமாக இருத்தல், அரிதாகக் காணப்படும் குறியீடுகள் பெருமளவில் இருத்தல், மொழிகளுக்குப் பொதுவான, குறியீடுகள் திரும்ப வருதல் ஒழுங்கற்ற முறையில் அமையும் தன்மை குறைவாக இருத்தல் என்பன இவர்களது வாதங்களுள் முக்கியமானவை. + +2005 ஆம் ஆண்டில், விட்செல் முதலானோரின் கருத்தை மறுத்த ஆஸ்கோ பர்ப்போலா, முன் குறித்த வாதங்கள் இலகுவாகப் பிழையென நிறுவப்படக்கூடியவை என்றார். சீன மொழியில், பெருமளவில் அரிதாக வரும் குறியீடுகள் இருப்பதை எடுத்துக்காட்டிய பர்ப்போலா, தொடக்ககால படவெழுத்து முறையில் எழுதப்பட்ட குறைந்த நீளப் பொறிப்புக்களில் குறியீடுகள் திரும்ப வருவதற்கான காரணங்கள் கிடையாது என்றார். 2007ம் ஆண்டில் விரிவுரை ஒன்றில் மீண்டும் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், ஃபாமர் முதலானோரின் முக்கியமான 10 வாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பதிலளித்தார். ஒரு எழுத்துமுறை, சில குறியீடுகளை ஒலிக்கக்கூடிய வகையில் "ரீபசு" (rebus) கோட்பாட்டைப் பயன்படுத்துமானால், சிறு பெயர்ச்சொல் தொடர்களும், முழுமையற்ற வாக்கியங்களும்கூட, முழுமையான ஒரு மொழிக்குரிய எழுத்து முறையாகக் கொள்ளப்படலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். + +இவ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குச் சவாலாக அமைந்துள்ள விடயங்களுள் பின்வருவனவும் அடங்கும். + +இந்த வரிவடிவம் தொடர்பான சர்ச்சையில் முக்கிய இடம்பெறுவது, இது எத்தகைய மொழிக்காகப் பயன்பட்டது என்பது தொடர்பிலேயாகும். பொதுவாக இரண்டு கொள்கைகள் ஆய்வாளர்களிடையே நிலவின. இது முதல்நிலைச் சமஸ்கிருத மொழிக்கானது என்பது ஒரு கொள்கை. இல்லை இது திராவிட மொழிக்கான(தமிழ்) எழுத்து வடிவமே��ென்பது இரண்டாவது கொள்கை. + +உருசிய அறிஞரான யூரி நோரோசோவ், சிந்துவெளிக் குறியீடுகள் படவெழுத்து முறைக்கானவை என்றும், கணினிப் பகுப்பாய்வுகளின்படி, இதற்கு அடிப்படையான மொழி ஒட்டுநிலைத் திராவிட மொழியாக இருப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கருத்து வெளியிட்டார். இவருடைய கருத்துக்கு முன்பே என்றி ஏராசு (Henry Heras) முந்து திராவிடமொழி என்ற எடுகோளின் அடிப்படையில் சில குறியீடுகளுக்கான தனது வாசிப்புக்களை வெளியிட்டிருந்தார். + +பின்லாந்தைச் சேர்ந்த அறிஞர் ஆஸ்கோ பர்ப்போலாவும், சிந்துவெளி எழுத்துக்களும், அரப்பா மொழியும் பெரும்பாலும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ததாகவே இருக்கும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார். 1960கள் முதல் 1980கள் வரை இவரது தலைமையில் ஒரு பின்லாந்துக் குழுவினர் கணினிப் பகுப்பாய்வுகளின் மூலம் சிந்துவெளிக் குறியீடுகளை ஆய்வு செய்தனர். அரப்பா மொழி முந்து திராவிட மொழி என்ற எடுகோளின் அடிப்படையில் பல குறிகளுக்கான தமது வாசிப்பை அவர்கள் முன்வைத்தனர். இவர்களது சில வாசிப்புக்கள் ஏராசு, நோரோசோவ் ஆகியோரது வாசிப்புக்களுடன் பொருந்தின ("மீன்" குறியீட்டைத் திராவிடச் சொல்லான "மீன்" என்னும் சொல்லாகவே வாசித்தமை), வேறு சில முரண்பட்டன. 1994 வரையான பர்ப்போலாவின் ஆய்வுகளின் விரிவான விளக்கங்கள் "சிந்துவெளி எழுத்துக்களை வாசித்தறிதல்" "(Deciphering the Indus Script)" என்னும் அவரது நூலில் தரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அண்மையில், சிந்துவெளிக் குறியீடுகள் எனக் கருதப்படும் குறியீடுகளுடன் கூடிய புதியகற்காலக் (2ம் ஆயிரவாண்டுத் தொடக்கம். அரப்பாவின் வீழ்ச்சிக்கு முந்திய காலம்) கற்கோடரி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை திராவிடமொழிக் கருதுகோளுக்கு வலிமை சேர்ப்பதாகச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். 2007 மே மாதத்தில், தமிழ்நாடு தொல்லியல் பகுதியால் பூம்புகாருக்கு அண்மையில் உள்ள மேலப்பெரும்பள்ளம் என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில், அம்புத்தலைக் குறியீடுகளுடன்கூடிய பானைகள் கிடைத்தன. இந்தக் குறிகள், 1920ல் மொகெஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளிலுள்ள குறியீடுகளுடன் ஒத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. + +ஆஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் போன்ற ஆராய்ச்சி யாளர்கள் சமஸ்கிருதம், கி.மு 1500 க்குப் பின்னர் இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களுடனேயே கொண்டுவரப்பட்டதென்றும், கி.மு 2500 க்கு முற்பட்ட சிந்துவெளி வரிவடிவங்களோடு அதற்குத் தொடர்பு இருக்கமுடியாது என்றும் வாதிக்கிறார்கள். அதற்கான தொல்லியல் சான்றுகளையும் நிறுவி உள்ளனர். அத்துடன் ஆரியப் பண்பாட்டை விளக்குவதாகக் கருதப்படும் மிகப் பழைய நூலான ரிக் வேதம் நூறுவீதக் கிராமப் பண்பாட்டுக்குரியது என்றும் சிந்துவெளிப் பண்பாடு போன்ற நகரப் பண்பாடு ரிக் வேதத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆரியப் பண்பாட்டின் இன்னொரு அம்சமான குதிரை, சிந்துவெளி முத்திரைகளிற் சித்தரிக்கப்படாமையும் அவர்களுடைய சான்றுகளில் ஒன்றாகும். + +சிந்து எழுத்தாய்வு, தொல்லியல் ஆய்வாளர் நா. ப. பூரணச்சந்திர ஜீவா என்பவர் 2004 இல் வெளியிட்ட "சிந்து வெளியில் முந்து தமிழ்" என்ற நூலில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு உரியவர்கள் திராவிடர்களே (தமிழர்கள்) என்று சான்றுகளுடன் விளக்குகிறார்.. அந்நூலில் அனைத்து எழுத்துகளும் சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளன. கடந்த 25 வருட ஆய்வுகள் மூலம் மேற்க்கொள்ளப்பட்டு தயாரிக்கபட்டது அந்நூல். + +இந்தியத் தொல்லியலாளர் சிக்காரிபுர ரங்கநாத ராவ், தான் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாக அறிவித்தார். சிந்துவெளி நாகரிகத்தின் முழுப்பரப்பிலும் ஒருசீரான எழுத்துக்களே பயன்பாட்டில் இருந்தன என்ற எடுகோளுடன், அவ்வெழுத்துக்களை அவர் பினீசிய எழுத்துக்களுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்தார். இந்த ஒப்பீட்டின் அடிப்படையில் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒலிப் பெறுமானங்களை வழங்கினார். இவ்வாறான இவரது வாசிப்பு ஒரு சமசுக்கிருத வாசிப்பாக அமைந்தது. 1, 3, 4, 5, 7, 10, 12, 100 போன்ற எண்களுக்கும், "ஏக்க, ட்ரா, சத்துஸ், பன்ட்டா, ஹப்தா/சப்தா, தசா, த்வாதசா, சத்தா" என சமசுக்கிருத ஒலிப்புக்களாகவே வாசித்தார். பிந்திய அரப்பா வரிவடிவங்களுக்கும், பினீசிய எழுத்துக்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வடிவ ஒற்றுமைகளை எடுத்துக்காட்டிய அவர், பினீசிய எழுத்துக்கள் அரப்பா எழுத்துக்களிலிருந்தே உருவானதாக வாதித்தார். + +ஜான் ஈ. மிச்சினர் இவ்வாறான சில வாசிப்பு முயற்சிகளை ஏற்றுக்கொள்ளவில்லை. ராவினுடைய வாசிப்பு ஓரளவுக்கு முறையான அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும், பெருமளவு தற்���ார்பு கொண்டதாகவும், இந்திய-ஐரோப்பிய மொழி அடிப்படையை விளக்குவதில் இது நம்பத்தக்க முயற்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். + +பிந்திய அரப்பா வரிவடிவங்களின் மிகப் பொதுவாகக் காணப்படும் 10 குறிகள், பிராமி எழுத்துக் குறியீடுகளுடன் வடிவ அடிப்படையில் பெருமளவு ஒத்திருப்பது, சிந்துவெளிக் குறியீடுகளுக்கும், பிராமிக்கும் இடையே ஒரு தொடர்ச்சி இருப்பதற்கான சான்றாகக் காட்டப்படுகிறது. எண்களின் பயன்பாட்டிலும் இவ்வாறான தொடர்ச்சிக்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவ்விரு எழுத்துமுறைகளுக்கு இடையிலான தொடர்புகள் குறித்த தாஸ் என்பவரின் புள்ளியியல் ஆய்வுகளும் மேற்படி தொடர்ச்சிக்கு வலுச்சேர்ப்பதாகவும் கூறப்படுகிறது. + +காலத்துக்குக் காலம் தாங்கள் சிந்துவெளி எழுத்துக்களை வாசித்துவிட்டதாகக் கூறுபவர்களும் இருக்கிறார்கள் எனினும், இவையெதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை. + + + + + + +கருந்துளை + +கருங்குழி ("Black Hole") அல்லது கருந்துளை என்பது, இவற்றின் எல்லைக்குட் செல்லும், ஒளி உட்பட்ட எதுவுமே வெளியேற முடியாத அளவு வலுவான ஈர்ப்புச் சத்தியைக் கொண்டுள்ள, அண்டவெளியின் ஒரு பகுதியாகும். மேற் குறிப்பிட்ட எல்லை நிகழ்வெல்லை (event horizon) எனப்படும். இந்த நிகழ்வெல்லைக்குள் இருந்து பார்க்கக்கூடிய ஒளி அலைகள் போன்ற மின்காந்த அலைகள் கூடத் தப்பி வெளியேற முடியாது என்பதால் உள்ளே நடப்பவை எவற்றையுமே வெளியில் இருந்து அறிந்து கொள்ள முடியாது. இதனாலேயே இதனைக் கருங்குழி என்கின்றனர். கருங்குழிகள் பாரிய நட்சத்திரங்களின் பரிணாமத்தின் இறுதிக்கட்டமாகக் கருதப்படுகிறது. இதற்குக் கன அளவோ, மேற்பரப்போ கிடையாது. ஆனால் இதன் பிரம்மாண்டமான திணிவு ("mass") காரணமாக இது முடிவிலியான அடர்த்தியைக் கொண்டுள்ளது. + +இதனைப் பார்க்க முடியாது எனினும், இதன் நிகழ்வெல்லைக்கு அப்பால் இருக்கும் பொருட்கள் மீது அவை கொண்டுள்ள தாக்கங்கள் மூலம் அவற்றின் இருப்புப் பற்றி அறிந்துகொள்ள முடியும். எடுத்துக் காட்டாக, ஒரு தொகுதி விண்மீன்கள் கருங்குழியொன்றின் ஈர்ப்புக்கு உட்பட்டு அதன் மையத்தைச் சுற்றி வருவது உண்டு. இவ்வாறான விண்மீன்களின் இயக்கத்தை அவதானிப்பதன் மூலம் கருங்குழியின் இருப்பையும் அதன் அமைவிடத்தையும் தெரிந்து கொள்ளலாம். சில வேளைகளில் கருங்குழிகள் அண்ட வெளியில் இருந்து அல்லது அண்மையில் இருக்கும் விண்மீன்களில் இருந்து வளிமங்களைக் கவர்ந்து இழுக்கின்றன. இவ் வளிமங்கள் கருங்குழிகளை வேகமாகச் சுற்றியபடி உட்செல்லும்போது வெப்பநிலை அதிகரிப்பதனால் பெருமளவு கதிர்வீச்சு வெளிப்படுகின்றது. இவற்றை புவியில் உள்ள அல்லது விண்வெளித் தொலைநோக்கிகள் மூலம் உணர முடியும். இவ்வாறான அவதானிப்புகளின் மூலம் கருங்குழிகள் உள்ளன என்னும் பொதுக் கருத்து அறிவியலாளரிடையே ஏற்பட்டுள்ளது. + +ஒளியைக் கூடத் தப்பவிடாத அளவுக்கு வலுவான ஈர்ப்புச் சக்தி கொண்ட பொருள் பற்றிய எண்ணக்கருவொன்றை 1783 ஆம் ஆண்டில் தொழில்சாராப் பிரித்தானிய வானியலாளரான வண. ஜான் மிச்சல் (John Michell) என்பவர் முன்வைத்தார். 1795 இல் பிரெஞ்சு இயற்பியலாளர் பியரே-சைமன் லாப்பிளாஸ் (Pierre-Simon Laplace) என்பவரும் இது போன்ற முடிவொன்றை வெளியிட்டார். இன்று புரிந்து கொள்ளப்பட்டவாறான கருங்குழி பற்றிய விளக்கம் 1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டீன் முன்மொழிந்த பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்தே பெறப்பட்டது. போதிய அளவு பெரிதான ஒரு திணிவு போதிய அளவு சிறிதான வெளிப் பகுதி ஒன்றில் இருக்கும்போது சூழவுள்ள வெளி உட்புறமாக மையத்தை நோக்கி வளைந்து அதனுள் இருக்கும் எந்தப் பொருளும் கதிர்வீச்சும் தப்பி வெளியேறாதபடி தடுத்துவிடும். + +பொதுச் சார்புத் தத்துவம் கருங்குழியை, மையத்தில் புள்ளி போன்ற சிறப்பொருமையுடன் (singularity) கூடிய வெறுமையான வெளியாகவும், அதன் விளிம்பில் உள்ள நிகழ்வெல்லையாகவும் விபரிக்கும் அதே வேளை, குவாண்டம் பொறிமுறையின் தாக்கங்களைக் கருதும்போது இதன் விளக்கம் மாறுகின்றது. கருங்குழிக்குள் அகப்பட்ட பொருட்களை முடிவின்றி உள்ளே வைத்திராமல், கருங்குழிகள் இவற்றை ஒருவித வெப்பச் சக்தி வடிவில் கசியவிடக்கூடும் என இத் துறையிலான ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஹோக்கிங் கதிர்வீச்சு எனப்படுகின்றது. + +ஜான் மிச்சல் எனும் வானியலாளர் 1783-4 ஆம் ஆண்டு வெளியிட்ட தன் கடிதத்தில் ஒளி கூட வெளியேற முடியாத உயர்பொருண்மை வான்பொருள் குறித்த கருத்துப்படிமத்தை முன்மொழிந்தார். இவரது எளிய கணக்கீடுகள் சில கற்பிதங்களைக் கொண்டமைந்தன. இப்பொருளின் அடர்த்தியை சூரியனின் அடர்த்திக்குச் சமமாக அமைவத���கவும் ஒரு விண்மீனின் விட்டம் சூரியனைப் போல 500 மடங்குக்கும் மேலாக அமைகையிலும் அதன் மேற்பரப்பின் தப்பிப்பு அல்லது விடுபடு வேகம் ஒளியின் விறைவினும் கூடும் போதும் இத்தகைய வான்பொருள் உருவாகும் என்றும் கருதினார். இத்தகைய மீப்பொருண்மை, கதிர்வீசாத வான்பொருள்களை, அருகில் அமையும் கட்புலப் பொருள்களின்பால் அவை ஏற்படுத்தும் ஈர்ப்பு விளைவுகளால் அறியலாம் என மிச்சல் மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.ஆனால், ஜான் மிச்சல் கருதியதைப் போல மீப்பொருண்மை விண்மீனின் மேற்பரப்பில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர், விண்மீனின் ஈர்ப்பால் வேகம் குறைந்துக்கொண்டே வந்து சுழியாகி மறுபடியும் விண்மீனின் மேற்பரப்பில் வீழும் என்பது இக்கால சார்பியல் கோட்பாட்டின்படி சரியன்று என்பதை நாம் இப்போது அறிவோம். + +ஆல்பர்ட் அய்ன்சுட்டீன் 1915இல் பொதுச் சார்பியல் கோட்பாட்டை உருவாக்கினார். அதில் ஈர்ப்பு ஒளியின் இயக்கத்தையும் கட்டுபடுத்தும் எனக் கூறினார். சில மாதங்களுக்குள்ளாகவே சுவார்சுசைல்டு அய்ன்சுட்டீனின் புலச் சமன்பாடுகளுக்கான சுவார்சுசைல்டுப் பதின்வெளித் தீர்வைக் கண்டுபிடித்தார். இத்தீர்வு புள்ளிப் பொருண்மை, கோளப் பொருண்மைகளுக்கான எளிய தீர்வை விவரிக்கிறது. சுவார்சுசைல்டுவுக்கு சில மாதங்கள் கழித்து, என்றிக் இலாரன்சின் மாணவராகிய யோகான்னசு துரோசுதே தனித்து புள்ளிப் பொருண்மைக்கான இதே தீர்வைக் கண்டுபிடித்து அதன் இயல்புகளை மிகவும் விரிவாக எழுதினார்.இத்தீர்வு சுவார்சுசைல்டு ஆரத்தில் வியப்பான நடத்தையைப் பெற்றிருந்தது. இங்கு இது கணிதவியல் தனிமைப்புள்ளி ஆகியது. இது அய்ன்சுட்டீனின் சமன்பாட்டில் உள்ல சில கோவைகள் ஈரிலியாக அமைதலைச் சுட்டியது. இம்மேற்பரப்பின் தன்மை அப்போது விளங்கவில்லை. ஆர்த்தர் எடிங்டன் 1924 இல் மேற்கோள் ஆயங்களிஅ மாற்றும்போது இந்தத் தனைமைப்புள்ளி மறைதலை எடுத்துகாட்டினார். இந்தப் புது ஆயங்கள் எடிங்டன் – பின்கிள்சுட்டீன் ஆயங்கள் எனப்பட்டன. கியார்க்சு இலைமைத்ரே 1933 இல் சுவார்சுசைல்டு ஆரத்தில் உள்ள தனைமைப்புள்ளி இய்ர்பியல்சாரா ஆயத் தனிமைப்புள்ளி என உணர்த்தினார்.> ஆர்த்தர் எடிங்டன் அவரது 1926 ஆம் ஆண்டு நூலில் சுவார்சுசைல்டு ஆரத்துக்குப் பொருண்மை அமுங்கிய விண்மீன் பற்றிக் கருத்துரை���்கிறார். அதில் அய்ன்சுட்டீனின் கோட்பாடு கட்புல விண்மீன்களுக்கு மிகவும் பேரளவு அடர்த்திகள் அமைதலை மறுத்துரைக்க இசைவதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில், "250 மில்லியன் கிமீ ஆரமுள்ள விண்மீன் சூரயன் அளவுக்கு உயர் அடர்த்தியைக் கொண்டிருக்க முடியாது. முதலாவதாக, அதில் இருந்து ஒளி வெளியேற முடியாத அளவுக்கு அதன் ஈர்ப்பு விசை அமைவதால், கதிர்களவும் விண்மீனின் மேற்பரப்பையே. புவியில் எறிந்த கல்லைப் போல, அடையும். இரண்டாவதாக, கதிர்நிரல் கோடுகளின் செம்பெயர்ச்சி, அது புறநிலையில் நிலவவே முடியாத அளவுக்குப் பெரிதாகஇருக்கும். மூன்றாவதாக, வெளியானது, நம்மைப் புறத்தே எறிந்துவிட்டு விண்மீனைச் சுற்றி மூடுறும் அளவுக்கு, அதன் பொருண்மை காலவெளி வளைமையை உருவாக்கும்." + +இது குறித்த பொதுவான விளக்கங்கள் விடுபடு திசைவேகம் என்னும் கருத்துருவின் அடிப்படையிலேயே கொடுக்கப்படுகின்றன. விடுபடு திசைவேகம் என்பது ஒரு பெரிய பொருளொன்றின் மேற்பரப்பில் இருந்து புறப்படும் ஒரு கலம் அப்பொருளின் ஈர்ப்புப் புலத்தை முழுமையாகக் கடப்பதற்குத் தேவையான வேகம் ஆகும். நியூட்டனின் ஈர்ப்பு விதியின்படி பொருளின் ஈர்ப்பு விசை அதிகரிக்கும்போது அதாவது பொருளின் அடர்த்தி அதிகரிக்கும்போது விடுபடு திசைவேகமும் அதிகரித்துச் செல்லும். இவ்விசை ஒரு குறிப்பிட்ட அளவை அடையும்போது விடுபடு திசைவேகம் ஒளியின் வேகத்துக்குச் சமமாகவோ அல்லது அதனிலும் கூடுதலாகவோ ஆகக்கூடும். ஒளியின் வேகத்துக்கு மிஞ்சிய வேகம் எதுவும் இல்லை என்பதைக் காட்டி, அத்தகைய அடர்த்தி கொண்ட பொருளிலிருந்து எப்பொருளும் தப்பமுடியாது என்னும் விளக்கம் கொடுக்கப்படுகின்றது. இந்த விளக்கத்தில் ஒரு தவறு உள்ளது. இது ஒளி ஏன் ஈர்க்கும் பொருளினால் பாதிக்கப்படுகிறது என்பதையோ அது ஏன் தப்பமுடியாது என்பதையோ விளக்கவில்லை. + +இத் தோற்றப்பாட்டை விளக்குவதற்கு ஐன்ஸ்டீன் அறிமுகப்படுத்திய இரண்டு கருத்துருக்கள் தேவைப்படுகின்றன. முதலாவது, வெளியும் நேரமும் தனித்தனியான இரண்டு கருத்துருக்கள் அல்ல, அவை வெளிநேரம் என்னும் ஒரே தொடர்பத்தை உருவாக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பானவை ஆகும். இந்தத் தொடர்பம் சில சிறப்பு இயல்புகளைக் கொண்டுள்ளது. ஒரு பொருள் தான் விரும்பியபடி வெளிநேரத்தில் நக��� முடியாது. அது எப்பொழுதும் நேரத்தில் முன்னோக்கியே நகர முடியும். அத்துடன், அப்பொருள் தனது நிலையை ஒளி வேகத்திலும் வேகமாக மாற்றிக் கொள்ளவும் முடியாது. இதுவே சிறப்புச் சார்புக் கோட்பாட்டின் முக்கியமான விளைவு. + +இரண்டாவது கருத்துருவே பொதுச் சார்புக் கோட்பாட்டின் அடிப்படை: திணிவு, வெளிநேரத்தின் அமைப்பை உருமாற்றுகிறது. வெளிநேரத்தில் திணிவின் தாக்கத்தை, நேரத்தின் திசையை திணிவு நோக்கிச் சாய்த்தல் எனப் பொதுவாகக் கூறலாம். இதனால் பொருள்கள் திணிவை நோக்கி நகர்கின்றன. இது ஈர்ப்பாக உணரப்படுகிறது. திணிவுக்கும் பொருளுக்கும் இடையிலான தூரம் குறையும்போது நேரத்தின் திசையின் சாய்தலும் அதிகரிக்கும். திணிவுக்கு அருகில் ஒரு குறிப்பிட்ட புள்ளியில் இச் சாய்வு மிகவும் வலுவடைந்து, இயலக்கூடிய எல்லாப் பாதைகளுமே திணிவை நோக்கியே செல்லும். இப் புள்ளியைக் கடக்கும் எந்தப் பொருளும் அத்திணிவில் இருந்து விலகிச் செல்வது முடியாது. இப் புள்ளியே நிகழ்வெல்லை எனப்படும். + + + + + +ஒளியாண்டு + +ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு. + +வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல; + +ஒளியானது ஒரு வினாடி நேரத்தில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து செல்லக்கூடியது. ஒளி ஓராண்டுக் காலத்தில் கடந்து செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு தூரம் ஆகும். அந்த கணக்குப்படி ஒளியாண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் தொலைவு ஆகும் + +ஒளியாண்டில் குறிக்கப்பெறும் ஆண்டானது ஒரு ஜூலியன் ஆண்டாகும். ஒரு ஜூலியன் ஆண்டில் ஒவ்வொன்றும் 86400 நொடிகள் (செக்கன்கள்) கொண்ட நாட்கள் 365.25 உள்ளன. ஒளியாண்டின் துல்லியமான வரையறை பின்வருமாறு கூறப்படும்: + +ஒளித்துகளாகிய ஓர் ஒளியன் ("photon"), எவ்வித ஈர்ப்பும் இல்லாமல் எவ்வித விசைப்புலங்களுக்கும் உட்படாமல், தன்னியல்பால் அணுக்கள் இல்லாப் புறவெளியில் ஓரு ஜூலியன் ஆண்டுக்காலம் செல்லும் தொலைவே ஓர் ஒளியாண்டு எனப்படுகின்றது. + +ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு (செக்கனுக்கு) 299,792,458 மீட்டர்களாகும். எனவே ஓர் ஆண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு, அண்ணளவாக 9.46 × 10 மீ = 9.46 பேட்டா மீட்டர் ஆகும். + +ஒளியாண்டோடு தொடர்புள்ள அலகுகளான ஒளி-நிமிடம், ஒளி-நொடி என்பன ஒளி, வெற்றிடத்தில் முறையே ஒரு நிமிடம், ஒரு நொடி (செக்கன்) என்னும் கால இடைவெளிகளில் செல்லும் தொலைவைக் குறிக்கின்றன. ஒரு ஒளி-நிமிடம் 17,987,547,480 மீட்டர்களுக்குச் சமனானது. ஒளி-நொடி 299,792,458 மீட்டர்களாகும். + + + + + + +ஒளியாண்டுடன் தொடர்புபட்ட பல அலகுகள் இன்றுவழக்கத்தில் உள்ளன. உதாரணமாக வானியலில் பயன்படுத்தப்படும் ஒளி வினாடியானது மீற்றர்கள் அல்லது ஒரு ஒளியாண்டின் பகுதியாகும் + + + + +சட்டம் + +சட்டம் என்பது ஒரு நிறுவன அமைப்புமுறையால் அந்நிறுவன ஆளுகை எல்லைக்குள் வாழும் அனைவரையும் ஒழுங்குபடுத்தும் விதிகள், நெறிமுறைகள் போன்றவற்றைக் குறிக்கும். இவ்வாறான ஒழுங்குபடுத்தல் மூலம் ஒரு சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதை உறுதிசெய்வதற்கு உதவுவதே சட்டம் என்ற திட்டத்தின் நோக்கமாகும். சட்டத்தின் முன்னர் அனைவரும் சமம் என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஜோனாதன் சுவிஃப்ட் என்பவர் சட்டம் என்பது சிறிய பூச்சிகளை மட்டுமே பிடித்துக்கொண்டு பெரிய குளவி போன்ற பூச்சிகளை வெளியேறவிடும் ஒரு சிலந்திவலை போன்றது என்கிறார். கி.மு. 350 இல், அரிசுட்டாட்டில் சட்டத்தைப்பற்றி எழுதுகையில், "தனிமனிதர்களின் ஆட்சியைவிட, சட்டத்தின் ஆட்சி மேலானது" என்று குறிப்பிட்டார். அறிஞர் அண்ணா "சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு; அது ஏழைக்கு எட்டாத விளக்கு." என்று கூறியுள்ளார். (மேலும் பார்க்க சட்டம்). + +அரசின் சட்டங்கள், தனியார்களிடையே ஏற்படும் ஒப்பந்தங்கள் போன்றன இவ்வகையான சட்டங்களாகும். ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்தவிர்ப்பு குறித்த தண்டனை வழங்குகிற அதிகாரத்தை தன்னகத்தே கொண்டிருப்பதே சட்டத்தின் தனித்தன்மையாகும். + +சட்டத்தின் தோற்றம் மனிதகுலத்தின் தொன்மைச் சமூகவாழ்க்கைக்காலத்தின் தோற்றத்தோடு தொடர்புடையதாகும். சமூகமாகத்திரண்ட மனிதர்களிடம் ஏற்பட்ட வகுப்பு வேறுபாட்டால் தோன்றிய அரசு எனும் நிறுவனத்தின் தோற்றத்தோடு சட்டத்தின் வரலாறு தொடங்குகிறது. இன்னதைச் செய் மற்றும் இன்னதைச் செய்யாதே என்று உரைக்கும் அதிகாரமும் அதனை ஒப்பாத அல்லது மீறுகிற எவரையும் தண்டிக்கிற அதிகாரமும் சட்டத்தின் இரு முதன்மைக் கூறுகளாகும். இதன்படி அரசின் தோற்றக்காலமே சட்டத்தின் தோற்றக்காலமாக இருந்திருக்க கூடியதாகும். + +அறம் என்பது மனிதவாழ்வின் விழுமியங்களை உருவாக்குவதும் கற்பிப்பதுவுமான கருத்தோட்டமாகும். அதன் மற்றொரு வடிவமே சட்டம் என்று கருதப்படுகிறது. திருடுதல் கெடுநடத்தை என்று அறம் போதிக்கிறது. திருடினால் தண்டனை உண்டு என்று சட்டம் எச்சரிக்கிறது. உயிர்களைக் கொல்லுதல் பாவம் என்று அறம் கருணையோடு கற்பிக்கிறது. கொலை தண்டிக்கத்தக்கது என்று சட்டம் மிரட்டுகிறது. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே சட்டமும் அறமும் என்று கருதுவதற்கு இக்கருத்தியலே அடிப்படையாகும். தமிழ்நாட்டின் மிகப்பழைய சட்டம் ஒழுங்குக் குலைவுக் காலமான களப்பிரர் காலத்தில் நீதியிலக்கியங்கள் பல தோற்றம் பெற்றன எனும் வரலாற்றுக் குறிப்பு இதனை உறுதிப்படுத்துகிறது. + +நீதி ஒரு செயல் அல்லது செயல்தவிர்ப்பால் பாதிப்புற்றவர்மேல் வினைபுரிவதாகும். சட்டம் அச்செயல் அல்லது செயல்தவிர்ப்பைப் புரிந்தவரின் மீது வினைபுரிவதாகும். +சட்டத்தின் வரம்பு நீதியின் வரம்போடு ஒப்பிடுகையில் குறுகியது. நீதியின் நோக்கத்தோடு ஒப்பிடுகையில் சட்டத்தின் நோக்கம் எளிமையானது. + +அனைத்து சட்ட அமைப்புகளும் அதே அடிப்படை சிக்கல்களை எதிர்கொள்கின்றன, ஆனால் சட்ட விதிமுறைகள் பல்வேறு வழிகளில் அதன் சட்ட விஷயங்களை வகைப்படுத்தி அடையாளம் காட்டுகின்றன. "பொதுச் சட்டம்" (அரசுக்கு நெருக்கமாக தொடர்புடைய, மற்றும் அரசியலமைப்பு, நிர்வாக மற்றும் குற்றவியல் சட்டம் உட்பட) மற்றும் "தனியார் சட்டம்" (ஒப்பந்தம், சித்திரவதைகள் மற்றும் சொத்துக்களை உள்ளடக்கியது) ஆகியவற்றுக்கு இடையேயான பொதுவான வேறுபாடு ஆகும். சிவில் சட்ட அமைப்புகள், ஒப்பந்தம் மற்றும் துன்புறுத்தல் ஆகியவை ஒரு பொதுச் சட்டத்தின் கடமைகளின் கீழ் வருகின்றன, அதே சமயத்தில் டிரஸ்ட் சட்டமானது சட்டரீதியான ஆட்சி அல்லது சர்வதேச மரபுகளின்கீழ் கையாளப்படுகிறது. சர்வதேச, அரசியலமைப்பு மற்றும் நிர்வாகச் சட்டம், குற்றவியல் சட்டம், ஒப்பந்தம், சித்திரவதைகள், சொத்துச் சட்டம் மற்றும் நம்பிக்கைகள் ஆகியவை "பாரம்பரிய கோர் பாடங்களில்" கருதப்படுகின்றன, இருப்பினும் இன்னும் பல துறைகளும் உள்ளன. + +[[சர்வதேச சட்டம்‌‌] மூன்று விஷயங்களைக் குறிக்கலாம்: பொது சர்வதேச சட்டம், தனியார் சர்வதேச சட்டங்கள் அல்லது சட்டங்களின் மோதல்கள் மற்றும் பிரபுத்துவ அமைப்புகளின் சட்டம். + +அரசியலமைப்பு மற்றும் நிர்வாக சட்டம் அரசின் விவகாரங்களை நிர்வகிக்கிறது. [[அரசியலமைப்புச் சட்டம்]] மாநிலத்திற்கு எதிராக தனிநபர்களின் நிர்வாக, சட்டமன்றம் மற்றும் நீதித்துறை மற்றும் மனித உரிமைகள் அல்லது [[சிவில் உரிமைகள்]] இடையேயான உறவுகளைப் பற்றியது ஆகும். [[அமெரிக்காவின் சட்டம்]] மற்றும் [[பிரான்சின் சட்டம் | பிரான்ஸ்]] போன்ற பெரும்பாலான சட்டவாக்கங்கள், [[சட்ட உரிமைகள்]] கொண்ட ஒரு தனிப்படுத்தப்பட்ட அரசியலமைப்பைக் கொண்டுள்ளன.ஐக்கிய இராச்சியத்தின் [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற ஒரு சில அத்தகைய ஆவணங்களைக் கொண்டிருக்கவில்லை. ஒரு "அரசியலமைப்பு" என்பது [[சட்டம்]], மற்றும் அரசியலமைப்பு மாநாட்டில் (அரசியல் தனிபயன்) அரசியல் அமைப்பாகும். " [[என்டி வி கேரிங்டன்]]" முன்னணி நீதிபதி [[சார்ல்ஸ் ப்ராட், 1st ஏர்ல் கேம்டன் | லார்ட் கேம்டன்]],பொதுவான சட்டத்திலிருந்து பெறப்பட்ட ஒரு அரசியலமைப்பு கொள்கை பின்வருமாறு விளக்குகிறார். திரு என்டிக் வீட்டில் ஷெரீஃப் கார்ட்ட்டனால் தேடப்பட்டு, சூறையாடப்பட்டது. திரு எம்ரிக் நீதிமன்றத்தில் புகார் அளித்தபோது, ஷெரிப் கரிங்டன் ஒரு அரசாங்க மந்திரி, [[ஜார்ஜ் மான்டேக்-டங்க், இரண்டாம் ஹாலிஃபாக்ஸ் எர்ல் ஆஃப் ஹாலிஃபாக்ஸ்]], சரியான அதிகாரமாக இருந்தார் இருப்பினும், எழுதப்பட்ட சட்டரீதியான விதி அல்லது நீதிமன்ற அதிகாரம் அவருக்கு இல்லை என்று வாதிட்டார். + +சமுதாயத்திற்குள் நுழைந்தவர்களின் பெரும் முடிவு, அவர்களுடைய சொத்துக்களைப் பாதுகாப்பதாகும். அனைத்து உரிமைகளிலும் அது பொதுமக்கள் சட்டத்தின் மூலம் எடுத்துக் கொள்ளப்படாமலோ அல்லது குறைக்கப்படாமலோ எவ்விதத்திலும் புனிதமானதாக இருக்க முடியாது. எந்த காரணமும் கண்டுபிடிக்கப்படவோ அல்லது தயாரிக்கவோ முடியாவிட்டால், புத்தகங்களின் மௌனம் என்பது ஒரு அதிகாரத்திற்கு எதிரானது. பிரதிவாதி, மற்றும் வாதியாகவும் தீர்ப்பு வேண்டும். + +கவனக்குறைவு சட்டம்,சில நேரங்களில் சித்திரவதை, அல்லது சிவில் தவறுகள் என்று அழைக்கப்படும். சித்திரவதைக்கு உட்பட்ட, ஒருவர் மற்றொரு நபருக்கு கடமைப்பட்டிருக்க வேண்டும், அல்லது ஏற்கனவே உள்ள சட்டப்பூர்வ உரிமைகளை மீறுவதாக இருக்க வேண்டும். ஒரு எளிய எடுத்துக்காட்டு ஒருவர் கவனக்குறைவால் கிரிக்கெட் பந்தை அடித்து யாரோ ஒருவர் மீது தற்செயலாக படும்போது, கவனக்குறைவு சட்டத்தின் கீழ், மிகவும் பொதுவான குற்றம், காயமடைந்த கட்சி, கட்சியின் பொறுப்பிலிருந்து தங்கள் காயங்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்று கவனக்குறைவின் கோட்பாடுகள் டோனோகி வே ஸ்டீவன்சன் என்பவரால் விவரிக்கப்படுகின்றன. + +கவனக்குறைவுக்கு,பொதுமக்களின் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியின் தவறான செயலுக்கு தார்மீக விலை செலுத்த வேண்டிய வரும் என்பதில் சந்தேகமே இல்லை.நீ உன் அயலானை நேசிக்கிறாயானால், நீ உன் அயலானுக்குத் தீங்கு செய்யாதிருப்பாய்; மற்றும் வழக்கறிஞர் கேள்வி, யார் என் அண்டை? கட்டுப்படுத்தப்பட்ட பதிலைப் பெறுகிறது. நீங்கள் நியாயமாக முன்னறிவிப்பு செய்யக்கூடிய செயல்களையோ அல்லது புறக்கணிப்புகளையோ தவிர்ப்பதற்கு நியாயமான காரணம் இருக்க வேண்டும். + +சித்திரவதையின் இன்னொரு உதாரணம், அண்டை வீட்டுக்காரருடன் மிகுந்த உரத்த சப்தங்களைச் செய்து வருவது. ஒரு தொல்லை கோரிக்கை கீழ் இரைச்சல் நிறுத்தப்பட்டது. சோதனைகள், அத்திமீறல் அல்லது குற்றச்சாட்டுகள் போன்ற வேண்டுமென்றே செயல்படும் செயல்களையும் உள்ளடக்கியது. உதாரணமாக, ஒரு செய்தித்தாள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஒரு அரசியல்வாதியின் நற்பெயருக்கு சேதத்தை விளைவிக்கும்போது அவதூறு என்பது ஒரு நன்கு அறியப்பட்ட சித்திரவதையாகும். சில நாடுகளில் தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையிலான வேலைநிறுத்தங்கள், மாநிலம் சட்டம் விதிவிலக்கு அளிக்காத போது, தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதன் மூலம் இருக்கும். + +[[பகுப்பு:சட்டம்|*]] + + + +ரோலண்ட் ஹில் + +ரோலண்ட் ஹில் (Rowland Hill, டிசம்பர் 3, 1795 - ஆகஸ்ட் 27, 1879), நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர் இங்கிலாந்தின் வோசெஸ்டர்ஷயரிலுள்ள கிடெர்மின்ஸ்டெர் என்னுமிடத்தில் பிறந்தவர். + +ரோலண்ட் ஹில், சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். 1837 ஆம் ஆண்டு, தனது 42 ஆவது வயதில் ""தபால் அலுவலகச் சீர்திருத்தம்: இதன் முக்கியத்துவமும் நடைமுறைச் சாத்தியமும்" ("Post Office Reform: its Importance and Practicability")" என்ற அவரது பிரபலமான பிரசுரத்தை வெளியிட்டார். இப் பிரசுரத்தில் அவர் அதிகாரப்பூர்வ, முன்னரே அச்சடிக்கப்பட்ட கடித உறைகளையும், ஒட்டத்தக்க தபால்தலைகளையும் வெளியிடவேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டினார். பிரித்தானியத் தீவுகளுக்குள் எந்த இடத்துக்கும் அரை அவுன்ஸ் நிறையுள்ள தபாலை அனுப்புவதற்குக் குறைந்த சீரான கட்டணமான ஒரு பென்னியை அறவிடவேண்டுமெனவும் அவர் ஆலோசனை வழங்கினார். + +இதற்கு முன்னர் தபால் விநியோகம் செய்யப்பட வேண்டிய தூரத்தையும், கடிதத்தின் தாள்களின் எண்ணிக்கைக்கும் ஏற்பவே கட்டணம் அறவிடப்பட்டது. ரோலண்ட் ஹில்லின் ஆலோசனைப்படி, ஒரு பென்னி கட்டணம், குறிப்பிட்ட நிறைக்கு உட்பட்ட கடிதமொன்றை நாட்டின் எந்தமூலைக்கும் அனுப்ப முடிந்தது. முன்னர் தபால் கட்டணம் 4d க்கும் கூடுதலாகவே இருந்தது. + +எனினும் சேவைக்கான கட்டணத்தைச் செலுத்துவது அனுப்புனரா, பெறுனரா என்ற பிரச்சினை தீர்க்கப்படாமல் தொடர்ந்தும் விருப்பத்துக்குரியதாகவே இருந்துவந்தது. தபாலதிபர் நாயகமாக (Postamaster general ) இருந்து ரோலண்ட் ஹில் எடுத்த முயற்சிகள் பல ஆண்டுகள் பலனளிக்காமலேயிருந்தது. + +குறைந்த கட்டணம், எழுத வாசிக்கத்தெரிந்த கூடுதலானவர்கள் தபால் சேவையைப் பயன்படுத்த வழி செய்தது. 1840 மே 6ஆம் திகதி முதலாவது தபால்தலை வெளியிடப்படுவதற்கு முன்னரே, அதே ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி, முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது. + + + + +பென்னி + +பென்னி என்பது ஒரு நாணய அலகாகும். ஆங்கிலம் பேசப்படும் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. + +ஒரு பென்னி + + + + + +புகழ்பெற்ற இந்தியர்கள் + + + + + + + + + + + + + +ஈ. வெ. இராமசாமி + +பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ.வெ. இராமசாமி (இயற்பெயர்: ஈ.வெ. இராமசாமி நாயக்கர், , செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பைப் பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் ""புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி"" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது + +இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவ��. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார். + +குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.வெ. இராமசாமி நாயக்கர் என்றுதான் 18 திசம்பர், 1927 வரை குறிக்கப்பட்டு இருந்தது. 25 திசம்பர், 1927 குடிஅரசு இதழ் முதல் நாயக்கர் பட்டம் வெட்டப்பட்டது. இது குறித்து வே.ஆனைமுத்து அவர்கள் 'பெரியார் களஞ்சியம்' எனும் தொகுப்பு நூலில், + +"அவ்வாறாக, 'நாயக்கர்' என்ற பட்டச் சொல்லை அவருடைய பெயருக்குப் பின்னால் இருந்து நீக்கிவிட்ட நிலையில், 'நாயக்கர்' என்ற பட்டச் சொல் இல்லாமல் அவரது பெயரைக் குறிப்பிடுவதானது, அவருக்கு உரிய பெருமையைக் குறைத்துவிடுமோ என நம் இனப் பெருமக்கள் அஞ்சினர். அங்ஙனம் அஞ்சிய பலருள் 'நாயக்கர்' என்ற சொல் இருந்த இடத்தில் 'பெரியார்' என்ற சொல்லை முதன் முதலாகச் சேர்த்து 'ஈ.வெ. இராமசாமிப் பெரியார்' என அழைத்தவர் நாகர்கோவில் வழக்கறிஞர் திரு. பி. சிதம்பரம் பிள்ளையே ஆவார். + +என்றுக் கூறுகிறார். இந்த விளக்கத்தினை 21-5-1973-ல் திருச்சியில் இராமசாமி அவர்கள் தனக்கு உணர்த்தியதாக குறிப்பிடுகிறார். + +ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் செப்டம்பர் 17, 1879ல் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார்.இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர். இவரின் தந்தை வெங்கட்ட நாயக்கர் நாயுடு மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்னத்தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் கிருஷ்ணசாமி, கண்ணம்மா மற்றும் பொன்னுத்தாயி + +1929, இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். இராமசாமி மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் அறிவுரைகளை மிக ஆர்வமுடன் கேட்டு அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. இராமசாமி வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களைச் சுரண்டுவதற்காகப் போற்றப்பட்ட போர்வையாகப் போர்த்தப்பட்டுள்ளதைக் களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும் இம்மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டார். + +இராமசாமியின் 19 வது வயதில் அவருக்குத் திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம், சிறுவயது முதல் நேசித்த 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்குத் தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்களில் பெண் மகவை ஈன்றெடுத்தார். அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை. + +1904 இல் இராமசாமி இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் காசிக்கு புனிதப் பயணியாக, காசி விசுவநாதரை தரிசிக்கச் சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார். + +இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிர்கால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் ஓர் அன்னசத்திரத்தில் இராமசாமிக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார். இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிராமணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறி உள்நுழைய முயன்றார். ஆனால் அவர் மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார். + +பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிராமணரல்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிராமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிராமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வருண ஏற்றதாழ்வு) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவராக இருந்த இராமசாமி காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக மாற்றிக்கொண்டார். + +இராமசாமி 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவியான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியைத் துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டது மட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமையை வேரறுக்கப் பெரும்பாடுபட்டார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக இராமசாமி சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையாரும் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்தது ஆகியவற்றால் கைது செய்யப்பட்டார். + +1922 இல் இராமசாமி சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராகத் (தற்பொழுது -தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் திருப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்க���ட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையைக், காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிறுத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. அதனால் 1925 +இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். + +கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகர் திருவாங்கூர் சமத்தானத்தில் உள்ளது. கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்புப் (சத்தியாகிரகம்) போராட்டத்தைக் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. + +வைக்கம் போராட்டம் கேரள சீர்திருத்தவாதியும் நாராயணகுருவின் இயக்கத்தைச் சேர்ந்தவருமான டி.கே. மாதவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அவர் காங்கிரசில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார். வைக்கம் போராட்டத்திற்கு முப்பதாண்டு கால வரலாறு உண்டு. டி.கே. மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார். அன்னி பெசண்டின் உதவியையையும் பின்னர் காந்தியின் உதவியையும் நாடினார். போராட்டத்தைக் காந்தியின் வழிகாட்டலுடன் (சத்தியாக்கிரகப்) அறப்போராட்டமாக முன்னெடுத்தார். + +நாடெங்கிலும் இருந்து காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் அதில் பங்குகொண்டார்கள். வினோபா பாவே அதில் பங்கெடுப்பதற்காக வந்தார். கேரளத்தில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த கேளப்பன், கெ.பி. கேசவமேனன், இ.எம்.எஸ்., ஏ.கே. கோபாலன் போன்றவர்களும் பங்கெடுத்தார்கள். தமிழகத்தில் இருந்து ஈ.வே.ரா அவர்களும்,கோவை அய்யாமுத்து அவர்களும், எம்.வி. நாயுடு அவர்களும் பங்கெடுத்தார்கள். போராட்டத்தில் ஈ.வே.ரா முக்கியமான பங்கு வகித்து சிறைசென்றார். ஈ.வே.ரா அந்தப்போரில் பங்கெடுத்தது சில மாதங்கள் மட்டுமே. ஆனால் வைக்கம் போராட்டம் மேலும் பல மாதங்கள் நீடித்தது. + +ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட���டத்தில் கலந்து கொண்டார். இருவரும் கைது செய்யப்பட்டுத் தனித்தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின்படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவர்கள் கலந்து கொள்ளவில்லை. இராமசாமி கைது செய்யபட்ட போதிலும் இராமசாமியின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தைத் தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. அதுமுதல் இராமசாமி வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். விடுதலைக்கான பல போராட்டத்தில் கலந்து கொண்ட இராமசாமிக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடைத்தது என்றும் காந்தி அரிசன மக்களுக்கு ஆதரவாக எந்தப்போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்தவில்லை என்றும் இக்கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். + +நடுவே போராட்டம் வலுவிழந்தபோது காந்தியும் ஸ்ரீ நாராயணகுருவும் நேரில் வந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்கள். கேரளத்தில் மாபெரும் சமூக சக்தியாக விளங்கிய நாராயணகுரு பங்கெடுத்து நடத்திய ஒரே போராட்டம் இதுவே. கடைசியில் வெற்றி ஈட்டியது. அமைதி ஒப்பந்தத்தில் காந்தி சார்பில் தேவதாஸ் காந்தியும் போராட்டக்குழு சார்பில் ராஜாஜியும் கையெழுத்திட்டனர் + +பின்னர் இப்போராட்டம் அனைத்துக் கேரள கோயில்களுக்கும் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் இந்தியாவெங்கும் ஆலயப்பிரவேச இயக்கமாகக் காந்தியால் கொண்டு செல்லப்பட்டது + +இராமசாமி மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்கக் கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பலர் இந்தியாவின் விடுதலைக்காகப் போராடி வந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் தொடக்கத்தில் பிராமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்ற பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது. + +சுயமரியாதை இயக்கம் 1925 இல் இராமசாமியால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கைப் பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திற்க்கு உரிய மூடப் பழக்க வழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து ��ீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவுச் சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாகப் பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது. + + +இந்த பரப்புரை மற்றும் தத்துவங்களை முழுநேரச் செயல்பாடுகளாக இராமசாமி 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதைப் பரப்புவதற்கு ஏதுவாக "குடியரசு" நாளிதழை 1925 முதல் துவக்கினார். ஆங்கிலத்தில், "ரிவோல்ட்" என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காகப் பிரசாரம் செய்தார். சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையே வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாடு பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.அழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றன. இதற்கான "பயிற்சிப் பட்டறையாக, பயிற்சிக் களமாக" ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்கவும் வழி செய்தது. + +1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலாக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு திசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியா திரும்பினார். + +இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் இராமசாமியின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. +இராமசாமி திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம். சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் இராமசாமியின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று. + +1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது . இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது "ஆரியர்கள்", "திராவிடர்களின் பண்பாடுகளை" ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன. + +"தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்" என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிராமணரல்லாதாரை ஒடுக்க, பிராமணர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது. + +1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939, இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் இராமசாமியின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர் + +1944 இல் நீதிக்கட்சித் தலைவராக இராமசாமி முன்னின்று நடத்திய நீதிக்கட்சிப் பேரணியில் திராவிடர் கழகம் என இராமசாமியால் பெயர் மாற்றப்பட்டு, அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது. + +திராவிடர் கழகத்தின் கொள்கை நகர மக்களிட��ும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ்ப் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கி வைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய்மொழித் தாக்குதல்களைத் தொடுக்கலாயினர் . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர். + +1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை இராமசாமியிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று இராமசாமி, தன்னை விட " 40" வயது இளையவரான "மணியம்மையாரை" மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர் + +அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் இராமசாமி அவர்களின் திமுக கட்சியை "கண்ணீர்த்துளி கட்சி" என அதுமுதல் வர்ணிக்கலானார். + +இராமசாமி 1957 தேர்தலில் காங்கிரஸை முழுமையாக ஆதரித்தார். அத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் 15 இடங்களைப் பிடித்தது. + +1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை நடத்திய இராமசாமிக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இராமசாமி அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். + +1958 இல் இராமசாமி மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் இராமசாமி ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் இராமசாமி தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இராமசாமி வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர், திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது. + +ஈ.வெ.ராமசாமி தன்னுடைய கருத்துகளை பரப்புவதற்காக பின்வரும் இதழ்களை வெளியிட்டு வந்தார்: + + +இராமசாமியின் கடைசிக் கூட்டம் சென்னை, தியாகராய நகரில், திசம்பர் 19, 1973 அன்று அவர் கலந்து கொண்ட கூட்டமாகும். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்த��க் கொண்டார். அதுவே அவரின் கடைசிப் பேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்ற இராமசாமி, வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட இராமசாமி, சிகிச்சை பலனின்றி திசம்பர் 24, 1973 அன்று தனது "94" ஆம் வயதில் இயற்கை எய்தினார். + + + +தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது. + +1979 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலுவை இராமசாமி வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை. + + + + + + + +இந்திரா காந்தி + +இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி நேரு, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தி. இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார். + +இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார். + +ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969 இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது. + +1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது. + +1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார். 19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார். இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண��டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார். + +எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது. இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது. + +எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார். சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984 இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். + +இந்திரா பிரியதர்சினி 1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள் காசுமீரி பண்டிட் குடும்பத்தைச் சேர்ந்த ஜவஹர்லால் நேருவிற்கும், கமலா நேருவுக்கும் ஒரே குழந்தையாக பிறந்தார். இந்திராவின் தாத்தா மோதிலால் நேரு இந்தியாவின் உத்திரபிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஒரு செல்வவளம் மிக்க வழக்கறிஞர் ஆவார். காந்திக்கு முந்தைய காலத்தில் இந்திய தேசிய காங்கிரசில் மோதிலால் நேரு மிக முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இந்திராவின் தந்தை ஜவஹர்லால் நேரு நன்கு படித்தவரும், இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்றவருமாவார். இந்தி��� சுதந்திர போராட்டத்தின் ஒரு புகழ்பெற்ற தலைவரும் ஆவார். இந்திரா பிறந்ததிருந்த காலத்தில், காந்தியின் தலைமையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் நேரு நுழைந்தார். + +நோயாளியும், நேரு வீட்டுப்பொருட்களில் இருந்து விலகி இருந்த தமது தாய் கமலா நேருவின் முழு கவனிப்பில் வளர்ந்த இந்திரா, வலுவான பாதுகாப்பு உள்ளுணர்வையும், ஒரு தனிப்பட்ட பண்பையும் வளர்த்துக் கொண்டார். இவரின் தாத்தாவும், தந்தையும் தொடர்ச்சியாக தேசிய அரசியலில் சிக்கிக் கொண்டிருந்ததால், அதுவும் இவரின் உன்னிப்பான பிரச்சனைகளுடன் ஒன்றி கலந்தது. விஜயலட்சுமி பண்டிட் உட்பட, தந்தையின் சகோதரிகளுடன் இவர் முரண்பாடுகளைக் கொண்டிருந்தார். இது அரசியல் உலகிலும் தொடர்ந்தது. + +நேருவின் சுயவரலாற்று நூலில், விடுதலையை நோக்கி என்ற பகுதியில், தாம் சிறையில் இருந்த போது காவலர்கள் அடிக்கடி வீட்டிற்கு வந்ததாகவும், தன் மீது அரசாங்கம் விதித்திருந்த அபராதங்களுக்காக சில நாற்காலிகளை எடுத்துச் சென்றதாக அவர் எழுதுகிறார். "இந்த தொடர்ச்சியான நாசப்படுத்தும் செயல்முறைகள், என் நான்கு வயது மகளான இந்திராவை மிகவும் பாதித்தது. மேலும் அவள் காவலரை எதிர்த்தாள், அத்துடன் அவளின் வலுவான எதிர்ப்பையும் தெரிவித்தாள். அந்த ஆரம்பகட்ட உணர்வுகள் பொதுவாக காவல் படை குறித்த அவளின் எதிர்கால கண்ணோட்டத்தை மாற்றியமைக்கக் கூடும் என்று நான் அஞ்சினேன்." என்று குறிப்பிட்டுள்ளார். + +இந்திரா இளம் பெண்கள் மற்றும் ஆண்களுக்காக வானரசேனா என்ற அமைப்பை ஏற்படுத்தினார். இவ்வானரசேனா அமைப்பு போராட்டங்கள் மற்றும் கொடி அணிவகுப்புகள் ஆகியன நடத்தியதன் மூலமாகவும், காங்கிரஸ் அரசியல்வாதிகளின் உணர்வுப்பூர்வமான வெளியீடுகளை மற்றும் தடைவிதிக்கப்பட்டவைகளை வினியோகித்ததன் மூலமாகவும் இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சிறு பங்கை வகித்தது. + +1936இல், இந்திராவின் அன்னை கமலா நேரு, ஒரு நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியாக காசநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அந்த சமயத்தில் இந்திராவிற்கு 18 வயது. இந்திரா தனது இளமைப்பருவத்தில் ஒருபோதும் ஒரு நிலையான குடும்ப வாழ்க்கையை அனுபவிக்கவில்லை. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், சோமெர்வெல்லி கல்லூரியில் படித்து கொண்டிருந்த ப���து, அதாவது 1930களின் பிற்பகுதியில், இலண்டனை மையமாக கொண்ட தீவிர சுதந்திரத்திற்கு ஆதரவான இந்திய குழுவின் உறுப்பினரானார். + +1940களின் தொடக்கத்தில், தீராத நுரையீரல் நோயிலிருந்து மீண்டு வர இந்திரா சுவிட்சர்லாந்தில் வீட்டு ஓய்வில் நேரத்தை செலவிட்டார். அவரின் குழந்தைப்பருவத்திலிருந்தே தனது தந்தையுடன் கடிதம் மூலம் கொண்டிருந்த உறவைப் போலவே, தற்போதும் தந்தையுடன் நீண்ட கடிதங்கள் மூலம் அவரின் தொலைதூர உறவையும் தக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர்கள் அரசியல் குறித்தும் கடிதங்கள் மூலம் விவாதித்தார்கள். +ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் அவர் வாழ்ந்த ஆண்டுகளில், அரசியலில் செயல்பட்டு வந்த பெரோஸ் காந்தி என்ற ஒரு பார்சி இளைஞரை சந்தித்தார். + +இந்திரா மற்றும் பெரோஸ் காந்தி இந்தியாவிற்கு திரும்பிய போது, அவர்கள் காதலர்களாக இருந்தார்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு இடையில், திருமணம் செய்து கொள்ளவும் தீர்மானித்தார்கள். பெரோசின் திறந்த மனப்பான்மை, நகைச்சுவை உணர்வு மற்றும் தன்னம்பிக்கை ஆகியவை இந்திராவிற்கு பிடித்திருந்தது. இவ்வளவு விரைவாக அவர் மகள் திருமணம் செய்து கொள்வதை நேரு விரும்பவில்லை. மேலும் அவர்களின் காதல் உறவை பிரிக்க மகாத்மா காந்தியின் உதவியையும் நாடினார். காதலில் இருந்த இந்திரா மிகவும் பிடிவாதமாக இருந்தார். 1942 மார்ச்சில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. + +பெரோசும் , இந்திராவும் இருவருமே இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினர்களாக இருந்தனர். 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் அவர்கள் பங்கெடுத்த போது, இருவருமே கைது செய்யப்பட்டார்கள். சுதந்திரத்திற்கு பின்னர், தேர்தலில் களம் இறங்கிய பெரோஸ் , உத்திர பிரதேசத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராஜீவ் காந்தி மற்றும் சஞ்சய் காந்தி ஆகிய இரண்டு மகன்கள் பிறந்த பின்னர், ஏதோ சில கருத்து வேறுபாடுகளால் 1958 வரை அந்த தம்பதியினர் பிரிந்து வாழ்ந்தார்கள். பெரோஸ் மாரடைப்பால் பாதிக்கப்பட்டபோது, அவர்களின் உடைந்த திருமண வாழ்வு மீண்டுமிணைந்தது. ஆனால் 1960 செப்டம்பரில் பெரோஸ் மரணமடைந்தார். + +1959 மற்றும் 1960ன் போது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்காக நின்ற இந்திரா காந்தி அதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பதவிகாலம் ���ுறிப்பிடத்தக்கதாக அமையவில்லை. தந்தையின் பிரதிநிதியாக நடிக்க வேண்டி இருந்தது. இந்திரா 1960இல் நடைபெற்ற தேர்தலில் ஓர் இடத்திற்கும் போட்டியிடவில்லை. + +1964 மே 27இல் நேரு மரணமடைந்தார், புதிய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரியின் வலியுறுத்தலின் பேரில் இந்திய தேர்தல்களில் போட்டியிட்டு, உடனடியாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டதன் மூலம் இந்திய அமைச்சரவையிலும் பங்கெடுத்தார். இந்தி மொழி பேசாத மாநிலமான தமிழ்நாட்டில் இந்தி தேசிய மொழியாக ஆக்கப்பட்டதன் காரணமாக எழுந்த போராட்டங்கள் கார்ணமாக இந்திரா மெட்ராஸ் விரைந்தார். அங்கு அரசாங்க அதிகாரிகளுடன் பேசிய அவர், சமுதாய தலைவர்களின் கோபத்தை மட்டுப்படுத்தியதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுகட்டுமான முயற்சிகளையும் பார்வையிட்டார். தாங்கள் காட்டத் தவறிய இதுபோன்ற முனைவால், லால்பகதூர் சாஸ்திரியும், பிற மூத்த அமைச்சர்களும் வியப்படைந்தார்கள். அமைச்சர் இந்திரா காந்தியின் நடவடிக்கைகள் சாஸ்திரியைக் குறிவைத்தோ அல்லது அவரின் சொந்த அரசியல் முன்னேற்றங்களையோ நோக்கமாக கொண்டிருக்கவில்லை. அறிவிக்கப்பட்ட வகையில் அவர் அவரின் அமைச்சக செயல்பாடுகளில் ஒவ்வொரு நாளும் ஆர்வமில்லாமல் இருந்தார், ஆனால் ஊடக ஆர்வலராகவும், அரசியல் மற்றும் தனிச்சிறப்பை உருவாக்குவதிலும் அவர் தனித்திறன் பெற்றிருந்தார். +"திருமதி. இந்திராகாந்திக்கும் அவரின் போட்டியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் போது, பல மாநிலங்களில் இருந்த மத்திய காங்கிரஸ் [கட்சி] தலைமைகள் மற்றும் மாநில காங்கிரஸ் [கட்சி] அமைப்புகளில் இருந்த மேல் சாதித் தலைவர்களை மாற்றி பிற்பட்ட சாதியினரை அவர்களுக்கு மாற்றாக இருத்தவும், இதன் மூலம் மாநில காங்கிரஸிலும், எதிர்கட்சியிலும் இருந்த போட்டியாளர்களைத் தோற்கடிக்கவும், பிந்தைய சாதியினரின் ஓட்டுக்களை ஒருங்கிணைக்கவும் முனைந்தது. இந்த தலையீடுகளால் ஏற்பட்ட விளைவுகள், (இவற்றில் சில வெறுமனே சமூக முன்னேற்றமாகவும் உணரப்பட்டது), பொதுவாக இன பிராந்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தியது..." + +1965ல் இந்திய-பாக்கிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திரா காந்தி ஸ்ரீநகர் பிராந்திய எல்லைகளில் ஓய்வெடுத்த�� கொண்டிருந்தார். பாகிஸ்தான் போராளிகள் நகரத்திற்கு மிக நெருக்கமாக ஊடுறுவி இருந்ததாக இராணுவத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்த போதிலும், அவர் ஜம்முவிற்கோ அல்லது டெல்லிக்கோச் செல்ல மறுத்துவிட்டார். மாறாக, உள்ளூர் அரசாங்கத்தை கூட்டியதுடன், ஊடக கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தானின் தாக்குதல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது, 1966 ஜனவரியில் தாஸ்கண்ட் என்ற இடத்தில் உருசியாவின் முன்னிலையில், தலைமை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி பாகிஸ்தானின் அயூப் கானுடன் ஓர் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டார். இதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு பின்னர், சாஸ்திரி மாரடைப்பால் காலமானார். + +பின்னர், மொரார்ஜி தேசாயின் எதிர்ப்பு இருந்த போதினும், இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக ஆக்குவதில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் கே. காமராஜ் ஒரு கருவியாக இருந்தார். மொரார்ஜி தேசாய் பின்னர் காங்கிரஸ் பாராளுமன்ற கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டார், இதில் இந்திரா காந்தி 355 க்கு 169 வாக்குகள் பெற்று மொரார்ஜி தேசாயியைத் தோற்கடித்து இந்தியாவின் ஐந்தாவது தலைமை அமைச்சராகவும் அப்பதவியைப் பெறும் முதல் பெண்மணியாகவும் ஆனார். + +1966ல் இந்திரா காந்தி தலைமை அமைச்சரான போது, காந்தியின் தலைமையிலான பொதுவுடைமைவாதிகள் மற்றும் மொரார்ஜி தேசாய் தலைமையிலான பழமைவாதிகள் என காங்கிரஸ் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்திருந்தது. ராம் மனோகர் லோகியா 'செவிட்டு பொம்மை' என்ற அர்த்தத்தில் "குங்கி குடியா" என்று இந்திராவை அழைத்தார். + +இந்த உட்பூசல்கள் 1967 தேர்தல்களில் எதிரொளித்தது, இத்தேர்தலில் காங்கிரஸ் 545[[மக்களவை]] இடங்களில் 297 இடங்களை வென்று 60 இடங்களுக்கு மிகக் குறைந்த வாக்கு வேறுபாட்டில் தோல்வியடைந்தது. இந்திரா மொரார்ஜி தேசாயை இந்தியாவின் [[இந்திய துணை பிரதம மந்திரி|துணை பிரதம மந்திரி]]யாகவும், [[இந்திய நிதி மந்திரி|நிதி மந்திரி]]யாகவும் நியமிக்க வேண்டிதாயிற்று. 1969இல், தேசாயுடனான அவரின் பல ஒத்துழையாமைக்குப் பின், [[இந்திய தேசிய காங்கிரஸ்]] உடைந்தது. அதற்கடுத்த இரண்டு ஆண்டுகள் அவர் பொதுவுடைமைவாதிகள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவில் ஆட்சி புரிந்தார். அதே ஆண்டில், 1969 ஜூலையில் அவர் வங்கிகளை தேசியமயமாக்கினார். + +பாகிஸ்தான் இராணுவம் கிழக்க�� பாகிஸ்தானின் உள்நாட்டு மக்களுக்கு எதிராக பரந்தளவிலான அட்டூழியங்களை நடத்தியது. +கணக்கிடப்பட்ட வகையில் 10 மில்லியன் அகதிகள் இந்தியாவிற்கு வந்தனர், இதனால் நாட்டில் நிதி தட்டுப்பாடும், உறுதியற்ற நிலையும் ஏற்பட்டது. அகதிகள் பிரச்சனையைத் தீர்க்க, கிழக்கு பாகிஸ்தானியர்கள் அவர்களின் சுதந்திரத்தை அடைய உதவும் வகையில், இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது போர் அறிவி்த்தார். [[ரிச்சர்ட் நிக்சன்]] தலைமையிலான அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததுடன் போர் தொடுத்ததற்காக இந்தியாவை எச்சரி்க்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானமும் நிறைவேற்றியது. நிக்சன் தனிப்பட்ட வகையில் இந்திராவை வெறுத்தார். நிக்சன் அவரின் [[அமெரிக்க வெளியுறவுத்துறை|வெளியுறவுத்துறை]] அமைச்சரான [[ஹென்றி கிஸ்சிங்கர்|ஹென்றி கிஸ்சென்கருடனான]] இரகசிய உரையாடலில் (தற்போது அரசுத்துறையால் இது வெளியிடப்பட்டுள்ளது) இந்திராவை "சூனியக்காரி" என்றும் "தந்திர நரி" என்றும் குறிப்பிட்டிருந்தார். +. இந்திரா [[நட்பு மற்றும் கூட்டுறவுக்கான இந்திய-சோவியத் உடன்படிக்கை|நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு உடன்படிக்கை]]யில் கையெழுத்திட்டார். இது ஐக்கிய நாடுகள் அவையில் அரசியல் ஆதரவு மற்றும் ஒரு சோவியத் வீட்டோ அதிகாரம் கிடைக்க வழி வகுத்தது. 1971 பாகிஸ்தானுடனான போரில் இந்தியா வெற்றி பெற்றது, [[பங்களாதேஷ்]] உருவானது. + +[[படிமம்:Indira and Nixon.JPG|thumb|right|220px|1971ல் ரிச்சர்டு நிக்சனும், இந்திராகாந்தியும்]] +இந்திரா பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி [[சுல்பிகார் அலி பூட்டோ]]வை ஒரு வாரகால மாநாட்டிற்கு [[சிம்லா]]விற்கு வர அழைப்பு விடுத்தார். பேச்சு வார்த்தைகளின் பல-தோல்விகளுக்குப் பின்னர், இரண்டு நாட்டு தலைவர்களும் இறுதியில் [[சிம்லா ஒப்பந்தம்|சிம்லா உடன்படிக்கை]]யில் கையெழுத்திட்டனர். இது இரு நாடுகளும் [[காஷ்மீர்]] பிரச்சனையை பேச்சுவார்த்தைகள் மற்றும் அமைதி வழியில் தீர்ப்பதில் உடன்பட்டிருந்தது. நிக்சனின் மீதான அவரின் வெறுப்பால், அமெரிக்காவுடனான இந்திராவின் உறவுகள் விலகியிருந்தது. அதே வேளையில் [[சோவியத் யூனியன்|சோவியத் ஒன்றியத்துடனான]] உறவுகள் நெருக்கமாக வளர்ந்தன. + +இந்தியா பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை ஒரு நிரந்தர எல்லையாக உருவாக்காததற்காக இந்திராகாந்தி சிலரால் விமர்சிக்கப்பட்டார், சில விமர்சகர்கள், [[ஆசாத் காஷ்மீர்|பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலான காஷ்மீர்]] [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிலிருந்து]] பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூட கூறினார்கள். இப்பகுதியின் 93,000 [[போர்க் கைதி|போர்க்கைதிகள்]] இந்திய கட்டுப்பாட்டின்கீழ் இருந்தனர். ஆனால் இந்த உடன்படிக்கை உடனடியாக [[ஐக்கிய நாடுகள் அவை]] மற்றும் மூன்றாம் நாடுகளின் குறுக்கீடுகளை நீக்கியது, அத்துடன் [[பாகிஸ்தான்]] உடனடியாக எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்குதலைத் தொடுப்பதற்கான விருப்பத்தையும் பெருமளவில் குறைத்தது. ஒரு முக்கிய பிரச்சனையில் பூட்டோ முழுமையாக சரணடைய வேண்டும் என்று கோராமல், பாகிஸ்தான் உறுதிபெறவும், சராசரி நிலையடையவும் இந்திரா அனுமதித்தார்.பல தொடர்புகள் ஆண்டுகளாக உறைந்து (மூடப்பட்டு) போயிருந்தாலும் கூட, வர்த்தக உறவுகளும் சராசரி நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. + +1960களின் இறுதிப்பகுதியில், வணிகத்தை அதிகரிக்க இந்திராவின் நிர்வாகம் இந்திய ரூபாய் மதிப்பில் அமெரிக்க டாலரின் அடிப்படையில் 4லிருந்து 7க்கு 40% மறுமதிப்பீடு செய்ய ஆணையிட்டது. + +சீனாவின் மக்கள் குடியரசிடம் இருந்து வந்த அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு பிரதிபலிப்பாகவும், அணுசக்தி அதிகாரங்களிடமிருந்து இந்தியாவின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு நலன்களைச் சுதந்திரமாக வைத்திருக்கவும் 1967ல் ஒரு [[தேசிய அணுசக்தி திட்டம்]] தொடங்கப்பட்டது. 1974ல், மறைமுகமாக "[[சிரிக்கும் புத்தர்]]" என்ற இரகசிய சொல்லுடன், [[ராஜஸ்தான்|ராஜஸ்தானில்]] [[பொக்ரான்]] என்ற இடத்தில் இந்தியா வெற்றிகரமாக ஒரு நிலத்தடி அணுச்சோதனை நடத்தியது. இந்த சோதனை அமைதி நோக்கம் கொண்டது தான் என்ற அறிவிப்புடன், இந்தியா உலகின் இளம் [[அணுசக்தி]] அதிகாரமாக உருவானது. + +1960களில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட சிறப்பு விவசாய கண்டுபிடிப்பு திட்டங்கள் மற்றும் கூடுதல் அரசு உதவியானது, இந்தியாவின் கடுமையான நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை நீக்கியது. [[கோதுமை]], [[அரிசி]], [[பருத்தி]] மற்றும் [[பால்]] ஆகியவற்றின் கூடுதல் உற்பத்திக்கு வழிகோலியது. நிக்சன் +தலைமையிலான அமெரிக்காவிடம் இருந்து உணவுப்பொருள் மானியத்தைப் பெறுவதற்கு பதிலாக, இந்தியா ஒரு உணவு ஏற்றுமதியாளராக மாறியது. அதன் வணிகமுறையிலான பயிர் உற்பத்தி��ுடன் கூடிய இந்த சாதனை "பசுமை புரட்சி" என்று கூறப்பட்டது. அதே வேளையில், குறிப்பாக இளம் குழந்தைக்களுக்கு இருந்த ஊட்டச்சத்துக் குறைபாட்டை, எதிர்த்து போராட உதவும் வகையில், பால் மற்றும் முட்டை உற்பத்தியில் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றங்கள் "வெண்மை புரட்சி" எனப்பட்டது. 'உணவு பாதுகாப்பு' என்று அழைக்கப்பட்ட திட்டம், 1975 வரையிலான ஆண்டுகளில் இந்திரா காந்திக்கு உதவியாக இருந்தது. + +1960களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட, மாவட்ட வேளாண் விரிவாக்க திட்டத்திற்கு அளிக்கப்பட்ட பெயர் தான் பசுமை புரட்சி. இது ஏராளமான, விலைமதிப்பற்ற தானியங்களை நகர்புறவாசிகளுக்கு உறுதியளித்தது. இவர்களின் ஆதரவை காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே மிகவும் நாடியிருந்தார். இந்த திட்டம் நான்கு முன்னுரையைக் கொண்டிருந்தது: + + +சுமார் பத்து ஆண்டுகளை நிலைத்திருந்த பின்னர், இறுதியாக கோதுமை உற்பத்தியை சுமார் மும்மடங்காக்கவும், ஒரு குறைந்தளவிலான ஆனால் குறிப்பிடத்தக்க அரிசி உற்பத்தி உயர்வையும் இந்த திட்டம் கொண்டு வந்தது. [[தினை]], [[கிராம்]]பு மற்றும் பருவெட்டான தானியங்கள் போன்ற தானியங்களின் விளைச்சலில் சிறிதும் உயர்வு ஏற்படவில்லை. உண்மையில், இவை அறிவிக்கப்பட்ட வகையில் நிலையான விளைச்சலைத் தக்க வைத்திருந்தன. + +1971ஆம் ஆண்டு பொது தேர்தலில் சிறப்பான வெற்றிக்குப் பின்னர் இந்திராவின் அரசாங்கம் முக்கிய பிரச்சனைகளை சந்தித்தது. காங்கிரஸ் கட்சியின் உள் கட்டமைப்பு அதன் எண்ணிலடங்கா பிளவுகளைத் தொடர்ந்து, கட்சி இந்திராவின் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது. "[[கரீபி ஹட்டாவோ]]" (வறுமையை விரட்டு) என்பது தான் இந்திரா காந்தியின் 1971ஆம் ஆண்டு கருத்துருவாக இருந்தது. இந்த பிரச்சாரமும், அதனுடன் சேர்த்து முன்வைக்கப்பட்ட வறுமை ஒழிப்பு திட்டங்களும், கிராமப்புற மற்றும் நகர்புற ஏழைகளின் அடிப்படையில், இந்திராவுக்கு ஒரு சுதந்திரமான தேசிய ஆதரவைப் பெற்றுத் தந்தது. இதனால் மாநிலத்திலும், உள்நாட்டு அரசாங்கத்திலும் இரண்டிலும் செல்வாக்கு பெற்றிருந்த கிராமப்புற சாதிகளும், நகர்புற பெருமக்களும் அரசியலில் செல்வாக்கு பெறுவதைத் தவிர்க்கும்படி செய்தது. மேலும், முன்னர் குரல்கொடுக்க முடியாத ஏழைகள் இறுதியில் அரசியல் செல்வாக்கிலும், அரசியல் வலுவிலும் ��வர்களின் பங்கிற்கு ஆதாயம் பெற்றார்கள். + +உள்ளூரில் மட்டும் செயல்படுத்தப்பட்ட போதினும், வறுமையை விரட்டு எனும் கொள்கை மூலம் உருவாக்கப்பட்ட திட்டங்கள் புது டெல்லியாலும், [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியாலும் நிதி உதவி வழங்கப்பட்டு, விரிவு செய்யப்பட்டு, கண்காணிக்கப்பட்டன, அதற்கென ஊழியர்களும் நியமிக்கப்பட்டார்கள். "புதிய மற்றும் பரந்த ஆதரவு வளங்களை... நாடு முழுவதும் செலவிட்டு இத்திட்டத்தை வெற்றிபெறச் செய்யவேண்டுமென்ற முனைப்பை இந்த திட்டங்கள் அளித்தது.". வறுமையை ஒழிப்பதில் கரீபி ஹட்டாவோ திட்டத்தின் தோல்வியை கல்வி ஆய்வாளர்களும், வரலாற்றாளர்களும் தற்போது ஒத்து கொள்கிறார்கள். அதாவது பொருளாதார முன்னேற்றத்திற்காக மொத்த நிதியில் சுமார் 4 சதவீதம் ஒதுக்கப்பட்டு மூன்று வறுமை ஒழிப்பு தி்ட்டங்களுக்கு அளி்க்கப்பட்டது. இதில் சிறிதளவு கூட மதிப்புமிக்க அளவில் ஒருபோதும் 'ஏழைகளிலும் ஏழைகளுக்கு' சென்று சேரவில்லை. மாறாக, இந்த திட்டத்தின் வெறும் கூச்சல்கள், இந்திரா காந்தியின் மறு-தேர்வுக்கு மக்களின் ஆதரவைத் திரட்டப் பயன்படுத்தப்பட்டது. + +1971 ஆம் ஆண்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராஜ் நரேன் என்பவர் இந்திரா மீது தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்கொன்றைத் பதிவு செய்தார். ராஜ் நரேன், இந்திராகாந்திக்கு இணையாக, சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்தினார். இவருக்கு எதிராக இந்திரா எப்போதும் போராடி வந்தார். அரசாங்க வளங்களைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய பல பெரிய மற்றும் சிறிய சம்பவங்களை குறித்து குற்றஞ்சாட்டி இருந்தார். 1971 பாராளுமன்ற தேர்தலில் எதிர்தரப்பாளரை இந்திரா காந்தி தோற்கடித்திருந்தார். வழக்கின் போது தம் வாதத்திற்கு ஆதாரங்கள் அளித்த இந்திராகாந்தி, நேர்மையற்ற தேர்தல் நடவடிக்கைகள், அதிகபடியான தேர்தல் செலவுகள் மற்றும் அரசு இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை கட்சி நலனுக்கு பயன்படுத்தியது ஆகியவற்றிற்காக குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பெரும் ஊழல் குற்றங்களை நீதிபதி நிராகரித்தார். + +ராஜ் நரேனால் கொண்டு வரப்பட்ட இவ்வழக்கில் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட்டது. 1975 ஜூன் 12ல், முறைகேடுகளின் அடித்தளத்தில் மக்கள���ைக்கான தேர்தலில் இந்திராகாந்தியின் தேர்வு அமைந்திருப்பதாக [[இந்திய உயர்நீதிமன்றங்கள்|அலஹாபாத் உயர்நீதிமன்றம்]] அறிவி்த்தது. நீதிபதி சின்கா அந்த தீர்ப்பை வழங்கி இருந்தார். (1971ல் ராஜ் நரேனுக்கு எதிராக இந்திரா தேர்தல் முறைகேடுகள் செய்தார் என்று தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர், 1977 பாராளுமன்ற தேர்தலில் ரேபரேலி தொகுதியில் இந்திராவை தோற்கடித்தார்) , இதனால் பாராளுமன்றப் பதவியில் இருந்து இந்திரா நீக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் தடை விதித்தது. தலைமை அமைச்சரானவர் [[மக்களவை]]யில் ([[இந்திய பாராளுமன்றம்|இந்திய பாராளுமன்றத்தில்]] கீழ்சபை) அல்லது [[மாநிலங்களவை]]யில் (பாராளுமன்றத்தின் மேல்சபை) ஓர் உறுப்பினராக இருக்க வேண்டும். இவ்வாறு, இந்த முடிவு அவரை பதவியில் இருந்து இறக்கியது. ஆனால் பதவித் துறப்பு செய்வதற்கான வலியுறுத்தல்களை நிராகரித்த இந்திராகாந்தி, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான திட்டங்களை அறிவித்தார். + +நீதிமன்றத்தின் உத்தரவால் பாராளுமன்றத்தின் கீழ்சபையான மக்களவையில் இருந்து நீ்க்கப்படவிருந்த போதிலும், இந்த தீர்ப்பு தமது பதவிக்கு குழிபறிக்காது என்று இந்திரா குறிப்பிட்டார். அவர் கூறுகையில், "எங்களின் அரசாங்கம் சுத்தமாக இல்லை என்று நிறைய பேச்சுக்கள் இருக்கின்றன, ஆனால் எங்களின் அனுபவத்தில் {எதிர்} கட்சிகள் அரசாங்கங்கள் உருவாக்கினால் நிலைமை மேலும் படு மோசமாக இருக்கும்" என்றார். அனைத்து கட்சிகளும் பயன்படுத்திய அதே முறையைத் தான் தேர்தல் பிரச்சார நிதிக்காக அவரின் காங்கிரஸ் கட்சியும் பின்பற்றியது என்று கூறி அவர் விமர்சனங்களை நிராகரித்தார். இந்திரா கட்சியின் ஆதரவைத் தக்க வைத்திருந்தார், அது அவருக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டது. தீர்ப்பு குறித்த செய்திகள் பரவியவுடன், அவரின் வீட்டின் முன் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தங்களின் பற்றுறுதியை வலியுறுத்தினார்கள். இந்திராகாந்தியின் தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கையைப் பாதிக்காது என்று இந்திய உயர்மட்ட ஆணையாளர் பி.கே. நேரு தெரிவித்தார். "திருமதி. இந்திராகாந்தி நாட்டில் இன்னமும் தொடர்ந்து ஆதரவை பெற்றிருக்கிறார்," என்று அவர் தெரிவித்தார். "இந்திய வாக்காளர்கள் முடிவெடுத்தாலொழிய இந்திய பிரதம மந்திரி அவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்று நான் நம்புகிறேன்" என்றார். + +இந்திரா அவரின் முடிவை அறிவித்த போதும், "அவர் தமது கடைசி மூச்சு" உள்ளவரை மக்களுக்கான சேவையைத் தொடர இருப்பதாக அறிவித்த போதும், எதிர்கட்சிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் அந்த சூழ்நிலைகளில் இருந்து அரசியல் மூலதனத்தைப் பெற விருப்பம் கொண்டார்கள், அவர்கள் அவரின் இராஜினாமாவை வலியுறுத்தி பெருந்திரளான பேரணியை நடத்தினார்கள். பல மாநிலங்களி்ல் சங்கங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் வேலைநிறுத்தங்கள் வாழ்க்கையையே நிலைதடுமாற வைத்தது. இந்த போராட்டத்தை வலுப்படுத்த, ஆய்தமற்ற பொதுமக்களின் கூட்டங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த கேட்டுக் கொள்ளப்பட்டால், அந்த உத்திரவுகளுக்கு கீழ்படிய வேண்டாம் என்று [[ஜெய பிரகாஷ் நாராயண்]] காவலரைக் கேட்டுக் கொண்டார். இந்திராவின் அரசாங்கத்திடமிருந்து தெளிந்திருந்த பொதுமக்களின் மயக்கமும், மோசமான பொருளாதாரக் காலமும் ஒன்றிணைந்தன. அவரின் ராஜினாமாவை வலியுறுத்தி டெல்லியில் அவரின் வீட்டின் முன்பாகவும், பாராளுமன்ற கட்டிடத்தைச் சுற்றியும் பெருமளவிலான எதிர்ப்பாளர்களின் கூட்டங்கள் சுற்றி வளைத்தன. + +இந்திரா ஏற்கனவே அதிகாரத்துவத்திற்காகக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். அவரின் வலுவான பாராளுமன்ற பெரும்பான்மையைப் பயன்படுத்தி, அவரின் ஆளும் காங்கிரஸ் கட்சி அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அது மத்திய அரசுக்கு ஆதரவாக மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே அதிகாரப்பகிர்வை மாற்றியது. எதிர்கட்சிகளால் ஆளப்படும் மாநிலங்கள் சட்ட "ஒழுங்கின்றியும், காட்டுமிராண்டித்தனமாக" இருப்பதாகவும் கூறி அரசியல் அமைப்பின் [[356 பிரிவுச்சட்டம்|356வது பிரிவின்கீழ்]] அவர் இரண்டு முறை ஜனநாதிபதி ஆட்சியைக் கொண்டு வந்து கட்டுப்பாட்டை பறித்தார். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளும், நிர்வாக சேவையாளர்களும் இந்திராவின் மிக நெருங்கிய அரசியல் ஆலோசகராக இருந்த [[சஞ்சய் காந்தி]]யின் அதிகரித்து வந்த செல்வாக்கி்ல் சீற்றம் கொண்டார்கள். இந்திரா பதவி அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர், இந்திராவின் ஆலோசகராக இருந்த பி. என். அக்சருக்கு ம��ற்றாக சஞ்சய்காந்தி நியமிக்கப்பட்டிருந்தார். அதிகாரப் பதவியைப் பயன்படுத்துவதற்கான அவரின் புதிய போக்குக்கிற்கான எதிரொலியாக பொதுமக்கள் தலைவர்களும், [[ஜெயபிரகாஷ் நாராயண்|ஜெய பிரகாஷ் நாராயண்]], [[சத்யேந்திர நாத் சின்ஹா]] மற்றும் [[ஆச்சார்ய கிருபாளனி]] போன்ற முன்னாள் சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திராவுக்கும், அவரின் அரசாங்கத்திற்கும் எதிராகப் பேசிக் கொண்டு நாடு முழுவதும் சுற்று பயணம் மேற்கொண்டனர். + +தேர்தல் முறைகேடு குறித்து அவர் மீதான தீர்ப்புக்கு எதிராக இந்திரா ஒரு மேல்முறையீடு செய்தார். மேலும் ஜனநாயகத்திற்கு இடையூறு செய்வதற்கான திட்டம் இருப்பதாக கூறி, அவர் முரண்பாடாக அவசரகால நிலைமையைப் பிரகடனப்படுத்தினார். சுமார் 20 மத்திய மந்திரிகள் உட்பட, ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய ஊடகம் தணிக்கை செய்யப்பட்டது. 1975 ஆகஸ்ட் மாதம், எதிர்கட்சியினரை ஆயுதந்தாங்கிய வலுமையுடன் பாராளுமன்றத்திற்கு வெளியே கொண்டு சென்றதுடன், பலரை கைது செய்த நிலையில், அவரின் ஊழல் குற்றங்களில் இருந்து விடுவிக்க மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. + +எதிர்ப்புப் போராட்டங்களில் பங்குபெற்ற பெரும்பாலான எதிர்கட்சியினரை கைது செய்ய உத்தரவிட்டதன் மூலம் இந்திராகாந்தி ஆணையைத் தக்க வைக்கும் முயற்சியி்ல் இருந்தார். பின்னர் அலஹாபாத் உயர்நீதி மன்ற முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட ஒழுங்கின்மை மற்றும் சட்டமுறையின்மையால் குடியரசுத் தலைவர் [[பக்ருதின் அலி அகமது]], நாட்டில் [[அவசரநிலை|அவசரகால நிலை]]யை அறிவிக்க வேண்டும் என்று இந்திராவின் அமைச்சரவையும், அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. அதன்படி, 1975 ஜூன் 26ல் அரசியல் அமைப்பு [[352 பிரிவுச்சட்டம்|352 பிரிவின்]] அடிப்படையில் உள்நாட்டு ஒழுங்கின்மையின் காரணமாக நாட்டில் அவசரகால நிலையை குடியரசுத் தலைவர் அறிவித்தார். + +சில மாதங்களுக்கு உள்ளாகவே, எதிர்கட்சிகளின் ஆட்சியில் இருந்த [[குஜராத்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகிய இரண்டு மாநிலங்களிலும் [[குடியரசுத் தலைவரின் ஆட்சி|ஜனாதிபதி ஆட்சி]] கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மொத்த நாடும் மத்திய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஊரடங்குச் சட்டங்கள் ஏற்படுத்த காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. குடிமக்கள் காலவரம்பின்றிக் காவலில் வைக்��ப்பட்டார்கள். செய்திகள் மற்றும் ஊடகங்களின் அனைத்து வெளியீடுகளும் கணிசமான அளவிற்கு [[தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (இந்தியா)|தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தால்]] தணிக்கை செய்யப்பட்டன. தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் [[ஐ. கே. குஜரால்|இந்தர் குமார் குஜ்ரால்]] அவரின் பணியில் சஞ்சய் காந்தியின் தலையீட்டிற்கு எதிராக பதவியைத் துறந்தார். பிற்காலத்தில் இந்தர் குமார் குஜ்ரால் இந்தியாவின் தலைமை அமைச்சராகப் பதவி வகித்தார். இறுதியாக, நடைபெறவிருந்த சட்டமன்றத் தேர்தல்கள் காலவரம்பின்றி தள்ளி வைக்கப்பட்டன. இத்துடன் மாநில ஆளுநரின் பரிந்துரையுடன் மாநில அரசாங்கங்களைக் கலைக்கலாம் என்ற அரசியல் அமைப்பு பிரிவைப் பயன்படுத்தி, எதிர்கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் நீ்க்கப்பட்டன. +தனக்கு அதிக அதிகாரங்களைப் பெற அவசரகால சட்டங்களை இந்திரா பயன்படுத்தினார். +"வலுவான முதலமைச்சர்களி்ன் கட்டுப்பாட்டிலும், அவர்களின் அரசியல் கட்சிகளுடனும் மற்றும் மாநில கட்சி அமைப்புகளுடனும் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பிய அவர் தந்தையைப் (நேரு) போலில்லாமல், சுதந்திரமான அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒவ்வொரு காங்கிரஸ் முதலமைச்சரையும் திருமதி. காந்தி வெளியேற்றினார். மேலும் அவருக்கு தனிப்பட்ட வகையில் ஆதரவான அமைச்சர்களை அவர்களுக்கு மாற்றாக நியமித்தார்...இவ்வாறு இருந்தும், மாநிலங்களில் ஸ்திரமின்மையைத் தக்க வைக்க முடியவில்லை..." +[[தீர்ப்பின்படி ஆட்சி|தீர்ப்பாய ஆட்சியை]] அனுமதிக்கும் வகையில், [[இந்திய பாராளுமன்றம்|பாராளுமன்றத்தில்]] விவாதிக்க வேண்டிய அவசியமற்ற [[தீர்ப்பு|ஆணைகளை]] குடியரசுத் தலைவர் அஹ்மத் வெளியிடுமாறு அவர் செய்தார் என்றும் இந்திரா மீது குற்றஞ்சாட்டப்படுகிறது. + +அதே வேளையில், ஆயிரக்கணக்கான அரசியல் செயல்வீரர்களின் கைது மற்றும் காவல் உட்பட கருத்துவேறுபாடுகளை நீக்கும் ஒரு பிரச்சாரத்தை இந்திராவின் அரசாங்கம் கையில் எடுத்தது. [[ஜக் மோகன்]] கண்காணிப்பில் (இவர் பின்னர் டெல்லியின் துணை கவர்னராக ஆக்கப்பட்டார்) டெல்லியின் [[ஜமா மஸ்ஜித், டில்லி|ஜமா மஸ்ஜித்]]தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சேரிகளை அகற்றும் முனைப்பில் சஞ்சய் கருவியாக இருந்தார். இந்த நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடிழந்தனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இது நாட்டின் தலைநகரத்தில் இருந்த அந்த பகுதி சமூகத்திடையே சினமூட்டியதுடன், ஆயிரக்கணக்கான தந்தையர்களின் [[வேசெக்டொமி|விதைநாளத்தில்]] கட்டாயமாக செய்யப்பட்ட குடும்ப கட்டுப்பாடு திட்டம் ஆகியவையும் மக்களிடையே எரிச்சலூட்டின. இவை பெரும்பாலும் மோசமாக நிர்வகிக்கப்பட்டன. + +அவசரகால நிலையை இரண்டு முறை விரிவாக்கியதற்குப் பின்னர், 1977ல் அவரின் ஆட்சியை நியாயப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்திராகாந்தி தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். கடுமையாக தணிக்கை செய்யப்பட்ட பத்திரிக்கைகள் அவரை பற்றி என்ன எழுத வேண்டுமென நினைத்தாரோ அதனை எழுதின. அதை படித்ததன் மூலம் அவரின் செல்வாக்கை ஒட்டுமொத்தமாகத் தவறாகக் கணித்தார். எந்த விஷயத்திலும், அவர் [[ஜனதா கட்சி]]யால் எதிர்க்கப்பட்டார். "ஜனநாயகம் மற்றும் சர்வாதிகாரத்திற்கு" இடையில் ஒரு நல்ல ஆட்சியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இந்தியாவிற்கான கடைசி வாய்ப்பு தான் இந்த தேர்தல் என்று அவரின் நீண்டகால எதிர்க்கட்சியான ஜனதா, அதன் தலைமையான மொரார்ஜி தேசாயுடனும் ஆன்மீக வழிகாட்டியான ஜெய் பிரகாஷ் நாராயண் உடனும் சேர்ந்து அறிவித்தது. இத்தேர்தலில் இந்திராவின் காங்கிரஸ் கட்சி கடுமையான் தோல்வியைத் தழுவியது. இந்திரா மற்றும் சஞ்சய் இருவரும் அவர்களின் தொகுதியில் தோல்வியடைந்தார்கள். அத்துடன் காங்கிரஸ் (அதற்கு முந்தைய மக்களவையில் 350 இடங்களுடன் ஒப்பிடுகையில்) 153 இடங்களை மட்டுமே கைப்பற்றியது, அதில் 92 இடங்கள் தெற்கில் இருந்து கிடைத்தவையாகும். + +[[படிமம்:1984 CPA 5588.jpg|thumb|right|1984 சோவியத் ஒன்றியத்தின் நினைவு அஞ்சல்தலை]] +1969இல் இந்திய அரசியல் அமைப்பிற்கான தேர்வாக, [[மொரார்ஜி தேசாய்]] தலைமை அமைச்சராகவும், [[நீலம் சஞ்சீவி ரெட்டி]] குடியரசுத் தலைவராகவும் பதவியேற்றார்கள். 1978 [[இடைத் தேர்தல்|இடைதேர்தலில்]] வெற்றி பெறும் வரையில் இந்திரா காந்தி அவரை அவரே, பணியோ, வருமானமோ அல்லது இருப்பிடமோ இல்லாமல் இருப்பதாகக் கண்டார். 1977 தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் உடைந்தது. [[ஜகஜீவன் ராம்]], பஹூகுணா மற்றும் [[நந்தினி சத்பதி]] போன்ற இந்திராவின் மிக முக்கியமான முன்னாள் ஆதாரவாளர் பிரிந்து வெளியேறினார்கள். அவர்கள் மூவரும் இந்திராவிற்கு மிக நெருக்கமாக இருந்தார்கள், ஆனால் சஞ்சய்காந்தியால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் அரசியல் தந்திரத்தால் வலுக்கட்டாயப்படுத்தப்பட்டார்கள். சஞ்சய் இந்திராவின் செல்வாக்கைச் சிதைக்க விரும்பம் கொண்டிருந்தார் என்று பின்னர் வதந்தி ஏற்பட்டது. அப்போது அதிகாரப்பூர்வ எதிர்கட்சியாக இருந்த போதிலும், காங்கிரஸ் (இந்திரா) கட்சி பாராளுமன்றத்தில் வெகு சிறிய குழுவாக இருந்தது. + +பல்வேறு கூட்டணிப் பூசல்களுக்கு இடையில் ஆட்சி புரிய முடியாமல், ஜனதா அரசாங்கத்தின் உள்நாட்டு மந்திரி [[சரண் சிங்|சௌத்ரி சரண் சிங்]], பல குற்றச்சாட்டுக்களுக்காக இந்திரா மற்றும் சஞ்சய் காந்தியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் எந்த குற்றச்சாட்டையும் இந்திய நீதிமன்றத்தில் எளிதாக நிரூபிக்க முடியவில்லை. கைது என்றால் இந்திரா தானாகவே பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்படுவார் என்பதை குறிக்கிறது. எவ்வாறிருப்பினும், இந்த வழிமுறை பேரழிவுமிக்க வகையில் திருப்பி அடித்தது. அவரின் கைது மற்றும் நீண்ட கால வழக்குகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவரை ஒரு கொடுங்கோலராக பார்த்த மக்களிடையே அவருக்கு பெரியளவில் அனுதாபத்தைப் பெற்று தந்தது. + +இந்திரா (அல்லது "அந்த பெண்மணி", பலரால் இவ்வாறு தான் அழைக்கப்பட்டார்) மீதான வெறுப்பின் காரணமாக மட்டுமே ஜனதா கூட்டணி ஒன்றுபட்டிருந்தது. பொதுவில் சிறுபான்மையுடன், அரசாங்கம் உட்பூசல்களில் சிக்கி்க் கொண்டிருந்தது. இந்த சூழ்நிலையை இந்திரா அவரின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்த முடிந்தது. மறைமுகமாக அவசரகால நிலையின் போது செய்த "தவறுகளுக்காக" வருத்தம் தெரிவி்த்து, மீண்டும் அவர் அறிக்கைகள் அளிக்கத் தொடங்கினார். 1979 ஜூனில் மொரார்ஜி தேசாய் பதவித் துறப்பு செய்தார், சரண் சிங் அரசாங்கத்திற்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் என்று இந்திரா உறுதி அளித்ததைத் தொடர்ந்து ரெட்டியால் [[சரண் சிங்]] தலைமை அமைச்சராக நியமிக்கப்பட்டார். + +இந்திரா ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர், அவர் அவரின் ஆரம்பநிலை ஆதரவைத் திரும்ப பெற்றார், 1979 குளிர்காலத்தில் ஜனாதிபதி ரெட்டி பாராளுமன்றத்தைக் கலைத்தார். அதை தொடர்ந்து வந்த ஜனவரியில் நடத்தப்பட்ட தேர்தல்களில், காங்கிரஸ் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சிக்குத் திரும்பியது. + +1980களில், இந்திரா காந்தியின் அரசாங்கம் [[தமிழீழ விடுதலைப்புலிகள்|விடுதலைப்புலிகளிற்கும்]], [[இலங்கை]]யில் இருந்த பிற [[தமிழ் தேசியவாதம்|தமிழ்]] போராளிகள் குழுக்களுக்கும் பணம், ஆயுதம் மற்றும் இராணுவப் பயிற்சிகளை அளித்தது. + +1980களின் தொடக்கத்தின் போது, அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 7ல் இருந்து 12ஆக 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்ததை இந்திராவின் நிர்வாகம் தடுத்து நிறுத்துவதில் தோல்வியுற்றது. + +[[படிமம்:HarmindarSahib.jpg|thumb|right|300px|ஹர்மிந்தர் சாஹிப், சிர்கா 1870]] + +இந்திரா காந்தியின் பிந்தைய ஆண்டுகள் [[பஞ்சாப் (இந்தியா)|பஞ்சாப்]] பிரச்சனைகளுடன் தொல்லையில் இருந்தது. பஞ்சாபில் சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்து வந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார். 1984 ஜூனில், [[ஜர்னையில் சிங் பிந்தரன்வாலா]]வின் சிக்கிய சுந்திர போராட்டக் [[காலிஸ்தான் இயக்கம்|காலிஸ்தான் பிரிவினைவாத]] குழு, சிக்கியர்களின் புனிதத்தளமான [[பொற்கோயில்|பொற்கோயிலுக்குள்]] முகாமிட்டிருந்தது. இதனைத் தீர்க்க ஆபரேசன் புளூஸ்டார் என்ற நடவடிக்கை இந்திரா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார். பொற்கோயிலுக்குள் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இருந்த போதினும், அந்த நேரத்தில் இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர். இந்திரா காந்தியின் இந்த நடவடிக்கை சர்வதேச ஊடகத்தால் பெரிதும் கண்டனத்திற்குள்ளானது. பாதிக்கப்பட்ட இராணுவ மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கையில் அரசாங்க எண்ணிக்கையும், அரசு சார்பற்ற எண்ணிக்கையும் வேறுபடுகிறது. நான்கு அதிகாரிகள், 79 வீரர்கள் மற்றும் 492 சிக்கியர்கள் என்று அரசாங்கம் கணக்கிட்டது; அரசுசாரா கணக்கீடு இதை விட அதிகமாக இருந்தது. ஒருவேளை 500 அல்லது அதற்கு மேலான துருப்புகளும், துப்பாக்கி சூட்டில் சிக்கி கொண்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 3,000 சிக்கியர்களும் இருந்திருக்கலாம். உண்மையான ஆவணங்கள் இல்லாததால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் குறித்த துல்லியமான விபரங்கள் சர்ச்சைக்குரியதாக இருந்தது. தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் மற்றும் முறையும் பரவலாக விமர்சிக்கப்பட்டன. இதைப் பயன்படுத்தி பெரும்பாலான விமர்சனங்கள் சிக்கியர்கள் மீதான ஒரு தனிப்பட்ட தாக்குதல் என்பதாக இந்திரா காந்திக்கு எதிராகத் திருப்பி விடப்பட்டது. சிக்கியர்களின் சுதந்திரம் பற்றிய யோசனைகளையும், காலிஸ்தான் என்றழைக்கப்படும் ஒரு பிரிவினைவாத அரசை உருவாக்குவதற்கான யோசனையையும் போதித்தன் மூலம் "விரோதத்தை" வளர்த்து வந்த பயங்கரவாதி பிந்தரன்வாலேயை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று கூறி அதை அவர் நியாயப்படுத்தினார். + +தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். +இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர். அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர். ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் [[பீட்டர் உஸ்தினொவ்|பீட்டர் உஸ்தினோவ்]]வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள் சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார். + +இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை. அவர் [[அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகம்|அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு]] எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அவர் [[ராஜ்கட்|ராஜ்காட்]]டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், [[புது டில்லி|புதுடெல்லி]]யைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் [[1984 சீக்கியர்களுக்கு எதிரான கலகம்|அதிருப்தி உட்பிரிவுகள்]] உருவாக்கப்பட்டது. காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார். + +[[படிமம்:Indira Gandhi's personal library.jpg|300px|thumb|இந்திராகாந்தியின் தனிப்பட்ட நூலகம்]] +[[படிமம்:Feroze and Indira Gandhi.JPG|300px|thumb|பிரோஜ்காந்தியுடன் இந்திரா - ஓவியம்]] + +தொடக்கத்தில் [[சஞ்சய் காந்தி|சஞ்சய்]] அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாக இருந்தார்; ஆனால் ஒரு விமான விபத்தில் அவர் இறந்த பின்னர், விருப்பமற்றிருந்த [[ராஜீவ் காந்தி|ராஜீவ்காந்தி]]யை, விமான ஓட்டியாக இருந்த அவரின் வேலையை விட்டுவிட்டு, 1981 பிப்ரவரியில் அரசியலில் நுழையுமாறு இந்திரா வலியுறுத்தினார். + +இந்திரா காந்தியின் மரணத்திற்கு பின்னர், ராஜீவ் காந்தி தலைமை அமைச்சரானார். 1991 மே மாதத்தில், அவரும் படுகொலை செய்யப்பட்டார், அவர் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது [[விடுதலைப் புலிகள்|தமிழீழ விடுதலை புலிகளின்]] மனித வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். ராஜீவின் மனைவி [[சோனியா காந்தி]], 2004 [[மக்களவை]] தேர்தல்களில் ஓர் ஆச்சரியமூட்டும் தேர்தல் வெற்றிக்குப் பின் [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி|ஐக்கிய முன்னேற்ற கூட்டணி]]யைத் தலையேற்று நடத்தினார். + +சோனியா காந்தி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவியை ஏற்கும் வாய்ப்பை மறுத்துவிட்டார், ஆனால் காங்கிரஸ் அரசியல் இயந்திரங்களைக் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறார்; முன்னாள் நிதியமைச்சராக இருந்த [[மன்மோகன் சிங்]] தற்போது இந்திய அமைச்சரவைக்குத் தலைமையேற்றுள்ளார். ராஜீவின் குழந்தைகளான [[ராகுல் காந்தி]] மற்றும் [[பிரியங்கா காந்தி]] வாத்ராவும் அரசியலில் இறங்கியுள்ளனர். சஞ்சய் காந்தியின் விதவை மனைவி [[மேனகா காந்தி]]யும் (சஞ்சையின் மரணத்திற்கு பின்னர், இந்திராவிடமிருந்து பிரிந்து வந்த இவர், அனைவராலும் அறியப்பட்ட வகையில் பிரதம மந்திரியின் வீட்டிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்), சஞ்சயின் மகன் [[வருண் காந்தி]]யும் முக்கிய எதிர்கட்சியான [[பாரதீய ஜனதா கட்சி|பிஜேபி]] கட்சியின் உறுப்பினர்களாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்கள். + +மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது. மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது. + + + + +hjtjg + +[[பகுப்பு:இந்திய பிரதம மந்திரிகள்]] +[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ்]] +[[பகுப்பு:பாரத ரத்னா விருது பெற்றவர்கள்]] +[[பகுப்பு:1917 பிறப்புகள்]] +[[பகுப்பு:1984 இறப்புகள்]] +[[பகுப்பு:நேரு-காந்தி குடும்பம்]] +[[பகுப்பு:அரசியலில் இந்திய பெண்கள்]] +[[பகுப்பு:இந்திய இந்துக்கள்]] +[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]] +[[பகுப்பு:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்]] +[[பகுப்பு:இந்தியப் பிரதமர்கள்]] +[[பகுப்பு:வரலாற்றில் பெண்கள்]] +[[பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்]] +[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]] +[[பகுப்பு:லெனின் அமைதிப் பரிசு பெற்றவர்கள்]] +[[பகுப்பு:இந்தியாவில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகள்]] +[[பகுப்பு:பெண் அரசுத் தலைவர்கள்]] +[[பகுப்பு:4வது மக்களவை உறுப்பினர்கள்]] +[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]] + + + +மோகன்தாசு கரம்சந்த் காந்தி + +மோகன்தாசு கரம்சந்த் காந்தி (, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. + +இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. + +மோகன்தாஸ் காந்தி 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரது தாய் மொழி குஜராத்தி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி; தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். பின்னாளில் இருவரும் நான்கு ஆண் மகன்களைப் பெற்றெடுத்தனர்: ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவதாஸ் (1890). மோகனதாஸ் கரம்சந்த் காந்தி, தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். +பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் தாதா அப்துல்லாஹ் கம்பெனி எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார். + +இச்சமயம் தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. இதுவரை அரசியல் ஈடு���ாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது. + +அங்குள்ள நாட்டல் (Natal) மாகாணத்தின் டர்பன் (Durban) நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொரு நாள் பிரிட்டோரியா (Pretoria) செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் தொடருந்தில் முதல் வகுப்புப் பெட்டியில் பயனம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் (Pietermaritzburg) தொடருந்து நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார். + +தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நாட்டல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர். காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ம் ஆண்டு நாட்டல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நாட்டல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார். + +1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவ��ிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. +இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார். + +1915 -ம் ஆண்டு ஜனவரி 9 ம் தேதி மும்பை துறைமுகத்தில் காந்தி இறங்கியபோது உடையில் அடியோடு உருமாறியிருந்தார். தழையத் தழையக் கச்சமிட்டுக் கட்டிய மில் வேட்டி, தொள தொள ஜிப்பா, அங்கவஸ்திரம், தலையில் பெரிய முண்டாசு சகிதம் ஒரு கத்தியவாரி விவசாயி உடையில் காட்சியளித்தார். + +அப்பல்லோ பந்தர் துறைமுகத்தில் இறங்கிய காந்தி - கஸ்தூரிபா தம்பதி வெளியே வந்தபோது ஒரு கோலாகல வரவேற்பளிக்க, மிதவாத அரசியல் தலைவர் கோபாலகிருஷ்ண கோகலே ஏற்பாடு செய்திருந்தார். மேல் விரிப்பு திறந்த மோட்டார் காரில் காந்தியையும் அவரது மனைவியையும் அமரச் செய்து ஊர்வலமாக இட்டுச் சென்றார். (தற்போது இந்நாளை நினைவு கூர்ந்து வெளிநாடுவாழ் இந்தியர் நாள் கொண்டாடப்படுகின்றது) + +இந்தியாவுக்கு வந்து சேர்ந்த மூன்றாம் நாள், 1915 ஜனவரி 12 அன்று பம்பாய் பெட்டார் சாலையில் மவுண்ட் பெடிட் வளாகத்தில் காந்திஜிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. + +தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார். + +1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வ��ிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார். +பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார். 23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். + +இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார். + +காந்திஜி இந்திய விடுதலைக்கும், சமூக நீதியை வலியுறுத்தியும், சமய நல்லிணக்கதிற்கும், தீண்டாமைக்கு எதிராகவும், முழு மதுவிலக்கு கோரியும் 17 முறை, 139 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டங்கள் மேற்கொண்டார்.அவற்றில் மூன்று முறை 21 நாட்கள் கொண்ட தொடர் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்தி���ார். + +காந்திக்கு மகாத்மா என்னும் கௌரவத்தை வழங்கியவர் இரவீந்திரநாத் தாகூர் ஆவார். + +மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். + +மகாத்மா காந்தி மறைந்த நாளான ஜனவரி 30 அன்று, இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக, தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. + +பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார். அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார். சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார். அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன. வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார். + +தாழ்த்தப்பட்டவர்களும் கோயிலுக்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டங்கள் எழுந்த பொழுது, அனைவரும் இந்து மதத்தின் அறத்தைப் பேண வேண்டும் என காந்தி சொன்னார் என அம்பேத்கர் எழுதி உள்ளார். + +திருநெல்வேலி சைவ சித்தாந்த குருகுலப் பள்ளியில், சமூகத்தில் உயர்ந்த வகுப்பினர்க்கு தனி விடுதி, மற்றவர்க்கு தனி விடுதி என கடைபிடிக்கப்பட்டதை, இந்து மத அறத்தின்படி சரி என காந்தி வாதிட்டார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளே, ஈ. வெ. இராமசாமி நாயக்கரை பேராய கட்சியிலிருந்து (congress party) வெளியேற முடிவெடுக்க தள்ளியது. இதனை ஒட்டி, பெங்களூரில் ஈ. வெ. இராமசாமி நாயக்கருக்கும், காந்திக்கும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது. இக் கலந்தாய்விலும், காந்தி இந்து மத அறத்தின் தேவையை வலியுறுத்தியதால் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் பேராய கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தார். + +காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் "An Autobiography: The Story of My Experiments with Truth" என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. + +தமிழ்நாடு அரசு காந்திக்கு அவரது தியாகத்தைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் சென்னை கிண்டியில் காந்தி மண்டபம் மற்றும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது. மதுரையில் இராணி மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்ட கட்டிடத்தில் 1959 முதல் காந்தி அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக் கரையில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது. இங்கு அண்ணல் காந்தியடிகளின் மார்பளவு சிலை ஒன்று வளாகத்திலும், மற்றொன்று அருங்காட்சியகத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் பேர்கள் அமரக்கூடிய அளவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அண்ணல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகமும் நூலகமும் இங்குள்ளது. + +இந்திய தேசத் தந்தை மகாத்மா காந்தி பயன்படுத்திய சர்க்காவும், அவரது கடைசி உயிலும் 2013இல் லண்டனில் ஏலத்தில் விடப்பட்டது.அவரது சர்க்கா 1,10,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் ஒரு கோடி), அவரது கடைசி உயில் 20,000 பவுண்டுக்கும் (சுமார் ரூபாய் 18 லட்சம்) ஏலம் போனது. +இந்த ஏலம் பற்றி முன்னமே அறிந்திருந்தும் எந்த தடையும் இந்திய அரசு ஏற்படுத்தாதலால், அவை தனி நபர் வசம் செல்லும் மதிப்பற்ற நிலை அந்தப் பொருட்களுக்கு ஏற்பட்டது. + +பகத் சிங் கின் தூக்குதண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குதண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார். "தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங்" என்ற இந்தி திரைப்படத்தில் இந்த தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையை பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குதண்டனைக்கு ஒப்புதல் அளிக்கலாம்? என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டன. + +"தென் ஆப்பிரிக்க காந்தி: பேரரசின் பல்லக்குப் பணியாளன்" (The South African Gandhi: Stretcher-Bearer of Empire) என்ற நூலும் "தெய்வீக முகமூடிக்குப் பின்னால் உள்ள காந்தி" (Gandhi Behind the Mask of Divinity) என்ற நூலும் பிற பல கட்டுரைகளும் காந்தியை அவரது தென் ஆப்பிரிக்க எழுத்துக்களையும் செயற்பாடுகளையும் முன்வைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிரான இனவாதியாகவும், வெள்ளை அரசுக்கு சார்பான ஆரிய பேரினவாதியாகவும் சித்தரிக்கின்றன, விமர்சிக்கின்றன. எ.கா நற்றல் (Natal) நாடுளுமன்றத்துக்கு 1893 ஆம் ஆண்டு காந்திய எழுதிய ஒரு கடிதத்தில் பின்வருமாறு கூறுகிறார்: + + + + + + +ராஜீவ் காந்தி + +ராசீவ் காந்தி (Rajiv Gandhi) (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். + +இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பெப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். + +இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். 21 மே 1991 அன்று ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். + +ராஜீவ் காந்தி பிறந்த நாளான ஆகஸ்டு, இருபதாம் நாளை இந்தியாவில் சமய நல்லிணக்க நாளாக அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் உறுதி மொழி எடுத்துக் கொண்டாடப்படுகிறது. + + + + + + +ஜவகர்லால் நேரு + +சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964), இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. +இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். + +இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார். + +உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான மோதிலால் நேருவுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். உருதுவில் "ஜவஹர்_இ லால்" என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது. + +'காசுமீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார். +(காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் நெகர் மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் ,மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார் + +இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, விஜயலட்சுமி பண்டிட்டும், கிருஷ்ணாவும் ஆனந்தபவன் என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆ��்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர். + +சீனப்போரில் தோற்றவராக,காஷ்மீர் சிக்கலைத் தவறாகக் கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலான அவலங்களுக்குக் காரணமானவராகக் காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் ? நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? + +ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை இங்கிலாந்தில் உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார். + +நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார். + +கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். இருந்தாலும் பின்னாளில் 1946 இன் வைசிராயான இலூயி மவுன்ட்பேட்டனின் மனைவி எட்வினா மவுண்ட்பேட்டன் உடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகக் கருத்துகள் உண்டு. அவரின் கடைசிக் காலத்தில் தன் மகளோடும் உடன்பிறந்தாள் விசயலட்சுமி பண்டிதையருடனும் வாழ்ந்தார். + +1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். +1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு "உலக வரலாற்றின் காட்சிகள்" (1934), "சுயசரிதை" (1936) மற்றும் "இந்தியாவின் கண்டுபிடிப்பு" ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார். +ஜவகர்லால் நேரு, இளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் வழிகாட்டுதலின் கீழ் காங்கிரசின் இடது சாரி தலைவரானார். நேரு துடிப்புமிக்க, புரட்சித்தலைவராக, ஆங்கில அரசின் பிடியிலிருந்து முழுமையான சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். + +ஆகஸ்ட் 15, 1947 புது டில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. பாராளுமன்ற ஜனநாயகம், உலகியல்வாதம், ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள்பற்றிய அக்கறை போன்றவற்றில் இருந்த உண்மைகள் அவரை வழிநடத்தி இன்று வரை இந்தியாவில் தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வலிமையான திட்டங்களை உருவாக்கச் செய்தனவாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை சமூக தொடக்கத்திற்கான அவருடைய உலகக் ���ண்ணோட்டத்தை பிரதிபலிக்கின்றன. சுதந்திர இந்தியாவின் பழமையையும், அமைப்பையும் செதுக்க அவருடைய நீண்டகால பதவி ஒரு கருவியாகப் பயன்பட்டது. சில சமயங்களில் இவரை "நவீன இந்தியாவின் சிற்பி" என்று குறிப்பிடுவதுண்டு. இவருடைய மகள் இந்திரா காந்தி மற்றும் பேரன் ராஜீவ் காந்தியும், இந்தியாவின் பிரதம மந்திரிகளாக இருந்திருக்கிறார்கள். + +நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு சூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை மாற்றித்தரும் திட்டத்துடன் இங்கிலாந்து அமைச்சரக தூதுக்குழு வந்ததால் நேருவும் அவரின் சகாக்களும் விடுவிக்கப்பட்டனர். + +நேரு இடைக்கால அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்தி செல்லும்போது மத வன்முறை, அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க் கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீக், முஸ்லிம்களுக்காகப் பாகிஸ்தான் என்ற தனி நாடு கோரியது ஆகியவற்றால் உண்டான கலவரங்கள் நேருவின் ஆற்றலை முடக்கின. சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்ததால் நேரு தயக்கத்துடன் வேறு வழியின்றி 1947 ஜுன் 3 -இல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். + +"பல வருடங்களுக்கு முன்னாள் நாம் விதியுடன் போராடினோம். இப்போது நாம் செய்த சத்தியத்தை செயலாக்கும் நேரம் முழுவதுமாக இல்லாவிட்டாலும் அல்லது முழு அளவில் இல்லாவிட்டாலும் மிக அவசியமாக வந்து விட்டது. நடுநிசி நேரத்தில், உலகம் உறங்கும்போது இந்தியா சுதந்திரத்துடன் உயிர்ப்புடன் விழிக்கும். சரித்திரத்தில் மிக அரிதான சமயம் வரும், அப்போது ஒரு சகாப்தம் முடியும்போது மற்றும் தேசத்தின் ஆத்மா கொடுமைப்பட்டது முடிவதை தேடும்போது பழையனவற்றிலிருந்து நாம் புதியவற்றிற்காக வர வேண்டும். இந்தப் புனிதமான நேரத்தில் இந்தியாவின் சிறந்த மனிதநேயத்திற்காகவும் இந்தியாவிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்று நாம் பிரமாணம் செய்துகொள்வோம்." + +இந்தக் காலகட்டம் ஆழமான சமுதாய வன்முறையால் குறிப்பிடப்பட்டது. இந்த வன்முறை பஞ்சாப் மாகாணம், டில்லி, வங்காளம் மற��றும் இந்தியாவின் பிற பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்தது. நேரு பாகிஸ்தானிய தலைவர்களுடன் பாதிக்கப்பட்ட அகதிகளின் கோபத்தைத்தணித்து அமைதியை உண்டாக்கி உற்சாகப்படுத்த எல்லா இடங்களுக்கும் பயணம் செய்தார். நேரு, மௌலானா ஆசாத் மற்றும் பிற முஸ்லிம் தலைவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களைப் பாதுகாத்து அவர்களை இந்தியாவிலேயே இருக்கும்படி உற்சாகப்படுத்தினார். அந்த நேரத்து வன்முறை அவரை மிகவும் பாதித்ததால் எல்லாவற்றையும் நிறுத்த ஆணையிட்டார், ஐக்கிய நாடுகள் அவையும் 1947 இந்திய பாகிஸ்தான் போரை நிறுத்தச் சொன்னது. சமுதாயக் கலவரங்களுக்காகப் பயந்த நேரு, ஐதராபாத் மாநிலத்தைச் சேர்க்க ஆதரவு அளிக்கத் தயங்கினார். + +சுதந்திரத்திற்குப் பின்னர் வந்த ஆண்டுகளில் நேரு அவரின் சொந்த விவகாரங்களைப் பார்த்துக் கொள்ளவும் அவரைக் கவனித்துக் கொள்ளவும் அடிக்கடி மகள் இந்திராவையே நாடினார். 1952 இல் நடந்த தேர்தலில் நேருவின் தலைமையின் கீழ் காங்கிரசு பெருமளவில் வெற்றி பெற்றது. நேருவைக் கவனிப்பதற்காக இந்திரா, அவருடைய அதிகாரப் பூர்வமான வீட்டிற்கு குடிபெயர்ந்தார். +நேரு நவீன புதுப்பிக்கப்பட்ட இந்திய முறைப்படியான மாநிலத்திட்டம் மற்றும் பொருளாதாரத்தின் மேல் கட்டுப்பாடு ஆகியவற்றை அறிமுகப்படுத்த ஆயத்தமானார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. தொழில்களை அதிகப்படுத்துதல், வருமான வரிகள்மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதன் மூலம் பொதுமக்கள் நன்மைக்குச் சேவை செய்யும் சில நுணுக்கமான தொழிற்சாலைகளான சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள் தனியாரிடம் போவதை தடுத்து அரசாங்கமே நடத்த திட்டமிட்டார். நேரு நில மறு பங்கீட்டை முதன்மைபடுத்தினார். விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டும் திட்டத்தை அமல்படுத்தினார், மேலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையைப் பரப்பினார். தொடர்ச்சியான "சமுதாய முன்னேற்றத் திட்டங்களைக் " குடிசைத்தொழில்களை பரப்பும் நோக்கத்துடன் செயல்படுத்தினார். பெரிய அணைகளை (இவற்றை "இந்தியாவின் புதுக் கோவில்கள்" என்று அழைத்தார்) கட்ட ஊக்கப்ப���ுத்தியதோடு அல்லாமல் விவசாயம், நீர் மின்சாரம் ஆகியவற்றை பெரிதும் ஆதரித்தார். அணுஆற்றலில் இந்தியா சிறக்கவும் திட்டங்களைச் செயல்படுத்தினார். + +பிரதம மந்திரியாக நேரு பதவி வகுத்த காலத்தில் பெரும்பாலான காலங்களில் விவசாய உற்பத்தி அதிகரித்தும், முன்னேறி இருந்தும் கூட இந்தியா தொடர்ந்து மிகவும் மோசமான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க வேண்டி இருந்தது. நேருவின் தொழிற்சாலை கொள்கைகள் "தொழிற்சாலை கொள்கை தீர்வு " 1956 மாறுபட்ட உற்பத்திகள் மற்றும் கனரக இயந்திரங்கள் வளர்ச்சியை ஊக்குவித்தது. இருப்பினும் மாநிலத்திட்டம், கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றினால் உற்பத்தி, தரம் மற்றும் லாபம் முடங்கத் தொடங்கின. இந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு 2.5% என்ற நிலையான வளர்ச்சி தரத்தை எட்டினாலும், கடுமையான வேலையில்லா திண்டாட்டம், பரவலான வறுமை மக்களைத் தொடர்ந்து ஆட்டிப்படைத்தது. + +இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார். அவரது அரசாங்கம் உயர் கல்வி நிறுவனங்களை அமைத்துக் கவனித்து வந்தது. அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மை கழகங்கள், தேசிய தொழில்நுட்ப கழகங்கள் ஆகியவை அவற்றுள் சில. நேரு தன் ஐந்தாண்டுத் திட்டத்தில் குழந்தைகளுக்குப் பால் மற்றும் மதிய உணவு அளிக்கும் திட்டத்தையும் அமலாக்கினார். கட்டாயத் தொடக்கக் கல்வி தரப்பட உத்தரவாதம் அளித்து ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். + +இந்திய நாடாளுமன்றம், நேருவின் அறிவுரைப்படி இந்து மதச் சட்டத்தில், ஜாதி வேறுபாடுகளைக் குற்றமாகப் பாவித்தல், பெண்களுக்கான சமூக சுதந்திரம் மற்றும் சட்ட உரிமைகளை அதிக படுத்துதல் போன்ற மாற்றங்களை உருவாக்கியது. + +பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைசாதியினர் அனுபவித்த சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மேல் நிலையில் உள்ளவர்களுடன் அவர்கள் போட்டியிடும்போது ஏற்படும் குறைபாடுகளைக் களையும் வகையில் அரசாங்கப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்காக இட ஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார். மதச்சார்��ின்மை, மதநல்லிணக்கம் போன்றவற்றை ஆதரித்த நேரு அரசில் சிறுபான்மையினர் அதிகளவில் பங்குபெறச்செய்தார். + +ஆங்கில ஆளுமையிலிருந்து சுதந்திரம் பெற்ற ஆரம்ப காலங்களில், புதிய சுதந்திர இந்தியாவை நேரு 1947 முதல் 1964 வரை வழிநடத்தினார். அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும், தங்களுக்குள் நடந்த பனிப் போரின்போது இந்தியாவைத் தங்களுடன் சேர்த்துக்கொள்ள இரண்டு நாடுகளும் போட்டியிட்டன. + +1948 இல் காஷ்மீரில் ஐக்கிய நாடுகளின் ஆணையால் ஒரு மாநாடு நடத்துவதாக உறுதி அளித்திருந்தாலும், ஐக்கிய நாடுகளின் பேரில் வளர்ந்த அதிகமான சலிப்பினால் 1953 இல் மாநாடு நடத்துவதைக் கைவிட்டார். தான் முன்பு ஆதரித்த காஷ்மீரி அரசியல்வாதி,ஷேக் அப்துல்லா பிரிவினையைத் தூண்டும் நோக்கத்துடன் செயல் பட்டதாக இப்போது சந்தேகித்து அவரைக் கைது செய்ய ஆணை இட்டார். அவருக்குப் பதிலாகப் பக்ஷி குலாம் முகமது இடம் பெற்றார். உலகப் பார்வையில் நேரு சமாதானப்படுத்துவதில் மன்னர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளர். கூட்டுச்சேராக் கொள்கை மற்றும் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி, முறைப்படுத்திய நாடுகளுக்கு முன்னோடியாக இருந்து பகைமை நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் நடுநிலை வகிக்க முனைந்தார்.இயக்கம் தோற்றுவித்த உடன், மக்கள் குடியரசான சீனாவை அடையாளம் கண்டுகொண்டு (நிறைய வட தேசங்கள் தொடர்ந்து சீனாவுடன் நல்லுறவு கொண்டிருந்தன), நேரு சீனாவை ஐக்கிய நாடுகளுடன் சேர்த்துக் கொள்ள வாதாடினார் மற்றும் கொரியர்களுடனான சண்டையில் சீனர்களை ஆத்திரக்காரர்கள் என்று பிரகடனப் படுத்துவதை நேரு மறுத்தார். 1950 இல் திபெத் ஊடுருவியும் அதனுடன் சுமூகமான உறவை ஏற்படுத்த வழி வகுத்தார். கம்யுனிச நாடுகளுக்கும், மேற்கத்திய தேசங்களுக்கும் இடையில் இறுக்கத்தைத் தளர்த்தி பிளவைச் சரிக்கட்ட நம்பிக்கையுடன் தூதுவர்போல் செயல்பட்டார். மிதவாதக் கொள்கை மற்றும் சீனாவின் மீது இருந்த நம்பிக்கையும், சீனா, 1962 இல் திபெத்தை ஒட்டியிருந்த அக்ஸாய் சின்னை காஷ்மீரிலிருந்து தன்னுடன் இணைத்துக் கொண்டது சீன-இந்திய போருக்கு வழிவகுத்தது. + +அணுஆயுத பயங்கரத்தையும், மிரட்டல்களையும் மற்றும் உலக துன்பத்தையும் தணிக்க நேருவின் கடின -முயற்சி பலராலும் ஆதரிக்கக்கப்பட்டது. அணு ஆயுதங்களால் மனித சமுதாயத���திற்கு உண்டாகும் விளைவுகளைப் பற்றிய அவரது முதல் ஆராய்ச்சி மற்றும் அவரால் "பயங்கரமான அழிவு இயந்திரங்கள்" என்று கூறப்பட்டவைகளை ஒழிக்க அயராது பிரச்சாரம் செய்தார்.அணு ஆயதங்களை அவர் ஆதரிக்காததற்கு அவரிடம் பல காரணங்கள் இருந்தன. இந்த அணு ஆயுதப் போட்டி ராணுவத்தையும் தாண்டித் தன் சொந்த நாட்டைப் போல் மற்ற நாடுகளையும் வளர்ச்சி குறைவானதாக்கி விடும் என்று நேரு கருதினார் . + +1956 இல் இங்கிலாந்து, பிரான்ஸ்,மற்றும் இஸ்ரேல் சேர்ந்து சசூயஸ் கால்வாயை ஊடுருவியதை விமர்சித்தார். சந்தேகமும் நம்பிக்கையின்மையும் இருந்தும் இந்தியாவுக்கும்,அமெரிக்காவுக்கும் இடையில் குளிர்ந்த உறவைக் கண்டு சந்தேகம் ஏற்பட்டதால் சோவியத் யூனியனை ஆதரிக்க வேண்டியதாயிற்று. இங்கிலாந்து மற்றும் உலக வங்கியின் நடுநிலையால் நேரு 1960-இல் இண்டஸ் தண்ணீர் உடன்படிக்கையில் பாகிஸ்தான் ஆட்சியாளர் ஆயுப் கானுடன் கையெழுத்திட்டார். இது பஞ்சாப் மாகாணம்த்தில் உள்ள முக்கிய நதிகளின் வளங்களைப் பங்கு போட்டுக்கொள்வதில் நடந்த நீண்ட நாள் வழக்குகளைத் தீர்ப்பதற்காகக் கையெழுத்திடப்பட்டது. + +தேர்தலில் நேரு காங்கிரசை மிகப் பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ஆனாலும் அவருடைய அரசு விமர்சனங்களை எதிர்கொண்டது. உள்கட்சி ஊழல்கள் மற்றும் சுரண்டல்களால் வெறுத்துப் போன நேரு பதவியைத் துறக்க நினைத்தாலும் தொடர்ந்து சேவை செய்தார். 1959 இல் தனது மகள் இந்திரா காங்கிரசு தலைவரானதும் அதிக விமரிசனங்கள் எழுந்தன. நேரு மக்களாட்சிக்குப் புறம்பானது "என்று கூறி தன் கட்சியில் இந்திராவின் பதவியை மறுத்தார். இந்திராவே கொள்கை விஷயத்தில் தன் தந்தையுடன் மிகுந்த கசப்புணர்வுடன் இருந்தார், குறிப்பாக, காங்கிரசு காரிய கமிட்டிகேரளா [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசை நீக்கியது. நேரு தொடர்ந்து மகளின், பாராளுமன்றப் பழமையை மதிக்காதது மற்றும் தூக்கி எறிவது போல் நடப்பது போன்றவற்றால் தர்மசங்கடத்திற்கு உள்ளானார். தன் தந்தையின் பெயரால் இல்லாமல் தன் சொந்த அடையாளத்துடன் இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் இந்திரா செயல்பட்டது மிகுந்த மனவருத்தத்தை அவருக்கு ஏற்படுத்தியது . + +திபெத்தின் மீதான 1954 சீன-இந்திய உடன்படிக்கையில் [[பஞ்ச சீலம் (அரசியல்)|பஞ்சசீலக் கொள்கைகள்]] அடிப்படையாக இருந்தாலும்,பின்னர் நேருவின் வெளியுறவுக் கொள்கை எல்லைச்சண்டையினால் மற்றும் [[தலாய் லாமா|தலாய்லாமாவுக்கு]] அடைக்கலம் தர முடிவு செய்து அனுமதி அளித்தது இவையெல்லாம் சீனாவின் எதிர்ப்பை அதிகப்படுத்தியதால் சிரமப்பட்டது. பல வருடங்கள் தொடர்ந்து சமாதானம் பேசியும் தோல்வியடைந்ததால், நேரு 1961 இல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலிலிருந்து]] கோவாவை இணைத்துக் கொள்ள [[இந்திய ராணுவம்|இந்திய ராணுவத்திற்கு]] அனுமதியளித்தார். கோவா விடுதலை மூலம் அவரது புகழ் அதிகரித்தாலும் ராணுவ நடவடிக்கை மேற்கொண்டதற்காக அவருக்குக் கண்டனங்களும் அதிகரித்தன. + +நேரு 1962 இல் நடந்த தேர்தலில் குறைந்த ஆதரவுடன் காங்கிரசை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். எதிர்க்கட்சிகளான இடது சாரி பாரதிய ஜன சங்கம், சுதந்திரா கட்சி சமூகவாதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போன்றவைகள் நன்கு பரிமளித்தன. + +ஒரு சில மாதங்களில் சீனா உடனான எல்லைத் தகராறு,வெளிப்படையான சண்டையானது.முன்னாள் ஏகாதிபத்தியத்தினால் பாதிக்கப் பட்டவைகள் ஆதலால் சொல்வழக்காக " இந்தி-சைனி பாய் பாய்"(இந்தியர்களும் சீனர்களும் சகோதரர்கள்) என்று கூறப்பட்டதுபோல் இருவரும் ஒரு உறுதித்தன்மையைப் பங்கிட்டுக் கொண்டதாக நேரு ஊகித்தார்.வளரும் நாடுகளுக்கு மத்தியில் சகோதரத்துவம் மற்றும் உறுதித்தன்மை போன்ற நல்ல நெறிகளுக்குத் தன்னை அர்ப்பணித்தார். நேரு, ஒரு பொதுவுடைமை நாடு தன்னைப் போன்ற இன்னொரு நாட்டைத் தாக்கும் என்பதை நம்பவில்லை.மற்றும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் அவர், உடைக்கமுடியாத பனிபடர்ந்த இமாலயச் சுவருக்குப் பின்னால் பாதுகாப்பாக உணர்ந்தார். இந்த இரண்டும்,சீனாவின் உள்நோக்கங்களையும்,மற்றும் ராணுவ சக்தியையும் நேரு மிகத் தவறாகக் கணக்கிட்டதை நிரூபித்தன.பின் வரும் அறிக்கைகள் சீனா சண்டையிட்ட இடங்களை ஆக்கிரமித்து விடக் கூடாது என்ற நேருவின் எண்ணத்தை -சுருக்கமாக, நினைவில் நிற்கக்கூடிய ஒரு வரியில் தெரிவிக்கின்றன அது, ராணுவத்திடம் "அவர்களை வெளியே தூக்கி எறியுங்கள்" என்று கூறியதுதான். சீனா அதிரடியாகத் தன் தாக்குதலைத் தொடங்கியது. + +சில நாட்களில் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனா ஊடுருவி இந்திய ராணுவத்தின் பலகீனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டி, சீன சக்திகள் [[அசாம்|அஸ��ஸாம்]] வரை சென்று விட்டன. அவருடைய அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகள்மீது போதுமான கவனம் செலுத்தவில்லை என்று அதிக அளவில் விமர்சிக்கப்பட்டது. இதனால் நிர்ப்பந்தத்தின் பேரில் பாதுகாப்பு அமைச்சரான [[வே. கி. கிருஷ்ண மேனன்|கிருஷ்ண மேனனை]] பதவியிலிருந்து நீக்கி, அமெரிக்க ராணுவ உதவியை நாடினார். 1963 நேருவின் ஆரோக்கியம், குறைந்து வந்ததால் மாதக் கணக்கில் அவர் காஷ்மீரில் கட்டாய ஓய்வுக்காகத் தங்க வேண்டி வந்தது.சில வரலாற்றாளர்கள் இதைச் சீன ஊடுருவலிலிருந்து தப்பிக்க நடத்தப்பட்ட நாடகமாகக் கதை கட்டி எழுதியதை, நேரு நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகமாகக் கருதினார். 1964 இல் காஷ்மீரிலிருந்து திரும்பியதும் நேரு பக்க வாதத்தாலும், மாரடைப்பாலும் அவதிப்பட்டார். அவர் 1964, 27 மே அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அவர் பூதவுடல் இந்து சடங்குகள் முறைப்படி யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது.டில்லித் தெருக்களில் இருந்தும்,மயானத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். + +[[படிமம்:Jawaharlal Nehru statue in Aldwych 1.jpg|thumb|left|180px|லண்டண், ஆல்ட்விச்சில் உள்ள நேரு அவர்களின் சிலை]] +இந்தியாவின் முதல் பிரதமமந்திரி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக நேரு, மிகச் சக்திவாய்ந்த வெளிநாட்டுக் கொள்கையுடன் நவீன இந்திய அரசாங்கத்தை மற்றும் அரசியல் கலாச்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். கிராமத்தின் மூலை முடுக்குகளில் இருந்த குழந்தைகளை அகில உலக ஆரம்பக் கல்வி சென்றடைய அவர் உருவாக்கிய முறையால் வெகுவாகப் பாராட்டப்பட்டார். நேருவின் கல்வித் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்த கல்விநிறுவனங்கள் உருவாகி வளர்ச்சியடையக் காரணமானதால் பாராட்டுப் பெற்றது. அத்தகைய நிறுவனங்கள், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலையம், அகில இந்திய நிர்வாகக் கல்வி நிலையம் ஆகியவை. + +இந்தியப் பாரம்பரிய மக்கள் கூட்டத்திற்கு,சிறுபான்மை மக்கள்,பெண்கள்,பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பிற்படுத்தப்பட்ட ஆதிவாசிகள் ஆகியோருக்கு சரிசமமான சந்தர்ப்பங்கள் மற்றும் உரிமைகள் கிடைக்க, தொலைநோக்கோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தியதற்காகப் பெருமைப்படுத்தப்பட்டார்.. பெண்கள் மற்றும் தாழ்ந்த பிரிவைச் சேர��ந்தவர்களுக்கு எதிராக நடந்து கொள்வது போன்றவற்றிற்கு முடிவு கட்டும் வகையில் மாநில அரசுகளைக் கடுமையாக உழைக்கத் தூண்டி மிகவும் அக்கறை காட்டினார்.அவர் வாழ்நாளில் இதில் மிகக் குறைந்த வெற்றியே பெற்றார். + +பிராந்திய வேறுபாடுகளைப் பாராட்டினாலும் நேருவின் தோல்வியடையாத தேசியவாத உறுதி இருப்பினும் இந்தியர்களுக்கு இடையில் ஒற்றுமையை உறுதிபடுத்தக்கூடிய திட்டங்களை வகுத்தார். இங்கிலாந்து விலகிச் சென்றபின் சுதந்திரத்திற்கு முன்னாள் இருந்த வேறுபாடுகள் தலைதூக்கின. பொதுக் குழுவின் கீழ் மாகாணத் தலைவர்கள் தங்களை ஒருவருக்கொருவர் கூட்டாளிகளாகக் கூற விரும்பவில்லை என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டு நிரூபித்தது. மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் மொழி இரண்டும் புதிய தேசத்தின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில் நேரு, தேசிய புத்தக அறக்கட்டளை மற்றும் தேசிய இலக்கிய கழகம் உருவாக்கி மொழிகளுக்கு இடையே பிராந்திய இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் திட்டம்,மற்றும் ஒரு ராஜ்யத்திலிருந்து பொருள்களை வேறு ராஜ்யங்களுக்கு மாற்றல் செய்வது ஆகிய திட்டங்களை வகுத்து ஒரே ஐக்கிய இந்தியாவாக வளர்க்க நினைத்தார்.நேரு, "ஒன்று சேர் அல்லது அழி" என்று எச்சரித்தார். + +[[படிமம்:1989 CPA 6121.jpg|thumb|180px|left|சோவியத் ஒன்றியத்தால் 1989ல் வெளியடப்பட்ட நினைவுத் தபால்தலையில் நேரு]] +[[படிமம்:Nehru sweets oratarians Nongpoh.jpg|thumb|right|230px|நாங்பாவில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பினை அளிக்கும் நேரு]] +அவருடைய வாழ்நாளில் நேரு இந்தியாவில் நல்ல தகுதியை அனுபவித்தார் மற்றும் உலகம் முழவதும் அனைவராலும் அவருடைய நல்ல நெறிகளுக்காகவும், உயர்ந்த மனித பண்புக்காகவும் புகழப்பட்டார்.அவரின் பிறந்தநாள்,14 நவம்பர் இந்தியா முழுவதும்" "குழந்தைகள் தினமாக " " கொண்டாடப்படுகிறது.அவர் வாழ்நாள் முழுதும் குழந்தைகள் மற்றும் இளையவர்களின் நலம், கல்வி மற்றும் வளர்ச்சிக்காக அக்கறையுடன் பாடுபட்டதை நினைவுபடுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்தியக் குழந்தைகள் அவரை ""சாச்சா நேரு" ' (மாமா நேரு)என்றே இன்று வரை நினைவு வைத்துள்ளனர். காங்கிரசு கட்சியின் புகழ் பெற்ற அடையாளமாக அவருடைய நினைவை அடிக்கடி கொண்டாடுகிறது. காங்கிரசு தலைவர்களும் மற்றவர்கள் பலரும் அவருடைய ஆடைகள் அணியும் முறையைக் குறிப்பாக ""[[��ாந்தி குல்லாய்|காந்தி குல்லாவை]]" " விருப்பமாக அணியத்துவங்கினர்.நேருவின் திட்டங்களும் மற்றும் கொள்கைகளும் காங்கிரசு கட்சியின் கொள்கைகளையும் மற்றும் முக்கிய அரசியல் தத்துவங்களையும் வடிவமைத்தது. அவருடைய உணர்ச்சிமயமான பந்தம் பின்னாளில் அவர் மகள் இந்திரா, தேசிய அரசாங்கம் மற்றும் காங்கிரசு கட்சியின் தலைவராகக் கருவியாய் செயல்பட்டார். + +நேருவின் வாழ்க்கையைப் பற்றிக் [[ஆவணப்படம்|குறும் படங்கள்]] எடுக்கப்பட்டன. 1988 தொலைக் காட்சித் தொடரான "'பாரத் ஏக கோஜ் " ', "தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா" என்ற அவரது நூலைத் தழுவியது. மற்றும் 2007 இல்" "ராஜின் இறுதி நாட்கள்" " என்ற தொலைக்காட்சி படம், கேட்டன் மேத்தாவின் " "சர்தார்" திரைப்படம், இதில் பெஞ்சமின் கிலானி நேருவாக நடித்தார். + +நேருவின் சொந்த விருப்பமான ஷெர்வானி அணிவது வட இந்தியாவில் இன்றும் ஒரு விழா உடையாக, சீருடையாகக் கருதப்படுகிறது.அதோடல்லாமல்,அவருடைய தனி உடை அலங்காரத்திற்க்காக [[நேரு குல்லாய்|ஒரு வகைக் குல்லா]] மற்றும் நேரு சட்டையென அவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது. + + +நேரு சிறந்த ஆங்கில எழுத்தாளராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய நூல்கள் " தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா " , "க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி" , அவருடைய " சுயசரிதை " மற்றும் " டுவார்ட்ஸ் ப்ரீடம் ". +ஜவகர்லால் நேரு [[நேஷனல் ஹெரால்டு]] என்ற பத்திரிகையை 1938ஆம் ஆண்டு துவங்கினார். அப்பத்திரிகை 2008ஆம் ஆண்டு மூடப்பட்டது. + + + +[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]] +[[பகுப்பு:இந்தியப் பிரதமர்கள்]] +[[பகுப்பு:இந்திய இறைமறுப்பாளர்கள்]] +[[பகுப்பு:இந்திய எழுத்தாளர்கள்]] +[[பகுப்பு:இந்திய பிரதம மந்திரிகள்]] +[[பகுப்பு:நேரு-காந்தி குடும்பம்]] +[[பகுப்பு:1889 பிறப்புகள்]] +[[பகுப்பு:1964 இறப்புகள்]] +[[பகுப்பு:இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள்]] +[[பகுப்பு:இந்திய நிதியமைச்சர்கள்]] +[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]] +[[பகுப்பு:ஜவகர்லால் நேரு]] +[[பகுப்பு:1ஆவது மக்களவை உறுப்பினர்கள்]] +[[பகுப்பு:2ஆவது மக்களவை உறுப்பினர்கள்]] +[[பகுப்பு:3வது மக்களவை உறுப்பினர்கள்]] +[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]] + +